எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் எதிர்த்தாக்குதல்! (ஐயய்யோ!)

January 11, 2014

யுத்த தர்மம் என்று ஒன்று உணடு. ஆனால், வாயையும் கையையும் கீபோர்டையும் தவிர வேறு எந்த ஆயுதத்தையும் இக்காலங்களில் பிரயோகிக்கத் தெரியாத என்மேல் — என் குற்றச்சாட்டுகளுக்கு(=தீர்ப்புகள்), நேரிடையாகப் பதில் சொல்லாமல், எதிர்வினை தராமல் – இப்படி ஒரு கெரில்லாத் தாக்குதலை முடுக்கி விட்டிருக்கிறார் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள்! கிருஷ்ணர்களுக்கும் தருமத்துக்கும் ஒரு தொடர்புமே இல்லையோ!

பாருங்கள் இந்த அநியாயத்தை – அவர் வலைத் தளத்திலிருந்து ஒரு மகாமகோ முழிபெயர்ப்புச் சாத்தானை ஏவி விட்டிருக்கிறார்!

இவருக்கென்று பிரத்யேகமாக — படு பீதியளிக்கும் பயங்கர ட்ரான்ஸ்லேஷன், டிக்‌ஷனரி ஆயுதங்களை ஏந்தி, வாசகர்களின் கபாலங்களின் மீது கோரதாண்டவம் ஆடும் பயங்கரவாத ஆபத்துதவிப் படையினர் இருக்கின்றனர் என்று எனக்கு இதுவரை தெரியவே தெரியாது. அந்த எழவெடுத்த பொன்னியின்செல்வனில் இது பற்றி ஒன்றுமே இல்லை… 

அய்யோ! இந்த ஆபத்துதவிகளைப் பற்றி மட்டும் முன்பே தெரிந்திருந்தால், கோபப் பதிவு என்றெல்லாம் முனையாமல் – கமுக்கமாக, பல்லைக் கடித்துக் கொண்டு எஸ்ரா எழுத்துகளைப் பொறுத்துக் கொண்டிருந்திருப்பேனே! (என் அம்மா என் சின்ன வயதில் சொல்வார் –  ‘துஷ்டனைக் கண்டால் தூர விலகு’ என்று. அவர்சொல்லைக் கேட்டிருந்தால், அய்யோ, எனக்கு இப்படி ஒரு மோசமான பிரச்சினை வந்திருக்குமா சொல்லுங்கள்!)

ஆனால், வேலியில் போகும் ஓணானை தேவை மெனக்கெட்டு மடியில் போட்டுக்கொண்ட, பாவப்பட்ட எனக்கு, இப்போது புறமுதுகிட்டு ஓடுவதைத் தவிர வேறு வழியேயில்லை.

….. ஆ!  டேய்!! பின்னாடியே தெர்த்திக்கினு வர்ராங்கடா… எங்கேடா வெள்ளைக்கொடி! வேட்டிய அவுத்து தலைக்கு மேல தூக்கி ஆட்றா, டேய்… இன்னாடா அன்டர்வேர் போட்லயா! பரவால்லடா… சீக்கிரம்டா…   அய்யோ! என்னப் பிட்ச்சிட்டாங்கடா…

… அய்யய்யோ!! என்ன வுட்ருங்கடா! மன்னிச்டுங்கடா… ஒங்க பக்கமே இனிமே தல வெச்சுகூட படுக்கமாட்டேண்டா…

-0-0-0-0-0-0-0-

தப்பித் தவறி கூட, இந்தச் சுட்டி பக்கம் போகாதீர்கள்: எஸ்ரா அவர்களின் ‘ஷெர்லி அப்படித்தான்’ சிறுகதையின் ஆங்கில மொழியாக்கம் அங்கே ஒளிந்து கொண்டு உங்கள் ரத்தத்தைக் குடிக்க, பற்களைத் தீட்டியபடி, நொட்டை போட்டுக்கொண்டு வெகு ஆக்ரோஷத்துடன் காத்துக் கொண்டிருக்கிறது: ஆபத்து!

உங்களைப் போன்ற எவ்வளவு பேர்களின் ரத்தத்தை அது குடித்திருக்கும். குடித்திருக்கும் அக்குருதி எவ்வளவு மனிதர்களில் நெடுங்குருதியாக ஓடிக்கொண்டிருந்திருக்கும்.

… … யோவ்! யோசிக்காத மேன். மொதல்ல ஒன் உசுர காப்பாத்திக்கோ! ஓட்ரா… திரும்பிப் பாக்காம ஓட்ரா…

-0-0-0-0-0-0-0-

கட்டுரை சுட்டதடா சுட்டி விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா

… என்னை அம்போ என்று நடு இணையத்தில் விட்டுவிட்டு இந்த மொழிபெயர்ப்பு மாஸ்டர்களான கல்யாண்ராமன்கள் எங்கேடா போனார்கள்… பொறுக்க முடியவில்லையே! அய்யய்யோ! அசோகமித்திரனை விட்டுட்டு என்னோட சோகவிரோதி  பக்கம் வாங்கய்யா… என்னோட உயிரக் காப்பாத்துங்கய்யா!

-0-0-0-0-0-0-

தமிழ் நாசமாப் போக, சரி! ஆனா ஆங்கிலத்தையாவது விட்டு வெய்யுங்கடா!

என்ன? முடியாதா?

போங்கடா நீங்களும் ஒங்களோட மொழிபெயர்ப்பு போங்காட்டமும்… ஒரு எழவிலும் சிரத்தையே சுத்தமா இல்லடா, தமிழும் சுத்தமா சரியில்ல, ஆங்கிலமும் மகாமகோ டுபாக்குர்.

… சரி. ஆங்கிலத்தயே வுடு – எப்டீரா நம்ம தமிழ் உருப்படும்? சொல்லு…

பின்குறிப்பு: நாளை வரை நான் உயிருடன் இருந்தால், எஸ்ரா பற்றி இன்னொரு பதிவு வரும். எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள். தயவுசெய்து… :-(

அலக்கியம், காப்பிக்கடை, இன்னபிற இழவுகள்…

4 Responses to “எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் எதிர்த்தாக்குதல்! (ஐயய்யோ!)”

 1. சரவணன் Says:

  சுட்டிக்கு நன்றி!! It was a laugh riot! முன்பு ஒரு பெண் ‘ஃபீல் பண்ணாத’ என்று தமிழில்(?) சொல்வதை அப்படியே ஆங்கிலத்தில் ‘டோன்ட் ஃபீல்’ என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்! அதே மாதிரி ஒரு முழுக்கதையை எழுத முடியும் என்பது உண்மையிலேயே பிரமிப்பாக இருக்கிறது! சில ஜெம்கள் மட்டும் இங்கே-

  ‘Calling bell’s chime heard’
  ‘She accepting it, wore a gold ring to the bridegroom during the marriage’
  ‘Instead he love married a fisher woman’
  ‘He is a cold animal.’
  ‘He would act in stage dramas’
  ‘she married Doctor Emmanuel who was 15 years elder to her through register marriage’
  ‘She cursed that god will sort that doctor out. ‘
  ‘Shirley, compressing her sorrows inside her, was knowing to love fellow human beings’
  ‘Even saying that she spoke is wrong’
  ‘stepping down on the stairs’
  ‘my eyes dilated on their own’


  • யோவ் சரவணன் பெர்சூ! (அல்து சின்தொரே!)

   டேக் #1:

   இன்னாத்தான் மன்ஸ்ல நென்ச்சுக்கினுக் கீர? நானே ஜகா வாங்கி ஓடிக்கினு கீரேன்! நீ இன்னுங் கொஞ்சம் எடுத் வுட்ற! நாயமா இது?

   ராவ்லயும் தூங்க வுட மாட்டேண்றீங்க, காலேல எந்திரிச்சாலும் நடுங்கிகிட்டே வந்து பாத்தாலும் மேற்கோள் எட்த்து வுட்றீங்க. நான் இன்னாதான் ஸெய்றது சொல்லுபா… தாங்க முடீலபா!

   வாள்க்கைண்றது றொம்ப துன்பம்ஸ் பா. அந்தக் கபோதி கௌதம்புத்தன் பயமவன் ஏண் பேதி வந்து போதி மர்த்துக் கீள குந்திக்கினான்னிட்டு இப்பதான் பிர்யுதுபா! அவன் வூட்டுப் பக்கம் தேசாந்திரி அவ்ரோட ஆபட்டுடவிங்ளோட போய்ருப்பாருன்னிட்டு நெனக்கெறேன். பாவம்பா அந்த ஆள்…

   நீரு தன்னோட மட்டத்த அடையுண்டா! ஆனாக்க தமிள் வாசக நீர் தம்ள் எள்த்தாள நீரோட படுமட்டத்த அடயுண்டா… நீருயர் வெற்ப்புயருண்டா… இப்ப இன்னாடா செய்றது… கொள்ப்பமாக் கீதே!

   அய்யா, என்னே வுட்றுங்கோ! நீங்கோ கெலிச்டீங்கோ!

   டேக்#2:

   ஒன்க்கு மட்டும்தான் இங்லீஸ் தெர்யுமா? கெர்வக்காரனா இர்ப்ப போல… நொள்ளை சொல்லிக்கினே இருப்பீங்கடா – வொங்களால ஒரு வெரி எங்க எள்த்தாளர் மாரீ எள்த முடியுமாடா? தெகிர்யம் கீதாடா?

   போங்கடா பொறம்போக்குகளா! நீங்களும் வொங்களோட குத்தம் கண்டுபிட்ச்சி இன்பம்ஸ் அட்யற கொணமும்…

   பேமானீங்களா. உர்ப்படுவீங்களாடா நீங்கோ… பாவீங்களா…

   சிர்ச்சிக்கினே இருங்கடா போக்கத்வ்னுங்ளா!

   அப்பால எங்க ஆஸ்ரியர் எட்த்து வுடப் போற ’காந்தியோடு பேத்துவேன்’ வக புது கட்ரயப் பட்ச்சா செத் பூடப் போறீங்கோ… நாங்கோ அப்போ ங்கொம்மாள, சிர்ச்சிக்கினே இருப்போண்டா…

 2. Yayathi Says:

  If you don’t keep quiet, the Madras High Court lawyers and Mr.Tamilan may go on strike demanding that the blogs in Tamil can be assigned only on the basis of caste or otherwise, it cannot exceed 4 characters (closest to 3% of 140) on Twitter for Paarpans like you :-)

 3. க்ருஷ்ணகுமார் Says:

  ம்………. விடுபட்டுப்போன இன்னும் சில …………

  When Frank was working in Burhanpur, the relationship with Shirley had occurred

  during the sports meet of the mill, she borrowing the camera from the Aruna Studio photographer had shot photographs in different angles.*

  She, in those days with three children struggling hard in search of a house to live in, had met dad one day

  Going for walking in the playground that was inside the mill premises was dad’s routine. The roads inside the mill, which were dense with trees, are beautiful.

  In those rainy days, the bench being wetted by rain would be cold; sitting on that cold bench is a pleasure.

  தல சுத்தியதால் இதுக்கு மேல படிக்க மிடியல.

  அப்பேஞ்சபாபதி மட்ராஸ் ரயில்வே பத்தி நாப்பது பக்கம் கடகடா படபடா இருபது பக்கம் கடகட படபட இருபது பக்கம் எழுதிய வ்யாசம் ஞாபகத்துக்கு வந்தது. அந்த வ்யாசத்துக்கு இது என்ன கொறச்சல்னு கேழ்க்கிறேன். படம் ஞாபகத்துல இருக்கு தானே. இல்லாங்காட்டி யூட்யூபில் பார்க்கவும்.

  என்ன ஆங்க்லம். என்ன விஷய காம்பீர்யம்.

  பங்க்சுவேஷனாய ஹும்
  டென்ஸாய ஸ்வாஹா
  வொகாப்லரியாய ஃபட்
  இங்க்லீஷாய ஹும்பட் ஸ்வாஹா

  ம்…….கல்லைச் சாப்பிட்டாலும் கறைக்கின்ற வயசு என்று உண்டு.

  வயசான காலத்தில் ஹாஸ்ய ரஸம் என்று நினைத்து இப்படி பீபத்ஸ ரஸ பரித நிபந்தாதிகளை சண்டே டூ மண்டே வாசித்தால் ………. மண்டே ( ஐ மீன் தல) என்னாகும்………தமிழர்களுடைய வார் டேன்ஸ் நிபந்தாதிகள் என்னாவது………

  மேல சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

  மங்களானி பவந்து.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s