வாழ்த்துகள்: எஸ் ராமகிருஷ்ணனுக்கு நொக்கர் (2014) விருது!
January 25, 2014
நொபெல் பரிசையும் புக்கர் பரிசையும் இணைத்து, அறிவியல்-இலக்கியங்களுக்காகவென நிறுவப்பட்ட மிகப் பிரபலமான நொக்கர் விருதை, பல்லாண்டுகளாக, ஆப்பிரிக்காவிலுள்ள லைபீரியா நாடு அளித்து வருகிறது என்கிற அற்புதமான விஷயம், தமிழகத்தில் பலருக்குத் தெரியாது.
மேலதிகமாக, இவ்விருதைப் பெற்ற புத்தகத்துக்கு லைபீரியா, பெரிய லைப்ரரி ஆர்டர் ஒன்றைக் கொடுக்கும் என்கிற விஷயத்தையும் பல தமிழ்ப் பதிப்பாளர்கள் – ராயல்டி ஏய்க்கும் பதர்கள் – மறைத்து விடுவார்கள், என்பதும் பலருக்குத் தெரியாது.
ஒரு மன்னர் வரைந்த ஓவியம் போல இந்த மன்ரோவியா நகரம் காட்சியளிப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம் என, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் நண்பரும், அகழ்வாராய்ச்சியாளரும், மேலதிகமாக ஐ.ஏ.எஸ்-ஸுமான ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் கருதுகிறார். (ஆதாரம்: சிந்துவெளியில் தமிழ் ஊர்ப்பெயர்கள்).
ஆர்பா அவர்கள் அவருடைய கட்டுரையில் – தமிழகத்தின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களான ஆர் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி, பாஷ்யம் ‘சாண்டில்யன்’ அய்யங்கார் போன்றோர்களின் ஆய்வுகளிலிருந்தும், ராஜசிம்ம பல்லவனும் அருண்மொழித் தேவனும் கொள்கைக் கூட்டணி அமைத்து அக்காலத்திலேயே ஆப்பிரிக்கா சென்று குளம் தொட்டு வளம் பெருக்கியதைப் பற்றிப் பேசும் ஜப்பானில் உள்ள கல்வெட்டுகளிலிருந்தும் இந்த லைபீரிய உண்மையைக் கண்டெடுத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார் என்பதை நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-0-0-0-0-0-0-0-0-
நிற்க, நாம் நொக்கர் விருது பற்றித்தானே பேசிக் கொண்டிருந்தோம்? … … சரி. இப்போது ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுக்குச் சொல்லவேண்டும்: கலகத்தமிழ்ப்பிரதிக்காரரான மேதகு சாருநிவேதிதா அவர்களே கூறியிருக்கிறார்கள் – இந்த நொபெல் விருதானது நொபெல் + புக்கர் + கலைமாமணி + பத்மஸ்ரீ + பத்மப்பிரியா + பத்மநாபன்(வியட்நாம் வீடு) இணைந்து ஒருசேர வழங்கப்படுவதற்கு நிகரானது, என்று.
ஆக, இந்த வருடம் எக்ஸைல்டென்ஷியலிஸலீலா– MCCCLXXXXVI பாகம் எழுதி அடுத்த வருடம் சாருநிவேதிதா அவர்களே வாங்கவேண்டிய இந்த விருதை, இவ்வருடம் அவர் விட்டுக் கொடுத்துவிட்டதால், இந்த வருடம், எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் வாங்கி விட்டார்கள். எப்படி இருந்தாலும் ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு இவ்விருது கிடைப்பதில் உள்ளபடியே, திராவிடத் தமிழனான எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான்.
சரி. இப்போது உங்களுக்காக மட்டும் ஒரு ரகசியம். யாரிடமும் இதனைச் சொல்லக் கூடாது, சரியா? ஷ்ஷ்ஷ்… நான் தான் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் பெயரை இவ்விருதுக்காகச் சிபாரிசு செய்தேன்! :-)
ஆகவே, இப்பதிவுகளை வேலைவெட்டியற்றுப் படிக்கும் 50 நபர்களில் ஒருவர் என்கிற முறையில், இவ்விருதை இவர் பெற்றதற்கு நான் எப்படிப் பரிந்துரைத்தேன் என்பதை, உங்களுக்குக் கோடிட்டுக் காட்ட, நான் கடமைப் பட்டிருக்கிறேன்.
-0-0-0-0-0-0-0-0-0-0-
பல தளங்களிலும், துறைகளிலும் தொடர்ந்து அரும்பணிகள் பலவற்றை ஆற்றி, தமிழக வாசகனின், திரைப்பட ரசிகனின் தரத்தை தொடர்ந்து தரதரவென உயர்த்திக் கொண்டு வரும் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு, அறிவியல் மீது – மேலும் குறிப்பாக உயிரியல் மீது இருக்கும் விருப்பத்தையும், அதனைப் பற்றிய அபரிமிதமான ஞானத்தின் ஆழமும் பல்நோக்கு வீச்சும் இருப்பதை, பலர் அறிய மாட்டார்கள். ஆக, இதனைக் கண்டுபிடித்து, உங்களுக்கு அளிப்பதில் உள்ளபடியே மிகவும் பெருமைப் படுகிறேன்.
வுல்ஃப் டொடெம், வுல்ஃப் டொடெம் என்கிற ஒரு சைனாக்கார நாவல் வந்து, அதனைப் படித்ததாகச் சொன்னவர்கள் கண்டமேனிக்கும் எழுதி, கருத்துதிர்த்து, அந்த நாவலைப் படிக்காதவர்களையெல்லாம் கலக்கு கலக்கு என்று கலக்கிக் கொண்டிருந்தபோது — நம் தமிழைக் கூறு போடும் நல்லுலகிலும் பலர் அதனைச் சிலாகித்தும் கடுமையாக விமர்சனம் செய்தும் எழுதி, தங்கள் இருப்பை நிலை நாட்டிக் கொண்டிருந்தனர்.
-0-0-0-0-0-0-0-
இந்த சமயத்தில், பத்தோடு பதினொன்றாக ஒரு பொத்தாம்பொதுவான விமர்சனம் எழுதாமல், எஸ்ரா அவர்கள் — ஓநாய்களின் அருமைபெருமைகளையும் அவற்றின் குணாதிசியங்களைப் பற்றியும் மேலதிகமாக எழுதி, ஓநாய்க் குலத்துக்கே ஒரு மகத்தான பணி செய்திருக்கிறார் என்றால் மிகையாகாது. இந்த அளப்பரிய சேவைக்காகத்தான் எஸ்ரா அவர்கள் அந்தப் பெருமைவாய்ந்த நொக்கர் விருது பெற்றிருக்கிறார்கள்.
அவருடைய அருமையான கட்டுரை இங்கே: ஓநாய்கள் காத்திருக்கின்றன.
இந்த எஸ்ரா கட்டுரையிலிருந்து சில வரிகளையும், அதற்கான எஸ்.ராமகிருஷ்ணதாசன் அவர்களுடைய பொழிப்புரையையும் (சில எடுத்துக்காட்டுகளாக மட்டும்) கொடுத்திருக்கிறேன்.
“ஒநாய்கள் தனக்கென தனித்துவமான வாழ்வியலைக் கொண்டிருக்கின்றன”
ஏன், அவை தமக்கென கவித்துவமான பின்நவீனத்துவ கட்டுடைப்புகளைக் கூடச் செய்து கொள்கின்றன. தங்களுக்கென ஒரு செவ்வியல் மரபையும், தன்னளவில் முழுமையடைந்த தொன்மங்களிலாலான தத்துவ நீட்சியையும் பெற்று நீண்ட நெடுமரங்களாக காலத்தை வென்று கொண்டு மௌனசாட்சியங்களாக இருக்கின்றன.
வாழக்காய்கள் தன்னளவில் வாழக்காயியலைக் கொண்டிருப்பது போலவே, ஒநாய்கள் ஒநாயியலைக் கொண்டிருக்குமோ? தமிழ ஓநாய்கள் ஒநாயியலைத் தொடர்ந்து ஒநாயிசை, ஓநாடகம் என்று பண்பாட்டு நீட்சிகளைக் காணுமோ?
“மனிதர்களோடு ஒநாய்கள் உண்மையில் அன்பு கொண்டிருக்கின்றன. அதன் தோற்றமே அதை விட்டு நம்மை விலக்கி வைத்திருக்கிறது.”
ஏன், திருட்டு டிவிடியில் நான் பார்த்த பாரதிராஜாவின் ‘ஓய்வுபெற்றவர்கள் அலைவதில்லை’ படத்தில் ஒரு தமிழ்ப் பெண்ணைக் காதலித்த ஓநாய் ஒன்று, தன் ஊளையைப் பிய்த்துப் போட்டுவிட்டு காதலில் வென்று பின்னர் சந்தோஷமாக பின்னங்கால் பிடரியில் பட ஓடியதை ஒரு படத்தில் காட்டியிருக்கிறாரே! உண்மையில் தமிழ் சினிமாவின் தோற்றமே, ஓநாய்களை விலகி ஓடச் செய்கிறது.
நான் தரவிரக்கம் செய்து பார்த்த இன்னொரு படத்தில் (இதுவும் பாரதிராஜா படம்தான் – ‘ஊளை பழசு’) சத்யராஜ் ஓநாயாக உருமாறி திரை ரசிகர்களைக் கடிக்கும் காட்சி, காணக்காண உவகை தருவது.
“தெருநாய்கள் போல காரணமில்லாமல் ஒநாய்கள் குலைப்பதில்லை. அவை மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கின்றன. வாழ்வைப் போராடி வெல்கின்றன,”
இதனால் யாவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்:
1. தெரு நாய்கள் (=என்னைப் போன்றவை) காரணமில்லாமல் குரைக்கும், மன்னிக்கவும் குலைக்கும்.
2. ஓநாய்கள் காரணத்தோடு குலைக்கும், மன்னிக்கவும், குரைக்கும்.
3. ஓநாய்கள் பேசாமல் இருக்கின்றன. ஏனெனில் அவைகளுக்குப் பேருரைகள் கொடுக்க முடியாது. ஒருகால் அவை உம்மணாமூஞ்சிகளாகவும் இருக்கலாம்.
4. அய்யய்யோ! ஓநாய்கள் மௌனமாக இருக்கின்றன. மௌனமும் பேசாமலிருப்பதும் வேறுவேறல்லவா? ஆக அவை பேசிக் கொண்டிருக்கின்றன. அவைகளுக்கும் பேரூளைகள் இடவேண்டுமாம்.
5. அம்மாடியோ! ‘ஊளையிற் பெருஒலி யாவுள’ என்று திருவள்ளுவ ஓநாயனாரே வள்ளென்று விழவில்லையா?
6. ஆக, ஓநாய்கள் பேச மட்டும் முடியாமலில்லை. அவைகளால் பாடவும் முடியாதாம்! வெட்கக்கேடு! இதனைக் கேட்பாரில்லையா!!
7. வாழ்வு என்பது வாழப்படவேண்டியதில்லை. வெல்லப் படவேண்டியது. இந்த விஷயத்தில் ஓநாய்கள் சூப்பரோசூப்பர். அவை மாமிசத்தை மென்று கொண்டே, வாழ்வை வென்றுகொண்டே இருப்பவை.
-0-0-0-0-0-0-
அப்பப்பா! எவ்வளவு அறிவியல், ஓநாயியல், வாழ்வியல் உண்மைகள்!! எப்படித்தான் எஸ்ரா அவர்கள் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டாரோ! எப்படித்தான் திகட்டத் திகட்ட நமக்கு ஊட்டுகிறாரோ!
நாம் பெற்ற பேறுதான், இப்படிப்பட்ட பல்துறைபண்டிதர்கள் தமிழில், நமக்காக எழுதவந்தது… ஆஹா!
-0-0-0-0-0-0-0-0-0-0-
வேறு வழியேயில்லை. கறாரான தரவுகளை நான் கொடுத்த பின் நொக்கர் பரிசை எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்குக் கொடுப்பதைத் தவிர அந்த லைபீரியர்களுக்கு வேறுவழியே இல்லாமல் போய்விட்டது.
-0-0-0-0-0-0-0-
வருடம் 2015
மதுரை ஸ்ரீ அழகிரிவிலாஸ் நொபெல் விருதுநகர் கொத்துபுரோட்டா கடை
ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்
யார்டா அது, எஸ்ரா-வா? வாங்க ஸார், வாங்க, நொபெல் விருது வாங்க…
டேய்! எஸ்ரா ஸார்க்கு ஸ்ஸூடா பெஸல்லா ஒர் நோபெல்லு பர்ஸ்ஸூ போட்ரா! ங்கொம்மாள, டேய் அது எலக்கியத்துக்கு இல்லடா, அது வேற எதுக்காகவோடா, சோம்பேறி… சும்மா கேள்வி கேக்காம வேல செய்றா… இன்னாடா?? அவ்ருக்கு ஏற்கெனவே நொக்கர் கொட்த்திட்டாங்களாடா கேப்மாறீ…
அப்போ ஏன் இங்கயும் வர்றாரு? சும்மா பூந்தி கொடுக்றாங்கன்னிட்டு ஓடி வன்டாரோ? யோவ்! இது புரோட்டாய்யா! நொபெல் புரொட்டா… வொன்க்கு இத்த கொட்க்க முட்யாது… மருவாதியா சொன்னா கேட்டுக்கோ, சர்யா??
அவ்ருக்கு பின்னாடீ யாரூ?? ஓஓஓஓ… ஸாரூ நிவேதா அண்ணே! வாங்க, வாங்க!
சரி சார், நீங்க தான் லத்தீ அமெரிக்கான்னிட்டு ஒரு பலானத தமிளன்களுக்கு இன்ட்ரொட்யூசு பண்ணியிருக்கலாம் சார்… பிர்யுது சார்… ஆனா குத்ரேயோடதெல்லாம் நாறுமே… இத்த எதுக்கு தமிள்நாட்டுக்கு எடுத்துக்கினு போனீங்கோ? அங்க இல்லாத கொத்ரேயா சார்?
ஆனாக்க, லத்தீ-க்கெல்லாம் நொபெல் கொட்க்க மாட்டோம் சார்… மொதல்ல நீங்கோ கலேமாமணி வாங்கிக்கினுவாங்கோ சார், அப்பால இங்க பாக்கலாம்… … …
சரி, அது கொட்க்க மாட்டானுங்களா. இப்ப இன்னா செய்றது… ஒர் வேல பண்ணு… எக்ஸைல்டென்ஷியலிஸலீலா– MCCCLXXXXVII பாகம் எழுதி சூடா கொண்டுவா, உடனே வொனக்குதான் 2015 நொபெல் கொத்து புரோட்டா! இப்ப எடத்த காலி பண்ணூ…
இப்ப யார்டா இது? மனுஸ்புட்ரனா? இன்னாடா, மிச்ச எல்லாரும் மாடுக்குப் பொற்ந்தவ்ங்க்ளாடா? யார்டா இவ்ரூ? இன்னாங்கடா பொனெபேரு இத்து… வரவர இன்னாமாரீ பேர்லாம் வெச்சிக்றாங்கோடா இந்த பிரபலங்கோ! பிர்யவே மாட்டெங்துடா…
ஓஓ. இவ்ரு பெர்ய கவிஞ்ச்சரா? ஆங்! வணொக்கோம் சார்! புர்யற மாரீ எள்த்வீங்களா, இல்லகாட்டீ மண்டெகொட்ச்சல் மாரீ எள்துவீங்களா?
என்ன, தேவைக்கு எப்படி வேண்டுமானாலும், குடோனில் சரக்கு இருக்ற வெரிக்குமா? இன்னா சார் பலசரக்குக் கடெயா வெச்சுக்கினு நடத்த்றிங்க?
அய்ய்யோ! ஆனா, நொபெல் கொத்துப் பரோட்டா காலி ஆயிட்டுது சார்… கொஞ்ச்ம மாரீ முன்னாடி வந்துற்றுந்தா ப்ரெச்னேயில்லே… அட்த்த வர்ஷம் ஒங்க்ளுக்குத்தான் சார் … ஆனா வொங்க கிட்ட பொரட் ரட்னா-க்கீதா?
இல்லயா? கவிதேக்குக் கொடுக்மாட்டாங்க்ளாமா…. என்னடா எள்வு விர்து அத்து…
ஆனாக்க சார் நான் பாரட் ரட்னா சொல்லலே பொரட்டு வேலெ பண்ணி சம்பாரிக்கிறத சொன்னேன்… நல்லா பொரட் வேலெ செஞ்சீன்னாக்க கொடுப்பாங்க சார் இந்த பொரட் ரட்னா…
சார், சார்… அளுவாதீங்க சார்… வொங்களுக்கு 2016 புரோட்டாவெ நிச்சயம் கொடுக்கறோம் சார்…
… இன்னாடா இது, இந்த பொலம் பெயராத டமிள் பசங்களுக்கு, விருது அப்டீன்னிட்டு எவனாவது சொன்னான்னா பாஞ்சிக்கினு ஓடி வர்வாங்க போல… பனாதப் பசங்க…
…. யேய்… யேய்… புரோட்டா மண்டையா… ஏண்டா ஓட்றே… எதுக்காப்ல மக்கள் வெள்ளமா வர்தூண்ற… அய்யய்யோ…
ஓசீல விருது கெடக்கிது எவனோ பொரளியக் கெளப்பியிருக்காண்டோய்… அத்தொட்டு அத்தனை டமிளன்களும் பொலம் பெயர்ந்து படை எடுத்திக்கினு வர்ராங்க… அய்யய்யய்யய்யய்யய்யோ!
ஃப்ரீயா கெடக்கிதுன்னாக்க ஃபெனாயிலக் கூடக் குடிப்பாண்டா தமிளன்… ஓடி வர்றாங்க பாரு ஓநாயிங்க மாரீ…
மொதல்ல ஷட்டர போட்றா… ங்கொம்மாள, அப்பால ஓட்றா…
சுபம்.
அலக்கியம், காப்பிக்கடை, இன்னபிற இழவுகள்…
January 25, 2014 at 17:55
போதும் சார். ரொம்ப போரடிக்கிறது. தமிழர்களாகிய நாம்-ஐத் தொடருங்கள்:-)
January 25, 2014 at 22:32
bore
January 25, 2014 at 22:33
you r a very bore person
January 26, 2014 at 06:21
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஆனால்:
1. நான் எவ்வளவு அலுப்பு தரக்கூடியவனாக இருக்கிறேன் என்பதை, நீங்கள் உங்களுடைய தளத்தில் போய் எழுதி – அதற்கு சுட்டி இங்கே கொடுக்கலாம்.
2. டமில் ஆகிய நீங்கள், ஒரளவுக்கு நல்ல ஆங்கிலத்திலாவது எழுத முயற்சி செய்யலாம்.
3. நான் உங்கள் உவகைக்காக எழுதுகிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒத்திசைவு முட்டாட்களுக்காக, அரைகுறைகளுக்காக எழுதப் படுவதல்ல. ஆக, இது உங்களுக்கான கடையல்ல.
4. நான் ஒரு bore person அல்லன், மாறாக, ஒரு wild boar person. உளறிக் கொட்டினால் குதறி விடுவேன்.
5. உங்கள் வாலை (அது உங்களுடைய பின்புறத்தில் இருக்கிறது) சுருட்டிக் கொண்டு எஸ். ராமகிருஷ்ண பஜனை செய்தால், உங்கள் எதிர்காலம் வளமாக வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.
நன்றி, மறுபடியும், மறுபடியும்… மறுபடியும்
பன்றி. ;-)
January 26, 2014 at 19:57
I don’t know who this S.Ramakrishnan is ! But I can read Tamizhhll.
Fantastic blast against some of these guys who have never seen any OOONAAYEE in their life ever, but distribute wisdom by translating any thing that they can lay their hand on!!
January 30, 2014 at 17:56
I don’t know who this S.Ramakrishnan is/////…நீங்கதான் உண்மை தமிழன்.தமிழை படிக்க கூடாது.ஆனால் தமிழை விமர்சிக்க வேண்டும்
January 30, 2014 at 17:55
எஸ் ராவே தேவலாம் எனுமளவு செம மொக்கையான பதிவு .உங்களுக்கு மொக்கை திலகம் விருது வழங்கலாம்