மதுகிஷ்வர், அருணாராய், ஜெயமோகன் தளத்தில் ‘பாலா’ – சில அலுப்படையவைக்கும் விவாதங்கள்

March 11, 2015

[1]  ‘பாலா’ அவர்களின் சில கருத்துகள் தொடர்பாக, ஜெயமோகன் அவர்களுக்கு நான் எழுதிய மின்னஞ்சல்: மதுகிஷ்வர், பங்கர்ராய் – சில குறிப்புகள்;  [2] ‘பாலா’ அவர்களின் எதிர்வினை: ஒத்திசைவுக்கு மறுமொழி

சரி. ஜெயமோகன் அவர்களின் கழுத்தை மறுபடியும் மறுபடியும் வேலைவெட்டியற்று அறுக்கவேண்டாம் என…

…இரண்டு கடிதங்களையும் அவற்றுக்கான என் பதில்(!)களையும் (கொஞ்சம் எடிட்/திருத்தம் செய்து – பெயர்களைக் கத்தரித்து) கொடுத்திருக்கிறேன். அக்கப்போர்தான். எனக்கு (+உங்களுக்கு) இது தேவையா?

-0-0-0-0-0-0-

முதல் மின்னஞ்சல்:

“… திரு.ஜெயமோகன் அவர்களின் வலைத்தளத்தில்,மது கிஷ்வர் அவர்களைப்பற்றி சற்று எள்ளலாகத்  தொனித்த  திரு.பாலா அவர்களின் கட்டுரையும் ,அதற்கு நான் எதிர்பார்த்தது போல் உங்களிடம் இருந்து சற்று விளக்கமான எதிர் வினையையும் படித்தேன்.ஆனால் அந்த விளக்கத்திற்கு எந்தவித உடன்பாடோ,மறுப்போ தெரிவிக்காமல் பின்வருமாறு குறிப்பிட்டு இருக்கிறார்.

மது கிஷ்வரைப் பற்றிச் சொன்னதற்கு, உணர்ச்சி வசப்படும் ஒத்திசைவு, போகிற போக்கில், தன் IAS வேலையை விட்டு, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு கிராமத்தில், அடிப்படை உரிமைகளுக்காகப் போராடி, RTI, NREGA, RTE போன்ற பெரும் சட்டங்களின் பிண்ணனியில் உழைத்துக் கொண்டிருக்கும் பெரும் சாதனையாளாரான அருணா ராயை – செக்யூலர் சாயம்என்று கிண்டலடிப்பதை – இது இருவரின் தனிப்பட்ட கருத்து என்றளவில், விவாதத்தின் வெளியே வைக்கிறேன். 

“உங்களைப்பற்றி ஓரளவு அறிந்தவன் என்ற முறையில்(உங்கள் வலைத்தளத்தின் மூலம்)இவர் வெளியே வைக்கும் கருத்தை நான் உள்ளே கொண்டுவருகிறேன்.நீங்கள் பாலாவைப்போல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற வகையில் அருணா ராயை – செக்யூலர் சாயம் என்று குறிப்பிட்டு இருக்கமாட்டீர்கள் அதற்கு வலுவான காரணம் இருக்கும் என்று நம்புகிறேன்.அருணா ராய்க்காக வெகுண்டு எழும் இவர் மது கிஸ்வர் பற்றிய தங்களின் விளக்கத்திற்கு ஒரு சுக்கு பதிலும் எழுதவில்லை.இந்த இடது சாரிகளின் வழியே “தனி வழி (வலி?)” தான்.இவரை இடதுசாரி என்றே நான் கருதும் வேளையில் நீங்கள் எந்த சாரியும்,வேட்டியும் இல்லை என்று திடமாக நம்புகிறேன்.முடிந்தால் அருணா ராயை பற்றிய மேலும் விவரங்களை தங்கள் தளத்தில் எதிர் பார்க்கிறேன்.

அன்புள்ள அய்யா,

தங்களுடைய மின்னஞ்சலுக்கு நன்றி. ஆனால், நான் பாலா அவர்களுக்கு எதிர்வினை ஆற்றுவதாக இல்லை. இம்மாதிரி பல மனிதர்களுடன்  பொருதிய காலமும் இருந்தது; ஆனால், இப்போது சலிப்பாக இருக்கிறது. அவர் எழுதுவதைப் பார்க்கும்போது விரியும் சித்திரம் எனக்கு உவப்பாக இல்லை – என்னிடமும் போதாமைகள் இருக்கலாம்.  இப்போதைக்கு — வெறும் இணையத்தை மட்டும் மேம்போக்காக மேய்ந்து அல்லது ஓரிரு  செய்திகளைப் படித்துவிட்டு ஓரிரு சொற்பொழிவுகளைக் கேட்டுவிட்டு ஓரிரு புத்தகங்களைப் படித்து மதம் பிடித்த, புதுமதம் மாறிய இவாஞ்செலிக்கக்கல்கள் போல, இவர் கருத்துகளைப் பொழிவதாகத் தோன்றுகிறது. எனக்கு இந்த ‘பாலா’ அவர்கள், யாரென்று தெரியாது, அவருடைய பின்புலத்தையும் அறியேன் – ஆனால் அவர் எழுதியதை மட்டும் வைத்துக்கொண்டு நான் வந்திருக்கும் முடிவுகள் இவை, அவ்வளவுதான்! என் பார்வை, தவறாகவும் இருக்கலாம்.

மறுபடியும் நான் எழுதியதைப் படித்தேன் – இப்படி எழுதியிருக்கிறேன் – “ஆனால் பிற்காலத்தில் அருணா அவர்கள் ஒரு ஸெக்யூலர்வாதியாகத் தன்னைச் சுருக்கிச் சாயமடித்துக் கொண்டு விட்டார்” – இதில் வருத்தம்தான் இருக்கிறதே தவிர, கிண்டல் இல்லை.

அம்மணி அருணா ராய் அவர்கள், அவர் நண்பர் ஒருவருடன் என் வீட்டிற்கு வந்து (ஒரு இரவு) தங்கியிருந்த காலகட்டமும் இருந்தது. அவரை ஓரளவுக்கு அறிவேன் – அவருடன் நிறைய அளவளாவிய காலகட்டங்களும் இருந்திருக்கின்றன. அவருடைய ஆகிருதியைக் குறைத்து மதிப்பிடவில்லை.

ஆனால், மோதிக்கு எதிராக என்று முகாந்திரமே இல்லாமல் ஒரு வருடம் முன்புவரை கூட இவர் ஆடிக்கொண்டிருந்தார். மற்றபடி மதிக்கத்தக்கவராக இருந்தாலும் கரித்துக்கொட்டி ஹிந்துத்துவா பொந்துத்துவா என பேசிக்கொண்டிருந்தார். இப்போதும் பலமுறை பொறுப்பில்லாமல் பேசுகிறார். (இவருடைய இக்கால நடவடிக்கைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – http://www.niticentral.com/2014/11/08/aruna-roy-social-media-hypocrisy-244085.html)

எனக்கு இவருடைய முன்னுக்குப் பின் முரணான பல செய்கைகள் வருத்தம் தருகின்றன. அவ்வளவுதான்.

ஆனால் – அருணா அவர்களை அறிவேன்,  இன்னமும் பல விஷயங்களுக்காக மதிக்கிறேன் என்கிற முறையில் அவர் தொடர்பாக பாலா அவர்களிடம் பொருதுவதாக இல்லை.

ஏனெனில், எனக்கு அலுப்பாக இருக்கிறது. மன்னிக்கவும்.

மீண்டும், தங்கள் மடலுக்கு நன்றி.

-0-0-0-0-0-0-
இரண்டாம் மின்னஞ்சல்:

… It is interesting to note that Mr. Bala has talked about swaraj, his admiration for Gandhiji and the need for certain institutions to go for foreign funding – all in one breath. It is interesting because he does not seem to see the contradictions in his points of view.

He says that you are emotional about this – but I did not see any evidence of it in your mail to JeMo. You were rambling as usual, that’s all.

I do not for a moment think that Mr. Bala knows the goings on in many NGOs and he is rather naive in assuming that only a few cheat. Cheating and being dishonest are the norms here – and of course there a very few exceptions. Mind you,  I am not even talking about the covert agendas of the funding agencies here. Having worked in the voluntary sector for more than five decades in India, South America and in Africa – I know from my first hand experience that what you have written about the foreign funded NGOs and salaried social activists is bang on target. [என் குறிப்பு: இவற்றுக்கான சுட்டிகள் இப்பதிவின் அடியில் இருக்கின்றன]

This is okay, but he has not rebutted one word of what you said about Madhuji. Instead he has written about Arunaji’s virtues that everyone knows about and which you yourself agree with! Further, he went ahead and twisted what you said and I am disappointed with him.

But, why do you waste your time in such stuff? I am disappointed with you too. You have so many half finished projects (like your installments of letter to the parents of your school kids, about islam, the recent neutrino lab deal, bahuroope gandhi translation) and I think you should focus instead, on completing them.

அய்யா,

நான் முன்னமே எழுதியது போல – என் மீதான உங்கள் ஏமாற்றம் எனக்கு ஒரு பிரச்சினையல்ல. ஆனால், இந்த விஷயங்களை நீங்கள் நேரிடையாக ஜெயமோகன் அவர்களுக்கு (அல்லது பாலா அவர்களுக்கே கூட) எழுதியிருக்கலாமே!

ஏனெனில் எனக்கு இந்த காந்தி – ஸ்வராஜ் – கந்தறகோளப் பார்வை என ஒரு சுற்று சுற்றிவர இப்போதைக்கு நேரமில்லை. மிக முக்கியமாக – அரசு தான் எல்லாவற்றையும் செய்யவேண்டும், அரசின் இயலாமைகளால்தான் பிரச்சினைகள். பாலிஸியில் பிரச்சினையில்லை, இம்ப்லிமென்டேஷனில்தான் போன்ற பார்வைகளில் எனக்கு ஒப்புதலில்லை என்பது முக்கியம். ஆனால் தகுதியுள்ளவர்களோடுதான் விவாதம் செய்யமுடியுமல்லவா? (அவருக்கும் என்னைப் பற்றி அப்படியே நினைக்க உரிமை உள்ளதுதான்!)

இன்னொன்று: மது கிஷ்வர் அவர்கள் பற்றி, தனக்குத் தெரிந்த அளவில், அவருடைய முன்முடிவுகள் சார்ந்து, அவருக்குக் கிடைத்துள்ள அனுபவங்கள் சார்ந்து அவர் சொல்லியி ருக்கிறார் என்று விட்டு விடுங்களேன். அவர் தன்னிடம் வண்டைவண்டையாக மதுகிஷ்வர் பற்றி எதிர்மறை விஷயங்களை வைத்துக்கொண்டு வெளியே சொல்லாமல் இருக்கிறார் என்று நான் நம்பவில்லை.  அவர் பொதுவாக சில கருத்துகளை அடித்துவிட்டிருக்கிறார், அவ்வளவுதான்! ஆகவே நானும் அவரிடமிருந்து பெரிதாக எதிர்பார்க்கவில்லை. மேலும் இந்த ‘பாலா’ என்பவர் ஆணாபெண்ணா என்று கூட எனக்குத் தெரியாது – ஆகவே வெகுளியாகச் சொல்கிறாரா என்றெல்லாம் ஆராய எனக்குத் திராணியில்லை!  நாமெல்லாரும் தவறு செய்யக்கூடியவர்கள்தான் – ஆகவே, என்னைப் பொறுத்தவரை, தொடர்ந்து இந்த சலிக்கவைக்கும் சராசரித்தனத்திலிருந்து மேலெழும்பிக்கொண்டிருக்கவேண்டும் – அவ்வளவுதான். ஆனால் இது முக்கியம்.

நான் என் எழவெடுத்த கடிதத்தை எழுதியதற்குக் காரணம் – பொதுச்சபையில் எனக்குத் தெரிந்த ஒருவர் பற்றி யாராவது அபாண்டமாக அல்லது ஒரு தலைப்பட்சமாக எழுதினால், அதற்காக குறைந்தபட்சம் இதுவாவது செய்யவேண்டும் என்கிற முனைப்புதான்; அதுவும் இது ஜெயமோகன் தளத்தில் வந்தததால்தான்!

எது எப்படியோ – நீங்கள் இதன் காரணமாக அலட்டிக்கொள்ளவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் – கருத்துச் சுதந்திரம் என வந்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு குண்டிமண்ணைத் தட்டிவிட்டுக்கொண்ஂடு போய்விடலாம். (ஆம், இது எனக்கும் உங்களுக்கும்கூடப் பொருந்தும்!)

… நீங்கள் சொல்வது சரிதான். எப்படியும் அடுத்த சில மாதங்களில் இந்த பாதியில் தொங்கிக்கொண்டிருக்கும் விஷயங்களை முடித்துவிடுவதாகத்தான் இருக்கிறேன். அறிவுரைக்கு நன்றி.

ஏன் நீங்கள் உங்கள் அனுபவங்களை, எதிர்வினைகளை – நம் செல்லத் தமிழில் எழுதக் கூடாது?

But, why don’t you learn to take me as a package? I know that I am far from being perfect, so no issues! ;-)  இது எப்படி இருக்கு? 8-)

-0-0-0-0-0-0-
இப்போதைக்கு இது போதும். ஹ்ம்ம்ம்
தொடர்புள்ள பதிவுகள்:

மது பூர்ணிமா கிஷ்வர்: மோதிநாமா :-)  01/09/2013

மது பூர்ணிமா கிஷ்வர் – சில குறிப்புகள்   15/07/2013

 ‘தொழில்முறை’ தன்னார்வ நிறுவனங்கள், வெளிநாட்டுப் பணம்… 19/12/2012

paperback activists considered really,really harmful 02/09/2013

[+1] paperback activists considered really,really harmful 03/09/2013

[+2] paperback activists considered really,really  harmful 04/09/2013

[+3] paperback activists considered really,really  harmful 06/09/2013

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s