கனிமொழி: என் அம்மா, அப்பா, அண்ணன்கள், கணவன், மகன், நண்பர், நண்பி(!) பெயர்களை உடனடியாக மாற்றவேண்டும்!

February 14, 2015

கனிமொழி அவர்களின் மகாமகோ கவிதைகளைப் படித்துவிட்டு இக்காலம் வரை – அவருக்குத் தமிழைக் கண்டாலே அதிவெறுப்பு என்றுதானே நினைத்துக்கொண்டிருந்தேன்? அநியாயமாகத்  தவறு செய்து விட்டேனோ??

“… அ.தி.மு.க. அரசிற்கு தமிழ் உணர்வு இல்லை. எனவே தான் சிறீரங்கத்தில் கட்டப்பட்டுள்ள பயணிகள் தங்கும் விடுதிக்கு யாத்ரிகர் நிவாஸ் என பெயர் இட்டுள்ளனர். அழகிய தமிழ் பெயரில் அதை அழைக்க அரசுக்கு மனம் இல்லையா?”

— — கனிமொழி (தன்மானம் காக்க தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் – கனிமொழி பேச்சு – (ஞாயிறு, 08 பிப்ரவரி 2015))

ஹ்ம்ம்ம்… இருக்காதுதான். நிச்சயம் நான் தவறு செய்யவில்லை எனத்தான் தோன்றுகிறது. அவருக்குத் தமிழ் ஒத்துவராதுதான். ஆனால், ஆனால்… தொழில்முறை  திராவிடனின் தமிழுணர்வு என்பது சும்மா ஆடுமா, சொல்லுங்கள்? :-)

கனிமொழி அவர்களுக்கு  திமுகவில் எதிர்பார்த்த பதவி ஒன்றும் கிட்டவில்லையல்லவா, பாவம், அதனால் அவருடைய திடீரெக்ஸ்  தமிழுணர்வு அளவுக்கு அதிகமாகத் தலைக்கேறிவிட்டது.

ஆகவேதான், அவர் உடனே குதித்தெழுந்துகொண்டு, அழகிய தமிழ்ப் பெயர்களாக அவருடைய பல சொந்தக்காரப் பெயர்களை மாற்ற வேண்டும் எனத் தீவிரமாக இருக்கிறார்!

என்னே அவரது பராக்கிரமம்! என்னே அவரது தமிழ் அபிமானம், அய்யய்யோ மன்னிக்கவும், அன்பு!

என்னே அவரது புரட்சிகர நேர்மை விழுமியம்! என் கண்கள் உள்ளபடியே பனிக்கின்றனவே! என்ன தட்டச்சு செய்கிறேன் என்பதேகூடத் தெரியவில்லையே! :-(

-0-0-0-0-0-0-

ஆகவே, இந்தப் பெயர்மாற்றங்கள் குறித்த அவருடைய பரிந்துரைகளல்ல, உத்தரவுகளை முந்திரிக்கொடுப்பதில் உள்ளபடியே எருமையடைகிறேன்.

  • உறவுமுறை – பழைய/தற்போதைய பெயர் – புதியபெயர் 
  • அப்பா – கருணாநிதி – இரக்கச்செல்வக்குவியல் (அல்லது அப்பா – தட்சிணாமூர்த்தி – தென்னாட்டுத்திருவுருவோன்)
  • அம்மா – ராஜாத்தி – செல்லஅரசி
  • கணவன் – அரவிந்தன் – தாமரையான்
  • மகன் – ஆதித்யா – ஞாயிறன்
  • அண்ணன் – ஸ்டாலின் – எஃகான்  << :-( இதனை எப்படிக் கன்னித்தமிழ்ப்படுத்துவது என்பதற்கு, கனிமொழி அவர்களுக்கு நீங்கள் உதவமுடியுமா? எனக்கு வாயும் மூளையும் சுளுக்கிக் கொண்டுவிட்டன! ஆகவே ஸ்டாலின் என்பதன் உருஷ்யப் பொருளைத் தடுத்தாட்கொண்டு விட்டேன்!>>
  • அண்ணன் – அழகிரி –  அழமலை
  • நண்பர் – ஜெகத் கப்ஸர் – அண்டப் புளுகர்
  • நீரா+ராடியா – தண்ணீரிலிருந்துதோன்றியாள் +வானொலா(?)

-0-0-0-0-0-0-

இன்னொன்று – பல தினசரிகள் இதனை யாத்ரீ நிவாஸ் எனக் குறிப்பிட்டாலும் (எப்படியும் – இதில் ஒரு பிரச்சினையும் இல்லை – வடக்கத்திப் பிரதேசகங்களில் இருந்து வரும் யாத்ரீகர்களுக்கு இப்பெயர்தான் பரிச்சயமாக இருக்கும்) அதன் வாசலில் எழுதப் பட்டிருப்பது என்னவோ – யாத்திரீகர்கள் தங்கும் விடுதிதான்!

‘சேச் பக்’ (அந்த சென்னை மாநகரில் உள்ள எழவெடுத்த ப்ரெஸென்டேஷன் ‘சர்ச்பார்க்’ கான்வென்ட் தான்யா இது!)  பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி பயின்று, அதனால் அதீதப் பெருமையுற்று, ஆங்கிலப் பத்திரிகைகளை மட்டும் படித்து தமிழை மானாவாரியாக வளர்த்தால் இப்படித்தான் தப்பும் தவறுமாக, கண்டமேனிக்கும் பேசத் தோன்றுமோ?

-0-0-0-0-0-0-

கனிமொழி அவர்களின் தற்காலத்திய கையறு நிலையை நினைத்தால் கவலையாகவே இருக்கிறது. ஆனாலும், என்னைப் பொறுத்தவரை அவர்தான் கருணாநிதி அவர்களின் உண்மையான, நேரடி வாரிசு.

வாழ்க அவர் தமிழன்பு! மேலோங்குக அவர்தம் புகழ்!

அவரை

அவரை

அவரை, எனக்கு வாழ்த்தவும் வயதிருக்கிறது. வணங்கி மகிழ்ந்து பொரியல் செய்துண்ணவும் நான் தயார்!

நன்றி. வணக்கம்.

திராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (31/12/2014 வரை!)

9 Responses to “கனிமொழி: என் அம்மா, அப்பா, அண்ணன்கள், கணவன், மகன், நண்பர், நண்பி(!) பெயர்களை உடனடியாக மாற்றவேண்டும்!”

  1. g2-801829171bae2c65adde95ffa2898591 Says:

    ” அண்ணன் – அழகிரி – அழமலை” Super
    ” நண்பர் – ஜெகத் கப்ஸர் – அண்டப் புளுகர்” Super ‘o’ Super

  2. க்ருஷ்ணகுமார் Says:

    \\ நண்பர் – ஜெகத் கப்ஸர் – அண்டப் புளுகர் \\

    செல்லாது செல்லாது செல்லாது.

    அண்டப்புளுகர் என்ற தமிழாக்கம் காரணப்பெயராக தாங்கள் உருவகித்திருக்கலாம். அந்தமுட்டுக்கா சரி.

    ஆனால் அவருடைய ஒரிஜினல் (தப்பு தப்பு) மெய்யான பெயர் ஜெகத் கேஸ்பர் ராஜ் (jegath gaspar raj)

    கேஸ்னா வாயு ………

    ஆனா கேஸ்பர் என்ற ஸ்பானிஷ் சொல்லுக்கு அர்த்தம் பொக்கிஷம்…… இதுக்கு தமிழ்ல தமிழ்ல……

    ம்……… இப்படி யாம் பெற்ற வாய் மூளை சுளுக்கு பெறுக இவ்வையகம் என்ற ராமின் மனஸுக்கு ஈடே இல்லை :-)

    த்ராவிட டம்ளர்களின் டம்ளர் சேவைக்கும் நகைச்சுவைக்கும் கொறச்சலே இல்ல.


    • யோவ் கொமாரு!

      இப்ப இண்ணான்ற? கொமட்ல குத்தட்டா? *&^%$#

      …கோச்சுக்காதபா. ஸும்மனாச்சிக்கும்தாம்பா ஸொன்னேன். லூஸ்ல வுட்ரு.

      பொயட்டிக் லைஸென்ஸுன்னிட்டு ஒண்ணுகீதுபா? அத்தொட்டுதான் இப்டீ! என்க்கு அவ்ரு பேரு பெத்தபேரு அல்லாம் தெர்யும்… ஸர்வம் ஊழல் ஜெகத்கஸ்பர்.

      ஜோக்கா ஏதாவ்து எள்தினா, ஸும்மா, நொள்ள சொல்லாத, செரியா?

  3. nadardasan Says:

    ayya mathimaaran idukellam edayum eluda maataaru…enna avaru thravida kodumbathu la thathedukapatta theru payal

  4. க்ருஷ்ணகுமார் Says:

    ராம்ஸாமி சார் !!!!

    பாட்டெழுதிப்பேர் வாங்கும் பொலவர்களும் உண்டு குற்றம் கண்டுபிடித்தே ஜல்ஸா பண்ணுபவர்களும் உண்டு………..

    இதில் நான் எந்த வகை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே…………

    ஆக ஆயிரம் பொற்காசுகளும் உமக்கே. உமக்கே. உமக்கே.

    த்ராவிடமும் கப்ஸாவும் நோயும் கிருமியும் ஊழலும் கச்சேரி விசாரணையும் கம்மூனிஸமும் தகர டப்பா உண்டியலும் போல் இணை பிரியாதவை என்று உலகமறிந்ததே………..

    த்ராவிட கப்ஸா பேரண்டத்தில் இந்த ஜெகத் கப்ஸாவும் கூட ஒரு துகளே என்பதை நம்ம பூவண்ணன் சார் கூட ஒப்புத்துப்பார்.

    நான் எழுத எழுத காக்க கத்துவதால் பகுத்தறிவு பூர்வமாக அவர் ஒத்துப்பார் என்று அடித்து விடுகிறேன்.

    \\ கோச்சுக்காதபா. ஸும்மனாச்சிக்கும்தாம்பா ஸொன்னேன். லூஸ்ல வுட்ரு. \\

    இப்புடி டிஸ்கி போட்லன்னாலும் அப்புடிக்கே ஸாமி :-)

  5. Venkatesan Says:

    அறிவுநிதி – அறிவுச்செல்வன்
    துரை தயாநிதி – அருட்கடல் செல்வதுரை
    அருள்நிதி – அருட்செல்வன்
    உதயநிதி – கதிரவன் குணதிசை வந்தடையும் பொழுதுச் செல்வன்

    Cloud Nine Movies – மேகம் ஒன்பது திரைக்குழுமம்
    Red Giant Movies – சிவந்த பேருரு திரைக்குழுமம்
    Daya Cyber Park – அருள் இணைய பூங்கா
    Inbox 1305 – உள்பெட்டி 1305


    • அய்யா வெங்கடேசன், அத்தனை பொற்காசுகளும் உமக்கே! :-)

      இந்த Inbox 1305 இழவு பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. நரிமுகத்துக்கு நன்றி. :-(

  6. Ranganathan Says:

    நல்ல பதிவு, சிரித்து சிரித்து வயிற்றுவலி வந்துவிட்டது, especially, “அண்ணன் – ஸ்டாலின் – எஃகான் ” !!

    இவரை “இசுடாலிர்” என்று படித்த ஞாபகம் ..


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s