வெள்ளெயானே வெளியேறு!

January 1, 2014

(அல்லது) இதுதாண்டா  விமர்சனம்!

மொதல்ல ஒங்க அல்லார்க்கும் ஒரு ஸலாம் வெச்சுக்றேன்!

வணக்கம் ஸார். வணக்கம் லேடீஸ்.

பகத்சிங்க வெள்ளக்காரனுக்குப் போட்டுக்கொட்த்த, அம்பேத்கார் முதுக்ல குத்துன, பெரியார் மேல சூனியம் வெச்ச அந்த ஆரிய காந்தியப் பத்தி – மானாவாரியா, மூச்சுமுட்ட ஒரேடியா வுடாத  ஆதரிச்சிக்கினு தெனாவெட்டா எளுதிக்கினே கீராரே இந்த செயமோகன் – அவ்ரே ஒரு புது பொத்தகத்தையும் எளுதிருக்காரு. புக்கு, பாக்க கொஞ்சம் குண்டாத்தான் கீது. வெள்ளேயானேன்னிட்டு எம்மாந் தெகிர்யத்தோட,  வெள்ளக்காரனுங்க நெஞ்சத்ல கீற மஞ்சாசோத்த எடுக்றாமாரீ, நாக்கப் பிடுங்கிக்றாமாரீ எள்திருக்காரு இந்த செயமோகன்? பொத்தகத்தோட தலப்பே டாப்டக்கராத்தான் கீது.

ஆனாக்க என்க்கு மன்ஸ்ல ஒரு பெத்த கேள்வீ… அந்த குவிட் இண்டியா 1942 ஆகஷ்டு புர்ச்சி மண்ணாங்கட்டீ தெர்ப்பிள்தீ பத்தீ, இப்ப டெசம்பர்லயா – அதுவும் அத் நட்ந்த எளுவ்து வர்ஸத்துக்கு அப்றமாவா ஒரு புக்க எள்தீ  –  அத்த  2013ல  ரிலீஸ் பண்வாங்க?

… இன்னாடா இது – பிர்யவே மாட்டேங்க்து… இந்தப் பதிப்பாளனுங்க்ளையிம் தூண்ல கட்டி நல்லா ஒதிக்கணும் – பேமானிப் பசங்ளுக்கு எப்போ என்னாமாரீ புக்கு போட்டா அது விக்கும்னிட்டு தெரீயவே மாட்டேங்து… எப்படியோ வித்துட்டானுங்கன்னாலும், எளுத்தாளனுங்க ராயல்டீ கேட்டாக்க, லைப்பரி ஆர்டர் கெடக்கலேன்னிட்டு டபாய்ப்பானுங்க.   எளுத்தாலங்க அல்லாம்,  அவங்க பொண்டாட்டியோட வந்து அள்து பொரண்டுக்கினு  றொம்பொ ப்ரெஸ்ஸர் போட்டாக்க, ராயல்டீ இல்ல கவிஞ்சரே, கொஞ்சம் ரெட்லேபிள் சூப்பர்டஸ்ட் டீதான் கீதுன்னுட்டு ஒரு லோட்டா கொடுப்பானுங்க… சூடா குடிச்சிட்டு சூத்தாமட்டைய தொடச்சிக்கினு ரிட்டர்ன் ஆய்ட்ணும். அவ்ளோதான்.

போக்கதவங்களா! இப்பல்லாம் இங்லீஸ் தலப்ப வெக்யணும்டா! இல்லாகாட்டி பாதி டமிள் பாதி இங்லீஸ்னிட்டுதாண்டா வெக்கணும்! அத்வும் மெட்டா பிக்ஸந்தாண்டா விக்கும்,  மோட்டா மோட்டாவா எள்தினா எப்ட்றா விக்கும்?  எவண்டா படிப்பான்? மோட்டா புக்மேல தமிளன் ஒக்காந்து டிவி ரிமோட் கண்ட்ரோல அமுத்திக்கினே இருப்பான், அவ்ளோதான்! ஒர்ரே இன்பம்ஸ்தாண்டா அவ்னுக்கு!

காந்தீ பத்தீ எள்தாம, பூந்தி ஸெய்றது எப்டின்னிட்டு புக்கு போட்டாதான விக்கும்? ஜனங்கொ, அத வாங்க அலைமாரீ, அலமோதிக்கினு வருவானுங்கோ… நம்ப டமிளன்க சாப்பாட் ராவணன்கடா… சாப்பாடு புக்கு தாண்டா அதிகமா விக்கும். இன்னா நாஞ் சொல்றது?

ஊறல் குட்ச்சிக்கினே ஊறுகா துண்றது எப்டீ? முப்பது நாட்களில் ஆரிய வடை! ஒரே வாரத்தில் திறாவிடப் புறாக் கறி!! ஒரே நாளில் வடகறி, தெர்ட்டீ நிமிட்சில் தென்கறி! சமைத்துப் பார்! ஆனாக்க சாப்பிட்டுப்  பார்க்காதே! பின் நவீனத்துவ கொத்து பரோட்டா, ஆண்மீகச் சாப்பாடும் ஃபேன்சீ அன்டர்வேரும், சாப்பாட்டெள்த்து, காலந்தோறும் சாப்பாடு, ஷ்ராதிங்கனார் துண்ணுக்குனிருந்த ஸ்டூடெல், உப்புமா பாண்டவம், உறுத்தாத பசி   — இப்டி தெனாவட்டு டெர்ரரா தலப்பு வெச்சாங்கன்னாக்க புக்கு விக்கும்… விக்கணும். இன்னாண்ற?

டேய்! விக்கணும்னா, தண்ணீ குடீண்றயா! டாய் மவனே, அதக் குடிக்கக்  கூடாத்டா… விக்கினா நம்ப டமிள்னாட்ல தண்ணீ  போடணும்டா… ஹ. நம்ம டாஸ்மாக்கு ஸரக்கு, நல்ல ஸரக்கு.

… இப்ப இன்னாடா ஸொல்ல வந்தேன்… கொஞ்சம் கொளம்பிருச்சுடா, வய்சாடிச்சில்ல!  ஆ… அந்த வெள்ளக்காரனுங்க்ளப் பத்தி வந்த புக்கு பத்தீ என்னோட விமர்சனம்…

போடாங்… இன்னாடா என்னயே  பெருஸ்ஸா திருத்த வண்டே! தலப்பு வெள்ளக்கார்னப் பத்தி இல்லயா?

இன்னாடா பம்முற?? நானா  மப்ல கீறேன்?? ங்கொம்மாள, என்னயாடா ஊத்திக்கினு ஒளற்றேண்ற? நம்ப டமிளன்களுக்கு வாயி ஒண்ணு போறுண்டா… ஒங்கள மாரீ பொழுதன்னிக்கும் எவனோட தப்ப திருத்தலாம், விமர்சனம் பண்லாம்னிட்டு அலைவீங்கடா… ஆளாளுக்கு ஒரு எலக்கணப் புத்தகத்தை வெச்சிக்கினு, எப்டீ தமிள்ல எள்தற்துன்னிட்டு க்ளாஸ் எடுப்பீங்கடா,  தெர்ப் பொர்க்கீங்க்ளா…

-0-0-0-0-0-0-0-0-0-

ஆனாக்க கொஞ்சம் ரோசிச்சா, இவ்ரு – இந்த செயமோகனைத்தான் சொல்றேம்பா – அவ்ரோட புக்குக்கு தலப்பு வெக்கும்போத்தொட்டு அவ்ருதான் மப்ல இருந்தாமாரீன்னா கீது?

இன்னாடா இது வெள்ளையானை? அந்த இந்திரனோட யானையாடா இதூ? .  ஐராவதம்னிட்டு அகள்வாராய்ச்சி பண்ணிக்கினு இருக்கற யானையைப் பத்தியா இந்த கத? எனக்குத் தெரிஞ்சி இங்லீஸ்ல எள்த படிக்க தெரிஞ்ச யானை உலகத்லேயே இது ஒண்ணுதாண்டா! இந்து பேப்பர்ல இங்லீஸ் கட்ர கிட்ரல்லாம் எள்தும்டா இது.

கர்த்துப் படம்: (மேலாக்க) ஐராவதம், அவ்ரோட பொண்டாட்டி ஐராவதி. (கீளாக்க) இந்திரன், அவ்ரோட சகலை எந்திரன்.

கர்த்துப் படம்: (மேலாக்க) ஐராவதம், அவ்ரோட பொண்டாட்டி ஐராவதி. (கீளாக்க) இந்திரன், அவ்ரோட சகலை எந்திரன்.

என்னடா கொற சொல்ல வண்ன்ட, பொறம்போக்கு! அந்த யானை பத்தியில்லயாடா இந்த புக்கு! அய்யய்யோ!

ஹ்ம்ம் – அப்போ, இந்த செயமோகன் கத, அந்தகால ராஜ்ஜாஜீ எள்தின மவாபாரதத்த வுல்டா பண்ணிக்கினு கமுக்கமா  புத்சா எள்தன ஏதாச்சும் கதயாத்தாண்டா இருக்கும்… நம்ப டமிள் எள்த்தாலர்கல் வுல்டா பண்ணியே பொளப்ப நடத்றவங்கதாண்டா… வொனக்குத் தெர்யாதா?

இல்லேண்றீங்களா? ங்கொம்மாள, டாய்… நம்ப கலைஞ்சரே சொல்லிக்கீரார் – திராவிட எள்த்தாளன்னாலே திர்டன் தான்னிட்டு! தெர்யுமாடா ஒனக்கு, ரொம்ப அறிவுர சொல்ல வந்த்ட்டான், சோம்பேறீ…

ஆங்! அப்போ அவ்ரு ராமன் திருடன் சொல்லிட்டு அப்பால ஜகா வாங்கலண்றியா? அவ்ரு வால்மீக்கி சொன்னார்னிட்டு புர்டா வுட்டுட்டு, ப்ரூஃப் ஒண்ணுமே கொடுக்லடா, மச்சான்! ஆனாக்க நான் —  தமிள் எள்த்தாளன், ஜுஜாதா விர்து வாங்கிக்னுக்கீறேன்ன்னிட்டு தன்ன சொல்லிக்றவன்ங்க திருடங்கன்ன்னிட்டு நெறய்ய ப்ரூஃப் கொட்த்திர்க்கேண்டா முண்டம். பட்றா மொதல்ல, நான் எள்தினத… பேச வந்த்ட்டான் சொறிநாய்.

-0-0-0-0-0-0-

செரி, அத்த வுட்டுர்ரேன்…

வெள்ள யானேன்னு தலப்ப வெச்சி — காவேரீல வெள்ளத்தண்ணீ  கண்டமேனிக்கும் ஓட்றபோது, குமுக்னு ஒரு கும்கி யானே அத்ல குத்ச்சி, ஆத்தோட போற புற்னானூற் சொவடிக்கட்ட காப்பாத்ற மாத்ரி கதன்னு நெனச்சேன். கொஞ்சம் எணையத்ல தேட்னாக்க, போக்கத்த பேமானீங்க அதீல்லண்றாங்க! இது வேற ஐடியாண்றாங்க!

என்னோட வெமர்சனத்தோட கர்த்துப் படம்பா, இது! வெள்ளையான, வெள்ளை பேக்ரௌன் ட்ல டாப் டக்கரா வந்துக்கீது! றொம்ப மகிள்ச்சியா கீதுபா! எனக்குன்னு பிகாசோவோ இல்ல பீட்சாவோ - யாரோ ஒரு வெள்ளக்கார் போட்டுக் கொட்த்தார்பா!! எப்பேர்ப்பட்ட ஆள் அவ்ரு! அல்லாரும் மகிள்ச்சியா ஜோரா கைதட்டுங்கடா!

என்னோட வெமர்சனத்தோட கர்த்துப் படம்பா, இது! வெள்ளையான, வெள்ளை பேக்ரௌன்ட்ல டாப் டக்கரா வந்துக்கீது! றொம்ப மகிள்ச்சியா கீதுபா! எனக்குன்னிட்டு  பிகாசோவோ இல்ல பீட்சாவோ – யாரோ ஒரு வெள்ளக்கார் போட்டுக் கொட்த்தார்பா!! எப்பேர்ப்பட்ட ஆள் அவ்ரு! இவர தமிள்காரனுங்க கிட்ட அறிமுவம் செய்றவனே நான் தான். இருந்தாலும் எனக்கு விருது ஒண்ணும் தேற மாட்டேங்குதுடா… தமிளன்கள ஒதிக்கணும்…  (இந்தப் படத்த சரியா பாக்கணும்னாக்க, படம்மேல கிளிக் பண்ணுங்கடா!)

அப்பால, அது றொம்ப தித்தீப்பா வெல்ல ஆனையோ னென்ச்சிக்கினேன் – இல்லேன்னாக்க வொரு யான சைஸ்ல ஒரு வெல்லக் கட்டீன்னு ஜோக்கடிக்றாங்கன்னு நென்ச்சேன்… ஆனாக்க அது கொய்ம்பட்டூர் பக்கத்து ஆனக்கட்டி இல்ல ஆனா அந்த அட்டப் படத்ல அத்து ஒரு ஐஸ்கட்டீண்றாங்கடா! என்னா எளவ்டா இத்து!

இல்லாக்காட்டீ பகைவன மாய்க்க அவனை வெல்ல னம்ம இனிப்புத் தாய் புர்ச்சித்தலேவி, அம்மா, அன்னையிட்ட அரசு ஆனையோன்னு கூட நென்ச்சிக்கினேன்.

ஒருக்கா ஃப்ரீயா திர்னெல்வேலி அல்வா ஒர் நாளிக்கி 5 கிராம் கொட்க்கப் போராங்ளோ என்னவோ! நம்ப டமிலன்களுக்கு எல்லாத்தையும் எலவசமா வாங்கிக்கினே காலம் களிக்கிறத்ல இருக்ற இன்பம்ஸ் இருக்குதே… பிச்சை வாங்கிக்கினே, பொறங்கைய நக்கிக்கினே வாள்க்கைய ஓட்ட்ருவோம்டா… மேதாவீங்கடா!

ச்சீச்ச்சீ – எனக்கு ராஜ்யசபா சீட்டு வோண்டாண்டா… நமக்கு, நம்ப ரெவலுக்கு டாய்லெட் சீட் போதும்போ…

ஆ, எங்க வுட்டேன்? திர்னெல்வேலி அல்லுவா!  ஹ்ம்ம்.. ஆனாக்க அம்மா அல்வாஅகம்-ன்றது கொஞ்சம்மாரீக்கு வடமொளியாக் கீதே… அய்யய்யோ. தெராவிடட் டாய் கோச்சுப்பாங்டா!

அவ்ங்க மாட்டாங்ளா? ஆங்! அவ்ங்க வுட்டுட்றாங்கன்னாலும், நம்ப விட்தல வீற்மணி அய்யா வுட்ற மாட்டாரே!  அவ்ரு டன்மானட் டமிளர்டா! அத்தொட்டு இந்தப் பிரச்னய எடுத்திக்கினு அத்த எதித்துக்கினு – மாவட்டம் வட்டம்னிட்டு ரவுண்டு கட்டிக்கினு போராட்டம் அறிவிச்சுக்கினேயிர்ப்பார்டா! தாங்க  முட்யாதுபா இந்தக் கொசுத்தொல்ல… டெங்குவுக்கே டங்குவாரப் பிச்சிட்வார்டா இந்தட் டமிலர்! இண்ணான்ற?? … சிர்க்கறான் பார்டா… அங்கே சிர்ப்பவர்கள் சிர்க்கட்டும் அது ஆண்வச்சிரிப்பு

… அல்லது நம்ப சோளன் யாராச்சும் கடலு போல அத்ல சூற்றாவளி வெள்ளம் போல யானப் படைய தேத்திக்கினு, எவனாச்சும் களப்ரனை தமிள்னாட்லேர்ந்து களப்ர மாரீ எள்தின வரளாற்றுப் புதிணமோன்னு டவுட்டு.

ஆனாக்க இது எதுவுமே இல்லேன்னிட்டு சொல்றாங்க. இதென்னாடா  இது கத?? டுபாக்குராக் கீது!

யாரோ சொன்னாங்க – இது வந்து அந்தக் கால டலிட் கதயாமே? யார்டா அவ்ரு?  நம்ப கெளக்கிந்திய கம்பேனி கிளைவோட சொந்த்க்கார்ரா?

அவ்ருதான் — தனிச்சுத்துக்கும் மட்டும், தலச்சுத்துக்கு மட்டும்னிட்டு மானாவாரியா வெளிவந்துக்னுர்ந்த சின்னபத்திரிகைங்க, இலக்கிய வட்டம் சத்ரம் முக்கோணம்னிட்டு அல்லாத்துக்கும் வருடச் சந்தா, ஆயுள் சந்தான்னிட்டு கண்டமேனிக்கும் கட்டிட்டு, அப்பால, வெள்ளம் போல வர்ர சாணிப்பேப்பர் பொஸ்தகத்த அல்லாம் படிக்க முடியாம – நட்டு கெள்ண்டிக்கினு, கோமணத்தை உருவிக்கினு அம்போன்னு ஓட்ன அந்தத் தாயோளி சந்தா சாஹிப்பை — தோக்கட்ச்ச ஆளோ?

ஆ, அதுவ்ம் இல்லேண்றியா, மவ்னே – ங்கொம்மாள… வொன்ன ஒளிச்சிக்  கட்ரேம்பார்டா…

அப்டீ இன்னாடா  அத்ல எளுதியிர்காரு இந்த செயமோகன்?

மிஞ்சிமிஞ்சிப் போனாக்க  அவரோட எனச் சார்பை, அவ்ரோட வெறுப்பத்தானடா காம்பிச்சுருக்காரு இதுல, என்னடா ஸொல்ற?

தாளீ, இன்னாடா – ப்ரூஃபா கேக்குற, நாயே! சரி சொல்றேண்டா – ஒங்கள மாரீ தண்டக் கருமாந்த்ரங்களுக்கு அல்லாத்தையும் வெலாவாரியா சொல்லாட்டா, ந்கொம்மாள, ஒண்ணுமே பிர்யாதுடா… ஒன்னுமே பிர்யாம லைக் போட்டுக்கினே இருக்கற, பின்னூட்டம் போட்ற குடாக்குக் கூவானுங்கதானடா நீங்க!

இங்க பார்ரா… இவ்ரு வெள்ளையானைன்னிட்டு புக்கு பேரு வெச்சதிலேயே தெர்யுதுடா இவ்ரோட வெள்ள மோகமும் யான மோகமும். ஏன் இவ்ரு கருப்புக்காக்கான்னிட்டு பேர் வெக்கலே, சொல்லு? பாயின்டப் பிட்ச்சேன்பாரு! !

அத்லதாண்டா அவ்ரோட ஆரிய ஆர்எஸ்எஸ் இந்துத்துவா காக்கி டவுசர் அரசியலே கீது! இவ்ரு யானைங்களத் தூக்கிப் பிட்ச்சு, காக்காங்கள ஒதுக்குனதே அவ்ரோட மேல்சாதி புத்திய காமிக்குதுடா…

… சரி, எல்லாத்தயும் வுட்ரு… ஆனாக்க… அல்லாத்துக்கும் அப்பால, டாக்டர் கலைஞ்சருக்கு மிஞ்சிக்கினு எவண்டா  தமிள்ல எளுத முடியும்…

… றொம்பத்தான் ஷோக்கு காட்றீங்கடா… செயமோகனுக்கு கலமாமணீ பட்டம் அவ்ளோ சுளுவா கெடச்சிர்மா? நாங்க இனத்துரோகீங்க்ளுக்கு அவ்ளோ சீக்கிரமா அதக் கொடுத்றுவோமா? இன்னாடா நாஞ் சொல்றது?? அதுக்கெல்லாம் ஒரு தவுதி வேணூம்டா!

-0-0-0-0-0-0-0-

ஹ்ம்ம்… ஆணா, புக்கொட அட்டப் படத்த பாத்தா அத்து றொம்ப பெரீசா இருக்றமாரீ க்கீது.  நம்ப்ளால இத்த — படிக்றதயே  வுடு, அத்த தூக்கவே  முடியாத்றா..

அத்தோட விமர்சனங்களும் அப்டியேதான். அந்த விமர்சனக்காரனுங்ளும் அந்தப் புக்க பட்ச்சாமாரீ தெரீல்ல… புத்திசாலிப் பசங்கோ… படிக்காம, மொள நீள வெமர்சனமெல்லாம் எள்திக் குவிக்கறானுவோ!

ஆனாக்க மொள்ளமாரீப் பயலே, என்ன தெர்யுமாடா வொனக்கு? ஹ நான் அவ்ங்க்ளவுட மகா புத்திசாலி! என்க்கு ப்ரெய்னு கொஞ்சம் ஓவரா வர்க் பண்ணும்னிட்டு ஒனக்குத் தெர்யுமே.

எப்டீன்னிட்டு கேக்கறியா? ஹா! நான் அவ்ங்ளோட விமர்சனங்ளயும் படிக்ல. சும்மா பாத்தேன், அவ்ளோதான்! அதுங்ளயும் படிக்கணும்னாக்க அர மண்ணேரமாய்டும் – நமக்கு அப்டீ லோல் பட்ணும் என்ன தலவிதியா?? இன்னாடா சொல்ற?? அதேசமயத்ல, நாம்ப அறிவிஜீவின்னிட்டும் காமிச்சு ஒரு பிலிம் காட்ணுமே!

எணையத்ல பிம்பத்த காப்பாத்திக்ணும்பா… ஹ்ம்ம்… வொன்ன மாரீ மரமண்டெக்கெல்லாம் இதெல்லாம் பிர்யுமான்னிட்டு சந்தேகந்தான்!

ஆனாக்க, நல்லவோளடா… டமிளன்னாக்க ஒண்ணுமே தெர்யவோண்டாண்டா… ஒண்ணுமே பிர்ஞ்சிக்காம அல்லாத்தயும் லொட்டு லொசுக்குன்னிட்டு கண்டமேனிக்கும் வெமர்சனம் பண்ணிக்கினே மாறாதப் பேரீண்ப நீராடுவோண்டா! நீரோடு நீர் போல நாம் கூடுவோண்டா! அண்பே இண்பம். எங்கே? இங்கே! அதுவே இதிலே… ங்கொம்மாள.

அத்தொட்டு சொல்லிக்கறேன் – இந்த புத்தகம் றொம்ப சப்பை.

ஹாங்? எவ்ண்டா அவன்? மொதல்ல புக்கை படிச்சிட்டி அப்றம்தான் வெமர்சனம் எள்தணுமா? இன்னாடா ஒளற்றீங்க??

என்னடா, அது நீதியில்லையா?

பொர்க்கிப் பயலே, நம்ப டமிள்ல எவண்டா அப்டீ எள்தறான்? சோமாறீ…

புக்கு சப்பைதான். சப்பை, சப்பை, சப்பை.

வெள்ளக்காரன திராவிடத்த வுட்டு வெரட்ன நம்ப்ளோட வைக்கம்வீரர் பெரியாரே ஸொன்னமாரீ: வெள்ளெயானே வெளியேறு.

போடாங்.

-0-0-0-0-0-0-0-

அய்யய்யோ வெமர்சனம் றொம்ப சின்தாயிட்டுத்துறா – இப்ப இன்னாடா செய்றது, பிரீலியே… சர்த்தான்… வருத்தப் படாத, என் சகோதரா…

இப்ப, அய்யா கொஞ்சம் பிஸி. வாள்க்கை, பெறப்பு, மூப்பு, சாக்காடு பத்தீ ரொம்ப  ரோசன பண்ணிக்கினு கீறேன். அத்தொட்டு கொஞ்சம் டைட்டா கீது. வோக்கேவா?

ஆனாக்க, ஒரு இலவச இணைப்பு: ‘ஒற்று எழுத்து: சிலக் குறிப்புகள்,’ அப்றமா எள்தறேன், சர்யா?

போங்கடா, இதுதாண்டா *&#@! பதிவுகள்

அலக்கியம், காப்பிக்கடை, இன்னபிற இழவுகள்…

2 Responses to “வெள்ளெயானே வெளியேறு!”

  1. ஆனந்தம் Says:

    திடுக்கிடும் செய்தி. யானை தமிழ்நாட்டு மிருகமே அல்ல. ஆரியர்கள் படையெடுத்து வந்த போது தமிழர்கள் மீது ஏவி விடப்பட்ட சதி.
    அப்ப சங்க இலக்கியத்தில யானை பற்றின குறிப்புகள் இருக்கே என்கிறீர்களா?
    “பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள யானை வேறு. பழந்தமிழ்நாட்டில் பன்றியைத்தான் யானை. என்று வழங்கிக் கொண்டிருந்தனர். அது சுத்தத் தமிழ் மிருகம். ஆரியர்களின் தங்கள் இறையாண்மையை ஏற்க மறுத்தற்காக சூழ்ச்சி செய்து அதன் பெயரை மாற்றிவிட்டனர். அன்றுதொட்டுத் தமிழர் விலங்குகளாம் பன்றிகள் ஒடுக்கப்பட்டு சாக்கடைக்குள் தள்ளப்பட்டு இன்று வரை உறுமிக் கொண்டிருக்கின்றன.

    பன்றிகள் நடக்கும்போது வாலால் சாக்கடைத் தண்ணீரைத் தெளித்துக் கொண்டே நடைபயிலும் அழகைக் கண்டிட்டிருக்கிறாயா தம்பி? அபோது உருவாகும் டிஸைன் சற்றொப்ப நம் தமிழ்ப்பெண்டிர் வாசலில் கோலம் போடுவது போலவே இருப்பதை நோக்கியிருக்கிறாயா? யானைகளுக்கு அவ்வாறு தமிழ்ப்பெண்டிரைப்போல் கோலம் போடத் தெரியாதது ஏன்? இதிலிருந்தே அது தமிழ் மிருகம் இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகிறதல்லவா?
    உழைக்காமல் கோவில்களில் பொங்கலும் தேங்காய் மூடியும் பழமும் சாப்பிட்டுக்கொண்டு கடைகளில் ஐந்துக்கும், பத்துக்கும் தும்பிக்கையை நீட்டிப் பிழைப்பதிலிருந்தே தெரியவில்லையா, இது ‘அவாளு’டைய மிருகமென்று?
    தும்பிக்கையும் தந்தமும் கூடுதலாக இருப்பதால்தானே அது சுத்தத் தமிழ் மிருகங்களை ஒடுக்க முடித்தது? அதனால் யானைத் தந்தத்திலும் தும்பிக்கையிலும் தார்பூசும் போராட்டம் நடத்திடுவோம். அலைகடலெனத் திரண்டு ஆர்ப்பரித்து வந்திடு தம்பி….”

    (ஆதாரம்: கி.மு. 2300ல் வாழ்ந்த அண்ணன் ஒருவர் தம்பிக்கு எழுதிய கடிதம்.
    நன்றி: பச்சைத்தமிழ் மிருகங்கள் வரலாறும் பழந்தமிழர் வழக்காறும் பக்- 305 ஆசிரியர்- நிக்குமோ நிக்காதனார்)

  2. A.seshagiri Says:

    “வெள்ளெயானே வெளியேறு”ஒருபுறம் இருக்கட்டும்,நமது தானே தலீவர் கருணாநிதி சமீபத்தில் கொடுத்த நேர்காணலின் சுட்டியை கீழே கொடுத்து இருக்கிறேன்,தங்களுக்கு நேரம் இருந்தால் இது பற்றி படித்து விமர்சிக்கவும்.குறிப்பாக பி.ஜே.பி.யுடன் வைத்த கூட்டணி பற்றி.( இடையூறுக்கு மன்னிக்கவும்.)
    http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=73839


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s