திராவிடப் பகுத்தறிவு Vs சாதா பகுத்தறிவு

April 3, 2015

இதுதாண்டா – திராவிடம், பகுத்தறிவு, திராவிடப் பகுத்தறிவு, திராவிட மயக்கம், திராவிட முயங்கியல்: பல பாகங்களில், ஒரு விளக்கக் கையேடு (2/n)

சரி. இவ்வரிசையில் முதல் பாகம். கண்டிப்பாக அதனைப் படித்துவிட்டு ஒன்றும் புரியாமல் இங்கு வந்தால், மேலே இப்பதிவையும் தலையை வெகுவேகமாகச் சொறிந்துகொண்டு ரத்தக்களறியுடன் படித்து, மேலதிகமாகப் புரியாமல் புளகாங்கிதம் அடையலாம். நன்றி.

திராவிடம் தொடர்கிறது…

… மற்ற திராவிடப் பகுத்தறிவு விளக்கங்களை நம்பாதீர்கள்! போலிகளிடம் ஏமாறாதீர்!

திராவிடக் கண்ணைப் பார்! சிரி!

கருத்துப் படம்: செத்தமூளையிஸ்ம் = திராவிடியனிஸ்ம்; இது ஸ்னேப்ஜட்ஜ் தளத்திலிருந்து - https://snapjudge.wordpress.com/category/advertisement/

கருத்துப் படம்: செத்தமூளையிஸ்ம் = திராவிடியனிஸ்ம்; இது ஸ்னேப்ஜட்ஜ் தளத்திலிருந்து…

இந்தக் கயமைப் போலிகளின் கீபல்ஸ் (= தமிழில் செல்லமாக ‘கோயப்பெல்ஸ்’ என்று அழைக்கப்படும் நாட்ஸி, மன்னிக்கவும், நாஜ்ஜி[1] ஆசாமிதான் இவர்களின் ஆதர்சம், பயப்படாதீர்கள்!) பிரச்சாரத்தை, வதந்திகளை நம்பவே நம்பாதீர்கள். இதெல்லாம் ஆறிய ஆரிய பழங்கஞ்சிச் சதி. திராவிடத்தை ஒழிக்கவே கீழ்கண்ட பொய்ச் செய்திகளையும், சொல்லியல் திரித்தல்களையும் பரப்புகிறார்கள்.

 • பகுத்து + அறிதல் = பகுத்தறிதலாகும். எந்த ஒரு கருத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், ஏன், எதற்கு என்ற கேள்விகள் கேட்டு அதற்கான சரியான விளக்கங்கள் கேட்டு அறிவதாகும்.
 • பகுத்தறியும் திறன், காரண காரியத் தொடர்புபடுத்தி அறியும் திறன், மெய்மையுணர்தல்.

… என்றெல்லாம் விக்கூ-பீடியாவில்[2] சொல்வார்கள். கமுக்கமாகச் சிரித்துவிட்டு அடுத்த சுட்டிக்கு, பப்பரப்பாவுக்குச் சென்றுகொண்டேயிருங்கள். சரியா?

 

-0-0-0-0-0-0-0-0-

சரி, ஒரு பேச்சுக்கு, பகுத்தறிவு என்பதன், மேற்கண்ட விக்கூ-பீடித்த விளக்கத்தையே மண்டையில் அடித்துக்கொண்டு ஒப்புக் கொள்ளலாம்.

ஆக – நம் திராவிடத் திராபைத் தமிழகத்தில் வெகுவாக ஊதப்படும் இந்த பகுத்தறிவு பலூனுக்கு, இந்த கல்யாணகுணங்கள், அடிப்படை குணாம்சங்கள் இருக்கின்றனவா என்று பார்க்கலாம்.

கருத்து என்று ஒன்று இருக்கவேண்டும்:

ஆனால், கருத்து என்றால் என்ன? ஒருவன் தன் பரந்த-ஆழமான படிப்பினால், பெற்ற சுயானுபவங்களால், அசைபோடப்பட்ட எண்ணத் துணுக்குகளால், விடா ஆராய்ச்சிகளால் – ஒரு விஷயத்தைத் தொடர்ந்து அவதானித்து, அதன் பின்புலத்தை அறிந்துகொண்டு, அதன்மேல் கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு ஒப்புக்கொள்ளக்கூடிய பதில்களைக் கண்டு தெளிந்து – இந்த அடிப்படைகளின்மேல் சில கருதுகோள்களை எழுப்பி, பின்னர் அவற்றைத் தொடர்ந்து மறுபரிசீலனை செய்து – ஒருவிதமான சமன நிலைக்கு வந்து எழுப்பிக் கொள்ளும் எண்ணக் கோர்வைகளே! கருத்துகளின் முக்கியமான கூறு – அவற்றின் சமைப்பில், வளர்த்தெடுத்தலில் உள்ள அசாத்தியமான உழைப்பு, நேர்மை.

ஆனால், திராவிட இயக்கங்கள் நீட்டிமுழக்கும் ‘கருத்துகள்’ அனைத்தும் உள்ளீடற்ற உச்சாடனங்களே! வெறுப்புமுதல் வாதத்தின் பரிணாம வளர்ச்சிகளே.

எந்த ஒரு கருத்தையும் அப்படியே எடுத்துக் கொள்ளாமை:

பரிசீலிக்காமை, ஆழ்ந்தறிந்து உணராமை என்பது திராவிடப் பாரம்பரியப் பகுத்தறிவின் முக்கியமான அங்கம். யாரோ ஒருவர் அதீத வெறுப்பின் காரணமாக  ‘பாப்பானையும் பாம்பையும் பார்த்தால், பாப்பானை முதலில் அடி’ என்று உளறிக் கொட்டினால், அதை அப்படியே தொடர்ந்து ஓதிக்கொண்டிருப்பது. இதில் பாப்பானை அடியென்பதைக் கூட விட்டு விடலாம் – அவருடைய வெறுப்புக்குவியத்துக்கும் ஏதாவது மக்கள் திரள்கள் தேவையல்லவா? ஆனால் பாம்புகளை அதற்குப் பிறகு அடியென்பது தொக்கி நிற்பது எந்த விதத்தில் நியாயம்? பாம்புகள் அனைத்தையும் விஷமுள்ளவைகளைகளாகப் பார்க்கிறார், இப்படிச் சொன்னவர். மேலும் விஷமுள்ள பாம்புகள் ஒழிக்கப்படவேண்டியவை என பாமரத் தனமாகவும், இயற்கையை மதிக்காமலும் உளறுகிறார்.

ஆனால், இன்று வரை, ஏன் நாளையும் கூட இப்படியேதான் சொல்லிக் கொண்டிருப்பார்கள், நம் திராவிடப் பகுத்தறிவாளர்கள்!

திராவிடப் பகுத்தறிவாளர்களை முழுமூச்சுடன் எதிர்க்கவேண்டியவர்கள், இந்த சுற்றுச்சூழல் பேணப்படுவதை விழையும், பல்லுயிரிகளையும் காக்க விரும்பும் தன்னார்வக் காரர்கள் தான். பூவுலகின் நண்பர்கள் தான்.

இதைப்போல – இந்த ‘ஆரியர்கள்’ கைபர் போலன் வழியாக வந்தது, ‘ஆரியப்’ படையெடுப்பு, திராவிடம், திராவிட சிந்துசமவெளி நாகரீகம், லெமூரியா என, பலப்பல அவரலாற்றுளறல்கள் உள்ளன. மேலும் பலதடவை, பராக்கிரமம்மிக்க ஆராய்ச்சியாளர்களாலும், கற்றறிந்த சான்றோர்களாலும் (அம்பேட்கர் உட்பட) திரித்தல்களாக சுட்டப் பட்ட இவை போன்ற போலிக்கருத்தாக்கங்கள் – இன்னமும் மறுபேச்சில்லாமல், நேர்மையாக எதிர்கொள்ளப் படாமல் – பகிரங்கமாகப் பரப்பப் படுகின்றன.

இதுதான் திராவிடப் பகுத்தறிவுப் பாரம்பரியத்தின் ‘எந்த ஒரு கருத்தையும் அப்படியே எடுத்துக் கொள்ளாமை’ லட்சணம்!

ஏன், எதற்கு என்ற கேள்விகளைக் கேட்பது:

திராவிடப் பகுத்தறிவென்பதன் அடிப்படையே – கேள்வியேகேட்காமல் – தலை மட்டும் இருக்கும், ஆனால்  மூளையற்ற தலைவன் சொல்வதைக் கேட்டு ஒழுகுவது, இலவசங்களுக்கும் லஞ்சப் பணத்துக்கும் அலைந்துகொண்டு வளைய வருவதுதானே!  இதில் கேள்விகள் வேறா?

மேலும் கேள்விகளைக் கேட்கவேண்டுமென்றால், கொஞ்சமாவது மூளையோ அல்லது படிப்பறிவோ அல்லது ஆழ்ந்த அவதானிப்போ இருக்கவேண்டுமல்லவா?

திராவிட இயக்கத்தில் இப்படிப்பட்ட ஆட்களைத் தேடுவது என்பது மகாமகோ ஆழியில் ஒரு குறிப்பிட்ட அணுவைத் தேடுவது போலத்தான்.

அதற்கான சரியான விளக்கங்கள் கேட்டு அறிதல்:

கேள்விகளே கேட்க முடியாதெனும்போது, பதிலா? அதைப் புரிந்துகொள்வதா? கேள்வி கேட்டால் மட்டும் திராவிடத் தலைவர்களுக்கு பதில் சொல்லத்தான் தெரியுமா? அய்யன்மீர், ஆகிற வேலையைப் பாருங்கள்.

அறிவதா? என்ன நகைச்சுவை?

காலம்காலமாகத்  தொடர்ந்து வரும் எதிர்அறிவுஜீவியப் போக்கினால், இந்த இயக்கத்தில் எங்கே அறிவாளிகள் இருக்கிறார்கள் – எல்லாரும் அதிகபட்சம் குறைகுடங்கள் தாம்!
திராவிடப் பகுத்தறிவுக்கு – அறிவு முக்கியமில்லை. வெறும் உச்சாடனங்களும், அடுக்குமொழி பொறுக்கி நடையும், உணர்ச்சிக் குவியலும், முட்டியடி எதிர்வினைகளும், இரட்டைவேடங்களும் போதும்.

காரண காரியத் தொடர்புபடுத்தி அறியும் திறன்:

திராவிடப் பகுத்தறிவு எதைக் கண்டது? காரணத்தையா, காரியத்தையா? அதற்குத் தெரிந்ததெல்லாம் போலித்தனமும், புனைசுருட்டும், ஜாதிவெறியும், மாளா பணப்பசியும், காமவெறியும், திரைப்படமும், கேளிக்கையும், சாராயமும் தானே?

அதன் அறியும் திறன் என்பது – எதை எப்படிச் செய்தால் பைசா பண்ணலாம், யாருக்கு எப்படி ஜால்ரா போட்டால் எப்படி ஆதாயம் கிடைக்கும் என்பது போன்ற லோகாயதமான அடிப்படை விழுமியங்கள் தாமே?

causeகாரணமாவது, effectவிளைவு மண்ணாவது!

திராவிடப் பகுத்தறிவென்பது – கையில் காசு பார்த்தால், வரும் பகுத்தறிவு விளைவு, அவ்வளவுதான்!

மெய்மையுணர்தல்:

:-)))

இதையே விடுங்கள். தன்னை அறியாமை, அப்படியே அறிந்தாலும் கமுக்கமாக இருத்தல் என்பது ஒன்று.

ஆனால் இரட்டைவேடம் போடுவதிலேயே விற்பன்னர்கள் ஆன திராவிடப் பகுத்தறிவாளர்களுக்கு மெய்மையாவது மசுராவது… அதை உணர்வதாவது?

மெய்மைபுணர்தல் என்றால் சரி – மெய்மையையே கூட்டுக் கற்பழிப்பு செய்து, வன்கொடுமை செய்து துவர்த்தி உலர்த்தி விடுவார்கள்தான், நம் பகுத்தறிவாளர்கள்.

ஆக, திராவிடப் பகுத்தறிவுத்தனமாக – திராவிடத்திற்கும் பகுத்தறிவுக்கும் ஒரு சுக்கு கூட தொடர்பில்லை என்பது வெள்ளிடை மலை.

-0-0-0-0-0-0-0-

ஆனால் – எங்கிருந்துதான், எப்படித்தான்,  நம் திராவிடச் சிகாமணிகள் தங்கள் கந்தறகோளக் கொள்கைகளை சமைத்துக்கொண்டார்கள்?

… திராவிடக் கருத்தாங்களில் – ஒன்றுவிடாமல் அனைத்தும் – கேள்வியே கேட்காமல், தப்பும் தவறுமாக – ஏகோபித்துக் கடன் வாங்கப்பட்டவையே. இவற்றில் – ஒரு சிந்தனைத் (உண்மையாக, நிந்தனை) துணுக்குகூட அடிப்படையில் அனுபவங்கள் சார்ந்து, அல்லது சுய ஆராய்ச்சிகள் மேல் கட்டி எழுப்பப் படவில்லை. ஏனெனில் – நம் சிகாமணிகள், கருத்தியலிலும் சோம்பேறிகள்.

தாமஸ் பபிங்டன் மக்காலே (Thomas Babington Macaulay), வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் (William Wilberforce), மாக்ஸ்ம்யுல்லர் (Max Müller), வில்லியம் ஜோன்ஸ் (William Jones – ஆசியாடிக் ஸோசைடி, கல்கத்தா – வக்கிரக் குயுக்திக்காரரான இவர் செய்த குழப்படியும் அறிவுஜீவிய துரோகமும் தான், மிகப் பல பார்வைகளில், புத்தகங்களில் ஒரே ஒரு புத்தகமான-பார்வையான, அப்போதும் பரவலாக அறியப் படாததான, மனு நீதி – மனு ஸ்ம்ரிதி – இப்போது இந்து மதத்தின் ஆணிவேறாகக் கருதப் படக் காரணம்) – ஜியார்ஜ் உக்லோ போப் (George Uglow Pope), ராபர்ட் கால்ட்வெல் (Robert Caldwell), ‘வீரமாமுனிவர்’ கான்ஸ்டன்ஸோ பெஷி (Constanzo Beschi), ழான் அந்த்வான் துப்வா (Jean-Antoine Dubois – இவர் – ‘அப்பே துபொய்’ என்று அறியப் பட்டு 1800-1823 வருடங்களில் மைசூர் சுற்றுப் புறங்களில் கிறித்துவ மதமாற்றம் செய்தவர் – மகத்தான கருத்தியல், இறையியல் மோசடிகள் பல செய்தவர்) போன்ற போலிப் பாதிரிகள் – போன்ற இத்தியாதிகள் மூலம் மட்டுமே – காலனியாதிக்க/மதமாற்ற சக்திகளின் திரியாவரங்களால் மட்டுமே – இந்த திராவிடமும், ஆரியமாயைக் கருத்தாக்கங்களும் உருவாக்கப் பட்டிருக்கின்றன.

ஒரு வகையில், ஃப்ரான்ஸிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis) தான் இந்த ‘திராவிட’ பதத்தை மொழியைக் குறிப்பிடுவதற்கு உபயோகித்தவர் என்றாலும், அதன் அப்போதைய உபயோகம், வெறும் ‘மற்ற பிரதேசங்களைக்’ குறிப்பிடுவதாகவே இருந்தது. தற்கால திராவிடத்துக்கும், மிஷனரிகளுக்கு முந்தைய திராவிடத்துக்கும் ஒரு சுக்குத்தொடர்புமில்லை. என்னைப் பொறுத்தவரை, இந்த திராவிடக் கருத்தியல் மோசடியென்பது – இந்திய/உலக வரலாற்றின் மகாமகோ புகழ்பெற்ற மோசடிகளில் ஒன்றுதான்!

… ஒரு விதத்தில் ‘அப்பே துபொய்’-ம் கால்ட்வெல்லும் தான்,  இப்போது ஏகோபித்து அமலில் இருக்கும் திராவிடத் திராபைக் கருத்தாக்கத்தை ஒரிஜினலாக உருவாக்கி அதன் பயன்களைக் கண்டுபிடித்தார்கள் எனச் சொல்லலாம்; அதன் பயன்கள் – பிரித்தாளுவது, பொருளாதார, கலாச்சாரச் சுரண்டல் – மதமாற்றத்தின் மூலமாக ஆன்மீகச் சுரண்டலும் கூட!

மூளை என்ற ஒன்றை – நம் திராவிடச் சிகாமணிகளுக்கு, அவர்கள் கமுக்கமாக நம்பும் கடவுள் கொடுக்காதினால்தான் (சர்வ வல்லமை வாய்ந்த அவளுக்குத் தெரியாதா – பாத்திரம் அறிந்துதான் பிச்சையிடவேண்டுமென்று!) – இந்த திராவிட முயக்கங்கள், சென்ற நூற்றாண்டில் பெய்த திராவிட மழையில், இந்த நூற்றாண்டு முளைத்த பகுத்தறிவுக் காளான்களாக, தங்கள் ப்ரேன்ட் பகுத்தறிவை மினுக்கிக் கொண்டு திரிகின்றன…
-0-0-0-0-0-0-0-

இப்போது, பகுத்தறிவின் பெயரால் – திராவிட இயக்கம் என்னவெல்லாம் செய்கிறது, கள்ளப்பணி ஆற்றுகிறது என்பதைப் பார்க்கலாம். (அடுத்த பதிவு)

-0-0-0-0-0-0-0-0-

அடிக்குறிப்புகள்:

[1] ஒரு திராவிட இயக்க (மதிமுக) இளைஞர், ஒரு புதுச்சேரி தெருமுனைப் பிரச்சாரப் பேச்சில், இப்படித்தான் நாட்ஸிகளை – நாஜ்ஜி பஜ்ஜிகளாக்கி விட்டார். அவர் யாரை, என்ன சொல்லவருகிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்குள் போதும்போதுமென்றாகிவிட்டது. அதற்குள் அதை டபக்கென்று இரக்கமற்றுத் தாண்டி, கருணாநிதி = ‘இட்லர்’ எனும் சமன்பாட்டை நிறுவச் சென்றுவிட்டார்.ஆனால் எனக்கு உடனடியாக, இந்த இட்லர் என்பவர், என்னுடைய செல்லமான இட்லியின் கணவர் என்பது, என் ஆழ்ந்த படிப்பறிவால்-மேதமையால் மட்டுமேதான் புரிந்தது என்பதை அடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறேன்!

மேலும் யோசிக்கிறேன்: இப்படி மதிமுக வரலாற்றின்படி – ஹிட்லருக்குப் பிறந்த ஸ்டாலினே ஒருவரோடொருவர், இரண்டாம் ‘உலகப்’ போர் சமயம்  பொருத நேர்ந்தது, தந்தை மகன் சண்டை ஏற்பட்டது ஆச்சரியமாகவே இருக்கிறது. வரலாறு தன்னை மீளுருவாக்கம் செய்துகொள்வது இப்படித்தானோ?  இசுடாலினாரும், இக்கால இட்லரும் பகிரங்கமாகச் சண்டை போட்டால், அது நாராசமாக இருக்குமல்லவா? திமுக-வினர் கவனிக்கவேண்டும். :-(

[2] விக்கிபீடையில் பகுத்தறிவு

திராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/04/2015 வரை!)

8 Responses to “திராவிடப் பகுத்தறிவு Vs சாதா பகுத்தறிவு”

 1. Vijayaraghavan Says:

  அன்புள்ள வெ.ரா. அவர்களுக்கு,
  உங்கள் பிளாகினை படித்தேன். தமிழகத்தின் அவல நிலையினை எண்ணி வருந்தி, என்ன செய்வது என்றறியாமல் ஏங்கும் என் போன்ற “தைரியமில்லா புழுக்களின்” மனக்குமுறலை உங்கள் எழுத்து பிரதிபலிக்கிறது. தமிழகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் ஒலிக்கும் ஸ்பீக்கர் ஒலி,மீனவர்கள் அன்றாடம் சிறைப்பிடிக்கப்படும் காரணம், ஆகியவை குறித்தும் உங்கள் பார்வை, உண்மை நிலை, (தீர்வு?) தருவீர்கள் என நினைக்கிறேன்.
  அன்புடன் விஜயராகவன்.


  • அய்யா,

   என்னிடம் எதற்கும் முடிவுதீர்வு என ஒன்றுமில்லை. நேற்றுஇன்றுநாளை என்கிற ரீதியில்தான் என்னால் வேலை செய்யமுடிகிறது. முடிந்தவரை சிரித்துக்கொண்டிருக்கவேண்டும், அவ்வளவுதான். நான் ஒரு படு ஸீரியஸ் ஆசாமியல்லன்.

   உங்கள் நண்பர் யாராவது கூப்பிட்டால், கனடா நாட்டுக்குப் புலம் பெயரலாம்.

   நன்றி.

 2. poornam Says:

  உங்கள் அறிவு சாதா அறிவா திராவிடப் பகுத்தறிவா என்று அறிந்து கொள்ள வேண்டுமா? காண்க:
  http://poornam11.blogspot.in/2012_05_01_archive.html

 3. Saravanan Says:

  வீரமாமுனிவர் முதன் முதலாகத் தமிழ் உரைநடையை உருவாக்கியவர். தமிழுக்கு அரும்பணி ஆற்றியவர்.


  • இதை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் (மிகை மதிப்பீடு இல்லாமல்) ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இவர் உரைநடையை ஆரம்பிக்கவில்லை. மன்னிக்கவும்.

   ஆனால், அவருடைய எழுத்துகளில்/கட்டுரைகளில் தொனிக்கும் மற்ற மதநம்பிக்கைகள் குறித்த ஏளனத்தையும், பேகன் (pagan) – இந்திய அவிசுவாசிகள் (ஹீத்தன்ஸ், heathens)பற்றிய மிகக் கீழ்மையான, கூசும்படிக்கு இருக்கும் கருத்தாக்கங்களையும் அறிவேன்.

   சொல்லப் போனால், நான் சிறுவயதில் படித்த மிஷனரி பள்ளியில், இவருடைய பரமார்த்தகுரு கதைகளை, காலை மாணவர் அஸ்ஸெம்ப்ளி நேரத்தில் சில மத அடிப்படைவாத ஆசிரியர்கள்படித்து – அதை பைபிளுடன் பொருத்தி, தேவையற்ற பேச்சுப் பேசுவதையும் (‘உங்கள் குருக்களெல்லாம் பரமார்த்த குருக்கள் மாதிரிதான்!’) கேட்டிருக்கிறேன். (இப்படி இதனைச் செய்யவேண்டும் என விரும்பியவர்தான் பெஷி)

   ஏனெனில், அவர் அடிப்படையில் ஒரு மதமாற்றமுதல்வாத்ப் பாதிரி. அதற்கு அவருக்குத் தமிழ் தேவையாயிருந்தது. அவ்வளவுதான். அதை வைத்துக்கொண்டு அவர் பிரிவினை செய்தார். வாழ்க.

   நீங்கள் அ. முத்துசாமி பிள்ளை அவர்கள் எழுதிய வீரமாமுனிவர் சரித்திரத்தையும் (1840களில் வெளிவந்தது என நினைக்கிறேன்), பெஷி அவர்கள் எழுதிய பிரச்சாரகர்களின் வினாவிடையையும் (catechism – வேதியரொழுக்கம் என்ற பெயரில் வெளிவந்ததோ? நினைவில்லை! இதுவும் 1730களில் போல வெளிவந்ததுதான்) – அவசியம் படிக்கவேண்டியவை. இவையெல்லாம் படிக்கப் பொறுமை இல்லாவிட்டால், அந்த பரமார்த்த குருகதையின் ஒரிஜினல் மூலத்தையாவது படிக்கலாம். ஆனால் நீங்கள் இவற்றையெல்லாம் படித்திருக்கக் கூடும்.

   எப்படியும், இணையத்தில் சீரழியும் Strange surprising adventures of the Goroo Simple, and his five disciples – noodle, doole, wiseacre, zany and foozle எனும் ஆங்கில வடிவத்தைப் படித்து, துணுக்குறலாம்.

   எனக்கு, பெஷியின் கிண்டல்- நையாண்டியெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல. குயுக்தியும் அடிப்படைப் பேடித்தனமும்தான், நான் இவற்றில் காண்பது. இதுதான் பெஷியின் தலையாய பங்களிப்பு.

   நன்றி.

   • Saravanan Says:

    ம.பொ.சிவஞானம் சொல்கிறபடி-
    வீரமாமுனிவர்-
    ****தமிழ் லத்தீன் அகராதி ஒன்றைத் தயாரித்து ஆங்கிலத்தில் வெளியிட்டார். 9000 கொடுந்தமிழ்ச் சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும் லத்தீனில் விரிவாக
    விளக்கம்கொடுத்தார். போர்த்துகீசியம்-தமிழ்-லத்தீன் அகராதி ஒன்றையும் அமைத்துக் கொடுத்தார்.
    4400போர்த்துகீசியச் சொற்களுக்கு விளக்கம் தந்தார். சதுரகராதி ஒன்றையும் உருவாக்கித் தந்தார். இதுவே, பிற்காலத்தில் தோன்றிய தமிழகராதிகளுக் கெல்லாம் மூலமாகும்.
    திருக்குறள் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் லத்தீன் மொழியில்பெயர்த்தெழுதினார்.

    கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் விளக்கம்தொன்னூல் விளக்கம் ஆகிய நூல்களை இயற்றினார். முதல் மூன்று
    நூற்களையும் இலத்தீனில் எழுதினார். *******

    ஜி.யூ.போப்-

    ***
    தமிழிலுள்ள சிறந்த காப்பியங்கள், நீதி நூல்கள் ஆகியவற்றிலிருந்து 612 செய்யுட்களைத் தேர்ந்தெடுத்து, தமிழ்ச்செய்யுட் கலம்பகம் வெளியிட்டார். ஒவ்வொரு செய்யுளின் கருத்தையும் சுருக்கமாக ஆங்கிலத்திலும் கொடுத்தார். பரிதிமாற் கலைஞரின் “தனிப்பாசுரத் தொகை” என்னும் கவிதை நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

    திருக்குறள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதினார்.
    ‘நாலடியார்’ என்னும் நூலையும் ஆங்கிலத்தில் பெயர்த்தார்.கிறிஸ்த்துவ மதத்திற்குச் செல்வாக்கு தேடத் தமிழகம் வந்த பாதிரிப்
    பெருமகனாரான ஜி.யூ.போப், சைவ சாத்திரமான சிவஞான போதத்தையும், சைவதோத்திர நூல்களுள் தலைசிறந்ததான திருவாசகத்தையும் ஆங்கிலத்தில்
    மொழி பெயர்த்து உலகுக்கு வழங்கினார். ****

    இவை எல்லாம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவிய மாபெரும் பணிகள் அல்லவா? இதற்கு முன் அவர்களிடம் குயுக்தி இருந்திருந்தால் அது எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. அதையெல்லாம் நாம் பொருட்படுத்தவோ அது பற்றி அலட்டிக் கொள்ளவோ தேவையில்லாத அளவுக்கு நமக்குத் தன்னம்பிக்கை வேண்டும். பல்லாயிரம் வருடப் பாரம்பரியத்துக்கு இதிலெல்லாம் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.


   • அய்யா, எனக்கு இவற்றில் மாற்றுக்கருத்துகள் இருக்கின்றன. அவற்றைப் பின்னொரு சமயம் பார்க்கலாம்.

    எனக்கு அடிப்படை ஆவணங்கள், வரலாற்று ரீதியான முதன்மைத் தரவுகள் முக்கியம். நல்ல எண்ணம் கொண்டவர்களில் கருத்துகள் என்பதால் மட்டுமே ஒரு விஷயத்தைச் சரியென்று சொல்லமாட்டேன்.

    நன்றி.

 4. ஆனந்தம் Says:

  திராவிடர் ஒருவர் இதைப் படித்தால் எப்படி உணர்வாரோ? வாஷிங் மிஷினின் ஸ்பின் ட்ரம்மில் வைத்துச் சுழல அடித்தது போலிருக்கும். பரமண்டலத்திலிருக்கும் பிதாவே! பாவம் திராவிடர்கள்! தாம் என்ன செய்கிறோம் என்ற பஹுத் தறி வு இல்லாதவர்கள். இவர் பிழைகளை மன்னியும். ஆமென்!
  நம் மனுநீதி ராஜராஜ திராவிட இட்ல சோழர் வீரப்புலம்பல் பாணியில் சொன்னால் குறுக்கே நூல் அணியாததால்தானே இந்த அநீதி? ஐயோ! கொல்றாங்களே! கொல்றாங்களே!
  Congrats! you are in mid season form! :)))


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s