எஸ். ராமகிருஷ்ணன் – ஒரு எதிர்கொள்ளப்படவேண்டிய எதிர்வினையும், ஒரு தன்னிலை விளக்கமும்…

January 21, 2014

நான், பல காரணங்களுக்காக மிகவும் மதிக்கும் பெரியவர் ஒருவர் (மன்னிக்கவும், இவர் ஒரு பார்ப்பனர் அல்லர்; ஆர்க்காட்டு முதலியார், எண்பது வயதிருக்கலாம்; மணிக்கொடி பற்றிப் பேசிப்பேசியே கழுத்தை அறுப்பவர். இக்காலங்களில் இன்டெர்நெட்டிலேயே ஐக்கியம் ஆகி மாங்குமாங்கென்று படித்துக் கொண்டிருப்பவர்; ஜேஜே: சில குறிப்புகளின் அரவிந்தாட்ச மேனனை நினைவு படுத்துபவர்; தனிமையையும் தமிழையும் விரும்புபவர்; ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர் அதிகம் பேசாதவர்), ஒரு நீள மின்னஞ்சலில், வருத்தப்பட்டு, கோபத்துடன் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்; கீழே அதன் சாராம்சம், என்னுடைய  வார்த்தைகளில்:

ஏன் இப்படிச் செய்கிறாய். மற்ற எழுத்தாளர்க ளெல்லாம் பெரும்பாலும் அப்படித்தானே இருக்கிறார்கள். எஸ். ராமகிருஷ்ணன் அவர்களை மட்டும் தனிப்பட்ட முறையில் ஏன் குறி வைத்துத் தாக்குகிறாய், இம்மாதிரி ஆட்களால் தானே, இலக்கியத்தின் பக்கம் மேன்மேலும் மக்கள் ஈர்ப்படைந்து, பின்னர் நல்ல இலக்கியங்களுக்கு அறிமுகமாவர். சுளுக்கெடுப்பது உன் தொழிலா. ஒரு விமலாதித்த மாமல்லன் போதாதா. தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் கூட கொண்டாடத் தக்கவரில்லையா. நீ ஏன் இப்படி முரடனாக இருக்கிறாய். ஏன் இந்த தேவையற்ற சகதி. அமிலத்தன்மையைக் குறைத்துக் கொண்டால், இன்னமும் நிறைய பேர் படிப்பார்களே…  நல்ல விஷயங்களைப் பற்றி எழுதலாமே. கெட்ட வார்த்தைகளைக் குறைத்துக் கொள்ளலாமே… டட்டடா டட்டடா…

-0-0-0-0-0-0-0-0-0-

அவருக்கு நான் எழுதிய தமிழ் பதிலின், கத்தரிக்கப்பட்ட (சுத்திகரிக்கப்பட்ட, தனிப்பட்ட விவரங்கள் வெட்டப்பட்ட), ஆக, 1/3 ஆகக் குறைக்கப்பட்ட வடிவம்:

அய்யா, உங்கள் நீள மின்னஞ்சலை, பலமுறை படித்தேன்.

நான் எழுதும் கந்தறகோளங்களை, உங்களையும் சேர்த்து ஐம்பது பேர் படித்தால் அதிகம். என்னுடைய வீச்சென்பது நீங்கள் நினைப்பது போல ஆயிரக்கணக்கில் என்றெல்லாம் இல்லை. ஆக, கவலை வேண்டேல். மெல்லத் தமிழ் இனிச் சாகும்.

எஸ். ராமகிருஷ்ணன் அவர்களைப் பற்றி இனிமேல் எழுதாமல் இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, நீங்கள்தான் என்னை மறுபடியும் சகதியில் தள்ளுகிறீர்கள். ஹ்ம்ம்ம்.

…ஆனால், கடந்த இரு வாரங்களாக, தமிழ் இலக்கியப்போலிச் சராசரிகளின் பிரதிநிதிகளில் முக்கியமான ஒருவரான எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் குழப்படிகளில் நான் சராசரித்தனமாகத் தத்தளித்து, மனதில் ஒரு சமன நிலையே இல்லாமல் அதிசராசரித்தனமாகப் பொரிந்து கொண்டிருந்திருந்தேன் – ஒப்புக் கொள்கிறேன். இதற்கு முன், தமிழ் இணையப்போலிச் சராசரிகளின்  இளம்பிரதிநிதிகளில் முக்கியமான ஒருவரான யுவகிருஷ்ணா அவர்களின் குழப்படிகளில்… இதனைத் தவிர தொடரும் போலித் திராவிட, திராவிடப் போலிகளின் மீதான அதீத  எதிர்மறை ஈடுபாடு… இதையெல்லாமும் நீங்கள் படிக்கவில்லையென்றால், பாதகமில்லை. உங்களுக்கு மனவுளைச்சல் மிச்சம்.

ஏன்தான் அவ்வப்போது எனக்கு இப்படிப் பேய்பிடிக்கிறது என்பதும், என் மனைவியுடனான உரையாடல்களினால் கொஞ்சம் பிடிபட்டிருக்கிறது:

0. எவ்வளவோ (=ஆயிரக்கணக்கான) நல்ல விஷயங்கள் – கேட்பதற்கு, படிப்பதற்கு, பார்ப்பதற்கு, தொடுவதற்கு, சுவைப்பதற்கு, உணர்வதற்கு, பரிமாறுவதற்கு, பகிர்வதற்கு என்று இருக்கின்றன. அதுவும், சுய அனுபவம் சார்ந்தே இருக்கின்றன. கற்றதும் காற்றில் பறக்கும் தூசியளவுகூட இல்லை. எவ்வளவோ விஷயங்கள் கற்றுக் கொள்ள இருக்கின்றன. இருந்தாலும் பேய் பிடிக்கிறது என்றால், அதனைப் பற்றி நிதானமாக நான் யோசிக்கவேண்டும்தான்.

1. நான், இம்மாதிரி ஆட்களின் எழுத்துகளை, அரசியலை, நம் தமிழ் நாட்டின் சாபக்கேடுகளில், அதன் தொடரும்  சீரழிவுகளில் ஒன்றாக, அற்பத்தனங்களின் ஒரு குறியீடாக மட்டுமே பார்க்கிறேன். இவர்களை தவறான வழிகாட்டிகள் (wrong role-models) என்கிறேன்.

2. இவர்களை ‘தனிப்பட்ட’ முறையில் எனக்குத் தெரியாது, ஆக இவர்களுடன் வேறெதும் மனமாச்சரியங்கள் இல்லை; இவர்களுடைய எழுத்துகளின் மீதுதான் எனக்கு மகாமகோ கடும் விமர்சனங்கள் இருக்கின்றன. இவர்களைப் பற்றிய என் விமர்சனத்துக்கு(!) வேறு சொந்தக் காரணங்கள் இருக்கின்றன என்றில்லை. தனிமனிதர்களாக, தமிழ் எழுத்து சாராத  தளங்களின் இவர்கள் மெச்சத் தகுந்தவர்களாகவே இருக்கலாம். அடிப்படையில் பொறுப்புணர்வு மிக்க தந்தைகளாகவும், நல்ல கணவன்களாகவும், ஏன், மிக நல்ல பிரஜைகளாகவும்கூட இருக்கலாம். எனக்கு தெரியாது. இப்போதைக்குத் தெரிந்துகொள்ள விருப்பமும் இல்லை. ஆனால், ஹ்ம்ம்… கொஞ்சம் யோசித்தால், நேரில் எஸ்.ரா அவர்களை சிலமுறை ‘முன்றில்’ புத்தகக் கடையில் ஏறத்தாழ இருபதாண்டுகளுக்குமுன் சிலதடவை பார்த்திருக்கிறேன், கொஞ்சம் கேட்டுமிருக்கிறேன் என்பது நினைவுக்கு வருகிறது. ஆனால், மிகவும் துக்கம் கொடுக்கும் வகையில் அவர் ஒரு பரிமாணத்திலும் (ஒருவேளை, உடலைத் தவிர) வளரவேயில்லை எனத்தான் தெரிகிறது. தமிழர்களுக்கு அரைகுறைத்தனம் போதும் – முட்டாட்கள், தூக்கிவைத்துக் கொண்டாடுவார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது, புத்திசாலிதான் இவர், ஆனால் என்ன செய்ய!

3. சுளுக்கெடுப்பது என்பது என் தொழிலல்ல. விமர்சனம் செய்து தள்ளுவது எனக்கு உவப்பானதாகவும் இல்லை. மனிதர்களைத் தேவைமெனக்கெட்டுக் கேவலப் படுத்தும் ஆசையுமில்லை. இருந்தாலும், பகிரங்கமாக நடக்கும் அழிச்சாட்டியங்களை, வெட்கமேயில்லாமல் மறுபடியும் மறுபடியும் செய்யப்படும் அற்பத்தனங்களை,  வேறு யாரும் சுளுக்கே எடுப்பதில்லை என்றால், நானாவது செய்யவேண்டும் என்றுதான் தோன்றுகிறது. எஸ்.ரா போன்றவர்கள், கமுக்கமாகக் காப்பியடித்துக்கொண்டு, காலேஅரைக்கால் புரிதல்களுடன், நைந்தநடையில் எழுதிக்கொண்டே போகிறார்கள், தேசதேசங்களாகப் போய் தம்முடைய சராசரித்தனத்தைக் கவிழ்த்திவிட்டு அமோகமாக அரைகுறை அறுவடைகளைச் செய்கிறார்கள். மனுஷ்யபுத்திரன் கவிதைகளென்று வார்த்தைக் குவியல்களை எழுதிக் கொண்டேயிருக்கிறார் – ஊக்க போனஸாக, தேவையேயில்லாமல் நேர்மையாள ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ வேஷமும் போட்டுக் கொண்டு தைரியமாக ஊடகங்களில் பவனி வந்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட கபட வேடதாரிகளின் விஷயங்களில் வெறி பிடித்து முனைப்புடன் அமிலத்தனத்துடன் தவறுகளைத் தவறுகள் என்று எழுதிக்கொண்டு இருக்கும் பழக்கம் உள்ளவர் விமலாதித்த மாமல்லன் அவர்கள் மட்டுமே. ஆனால் அவருடைய வேகமும், சில குறிகளும், குறிக்கோள்களும் கூட எனக்கு உவப்பானவையல்ல – அவை சில சமயங்களில் சரியுமல்ல என நினைக்கிறேன். ஆனால் என்னைப் போலல்லாமல், நிஜமாகவே நம் தமிழ் இலக்கியத்துக்கு சில முக்கியமான பங்களிப்புகள் அளித்திருப்பவர் இவர், எனக்குப் பிடித்த சிறுகதைகளை எழுதியிருப்பவர், இது தவிர உங்களுடைய அபிமான ஆம்ட்டேயின், பாரத்ஜோடோ யாத்திரையெல்லாம் செய்திருக்கிறார் – ஆக இவரை மதிக்கிறேன். But, each unto his madness, what else. எப்படி இருந்தாலும், என்னைப் போன்ற ஒரு சாதாரணனை எப்படி நீங்கள் விமலாதித்த மாமல்லன் அவர்களுடன் பொருத்திப் பேச முடியும்?  However, would you allow me my own madness, please?

4. எனக்கு, எவரிடமும் தொழில் ரீதியாக ஒரு பொறாமையும் இல்லை. ஏனெனில் நான் ஒரு தொழில்முறை எழுத்தாளனல்லன். ஒரு சாதாரண வாசகன் மட்டுமே. ஆனால் தராதரம் பார்த்துப் படிக்கும் அல்லது இடிக்கும் ஆள், அவ்வளவுதான். தமிழில் ஒரளவு, எனக்குத் தோன்றுவதை எழுதுகிறேனே தவிர, எனக்கு  ‘நான் ஒரு தமிழ் எழுத்தாளன்’ என்கிற பிரமையெல்லாம் இல்லை.

5. எனக்குச் சிலரிடம், முக்கியமாக, சில தமிழ் எழுத்தாளர்களிடம்,  அதுவும் ‘இலக்கிய’க்காரர்களிடம், மிகுந்த அபிமானமும் மரியாதையும் இருக்கிறது – கொஞ்சம் விமர்சனமும் இருக்கிறது. இது அவர்களுடைய எழுத்துகள் மட்டுமே சார்ந்த – என்னுடைய துய்ப்புப் பார்வையால் மட்டுமே உருவானது எனச் சொல்லலாம் –  சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், தருமு சிவராமு, மௌனி, புதுமைப்பித்தன் என்று ஆரம்பித்து இக்கால ஜெயமோகன் வரை நீள்வது அது – மேலும் நீளலாம். இதனால் தான் பிரச்சினையே. இதனால்தான் இந்த திடீரெக்ஸ் மேனாமினுக்கி அலக்கியவாதிகளை நான் வெறுக்கிறேன்.

6. எனக்கு, என் தமிழ்ச் சமூகத்தின் மீதான ஆற்றாமைகள் பலவுண்டு. அவற்றில் தலையாயதான ஒன்று, நம்முடைய சராசரித்தனத்தில் திளைக்கும்  மனப்பான்மை. இந்த மனப்பான்மையை விற்கும், ஊக்குவிக்கும் எந்த ஜந்துவையும் நான் என்னளவில் எதிர்க்கவே முயலுவேன்.  மேலும், இந்த மனப்பான்மைதான் நம் குழந்தைகளை, இளைஞர்களைத் தொடர்ந்து காயடித்து வருகிறது என்பதை நேரடியாக உணர்ந்து வருகிறேன். அதனால்தான் கொஞ்சம் மேலதிக அமிலம். Give me my acid trip please!

7. அய்யா, நான் எழுதுவதை(!) இன்னமும் நிறைய பேரெல்லாம் படிக்கவேண்டாம். எனக்கு ‘ரீச்’ கீச்செல்லாம் முக்கியமில்லை. ஏற்கனவே படித்துவிட்டுப் பின்னூட்டமிடும் சில ஜந்துக்களையே என்னால் தாங்கமுடிவதில்லை.

8. நான் பலவேடதாரி. டாக்டர் ஜெகிலுக்கும் மிஸ்டர் ஹைடுக்கும் நடுவில் பல வேடங்களை ஒரே சமயத்தில் அணியமுடியும் எனக்கு. என் பள்ளிக்குழந்தைகளிடம் கேட்டுப்பாருங்கள் நான் முரடனா என்று. ;-)

9. கெட்ட வார்த்தைகள்: :-) அய்யா நான், இக்காலங்களில் ஒரு கிராமவாசித் தமிழன். :-)) தமிழைக் கூட ஆங்கிலத்திலேயே பேசும் ஒரு நாசூக்கான நகரவாசித் தகரடப்பியல்லன், தெரியாதா உங்களுக்கு?? (ஆனால் உங்களிடம் நான் ஒருபோதும் … ங்கொம்மாள  என்று ஆரம்பித்துப் பேசமாட்டேன்)

இப்போதைக்கு, இந்தத் தன்னிலை விளக்கம் போதும்.

… மேலும் தலையில் அடித்துக்கொண்டு படிக்க:

10 Responses to “எஸ். ராமகிருஷ்ணன் – ஒரு எதிர்கொள்ளப்படவேண்டிய எதிர்வினையும், ஒரு தன்னிலை விளக்கமும்…”

  1. சரவணன் Says:

    யுவகிருஷ்ணா மாதிரியே நீங்கள் கவலைப்பட வேண்டிய மற்றொரு பெரும் பிரபலம் இங்கே- http://www.writercsk.com/ சூரியனுக்குக் கீழே இருக்கும் எல்லாவற்றையும் பற்றி இணையம், பத்திரிகை, புத்தகம் என்று எழுதிக் கலக்கி வருபவர். இவர் குஜராத் கலவரம் பற்றி எழுதியிருக்கும் புத்தகம் கிழக்கு டாப்-10 ல் கூட இடம் பிடித்திருக்கிறது (புத்தகக் கண்காட்சியில்). இவரைப் படித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை.

    ——>>>> அய்யா, எனக்கு இந்த ரைட்டர்ஸிஎஸ்கே அவர்க்ளை தெரியாது.

    ஆனால், மதிப்புக்குரிய பரிசுத்த பாவி சரவ்ணன் அவர்களே! நான் சும்மா இருந்திருக்கலாம். ஆனால், ஆப்பசைக்க ஆசைப்பட்ட் குரங்கு போல உடனே ஒரு ஆவல் ஏற்பட்டு, துள்ளிக்கொண்டு ரைட்டர்ஸிஎஸ்கே தளம் சென்றேன். புல்லரிப்பு பெற்றேன். இப்பூவுலகில் எவர் வேண்டுமானாலும் என்ன தோன்றுகிறதோ, அதனை, எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், என்னைப் போல்!

    அவருடைய ‘கலைஞர் – பேராசிரியர் – அடியேன்’ எனும் கட்டுரையைப் (http://www.writercsk.com/2007/05/blog-post_1858.html) படித்தேன். இவரே இப்படிக் கேட்டுக்கொள்ளும்போது அடிக்காமல் விடலாமா என்ற எண்ணம் மிகுந்தாலும், இன்னொரு அறிவுரை மின்னஞ்சல் ஆர்க்காட்டாரிடமிருந்து வருமென்பதை நினைத்தால் கதி கலங்குகிறது. மன்னிக்கவும். :-(

    __ரா.

  2. சரவணன் Says:

    இதற்கே பயந்துவிட்டால் எப்படி? http://www.writerkarthikeyan.blogspot.in என்று ஒரு எழுத்தாளர் இருக்கிறார். ‘வாங்கியப் புத்தகம்’, ராஜி முருகன் (அதாவது ராஜூ முருகனாம்) என்றெல்லாம் எழுதித் தமிழை வளர்த்து வருகிறார்.

    >> ஆக, கவலை வேண்டேல். மெல்லத் தமிழ் இனிச் சாகும். <<

    ஆக, மெல்லத்தானா என்று யாரும் கவலை வேண்டேல்.

    • Anonymous Says:

      சரவணன் நீங்கள் குறிப்பிட்ட கார்த்திகேயன் நான் தான்.Domain Name கிடைக்காததால் writer-னு எடுத்தேனெத் தவிர நான் என் பதிவில் எந்த இடத்திலும் என்னை எழுத்தாளர் என்று கூறவில்லை.

      நான் எழுதறது சரியோ தவறோ, நான் படித்த புத்தங்களையும்,பார்த்த படங்களையும் பற்றி மற்றவருடன் பகிர்ந்துக்கொள்கிறேன்,அதனால் ஒரு சிலராவது பயனடைந்தால் எனக்கு போதும்.

      நான் அவர்களுக்காதத்தான் எழுதுகிறேனெத் தவிர தன் அடையாளத்தைக் கூட வேளியிட தைரியம் இல்லாமல் அனானியாக வந்து கருத்து தெரிவிக்கும் உன்னைப் போன்ற முதுகெலும்பில்லாதப் பிறவிக்காக எழுதவில்லை.

      இவ்ளோ வாய் கிழிய பேசுறியே நீ தமிழுக்காக என்ன கிழிச்சிட்ட,கோள் மூட்டும் வேளையை விட்டுவிட்டு போய் உருப்படற வழியப்பாரு.


    • சரவணன் நீங்கள் குறிப்பிட்ட கார்த்திகேயன் நான் தான்.DOMAIN NAME கிடைக்காததால் WRITER என்று எடுத்தேன்,மற்றபடி என் பதிவில் எந்த இடத்திலும் என்னை எழுத்தாளர் என்று குறிப்பிடவில்லை.

      நான் சரியாக எழுதுகிறேனொ இல்லையோ, நான் படித்த புத்தகங்க்ளைப் பற்றியும்,பார்த்த படங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள பதிவிடுகிறேன்,அதனால் ஒரு சிலராவது பயனடைந்தாள் எனக்கு போதும்.

      நான் அவர்களுக்காகத்தான் பதிவிடுகிறேனெத் தவிர தன் அடையாளத்தைக் கூட வெளியிட தைரியம் இல்லாமல் அனானியாக வந்து கருத்திடும் உன்னைப் போன்ற முதுகெலும்பில்லாத பிறவிகளுக்காக நான் பதிவிடவில்லை.

      இவ்ளோ வாய் கிழிய பேசுறியே நீ தமிழுக்காக என்ன கிழிச்சுட்ட,கோள் மூட்டுகிற வேளையை விட்டுவிட்டு போய் உருப்படியா வேளையப் பாரு…


      • —->>> ‘ரைட்டர்கார்த்திகேயன்’ அவர்களின் பதில்கள் கொஞ்சம் முதிர்ச்சி குறைவாக இருப்பதாகத் தோன்றியதால், சரவணன் அவர்களின் அனுமதி பெற்று, இவற்றை பிரசூரிக்கிறேன்.

        கார்த்திகேயன் அவர்கள், கொஞ்சம் நகைச்சுவை உணர்ச்சியை வளர்த்திக் கொண்டால், அவருக்கும் நல்லது.

        சரவணன், உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி.

        __ரா.


      • திரு.ராமசாமி அவர்களுக்கு,

        ஒத்திசைவு தளம் என்றாலே எப்பொழுதும் மற்றவர்களைக் குறைக்கூறும் தளம் என்று முதலில் நினைத்தேன்.இப்பொழுதுதான் நீங்கள் உங்கள் பள்ளி சம்பந்தமாக எழுதிய பதிவுகளைப் படித்தேன். உங்களால் முடிந்த நற்காரியங்களைச் சமூகத்திற்கு செய்துக்கொண்டிருக்கிறீர்கள்.உங்கள் தளத்தில் வந்து தகாத முறையில் பின்னூட்டம் இட்டத்ற்கு மன்னிக்கவும்…

        நன்றி.

        நா.கார்த்திகேயன்

        —>>> அய்யா கார்த்திகேயன் – ஒத்திசைவு ஒரு அக்கப்போர் தளம்தான். :-)

        மன்னிப்பு எல்லாம் கேட்கவேண்டிய அவசியமேயில்லை. தொடர்ந்து ஜமாயுங்கள், சரியா?

        __ரா.

      • சரவணன் Says:

        உங்கள் விளக்கங்களுக்கு நன்றி..
        1. நான் என் நிஜப் பெயரையும் இமெயில் ஐ.டி,-யையும் கொடுத்தே கருத்திடுகிறேன். வலைப்பக்கத்துக்கு லிங்க் கொடுக்காத அனைவரும் அனானிகள் என்பது உங்கள் கருத்து போலும்.
        2. தமிழுக்கு நான் எதையும் கிழிக்கவும் இல்லை, தைக்கவும் இல்லை என்பதுடன் இனியும் அப்படி எதுவும் செய்கிற எண்ணமும் இல்லை. தமிழ் பிழைத்துப் போகட்டும்!
        3. இதில் கோள் மூட்ட என்ன இருக்கிறது? பொது வெளியில் இருக்கும் ஒரு இணையதளம் பற்றி என் கருத்தை இன்னொருவரிடம் பகிர்ந்துகொள்கிறேன். ராமசாமி என்னுடன் ஒத்துப் போகலாம் அல்லது மாறுபடலாம். அவர் ஏதோ தலைமை ஆசிரியர், நீங்கள் அவரது மாணவர் என்பது போல அல்லவா இருக்கிறது :-)

        இதற்கு மேல் இந்த விவாதத்தைத் தொடர விருப்பமில்லை. மீண்டும் நன்றி.


    • //எழுதித் தமிழை//
      இந்த சொல் சரியா? முதலில் உன் குறைகளை சரி செய்துவிட்டு மற்றவர்கள் குற்றம்சாட்டு சரவணன்.

  3. சரவணன் Says:

    >>> ஆக, மெல்லத்தானா என்று யாரும் கவலை வேண்டேல்.<<<

    'யாரும்' என்பதை 'யாருக்கும்' என்று திருத்தி (திரித்து?) வாசித்துத் தமிழ்க் காப்பாற்றிவிடேல்.


    • Sir, Saravanan,

      Because of your jibes and constant admonitions to dp this and that — I have been ‘forced’ to take two decisions. (1 & 3)

      1. From now onwards, I want to refer to myself as ‘LefterRamasami’ as they are way too many of these WriterXYZ critters. And, of course, two writes makes a wrong, speed of light is lesser than that of the dark and so what I am saying is always globally valid. Ahem! Besides, I like to err on the left, with no option. I will leave it at that and say only that, left the sleeping dogs, lie.

      2. Without loss of generality, I would say that about 99.99% of what is available on the Net is horsemanure. But, when it comes to our beloved Tamil, I think it needs to be jacked upto, say, 99.999999999999999999999999999999999%. Yup.

      3. One day (that is, Tamil oru naal) or Tomorrow (as in Tamil naalai namadhe or Tamil tomorrow – which may never come afterall) will see that I begin a Ramasami Vaasagar(!) Isosehahedron. Yeah. Stay untuned. Ohmygawd, am reading too much of translitteration of Tamil these daze! All because of Shirley. She is like that only. (http://www.sramakrishnan.com/?p=3676) Surely, the surly me can do better than that… ha!

      4. I want to start wondering, as to what you do for a living. That it randomly rhymes is only one of my crimes.

      ’nuff blathered…

      __r.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s