கவிஞ்ஜர் கனிமொழி அவர்களுக்கு கலைஞ்ஜர் கருணாநிதி அவர்கள் கொடுக்கும் படுகோர, கொடூர சாபம்! :-(
March 15, 2015
பாவம், கனிமொழி அவர்கள். பெண்ணாகப் பிறந்ததுதான் அவருடைய முதல் குற்றமோ? பிற்காலத்தில் திடுதிப்பென்று கவிஞ்சரானது வெறும் வெகுதூர இரண்டாம் குற்றம்தானோ?
தள்ளாடிக்கொண்டே 63 வயதில் இளைஞரணித் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் இசுடாலினார் அவர்களை, கட்சியில் எப்படியாவது முன்னேற்ற வேண்டும் என்பதற்காக, இப்படியா தன் சொந்த, செல்ல மகளைப் பலி கொடுப்பது?
ஏன், என் மதிப்புக்கும் அன்புக்கும் உரிய கருணாநிதி அவர்கள், இப்படிச் சொன்னார்?
“நீதி என்றும் வெல்லும்; நிச்சயமாக வெல்லும் எந்தக் குறுக்கு வழிகளாலும் அதைத் தடுக்க முடியாது.“
2ஜி – கலைஞர் டீவி வழக்கு போன்றவற்றில் நீதி வெல்லவேண்டும் என திடீரென்று சொல்லவேண்டிய அவசியம், இவருக்கு இப்போது ஏன் வந்தது? ஏன், குறுக்கு வழிகளின் பேராசானாகிய அவராலேயே அதனைத் தடுக்க முடியாதா? அல்லது இது வெறும் விரக்தியால் விளைந்த மூக்குச் சிந்தலா??
அல்லது இசுடாலினார் அவர்களுக்குத் தொடர்ந்து ‘லைன் க்ளியர்’ செய்து கொண்டிருக்கிறாரா??
ஹ்ம்ம்… சகோதர-சகோதரி யுத்தம் எப்படி இருந்தாலும், கனிமொழி அவர்களின் கழுதைகளின் அயர்வற்ற வாசகனாகிய நான், எப்போதுமே அவர் பக்கம்தான் என்பது எனக்கும் உங்களுக்கும் தெரியுமல்லவா?
என்ன இருந்தாலும், பாரதி அன்றே சொன்னானல்லவா – கருமத்தின் வாழ்வதனைச் ஜூது கவ்வும் என்று. அதுவும், கருமம் மறுபடியும் வெல்லுமென்று?
கனிமொழி அவர்களே! எனக்கு நிச்சயம் நம்பிக்கை இருக்கிறது. கருமம் பிடித்த தருமத்தால் ஒரு நீதி முடியையும் பிடுங்க முடியாது. ஹ்ஹ!
கவலை வேண்டேல்!
இரக்கமற்ற, தன் மகளை வெறுக்கும் கருணாநிதி அவர்களின் சாபத்தைப் பற்றிய மேலதிக விவரங்கள்.
தொடர்புள்ள பதிவுகள்:
March 16, 2015 at 19:32
you are wrong. the sutti does not say anything about kanimoli. muka sir said many things only about papathi j. you are liar.
adutha thadava facta chek pannittu eluthuda jaya sombu.
March 18, 2015 at 01:01
அய்யா கழக கண்மணி முக வாழ்க அவர்களே, மூளை சலவையில் தெளிந்து தேர்ந்த உமக்கு, திருவள்ளுவர் கூறும் அறிவுரையை கேளிர்.
“பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்து காலை புகின்.”
இதன் நேர்பொருளும் உட்பொருளும் உமக்கு பொருந்தும்!