இதுதாண்டா டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் படுபீதி பயங்கர பகீர் ரிப்போர்ட்!! (2/2)

February 20, 2015

(அல்லது) டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் எனும் ஆக்ஸிடேன் அரக்கன்: படுபீதி பயங்கரம் — தமிழகம் அழியப் போகிறதா? ஒரு பகீர் ரிப்போர்ட்! (2/2)

முதல் பகுதி:  டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் எனும் ஆக்ஸிடேன் அரக்கன்: படுபீதி பயங்கரம் — தமிழகம் அழியப் போகிறதா? ஒரு பகீர் ரிப்போர்ட்! (1/2)

-0-0-0-0-0-0-0-

… … என் மதிப்புக்கும் அன்புக்கும் (+கிஂண்டலுக்கும்) உரிய ஞாநி அவர்கள் குதித்தெழுந்துகொண்டு ஏன் இதனைப் பற்றி ( μ-ஆக்ஸிடோ டைஹைட்ரஜன்) ஒரு துண்டுப் பிரச்சாரமோ பிரசுரமோ செய்யவில்லை / வெளியிடவில்லை?

அவருக்கிருக்கும் முன் அனுபவங்களுக்கு, இதைப் பற்றியெல்லாம் எழுத இன்னொருமுறை  ததீங்கிணத்தோம்_ஜிங்குசிக்காவென ஒரு பத்திரிகையை ஆரம்பித்து அதையும்  இரண்டு இதழ்களுக்குப் பின் நிறுத்தினால் என்ன குறைந்தா போய்விடுவார்? கோபமாக வருகிறது.

இருபதுமுப்பது வருடங்களுக்கு முன், கல்பாக்கப் பயங்கரத்தைப் பற்றி தீம்தரிக்கிட்டுக்கொண்டே மாய்ந்து மாய்ந்து எழுதியது  அவருக்கு  நினைவிலேயே இல்லையா?

பொதுவாகவே நகைச்சுவையுணர்வும் சமனநிலையும்  கொண்ட அமைதிவிரும்பி மூலாதார சாத்வீகியான எம்டிஎம் அவர்கள் கூடவா, இதனைப் பற்றி ஒன்றும் பேசாமல் இருக்கிறார்? ஒருகால், அவர் தன் ஆராய்ச்சிகளுக்காக நிதியுதவி பெறும் வெள்ளைக்கார ஃபோர்ட் பெருமகனாரே, தன் கட்டிட ஃபௌன்டேஷனுக்காக இந்த டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் அரக்கனை உபயோகித்திருப்பதால், கொஞ்சம் சங்கடப் படுகிறாரோ? சர்வதேச அடிக்கட்டுமானச் சதி வலையில் தன்னையறியாமலேயே ஆட்கொள்ளப் பட்டுவிட்டாரோ?

…சமூகப் பிரக்ஞையற்று, தான் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை மறந்து, அளவுக்கு அதிகமாக யூட்யூப் தளத்தில் நேரத்தைச் செலவு செய்து கண்டகண்ட டெக்கமரன் வகையறா பலான பவுலோ பாஸொலினி படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் – சான்றோர்கள், அறிஞர்கள் கூட எப்படியாகிவிடுகிறார்கள் பாருங்கள்! இருந்தாலும், எனக்குச் சந்தேகம்தான்! புத்துசாலிகளை நம்பவே கூடாது. எந்த புத்தில் எந்த ஜீபூம்பா இருக்குமோ யார் கண்டது.

தங்கக் கடத்தலைக் கண்டுபிடிக்கிறேன், வெள்ளியைப் பிடிக்கிறேன், சனியைப் பிடிக்கிறேன், கேடிகளைப் பிடிக்கிறேன், கோடிகளை மீட்கிறேன் எனப் பெத்தபேச்சு பேசும் விமலாதித்த மாமல்லச்சோழப்பாண்டியச் சேரனும் (c/o ட்விட்டர்), இந்த டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் நச்சு, கமுக்கமாகக் கடத்தப் படுவதைப் பற்றி ஒரு தடவையாவது பேசியிருக்கிறாரா? அதையே விடுங்கள், அதைப் பற்றிக் கொஞ்சமாவது யோசித்திருக்கிறாரா?

பாடகியின் உளறல் பின்னாலும், விடுதலை வீரமணியின் வாரிசு விவரம் பின்னாலும் துரத்திக் கொண்டு அலைந்த அலைச்சலில் 1%ஆவது இந்த  உலகத்தைக் குலுக்கியெடுக்கும் விவகாரத்தில் செலவழித்திருக்கலாமே?

… ஹ்ம்ம்… பிரச்சினை என்னவென்றால், அடிப்படையில் புத்திசாலிகள் என்றால், அவர்கள் மூளைகள் உருகி தறிகெட்டு அலைகின்றன… ஏனெனில் திராவிடத் தமிழ்ச் சூழலில் சராசரிகளின் சாம்ராஜ்யம்தான் சாஸ்வதம்! அதனால்தான், என் அதிமேலான கருத்தில் — கேணியில் இருந்து சேந்தி விழலுக்கு இறைப்பதிலும், கண்டமேனிக்கும் வெளிநாட்டு சினிமா பார்த்துக் கொண்டிருப்பதிலும், கடத்தல்காரர்களைத் துரத்தும் பராக்கிரமங்களிலும், மேற்கண்டவர்களுக்கு நேரம் கழிகிறது.

இருந்தாலும், சுற்றுச் சூழல் மாசுபடுவதை எதிர்த்து ஒரு சிறு குறிப்பாவது இட்டால், இவர்கள் குறைந்தா போய்விடுவார்கள்? கோபம்கோபமாக வருகிறது.

-0-0-0-0-0-0-

பேராசிரியர் தர்மராஜ் அவர்கள் ஒரு நாட்டுப்புறவியல் ஆசாமியாகவும், படுபிஸி ஆராய்ச்சியாளராகவும் இருக்கலாம். ஆனால்,  ‘அயோத்திதாசரும் ஆக்ஸிடேனும்,’  ‘ஆக்ஸிடேனின் மாற்றுப் புராணங்களில், என் அண்ணன் பார்க்கமாட்டான்’  போன்ற தலைப்புகளில், நைஸ்ஸாக, சமூகவியல் கட்டுரைகளில் – சமூகவுணர்வுடன், அதன் மேன்மைக்காக சிலபல அறிவியல் காட்சிகளை நுழைத்து  நாளொருபாகனாக 10 பாகங்கள் எழுதினால் குறைந்தா போய் விடுவார்? இது முடியாவிட்டால், குறைந்த பட்சம் வாரொருபாகனாக அல்லது மாதொருபாகனாகக் கூட இருக்கலாமே!

அல்லது ஒரு மகாமகோ பெரிய, நெடுநீளமான 50,000 வார்த்தைக் கட்டுரையொன்றை எழுதி யானையொடுபாகனாக உலாவரலாமே! ஏன் செய்வதில்லை?

… தனக்கு அக்கப்போர்களில், பிற விஷயங்களில் ஆசையில்லை என்று சொன்னாலும் – பொதுச் சபைக்கு ஒருமனிதன் எழுத வந்துவிட்டால், அதுவும் தமிழில் எழுதும்படியான துர்ப்பாக்கிய சூழலில் ஊடாடிக்கொண்டு இருந்தால், கண்டகண்ட விஷயங்களிலும் மூக்கை நுழைத்துக் கருத்தைத் தெரிவிப்பதைத் தவிற வேறு வழியேயில்லை என்பதை, நம் பேராசிரியர் எப்போது உணர்வார்?

அறிஞர் பெருமான், பேராசிரியர் ஆஇரா வேங்கடாசலபதி அவர்களிடமிருந்து, இந்த நல்ல விஷயத்தையாவது கற்றுக்கொள்ளலாமில்லையா?  :-(

சரி, இவரையாவது விட்டுவிடலாம், ஆனால்…

நாடே சுடுகாடாகிக் கொண்டிருக்கும்போது அறிவுமதி அவர்கள் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்?

இன்னமும் 2003 ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’கார அழகான மாணவர்கள், மானத் தமிழனத்தைத் தொடர்ந்து தூங்கவிடாமல் செய்து கொண்டிருப்பதால், கொஞ்சம் அசதியில் இருக்கிறாரா?

துக்கத் தூக்கத்திலிருந்து எழுந்துவந்து பழ.நெடுமாறன் அவர்களுடன் இணைந்து  ‘ஆகுச்சிடேனிடமிருந்து தமிழின மீட்புப் போர்‘ என ஒன்றிற்காக, ஒன்றிரண்டு ட்வீட்களையாவது அடித்துவிட முடியாதா என்ன?

மிகவும் வருத்தமாக இருக்கிறது. :-(
-0-0-0-0-0-0-0-

ஒரு எழவையும் – பகுத்தறிவு உட்பட – சுத்தமாகப் புரிந்துகொள்ளவே புரிந்துகொள்ளாமல், அறிவியலைப் பற்றி விலாவாரியாக எழுதும் விடுதலை கூட இதனைப் பற்றிக் கள்ள மௌனம் சாதிக்கிறது. ஏன் – அவர்களுடைய கல்வி நிறுவனங்களில் இது பெருவாரியாக உபயோகிக்கப் படுகிறதோ?

அந்த கேடுகெட்ட உங்கல் விஜய் டீவியின் டட்டடா டட்டடா ‘நீயாநானா’ இகழ் கோபிநாதனார் கூட ஆக்ஸிடேனா-தமிழகமா என்றொரு ஒரு தலைப்பில் இன்னொரு கந்தறகோள எபிஸோட் ஓட்டவில்லையே!

பூவுலகின் நண்பர்கள், காயுலகின் எதிரிகள், இலையுலகின் துரோகிகள், பழவுலகின் கொட்டைகள் என, நடுநிலையாளர்கள் என, மனிதவுரிமைக்காரர்கள் எனப் பலவாறாகப் பவனி வரும் தன்னார்வக்காரர்கள் – இதனைக் கண்டிக்க ஏன் முன்வருவதில்லை?

அகடவிகடன், நக்கீரன், நக்காமலேயேஉலரன், புதியதலைவலி போன்ற பத்திரிகைகள், ஏன் இதனை இருட்டடிப்பு செய்கின்றன?

எழுச்சித் தமிழர்களும், திருப்பியடித் தமிழர்களும், சங்கொலித் தமிழர்களும் இதனைக் கண்டுகொள்ளவேயில்லையே!

கலந்தடித்துக் கதம்பமாக எல்லாவற்றையும்  டமிளிலும், இக்காலங்களிலும்  இங்லீஸிலும் கூடத் திட்டும் வினவுக்கார விடலைகள் கூட, எல்லா ஓட்டைகளையும் மூடிக்கொண்டு இதனைப் பற்றி மூச்சுவிடாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? அவர்களுக்கு எதைப் பற்றியும் ஒரு எழவும் புரியவில்லை என்றாலும் அனுதினமும் எந்த முடியையாவது எதிர்த்தாக வேண்டுமே! ஏன் இந்த அரக்கனை மட்டும் எதிர்க்கவில்லை?

-0-0-0-0-0-0-

… … மேலதிகமாக, !நிசப்தம்கார மணிகண்டனார், சென்றமுறை (ஜஸ்ட், அரை மணிநேரம் முன்) ஊருக்குப் போயிருந்தபோது, கிராமங்களில் வயக்காடுகள் இந்த ஆக்ஸிடேன் அரக்கனால் விழுங்கப்படுவதைக் கண்ணெதிரே கண்டு பற்றிப் பிலாக்கணம் வைத்து, பின்னர் ‘நமக்கெதுக்கு வம்பு’ என்று விரக்தியடைந்து விலகிக்கொள்வார்; பாவம், அவரை விட்டுவிடலாம், எனப் பார்த்தால் – அவரும் இதனைப் பற்றி ஒரு தொழில்நுட்பக் கட்டுரையையும் எழுதவேயில்லை! ஏனப்பா? இதையும் விட்டுவிடலாம். அல்லது அட்ச்சு வுட்லாம். வேறென்ன செய்வது? நம்மால் அதுதான் முடியும். :-(

தொல்லைக்காட்சிக் கருத்துதிர்ப்புப் புகழ் வீரப்போராளியான மதிமாறனார், இந்த அவல நிலைக்கும் பார்ப்பனர்கள்தாம் காரணம் எனச் சொல்வார். ஆரியச் சூழ்ச்சியால் தான் ஆகுச்சிடேனும் டைஐட்ரசன் மோனாக்சைடும் திராவிடத்தை முழுமையாக முழுங்கிடப்போகின்றன என மருகுவார். சந்தேகத்துக்குச் சாம்பாராக, சந்தடிசாக்கில் ஒரு புத்தகத்தையும் (=  ‘ஆரிய ஆகுச்சிடேன் எதிர்ப்புக்கு திராவிட தீக்குச்சிதான் நெருப்பு!‘) ரிலீஸ் செய்வார், மேதகு வீரமணி அவர்களின் கால்மையில்…  என மகிழ்ந்து குதித்துக்கொண்டிருந்தால்… இவர் இன்னமும் அப்படியெல்லாம் ஒன்றுமே சொல்லவில்லை! ஏனய்யா??

இவர்களையே விடுங்கள் – ட்விட்டர் +ஃபேஸ்புக் வகையறாக்களில் உழைத்துப் போராடியே, புரட்சி செய்யும் சோம்பேறி முட்டாள் குளுவான்கள் என்ன ஆனார்கள்? பொங்கலுக்குப் பொங்கல்தான் படையல் வைத்து உணர்ச்சிவசப்படுவார்களோ? துரோகிகள்!

ஏன்? ஏன்?? (நண்பனே!)

இவற்றுக்குப் பதில்:  1) ஏதோ உள்குத்து  2) பணம் பாதாளம்வரை பாயும், தமிழகம் முழுவதுமே சுடுகாடாகும் வரை  3) மேற்கண்ட அனைவரும் விலை போய்விட்டார்கள். பொட்டி வாங்கிக்கொண்டு விட்டார்கள்.  :-(

மெத்தப்படித்த மேதாவியும், திராவிட இளவலும், தீவிரமான, அதிமுக்கியமான திராவிட ஆராய்ச்சிகளை (=எம்.ஜி.ஆரின் வயது என்ன?) மேற்கொள்ளும், எந்த பொந்தில் எந்த பொந்துத்துவா இருக்கும் என்று பொழுதன்னிக்கும் அலையும் பப்பரப்பா பத்திரிகையாளர், கருணையற்ற காப்பிக்கடை நிறுவன முதலாளி யுவகிருஷ்ணனார் அப்படித்தான் சொல்வார் என்று எனக்குத் தெரியும்.

-0-0-0-0-0-0-0-

எனக்கும் தோன்றுகிறது – இப்படியெல்லாம் இல்லாமல் நாமெல்லோரும் போராளித்தனமாக நடந்திருந்தாலும், வழக்கம்போலவே, எவற்றாலும் ஒரு எழவு உபயோகமும் இருக்காது – அவரவர் சுயமுன்னேற்றத்தைத் தவிர. பக்கப் பார்வை அதிகரிப்புகளைத் தவிர.

ஆனால், கபோதிகளே!தமிழகத்தில் இன்று உயிரோடு இருப்பவர்களில் 99.99 % பேர், இன்னும் நூறு ஆண்டுகளில் இருக்கவேமாட்டார்கள், மண்ணோடுமண்ணாகிவிடுவார்கள் என்பதாவது உங்களுக்குப் புரிகிறதா, முட்டாள்களே?

ஆக்ஸிடேன் என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு, ஞானசூனியன்களே! தமிழகமே மணல்மேடாகப் போகிறது.
desert-6

… தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும். அதுமட்டுமல்ல, சூது மறுபடியும் மறுபடியும் கவ்விக்கொண்டே வெல்லும்.

இதுதான் உண்மை.இதுதான் தமிழகத்தின் கவ்வியின் நிலை. :-(

பல பெரிய கவ்வியாளர்கள், டாக்டர் வதந்திதேவி அவர்கள் உட்பட, இப்படித்தான் நினைக்கிறார்கள். என்ன செய்வது சொல்லுங்கள். :-((

-0-0-0-0-0-0-0-0-

சரி. இப்போது இந்த கொடூரனைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?

கீழேயுள்ள சுட்டிகளில் இந்த அரக்கனைப் பற்றிய மேலதிக விவரங்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. நம் தமிழில் இதனைப் பற்றி முந்தித் தந்திருப்பது நான்தான்!

1990 வாக்கிலேயே இந்த டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் பற்றிய விவரங்கள் அரசல்புரசலாக வெளியாக ஆரம்பித்து விட்டன.  ‘எச்சரிக்கை! அபாயகரமான கழிவுச்சேர்க்கை’ விபரீதத் தலைப்பில்!  (Warning! Dangerous Contamination!)   …ஆனால், விசனத்துக்குரிய வகையில் யாருமே இதனைக் கண்டுகொள்ளவில்லை.

பின்னர் பல இடங்களிலும் இருந்து இந்த அரக்கனைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து – ஒரு இணையதளம் உருவாக்கப் பட்டது: http://www.dhmo.org/ – இதில் திடுக்கிடவைக்கும் பல செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன!

இது மிகமிக மிக முக்கியமான தளம். மறைக்க வைக்கப்பட்டிருக்கும் அத்தனை விஷயங்களும், கார்ப்பொரேட் சதிகளும், அமெரிக்க குள்ளநரித்தனமும், நம் அரசாங்கங்களின் அடிப்படை அயோக்கியத்தனமும், நம் விஞ்ஞானிகளின் விட்டேற்றி மனப்பான்மையும் இதில் இருக்கின்றன – தொடரத் தொடர வேதனை மிகும்.

இதனைப் பற்றி ஒருபக்க அளவில் வந்திருக்கும் அலங்கோலச் செய்தி: http://www.matthew.at/dhm.pdf

தமிழகம் இந்தச் சோதனையிலிருந்து மீளுமா? சந்தேகம்தான். :-(
-0-0-0-0-0-0-

சரி. வேறு எவரும் இந்த அரக்கனைப் பற்றிப் பேசக்கூட பயப்படுவதால், நானே இதனையும் செய்யவேண்டி வந்துவிட்டது என்பது, உங்களுடைய துர்ப்பாக்கியம்தான்.

… எப்படியோ போங்கள் – நம் தமிழகத்தின் எதிர்காலத்தை நான் தான் மண்டையில் அடித்துச் சரிசெய்ய வேண்டுமென்பது என் ஜாதகம், வேறென்ன சொல்ல. வேறு ஒரு பயலுக்கும் இதனைப் பற்றிய சிந்தனையே இல்லையே!

கடவுளே! நல்லொதொரு வீணனாகத்தானே நான் காலம் கழிக்க முற்பட்டேன்? ஆனால், ஏன், ஏன், ஏன், என்னைச் சுடர் மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்? சொல்லடா சிவசக்தா, மாதொருபாகா! :-(

… … ஓஓஓஓஓஓ ம்ம்ம்ம்மய்ய்ய்ய்ய்ய்ய் லாஆஆஆற்ற்ற்ட்ட்ட்ட்ட்…. …. ப்ப்ப்ப்ளீஈஈஈஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆன்ஸ்ஸ்ஸ்ஸற்ற்ற்ற்ற்ற் ம்ம்ம்ம்ம்மைஈஈ ப்ப்ப்ப்றேஏஏஏஏய்ய்யயயயயற்ற்ற்ற்ற்… …. ப்ப்ப்பட்ட்ட்ட்,  ன்ன்ன்ன்னோஓஓஓஓ ப்ப்பீஈஈஸ்ஸ்ஸ் ஆஆஃஃஃஃப்ப்ப்ப்ப் ம்ம்ம்மைண்ட்ட்ட்ட்ட்ட்… … (ஆங்கிலத்தில்: Oooooo mmmmMMyyyy LAAAAAAAAAARRRRDDD, ppPPPPPLLLLEEEEEAASSSSSS aaAAAAnSaaaaaRRRR mmmMMMYYYYYy ppPPPRRRaaaYYARRRRR! bbbBBBBuTTT nnNNNOOOO pppPPPPEeeeSSSS OOOOFFFF mmmMMMinddddddD!)

(குறிப்பு: ஞானஒளி எனும் உரத்தஒப்பாரிப் படத்தில், சிம்மக்குரலோனான நம் நடிகர்திலகத்தின் காட்டுக்கத்தல்தான் இது, அல்லது இப்படிச் செய்தது சௌந்தரராஜரா? இதனால் துணுக்குற்று, யேசு பின்னங்கால் பிடறியில் பட ஒடிக்கொண்டிருந்ததை, ஸென்ஸார் போர்டில் மத நல்லிணக்கத்துக்காக கத்தரி போட்டுவிட்டனர் – என்பது ஒரு தனிக்கதை!)

-0-0-0-0-0-0-
பின்னர்… தமிழகத்தில் எல்லோரும் மிகச் சந்தோஷமாக நெடுங்காலம் இறந்துகொண்டிருந்தனர்.
சுபம்.

13 Responses to “இதுதாண்டா டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் படுபீதி பயங்கர பகீர் ரிப்போர்ட்!! (2/2)”

  1. A.Seshagiri Says:

    செம மூடுல இருக்கிறது மாதிரி தெரிகிறது …ம்.ம். கலக்குங்க!!!! ,கலக்குங்க !!!!!!!!


    • அய்யா சேஷகிரி, இதையா சொல்கிறீர்?

      உங்களுக்கு ரொம்ப இதுதான்.

      எதை எதனால் எதற்குக் கலக்குவது என்பது புரியவில்லை.

      கலக்கமாக இருக்கிறது. :-(

      கலகப் பிரதியென்று எழுத ஆரம்பித்து கலக்கப் பிரதியாகிவிட்டதோ?

  2. Yayathi Says:

    ஐயா,
    குஜராத்தில் வீசிய மோடி மோனாக்சைட் என்கிற நச்சு காற்றை பற்றி எதுவும் கூறாமல் தமிழகத்தில் இருக்கும் பெரியார் பெராக்சைட் மட்டுமே குறை கூறுகிறீர்களே – இது நியாயமா :-)


    • யோவ், யயாதி!

      றொம்ப யேத்தம்யா வொனக்கு!

      எவ்ளோ பேர்யா இப்டீ கெளம்பிருக்கீங்க? வூட்ல சொல்ட்டு வந்த்ட்டியா? எங்கேயோ ஸேஃபா வொக்காத்துகினு, இன்னாமாரி நக்கல் பண்றீங்கபா!

      யென்ன கிண்டல் பண்ணு, ஆனாக்காட்டி – இன்னாபா இத்து பெர்யார் பெராக்சைடு – அத்தக் கிண்டல் பண்ணாத, சர்யா?

      மோதியோட மோதறத, பூவண்ணன் அய்யாக்கிட்ட வுட்டுட்டேன் – அவரு ஒரு புள்ளி வெவெரமான ஆளு, அத்தான்.

      சும்மா என்ன நோண்டாத. தெகிர்யம் இருந்தா அந்தாள் கூட மோது பாக்கலாம்! அவ்ரு சுட்டியாலயே சுட்டுத் தள்ருவாரு. மிலிட்டரி ஆள்!

  3. Yayathi Says:

    நான் ஏன் சார் அவர் வழிக்கு போறேன். நானே பயந்துகிட்டிருக்கேன். நீங்க வேற –
    “லிங்க் மீது லிங்க் வந்து என்னை சேரும்
    அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உம்மை சேரும்”

  4. poovannan73 Says:

    சார் தங்களின் ஆழ்ந்த புலமையின் உதவியால்,உலகில் யாருமே தங்களின் அறிவில் 0.0001 அளவு கூட இருக்க முடியாத தங்களின் அற்புத அறிவாற்றலால், இல்லாத என் அறிவுகண்ணையும் கூட திறக்க வைத்த உங்கள் சக்தியால் நானும் மோடிக்கு மாறி விட்டேன்.மோடி புகழ் பாடுவதே என் லட்சியம்

    மோடிஜி அவர்களின் மீது வீசப்படும் நியாயமற்ற குற்றசாட்டுக்களுக்கு தங்கள் மானசீக சிஷ்யனின் பதில்

    http://majpoovannan.blogspot.in/2015/02/blog-post.html

  5. k7 Says:

    Only intelligent fruit of tamil nadu..

  6. A.Seshagiri Says:

    உசுப்பேத்தி,உசுப்பேத்தி,கடைசியில் ஐயகோ! வந்தே விட்டாரையா பூவண்ணன் அவர்கள்!
    (அவருடைய மோதி பற்றிய காட்டுரை ! படிக்க படா தமாஷா கீதுபா !).உங்களுடைய மானசீக சிஷ்யனாம் அவர்! நீங்கள் மிகவும் கொடுத்தது வைத்தவர்.!


    • அன்புள்ள அய்யா சேஷகிரி!

      நீங்கள் சொல்வது சரிதான்.

      நுணலும் தன் வாயால் கெடும்.

      இப்படிக்கு:

      நுணல்.

  7. ஆனந்தம் Says:

    எல்லார் மாதிரியும் எழுதியிருக்கிறீர்கள். ஒத்திசைவு என்று ஒரு ப்லாக் நடத்துகிறாரே, ராமசாமி, அவர் பாணியில் எதுவுமே எழுதவில்லையே? :)))))
    பூவண்ணன் சார் ஸ்டைலில் சுட்டி வேண்டுமானால் தரட்டுமா? https://othisaivu.wordpress.com/2015/02/20/post-460/


    • அதுதானே இதுதானே அப்படித்தானே இப்படித்தானே எனத் தான் தோன்றித்தனமாகத்தானே எழுதவேண்டும் தானே! ;-)

      யோவ் ஆனந்தம், என் குடுமியையே புடிக்றியே நைனா, நாயமா?

  8. Kiwiyan NZ Says:

    இதைப் பற்றி கேப்டன் கூட கண்டு கொள்ளவில்லையா?? நல்ல வேளை நீங்களாவது இதைப் பற்றி எழுதினீர்கள். இதை படித்த பின்பாவது ஒரு அறிக்கை வரும் என எதிர்பார்க்கலாம்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s