திராவிட இயக்கங்களின் எழுபெரும் கொடைகள்

March 21, 2015

கடந்த சுமார் 2 மாதங்களாக, விட்டுவிட்டு – திராவிட இயக்க விசிறியான (இன்றுவரை) நண்பர் ஒருவருடன் தொடர்ந்து நடத்திக்கொண்டேயிருக்கும் மின்னஞ்சல் உரையாடலின் ஒரு சாராம்சப் பகுதி கீழே:

-0-0-0-0-0-0-

… நான் பலதடவை உங்களுக்கு எழுதியுள்ள கடிதங்களில் – திராவிடலை இயக்கங்களின் பல குணாம்சங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். அவற்றின் தமிழ் சமூகத்தின் மீதான எதிர்மறை தாக்கத்துகளைப் பற்றியும், அதன் பலப்பல ‘கொடை’ களைப் பற்றியும்கூட. நிறைய யோசித்தும் கூட, என்னால்  இந்த முயக்கங்களுக்குச் சாதகமான ஒரேயொரு விஷயத்தைக் கூடத் தெரிந்துகொள்ளமுடியாமல் போனது என் போதாமைதானோ?

நீங்களும் பாவம், என்னென்னவோ முயற்சிக்கிறீர்கள், சப்பைக் கட்டு கட்டுகிறீர்கள். உங்கள் இயலாமையும், ஆதங்கங்களும் எனக்குப் புரியாமல்  இல்லை. இவ்வளவு நாள் நீங்கள் நம்பிவந்த கொள்கைகள் இப்படியாகிவிட்டனவே நடைமுறையில் – என்று நீங்கள் விசனப்படுவது புரிகிறது.

நம்மிடம் இருக்கும் ஒரு அடிப்படை உரையாடல் விரிசல் என்னவென்றால் – நீங்கள் இந்த நடைமுறைக் கந்தறகோளங்களை – ஏதோ, இயக்கத்தின் ஒரு சில பிறழ்வுகளாக நினைக்கிறீர்கள், அடிப்படையில் நல்ல குறிக்கோட்களுடைய இயக்கம், ஏதோ சிலரால் ‘ஹைஜேக்’ செய்யப்பட்டதாக நினைக்கிறீர்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை உண்மையென்னவென்றால் – இந்த இயக்கமே, இந்த கொடைகளுக்காகத்தான் வடிவமைக்கப் பட்டதென்று. உதிரிகளுக்காக, உதிரிகளால் நடத்தப் படுவதென்று. That is – that the so called Dravidian Movement is morally, intellectually bankrupt – is not because of some later day technical aberration, but has been so by design – right from its very beginnings.

… ஆனால், என்னைப் பொறுத்தவரை – நம் தமிழகத்தைப் பொறுத்தவரை,  திராவிட இயக்க சிந்தாந்தங்களின், முயக்கங்களின் எழுபெரும் மகாமகோ கொடைகளைப் பற்றி யாராவது விரிவாக எழுதினால்  நன்றாக இருக்கும்; இந்த எழுபெறும் கொடைகளாவன:

  1. சமூகத்தைக் குடிவெறிமயமாக்கல்
  2. சமத்துவம் சமூகநீதி சுயமரியாதை என்று முழக்கமிட்டுக்கொண்டே, கமுக்கமான ஜாதிவெறியை விசிறி விடல்; வெறுப்புகளை மூலதனமாக்கல்.
  3. அரசியல் மிகத் துப்புரவாகவே குடும்ப/ஊழல்/பொறுக்கிமயமாக்கப் பட்டமை
  4. வாழ்க்கையே திரைப்படமயமாக்கப்படல்
  5. பெண்கள் சுருக்கப்பட்டு அற்ப நுகர்பொருட்களாக ஆக்கப்பட்டமை
  6. சகல தளங்களிலும் தமிழும் கல்வியும் காயடிக்கப்பட்டமை
  7. தமிழகம், தொடர்ந்து கழிசடைமயமாக்கப்பட்டமை

குறிப்பாக – தமிழகக் குடிவெறிக்கும் திராவிட அரசியல் – ஊழல் பணப்பகிரல் – கயமைநிதி/லஞ்சஊழல் பண மேலாண்மைக்கும் உள்ள அடிப்படைத் தொடர்புகளைப் பற்றி யாரேனும் ஒரு கறாரான ஆராய்ச்சி செய்தால் அது நமக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல்களை அளிக்கும்.

(மேற்கண்ட எழுபெறும் திராவிடக் கொடைகளையும் மீறி, நம் தமிழகம் கொஞ்சம் உருப்படியாகச் சில விஷயங்களிலாவது இருக்கின்றது என்றால், அது நம் தமிழகஇந்தியர்களின் அடிப்படை விழுமியங்கள் சார்ந்த குணாம்சங்களால்தான் என்பது மட்டுமே என்பது கொஞ்சமாவது திருப்தி தரும் விஷயம்…)

-0-0-0-0-0-0-

அடுத்து வருகிறது: #பெரியார்புதைந்தமண்! :-(

3 Responses to “திராவிட இயக்கங்களின் எழுபெரும் கொடைகள்”

  1. Venkatesan Says:

    “திராவிட இயக்கத்தால் தமிழகம் ஏழு விதங்களில் மோசமாகி விட்டது” என்ற கூற்றை அறிவியல் முறைப்படி நிறுவ இரண்டு ஆதாரங்கள் தேவைப்படும். முதலில், திராவிட இயக்கம் உருவாகும் முன்பு தமிழகம் இந்த ஏழு அலகுகளில் எப்படி இருந்தது, இப்போது எப்படி உள்ளது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இரண்டாவது, தமிழகம் மோசமாக ஆனதற்கு திராவிட இயக்கம் காரணமா, அல்லது வேறுஏதாவது காரணம் உள்ளதா என ஆராய வேண்டும். இந்த வகையில் “control subject” தேவை. திராவிட இயக்க பாதிப்பில்லாத இந்தியப் பகுதிகள் (உதாரணமாக உத்திரப் பிரதேசம், நாகாலாந்து) இதே கால கட்டத்தில் அந்த அலகுகளில் எவ்வாறு மாற்றம் அடைந்தன என பார்க்க வேண்டும். இவ்வாறான ஆதாரங்கள் குறிப்பிடாவிட்டால், நீங்கள் சொல்வதை எப்படி ஏற்க முடியும்?


    • அய்யா – நான் ஆதாரங்களைக் குறிப்பிட முடியும். நான் மாய்ந்து மாய்ந்து எழுதிய 40க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களில் அவை இருக்கின்றன. ஆனால் மாட்டேன். ஏனெனில் படுமோசமான பாலிமிக் வடிவத்தில் இருக்கின்றன அவை – ஆகவே அவற்றை எடிட் செய்ய நேரம் மிகமிக அதிகமாகச் செலவிட நேரும். ஆகவே, நீங்கள் நான் சொல்வதை ஏற்கவேண்டும் எனும் அவசியமே இல்லை. ஏற்கவேண்டாம் என்றுகூட பரிந்துரைப்பேன்.

      மேலும், நீங்கள் – முடிந்தபோது திராவிடத்தால் மட்டுமே விளைந்த சாதகமான விஷயங்களைச் சொல்ல முடியுமானால் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

  2. Venkatesan Says:

    சமீபத்தில் டாக்டர் உ வே சாமிநாதையர் அவர்களின் சுயசரிதை நூலான “என் சரித்திரம்” படித்துக் கொண்டிருந்தேன். திருவாவடுதுறை ஆதீன மடத்தில் தங்கி பத்து வருடம் பாடம் பயின்றார். அது சமயம் மடத்துக்கு வந்து போகும் தமிழ், வடமொழி புலவர்கள், வித்துவான்கள் என பலரை பற்றியும் குறிப்பு தருகிறார். இவர்களில் கிட்டத்தட்ட எல்லாருமே பார்ப்பனர்கள் அல்லது பிள்ளைகள், முதலியார் போன்ற உயர் ஜாதியினர். யாராவது தலித் மடத்துடன் தொடர்பு கொண்டதாகவோ, தமிழ் படித்ததாகவோ குறிப்பு இல்லை. இன்று இந்த நிலை இல்லை. இதற்கான credit திராவிட இயக்கத்திற்கு தருகிறார்கள். இது சரிதானா என்பது ஆராய்சிக்குரியது.

    திராவிட இயக்கத்தால் தமிழகத்தில் நன்மைகள், தீமைகள் இரண்டு குறித்தும் சமனிலைப்பட்ட அறிவியல் மனநிலையில் எழுதப்பட்ட ஆய்வுகள் எதுவும் என் கண்ணில் பட்டதில்லை. இவ்வாறானதற்கு நான் அதிகம் படிக்கமால் சோம்பேறியாக இருப்பது முக்கிய காரணமாக இருக்க கூடும். எனக்கு இது தொடர்பான விவாதங்களில் “control subject” பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை என்பது என் விமர்சனம் . திராவிட இயக்கத்தால் சமூகநீதி நோக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறுபவர்கள் மற்ற மாநிலங்களில் நிலை என்ன என்று பேசுவதில்லை. மறுபுறம் திராவிட இயக்கத்தால் தமிழகம் சீரழிந்து விட்டதாக கூறுபவர்களும் மற்ற மாநில நிலை பற்றி பேசுவதில்லை.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s