விஜயிசம்: விஜை விதைத்தவன் விஜை அறுப்பான்

May 20, 2026

முகம் சுளிக்காதீர்கள்! தமிழகத்தின் மீதான மேற்கண்ட சாபம் மட்டும் மட்டமல்ல, அதைவிடப் படுமட்டரகமான ஒன்றும் இருக்கிறது. அதாவது:

உதய் விதைத்தவன், உதைபடுவான் கூட.

தலைப்புக்கு, கூறுகெட்ட சினிமாமோக தமிழக வாக்காளர்கள் காரணம்.பதிவின் இரண்டாம் பத்திக்கு ராஜமாதா துர்க்கையும் அவள்தம் மணாளனும் உருவாக்கிய அவர்களுடைய அரைகுறைத் தற்குறிப் புதல்வனும் காரணம்.

எது எப்படியோ! ஊழல் குட்டையில் ஊறும் மட்டைச் சனியன்களான திமுகவும் அஇஅதிமுகவும், ஒருமாதிரி ஏமாற்றத்தில் இருப்பது மனமகிழ்ச்சியை ஊட்டுவது; ஊக்கபோனஸ்ஸாக – நாறி அழுகும் அம்மட்டைகளின் வெட்டி நார்களான கம்யூனிஸ்ட்களும் விடுதலைச் சிற்தேக்களும் டெம்பரவரியாகவாவது ஒதுக்கப்பட்டது சந்தோஷமே.

1

விஜய்குஜய் பிகிலார், அப்டீபோடு…போடுபோடு எனக் குத்தாட்டம் போட்டு என் முன்னாள் மாணவர்களைக் கிறங்கவைத்து மூளைச்சலவை செய்து தமிழக முதலையமைச்சர் ஆனாலும், சிலபல விஷயங்களை அவருடைய விசிலடிச்சான்குஞ்சப்ப ரசிக வாக்காளர்கள் சாத்தியப் படுத்தியிருக்கிறார்கள், செய்திருக்கிறார்கள் – இவை ஒப்புக்கொள்ளப் படவேண்டிய ‘நல்ல’ வெளிப்பாடுகள்தாம்.

: திராவிடமாடல் அரசியல் என்பது உள்ளீடே அற்ற கூளம் + அதன் ஒற்றைப் பெரும் சாதனைவேதனையான சுமார் 60 ஆண்டுகால பள்ளிக்கல்வி உயர்கல்வி எழவு என்பதும் அசிங்கமான கவைக்குதவாத உணர்ச்சிகரமைதுனக் குப்பை எனச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளன.. 

. ஓட்டுக்குப் பணம் தேவையில்லை. (ஆனால் பிகில் கட்சியும் சிலபல இடங்களில் கொடுத்துத்தான் இருக்கிறது) – ஆனால்  சினிமாமோக வாக்காளப் பெருமாக்களுக்குக் கொஞ்சம் விசிலடிச்சான் இன்பலாகிரி கொடுத்தால் போதும். ஓட்டுச் சாவடிக்கு ஓடிப்போய் ஓட்டில் பிகில் சின்னத்தில் குத்திக் குத்திக் குத்தாட்டம் போட்டு விடுவார்கள்.

. இரண்டு பெருங்கொள்ளை திராவிடக் கட்சிக் கூவான்களுக்கும் மாற்று, ஹ்ம்ம்ம்… ஊம்ம்ம்… இன்னொரு இளந்திராவிடக் கட்சியே!

: தமிழகப் பெண்கள் – குடும்பத்தைக் கட்டிக் காப்பவர்கள், புருஷன் எப்படி திராவிடக்குடி குடித்தே செத்தாலும் – அதன் வளமான எதிர்காலத்துக்காகக் யோசித்துத் தியாகம் செய்யும் பாங்கினர் எனும் மாயை விலகியிருக்கிறது. வீட்டில் சோறு பொங்கக் காசு இருக்கிறதோ இல்லையோ, விஜய்குஜய் சூர்யா படமா… யானை விலை கொடுத்தாவது FDFS பார்க்கும் பாக்கியம் பெற வேண்டும் எனும் அவர்களுடைய நியாயமாக அபிலாஷைதான் தமிழகத்தை நிர்வகிக்கும் திறனாக விஜய்குஜய் மூலமாக முகிழ்த்திருக்கிறது.

. ‘தேர்தல் பாதை, திருடர் பாதை’ என்றும், ‘நான் ஒர்த்தன் வாக்குப் போட்டு என்ன பெரிய்ய மாற்றம் ஏற்பட்டுவிடும்’ பேசுபவர்களும், ‘எல்லாமே திருடனுங்க, அத்தொட்டு நோட்டாவுக்குத்தான் என் ஓட்டு’ எனவிருக்கும் அவநம்பிக்கை வாதிகளும் நிறைந்த பொதுவெளியில், பெரும் திரளாக இளைஞர் பட்டாளங்கள் வாக்களிப்பதும் நடந்திருக்கிறது. (பின் எதற்காக ஒரு ஜிகினாவாதிக்கு ஓட்டுப் போட்டார்கள் என்ற கேள்வி இருந்தாலும் – இம்மாதிரியே இளைஞர்கள்  தொடர்ந்து தேர்தல் பாதை ஜனநாயகத்துக்கு வருவது சரியே)

. ஜாதி பார்த்து மதம் பார்த்து தமிழகத்தில் ஓட்டுப் போடப்படவில்லை என்று சொல்ல வைத்தது – ஆனால் இதில் எவ்வளவு தூரம்/ஆழம் உண்மை என்பது தெரியவில்லை; இருந்தாலும் ஒரு 10% விசில்கார எம் எல் ஏக்கள் இப்படி இருந்தாலே பெரிய விஷயம்தான்…

எதிர்மறை விஷயங்கள் எனப் பலப்பல இருக்கின்றன, மாதிரிக்கு

‘: சினிமா கவர்ச்சிகர இஷ்டைலுக்கும் நிஜவாழ்க்கை + நிதர்சனஅரசியலுக்கும் போடப்படும் மொட்டைத்தலை+முழங்கால் முடிச்சு

‘. லோக்கல் வேட்பாளர் முக்கியமில்லை – எங்களுக்கு வெறும் ஜிகினாத்தலைவன் போதும்.

‘: கூட இருப்பவன்களெல்லாம், அதுவும் தவெக இரண்டாம்வரிசைத் தலைவன்களெல்லாம் ஓடுகாலிகள், அயோக்கியர்கள் – இவர்களை வைத்துக்கொண்டு எப்படி குட்டையைக் குழப்பாமல் இருக்கமுடியும்?

‘:…

இப்போதைக்கு இப்போதை போதும். அதாவது, ஜிகினா கொடுக்கும் இன்பலாகிரியே துணை.

2

இந்த பிகில் கட்சிக்கு ஐடியாலஜி என்பதுபோல ஒரு ஐடியாவுமே இல்லை என ற்றொம்ப அபாண்டமாகப் பேசுகிறார்கள். ஆனால், உண்மையில் அண்ணாயிசம் என்பது போல, பெரியாரிசம்/பெரியார்ஈயம் என்பது போல, திராவிடமாடல் எனும் மாயப்புகைமூட்டத்தைப் போல – இந்த டிவிகே பிகில் கட்சிக்கும் அப்படியாப்பட்ட ஒரு விசித்திர ஜந்து இருக்கிறது.

அதுதான் விஜயிசம். ப்ளடி ஹெல்.

விஜயிசம் = தமிழ்த் தோசையம் + திராவிட வேசியம் + உடும்பு லேகியம் + வலைத்தள மீமாம்ஸகம் + முதிர்ந்த-முதிராத-அறியாப்பிள்ளை விடலையிஸம்

அதாவது ஐம்பெறும் கோப்பியம் – அதாவது cope செய்தல் என ஒரு மாதிரியாகப் புரிந்துகொள்ளுங்கள்.

மேற்கண்ட அசமன்பாட்டிற்கு ஒருமாதிரி விளக்குமார் விளக்கம் கோனார் நோட்ஸ் வகையறா கொடுக்கவேண்டுமென்றால்:

தமிழ்த் தோசையம்: வெட்டித் தமிழ் வெறி உச்சாடன இட்டிலிக்கடையில் இழுத்துவார்க்கப்படும் ஓசை மிகுந்த தோசை செய்து போக்கற்ற வழிப்போக்கர்களுக்குப் பரிமாறுவது
+
திராவிட வேசியம்: கவைக்குதவாத சுயமைதுன திராவிடத் தனம் பேசி, அதற்கே உரித்தான வேசைத்தனத்தைச் செய்வது. (ஈவெரா சொன்னது நினைவிலிருக்கிறதா? )
+
உடும்பு லேகியம்: நீட் எதிர்ப்பு, இருமொழிக் கொள்கை, ஒன்றிய அரசு, சமூக நீதிக் கோமாளித்தனம், மதச் சார்பின்மை, இலவசமோயிலவசங்கள்++ போன்ற உடும்புத்தைல வியாபாரங்களில் முனைப்பு
+
வலைத்தள மீமாம்ஸகம்: ஜிகினாக்களும் புளகாங்கிதங்களும் அதிமனிதப் பீலாக்களும் மட்டுமே நிறைந்த ஆனால் எண்ணிலடங்காத மாஸ்-ஹிஸ்டீரியா மீம்ஸ், ரீல்ஸ் போட்டே  சலித்த சராசரி மூளைகளைச் சலவை செய்யும் பாங்கு
+
முதிர்ந்த-முதிராத-அறியாப்பிள்ளை விடலையிஸம்: ஆர்வக்கோளாற்றுச் சிறு பிள்ளைகளை வைத்து முதிர்ந்த மூடர்களையும், இளம் விடலை தன்னிச்சை இன்ஃப்ளூயன்ஸர்களை வழியொற்றும் பிற தறுதலை இளைஞர்கள் வசீகரம் செய்யப்பட்டும் – தமிழர்களுக்கே உரித்த, உதவாக்கரை உணர்ச்சிகரமைதுன  மந்தை உச்சாடன ‘தீயசக்தி X தூயசக்தி’ வகை மடத்தனத்தை அறுவடை செய்யும் பாங்கு.

3

…அவரைச் சுற்றிச் சுற்றி உள்வட்டமாக யார் இருக்கிறார்கள் என்பதை மேலோட்டமாகப் பார்த்தாலேகூடபெரும் விசனம் தான்; அதுவும் சொஸ்தம் செய்யப்பட முடியாததொன்று.

ஆதவ்அர்ஜுனார், ‘புஸ்ஸி’ ஆனந்தனார், செங்கோட்டையார்…

ஆதவ், அர்ஜுனா அல்லர், கழுதை கர்ஜனா கூட அல்ல – மாறாக, லாட்டரி துச்சாதனா என்பதுதான் அவர் பெயராக இருக்கவேண்டும்… LOTTERY is nothing by LOOTERY. எந்த ஒரு விஷயத்திலாவது கொடுஞ்சூதாட்டத்துக்கும் இந்த லாட்டரி எழவுக்கும் வித்தியாசமுண்டா, சொல்லுங்கள்… இவரும் இவர் புகுந்த வீட்டினரும் (லூட்டரி மார்ட்டின்) செய்யாத ஊழலோ அயோக்கியத்தனமோ உண்டா? ஆனால் – இந்த ஆள், கட்சிகட்சியாகக் கலர்கலராக மாறி றெக்கை விரித்தாலும், பின்னர் மேதகு ஜோஸஃப் விஜய்குஜயால் ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டபின் இவர் ஊழலை ஒழிக்கப் போகிறாராமே!)

இந்த ஆனந்தனாரும், கடுகுச்சேரிப் பாண்டிச்சேரியில் ஒரு குறு விறகுதொட்டி நடத்தி வந்தவர்; ரெண்டு தெரு வார்ட் கவுன்ஸிலர் வகை பாண்டி  ‘எம் எல் ஏ’ தொகுதி ஒன்றில், படுபீதியளிக்கும் பயங்கரப் போட்டி போட்டு வென்றும் தோற்றும் காலத்தை ஓட்டியவர்… ஆனால், ஒருசில ஆண்டுகளிலேயே நில/வீடு அபகரிப்பு அடாவடி எனத் தன் திராவிடத் தொழிலை விஸ்தீரணம் செய்து, உறவினர்களை வைத்து கட்சிக்குக் கட்சிதாவி, ஒருவழியாகக் கடைசியில் விஜய்குஜயுடன் ஐக்கியமாகி எல்லா வல்லமையும் பெற்று விளங்குகிறார்… தமிழக அரசியலும் கனஜோராக திராவிடமாடல் ரெண்டுங்கெட்டானாக மிக வெளங்கிடும். (ஜோஸஃப் விஜய்குஜயால் ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டபின் இவர் ஊழலை ஒழிக்கப் போகிறாராமே!)

இன்னொருவர் இந்த தமிழ்க்கொட்டை செங்கொட்டையார். இவரும் ஊழலில் கைதேர்ந்தவர்தாம், திராவிடப் பழம் தின்று கொட்டையும் போட்டவர்தாம். (இப்போது மாறிவிட்டிருக்கலாமோ என்ன எழவோ!) (ஜோஸஃப் விஜய்குஜயால் ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டபின் இவரும் ஊழலை ஒழிக்கப் போகிறாராமே!)

பேஷ்பேஷ்!

இதற்கு மேலிருக்கும் உள்-ஓளிவட்ட ஆசாமிகள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அழுகி முடை நாற்றமெடுக்கும் ஒரு பானைச் சோற்றில், மேற்கண்ட மூன்று புழு நெளியும் பருக்கைகளானவை சரியான பதத்தைக் காண்பிப்பவைதாமே!

4

(ஆனாலும், இவர்களையும் மீறி, ஒருமாதிரி மிகக் கொஞ்சமான நல்லாட்சி எனத் தப்பித் தவறி நடந்தால் – உண்மையாலுமே எனக்குக் கடவுள் நம்பிக்கை வந்துவிடும்… தேவையா?)

4 Responses to “விஜயிசம்: விஜை விதைத்தவன் விஜை அறுப்பான்”

  1. Kannan's avatar Kannan Says:

    முபுகளுக்காக ஒரு ப்ரோக்ராம் டெவெலப் பண்ணிக்கிட்டு இருக்கேன். Any ideas to improve this are welcome.

    int shuffleSymbol = -1;

    void doThingy(){

    if(shuffleSymbol == -1){
    /**
    * Quickly press the shuffle symbol three times while pretending to check the machine
    */
    shuffleSymbol = athey;

    }

    /* which button is pressed doesn’t matter, hehe */
    }

    void shutDown(){
    if(shuffleSymbol > -1){// it is set, you see
    /*
    * monkey algo at work, be careful don’t change the total
    *
    */
    }
    // nations fate is sealed, peace.
    }


    • 🤣 😂 🤔 😭 இதை வைத்து… திமுக உபி ஐடி ஸெல் ஜென்மங்கள், இதோ ஈவிஎம் ஹேக் செய்ய ப்ரொக்ராம் – இதனால் தான் திமுக தேர்தல் தோல்வியடைந்தது என பகீர் கிளப்பி விட்டால் என்ன செய்வது என பயமாக் கீதே!

  2. பிகில்தாஸ்'s avatar பிகில்தாஸ் Says:

    //இன்னொருவர் இந்த தமிழ்க்கொட்டை செங்கொட்டையார்//
    பிதுக்கிவிட்டார்கள் ஐயா பிதுக்கிவிட்டார்கள்! இருப்பதிலேயே மூத்த(?) தலைவருக்கு நிதியமைச்சகத்தை தருவதாக ஆசைகாட்டி மோசம் செய்துவிட்டார்கள்😭 ஆண்டவரே இரங்குமய்யா🙏


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *