(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (20/n)
சாளரம் #12: வழிப்பாதை நாய்கள்[1] குரைத்துக்கொண்டிருக்கலாம், ஆனால் ஒட்டகச்சரக்கு நெடும்பயணங்கள் தொடர்ந்துகொண்டே இருப்பவை…
‘Dogs bark, but Caravans roll on’ – என்கிற அரேபிய மூல வாசகம் எனக்குப் பெரும் மனவெழுச்சியைப் பல காலமாகக் கொடுத்து வருவது. அற்புதமான குறியீடாகவும், ஏன் படிமமாகவேகூட விரித்தறியத் தக்கது.
நம் தமிழ் நாட்டில் எவ்வளவோ எதிர்மறையும் கவைக்குதவாவையுமான சங்கதிகள் இருக்கின்றன. ஆனாலும் இவற்றையும் இவற்றின் ஆதாரசுருதியான திராவிட இயக்க எச்சங்களையும் மீறி, நம் சமூகம் எப்படியாவது மேலெழுந்து வரும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தமிழகம் எனும் நிலப்பரப்பிலும் வாழும் தமிழர்களையும், தமிழச் சூழலையும் — நிலமாகவும், கவிதையாகவும், கதையாகவும், திரைப்படமாகவும், மேடைப் பேச்சுகளாகவும், அரைவேக்காட்டு அரசியல் பகடைகளாகவும் மட்டுமே பார்த்து, உபயோகித்து, அவற்றை விற்று தன்னை வளர்த்துக்கொண்ட அறிவுஜீவி அரைவாளிகளும், காப்பிக்கடைக் காரர்களும், அரசியல் உதிரிகளும் நிரம்பிய — தற்போதைய நிலையில், இன்னமும் குறிப்பிடத்தக்க அளவில் தரம் வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய விஷயம்தான்.
எப்படி இதனைச் சொல்கிறேன் என்றால், இதற்காகப் பலவிதங்களில் நடந்துகொண்டிருக்கும் சிறு முயற்சிகளில் பலவற்றை நான் அறிவேன். அடுத்தவர்களுக்குத் தெரியாமல், விளம்பரங்கள் பெறாமல் (அவற்றைப் பெற விரும்பாமல்) நம் தமிழகத்தின், இந்தியாவின் மேன்மைக்காக, வளர்ச்சிக்காக – வெகு இயல்பாகவும், சுறுசுறுப்புடனும் – முனகலோ சுயபச்சாத்தாபமோ கர்வமோ துளிக்கூட இல்லாமல், மகிழ்ச்சியுடன் பாடுபடும் அற்புத மனிதர்களை நான் அறிவேன்.
இம்முயற்சிகளில் பின்னிருக்கும் மகானுபாவர்கள் பொதுவாக இப்படித்தான் சிந்திக்கிறார்கள் என்பதையும் நான் உணர்கிறேன். அதாவது:
‘நம் தாக்கத்தில், நம்மால் துப்புரவாகச் செய்து முடித்துவிடக்கூடிய செயல்களையே நமக்குச் செய்து முடிக்க நேரம் இல்லை. இப்படி இருக்கையில், சரியாக இல்லாத மற்ற விஷயங்களைப் பற்றி, நம்மை மீறிய செயல்பாடுகளைப் பற்றி யோசிக்க, செயல்பட நமக்கேது நேரம்?’ Read the rest of this entry »
தமிழக் கலாச்சாரம் திடம் வாய்ந்ததல்ல, அது வெறும் உரக்கக் கத்தப்படுவதான ஒன்று மட்டுமே!
February 17, 2014
சாளரம் #11: Tamil culture is not sound, it is merely loud. That’s all. ஆம். தற்காலத் தமிழக் கலாச்சாரத்தின் ஆதாரசுருதி sound-ஆன ஒன்றல்ல, மீளாத் தலைவலி கொடுக்கும் loud-ஆன ஒன்று தான்!
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (19/n)
தமிழையும் ஆங்கிலத்தையும் அடுத்தடுத்து அடுக்காமல் தொடர்ந்து முழிபெயர்த்து, உங்களுக்கு மேதகு நடிகர் ‘மேஜர்’ சுந்தர்ராஜன் அவர்களை நினைவுறுத்துவதைத் தவிர்க்கமுடியவில்லை, ஐ குட் நாட் அவாய்ட் இட். என்னை மன்னிக்கவும், ஐ ஆம் ஸாரி. ;-)
ஆ! இப்போது, பாரம்பரியமிக்க நம் டமில்ட்டாய் அவர்களிடம் போவோம்!! அதாவது La Decibelle Tamil Dame Sans merci அம்மணியிடம்… (மன்னிக்கவும்)

டமில்ட் டாய் படம் + அவளுடைய புத்தம்புதிய, டமிள் வரளாற்றிலேயே மொதள்மொறையாக அவள் கையிள் எடுத்துக்கொள்ள ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் ஆயுதமான ஓசைபெருக்கி
மேலேயிருப்பது, 1941 வாக்கில் காரைக்குடி கம்பன் கழகம் வெளியிட்ட தமிழ்த்தாயின் படம். அவள் ஆர்வத்துடனும் ஏக்கத்துடமும் வாயைக் குவித்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்கும் ‘கொம்பு’ ஓசை பெருக்கி, என் உபயம். அவளுக்கு ஒருகால், ஒரு கை மேலதிகமாக இருந்திருந்தால், அந்த ஓசைபெருக்கியையும் தூக்கிக் கொண்டிருக்கலாமே என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறாள் அவள், பாவம் — அவளுக்கு நிச்சயம் தெரியும் எண்ணித் துணிக கருமாந்திரம் என்று…
ஆக, இயல்-இசை-நாடகம் என ஆர்வத்துடனும் ஆர்பாட்டத்துடனும் ஆரம்பித்த திராவிடத்தமிழ்ப் பண்பாடு தற்போது ஓயின்-ஓசை-ஊடகம் என்று அற்புதமாக விரிந்திருப்பதை (=சுருங்கியிருப்பதை) பார்த்தால் இறும்பூதடைவார் நம் தமிழணங்கார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? Read the rest of this entry »
முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி?
February 10, 2014
சுமார் ஒரு வருடமுன்பு எழுதிய பதிவைப் படித்தால், இதன் பின்புலம் கிடைக்கும்: களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி? (26/02/2013)
அப்பதிவின் முடிவில் இப்படி எழுதியிருந்தேன்:
இந்த விஷயத்தில் மூன்று கேள்விகளை மட்டுமே நான் என் சொந்த அனுபவம் சார்ந்து, என்னால் இதுவரை செய்யமுடிந்த சில கோமாளித்தனமான விஷயங்கள் சார்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன். (வாழ்க்கையே ஒரு பெரிய நகைச்சுவைதான்!)
- முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி?
- முஸ்லீம்களுக்கும் மேலதிக வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?
- எதற்கெடுத்தாலும் முஸ்லீம் இளைஞர்களைக் குறி வைத்துத் தொந்திரவு செய்கிறார்களா, காவல் துறையினர்? அப்படியா என்ன? என்ன நடக்கிறது?
பின்னர், நேரம் கிடைக்கும் போது, என் அனுபவத்திலிருந்து, முஸ்லீம் சமூகத்துக்கு பிற சமூகத்தினர் ஆற்ற வேண்டிய, ஆற்றக் கூடிய கடமைகள் விஷயங்கள் என்ன (= காதலிப்பது) என்பதையும், ஏன் அப்படிச் செய்யவேண்டும் என்பதையும், அச்சமூகம் எப்படிச் சில விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும் எனவும், ஒரு சமூக-மானுடவியல் மாணவனாக, ஒரு காதலனாக (கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாகவே) எழுதலாமென்றிருக்கிறேன். (எனக்கு வெறிதான், சந்தேகமே இல்லை)
-0-0-0-0-0-0-
இதற்கு முந்தைய பதிவான சாமிநாதன்: சில நினைவுகள், குறிப்புகள் (07/02/2014) படித்தீர்களா? ஏனெனில் இந்தப் பெரியவர் தொடர்புடைய கதைதான் இது. ஆம், என் மங்கலான நினைவுகளிலிருந்துதான் இதனை எழுதுகிறேன்.
சரி. !980களின் நடுவில் இந்தப் பெரியவர் தன் மகள் வீட்டிற்குக் குடிபெயர்ந்தார் – அது மடிப்பாக்கம் பக்கத்திலிருக்கும் லக்ஷ்மி நகர் பகுதியில் இருந்தது.
ஆக, நங்கநல்லூர் – சிதம்பரம் ஸ்டோர்ஸ் (இப்போது இது இருக்கிறதா எனத் தெரியவில்லை) சமீபம் இருந்த அவருடைய சொந்தவீடு காலியாக – அது, இரண்டாம் சுற்றில் வாடகைக்கு விட இருந்தது. குருவி போலப் பணம் சேர்த்து வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, கடன்வாங்கி, அவரால் கட்டப்பட்ட வீடு அது. அந்த வீட்டைச் சுற்றி இருந்த தெருக்களில் பெரும்பாலும் முதலியார்களும் (சுமார் 70%), சில அய்யங்கார்களும்; ஒரிரு நாயுடுவும் நாடாரும், ஐயரும் கூட இருந்தார்கள்.
அப்போது யார் மூலமாகவோ ஒரு பள்ளி ஆசிரியர், பாவம், தன் குடும்பத்திற்காக வீடு தேடிக் கொண்டிருக்கிறார் என நான் கேள்விப்பட்டு (ஒரு திமுகழகத் தோழன் பரிந்துரைத்தது) அந்தப் பெரியவரிடம் சொன்னேன் என நினைக்கிறேன். அவரும் ’சரி, அவங்கள வந்து பார்க்க சொல்லு, பிடிச்சிருந்தா வரட்டும், நீயே பொறுப்பெடுத்துக்கோ’ என்றார். எனக்கு அப்போது சுமார் 21/22 வயது என நினைக்கிறேன். Read the rest of this entry »
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (18/n)
சாளரம் #10: நம் தமிழர்களுக்கு ‘நாம் vs மற்றவர்கள்’ அல்லது ‘நம்மாள் vs வேற்றாள்’ குறித்த இனம் புரியாத (அதாவது, புரிந்த) அடுக்குப் பிரிவு உணர்ச்சி என்பது மிக, மிக அதிகம்.
அதாவது இந்த உணர்ச்சி – நம்மையும், மற்றவரையும் அடுக்குப் பிரிவு சார்பாகவே பார்த்து, அது மேல், இது கீழ் என விரித்து, முத்திரை குத்தி – அதன் மூலமாக விரியும் பிம்பங்களினூடே, அவை மூலமாக மட்டுமே அதுவும், எந்த மானுட அடிப்படை விழுமியங்களினாலும், அறவுணர்ச்சிகளினாலும் பாதிக்கவேபடாமல் உலகைப் பார்த்தல். Read the rest of this entry »
வாழ்த்துகள்: எஸ் ராமகிருஷ்ணனுக்கு நொக்கர் (2014) விருது!
January 25, 2014
நொபெல் பரிசையும் புக்கர் பரிசையும் இணைத்து, அறிவியல்-இலக்கியங்களுக்காகவென நிறுவப்பட்ட மிகப் பிரபலமான நொக்கர் விருதை, பல்லாண்டுகளாக, ஆப்பிரிக்காவிலுள்ள லைபீரியா நாடு அளித்து வருகிறது என்கிற அற்புதமான விஷயம், தமிழகத்தில் பலருக்குத் தெரியாது.
மேலதிகமாக, இவ்விருதைப் பெற்ற புத்தகத்துக்கு லைபீரியா, பெரிய லைப்ரரி ஆர்டர் ஒன்றைக் கொடுக்கும் என்கிற விஷயத்தையும் பல தமிழ்ப் பதிப்பாளர்கள் – ராயல்டி ஏய்க்கும் பதர்கள் – மறைத்து விடுவார்கள், என்பதும் பலருக்குத் தெரியாது.
ஒரு மன்னர் வரைந்த ஓவியம் போல இந்த மன்ரோவியா நகரம் காட்சியளிப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம் என, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் நண்பரும், அகழ்வாராய்ச்சியாளரும், மேலதிகமாக ஐ.ஏ.எஸ்-ஸுமான ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் கருதுகிறார். (ஆதாரம்: சிந்துவெளியில் தமிழ் ஊர்ப்பெயர்கள்).
ஆர்பா அவர்கள் அவருடைய கட்டுரையில் – தமிழகத்தின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களான ஆர் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி, பாஷ்யம் ‘சாண்டில்யன்’ அய்யங்கார் போன்றோர்களின் ஆய்வுகளிலிருந்தும், ராஜசிம்ம பல்லவனும் அருண்மொழித் தேவனும் கொள்கைக் கூட்டணி அமைத்து அக்காலத்திலேயே ஆப்பிரிக்கா சென்று குளம் தொட்டு வளம் பெருக்கியதைப் பற்றிப் பேசும் ஜப்பானில் உள்ள கல்வெட்டுகளிலிருந்தும் இந்த லைபீரிய உண்மையைக் கண்டெடுத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார் என்பதை நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-0-0-0-0-0-0-0-0-
நிற்க, நாம் நொக்கர் விருது பற்றித்தானே பேசிக் கொண்டிருந்தோம்? … … சரி. இப்போது ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுக்குச் சொல்லவேண்டும்: கலகத்தமிழ்ப்பிரதிக்காரரான மேதகு சாருநிவேதிதா அவர்களே கூறியிருக்கிறார்கள் – இந்த நொபெல் விருதானது நொபெல் + புக்கர் + கலைமாமணி + பத்மஸ்ரீ + பத்மப்பிரியா + பத்மநாபன்(வியட்நாம் வீடு) இணைந்து ஒருசேர வழங்கப்படுவதற்கு நிகரானது, என்று.
தமிழர்களும் நீளமும்
January 24, 2014
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (17/n)
இந்தத் தலைப்பை, தமிழ் – ஆண்கள் – பலானதின் நீளம், அதைக்குறித்த அவர்கள் போதாமை என்று நீங்கள் புரிந்துகொண்டால், அது சரியில்லை என்றாலும், உடனடியாக சாளரம் #3க்குச் செல்லலாம்: சாளரம் #3: தமிழர்கள், தங்கள் ஆண்மை குறித்த தாழ்வுணர்ச்சியால் வாடுபவர்கள் (24/11/2013)
ஆக — கவனம், கவனம். இந்தச் சாளரம், வேறு ஒன்றைக் குறித்தது.
சாளரம் #9: பொதுவாக, நம் தமிழர்களுக்கு நீளம் எனும் அளவை சரியாக மேலாண்மை செய்ய முடியாது, தெரியவும் தெரியாது;
இந்தக் கோட்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கு, இந்த ’நீளம்’ எனும் படிமத்தை (வெறும் குறியீட்டை அல்ல), நாம் பல விதங்களில், பல கோணங்களில், பல துறைகளின் ஊடாகப் பார்க்கவேண்டும். இந்தப் பொதுத்தன்மையானது, பண்பாட்டு ரீதியாக நாம் ஒதுக்கிக்கொண்டிருக்கும் சிரத்தை மனப்பான்மையை, ஆகவே வளர்த்துக்கொண்டிருக்கும் அசட்டை/விட்டேற்றி மனப்பான்மையை ஒட்டி உருவாகிறது. Read the rest of this entry »
எஸ். ராமகிருஷ்ணன் – ஒரு எதிர்கொள்ளப்படவேண்டிய எதிர்வினையும், ஒரு தன்னிலை விளக்கமும்…
January 21, 2014
நான், பல காரணங்களுக்காக மிகவும் மதிக்கும் பெரியவர் ஒருவர் (மன்னிக்கவும், இவர் ஒரு பார்ப்பனர் அல்லர்; ஆர்க்காட்டு முதலியார், எண்பது வயதிருக்கலாம்; மணிக்கொடி பற்றிப் பேசிப்பேசியே கழுத்தை அறுப்பவர். இக்காலங்களில் இன்டெர்நெட்டிலேயே ஐக்கியம் ஆகி மாங்குமாங்கென்று படித்துக் கொண்டிருப்பவர்; ஜேஜே: சில குறிப்புகளின் அரவிந்தாட்ச மேனனை நினைவு படுத்துபவர்; தனிமையையும் தமிழையும் விரும்புபவர்; ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர் அதிகம் பேசாதவர்), ஒரு நீள மின்னஞ்சலில், வருத்தப்பட்டு, கோபத்துடன் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்; கீழே அதன் சாராம்சம், என்னுடைய வார்த்தைகளில்:
ஏன் இப்படிச் செய்கிறாய். மற்ற எழுத்தாளர்க ளெல்லாம் பெரும்பாலும் அப்படித்தானே இருக்கிறார்கள். எஸ். ராமகிருஷ்ணன் அவர்களை மட்டும் தனிப்பட்ட முறையில் ஏன் குறி வைத்துத் தாக்குகிறாய், இம்மாதிரி ஆட்களால் தானே, இலக்கியத்தின் பக்கம் மேன்மேலும் மக்கள் ஈர்ப்படைந்து, பின்னர் நல்ல இலக்கியங்களுக்கு அறிமுகமாவர். சுளுக்கெடுப்பது உன் தொழிலா. ஒரு விமலாதித்த மாமல்லன் போதாதா. தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் கூட கொண்டாடத் தக்கவரில்லையா. நீ ஏன் இப்படி முரடனாக இருக்கிறாய். ஏன் இந்த தேவையற்ற சகதி. அமிலத்தன்மையைக் குறைத்துக் கொண்டால், இன்னமும் நிறைய பேர் படிப்பார்களே… நல்ல விஷயங்களைப் பற்றி எழுதலாமே. கெட்ட வார்த்தைகளைக் குறைத்துக் கொள்ளலாமே… டட்டடா டட்டடா…
-0-0-0-0-0-0-0-0-0-
அவருக்கு நான் எழுதிய தமிழ் பதிலின், கத்தரிக்கப்பட்ட (சுத்திகரிக்கப்பட்ட, தனிப்பட்ட விவரங்கள் வெட்டப்பட்ட), ஆக, 1/3 ஆகக் குறைக்கப்பட்ட வடிவம்: Read the rest of this entry »
இப்பதிவைப் படிக்கப்போகும் நீங்கள், ஒரு புலவராகவோ, கவிஞராகவோ, திரைப்படப் பாடலாசிரியராகவோ அல்லது இன்னபிற விசித்திர ஜந்துவாகவோ இருந்தால், உங்கள் மனம் வீணாகப் புண்படக் கூடாது என்று தோன்றினால், தயவு செய்து மேலே படித்துத் துன்புறவும். இது முக்கியம். தற்காலத் தமிழப் பண்பாட்டின் படி, தான் எதையாவது கந்தறகோளமாகச் செய்து அதற்கு ஏதாவது எதிர்மறை எதிர்வினை வந்தால் அதனை நினைத்து உடனுக்குடன் புண்பட்டு, ஒப்பாரி வைத்து, பிலாக்கணம் பாடி, கண்டீரா – என்னைப் பற்றி, என்ன சொல்லிவிட்டான் இவன் என அழுது புரண்டு, ஆதூரமாக நாலு வார்த்தை எவனாவது சொல்லமாட்டானா என்று ஓரக்கண்ணால் பார்த்து, மூக்கிலிருந்து ஒழுகும் சளியை நக்கிக்கொண்டு அய்யோ உப்புக் கரிக்கிறதே என்றலைவது மிக மிக முக்கியம்.
ஆம். எனக்குத் தெரியும், எவ்வளவு அயோக்கியர்கள் புண்படுத்தியிருக்கிறார்கள் என்னை, அற்பர்கள். ஆனால், மார்கழிக்குளிர் முடிந்தும், மகரராசியில் புகுந்தும் – சளி, சனியன் போகவே மாட்டேனென்கிறது. ஆகவே, இக்காலங்களின் உணவிற்கான உப்பை மிகக் குறைவாகவே வாங்குகிறோம். Read the rest of this entry »
… அழ வைத்துவிடுகிறார்கள், பாவிகள்… :-(
January 16, 2014
‘இயக்குனர் பரங்கிமலை’ நோ ராவணகம்சன் பெருமையுடன் வழங்கும்: எஸ்ராவுடெ ராவுகள் (புத்தம் புதிய காப்பி!) பதிவுக்கு வந்த ஒரு சோம்பேறிப் பின்னூட்டமும், என் எதிர்க் கதறலும்… (இரண்டாம் வரைவு)
Anonymous Says:
15/01/2014 at 08:03 e‘இயக்குனர் பரங்கிமலை’ நோ ராவணகம்சன் WHAT IS THIS. KINDLY INFORM
—>>>
அய்யா அனானிமௌஸ் கேபிடலிஸ்ட் எலியாரே!
உங்கள் கீபோர்டில் இடது ஓரத்தில் கேப்ஸ்லாக் (capslock / capslk) என்று ஒன்று, பொதுவாக, கீழிலிருந்து (உங்களுடைய கீழ் அல்ல, அது உங்களுடைய கோமணத்தினுள் பத்திரமாக இருக்கட்டும்; இது கீபோர்டின் கீழ்) மூன்றாம் வரிசையில் இருக்கும். அது உங்கள் தொப்பியை அதன் இடத்தில் பத்திரமாக வைத்து பாதுகாப்பதற்காக இல்லை என்பதை அறிந்து, அதனை அமுக்கிக்கொண்டேயிருக்காமல் கொஞ்சம் சும்மா விடவும்.
இதற்குமுன் ஒரு விண்ணப்பம்: தேவரீர் நீங்கள், மிக முக்கியமாக, கீபோர்ட் என்றால் உங்கள் சாவிகளை பத்திரமாக மாட்டும் பலகை என்று புரிந்து கொள்ளவேண்டாம்…
டேய்… ஏண்டா என் கள்த்த அற்க்கிறீங்க! நான் எள்தறத(!) ஒரு அம்பது பேர் பட்ச்சா போறுண்டா! ஏண்டா எளவெடுத்தவனுங்க, சோம்பேறிக் கூவானுங்கெல்லாம், மூளேன்றதே இல்லாதவனுங்கல்லாம், சும்மானாச்சிக்கும் சொறிஞ்சிக்கினு லைக் போட்றவனுங்கெல்லாம் இங்க வந்து இப்டீ தொந்த்றவ் செய்றீங்க? அரெகொறேங்களா – நீங்க ஸார்னிவேதிதா, எஸ்ராவோட தளங்கள வுட்டுட்டு ஏண்டா இங்க வந்து என்க்கு உஸ்பேத்தறீங்க, சோமாறீங்களா… Read the rest of this entry »
‘இயக்குனர் பரங்கிமலை’ நோ ராவணகம்சன் பெருமையுடன் வழங்கும்: எஸ்ராவுடெ ராவுகள் (புத்தம் புதிய காப்பி!)
January 14, 2014
இதாணு: எஸ் ராமகிருஷ்ண லீலா தரங்கிணி… (3/3)! அறியோ?
லாஸ்ட் போஸ்டாணு, மனசிலாயீ? ஞான் வெறுத்துப்போயி… ஈஸ்வரா!
… ஸார், க்ஷமிக்கண்டே… ஈ ‘எஸ்ராவோடெ ராவுகள்’ — ஞங்ஙள் ஐவி செசி ஸினிமா அல்லா, கேட்டோ? ஞிங்கள குருத்தங்கெட்ட தமிழ் ஸாஹித்யம் பெற்றியாக்கம்.
… … … … பேடிக்கண்டா! … … கரையண்டா ஸாரே! சாயா வெள்ளம் வேணோ?
… … எந்தா ஸார் ஞிங்ஙள் பரையுன்னது? எவ்விடிக்கு போவுன்னு ஸார்?… வெறிதே இருக்கின் ஸாரே… ஸார்! ஸாஆஆஅர்ர்ர்!! aye aegree. zuizide is zimbly no zolution. uou onderztand?
…Besides, ezra is a thick armoured battletank, he can pound away merrily, while you lousy lusers keep complaining. Resistance is futile, yes. :-(
சரி. ஓடாதீர்கள்! இதுதான் (இப்போதைக்கு) எஸ்ரா துர்குணம் அவர்கள் பற்றிய கடைசிப் பதிவு.
எச்சரிக்கை: இது ஒரு ‘நகைச்சுவைக்’ கட்டுரையல்ல. சோககாவியம்தான். :-(
படுபாவீங்களா!
January 12, 2014
ஏண்டா, வொங்களுக்கு நேரடியா ஒரு வெஷயத்தச் சொன்னா புரியவே புரியாதா?
நேத்திக்கு – குறிப்பா அந்த எஸ்ரா-வோட அடிப்பொடி எழுதின முழிபெயர்ப்பு பக்கம் போகவே போகாதீங்கடான்னு படிச்சு படிச்சு சொன்னேனேடா!
நான் சொல்றத கேக்கவேகேக்காம 70-80 பேர் துள்ளிகுதிச்சிக்கிட்டு ஓடிப்போய் அந்தக் கந்தறகோளத்தப் பாத்திருக்கீங்களேடா! உருப்படுவீங்களா?? Read the rest of this entry »
எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் எதிர்த்தாக்குதல்! (ஐயய்யோ!)
January 11, 2014
யுத்த தர்மம் என்று ஒன்று உணடு. ஆனால், வாயையும் கையையும் கீபோர்டையும் தவிர வேறு எந்த ஆயுதத்தையும் இக்காலங்களில் பிரயோகிக்கத் தெரியாத என்மேல் — என் குற்றச்சாட்டுகளுக்கு(=தீர்ப்புகள்), நேரிடையாகப் பதில் சொல்லாமல், எதிர்வினை தராமல் – இப்படி ஒரு கெரில்லாத் தாக்குதலை முடுக்கி விட்டிருக்கிறார் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள்! கிருஷ்ணர்களுக்கும் தருமத்துக்கும் ஒரு தொடர்புமே இல்லையோ!
பாருங்கள் இந்த அநியாயத்தை – அவர் வலைத் தளத்திலிருந்து ஒரு மகாமகோ முழிபெயர்ப்புச் சாத்தானை ஏவி விட்டிருக்கிறார்!
இவருக்கென்று பிரத்யேகமாக — படு பீதியளிக்கும் பயங்கர ட்ரான்ஸ்லேஷன், டிக்ஷனரி ஆயுதங்களை ஏந்தி, வாசகர்களின் கபாலங்களின் மீது கோரதாண்டவம் ஆடும் பயங்கரவாத ஆபத்துதவிப் படையினர் இருக்கின்றனர் என்று எனக்கு இதுவரை தெரியவே தெரியாது. அந்த எழவெடுத்த பொன்னியின்செல்வனில் இது பற்றி ஒன்றுமே இல்லை… Read the rest of this entry »
எஸ் ராமகிருஷ்ண லீலா தரங்கிணி… (1/3)
January 8, 2014
B-( 8-( :-( … … :-{
… (அல்லது) எஸ் ராமகிருஷ்ணன் எழுத்துகளில் சோகச்சித்திரங்கள்…
முதலில், ஒரு முக்கியமான தன்னிலை விளக்கம்: இக்கட்டுரைத் தொடரில் முதல் பகுதியான கட்டெறும்பு பெருத்து கழுதையான கதை என்பதில் கட்டெறும்பு என்பதுதான் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களைக் குறிக்கிறது; கழுதையென்பது அடியேனை. அதாவது முன்னவர், தனக்கேயுரிய பாணியில் எழுதி எழுதித் தள்ளி, என் அளவுக்கு மிக மிகப் பரிதாபமாக இறங்கி விடுகிறார் என்பதைக் குறிப்பதற்கே, இந்தத் தலைப்பு. இதைத் தயவுசெய்து தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.
இன்னொரு விஷயம்: ‘வரவர மாமியார் கழுதை போல் ஆனாராம்’ என்கிற ஔவையாரின் மூதுரையுடன், நீங்கள் இந்தத் தலைப்பினை இணைத்துக் குழப்பிக்கொண்டு, தவறுதலாகப் புரிந்துகொள்ளவேண்டாம் எனவும் தெண்டனிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். தவறான புரிதல்களினால் — சின்னஎஸ்ராவே, கட்டெறும்பு என் மாமியாரக் கடிக்குது-என்றெல்லாம் நான், நடிகை சுகன்யா நடிகர் பிரபுதேவா அவர்களைப் போல விலுக்விலுக்கென்று இடுப்பை வெட்டிக்கொண்டு பாடியாடவேண்டியிருக்கும், உங்களுக்கு இது தேவையா?? Read the rest of this entry »
வெள்ளெயானே வெளியேறு!
January 1, 2014
(அல்லது) இதுதாண்டா விமர்சனம்!
மொதல்ல ஒங்க அல்லார்க்கும் ஒரு ஸலாம் வெச்சுக்றேன்!
வணக்கம் ஸார். வணக்கம் லேடீஸ்.
பகத்சிங்க வெள்ளக்காரனுக்குப் போட்டுக்கொட்த்த, அம்பேத்கார் முதுக்ல குத்துன, பெரியார் மேல சூனியம் வெச்ச அந்த ஆரிய காந்தியப் பத்தி – மானாவாரியா, மூச்சுமுட்ட ஒரேடியா வுடாத ஆதரிச்சிக்கினு தெனாவெட்டா எளுதிக்கினே கீராரே இந்த செயமோகன் – அவ்ரே ஒரு புது பொத்தகத்தையும் எளுதிருக்காரு. புக்கு, பாக்க கொஞ்சம் குண்டாத்தான் கீது. வெள்ளேயானேன்னிட்டு எம்மாந் தெகிர்யத்தோட, வெள்ளக்காரனுங்க நெஞ்சத்ல கீற மஞ்சாசோத்த எடுக்றாமாரீ, நாக்கப் பிடுங்கிக்றாமாரீ எள்திருக்காரு இந்த செயமோகன்? பொத்தகத்தோட தலப்பே டாப்டக்கராத்தான் கீது.
ஆனாக்க என்க்கு மன்ஸ்ல ஒரு பெத்த கேள்வீ… அந்த குவிட் இண்டியா 1942 ஆகஷ்டு புர்ச்சி மண்ணாங்கட்டீ தெர்ப்பிள்தீ பத்தீ, இப்ப டெசம்பர்லயா – அதுவும் அத் நட்ந்த எளுவ்து வர்ஸத்துக்கு அப்றமாவா ஒரு புக்க எள்தீ – அத்த 2013ல ரிலீஸ் பண்வாங்க?
… இன்னாடா இது – பிர்யவே மாட்டேங்க்து… இந்தப் பதிப்பாளனுங்க்ளையிம் தூண்ல கட்டி நல்லா ஒதிக்கணும் – பேமானிப் பசங்ளுக்கு எப்போ என்னாமாரீ புக்கு போட்டா அது விக்கும்னிட்டு தெரீயவே மாட்டேங்து… எப்படியோ வித்துட்டானுங்கன்னாலும், எளுத்தாளனுங்க ராயல்டீ கேட்டாக்க, லைப்பரி ஆர்டர் கெடக்கலேன்னிட்டு டபாய்ப்பானுங்க. எளுத்தாலங்க அல்லாம், அவங்க பொண்டாட்டியோட வந்து அள்து பொரண்டுக்கினு றொம்பொ ப்ரெஸ்ஸர் போட்டாக்க, ராயல்டீ இல்ல கவிஞ்சரே, கொஞ்சம் ரெட்லேபிள் சூப்பர்டஸ்ட் டீதான் கீதுன்னுட்டு ஒரு லோட்டா கொடுப்பானுங்க… சூடா குடிச்சிட்டு சூத்தாமட்டைய தொடச்சிக்கினு ரிட்டர்ன் ஆய்ட்ணும். அவ்ளோதான். Read the rest of this entry »
தமிழ இயல்பு: ஸ்னெல் ஒளித்தடம் + ஸிப்ஃப் மானுட இயல்புக் கோட்பாடுகள்
December 20, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (16/n)
சாளரம் #8: ஸ்னெல் ஒளித் தடக் கோட்பாடு: ஓளியானது, எதிர்ப்பு குறைவாகவுள்ள பாதையில், ஆக அது வேகமாக செல்லக்கூடிய, நேரம் குறைவாக எடுத்துக் கொள்ளக் கூடிய பாதையில் மட்டுமே செல்லும்.
உப ஸிப்ஃப் கோட்பாடு: மனிதனின் தாங்குசக்தியும் மனவலிமையும் பொதுவாக மிகக் குறைவு – அப்படியே அவை இயங்கினாலும் அவை, எதிர்ப்பு குறைவாகவுள்ள, சுளுவான வழிமுறைகளில் மட்டுமே ஈடுபடுபவை.

இது 1949-ல் வெளிவந்த, பின்னர் பலராலும், மொழியியல் உட்படப் பல துறைகளிலும் மிகவும் பேசப்பட்ட ஒரு புத்தகம். பேராசிரியர் ஸிப்ஃப் அவர்கள் ஒரு மாமேதை என்பதில் ஐயமேயில்லை. (என்னிடம் இருப்பது, இந்தப் பழைய பதிப்பு தான்)
இதன் புதுக் கருக்குக் குலையாத ஒரு அச்சுஅசலான ஃபேக்ஸிமிலி பதிப்பு 2012ல் வந்திருக்கிறது. அதன் அட்டைப் படம் (அமேஸானிலிருந்து), கீழே: Read the rest of this entry »
இதுதாண்டா கொழுப்புத் தமிழர்களின் விழுக்காடு!
December 13, 2013
நான் வேலைவெட்டியற்றுக் கொழுப்பெடுத்து, நாம் தமிழர்கள்: தோலடிக் கொழுப்பும், நொதுமல் நிலையும் எனும் காட்டுரையை எழுதியதற்கு, என். பக்கிரிசாமி அவர்கள் ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்.
தாங்கள் கூறும் இத்தகைய தமிழர்கள் எத்தனை சதவிகிதம் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?
கேட்டதற்கு நன்றி, பக்கிரிசாமி அவர்களே! மேலதிக ஆராய்ச்சி செய்ய என்னை நீங்கள் உந்துகிறீர்கள் என நினைக்கிறேன், மிக்க நன்றி. தமிழன் காணாத உன்னத உச்சங்களே இருக்கக் கூடாதல்லவா? ஆக, எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், நான் மேலே தொடர்கிறேன்… ஏதோ ணம் செள்ளட் டமிளுக்கு, டமிளர்கலுக்கு, எண்ணாள் ஆண வுதவீ.
ஒரு முக்கியமான விஷயம்: உங்கள் நகைச்சுவையுணர்ச்சி மீது நம்பிக்கை வைத்து, நீங்கள் கோபித்துக் கொண்டு கண்டமேனிக்கும் (பல மற்றவர்கள், இனமானர்கள் போல) என்னைத் திட்டமாட்டீர்கள் என்கிற தைரியத்தில், இதற்கு இரண்டுவிதமான பதில்களைக் கொடுக்கிறேன் – ஏற்க முடிவதை ஏற்றுக் கொண்டு, மற்றவைகளைக் கடாசலாம், சரியா? Read the rest of this entry »
நாம் தமிழர்கள்: தோலடிக் கொழுப்பும், நொதுமல் நிலையும்
December 10, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (14/n)
சாளரம் #7: தமிழர்களுக்குத் தொடர்ந்து தங்கு தடையில்லாமல் வளர்ந்துகொண்டிருப்பது, அவர்கள் சிந்தனையின் / செயல்பாட்டின் ஆழமோ வீச்சோ அல்ல; உரையாடல்களின் செறிவோ அல்லது நுட்பமான வாசிப்பை அனுபவங்களோடு பொருத்திச் சிந்தனைகளை வளர்த்தெடுத்துச் செல்லும் மனப்பாங்கோ அல்ல – ஆச்சரியமே தராதவிதத்தில், ஏகோபித்து வளர்ந்துகொண்டிருக்கும் அதுவானது, அவர்களின் தோலின் கீழுள்ள வளமையான கொழுப்புசார் அடிமான அடுக்கு (subcutaneous fat) மட்டுமே!
அதாவது, நம்முடைய தோலின் தடிமன், அதனால் நாம் புளகாங்கிதம் அடைந்து பெறும் – வெட்கம், மானம், சூடு, சொரணை சாராத ‘தடித்தனம்’ என்பது தாங்கவொண்ணாச் சக்தியுடையது; உலகத்தில் மகோன்னதமாக எது நடந்தாலும் ‘என்னத்த பண்ணி, என்னத்த செஞ்சு’ எனப் புலம்பி, ‘நமக்கெல்லாம் இது ஒத்துவர்ராத் சார்’ என வெகு சாவகாசமாகக் குண்டி மண்ணைத் தட்டிக்கொண்டு போகவைக்கும் மனப்பான்மையை, எதனையும் கற்றுக்கொள்ளாமல் கிடந்துழலும் எண்ணப்போக்கை வளர்ப்பது இது.
இதனைப் புரிந்துகொள்வதற்கு சரியான படிமம்: ’எருமையின் மேல் மழை பெய்வதைப்போல…’
-0-0-0-0-0-0-0-0-0-
நாம் தெரிந்து செய்யும் தவறுகளை, யார் கண்டுபிடிக்கப்போகிறார்கள் என்கிற அசட்டுத் தைரியத்தில் செய்யும் பிழைகளை, ஒருவர் சுட்டிக்காட்டினால் அதனைக் கண்டுகொள்ளாமல், மேலும் மேலும் அதே தவறுகளைச் செய்யும் தடித்தனம். மேலதிகமாக, நம் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்மீது கோபம் – இதில் கோபம் என்பதை விடக் கொலைவெறிதான் அதிகம் என்பது உண்மை.
வசீகரக் கோமாளிகள்: தினவுக் காரர்களும், வினவுக் காரர்களும்
December 5, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (13/n)
… சினிமாக்காரர்களின், வசீகரக் கோமாளிகளின் கோனார் உரைகளும், தமிழ அறிதல்களும் — யின் தொடர்ச்சி…

புல்லரிப்பு சத்யாவேசம் அறவுணர்வு எல்லாம் சரி. பேஷ் பேஷ், றோம்ப நல்லாவே கீது! ஆனால், இவருக்கு யார் இப்படி கோனார் உரை கொடுக்கிறார்கள்? இம்மாதிரி மதச்சார்பின்மைச் சாமி வந்து உளறிக்கொட்டும் ஆட்களைப் பார்த்தால் – வேறு வழியேயில்லாமல், இவர்களுடைய கவிதைகளே(!) பரவாயில்லை என்கிற முடிவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. போலிப் பெண்ணியம் பேசுவதற்கு அப்பாற்பட்டு — இம்மாதிரி வசீகரக் கோமாளிகளுக்கெல்லாம், விசாரணை, புலனாய்வு, வழக்குப்பதிப்பு, வழக்காடல், தீர்ப்பு, மேல்முறையீடு சுற்றல்கள், முடிவான தீர்ப்பு என்றெல்லாம் விரியும் நீதிமன்ற நடப்புகளைப் பற்றி ஒரு எழவும் தெரியாது என்பதை மீண்டும் மீண்டும் உளறிக் கொட்டி, கருத்துதிர்த்துப் பேசித் திரிகிறார்கள்; இவர்கள் போட்டுக் கொண்டிருக்கும் அசட்டுக் கண்ணாடிகளைக் கழற்றினாலே இவர்களுக்கு பச்சை நிறம், சிவப்பு நிறம் என்றெல்லாம் நிறங்கள் தெரியமாட்டா. தங்களுக்குக் கொஞ்சமாவது அடிப்படை நேர்மை இருக்கிறதா என்று கேட்டுக் கொள்ளாமலேயே, வெட்கம் கெட்டவர்கள்– ஊருக்கு உபதேசமும், சகட்டுமேனிக்கு அறிவுரைகளும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள், அதாவது என்னைப் போல… (படத்துக்கு நன்றி: ‘சவுக்கு;’ இந்த நகைச்சுவைக் கோனார் உரை, ஃபேஸ்புக்கில் வந்திருக்கும் என நினைக்கிறேன்.)
சரி, வசீகரக் கோமாளிகள் நமக்காகக் கோனார் உரையாற்றும் பணி புரிகிறது. ஆனால், அவர்களும் சுயசிந்தனை அற்றவர்கள்தாமே! ஆக, அவர்களுக்கு யார் கோனார் உரை கொடுக்கிறார்கள்? எப்படி ஆணித்தரமாகப் பல விஷயங்களில் கருத்தைத் தெரிவிக்கிறார்கள் – கருத்துச்சிதைவுகளை விரிக்கிறார்கள்? அவ்வளவு மூளையிருக்கிறதா என்ன அவர்களுக்கு?
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (12/n)
இந்தச் சாளரம் எனக்கு ஒவ்வொரு தடவை யோசிக்கும்போதும் மிகமிக மிக ஆச்சரியம் தரும் விஷயம்; உலகில் வேறெந்தப் பண்பாட்டுக்கும் இந்த மாதிரிக் கேவலமான நிலையில்லை என்றுதான் என் எண்ணம்…
சாளரம் #6: தமிழர்களாகிய நாம், நேரடியாக, நேரடியான அல்லது அவதானித்த அனுபவங்கள் / சிந்தனைகள் / கோட்பாடுகள் பெறுவதை விட, அவற்றின் தர்க்கரீதியான வளர்த்தெடுத்தல்களை விட — கடன் வாங்கிய, இன்னொருவரால் ‘கோனார் உரை’க்கப்பட்ட, தரகு வேலை செய்யப்பட்ட விஷயங்களையே விரும்புகிறோம். நமக்கு இம்மாதிரி சாணிக்காகிதப் பதவுரைகளும் விரிப்புரைகளும் இல்லையென்றால், நம்மால் வாழ்க்கையையே நடத்த முடியாது.
இந்தக் கடன்கோட்பாடுகளுக்கு எதிராக ஆயிரம் நிதர்சன, பிரத்யட்ச உண்மைகள், மறுக்கமுடியாத தரவுகள் இருந்தாலும், பின்னவை நம் தமிழுலகில் ஒரு பொருட்டே இல்லை. மேலும், இந்தக் கோனார் உரைகள், வசீகரம் உடையவர்களால் (எகா: திரைப்படக்கார வசீகரக் குளுவான்கள் இன்னபிறர்; பெரியார், அண்ணா போன்ற, இயக்கத் தலைவர்களல்லாத, அரசியல் தலைவர்கள்) விளம்பப்பட்டால் அவை இன்னமும் சக்தி வாய்ந்தவையாக மாறி மக்களின் செயல்பாட்டை, சிந்தனைப் போக்கை மாற்றி, மழுங்க அடிக்கக் கூடியவை.
மேலதிகமாக, இம்மாதிரி வசீகரத் தலைவர்களால் செய்யப்பட்ட உரைகளுக்கு, ஊடகங்களின் அசமனமான குயுக்திக் குவிமையமும் கிடைத்தால் (எகா: “அடிக்கறாங்க, அடிக்கறாங்க...”), நாம் பொதுவாக மூளையைச் சுத்தமாக உபயோகிக்காமல் சுத்தமாகக் துடைத்து ஒரு ஓரமாக வைத்துவிட்டு – கடன் வாங்கிய கருத்துகளில், அவற்றின் திணிப்புகளில் கேள்வியே கேட்காமல், திளைத்துக்கொண்டிருப்போம். (We, the people, specifically us Tamils – prefer inter-mediated experiences to direct experiences – and our interpretations understanding of our life and reactions thereof are, all about how some significant, charismatic OTHERS tell us of THEIR inter-mediated experiences. So, often times we go rather GROSSLY wrong)
நம் தமிழர்களின் அதிசயிக்கவைக்கும் அறியாமையும், அது குறித்து நாம் கொண்டிருக்கும் பெருமையும்
December 1, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (11/n)
சாளரம் #5: தமிழகத்தில் பொதுவாக – மானுடப் பரிணாமம், இனம், மொழி, இயக்கம், வர்க்கம், ஜாதி, போராட்டம், கட்சி, அரசியல், அரசு போன்ற அடிப்படைகளின் மீது சரியான புரிதல்கள் இல்லை; போராட்டங்களும், இயக்கங்களும் – அரசியல் கட்சிகள் போலல்லாமல் இன்னொரு வித ஜந்துக்கள் என்றுகூட நாம் புரிந்துகொள்ள மாட்டோம் – ஆக, கந்தறகோளங்களை நம் புரிதல்களாக அவதானித்து, மகாமகோ கர்வத்துடன், பொறுக்கமுடியாத இறுமாப்புடன் பவனி வருபவர் நாம்.
இதற்கு – தமிழ், திராவிடம், இனம் என ஆரம்பித்த தமிழ்த்தேசிய அரசியல் – பிரித்தானியக் காலனிய வேலை வாய்ப்புகளில் ஒரு சாராரே உட்புகுகிறார்கள் எனக் கருதி, இன்னொரு சாராருக்கும் பங்கு வேண்டும் என ஆரம்பித்து – பின்னர் வேறு எதற்கோ ஆரம்பித்தோம் எனக் கட்டுக்கதைகளை உருவாக்கி, அதற்குப் பின்னர் திராவிட இயக்கமாய் உருமாறி – அதற்குப் பின் தேய்ந்துபோய் கட்டெறும்பு ஆகிவிட்டதும் ஒரு காரணம். (Tamil nationalistic (actually notionalistic) politics – from where it started off – hankering after colonial jobs – is now mainly indulging in the continual institutionalization of sheer lumpen stupidity.)



