ஸ்ரீஸ்ரீ சுபவீரபாண்டியனார் அருளிச் செய்த ‘பின் நவீனத்துவ சோழர் வரலாறு!’
March 24, 2015
அய்யோ மூடர்காள், அந்த வேலைவெட்டியற்ற வரலாற்றாளர் சுப்பராயலுவின் சோழர் கதை, எழவெடுத்த நீலகண்ட ஸாஸ்திரி தன்னுடைய தென்னிந்திய வரலாற்றில் எழுதிய கதையெல்லாம் சோழர் வரலாறேயல்ல! மன்னிக்கவும்!
…அந்த நீலகண்ட ஸாஸ்திரிப் பார்ப்பனர், குல்லுகபட்டர், ஆரிய வெறியர், கைபர்போலன் கணவாய்கள் வழியாக திராவிடஸ்தானுக்கு வந்தவர் – ‘ட்டேஞ்ஜூரில்’ ரோட்டோர டீக்கடையில் உட்கார்ந்துகொண்டு (கணுக்கால் இரும்)பொரையும் ஜிஞ்சர் டீயும் சாப்பிட்டுக்கொண்டே பொன்னியின்செல்வன் பாகங்கள் 100ஐயும் படித்துவிட்டு சும்மனாச்சிக்கும் அட்ச்சுவுட்டதுதான் அந்தப் புத்தகம்… (இந்த நூற்றுக்கணக்கு எப்படியென்றால், ஒவ்வொரு தமிழ்ப்பதிப்பகமும் வெளியிட்ட பொச-வின் ஐந்து பாகங்களையும் மாய்ந்துமாய்ந்து படித்திருக்கிறார், பாவம்! சுமார் 20 பதிப்பகங்கள் இந்த மரக்கூழ் ‘பல்ப்’ வரலாற்று நாவலை வெளியிட்டிருக்கின்றன அல்லவா? மேலும், பாடபேதங்களைப் பார்ப்பது என்பது இம்மாதிரி ஆராய்ச்சியின் முக்கியமான அங்கம் அன்றோ?)
உங்களுக்கு, இதனைப் பற்றிச் சந்தேகம்கிந்தேகம் இருந்தால் – நிஜ உண்மை வரலாறு தெரிய வேண்டுமானால், மகாமகோ எஸ். ராமகிருஷ்ணன் அவர்களைக் கேளுங்கள்! அண்மையில் அவர் ஜப்பான் போய் அணு ஆராய்ச்சி செய்துவிட்டு வந்திருக்கிறார், ஆகவே சோழர் வரலாறு பற்றி நன்றாகவே அறிந்துகொண்டிருப்பார்.
இல்லையென்றால், உங்களுக்கு இலுப்பைப் பூக்கள் மட்டுமே போதுமென்றால் – இருக்கவே இருக்கிறார்கள் மேதகு மதிமாறனாரும், யுவகிருஷ்ணனாரும் – முறையே வியட்நாம் முதல் தில்லானா வரையிலும், வௌவால் முதல் 10ஜி அலைவரிசை வரையிலும் கதம்பமாகக் கலந்தடித்துக் கோலாகலமாகக் குதித்துக்கொண்டு பரிமாறுவார்கள்; மேலும் இவர்கள் அக்கால வரலாறும், தற்கால வரலாறும், ஏன், எதிர்கால வரலாற்றையும் கூட அறியக்கூடிய மகாமகோ பராக்கிரமம் பெற்றவர்கள்; அறிவிலியியல் எனும் செறிவுசார் புதுத் துறையையே நம் தமிழ்கூறும் நல்லுலகத்திற்குத் தாராளமாகத், தொடர்ந்து வழங்கிக் கொண்டிருப்பவர்கள், இவர்கள் போன்ற பிதாமகர்கள்! இவர்களிடம் நீங்கள் நிபந்தனையற்றுச் சரணடைந்தால், சோழர்கள் வரலாற்றையும் பற்றியும் அவர்கள், போனால் போகிறது எனச் சிறிது நமக்குப் பரிமாறலாம்… எதற்கும் கொடுப்பினை என்பது இருக்கவேண்டுமல்லவா? (அதாவது, நமக்கு!)
சரி. எப்படியும், இப்போது #ட்ரென்டிங் டிங் டிங்கெல்லாம் மேற்கண்ட புதுப் புத்தகம்தான்! மன்னிக்கவும்.
-0-0-0-0-0-0-0-0-
… வேலை வெட்டியற்று, சென்னை வெய்யிலில் இரண்டு நாட்கள் முன்னர், மனதாறச் சுற்றிக் களித்துக்கொண்டு நகரச்சூழலின் உரத்த சப்தங்களை, குப்பைகூளங்களைச் சபித்துக் கொண்டிருக்கும் போது, நண்பர் ஒருவர் எனக்கு திடுதிப்பென்று அனுப்பிய எஸ்எம்எஸ் செய்தி என்னவென்றால்,
“கலைஞரை ராஜராஜ சோழனாகவும் ஸ்டாலினை ராஜேந்திர சோழனாகவும் பார்க்கிறேன்”
சுப. வீரபாண்டியன்.
ஆ! அய்யய்யோ!!

திராவிட வ்யாவாரம் போணி ஆவதற்காக, இப்படி ஃபோனிகளுக்கு, திராவிடப் போலிகளுக்கு ஜால்ரா அடித்தா, உயிர் தரிக்க வேண்டும்? சுயலாபத்துக்காக, இப்படியா வரலாற்றைப் புரட்டிப் போடவேண்டும்? அக்கால சோழர்கள் செய்த குற்றம்தான் என்ன? :-( — நம்ப முடியவில்லை, வில்லை, வில்லை, இல்லை… ல்லை… அவரா சொன்னார்? இருக்கும்தான்!
… இதனைப் படித்தவுடன் – எனக்கு விதிர்விதிர்த்து வியர்த்து ஏகோபித்த மாரடைப்பு ஏற்பட்டதால், ப்ளாஸ்டிக் கழிவுகள் பொழுதன்னிக்கும் மிதக்கும் சென்னை மாநகரச் சாலையோரத்தில், அக்கால கல்கீ அவர்களின் ஆஜ்கீ பன்னியின் செல்வனாகச் சுருண்டுச் சுரணையற்றுத் தெருவோரச் சாக்கடையில் விழுந்தேன். :-(

கருத்துப் படம்: பன்னியின் செல்வன்; பிபிஸி தளத்துக்கு நன்றியுடன்… (என் மயக்கத்தில், நான் என்னையே கண்டுகொண்ட சித்திரம் இதுதான்!)
… கண் இருட்டிக்கொண்டு வர, சிவகாமி ஐஏஎஸ் அவர்கள் சபதம் இட்டுக்கொண்டிருக்கும் காட்சி தெரிந்தது – “2016ல் முதலையமைச்சர் நான் தான், போங்கடா நீங்க எல்லாரும்!” … தேவையா?
ஊக்க போனஸாக, பார்த்திபன் கனவு காணும்போது விடும் மகாமகோ கொறட்டையும், கூடவே வரும் ரஹ்மானிய பின்னணி இசை டொமுக்குடொமுங்கும்! போதாக்குறைக்கு – மகுடபதி, திரௌபதியின் சிண்டைப் பிடித்திழுக்கும் க்ளைமேக்ஸ் காட்சியும்… ஒர்ரே குழப்படி சத்தியவெள்ளம்தான் போங்கள்!
மூளைக்குடைச்சலும் இருதயம் படபடத்தலும் நிரம்பிய கோர மயக்க நினைவுகள். படுபீதி பயங்கர இரவுக்குதிரைகள் தோற்றன, போங்கள்! (குறிப்பு: எஸ்ரா-விய மொழிபெயர்த்தலில் nightmares என்றால் இரவுக் குதிரைகள்; வேண்டுமானால் nightடுக்கும் mareக்கும் அகராதி விவரணைகளைப் பார்த்துக் கொல்லுங்கள், அகராதி பீடித்த அறிவிலிகளா!)
உடலெல்லாம் கலக்கம் ஏற்பட்டு, வயிறு ஏகத்துக்குக் குமட்டிக் கொண்டு வந்தாலும், நான் திராவிடப் பிரச்சாரகன் அல்லனென்பதால், வாந்தி வரவில்லை. எனக்கு நன்றி.
வீரபாண்டியன் அவர்களுக்கு, இது தேவையா? … …What a fall man, Oh what a fall! :-(
… ஆனால், ஸ்ரீஸ்ரீ சுபவீரபாண்டிய ஸாஸ்திரியார், நிச்சயமாக இப்படித்தான் சொன்னாரா, அப்படியே சொல்லியிருந்தாலும் எந்தப் பின்புலத்தில் சொன்னார் என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. வழக்கமான செய்தித் திரித்தலாகவும் இருக்கலாம்; ஆனால் கடந்த காலங்களில் இவருடைய பேச்சுகளைக் கேட்டிருப்பவன், படித்திருப்பவன் என்கிற முறையில், இவர் இப்படி சொல்லியிருக்கக் கூடியவர்தான் என்றுதான் தோன்றுகிறது!
மேதகு வீரபாண்டியன் அவர்களுக்கு, வரவர, கொஞ்சம்கூடக் கூச்சமேயில்லாத நகைச்சுவை உணர்ச்சி மிகமிக அதிகமாகிக் கொண்டே வருகிறது. இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.
ஆகவே!
-0-0-0-0-0-0-0-0-0-
இவர் இப்படிச் சொன்னாரா என்ன? பாவம், இவர். என்ன ஆயிற்றோ?
ஹ்ம்ம்… காலவெள்ளத்தைத் தடுத்து நிறுத்திக் கொஞ்சம் பின்னோக்கிப் பயணம் செய்தால்…
… …சாம்பார் இட்லி வடை ஈட்டிங் ட்ரெய்னிங் காலேஜ் – வேளச்சேரியிலிருந்து தாம்பரம் செல்லும் சாலையில் இருந்த (இப்போதும் இருக்கும்?) SIVET கல்லூரிதான், அக்காலங்களில் இப்படி கிண்டலாக, அக்கல்லூரி மாணவமணிகளாலேயே சுருக்கிநீட்டி அழைக்கப்பட்டது.
அக்கல்லூரியில் 1980களில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் தாம் இந்த வீரபாண்டியனார் அவர்கள்; இவர், ‘முரட்டுக்காளை,’ ‘சகல கலா வல்லவன்’ போன்ற ஆஸ்கர் அவார்ட் பெற்றிருக்கக்கூடிய ரஜினிகாந்திய, கமல்ஹாஸ்ய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மகாமகோ எஸ்பி முத்துராமன் அவர்களின் அன்புச் சகோதரரும் கூட! எதற்கு இதனைச் சொல்லவருகிறேன் என்றால், தமிழ வாழ்க்கை நியதிப்படி, அண்ணன் பிலிம் எடுத்தால், தம்பி பிலிம் காட்டுவார்தானே!
சரி. அச்சமயம் – அவருடைய இட்லிவடைசாம்பார் மாணவர்களின் மரியாதைக்கும் அன்புக்கும் நட்புக்கும் உரியவராகத்தான் திகழ்ந்தார் இந்த சுப.வீ என்பது, என் நினைவு – குறைந்த பட்சம் என் அருமை நண்பர்களில் ஒருவன், இப்போதும் அப்படித்தான் நினைக்கிறான். ஆகவே, அவனை மன்னித்து விடலாம். ஆனால், பல சமயங்களில், காலத்தின் கந்தறகோளம் என்பது பொறுக்கமுடியாததுதான்… ஹ்ம்ம்ம்…
… கடந்த பலபத்தாண்டுகளாக, அவ்வப்போது இந்த மனிதரின் பேச்சுக்களை எழுத்துகளை கேட்கும்/படிக்கும்போதெல்லாம் – எனக்கு மகத்தான ஆச்சரியம்தான். ஏன் இப்படியானது? திராவிடஜோதியில் ஐக்கியமானால், புத்திசாலிகளும், செயலூக்கம் கொண்டவர்களும்கூட மூளையைக் கழற்றிக் கடாசி விடுவார்களோ?
அல்லது – திராவிட இயக்கங்களில், அற்ப ஜால்ராக்களுக்கும் சராசரிச் சொம்புகளுக்கும் மட்டுமேதான் இடம் என்று ஆகி விட்டபடியால், உயிர் தரிப்பதற்காக – வாழ்வாதாரத்துக்காக, ‘புல்லுக்கும் ஆங்கே பொசியும்’ வரும்படிகளுக்காக – படிப்பறிவு பெற்றவர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும்கூட இப்படிப்பட்ட கோமாளி வேடங்கள் போடவேண்டியிருக்கிறதா?
பரிதாபமாகவே இருக்கிறது. :-(
-0-0-0-0-0-0-0-
அடுத்த சில நாட்களில் சுப.வீரபாண்டியனாரிடமிருந்து, இவ்வறிக்கைகளையும் எதிர்பார்க்கலாமோ?
“தயாளு அம்மையாரைத் திருபுவனமாதேவியாகவும், துர்கா அம்மையாரை வானவன் மாதேவியாகவும், உதயநிதியை இரண்டாம் ராஜராஜசோழனாகவும் பார்க்கிறேன்!”
உப வீரபாண்டியன்
“அழகிரி, கனிமொழிகளையும், கலாநிதி-தயாநிதிகளையும், எவ்வளவு முயற்சிசெய்தும் என்னால் துளிக்கூட, அவர்களைச் சோழர்களாகப் பார்க்கவே முடியவில்லை. என் மூக்குக் கண்ணாடியை மாற்றவேண்டுமோ? அல்லது என்னுடைய ஜால்ராவின் விட்டம் பெரிதாகிவிட்டதால், பலவிஷயங்களைப் பார்க்கவே முடிவதில்லையோ?”
அதி உப வீரபாண்டியன்.
“அய்யகோ! காணுமிடங்களிலெல்லாம் சோழர்களைப் பார்த்துப் பார்த்து, நானே இப்படிச் சோழியன் ஆகிவிட்டேனே! என் குடுமி ஏன் இப்படி சும்மாச்-சும்மா, அநியாயத்துக்கு ஆடுகிறது? ஆரியச் சதியோ??”
அதீத உப்புமா வீரபாண்டியன்.
-0-0-0-0-0-0-0-
பாண்டியர்களைச் சோழர்கள் ஒழித்தார்களே! ஏன், வீரபாண்டியனையே சோழர்கள் ஒழித்தார்களே? பொன்னியின்செல்வன் நினைவிருக்கிறதா? பழுவேட்டரையர், நந்தினி, ஆபத்துதவிகள் போன்றவையெல்லாம்? ஆக இந்த சுப வீரபாண்டியனையும் இக்கால சோழர்கள், ஜால்ரா காரியங்கள் முடிந்தவுடன் கைகழுவித் துரத்தி விடுவார்களோ? இந்த வரலாற்றுண்மையைக் கூட அறியாதவரா நம் சுப.வீ?
…எது எப்படியோ, இப்போது எனது மிக சந்தேகங்களுக்கும் சிந்தனைகளுக்கும் வருவோம்… எனக்கு, இந்த நவீன ஸாஸ்திரியார், ஏதோ குசும்புடன், பொடி வைத்துப் பூடகமாகப் பல விஷயங்களைச் சொல்லவருவது புரிகிறது – அதனால்தான்! தலையில் அடித்துக்கொண்டு ஒவ்வொன்றாக, அவற்றைப் பார்ப்போமா?
- அக்கால ராஜராஜ சோழன் பெற்ற வெற்றிகள் பலவற்றுக்கும் காரணம், அவன் தளபதியாக இருந்த ராஜேந்திரனே! (ஆக, கருணாநிதி அவர்கள் பெற்ற வெற்றிகள்(!) பலவற்றுக்கும் காரணம், கருணாநிதியல்லர், இசுடாலினார்தான் என – சுப.வீ சொல்கிறாரோ?)
- அக்கால ராஜராஜ சோழரின் ஆட்சிக் காலத்திலேயே (கி.பி. 1010 வாக்கில்), ராஜேந்திர சோழன் இணை அரசனாகப் பொறுப்பேற்றுக் கொண்டான். பின்னர், தந்தை உயிருடன் இருக்கும்போதே – அதுவும் இணை அரசனாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளிலேயே ராஜேந்திரன் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான் – பேரரசனானான். ஏனெனில், அக்காலங்களிலும் அதிகாரப் பங்கிடல் ஒரு பிரச்சினையாக இருந்தது. ஆகவே, ராஜேந்திரனின் அரசத் துடிப்பினால் அவன் தந்தைக்கு – தன் ஆட்சியில் இரண்டு அதிகார மையங்கள் இருக்க நேர்ந்தது. ஆனால் அதனை ராஜராஜசோழனால் ஒழுங்கு படுத்தவும் முடிந்தது. (ஆக, கருணாநிதி அவர்களுக்கு தன் சூசகச் செய்திமூலம் – இசுடாலினாரை துணைத்தலைவராக ஆக்கி, அவரை உடனே திமுக-வின் பட்டத்தரசராகவும் ஆக்க – நம் சுப.வீ அவர்கள் முனைகின்றாரோ? கருணாநிதியை ஓய்வுபெறச் சொல்லி வற்புறுத்துகிறாரோ?)
- தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டினான் அப்பன்காரச் சோழன்; அவன் மகனானவன், அவன் ஆட்சியில், தனியாக ‘கங்கை கொண்ட சோழபுரம்’ ஒன்றைக் கட்டி அதனைத் தன் தலை நகராகவும் கொண்டான். (ஆக, அண்ணாஅறிவாலயம் என ஒன்றை இக்கால ராஜாராஜன் கட்டியதால், இக்கால ராஜேந்திரன் – தேனாம்பேட்டையிலிருந்து சிறிது தள்ளி, சைதாப்பேட்டையில் தம்பிஅறிவாலயம் என ஒன்று கட்டுவாரோ? அதுவும் இரண்டு சென்டீமீட்டர் குறைவான உயரத்தில் – தந்தைமகன் ஸென்டிமென்ட் முக்கியமன்றோ?)
- அக்கால ராஜராஜனும் பலப்பல மனைவியருடன் வாழ்ந்தாலும், குறைந்த அளவிலான குழந்தைகளைத்தான் பெறமுடிந்தது; அதுவும் ஒரேயொரு மகன் தான் = அக்கால ராஜேந்திரன். (ஆக, சுப.வீ அவர்கள் என்ன சொல்ல வருகிறார்? அதிகார மையங்களிலிருந்து ஒதுக்கப் பட்ட, பாவப்பட்ட – மற்ற ஆண்குழந்தைகளெல்லாம் இக்கால ராஜாராஜனின் மக்களேயல்லர் என்று ஒரு திடுக்கிடும் அசிங்கக் கயமை வதந்தியை கமுக்கமாகப் பரப்ப முயல்கிறாரா? எனக்குத் தெரிந்து, சுப.வீ அவர்கள் இப்படி விரசமாகப் பேசக்கூடியவரல்லவே!)
- அக்கால ராஜராஜசோழனுக்கு மூன்று பெண்குழந்தைகள் என்பது வரலாறு. (ஆனால் இக்கால ராஜராஜ சோழனுக்கு தெரியவந்திருப்பது இரண்டு பெண்மக்களே! ஆக, இன்னொரு பெண்ணும் எங்கோ ஒளிந்துகொண்டு இருக்கிறார் – என, நம் சுப.வீ அவர்கள் சுட்டிக் காட்டுகிறாரா?)
- அக்கால ராஜேந்திர சோழன், தன் பதவிக்காலத்திலேயே தன் மூத்த மகனை இணையரசனாக்கி விட்டான். (ஆகவே, இக்கால ராஜேந்திர சோழ இசுடாலினார், தன் மகனான உதயநிதியை சூட்டோடு சூடாக, இணையரசனாக்கிவிடுவாரோ?)
- அக்கால ராஜராஜ, ராஜேந்திர சோழர்கள், தங்கள் சாம்ராஜ்யத்துக்குச் சேர்த்த சொத்துகளுக்கு அளவேயில்லாமல் இருந்தது. பலப்பல வெளி நாடுகளில் சொத்துகள்… படையெடுப்புகள். பல விதமான வன்கொடுமைகள்! நாம் மெச்சிக்கொண்டாலும், பல அண்டைய பிரதேசக் கல்வெட்டுகள் இவர்களை திட்டித் தீர்க்கின்றன! (ஆக, இக்கால சோழர்களும் அப்படியேதான் என்றா சொல்ல வருகிறார், சுபவீ? இந்த அளவுக்கு அதிகமான அயல் நாட்டு சொத்துகளையெல்லாம் இக்காலத்துச் சோழர்கள் கணக்கில் காட்டுகிறார்களா? ஆக, இவர்களுக்கு எதிராக பெங்களூர் பரப்பன அக்கிரஹாரத்துச் சிறையில் அறைகளை தயார் செய்துகொண்டிருக்கிறாரா, நம் சுபவீ? )
- திமுக-வின் பெயர், இனிமேல் சோமுக (சோழர் முக) என மாற்றப் படுமா? அப்படியானால், திமுக-வின் சகோதர இயக்கங்கள் – சுபவீ அவர்கள் போன்றவர்களின் இயக்கங்கள், சொமுக (சொம்பு-கள் முக) என அழைக்கப்படலாமே? சோ, நெடில் – உரக்க நீட்டி முழக்கலாம்; சொ, குறில் – ஆக, குறிப்பறிந்து நீட்டி முழக்கலாம். ஆஹா, என்னப் பொருத்தம்!
சந்தேகங்கள், சந்தேகங்கள்…
பின்குறிப்பு: சுப.வீ அவர்களுக்கு என்ன ஆயிற்று?
ஆகவே, சுப. வீரபாண்டியனார் அவர்களே!
நீங்கள் இந்தக் கடும் பார்வைக்கோளாற்றில் இருந்து கூடிய விரைவில் மீள, தூய திராவிடத் தமிழ்க் கடவுளாகிய, முப்பாட்டனின் எள்ளுப்பாட்டனின் கொள்ளுப்பாட்டனான, சீமான் சமேத முருகனிடம் இறைஞ்சுகிறேன்! நீங்களும், திராவிட வழக்கம்போல, உங்களுக்குக் கண் சரியானால், மற்ற யாரையாவது மொட்டையடிக்கலாம் என வேண்டிக்கொள்ளலாம்.
ஆனால், மதச்சார்பின்மை லொசுக்கின் காரணமாக, தங்களுக்கு முருகன்-ஹிந்து விஷயங்களையெல்லாம் ஒத்துவராது என்றால், தாராளமாக ஏதாவது ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டங்களில் சேர்ந்தால் – கண் தெரியாதவர்களுக்கும் உடனடியாகக் கண் தெரியப் பண்ணுவார்கள்.
நன்றி. வணக்கம்.
March 24, 2015 at 13:58
there is no 10g spectrum ! only reached 5g . yuva never wrote abt vawwal or 10g . u joke abtl yuva . u are arivilata paappaan. u know everything ? there is no 10g ! stupid
March 24, 2015 at 14:59
அய்யா?
அப்படியென்றால், உங்களுக்கு – இந்தக் கட்டுரையின் அனைத்து விஷயங்களும் புரிந்துவிட்டனவா என்ன? உங்களுக்கு, நகைச்சுவையுணர்ச்சி சற்று அதிகம்தான்.
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் ‘யுவா’வுக்கு என்ன உறவு? எப்படாப்பா அந்த மனிதரைப் பற்றி எழுதுகிறேன் என்று காத்திருந்து, உடனுக்குடன் ஒரு வெட்டிப் பின்னூட்டம் இடுகிறீர்கள்.
நகைச்சுவைக்கு நன்றி. எப்படியும் இன்னும் சில ஆண்டுகளின் 100ஜி வந்துவிடும். கவலையேவேண்டாம். யுவா அதைப் பற்றியும் ஒரு தொழில் நுட்பக் கதை எழுதலாம்.
தமிழச் சராசரித்தனம் வால்க!
முக வும் கூடவே வால்க!
March 24, 2015 at 22:50
குக வால்க says:
Ponniyin selvan has only 5 volumes. How can you multiply by 20 if 20 publishers publish same book? Also there is no book known as panniyin selvan. u know every thing? stupid! :)
March 25, 2015 at 11:11
Ayyo, Anandam! If this gent mukavalga comes along again, you please handle him. You are the right person for the job.
Sincerly,
Stupid.
March 24, 2015 at 22:52
There are 10 types of people in the world, those who know binary and those don’t!
March 25, 2015 at 09:25
There are 10 types of people in the world, those who know binary and those who don’t!
March 25, 2015 at 11:08
There are two types of people in the world, they are stereotypes!
Sincerely,
KullaNari, with lots of Culinary skills
(sorry about all the laboured pun; but then, delivery has to follow labour no? Also as a wag said, pun is its own reword.)
March 24, 2015 at 22:43
முன்னெல்லாம் அவரை மனுநீதிச்சோழனாகத்தான் பார்த்துக்கிட்டிருந்தாங்க. ஒரு வேளை மகன் மேல தேரை இல்லாட்டியும் அட்லீஸ்ட் தவளையாவது ஏத்த வேண்டியிருக்குமோன்னு திராவிட செண்டிமெண்டுக்கு எட்டியிருக்குமோ என்னவோ? வசதியா ராஜராஜன் ராஜேந்திரன்னு சொல்லிட்டா தெய்வ குத்தமாகாம தப்பிச்சுக்கலாம்ல? இது புரியாம அநியாயத்துக்கு டென்ஷனாய்ட்டீங்களே?
March 25, 2015 at 11:04
அய்யா பூர்ணம், எவ்வளவு பேர் இப்படி தேரைவாத புத்தர்களாகக் கிளம்பியிருக்கிறீர்கள்? கிண்டலுக்கும் ஒரு அளவு வேண்டாம்?
ராஜபக்ஷவுடன் உங்களையும் தூக்கில் போட, சீமாருக்குப் பரிந்துரைக்கவா? :-)))
March 25, 2015 at 01:49
அமரர் கல்கி அவர்கள், பொன்னியின் செல்வன், சிவகாமி சபதம் போன்ற புதினங்களை வரலாற்று பின்னணியில் படைத்தாரே தவிர அதுதான் வரலாறு என்று அவர் கூறியதாக நான் படிக்கவில்லை. ஆனால் அவரை பின்னி பிணையல் அடிக்கிறீர்கள். அதே சமயம், ரோமபுரி பாண்டியன் என்ற வரலாற்று காவியம் சின்ன திரையில் வலம் வருகிறது. அதை நீங்கள் எதிர்கொள்ள தயங்குவதை பார்த்தல், அதுதான் நிஜ வரலாறு என்று கருத தோன்றுகிறது. அடியேன், கல்கியின் விரசமற்ற உரைநடையை வியந்து ரசிப்பவன்..
March 25, 2015 at 10:57
அய்யா வந்தியத் தேவன்,
அவர் அப்படிச் சொன்னார் என்று சொல்லவில்லை. ஆனால் அதைத்தான் வரலாறு என நினைப்பவர்கள் பலப்பலர் இருக்கிறார்கள்; இந்த திடீரெக்ஸ் வரலாற்று ஆர்வலர்களைத்தான் கிண்டல் செய்கிறேன். கூடவே கல்கியையும்தான் – ஏனெனில் அவருக்கு இருந்த நகைச்சுவை உணர்ச்சி எனக்கு சுமார் 5%மாவது இருக்கிறது என நம்புகிறேன்.
அய்யா, நான் சின்னத்திரை சின்னாபின்னத் திரை எழவையெல்லாம் பார்ப்பதில்லை. ஆகவே, அதில் வரும் எந்த மசுராண்டிப் பாண்டிய ராஜாக்கள் பற்றியும் அறியேன். அதெயெல்லாம் எந்த எழவுக்கு ஒருவன் எதிர்கொள்ள வேண்டும் – வெறுமனே அவற்றை விட்டுவிட்டு பின்னங்கால் பிடறியில் பட ஓடவே நேரம் சரியாக இருக்கிறது…
ஆனால் – நீங்கள் என் செல்லத் தலைவர் எழுதிய ‘ரோமாபுரிப் பாண்டியன்’ என்கிற அற்ப வினோதத்தைக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். கண்ட எழவுகளையும் பார்த்து, படித்து மனத்தைக் குழப்பிக் கொள்ளவேண்டாம் என்பது என் பரிந்துரை. சரியா?
பொன்னியின்செல்வ ரசிகர்களும், சோழ வீரதீர திராவிடக் குஞ்சாமணிகளும் சேர்ந்து எனக்குப் படையல் வைத்துவிடுவார்களோ என நினைத்தால், எனக்கு, என் செல்லமான பூங்குழலியுடன் இலங்கைக்குத் தோணியில் சென்றுவிடலாமோ எனத்தான் தோன்றுகிறது. அங்கே அனுராதாபுரம் சிலுக்குபுரம் என ஆனந்தமாக அலைந்துகொண்டிருக்கலாம் அல்லவா?
இப்படிக்கு,
வெந்தயத் தேவன். (கோச்சுக்காத பா!)
March 25, 2015 at 20:33
Kalki said in pinnurai to ponniyen selvan that it is a sarithira kathai and not sarithiram itself. Sarithira punaivu. Equvalent to mahabaratham by jeyamohan, mathorubagan by perumal murugan, balachandran by p. Murgan. And perhaps by viyasar and valmiki themselves
Sund1944@gmail.com
March 26, 2015 at 06:39
அய்யா?
நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பது எனக்குப் புரிபடவில்லை – ஆனால் – கல்கியின் கதைகளை ‘உலகப் புகழ்பெற்ற மூக்கர்’ உட்பட ரசித்திருக்கிறேன். அவருடைய சத்தியவெள்ளம், என்னைப் பொறுத்தவரை, வரலாறுக்கு மிக அருகில் வந்தது. (இது அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை எதிர்த்ததனால் படுகொலை செய்யப்பட்ட உதயகுமாரின் கதையை – அது தொடர்பான நிகழ்வுகளை வடிக்க முயன்றது, நீங்கள் 1944ஆனதால் உங்களுக்கு இதனை நினைவிருக்கலாம்?)
கல்கியின் புனைவுகள் புதினங்களல்ல நாவல்களல்ல என்றெல்லாம், அவர் சரித்திரத்தைத் தான் எழுதினார் என்றெல்லாம் சொல்ல வரவில்லை. பார்க்கப் போனால், அவர் ரோமிலா தாபர் போன்றோர்களை விட வரலாறுகளைச் சரியாகவே எழுதியவர்தான்.
அவர் சுவாரசியமான சிடுக்கல்களற்ற எழுத்தாளர்தான்.
நானும் உண்மைகளை மட்டுமேதான் எழுதுகிறேன் என்றல்ல – ஆகவே கிண்டல் செய்வதை கிண்டலாகவும், திராவிட இயக்கம் பற்றிய கருத்துகளை, என் கருத்தாகவும் மட்டுமே கருதிக் கொள்ளவும்.
இப்படிக்கு,
ஹரூன் பாஷா அசுரன்.
March 25, 2015 at 08:16
“இயக்குநர் மகாமகோ எஸ்பி முத்துராமன் அவர்களின் அன்புச் சகோதரரும் கூட! எதற்கு இதனைச் சொல்லவருகிறேன் என்றால், தமிழ வாழ்க்கை நியதிப்படி, அண்ணன் பிலிம் எடுத்தால், தம்பி பிலிம் காட்டுவார்தானே!”
இப்படி சரியாக கணித்துவிட்டு அவரைப்பற்றி ஏன் இந்த அங்கலாய்ப்பு?ஒரு சேஞ்சுக்கு இந்த சுட்டியை படியுங்கள் :-)
http://www.vinavu.com/2015/03/24/singapore-dictator-lee-kuan-yew-passes-away/#tab-comments
March 25, 2015 at 11:17
யோவ் சேஷகிரி, இப்டீ சுட்டி குட்டின்னு கொடுக்கறே, என் கழுத்த அறுக்கறே! இன்னாபா, லொள்ளா?
நீ சும்மா சுட்டிட்டு, பின்னாடி மண்ணத் தட்டிக்கினு போய்ட்ற, ஆனா எளவுகளப் பட்ச்சி அவ்தி பட்றது யாரு மேன்?
வெனவு, மதிமாற, யுவகிருஷ்ண ஜோக்கர் தளங்கள இனிமேக்காட்டியாவது சுட்டாம இரு பாஸ்!
March 25, 2015 at 12:17
என்ன சுப வீ ஐயா இப்படி சொல்லிப்புட்டாரு! ராஜராஜன், ராஜேந்திரன் பேரும் பார்ப்பன அடிவருடி அப்படின்னு சந்தைல பேசிக்கறாய்ங்களே!
March 25, 2015 at 15:02
Ayyyyyyoooo….. Semmmmmaaaa….sirippu thaankala…