‘இயக்குனர் பரங்கிமலை’ நோ ராவணகம்சன் பெருமையுடன் வழங்கும்: எஸ்ராவுடெ ராவுகள் (புத்தம் புதிய காப்பி!)
January 14, 2014
இதாணு: எஸ் ராமகிருஷ்ண லீலா தரங்கிணி… (3/3)! அறியோ?
லாஸ்ட் போஸ்டாணு, மனசிலாயீ? ஞான் வெறுத்துப்போயி… ஈஸ்வரா!
… ஸார், க்ஷமிக்கண்டே… ஈ ‘எஸ்ராவோடெ ராவுகள்’ — ஞங்ஙள் ஐவி செசி ஸினிமா அல்லா, கேட்டோ? ஞிங்கள குருத்தங்கெட்ட தமிழ் ஸாஹித்யம் பெற்றியாக்கம்.
… … … … பேடிக்கண்டா! … … கரையண்டா ஸாரே! சாயா வெள்ளம் வேணோ?
… … எந்தா ஸார் ஞிங்ஙள் பரையுன்னது? எவ்விடிக்கு போவுன்னு ஸார்?… வெறிதே இருக்கின் ஸாரே… ஸார்! ஸாஆஆஅர்ர்ர்!! aye aegree. zuizide is zimbly no zolution. uou onderztand?
…Besides, ezra is a thick armoured battletank, he can pound away merrily, while you lousy lusers keep complaining. Resistance is futile, yes. :-(
சரி. ஓடாதீர்கள்! இதுதான் (இப்போதைக்கு) எஸ்ரா துர்குணம் அவர்கள் பற்றிய கடைசிப் பதிவு.
எச்சரிக்கை: இது ஒரு ‘நகைச்சுவைக்’ கட்டுரையல்ல. சோககாவியம்தான். :-(
-0-0-0-0-0-0-0-0-
… இப்பதிவுக்கான பாடுபொருள்: எஸ்ரா அவர்களின் காந்திய சாத்வீக ராவுகள். ராவுகால ராவுகள். எமகண்டங்கள்.
உறுபசியுடன் நெடுங்குருதி பொங்க, ராவு பகலாக ராவுகிறார், எஸ்ரா. உழையோ உழை (=தரவிரக்கம்) என உழைக்கிறார். அதன் பலனாக, மொழி மாற்றி, மொழி சிதைத்து, பிலுக்கிக் கொண்டு ஆன்மிகச் சாயங்களையும் நைந்துபோன சொற்றொடர்களையும் வைத்துக் கொண்டு, வாசகர்கள் மீது துளிக்கூடக் கருணையே இல்லாமல், அவர்கள் மேல் மரியாதையே இல்லாமல், அபரிமிதமாக எழுதித் தள்ளுகிறார். அவருடைய தரத்தை விட மோசமான அவருடைய நண்பர்களுடைய எழுத்துகளை ஊக்குவிக்கிறார். ஒரு எழுத்தாளனின் தொடர்ந்த வீழ்ச்சி என்பது பார்க்கச் சகிக்கமுடியாத ஒன்றுதான். தமிழினி மெல்லச் சாகும்.
நீர் தன் மட்டத்தை அடையும். இது ஒரு அறிவியல் உண்மைதான். ஆனால், தன்னால் வரித்துக் கொள்ளப்பட்டுள்ள வாசக தரத்திற்கேற்ப, ஒரு ‘இலக்கிய’ தமிழெழுத்தாளனின் எழுத்தானது பொறுக்கவேமுடியாத படு மட்டத்தை அடையும் என்பது ஒரு தமிழ்க் கலாச்சார உண்மை. எஸ்ரா இந்த படுமட்ட எல்லையையும் மீறிக் கொண்டு, திமிர்ந்திறங்கி அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார் என்பது என் சோகம் கவ்வும் கருத்து.
… ஆனால், அவருக்கு ’கம்பெனி’ கொடுக்க அங்கே பல தமிழ்க் குளுவான் ‘எழுத்தாளர்கள்’ இருக்கிறார்கள்; அவர் தனிமையில் வாட மாட்டார். கவலை வேண்டேல்.
ஒப்புக்கொள்கிறேன், மேற்கண்ட துணிபை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம்: பொறாமை பிடித்த அரைகுறைகள் எஸ்ரா அவர்களைப் பற்றி அவதூறுகளைப் பரப்புகின்றனர். அயோக்கியர்கள். அற்பப் பதர்கள்.
இந்தப் பார்வையிலும் உண்மை இருக்கலாம். எதற்கும் இன்னொரு முறை ரஷொமொன் பார்த்துவிடுகிறேன். :-(
ஹ்ம்ம்… சரி. இப்பதிவில் இரு பாகங்கள் இருக்கின்றன:
- காந்திஜ்ஜி ராஜாஜ்ஜி ராமகிருஷ்ணபஜ்ஜி
- காந்தியைப் பின் தொடரும் கரிய நிழல்
படித்து, துன்புறவும். (என்ன செய்வது, நிலைமை படுமோசமாகத்தான் இருக்கிறது – ஒரேயொரு ஆசுவாசம் கொடுக்கும் விஷயம் என்னவென்றால், இந்த தவணைதான் கடைசியானது; இப்பதிவுகளைப் படிக்கும் பாவப்பட்ட வாசகர்களாகிய உங்களுடைய நிலைமையை நினைத்தாலும் வருத்தமாகத்தான் இருக்கிறது, என்ன செய்வது சொல்லுங்கள்…)
-0-0-0-0-0-0-0-0-0-
காந்திஜ்ஜி ராஜாஜ்ஜி ராமகிருஷ்ணபஜ்ஜி
பஜ்ஜிகளில் பல வகைகள் உண்டு. எத்தனையோ ரயில்களில் ஏதேதோ ஊர்களுக்குப் பயணம் செய்திருக்கிறேன். எத்தனையோ ஊர்களில் எத்தனையோ உணவகங்களுக்குப் போயிருக்கிறேன். எத்தனையோ உணவகங்களில் ஏதேதோ சிற்றுண்டிகள் சாப்பிட்டிருக்கிறேன். சாப்பிட்ட பின்னர் மறுபடியும் ஏதேதோ ஊர்களுக்கு எத்தனையோ ரயில்களில் பயணம் செய்திருக்கிறேன். ஆனால் என்னால் மறக்கமுடியாத ஒரு பயணம் கூட்ஸ் ரயிலில் போனது, அதாவது பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு ஏகத்துக்கும் வயிறு கலங்கி, கூட்ஸ் ரயிலிலேயே போனது…
… … …
பதுரையில் இருக்கும் பருகன் பஜ்ஜி கடை மிகவும் பிரபலமானது.இதில் விதம்விதமாக சட்டினிகளும் கிடைக்கும்.
… … …
… இன்றும் எங்காவது கூட்ஸ் ரயில் போவதைப் பார்க்கும் போது கடைசிப்பெட்டி மீதே கண்கள் போகின்றன, பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு ரயிலில், ரயிலிலேயே போனது ஏனோ நினைவுக்கு வருகிறது. ஏனோ அந்த வசீகரம் குறையவேயில்லை. (ஆதாரம்: கூட்ஸ் பயணம்)
——-
நிற்க (எண்ணெய் சூடாகவேண்டுமில்லையா?), தற்காலங்களில் தமிழ் எழுத்தாளர்கள், தங்கள் சுட்ட கட்டுரைகளை சிறிய காகிதத் துண்டுகளாக நறுக்கி அதனைக் கற்பனைக் கடலைமாவில் தோய்த்து, மறுபடியும் சுட்டு, அவற்றை அழகுறச் சுடச்சுடப் பரிமாறும் அழகேஅழகு என்பதையும் பிரபலமான நீங்கள் உணர்த்திருப்பீர்கள்.
இண்டெர்நெட்டின் – பாய்ப் (பஜ்ஜி ஓவர் ஐபி – BoIP) எனும் புதிய ப்ரோடொகோல் தமிழ் எழுத்தாளர்களுக்கென்றே உருவாக்கப் பட்டதொன்று என்பதை அக்காலத்திலேயே, சங்ககால தூயதிராவிட விஞ்ஞானி ஸ்ரீஸ்ரீ தொல்காப்பியனார் எழுதினாரல்லவா?
… இந்த பாவப்பட்ட காந்தியை, எஸ்ரா அவர்கள் விடவே மாட்டேனென்கிறார். ஏன் இப்படிச் செய்கிறார் என்பது புரியவே மாட்டேனென்கிறது.
சரி… ராஜ்மோஹன்காந்தி அவர்கள் ‘ராஜாஜி: ஒரு வாழ்க்கை’ எனும் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதனுடைய தமிழ் மொழிபெயர்ப்பை ‘கல்கி’ கி ராஜேந்திரன் அவர்கள் செய்ய, வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

ராஜாஜி: ஒரு வாழ்க்கை – புத்தகத்தின் அட்டை; நான் இதனை இரண்டுமுறையாவது படித்திருப்பேன். ஆனால், கி. ராஜேந்திரன் அவர்களின் மொழிபெயர்ப்பை நான் படிக்கவில்லை.
இந்த மொழிபெயர்ப்பை(யும்??) படித்து விட்டு எஸ்ரா அவர்கள் புதியதலைமுறை (=பழையதலைவலி) பத்திரிகையில் ஒரு புத்தக அறிமுகக் கட்டுரை எழுதியிருக்கிறார். அதனைப் பற்றிய ஒரு கீச்சலில் இக்கட்டுரையின் ஒரு பகுதி ஸ்கேன் செய்யப்பட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் இக்கட்டுரை முழுவதையும் படிக்கவில்லை. அதற்கான திராணியும், முனைப்பும் இல்லை. மன்னிக்கவும். ஒரு பானை ராமகிருஷ்ணச் சோற்றுக்கு ஒரு புழுக்கை பதம். ஆகவே.

என். சொக்கன் அவர்களின், இக்கீச்சலின் சுட்டி: https://twitter.com/nchokkan/status/411344076303126528/photo/1 ; பாவம், இந்த சொக்கன் அவர்கள், என்னடா இவன், என்னையும் சகதியில் இழுக்கிறான் எனக் கோபிக்காமல் இருந்தால் சரி… ஆனால் அவர் எஸ்ரா மீதான அபிமானத்தால் தான், நல்லெண்ணத்துடன்தான் இதனைக் கொடுத்திருக்கிறார் என நினைக்கிறேன். இருந்தாலும், அவரை மன்னித்தும் விடுகிறேன்! ;-)
எஸ்ராத்தன மேலோட்டமாகப் பார்த்தால், இந்த பார்வையில் தாய்மொழி மீதான பாசம் பொங்குவதாகத் தென்படுகிறது அல்லவா?
இப்போது, கீழே ராஜ்மோஹன் காந்தி அவர்களின் ஒரிஜினல் புத்தகத்தின் ஒரு பக்கத்தின் ஸ்கேன்-ஐக் கொடுக்கிறேன்; இதில்தான் எஸ்ரா அவர்களை உலுக்கிய பகுதி இருக்கிறது. மேற்கண்டதையும் (=கண்டதையும்) கீழ்கண்டவற்றையும் நீங்களே ஒப்பிட்டுக் கொள்ளவும்.
மேலோட்டமாகப் பார்த்தால், அப்படி என்னதான் மோசமாகச் செய்துவிட்டார் எஸ்ரா என்றுதான் தோன்றும். ஆனால்…
நான் காந்தி எழுத்துகளின் தொகுப்பில் – சுமாராக 90%த்தினை பல்வேறு காரணங்களுக்காகப் படித்திருப்பவன் (1oo பாகங்களை / புத்தகங்களையுள்ளடக்கியது இது – சுமார் 50000 பக்கங்கள்; நான் படித்தவை இறந்தமரங்களாலானவை – ஆனால் இத்தொகுப்பு முழுவதும் இணையத்தில் திருடப்படாமல் படிக்கக் கிடைக்கிறது இங்கே!) என்கிற முறையிலும், ராஜாஜியைப் பற்றிய ராஜ்மோஹன்காந்தியின் புத்தகத்தைப் படித்துள்ளவன் என்கிற முறையிலும், முக்கியமாக, அந்தக் கடிதத்தின் முழு வடிவத்தை காந்தி தொகுப்பிலிருந்து படித்தவன் என்ற திமிரிலும், சொல்லவருபவை யாவையென்றால்:
- பாபுஜியிடம், ‘ஸ்வராஜ்’ எனும் கருத்தாக்கத்தைச் சுற்றி பல விதமான, பல கோணங்களிலிருந்து பார்க்கவேண்டிய விஷயங்கள், இருக்கின்றன. ஆழமும், வீச்சும், அமைதியும் – இவை அனைத்துக்கும் மேலாக, அடிப்படை நேர்மையும் நிரம்பியவை அவை. நிச்சயம், அவை ஆரவாரங்களால், ஆர்ப்பரிப்புகளால், அதிர்ச்சி தரும் சொல்லாடல்களால், கண்டனங்களால், வெறுப்புமிழ்தல்களினால் ஆக்கப்பட்டவையல்ல.
- தாய்மொழி பற்றி, பிறமொழிகள் பற்றி, கல்வி பற்றி என்ன நினைத்திருக்கிறார் இந்த மனிதர் என்பதை – இவருடைய குஜராத்தி மீதான கருத்துகளை வைத்துக்கொண்டு பார்த்தாலே புரிந்து விடும். அவர் மொழி அபிமானி. மொழி வெறியரல்லர். வாயோர நுரை தள்ளும் வெறிகொண்ட அற்பரல்லர் அவர். தம் குழந்தைகளுக்கு ஒரு நீதி, பிறருக்கு அநீதி என்று அயோக்கித்தனமாக, ‘லோகாயதமாக’ நடித்தவரல்லர் அவர். மிக மரியாதையுடன் பிற மொழிகளை அணுகினவர். பல பிறமொழிகளைக் கற்றவர். சிலவற்றில் புலமை பெற்றவர். வாழ் நாள் முழுவதும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருந்தவர்.
- சரி. மேற்கண்டவையெல்லாம் தெரிந்து கொள்ளாமலிருந்தாலும் – மேற்படி ஸ்கேன்களைப் பார்த்தால் மட்டுமே எஸ்ரா கைவண்ணம் இளிப்பது தெரியவரும்.
- தமிழன்னை கிமிழன்னை என்றெல்லாம் புத்தகமூலத்தில் இல்லை.
- ‘பொதுஜனங்களிடையே ஊழியம் பண்ணவேண்டியவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்’ இல்லை.
- ‘சத்தியம் செய்து தரவும்’ என்றெல்லாம் இல்லவேயில்லை.
- ’உங்களை நினைத்து என்னால் தூங்கமுடியவில்லை’ என்று இல்லை; ஆனால் இருப்பது: ‘இப்போது காலை 3.30. இரவு 12 மணிக்குப் பின் நான் தூங்கவேயில்லை. நீங்களும் அதற்கு ஒரு காரணம்.’
- ‘இதற்கு எனக்கு விளக்கம் தரவும்’ என்று இல்லவேயில்லை.
- இக்கடிதம் ஒரு ‘கண்டனக் கடிதம்’ இல்லை.
- ‘தாய்மொழியைப் புறக்கணித்துவிட்டு, பொதுவாழ்வில் ஈடுபடக்கூடாது’ என்று இல்லவேயில்லை.
- இம்மாதிரிக் கருத்து ‘உண்மை’ என்றும் சொல்லப் படவில்லை. ‘முகத்தில் அறைவது’ போலவும் சொல்லப் படவில்லை.
- ஆக, எஸ்ரா அவர்கள் எழுதிய ஒரு வரியும் சரியில்லை, அவர் புரிதலும்(!) கந்தறகோளம் – இவருடைய கருத்துகள் அரைகுறைத்தனத்திற்கு அப்பாற்பட்டு, அயோக்கியத்தனமாகவே இருக்கின்றன என்பது தான் உண்மை. வெட்கம், வெட்கம்.
தன்னுடைய அரைவேக்காட்டுக் கருத்தையெல்லாம் காந்தி மீது கவிழ்த்திவிட்டு மினுக்கிக் கொண்டு பவனி வருவது அற்பத்தனம் அன்றி வேறென்ன? இந்த அழகில் ’காந்தியோடு பேசுவேன்’ என்று ஒரு அற்பச் சிறுகதைத் தொகுப்பு. அதற்கு ஒரு அற்பப் பதிப்பாளர். வெறுப்பாக இருக்கிறது.
ஒரு முடிக்கும் சிரத்தையில்லை. செயலூக்கமில்லை. நேர்மையில்லை. தமிழர்கள் பெரும்பாலும் கந்தறகோள முட்டாள்கள் என்பதால், இந்த இலக்கியக் கோமாளிகளும் பதிப்பகச் சூத்தாட்டிகளும் தம்பட்டம் அடித்துக் கொண்டு பவனி வருவது – அவர்களுக்கு சுளுவாக இருக்கிறது.
ஆனால் என்ன, தொடர்ந்து சுளுக்கெடுக்கப் பட்டால், விஷயங்கள் சரிசெய்யப்படலாம்…
இன்னொன்று… இந்த புதியதலைமுறை பத்திரிகைக்காரர்கள் – இவர்களும் என்ன பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. யாராவது ‘பெரிய ஆள்’ எதையாவது உளறிக் கொட்டினால், ஒரு இழவையும் சரிபார்க்காமல் அப்படியே போட்டுவிடுவார்கள் போல. இதில் இருக்கும், துணை, இணை, குட்டி, பெருசு, ரொம்பப் பெருசு, மேலாண்மைப் பெருசு போன்ற ஆசிரியக் குஞ்சாமணிகளெல்லாம் தெலுங்குப்பட விமர்சனம் எழுதுவதில், தமிழனை மேலெடுத்துச் செல்வதில் படுபிஸியாக இருப்பதால் இந்தப் பிரச்சினையோ என்னவோ!
நான் மாலன் அவர்களை (இன்னமும்) மிகவும் மதிப்பவன். இவர் ஆசிரியராக இருக்கும் ஒரு பத்திரிகையில் எப்படி அரைவேக்காடுகளின் சாம்ராஜ்யம் நடந்து கொண்டிருக்கிறது? இது எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை.
குறிப்பு: பஜ்ஜி உடம்புக்கு நல்லதல்ல. ராமகிருஷ்ண பஜ்ஜி மனதுக்கும், மூளைக்கும் நல்லதல்ல. ஆமென்.
-0-0-0-0-0-0-0-0-0-
காந்தியைப் பின் தொடரும் கரிய நிழல்
காந்தியைப் பின்தொடர்வது – என்ற கட்டுரையையும் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள், சில காலம் முன், எழுதியிருக்கிறார். படித்துப் பார்த்தால் மிகவும் சோகமாக இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும், காந்தியைப் பற்றி ஏறக்குறைய ஒன்றுமே தெரியவில்லை என்று அங்கலாய்க்கிறார்.
ஹ்ம்ம்… ஒரு சோம்பேறித் தேங்காய்மூடி வாத்தி என்கிற முறையில் வெட்கத்துடன் இந்த உண்மையை, நான் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், எஸ்.ரா போன்றவர்கள் காந்தியின் குரலை லௌட்ஸ்பீக்கரில் ஒலிக்கச் செய்வதற்கு அப்பாற்பட்டு என்ன செய்கிறார்கள் என்பது தெரியாததற்கு என் அறியாமைதான் காரணம் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
சரி – இவர் கட்டுரைக்குத் திரும்பிவருகிறேன். இவருடைய அங்கலாய்ப்பு புரிகிறது. ஆனால், இவர் அவர்களுடைய நகைக்கத்தக்க அறியாமையைப் போக்குவதற்கு (அறிவுசார் கேள்விகளாகக் கேட்பதை விடுத்து, ‘ நீ என்ன செய்தாய்’களுக்கு அப்பாற்பட்டு) என்னதான் செய்தார் என்றுதான் சொல்லவேயில்லை. எம்டிஎம் அவர்கள் கூட ஒரு பதிவில் இதனைப் பற்றி ஒரு மெடா-அங்கலாய்ப்பு செய்திருந்தார்.
காந்தியின் குரலைப் பற்றிச் சொல்கிறார் எஸ்ரா:
“எளிமையான ஆங்கிலத்தில், மெதுவான குரலில், உணர்ச்சிகளை துல்லியமாக வெளிப்படுத்தும் அவரது குரல் அவர்களை ஆச்சரியப்படுத்துகிறது.”
அய்யா, உணர்ச்சிகளைத் துல்லியமாகவே கத்திக் கத்தி வெளிப்படுத்துபவர்கள் திராவிடப் பேச்சாளர்கள். ‘உணர்ச்சி’ எனும் வார்த்தையை நீங்கள், emotion என்பதையோ அல்லது feeling என்பதையோ குறிப்பதாகத்தான் கருதுகிறேன். இவை இரண்டுமே அவர் பேச்சுகளில் இருந்ததில்லை. அவர் வெகு சில சமயங்களிலேயே குரலை உயர்த்துவதைக் (loudness) கூடச் செய்திருக்கிறார்.
நீங்கள் காந்தியின் பேச்சுகளைத் துல்லியமாகக் கேட்டிருப்பீர்கள் என்கிற முறையில் – நீங்கள் என்ன எழுதியிருக்கவேண்டும்: ‘மெதுவான குரலில் கருத்துகளை துல்லியமாக வெளிப்படுத்தும்…’ என்றுதானே?
காந்தி உணர்ச்சிவசப்படப் பேசி, அவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியதாக நான் இதுவரை அறிந்திலேன். அப்படி ஏதாவது இருந்தால், நான் இப்படி எழுதுவதை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அதுவரை – நீங்கள் எழுதுவதுதான் என்னை ஆச்சரியப் படுத்துக் கொண்டிருக்கும்.
ஏன் இப்படி, ஒரு தொடர்பும் இல்லாமல், ஒரு முகாந்திரமும் இல்லாமல் வார்த்தைகளை, சொற்றொடர்களை — தகரடப்பித்தனமாகப் பிரயோகிக்கிறீர்கள்? என்ன அவசியம் இதற்கு??
ஆம். எனக்குப் புரிகிறது. புதுமைப்பித்தன் அவர்கள் ஒரு சமயம் சொன்னது போல்: வார்த்தைகளை வைத்துக்கொண்டு ஜனங்களை ஏமாற்றுவது ரொம்ப லேசு. [ நினைவிலிருந்து இந்த மேற்கோளை எழுதியிருக்கிறேன் – தவறிருந்தால் திருத்திக் கொள்கிறேன்]
சரி, ஆசிரியர்களைப் பற்றிய உங்களுடைய ஒரு அங்கலாய்ப்பு:
“ஆசிரியர்களில் பெரும்பான்மையினர் தனது பாடப்புத்தகத்தில் உள்ள தகவல்களுக்கு வெளியே ஒன்றையும் அறிந்து கொள்வதில்லை, கற்றுத்தருவதில்லை, இணையம் உலகையே தனது உள்ளங்கைக்குள் வைத்திருக்கிறது, ஆனாலும் அவற்றை கல்விநிலையங்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவேயில்லை
காந்தி குறித்த திரைப்படங்கள், ஆடியோ, வீடியோ பதிவுகள்,புத்தகங்கள், இந்திய சுதந்திர தினம் பற்றிய பிபிசி ஆவணக்காட்சிகள், என எத்தனையோ இன்று கிடைக்கின்றன, இவற்றை வகுப்பறைக்குள் கொண்டுவந்து மாணவர்களிடம் அறிமுகம் செய்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை,”
அய்யா, இணையத்திலிருந்து கண்டமேனிக்கும் டவுன்லோடு செய்து வுல்டா பண்ணி, கந்தறகோளமாக முழி பெயர்த்து — புத்தகம், கட்டுரை, பேருரை, பதிவு, விமர்சனம் என்றெல்லாம் முனைவதற்கு, பொதுவாக ஆசிரியர்களுக்கு நேரமும் முனைப்பும் மூளையுமில்லை என்பதை, மகாமகோ எழுத்தாளரான நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
ஆனால், தங்களுடைய எழுத்துகளில் உள்ள தகவல்களுக்கு அப்பாற்பட்டு, அவற்றுக்கு வெளியே — பாவப்பட்ட, பரிதாபத்துக்குரிய முட்டாள் வாசகர்களாகிய எங்களால், வேறு ஏதாவது அறிய முடிகிறதா? ஏதாவது எங்கள் கற்பனைக்கு விடல், கேள்வி கேட்கப் படல், ந்யூவான்ஸன்ஸ் (nuances) என ஏதாவது இருக்கின்றனவா? அலுப்புத் தரவைக்கும்படியான பாசாங்குகளாலான வெறும் நேரடித்தன்மைதானே, அதுவும் கேவலமான போலித்தன்மையுடன்தானே இருக்கிறது உங்கள் எழுத்துகளில்?
இங்கு உங்களுக்கு, என் அபிமானத்துக்குரிய வின்ஸெண்ட் கேன்பி அவர்களின், திரைப்படம் குறித்த ஒரு பார்வையைக் கொடுக்க வேண்டும்; இது உங்கள் எழுத்துகளுக்கும் பொருந்தி வரும். movie என்பதை எஸ்ரா எழுத்து என்று மாற்றி விட்டாலே போதும்!
“The mediocre எஸ்ரா எழுத்து
movieexplains everything twice and always means exactly what it says. It waves its sincerity aloft like a truce flag. It leaves no questions unanswered. It tells you exactly where you should stand in relation to its characters and its subject matter. It is frequently soothing because it tells you that you are right. Then, too, it can be like an unrelenting host who holds you captive until you finish every last morsel on the plate. But it tends not to stick in the memory because there’s nothing there to wonder about.”
– – Vincent Canby (1924 – 2000)
ஓப்புக் கொள்கிறேன். உங்களுக்கு உங்கள் வாசகர்களாகிய எங்களுடைய தரத்தைப் பற்றியும், புரிந்துகொள்ளக்கூடிய அளவுகளைப் பற்றியும் தெரியும் – ஆக, நீங்கள், சராசரி தேசாந்திரியான நீங்கள் – ஒரு சராசரித்தனத்தில் அமிழ்ந்திருக்கும் சராசரி வாசகனுக்காக சராசரித்தனமாகக் கும்மியடித்து எழுதுகிறீர்கள்.
அதேபோலத்தானே சராசரி ஆசிரியர்களாகிய நாங்கள், திராவிடக்காயடிக்கப்பட்ட அரைகுறைச் சமூகத்தின் சராசரி மாணவர்களுக்கு, சராசரித்தனமாகவே கற்றுக் கொடுக்கிறோம்? இதில் என்ன – சொற்குற்றம், பொருட்குற்றம் காண்கிறீர்கள் நீங்கள்??
நமக்குப் பொதுவான சராசரித்தனம், அசர வைக்கும் மிடியோக்ரிட்டி, நம்மை நண்பர்களாகத் தானே ஆக்கவேண்டும்? (ஆனால் இல்லாத கடவுளுக்கு நன்றியுடன், நாம் நண்பர்களில்லை! அப்பாடா!)
… என்னைப் பொருத்தவரை, காந்தியை ஒரு பின் தொடர்ந்தாலும், தமிழக் குண்டீசியோ அல்லது சின்னக்குத்தூசியோ தொடர்ந்தாலும் பாதகமில்லை – நாம் காந்தியை எட்டிப் பிடிக்கிறோம் பேர்வழி என்கிற அவசர பஜனை முனைப்பில், இக் கூர்மையான கம்பிகளின் மீது நம் பாதங்களை வைக்காமல் இருந்தால் போதும். இல்லாக்காட்டீ டெட்டனஸ் வந்துடும், ஜாக்கிரதை.
ஆகவே, மேதகு எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு, என்னுடைய பரிதாபகரமான, வெள்ளை வெள்யாட்டுச் செச்சைத்தன பகிரங்க விண்ணப்பம்:
ஐயன்மீர்! தயவு செய்து காந்தியைப் பின் தொடர்வதை விட்டுவிடுங்கள். அவருக்கு ஏற்கனவே இருக்கும் அரைகுறை திராவிடத் தொடர்வதைகளே (எடுத்துக்காட்டு: மேதகு மதிமாறன் அவர்கள்) போதும். நீங்களும் அவரை, மேலதிகமாகத் தொடர்வதை செய்யவேண்டாம் –
ஆனால், அவருக்கு அவரை மிகவும் பிடித்த காயாக இருப்பதால், அவரை பொறியல் செய்து கொடுக்கலாம் என்பதை உங்களுக்கு நினைவூட்டவும் கடமைப் பட்டிருக்கிறேன். அடுத்த முறை வர்தா போகும்போது, அவசியம் அவரை கொண்டு செல்லவும். நன்றி. ஆனால், அவரை விட்டுவிடவும். மிக்க நன்றி.
-0-0-0-0-0-0-0-
நம்முடைய முன்னணித் தமிழ் எழுத்தாளர்களில் பலர், ஏன் இப்படி நடிப்புச் சுதேசிகளாக இருக்கிறார்கள்?
வாசகர்களாகிய நாம், எப்படி அற்ப எழுத்துகளிலேயே திருப்தி அடைந்து விடுகிறோம்?
ஏன் நம்மால், விமர்சனங்களைக் கேட்டுப் பெற்று, நம்மை சதா முன்னேற்றிக் கொள்ளும், மேலெழுப்பிக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்திக் கொள்ள முடிவதில்லை?
அற்பத்தனத்தை, அற்பத்தனம் என்று சொல்லமுடியாமல் – நாசூக்கு பார்த்து, ஏன் நாம் சராசரித்தனத்தை பிறரிடத்தில் தொடர்ந்து வளர்க்கிறோம்? இந்தப் போக்கு, நாமெல்லாம் பொதுவாகவே சராசரிகள் மட்டுமேதான் என்பதால்தானோ? நம்மைக் காப்பாற்றிக் கொள்ள, பிறரைச் சுட்ட முனைவதில்லையோ?
கேள்விகள், கேள்விகள்…
-0-0-0-0-0-0-0-0-
கடைசியில்… தமிழர்கள் அனைவரும் நெடுநாள் சந்தோஷமாக, சராசரித்தனமாக இறந்துகொண்டே இருந்தனர்…
<’எஸ்ராவுடெ ராவுகள்’ படம் முடிந்தது; அனைவரும் வீட்டிற்குப் போகலாம்>
- அலக்கியம், காப்பிக்கடை, இன்னபிற இழவுகள்…
- போங்கடா, இதுதாண்டா *&#@! பதிவுகள்
- தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??
January 14, 2014 at 22:09
எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்தின் ரசிகன் என்ற முறையில் உங்கள் பதிவுகள் ஒரு நல்ல விமர்சனமாக எடுத்து கொள்ளப்படும் என்று நம்புகிறேன். உங்களின் இந்த மூன்று பதிவுகளை படிக்கும்போது, மூளையின் ஒரு மூலையில் எங்கேயோ எப்போதோ கேட்ட குரல்:
“கச்சேரியில எங்கேயோ ஒரு மூலையிலே அனுமார் மாதிரி பரமரசிகனா ஒருத்தன் உக்கார்த்திண்டிருப்பன். அவன்னா ஹைகோர்ட் ஜட்ஜ்! அவன் எங்கேயாவது மூஞ்சியை சிணுக்கப்போறானேன்னு மனசுலே பயம் இருக்கணும். அவனைப் பார்த்தா பரதேசி மாதிரி இருக்கானோ, எப்பிடியிருக்கானோ, போலீஸ்காரன் உடுப்பைக் கழட்டிவிட்டு துப்புத்தேட வந்திருக்காப்பல வந்திருப்பன்.அதனால பரம ஜாக்ரதையா இருக்கணும். நமக்கு எது சத்யம்னு பட்டுதோ அதைப் பாடறோம். நாம சத்தியத்துக்கு கட்டுப்பட்டு அதன் ரூபத்தை அறிஞ்சு ஆராதிச்சா எந்த பய ஒரு வார்த்தை சொல்ல முடியும்கறேன். சொல்ல முடியுமாடா, சாம்பா.”
– ரங்கண்ணா ( தி. ஜானகிராமனின் “மோகமுள்”)
நன்றி “ராமண்ணா” :-)
January 15, 2014 at 07:45
அன்புள்ள யயாதி!
தி.ஜா! :-)
என்னை அனுமார், பரதேசி என்று அழைப்பதற்கு மிக்க நன்றி. கருணாநிதித்தனமாகச் சொல்வதானால், அனுமார் மீதும் (பண்டாரப்) பரதேசிகளின் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருப்பவனே நான் தான். ;-)
ஆனால் எஸ்ரா அவர்களின் ‘பரமரசிகனாக’ நான் என்னைக் கருதவில்லை.
நல்ல இலக்கியத்தின் (அல்லது எதுவானாலும் சரி) ரசிகன், ஒரு வாசகன் மட்டுமே.
மோகமுள்… யமுனா! (அந்தக் காலத்தில்) எங்கெங்கு காணினும் யமுனாவடா! :-))
January 15, 2014 at 08:03
‘இயக்குனர் பரங்கிமலை’ நோ ராவணகம்சன் WHAT IS THIS. KINDLY INFORM
—>>> அய்யா அனானிமௌஸ் கேபிடலிஸ்ட் எலியாரே!
உங்கள் கீபோர்டில் இடது ஓரத்தில் கேப்ஸ்லாக் என்று ஒன்று இருக்கும். அது உங்கள் தொப்பியை அதன் இடத்தில் பத்திரமாக வைத்து பாதுகாப்பதற்காக இல்லை என்பதை அறிந்து, அதனைக் கொஞ்சம் சும்மா விடவும். இப்போது கீபோர்ட் என்றால் உங்கள் சாவிகளை பத்திரமாக மாட்டும் பலகை என்று புரிந்து கொள்ளவேண்டாம்…
ஏண்டா, கள்த்தறுக்கிறீங்க! நான் எள்தறத(!) ஒரு அம்பது பேர் பட்ச்சா போருண்டா! ஏண்டா எளவெடுத்தவனுங்க, சோம்பேறிக் கூவானுங்கெல்லாம் வந்து இப்டீ தொந்த்றவ் செய்றீங்க? ஒங்ளுக்கு பயந்துதாண்டா நான் ஃபேஸ்புக், டிவிட்டர்-லல்லாம் வர்ரதே இல்ல!
ஒங்க மண்டேல போட்ற தொப்பிக்குள்ள இருக்கற மசுருக்குக் கீள, மண்டையோட்டுக்குள்ள, மூள, மூளன்னிட்டு ஒரு காலிஃப்லவர் வஸ்து அந்தப் பரதேசி ஆண்டவன் வெச்சிக்றாண்டா! அத யூஸ் பண்ணுங்கடா, முட்டாக் கூவானுங்களா.
யெயக்குனர் இமயம், இயக்குனர் கிலிமஞ்சாரோன்னிட்டு கண்டகண்ட பின்வழியாவ விடுனர்கள்ளாம் ங்கோத்தா, பட்டப்பேர் வெச்சிக்கினு திரியாரானுவோ! நான் என் ரெவலுக்கு பரங்கிமல உயரந்தாண்டா. அத்தொட்டு தாண்டா நான் இயக்குனர் பரங்கிமல… டேய், இப்போ பரங்கிமல – அப்டீன்னாக்க என்னன்னிட்டு கேக்காதடா…
ராவணகம்சன் பத்தீ இப்போ! பொர்க்கீ! இத்தகூட நான் சொல்லித் தர்ணுமாடா தாயோளி… ராவணகம்சன் ராமகிருஷ்ணனுக்கு எதுக்காப்ல பதம்டா! ராவணன் x ராமன், அப்பால கிருஷ்ணன் x கம்சன் டா… இப்ப யாரு இந்த ராவணன்னிட்டு தெர்யணும்னாக்க, அந்த வீரமணிக்கிட்ட ஒம்மணிய ஆட்டிக்கிட்டே போய்க் கேளு…
எஸ்ஸூக்க்கு எதிர்ப்பதம் நோ! சர்யா? இப்ப சொல்லு யுவகிருஷ்ணா-வுக்கு எதிர்ப்பதம் என்னன்னிட்டு…
கண்டகண்ட சோம்பேறிச் சொம்பு கள்தேங்களெல்லாம் ஒத்திசைவை படிக்க ஆரம்பிச்சுட்டாங்களேன்றத நெனச்சா, மன்ஸூ வுட்டுப் போய்டுச்சிரா மவனே…
ஏண்டா, கொஞ்சம் கூட ரோசீக்கவே மாட்டீங்களா? பொறம்போக்குங்களா… ஒங்ளுக்காவதாண்டா அந்தக் காலத்லேயே பொறம்போக்குநானூறு எள்தினாங்க, அத மொதல்ல படீங்கடா…
ரோசீக்காமத்தான் இர்ப்பேன்னாக்க, எஸ்ரா தளத்லேயே ஒட்டிக்கினு பொளகாங்கிதம் அடஞ்சிக்கினு இருங்கடா, சோமாறீங்களா…
இந்த அளகுல kindly inform. ங்கொம்மாள, ஒங்களயெல்லாம் உசுரோட எரிக்கணும்டா. அது தாண்டா என்னோட final solution.
January 15, 2014 at 08:27
மன்னிக்கவும், நான் சரியாக எழுதவில்லை – நான் உங்களை எஸ்ராவின் பரமரசிகன் என்ற ரீதியில் சொல்லவில்லை :-) சொன்னது எல்லாம் சாம்பா என்ற யயாதிக்கும் மற்றும் எல்லா கலை ரசிகர்களுக்கும்தான் – நீங்களும் ரசிகன் என்ற ரீதியில் இதில் ஐக்கியமாகலாம், விருப்பபட்டால் :-)
ஆனால், இந்த பதிவில் ராமசாமியின் குரல், எனக்கு ரங்கண்ணாவின் குரலாகதான் கேட்டது – அதனால்தான் நீங்கள் “ராமண்ணா” :-)
—–>>> அய்யாயயாதி, :-)
நானும் கிண்டலாகத்தான் சொன்னேன். நீங்கள் சரியாகத்தான் எழுதியிருக்கிறீர்கள். நான் ஒரு ‘எளிதில் வேலைவெட்டியற்றுப் புண்படும்’ அரைகுறையல்ல. கவலை வேண்டேல். ‘பாப்பார நாய்களுக்கு ஆப்படிப்பவன்’ என்று வரும் நகைச்சுவைகளையே நான் பொருட்படுத்துவதில்லை. ஆக, மன்னிப்புக் கோரலும் அவசியமே இல்லை.
நான் ராமண்ணாவும் அல்ல.சரியா?
பீமண்ணா, கதையை ஓங்கிக் கதையடிப்பவர்களை கதற வைப்பவன்…. (ஸாரி, கொஞ்சம் ஓவர்)
January 15, 2014 at 09:57
முடிவில் இவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள்! இனி இவரின் எழுத்துகள் மீதான நம்பகத்தன்மையை மீட்பது கடினம். ஆனாலும் பாருங்கள் எருமை மாட்டின் மீது பொழியும் மழை போல இந்த யுவ கிருட்டிண எஸ ராவுகள் தொடர்ந்து எழுதி அல்லது கோப்பி பேஸ்ட் செய்து கொண்டுதானிருப்பார்கள்!
January 16, 2014 at 09:51
இவர்களை எல்லாம் வெளியே கொண்டுவருவதற்கு ரொம்பவே ‘மெனக்கெட்டு’ இருக்குறீர்கள்.ஐயோ இன்னம் என்னென்ன பூதங்களெல்லாம் தமிழ் உலகில் உலா வருகிறதோ?தெரியலை இப்பவே ரொம்ப கண்ண கட்டுகிறது ,ராமா -கிருஷ்ணா (யுவ?) காப்பாத்தப்பா !