படுபாவீங்களா!
January 12, 2014
ஏண்டா, வொங்களுக்கு நேரடியா ஒரு வெஷயத்தச் சொன்னா புரியவே புரியாதா?
நேத்திக்கு – குறிப்பா அந்த எஸ்ரா-வோட அடிப்பொடி எழுதின முழிபெயர்ப்பு பக்கம் போகவே போகாதீங்கடான்னு படிச்சு படிச்சு சொன்னேனேடா!
நான் சொல்றத கேக்கவேகேக்காம 70-80 பேர் துள்ளிகுதிச்சிக்கிட்டு ஓடிப்போய் அந்தக் கந்தறகோளத்தப் பாத்திருக்கீங்களேடா! உருப்படுவீங்களா??
பசங்களா, இந்த வலப்பூவ படிக்கறதே நீங்க மட்டும்தான்! இப்ப ஒங்க அத்தன பேரோட ரத்தத்தையும் அந்தக் காட்டேரி உறிஞ்சிடிச்சின்னா, மிச்சம்மீதி யாருமே இருக்கமாட்டேங்களேடா! அய்யோ! அப்பறம் யார்டா என்னோட அழகான பதிவுகள படிப்பாங்க? கொஞ்சமாச்சும் யோசீங்கடா! எனக்கு மனசே ஒட்ஞ்சி போய்ட்ச்சிடா…
ஹ்ம்ம்… சரி, போய் செத்துத் தொலைங்கடான்னு முட்டாக் கூவானுங்களான்னிட்டு விடமுடியுதா? ஓடிப்போய் அங்க பாத்துட்டு, இங்க வந்து அத்லேர்ந்து வெட்டி ஒட்றீங்களேடா, சாவுகிராக்கிங்களா! உருப்பட்ற வழிய பாருங்கடா. ஏற்கனவே அவனவன் பேதி வந்து கெடக்கான்! மேல ரத்த வாந்தி எட்த்து சாவணுமா?
இதுல ஒரு ஆள் மணிப்பிரவாள நடேல வேற எழுதி மயக்கம் வரவெக்கறாரு… கேட்டா ஔவையாரப் பத்தி லெக்சர் கொடுப்பாரு! இன்னொர்த்தர் என்னோட கோனார் வொரைக்கு அவரோட கோனார் நோட்ஸ் போட்றாரு… போதாக் கொறைக்கு இந்த டூய டமிள் குலுவாண்கல் கொக்கரிக்கறானுவோ… இந்த வயஸ்ல எனக்கு இது தேவையா?
வொங்கள மாரி கஸ்மாலங்களுக்கா நான் லொங்கு லொங்குனு லோல் பட்டுக்கினு கந்தறகோள எஸ்ராக்கள படிச்சிட்டு மண்ட காஞ்சு மூள உருகி கண் சொருவிட்டிருக்கேன்?
என்னடா சொல்றீங்க? வொங்களுக்கு நான் தேவையா, எனக்கு நீங்க தேவயா?? இன்னாங்கடா, ரொம்ப திமிரா?
… … இப்ப இன்னாடா பண்ணுவேன்… அளுவையா வருதே!
Plan B:
… என்னோட ஒரே சந்தோஷம் என்னன்னாக்க, என் ஒரிஜினல் ஃப்ரென்ட் பூவண்ணன் அய்யா, இப்ப கொஞ்ச நாளா தலமறவா இருக்காரு. கூடவே இன்னொரு எளைஞர் பொன். முத்துக்குமாரும் அமெரிக்காவுல பதுங்கியிருக்காரு. இவங்க ரெண்டுபேரும் சேர்ந்து திட்டம் போட்டு, கூட இரும்புக்கைமாயாவி, டேவிட், ஜானி நீரோ, ஸ்டெல்லா, தருண் தேஜ்பால், சாரு நிவேதிதாவெயெல்லாம் ஜமா சேத்திக்கினு, சாத்தானோட பிடீலேந்து ஒங்களயெல்லாம் காப்பாத்திடுவாங்க… அது வெரிக்குமாவது சமத்துக் கண்ணுங்களா, பெர்சு சொல்றத கேட்டுக்கினு சமத்தா அங்கியே இருங்கடா… வேற வொரு பதிவையும் படிக்காதீங்கடா… கொள்கைக் கூட்டணி வெச்சுக்கினு அந்த ரெண்டு பேரும் ஒங்கள காப்பாத்திடுவாங்கடா…
அதுவெரெக்கும் நான் எஸ்ராவ பாராயணம் பண்ணிக்கினு இருக்கேண்டா! என் பாவத்த தொலைக்கணும்டா!! என்னால வேற என்னதாண்டா செய்யமுடியும்??
துரோகீங்களா… கவ்த்துட்டீங்களேடா! :-(
January 13, 2014 at 11:07
பூவண்ணன் அவர்களும் . பொன். முத்துக்குமார் அவர்களும் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்…….
January 13, 2014 at 11:09
அய்யா! நீங்கள் எப்படித் தப்பித்தீர்கள்?
உங்கள் அதிசாகசக் கதையைக் கேட்பதற்கு நாங்கள் அனைவரும் மிக ஆவலாக உள்ளோம்.
January 13, 2014 at 11:16
ஹ! பூவண்ணன் அவர்களை அழைக்க, நான் மோதி பற்றி ஒரு பதிவிட்டால் போதும். அல்லது திராவிட முயக்கங்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும். ஒரு சுட்டிப் படையையே கொண்டுவந்து நீ எழுதுவது ‘நாயமா’ எனக் கேட்கத் தயங்க மாட்டார்!
ஆனால் அவரும் ராமகிருஷ்ணமாயையில் சிக்கி பரிதவித்துக் கொண்டிருக்கிறாரோ என்ன இழவோ? அல்லது சென்னை கந்தக மந்தையில் எஸ்ரா புத்தகங்களாக அள்ளிக் கொண்டிருக்கிறாரோ? அல்லது, விவேகமில்லாமல் நம்முடைய Ramakrishna Fission-க்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறாரோ…
என் நெஞ்சம் கலங்குகிறதே! ஐயகோ!
January 13, 2014 at 22:15
உள்ளேன் ஐயா !
வந்தேன் ஐயா !
ஆத்தாடி, வந்தேபுட்டேன்யா !!!!!
—->>> சின்ராசாவே! உபபாண்டவரே, துணையெழுத்தாரே!! இக்கால சங்கர்லாலே! அக்கால இங்கர்சாலே!
தயவுசெய்து இரண்டாம் தமிழ்வாணனிடமிருந்து ( ‘maashtar of awl subjaads! (including Jen, wahrrld pilims, wikipedia, google)) தமிழைக் காப்பாற்றுங்கள்! (ஆங்கில இழவையும், முடிந்தால்)
தமிழ்மொழி! என்னை நீ மறந்துவிடு!
ஆங்கிலம்! நீ மரத்து விடு!!
__ரா.
பின்குறிப்பு: பொங்கல் வாழ்த்துகள்! ;-)
January 13, 2014 at 22:40
“வேணும் கட்டைக்கு வேணும், வெங்கல கட்டைக்கு வேணும்”
உமது முந்தைய பதிவொன்றில், உம்மிடம் இருக்கும் உழைப்பை மதிக்காத – ’சும்மா குத்தம்’ சொல்லிக்கொண்டிருக்கும் இழிகுணத்தை இடித்துக்காட்டும் பாட்டாளி வர்க்க நெஞ்சுரமும், உம்மிடம் பொங்கிப்பெருகி கொப்பளித்துக்கொண்டிருக்கும் ’பாப்பார வெறி’-யை காணும் ஒளிபடைத்த கண்களும் , ’அவதூறு செஞ்சே பிழப்ப நடத்தும்’ உம்மை தோலுரித்துக்காட்டும் தார்மீக நேர்மையும் கொண்டு டமிலன் எவ்வளவு சிரத்தையோடும், அறச்சீற்றத்தோடும் வினவி (அட அவங்க இல்லப்பா, மெய்யாலுமேங்கிறேன்)யிருந்தார் ?
ஏதோ, பதிவிட்டிருந்தீரோ, தப்பித்தீர். இல்லையெனில் மோதி மிதிக்கப்பட்டிருப்பீர்.
அப்புறமும் நீவிர் உமது வாலை சுருட்டிக்கொண்டு இல்லாமல் போனால் யார் பிழை !
இனிமேலாவது உமது பள்ளி உண்டு, பிள்ளைகளுக்கு பூவால் டி.என்.ஏ டிசைன் செய்யக்கற்றுக்கொடுக்கும் அழகியல் கல்வி உண்டு என்று இருக்கவேண்டும் !
இன்னாபா பிர்ஞ்சிதா ?
——>>>>>>> ஹப்பா! வந்த்டீங்ளா!! குர்வே வணக்கம்! எங்களக் காப்பாத்துங்க அய்யா! ஏதோ தெர்யாத்தனமா செஞ்சிட்டோம்யா! எப்டியாவது பூவண்ணனக் கெள்ப்பிக்கினு வந்து ஜோடியா அவ்ங்ள ஒளிச்சிக் கட்டுங்கய்யா!
இனிமே, நான் இவ்னுங்க வம்புக்கே போவமாட்டேன். என் தொன்னை மீதாணை!
புறமுதுகிட்ட புர்ச்சித்தலைவன்.
(தொன்னை என்பதைக் கொஞ்சமாக கன்னடத்தில் விரித்துக் கொண்டு மன்னிக்கவும்)
January 14, 2014 at 09:52
சார் அப்பப்ப கொஞ்சம் வேலையும் பார்க்கணும் அல்லவா.
எஸ் ரா அவர்களை பிடித்து கொண்டு ஆராய்வதை விட மோடிஜி பற்றி ஆராய்ந்தால் ஞாயம்.
அசகாய சூரர்,சர்வரோக நிவாரணி என்று அவரை பற்றி பலர் அடித்து விடுவதை விடவா எழுத்தாளர்கள் பொய் சொல்கிறார்கள்.அவர்கள் பொய்களால் எந்த நட்டமும் கிடையாது.ஆனால் மோடிஜியை பற்றிய பொய் புனைவுகளால் நாட்டிற்க்கே பெரும் தீங்கு நிகழும் வாய்ப்புகள் உண்டு
மோடியை ஆதரிப்பவர்கள் எல்லாருமே சோ மாதிரி பெண்களை பொருட்டாக மதிக்காதவர்களா.இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆண்- பெண் சதவீதம் குறைந்த மூன்றே மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று.
தமிழகம் 1000-995 2011 சென்சுஸ்
குஜராத் 1000-918 2011 சென்சுஸ்
0-6 குழந்தைகள் சதவீதம்
தமிழகம் 1000-946
குஜராத் 1000-886
தமிழகம் கூட சரி என்று சொல்ல முடியாது.கேரளாவின் நிலையை அடைய இன்னும் முயற்சிக்க வேண்டும்.நீங்கள் இருக்கும் புதுச்சேரி இதில் முதலிடத்திற்கு போட்டி போடும் சிறு மாநிலம்.மாநிலத்தில் லட்சக்கணக்கில் பெண் குழந்தைகள் குறைவதை கண்டு கொள்ளாத (கடுமையான சட்டங்கள் இருந்தாலும்),அப்படி தப்பி பிழைத்த பெண்களும் அரசு மற்றும் சொந்த குடும்பங்களின் மாற்றாந்தாய் மனப்பான்மையினால் ஆண்களோடு ஒப்பிடும் போது குறைந்த நாள் வாழும் நிலையில் உள்ள மாநிலத்தின் முதல்வரை தலையில் தூக்கி கொண்டு ஆடுவதை விடவா எஸ் ரா தவறு செய்து விட்டார்
January 14, 2014 at 10:18
மிக்க நன்றி, ஆபத்பாந்தவரே, அனாதரட்சகரே!
பாரதியே சொன்னது போல – ‘கேட்டதும் குரல் கொடுப்பான், பூவண்ணன்!’
அய்யா, இப்போது என்னிடம் மோதி தொடர்பாக மோதி என்ன காரியம். சாவகாசமாக இதைச் செய்யலாம். எஸ்ரா தளத்தில் மாட்டிகொண்டு, வெளிவர முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு, முதலில் முதலுதவி செய்யுங்கள்… மருத்துவர்கள் முதலில் நோயாளிகளைக் காப்பாற்றவேண்டுமல்லவா – பின்னர் சாதாரணமானவர்களுக்கு நோய் வரவழைக்கலாம்.
அவர்களில் பெரும்பாலோர் வாந்தி பேதி போன்றவைகளால் துன்பப் படுகிறார்கள் எனக் கேள்விப் படுகிறேன். இப்போதே நீங்கள் தடுத்தாட்கொள்ளாவிட்டால் இது மூளைப் புற்றுநோய் அளவிற்குப் போய்விடும் அல்லவா…
தம்பீ முத்துக்குமார் வந்திருக்கிறார் – அலுவலக வேலைகளுக்கிடையில், தொடைகளைத் தட்டிக்கொண்டு, கர்ஜித்துக் கொண்டு… எல்லாம் உங்களுக்கு (அதாவது நமக்கு) உதவுவதற்குத் தான்…
வென்று திரும்பிவா தம்பீங்களா! போரில் வென்று பகைவருடன் மோதி வெற்றிக் கனியைப் பறித்திட்டு வாருங்கள்…
January 14, 2014 at 22:08
ஐயா, தல, அண்ணே, தொர, பாஸ் …. எஸ்.ரா பத்தில்லாம் பேச எனக்கு தகுதி பத்தாதுங்க சாமியோவ். நா சொன்னது, நீங்க அந்த மொழிபெயர்ப்ப படிச்சி (?!) முழிபெயர்ந்துபோன அனுபவத்த பத்திதானுங்கோவ்.
அப்பீட்டு உட்டுக்கிறேன்னு தப்பா நென்ச்சிக்காம பெரீஈஈ மன்சு பண்ணி கொஞ்சம் மன்சிக்க தொரே.
January 16, 2014 at 08:37
கரெக்டா பாயிண்ட பிடிச்சீங்க பூவண்ணன் சார். ஆனா பாருங்க, நம்ம ஊருல அரசியல்வாதியையோ, அவன் சொல்றதயோ, அவன பத்தி ‘நல்லவரு, வல்லவரு’-ன்னு சொல்றதயோ அப்படியே எல்லாரும் நம்பிடறதெல்லாம் இல்லீங்க சார். அப்படில்லாம் நம்பிட்டிருந்த காலமெல்லாம் மலையேறிப்போச்சுங்க சார்.
ஆனா எஸ்ரா மாதிரி எழுத்தாளர் கதை அப்படி இல்லைங்க. (எனக்கு எஸ்ரா எழுதினது பத்தின விமர்சன தகுதிலாம் இல்லை, இங்கே பேசப்படுறது அவருங்கறதால அவரப்பத்தி உதாரணப்படுத்தி பேசுறேன்) அவரு தமிழகத்துல சிலபல பத்தாண்டுகளா புறக்கணிப்புல இருந்த – இன்னமும் இருக்கிற – ஒரு தீவிர இலக்கிய படைப்பாளி குழுவோட பிரதிநிதி. அவரை தீவிரமா வாசிக்கிற – அவரு உலக சினிமாவ பத்தி உரையாற்றினா குறிப்பெடுத்துக்க தயாரா இருக்கிற (நன்றி – ”எஸ் ராமகிருஷ்ண லீலா தரங்கிணி … (1/3)” பதிவில் கணேஷ் என்பவரது பின்னூட்டம்) இளைய தலைமுறை வாசகர்கள் நிறைய இருக்கிறாங்க (அவரோட நூல்கள் வெளியீட்டு விழா புகைப்படங்கள பாத்தா அப்படித்தான் தெரியுது)
அப்படி இருக்கும்போது தனது எழுத்தின்மீதான நம்பகத்தன்மை குலையும்படியா – குறையும்படியா ஒரு சீரிய(ஸ்) எழுத்தாளர் எழுதுவார்னா அது அவரோட தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. ஓரிருமுறை இந்த மாதிரி குலைஞ்சா, அவர் பிரதிநிதித்துவம் செய்யிற தீவிர இலக்கிய படைப்பாளிகள் அனைவரையும் இது பாதிக்க வாய்ப்பிருக்கு. இதனால தீவிர இலக்கியம் பக்கம் எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கும் இளைய சமூகம் நம்பிக்கை இழந்து பின்வாங்கினா, அது இலக்கியத்துக்குத்தான் இழப்பு.
அன்புடன்
பொன்.முத்துக்குமார்.
பி.கு : ஒண்ணே ஒண்ணுங்க பூவண்ணன். ஆண்-பெண் சதவீதம் குறையறதுக்கெல்லாம் மோடிய குத்தம் சொல்ற காமெடிய கொஞ்சம் குறைச்சுக்கணும்.
January 17, 2014 at 12:52
சார் நான் திடீரென்று ஒரு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு டீன் ஆகி விடுகிறேன் என்று வைத்து கொள்வோம் (ஒரு தேர்தலிலும் நிற்காமல் அதிகார மய்யங்களை காக்கா பிடித்து பின்வாசல் வழியாக நம்ம மோடி திடீர் முதல்வர் ஆன மாதிரி )
அந்த மருத்துவமனையில் பெண் குழந்தைகள் இறப்பு மற்ற மருத்துவமனைகளோடு ஒப்பிடும் போது மிக அதிகம்.சட்டத்தால் கடும்குற்றம் ஆக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பெண் கரு என்று அறிந்து கொள்ளும் பெண்கருகொலை மிக அதிகம். அதை மாற்ற பலர் போராடுகின்றனர்.இந்த மருத்துவகல்லூரி மருத்துவமனையை விட மோசமான நிலையில் இருந்த மற்ற கல்லூரிகள் குறிப்பிடத்தக்க மாற்றத்தை 10 ஆண்டுகளில் அடைந்துள்ளன.ஆனால் நான் டீனாக இருக்கும் கல்லூரியில் பத்து ஆண்டுகள் கழித்து நிலை முன்பை விட மோசம்.
பெண்கருகொலையை தடுப்பதற்கு கடும்சட்டங்கள் இருந்தும் என் ஆதரவாளர்கள்(நேரடியாக பதவியில் உட்கார வைத்த ஆர் எஸ் எஸ் பெண்களை கிட்டே சேர்க்காத குழு ஆயிற்றே ) தான் பெரும்பாலும் பெண் சிசுகொலையில் ஈடுபடுபவர்கள் என்பதால் அவர்களை கண்டும் காணாமல் விட்டு விட்டேன்(குஜராத்தில் உள்ள இஸ்லாமியர்களில்,காங்கிரெஸ் இன்றும் வெற்றி பெரும் கிராமபுரங்களில்,பழங்குடியினரில் ஆண்-பெண் சதவீதம் தேசிய சரசாரியை விட அதிகம்).பத்தாண்டுகளுக்கும் மேலாக தலைமை பொறுப்பில் இருந்தும் சிறு மாற்றத்தை கூட ஏறபடுத்த முடியாத தலைமை தான் நாட்டையே ஆள சிறந்த தலைமை என்று நீங்களும் எண்ணுவது வேதனை தான்
January 17, 2014 at 12:58
முத்துகுமார் சார்
உங்களை போல பல கோடி மக்கள் நினைப்பது தான் சார் வேதனை.நாட்டின் அடிப்படையே மக்கள் தான்.அதில் பாதியான பெண்களை கருவிலேயே கொல்லுவதை,தப்பி பிறந்த பெண்களும் மருத்துவம்,கல்வி,வேலைவாய்ப்பில் ஒதுக்கப்டுவதை,அதன் காரணமாக ஆண்களை விட குறைந்த நாட்கள் வாழ்வதை(உலகில் பெரும்பான்மையான நாடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக நாட்கள் வாழ்பவர்கள்.அதனால் ஆண்-பெண் சதவீதம் பெண்களின் பக்கம் தான் சாதகமாக இருக்கும்) மாற்றுவது அரசின் வேலையல்ல ,அப்படி செய்ய தவறியவர்கள் தான் நாட்டின் சிறந்த தலைவர்கள் என்று கூச்சமில்லாமல் தம்பட்டம் அடிப்பது சரியா
மத்யப்ரதெச முதல்வர் இதே காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்துள்ளார். மிகவும் மோசமாக இருந்த பஞ்சாப் ,ராஜஸ்தான் அரசுகளும் குறிப்பிடத்தக்க அளவில் முன் இருந்த மிக மோசமான சதவீதத்தில் இருந்து மோசமான சதவீதம் என்ற நிலையை அடைந்துள்ளனர்.அரசின் அடிப்படை கடமையே இது தான் சார்
January 16, 2014 at 08:30
“மோடியை ஆதரிப்பவர்கள் எல்லாருமே சோ மாதிரி பெண்களை பொருட்டாக மதிக்காதவர்களா.இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆண்- பெண் சதவீதம் குறைந்த மூன்றே மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று.”
மோதியை பற்றி ஏதாவது தப்பிதமாக பேச/எழுத சில பேர் ரூம் போட்டு யோசிப்பார்களோ?