நாம் தமிழர்கள்: தோலடிக் கொழுப்பும், நொதுமல் நிலையும்
December 10, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (14/n)
சாளரம் #7: தமிழர்களுக்குத் தொடர்ந்து தங்கு தடையில்லாமல் வளர்ந்துகொண்டிருப்பது, அவர்கள் சிந்தனையின் / செயல்பாட்டின் ஆழமோ வீச்சோ அல்ல; உரையாடல்களின் செறிவோ அல்லது நுட்பமான வாசிப்பை அனுபவங்களோடு பொருத்திச் சிந்தனைகளை வளர்த்தெடுத்துச் செல்லும் மனப்பாங்கோ அல்ல – ஆச்சரியமே தராதவிதத்தில், ஏகோபித்து வளர்ந்துகொண்டிருக்கும் அதுவானது, அவர்களின் தோலின் கீழுள்ள வளமையான கொழுப்புசார் அடிமான அடுக்கு (subcutaneous fat) மட்டுமே!
அதாவது, நம்முடைய தோலின் தடிமன், அதனால் நாம் புளகாங்கிதம் அடைந்து பெறும் – வெட்கம், மானம், சூடு, சொரணை சாராத ‘தடித்தனம்’ என்பது தாங்கவொண்ணாச் சக்தியுடையது; உலகத்தில் மகோன்னதமாக எது நடந்தாலும் ‘என்னத்த பண்ணி, என்னத்த செஞ்சு’ எனப் புலம்பி, ‘நமக்கெல்லாம் இது ஒத்துவர்ராத் சார்’ என வெகு சாவகாசமாகக் குண்டி மண்ணைத் தட்டிக்கொண்டு போகவைக்கும் மனப்பான்மையை, எதனையும் கற்றுக்கொள்ளாமல் கிடந்துழலும் எண்ணப்போக்கை வளர்ப்பது இது.
இதனைப் புரிந்துகொள்வதற்கு சரியான படிமம்: ’எருமையின் மேல் மழை பெய்வதைப்போல…’
-0-0-0-0-0-0-0-0-0-
நாம் தெரிந்து செய்யும் தவறுகளை, யார் கண்டுபிடிக்கப்போகிறார்கள் என்கிற அசட்டுத் தைரியத்தில் செய்யும் பிழைகளை, ஒருவர் சுட்டிக்காட்டினால் அதனைக் கண்டுகொள்ளாமல், மேலும் மேலும் அதே தவறுகளைச் செய்யும் தடித்தனம். மேலதிகமாக, நம் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்மீது கோபம் – இதில் கோபம் என்பதை விடக் கொலைவெறிதான் அதிகம் என்பது உண்மை.
எடுத்துக்காட்டுகள்:
வெட்கமே இல்லாமல் தொடர்ந்து காப்பியடித்தல்கள் – எனும் தமிழ் இணைய, திரைப்பட, இசை வியாதி பற்றி நிறைய எழுதலாம். ஆனால், தமிழில் எழுதுபவர்களின் ஸெராக்ஸ் கடைகளைப் பற்றி நிறைய எழுதியாகிவிட்டது. ஆனால் நாம், இதற்கெல்லாம் அசர மாட்டோம். நூதன வழிகளில் காப்பிக் கடைகளை நடத்திக் கொண்டேயிருப்போம். ஆக, இதனைப் பற்றி எழுதி, மேலும் காலவிரயம் செய்யவிருப்பமில்லை.
சுப்ரமணியன் ஸ்வாமி எனும் அரசியல்வாதியை, பலரும் ஒரு கோமாளியாகவே நினைக்கிறார்கள். சகட்டுமேனிக்குப் பொய் சொல்பவர் என்கிறார்கள். ஸிஐஏ-விடம் பணம் வாங்கிக் கொள்பவர் எனப் புளுகுகிறார்கள். ஏகாதிபத்தியத்தின் ஏஜென்ட் என்று அலறுகிறார்கள். சந்தர்ப்பவாதி என்று சொல்கிறார்கள்.
எவ்வளவுக்கெவ்வளவு ஒரு சமூகம் உண்மையில் இருந்து தூர விலகிச் சென்றுகொண்டிருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அது, அதனைப் பேசுபவர்களை வெறுக்கும்.
— ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell; 1903-50)
வெவ்வேறு காலங்களில், இவர் மிகவும் முனைப்புடன் பணியாற்றிய மூன்று விஷயங்களைப் பற்றிய பின்புலங்களை (அற்ப எல்டிடிஇ-காரர்களின் சதிவலைகள், இந்தியன் வங்கி ஊழல்கள், 2ஜி கந்தறகோளம்) நான் கொஞ்சம் ஆழமாக, ஓரளவு நேரடியாகவே அறிந்துள்ளேன் என்கிற முறையில், இவர் அப்போது சொன்னது அனைத்தும் சரியான தகவல்களின் அடிப்படையிலேயே இருந்ததை உணர்ந்துள்ளேன். அப்போதும் இவர் மேல் புழுதியை வாரித் தூற்றினார்கள். மிரட்டினார்கள். இவர் அவற்றிற்கெல்லாம் பயப்படவில்லை.
பின்னர் அவர் ஈடுபட்ட பல்வேறு வகைப் போராட்டங்களையும், நீதிமன்ற நடவடிக்கைகளையும் தொடர்ந்து ஆழமாகத் தெரிந்துகொள்ள முயற்சி செய்து வருகிறேன் – என்னுடைய நண்பர்களான அரசு / நீதிமன்ற உயர்பதவிகளில் இருப்பவர்களிடமிருந்து நிறையச் செய்திகளைப் பெற்றிருக்கிறேன். ஒன்றிரண்டு ஸ்வாமி அவர்களுக்கும் எனக்கும் தெரிந்த பொதுவான அறிமுகங்களும் இருக்கின்றனர். ஆக, என்னைப் பொறுத்தவரை சுப்ரமணியன் ஸ்வாமி அவர்களின் நடவடிக்கைகள் நியாயமானவையே. இந்தியாவின், அதன் மக்களின் மீது கரிசனம் கொண்டு எழுப்பப் பட்டவையே.
… இவர் இப்போதும் பல விஷயங்களைப் பற்றிச் சொல்கிறார், செயல்படுகிறார். நேரடியாக இவர் சொல்வனவற்றை எதிர் கொள்ளமுடியாமல் – இப்போதும் புழுதியைக் கிளப்புகிறார்கள், நம்முடைய ஈடுஇணையற்ற செல்லங்களான திராவிட முதுகுடுமிப் பெரும்புழுதிகள்!
தமிழ் நாட்டில் தான் இப்படி புழுதி வாரியடித்தல் மூலம் மட்டுமே இவரை எதிர்கொள்ளும் வீரம் இருக்கிறது – என்பது ஒரு பெருமையளிக்கும் விஷயம்தான்.
பல வருடங்கள் முன்பு ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்தபோது – ஒரு சர்ச்சை விஷயமாக சுப்ரமணியன் ஸ்வாமி சென்னை உயர் நீதிமன்றம் வந்திருந்தபோது, அவருக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த, கோஷ்டம் போட்டுக் கொண்டிருந்த பல அதிமுகழகப் பெண்மணிச் செயல்வீரர்கள் தங்கள் புடவைகளை இடுப்புக்கு மேலே உயர்த்தி – உள்ளாடைகளை அணியாமல் – ஸ்வாமியை நோக்கிக் காட்டியதை நானும் நேரில் பார்த்து விதிர்விதிர்த்திருக்கிறேன்; பலப்பல வருடங்களுக்கு முன், திமுகழகப் பெண்மணிச் செயல்வீரர்களும் ஒருமுறை மதுரையில் இவரைஎதிர்த்து இப்படிச் செய்தார்கள் என்றும் நினைவு! அதற்கு முன், அம்பேட்கர் / காந்தி / நேரு / காமராஜ் / பக்தவத்சலம் … … என, பல கொண்டாடப்பட வேண்டிய தலைவர்களுக்கு எதிராகவும் இந்த நூதனப் போராட்டம் நடத்தி, திராவிட இயக்கத்தினர் பயிற்சி பெற்றிருப்பார்களோ என்ன எழவோ? (இச்சமயம் — திராவிடக் குஞ்சு என்ற ஒரு பேரும் புகழும் பெற்ற கவிதையில் “கழகக் குஞ்சினில் திமுகவென்றும், அதிமுகவென்றும் உண்டோ?” என்று பாரதி அன்றே பாடாதது எனக்கு நினைவுக்கு வருகிறது! இதில் ஆண்பால் உறுப்பு மட்டுமே சித்திரிக்கப் பட்டுள்ளதும் பெண்ணுரிமையை அன்றைக்கே கையில் எடுத்த பாரதி இப்படித்தான் செய்திருப்பான் என்பதைச் சுட்டுகிறது அல்லவா?)
ஜெயமோகனை, அவர் கருத்துகளை, அவர் வாதங்களை – நேரடியாக, ஆராய்ச்சி மனப்பான்மையுடன் எதிர்கொள்ள முடியாதவர்களும் — இப்படிப்பட்ட புழுதிவாரியடித்தல்முதல்வாதிகள்தாம், சிறுகுடுமிப் பெரும்புழுதிகள்தாம்!
மறுபடியும் மறுபடியும் – இவர்களைக் கூர்ந்து கவனிக்க முனைகிறேன் – எப்படி இவர்கள் தங்கள் பக்க நியாயத்தை தர்க்கரீதியாக வளர்த்தெடுக்கிறார்கள் என்பதை — ஆனால், இந்த எதிர்ப்பு-வெறுப்பாளர்களிடம், கருத்துலகக் கோழைகளிடம், சரக்கு ஒன்றுமே இல்லை. உளறிக் கொட்டுகிறார்கள். என்னமோ அவர்கள் கோமணத்தை, இவர் பிடுங்கிக் கொண்டு ஓடிவிடுவது போல ஒரே பிலாக்கணமும் ஒப்பாரியும்தான்! அப்படியே அவர் பிடுங்கிக் கொண்டு ஓடினாலும், இந்த வெறுப்பாளர்களுக்கு கோமணத்தில் உள்ளே ஒன்றும் மறைவாக வைத்துக்கொள்ளும்படிக்கு ஒரு சுக்கும் வேறு இல்லையே! திராவிட இயக்கக் காரர்கள்தான், தமிழர்களைத் துப்புரவாகக் காயடித்து விட்டார்களே!
-0-0-0-0-0-0-0-0-0-
… நமக்கு உரையாடுவது என்பதன் அடிப்படைகளே (தர்க்கரீதியாகச் சிந்திப்பது என்பதையே விடுங்கள்) புரிவதில்லை. தன் கருத்துக்கு மாற்றுக் கருத்து என்பது முட்டாள்களுடையது. தன்னுடைய கருத்து இன்னமும் மேலதிகமாகச் செறிவுபடுத்தவே முடியாத மகாமகோன்னத உயரத்தில் இருக்கிறது எனும் பிரமை. (ஆம். இது எனக்கும் பொருந்தும்தான்!)
மேலும், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் ஒரு இழவும் தெரியாவிட்டாலும், புரிந்துகொள்ளும் மூளை அல்லது உழைப்பு இல்லாவிட்டாலும் அதனைப் பற்றி உளறல் கருத்துகளைச் சரமாரியாகத் தெரிவிப்போம். நம் சோம்பேறித்தனத்தை, அரைகுறைத்தனத்தை மிகவும் கர்வத்துடன், மாளா தன்னம்பிக்கையுடன் பறைசாற்றுவோம். யாராவது நம்மை “ஏன் இப்படி…” எனக் கேட்கவந்தால் உடனே நமக்கு வெல்லக்கட்டி கிடைத்துவிடும் – அவதூறு, புலம்பல், வாய்ப்பேச்சு வீரம் எனத் தொடரும், நமது தடித்தனம்…
பலவருடங்கள் முன்பு ராமர் (பிள்ளை) என்று ஒருவர் திடீரென்று கிளம்பி தண்ணீரைப் பெட்ரோலாக சில மூலிகைகளின் உதவி கொண்டு மாற்றுகிறேன் என்றார். அதற்கு ஒர்ரே விளம்பரம். நமக்கெல்லாம் புளகாங்கிதம். உலகத்தின் அனைத்து எரிபொருள் பிரச்னைகளையும் ஒரு கிராமத்துப் பச்சைத் தமிழனானவன், மறக்கப்பட்ட பண்டமிழ் மூலிகைகளின், சித்தர்களின் ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியின் சரடுகளை உபயோகித்துச் சிடுக்கவிழ்க்கிறான் என்று. அவரை வாழ்த்தாத, ஆதரிக்காத அனைவரையும் – ஏகாதிபத்தியங்களின் கைக்கூலிகள், பொறாமைக்காரர்கள் என்றெல்லாம் வறுத்தெடுத்தார்கள், கூட! ( நான் ஒரு அப்போதைய நண்பரிடம் – இந்த ராமர் பிள்ளை அவர்களை மனோதத்துவரீதியாகத் தான் அணுகமுடியும், இயற்பியல் வழியாகவோ, தருக்க ரீதியாகவோ அல்ல என்று சொன்னதற்கு – என்னை ஜாதிவெறியன் என்றார்; அவர் சொல்வது உண்மையாகவே இருக்கக்கூடும்.)
சரி.. இந்த ராமர் அவர்களும் ஐஐடியில் சோதனை, ஸிஎஸ்ஐஆரில் வேதனை, தொலைக்காட்சிகளில் நேரடிப் பரிசோதனை என ஒரு சுற்றுச் சுற்றி வந்தார். நாமும், நமது நகைப்புக்கிடமான தடித்தனத்தால் இவருடைய உடும்புத்தைலவாதத்தை ஆதரித்தோம்.
இப்போது பல ராமர் பேரன்கள் – நம் தொழில்நுட்பக்கல்விக் கோயில்களிலிருந்து புற்றீசல்போலக் கிளம்பி காற்றிலிருந்து மின்சாரம், வெற்றிடத்திலிருந்து சம்சாரம், பிரபஞ்சத்திலிருந்து கிரகச்சாரம் போலவும் – ரோபாடிக்ஸுக்கு நொபெல் பரிசு, ரோபாட்டுகளை வைத்து, கணினி எலிகளின் கொட்டைகளைக் கசக்கியுருட்டி மட்டுமே, உலகத்தின் அனைத்துப் பிரச்னைகளையும் துப்புரவாகத் துடைத்தெடுத்தல் எனக் கிளம்பியிருக்கிறார்கள். இவர்களையும் நம் தடித்தனத்தால் உந்தப்பட்டுப் புகழ்பாடுவோம்.
கவிஞர் உமாமஹேஸ்வரி அவர்கள் எழுதிய ஒரு கவிதைவரியைப் போல – ”கேள்வியே கேட்காமல் சதா புல் தின்னும் ஆடுகள்” என நிலைத்து நின்றுவிட்டோம்.
-0-0-0-0-0-0-0-0-0-
… சிலகாலமுன்பு, பாண்டிச்சேரியில் சீமார் அவர்களின் ‘நாம் தமிழர்’ தெருவோரக் கூட்டமொன்றுக்குப் போயிருந்தேன். ராமதாஸ் அவர்களின் சில மாதங்கள் முன் நடந்த வாணூர் கூட்டத்துக்கும்கூட! (இதுதான் அவருடைய தற்போதைய நிலையை நோக்கித் தள்ள ஆரம்பித்தது என நினைக்கிறேன்); பல திமுக கூட்டங்களுக்கு (அதன் தலைவர் கருணாநிதி அவர்கள் பேசும் வகையறாக்கள் உட்பட) போயிருக்கிறேன்; என்னுடைய தீர்மானமான தீர்வு என்னவென்றால், நம் தமிழர்களின் வீரத்துக்கும் (=அட்டைக் கத்தி), நேர்மைக்கும் (=தடித்தனம்), கருத்துத்தெளிவுக்கும் (=கந்தறகோளம்) ஒரு அளவேயில்லை.
நம் ஸ்ரீலங்கா பிரச்னைக்கே வருவோம். என்னடா, பல மாமாங்கங்கள் முன் டெஸொ ஆரம்பித்து புஸ்ஸோவாக்கினோமே, அவ்வளவு நேரத்தையும், சக்தியையும், அறிவையும் (!) விரயம் செய்தோமே, அதிலிருந்து என்ன கற்றுக்கொண்டோம், அதனால் அந்த ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு என்ன பிரச்னைகள் அற்புதமாகத் தீர்ந்தன என்பது அந்த புஸ்ஸோக்காரர்களுக்கும் தெரியாது. நாமும் அம்மாதிரி அசௌகரியக் கேள்விகள் கேட்க மாட்டோம்.
சிறிது காலம் சகதியில் சொதக் பொதெக் என டெஸோவுடன் நடந்து, சேற்றினை வாரியிறைத்து, அலுப்படைந்தவுடன் திடீரென்று இழுத்து மூடுவார்கள் – ஏன் எனக் கேட்க மாட்டோம்.
பின்னர் ஏன் தூசிதட்டி அதனை அண்மையில் மறுபடியும் ஆரம்பித்தோம் என அந்த ‘டைம்பாஸ்’ டெஸொ ஆசாமிகளும் சொல்ல மாட்டார்கள்; நாமும் கேட்க மாட்டோம்.
இந்த நோகடித்தல்களைத் தவிர, கீழ்க்கண்ட(மேனிக்கும்) நகைச்சுவைகள்:
- காமன்வெல்த் கூட்டமா? (துரோகி இந்தியாவே, அதைப் புறக்கணி!)
- முள்ளிவாய்க்கால் நினைவகமா? மயிர்க்கூச்செறிதல்!! (ஆனால் எல்டிடிஇகாரன்கள் செய்யாத அயோக்கியத்தனங்களாவா? இன்னாடா ஸொல்ல வர்ரீங்க, தமிழினத் துரோகீங்களா!! *&%#@^)
- கச்சத் தீவு மீட்பா? ( நமக்கு, திராவிட இயக்கங்களால் – ஆனந்தமாக உருவப்பட்டுக் கொண்டிருக்கும் நம்முடைய இடைக்கச்சுக் கோமணத்தைப் பற்றிக் கூடக் கவலையில்லை; இந்த அழகில் இந்த மிச்சத் தீவுச் சொச்சங்கள் தாம் நமக்கு மிகவும் முக்கியம்)
- என்ன, ஸ்ரீலங்கா தமிழர்களே வருத்தப் பட்டு, நொந்துபோய் — தமிழகத் தமிழர்கள் வாயை மூடிக்கொள்ளச் சொல்கிறார்களா? (அய்யய்யோ! இந்தத் தொப்புள்கொடியுறவை, ஈழத்தமிழர்கள் நிராகரித்தல் சரியா? (அல்லது) பதவிக்கு அல்லாடும் அந்த ஈழத்தமிழின துரோகிகள் ராஜபக்ஷவிடம் ‘பொட்டி’ வாங்கிக் கொண்டு விட்டார்கள்!)
- என்ன, ராஜபக்ஷ விருந்தும் வெகுமதிகளும் கொடுக்கிறாரா? சுற்றுலாவுக்குக் கூப்பிடுகிறாரா?? (ஓட்றா ஸ்ரீலங்கா நோக்கி, பரபரக்கப் பறந்து போடா சிம்புள் பறவ மாதிரி… பந்திக்கு முந்துறா, சோமாறீ, வளி வுட்றா – அல்லாத்தையும் மத்த குடாக்கு திராவிட இயக்கத் தளைவனுங்லே அள்ளிக்கப் போறானுவ…)
நம்முடைய மகாமகோ தமிழதடித்தனம் என்பது அளவில்லாதது. அது வாழ்வாங்கு வாழ்க.
-0-0-0-0-0-0-0-
உபசாளரம் (இந்த சாளரம் #7ன் அத்தை மகன்): நம் தமிழர்களின் அக்கறை / ஆர்வம் இன்மை, விட்டேற்றி மனப்பான்மை – splendid indifference (நொதுமல் நிலை என்றும் சொல்லலாமோ?). அதாவது, ‘யார் எக்கேடு கெட்டால் என்ன – எனக்குப் பிரச்சினையில்லாமல் இருந்தால் அது போதும்’ அல்லது ‘பாதையில் எதிரில் வரும் நரி, இடப்பக்கம் போனால் என்ன, வலப்பக்கம் போனால் என்ன, மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி’ அல்லது ‘என்னை நேரடியாக இன்றே பாதிக்காத எதுவும், என் மேலான பார்வைக்குகந்ததல்ல’ வகையறாக்கள்.
… அடிப்படைப் பொருளாதாரம் பற்றிய வாசிப்புகளில், என்னைப் பொறுத்தவரை மிக மிக முக்கியமானதொன்று பேராசிரியர் கேரெட் ஹார்டின் (Garrett Hardin) அவர்களின், 1968ல் வெளிவந்த கூர்மையான கட்டுரையான ‘பொதுச்சொத்துகளின் சோகநிலை.’ (The tragedy of the commons – இதனைப் பல வருடங்களாக, என் மாணவர்களுடன் உரையாடலை நடத்த உபயோகித்து வருகிறேன்)
இந்த ‘பொதுச்சொத்துகளின் சோகநிலை’ கட்டுரையின் சாராம்சம்: நம் சமூகத்துக்குப் பொதுவான சொத்துக்களை, நாம் தொலைநோக்குடன் பராமரிக்கவேண்டும் – இல்லாவிட்டால், அது நம் வளமையான எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் — என்பதை நாம் மிக நன்றாக அறிவோம். ஆனால், தனிப்பட்ட முறையில், தருக்கரீதியில் நாமெல்லோரும் தனித்தனியாகச் செயல்படும்போது – நம்முடைய குறுகியகால நோக்குகளினால், நம் தன்னலம் மட்டும் கருதும் போக்குகளால் – பொதுச் சொத்துக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக சர்வ நாசம் செய்வோம்.
இதன் சில எளிமையான எடுத்துக்காட்டுகள்:
- நான் ஒருவன் ப்லாஸ்டிக் குப்பை போடாவிட்டால், இந்த உலகம் சுத்தமாகிவிடுமா என்ன?
- நான் தேர்தலில் வாக்குப் பதிவு செய்யாவிட்டால் என்ன பெரிதாக நடந்துவிடப்போகிறது? வேட்பாளர்கள் எல்லாருமே அயோக்கியர்கள்தானே?
- வேறு யாருக்கும் தெரியாமல், நான் மட்டும் என் வயலுக்கு ஏரியின் நீரைப் பாசனம் செய்து கொண்டால் குடியா முழுகிவிடும்?
- …
இந்தப் பொருளாதாரம் சார்ந்த தத்துவத்தில், ‘பொதுச் சொத்து’ என்பதை, நம் பண்பாடு, வரலாறு, பாரம்பரியம் என்றும் விரித்துப் படிக்கலாம்; படிக்க வேண்டும்.
இப்படிப் படிக்கும்போதுதான் தெரியும்: “நாமொருவர் நம்முடைய வரலாறு/பண்பாடு என்பதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால் என்ன? இதைத் தெரிந்துகொண்டு என்னவாகவேண்டும்?” என்கிற நம்முடைய சுயநலம் சார்ந்த சோம்பேறி மனப்பான்மை – ஒரு நீண்டகால நோக்கில், நம் தமிழர்களின், தமிழகத்தின் ஆதாரசுருதிகளையே குலைத்துப் போட்டுவிடக் கூடியது. ஆனால், குறுகிய கால நோக்கில், கவைக்குதவாத திராவிடப் புளகாங்கிதங்களை அளிக்க வல்லது.
இச்சமயம், நான் கல்யாண்குமார் அவர்களின் சமீபத்திய தரமான கீச்சலொன்றைப் பகிர்ந்து கொள்கிறேன்:
“தமிழ்நாட்டு அறிவுஜீவிகளின் வரலாறு பற்றிய கவனம் பற்றி முகநூலில் அ. மார்க்ஸ்:
” வரலாறு என்பது நமக்கு வேத, சங்க காலங்களுடனோ, இராமயண, மகாபாரதங்களுடனோ, இல்லை பவுத்த, சமண, சோழ காலங்களுடனோ முடிந்துவிடவில்லை. இன்றைய இந்திய உருவாக்கத்தில் இந்தக் காலங்களைப் போலவே பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலங்களும் மிக மிக முக்கியமானவை. எனினும் நாம் அதற்குரிய முக்கியத்துவத்தை அளிப்பதில்லை. ஏராளமான இலக்கியங்கள், வரலாறு எழுது முயற்சிகள், மத, தத்துவச் சொல்லாடல்கள், சகல துறைகளிலும் வெளிநாட்டாரின் தொடர்புகள் நிகழ்ந்த இக்காலகட்டம் மிகமிக முக்கியமான ஒன்று.”
ஏன் என்பதைப் பற்றி திரு அ.மார்க்ஸ் கேள்வியெழுப்பவில்லை. அவ்வாறு எழுப்பியிருந்தால் பதில் இதுதான்.
”திராவிட இயக்கத்தின் மையக் கொள்கைக்கும் அரசியல் நோக்கங்களுக்கும் தேவையான ’வரலாற்றை’ மட்டுமே அரைகுறையாகப் பயின்றால் போதும். நமக்கு தமிழகத்தின் உண்மையான சமூக வரலாறு, அதாவது இன்றைய சமூக அமைப்புக்கு நேரடியான தொடர்புடைய வரலாறு பற்றி எந்த அக்கறையும் இல்லை. அந்த உண்மைகள் நம் நோக்கங்களுக்கு இடையூறாக இருக்கும் வாய்ப்பு அதிகம். இதனால்தான் நாம் வரலாற்றால் என்றோ காலாவதியாகி, காலனியர்களால் அவர்களுடைய நோக்கங்களுக்காக முன்நிறுத்தப்பட்ட மனுஸ்மிருதி பற்றியும், அசுவமேத யாகத்தின் வன்முறை பற்றியும், மூன்றாம் நூற்றாண்டின் வைதிகத்தின் ஊடுருவல் பற்றியும், என்றோ இருந்ததாகச் சொல்லக்கூடிய ‘தமிழ்’ அடையாளம் பற்றியும், எட்டாம் நூற்றாண்டில் நடந்த சமணர்கள் கழுவேற்றம் பற்றியும் பேசிக்கொண்டு வருகிறோம். அதுதான் நம் இயக்கத்திற்கு நன்மை பயக்கும்.”
ஃபூக்கோ ஹோலோகாஸ்ட் பற்றி எழுதினார். உண்மைதான். ஏனெனில், அவர் வாழ்ந்த சமூகம் யூத இனப் படுகொலையைச் சாத்தியமாக்கி நிகழ்த்திய ஐரோப்பியச் சமூகத்துடன் நேரடித் தொடர்ச்சி பெற்றிருந்தது. அவர் ஜோன் ஆஃப் ஆர்க்கை நெருப்பிலிட்டு கொளுத்திய மத்திய கால கிருத்துவ வன்முறைக்காக கழிவிரக்கப்படுங்கள் என்று தம் சக ஐரோப்பிய பிரஜைகளிடன் மாய்மாலம் செய்யவில்லை. ஏனெனில் ஃபூக்கோ உண்மையான அறிஞர்.
திராவிட இயக்கம் ஒரு அரசியல் இயக்கம், அறிவார்ந்த இயக்கமல்ல.முறையான, துல்லியமான வரலாற்றறிவு அவர்களுடைய நோக்கமாக என்றும் இருந்ததில்லை. தமிழர்கள் அவர்களிடமிருந்து தம் வரலாற்றை மீட்டு அதை முறையாகக் கட்டமைக்கவேண்டும். அதன்பின் உண்மையான பகுத்தறிவின் அடிப்படையில் மாற்று அரசியல் நோக்கங்களும் இயக்கங்களூம் உருவாகக்கூடும்.”
-0-0-0-0-0-0-0-0-0-0-
எப்போதுதான் நாம், நம்முடைய பொதுப்பாரம்பரியத்தைச் சர்வ நாசமாக்கும் காரியங்களை – அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்வதை, நிறுத்தப் போகிறோம்?
எப்படித்தான் நாம் நம்முடைய கடந்த சில நூற்றாண்டுக்கால அவரலாறுகளை, போலிக் கற்பிதங்களை, கந்தறகோளங்களைக் கடாசப் போகிறோம்?
‘திராவிடம்’ எனும் மாய்மாலக் கற்பனைக் கழுதையிலிருந்து எப்போதுதான் இறங்கப் போகிறோம்?
அறிவுஜீவி அ. மார்க்ஸ் அவர்கள் உண்மையில், அமார்க்ஸ் (‘full’ marx for guessing!) என்பதை எப்போது அறிவோம்?
… நாம் ஆரம்பிக்க வேண்டும். படிக்க ஆரம்பிக்க வேண்டும்.(கொஞ்சம் மணிரத்ன வசனமாக்கியமைக்கு என்னை மன்னிக்கவும்) :-(
தொதுமல் நிலையை ஒழிக்க வேண்டும். சந்தித் தெருப் பெருக்கிச் சாத்திரம் கற்று அறிந்து, உடலும் மனதுக்கும் சேர்த்து விடாமுயற்சி செய்து, நம் தோலடிக் கொழுப்பினை உருக்கியழிக்க வேண்டும். வேறு வழியேயில்லை.
ஆமென்.
December 10, 2013 at 08:03
Well, thank you for quoting my views on the selective and shoddy deployment of history by the Dravidian movement for their own ends.
However, I would like to clarify a few things.
I do NOT share your admiration of Subramaniam Swamy and his professed creed of political Hinduism aka Hindutva. To me, what the Sangh Parivar does in this respect is very similar to the Dravidan movement’s core practice: deploy half-baked readings of ‘history’ and ‘grievances’ of a bygone era to fan animosities in the present, towards establishing majoritarian hegemony. In this they both use sacred geography / insider-outsider arguments. In fact, the Sinhala Buddhists in Sri Lanka appear to do much the same.
And all three practice, to varying degrees, the same kind of cult-based rightwing authoritarianism, even under a democratic framework.
My 2p.
December 10, 2013 at 20:29
Sire, I did not say that you share my admiration(!) for anyone and anything. But, nonetheless, thanks for clarifying your PoV.
I used your twitlonger stuff, as a runtime library (or that mickeysoftey twist of dll, if you will) and did not intend to paint you with my colour. So, paint it black (not). Blame it on that jaggery sweet mickey…
I am not making you to a party to my stew, by quoting you and of course, our dear georgie.
I am against many rabid forms (including that of mine) of random isms and am for open societies – but, I have quite a few epistemological differences with what you have expressed. I feel that western categories of thoughts and sociological processes are a big issue for me – I instinctively bristle up and… (will expand on this later)
Again – I am a devout worshiper of the Great Gray – and feel that one can (and should) always take what one feels is right and leave what one feels is left – from anything, Swamy’s statements included. Same is applicable to me and what I choose to pontificate on.
I even have a slew of some aspects based on which, I admire the Dravidian Movement, believe me! O tempora! O mores!! :-)
’nuff said.
December 10, 2013 at 09:13
Would someone explain this to me please – if ” Volga to Ganges ” of Rahula Sankrithyan is acceptable, what is wrong with ” Indus to Ganges” by Swami?
December 10, 2013 at 15:08
\\ deploy half-baked readings of ‘history’ and ‘grievances’ of a bygone era to fan animosities in the present, towards establishing majoritarian hegemony. \\
With all due respects, I differ from the above comment.
The Hindutva vadins engage in genuine research. Some of recent publications from their end, I hope, should prove the contrary point. Aravindan Neelakandan, Rajiv Malhotra – sure one may have many points of differences, but atleast one can not say these are half baked readings of ‘history’
“Hindutva vadins are working towards establishing majoritarian hegemony” – Noway. Wrong perception.
December 12, 2013 at 02:08
தாங்கள் கூறும் இத்தகைய தமிழர்கள் எத்தனை சதவிகிதம் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?