கயமைப் படுகொலைகள் செய்யப்படுவதையும், கைகள் வெட்டப் படுவதையும் கண்டுகொள்ளாமல் மதச்சார்பின்மைத்தனத்துடன் கமுக்கமாக இருப்பது எப்படி?

March 26, 2015

எனக்குத் தெரிந்து, என் செல்ல பெங்காலிபாபு உட்பட, இதற்கெல்லாம் பொங்கவேயில்லை. வீரமிலா, நேர்மையிலா ஞமலிகள், வேறென்ன சொல்ல.

இதே விஷயங்கள், தலைகீழாக நடந்திருந்தால் நம் போலிப் போராளிகளும், சமதர்மப்பூங்காவினரும், ஊடகப் பேடிகளும் எப்படியெல்லாம் ஆடியிருப்பார்கள் என்பதை நினைத்தால்…

ஆம். தேவையற்ற, அயோக்கிய வன்முறைகள் – எந்தப் பக்கத்திலிருந்து எந்தப் பக்கத்தின்மீது செலுத்தப்பட்டாலும் விசனத்துக்குரியவையே, கிள்ளி எறியப்படவேண்டியவையே; ஆனால், நான் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துப் பார்த்து, ஊதிஊதிப் பெரிதாக்கி, பிலாக்கணம் வைப்பேன் – மற்றபடி மற்ற பக்கங்களைக் கமுக்கமாகக் கண்டுகொள்ளவே மாட்டேன் என்பது – நம் பாரதத்தில், ஒரு நுண்கலையாகவே ஆகியிருக்கிறது. இதில் ஊடகப் பேடிகளின் பங்கு பெரிதுதான்!

ஒரு பக்கம் பாதிக்கப்பட்ட திரளின் ‘திருப்பி அடி’காரர்கள், இன்னொரு பக்கம் சமனத்தைக் குலைத்த திரளின் ‘நல்லா வேணும்’ காரர்கள்;  ஆனால், இந்த இரண்டு திரள்களிலும் சமன நிலைமிக்க மக்கள்தாம் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பது சந்தோஷமான விஷயம். அரைகுறைகள் இவற்றில் சிறுபான்மையினர் தான். நல்லவேளை.

ஆனால்,  இவை இரண்டிற்கும் மேலாக இந்த மேட்டிமைவாத, போலி மனிதவுரிமைகசார் தொழில்முறைக் கயமைவாதிகள் பிரிவு என ஒன்று இருக்கிறது.  இதன் ஆஸ்தான நிலைய வித்வான்கள், விதூஷிகள் – அருந்ததி ராய், ஸாகரிகா கோஷ், மாலினி பார்த்தசாரதி போன்ற ஊடகங்களின் செல்லப் பேடர்கள். இப்போது இந்தப் பிரிவில், நீண்ட வரிசையில்  இன்னொரு விதூஷியும் சேர்ந்து கொண்டிருக்கிறார் – அவர், வெள்ளைக்கார லெஸ்லி அட்வின் அம்மையார் அவர்கள்.

இவர்கள்தாம் உதிர்க்கப் படவேண்டியவர்கள்.

இந்த மூன்றாம் பிரிவினரை கருத்து ரீதியாக எதிர்கொண்டு, இவர்கள் ஒவ்வொருவரின் சட்டகங்களையும் அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றினால் மிஞ்சுவது இந்தக் கோர்வைதான்:  சுயவெறுப்பு + அரைகுறைப் படிப்பு + கந்தறகோள சமூக அவதானிப்பு + கொஞ்சமாக ஆங்கிலப்புலமை –>> ஆகவே வெறுப்புகளைக் குவிப்பதற்கான, ‘வெளியே இருக்கும்’ சுளுவான வடிகால் தேடல் –>> ஆகவே சுலபமான முத்திரை குத்தல், அற்ப வதந்திகளைப் பரப்பல் –>> சுகமான பிழைப்புக்கான வழி கிடைத்தல் –>> பிராபல்யம் + பெருமை + வீங்கிய சுயபிம்பம் துணையுடன் மினுக்கிக் கொண்டு பவனிவருதல்…

இந்த அயோக்கியர்களால் ஏற்படும் நீண்டகால ரீதியான பிரச்சினை #1 என்னவென்றால் – இவர்கள் விட்டுச் செல்லும் எச்சங்களான விசிலடிச்சான் குஞ்சப்பர்களும், கருத்தடிச்சான் கந்தசாமிகளும்தான்.

ஒரு எழவும் புரியாமல் இருந்தாலும், மூளை கடுகளவாகக் குறுகத் தரிக்கப் பட்டிருந்தாலும், பின்னவர்கள், சுழற்றிச் சுழற்றி வார்த்தைச் சிலம்பங்கள் ஆடிக்கொண்டேயிருப்பார்கள். ஆனால் ஜனநாயகத்தின் பெயரால் இந்த அரைகுறைகளையும் பல்லைக்கடித்துக்கொண்டு பொறுக்கத்தான் வேண்டும். சலிப்புத்தான் வருகுதய்யா.

இக்கழிசடைகளால் ஏற்படும் நீண்டகால ரீதியான பிரச்சினை #2 என்னவென்றால் -அவர்கள் கமுக்கமாக ஒரு சாராருடைய அயோக்கியத் தனங்களைக் கண்டிக்காமல் இருப்பது மட்டுமில்லாமல், அவற்றை ஷொட்டுக் கொடுத்துக்கொண்டு ஊக்குவிப்பதால், வெறுப்பை உமிழ சட்டகங்களை உருவாக்கித் தருவதால் – அந்த கும்பல்களுக்கு கொம்பு சீவிவிடப் படுகிறது. ஆகவே மேன்மேலும் வன்முறைகளுக்கு அவைகளை இட்டுச் செல்கிறது. இதன் காரணமாக எதிர்வினைகள் ஏற்பட்டு, வன்முறைச் சுழலுக்குள் சமூகமே சிக்கிக் கொள்கிறது.

இக்கபோதிகளால் ஏற்படும் நீண்டகால ரீதியான பிரச்சினை #3 என்னவென்றால், எல்லா பக்கங்களிடமிருக்கும்  நடுநிலையும் சமன மனப்பான்மையும் சார்ந்த பெரும்பாலானோர் – இந்த விஷச் சூழலுக்கு இழுக்கப் படுகிறார்கள்.

தொழில்முறை மனிதவுரிமை வாதிகளுக்கு, பொறுக்கிமுதல் வாதிகளுக்கு – ஊர் இரண்டுபட்டால் கொண்டாட்டம்தானே!

ஹ்ம்ம்… இவையெல்லாம் கடந்து விடும், பாரதம் மேலெழும்பும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அதற்கான ஆன்மபலத்தை அதன் மக்களுக்கு, அதன் நெடிய சகிப்புப் பாரம்பரியம் தந்திருந்தாலும் – தற்காலிக அயர்வுகள் தொடர்கின்றன என்பது (எனக்கு) நல்ல செய்தியல்ல.

-0-0-0-0-0-0-0-

ஆனால், இந்த இரட்டைவேட ஊடகஎழவுகள் இப்போதைக்குச் சரியாகப் போவதில்லை. ஏனெனில் நேர்மையில், -பப்பரப்பாவில் துட்டு லேது. உணர்ச்சிக் குவியலில்லை. போலி அறச் சீற்றம் இல்லை. ஆகவே வர்த்தகம் சரியாக ஓடாது. எனக்கு இதெல்லாம் புரியாமல் இல்லை.

அதே சமயம் – கீழ்கண்டவை போன்ற சாதாரண மொழியில் எழுதப் பட்ட புத்தகங்கள்,  இந்திய மதங்கள் சார்ந்த பார்வையுடன், இந்திய மொழிகளில் வெளிவந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. குறைந்த பட்சம் படிப்பறிவு பெற்றவர்களாவது சரியான திசைகளில் சிந்திக்க ஆரம்பிப்பார்கள் அல்லவா?
அமேஸான் தளத்திலிருந்து ஒரு சுருக்கமான அறிமுகம்:
“Hugh Goddard provides a cogent analysis to the problems inherent in Christian-Muslim understanding. He begins by recognizing the great level of ignorance that exists between these religious communities and the subjective standards they apply to each other. Both Christians and Muslims criticize each other through a flawed and narrow lens that distorts rather than illuminates, and when self-criticism is applied double-standards emerge. Goddard offers an alternative which challenges both religious communities to adopt a more consistent approach in the way they observe and understand each other. Although Goddard may not resolve all the complexities of interfaith dialogue, he provides a foundation for mutual understanding to take place. This is, perhaps, the best book I’ve read on Christian-Muslim relations. I strongly recommend it to anyone interested in understanding the dynamics between Christianity and Islam and/or comparative religions.”
இப்புத்தகத்தைப் படித்தவன் என்கிற முறையில், மேற்கண்ட சுருக்கத்துடன் நான் முழுவதுமாக உடன்படுகிறேன்.

ஹம் ஹோங்கே காம்யாப். நாம் நிச்சயம் மீள்வோம். அற்பர்களை, பொய்முதல் வாதிகளை இடக்கையால் புறம் தள்ளுவோம்.

சில நம்பிக்கைகள் பொய்க்கா எனத் திடமாகவே  நம்புகிறேன்.

2 Responses to “கயமைப் படுகொலைகள் செய்யப்படுவதையும், கைகள் வெட்டப் படுவதையும் கண்டுகொள்ளாமல் மதச்சார்பின்மைத்தனத்துடன் கமுக்கமாக இருப்பது எப்படி?”

 1. Venkatachalam Says:

  ஐயோ! அப்பா! கிண்டில் ரீடரே 50.7 டாலர் போட்டிருக்கிறானே சாமியோய் நான் எப்படி வாங்குவேன். ஆகையினால் அன்பு கூர்ந்து ஒரு சம்மரி கொடுத்துவிடுங்கள் ராமசாமி சார்
  நன்றி.


  • அய்யா, நான் சம்மரி ஆடு அல்ல. வெள்ளாட்டுக்குச் சொல்லல இப்படி.

   இம்மாதிரி விஷயங்களுக்குத்தான், வெளி நாடுகளில் (குறிப்பாக அமெரிக்காவில்) வாழும் (அல்லது சாகும்) மாக்களோடு தொடர்பில் இருக்கவேண்டும் என்பது. அவர்களுடைய அரசு நூல் நிலையங்களிலிருந்து அவர்கள் இம்மாதிரிப் புத்தகங்களைத் தரவிரக்கிக் கொண்டு படிக்கலாம். இந்தியப் புல்லன்களுக்கும் இது ஆங்கே பொசியலாம் – ஆனால் சிலபல சூட்சுமங்கள் இதில் இருக்கின்றன. சரியா?

   நேரம் கிடைத்தபோது இதனுடைய சாராம்சத்தை எழுதுகிறேன்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s