ஒரு திருத்தம்: பாவம், எம்ஜிஆரை போயும்போயும் கருணாநிதியாக்கி விட்டேனே! மன்னிப்பு உண்டா? :-(
July 2, 2015
நேற்றைய பதிவில் (பாவப்பட்ட தமிழகத்தின் அயோக்கிய திராவிடக் கொள்ளைக்காரர்கள் பற்றிய பழங்கதையாடல்களின் தேவை) கீழ்கண்டவாறு எழுதியிருந்தேன்.
/* ஒரு எடுத்துக்காட்டாக – நீதிபதி பால் கமிஷன் என்று ஒன்றிருந்ததா, அதன் குறிக்கோள் என்ன, கருணாநிதி அரசின்போது அதன் ரிப்போர்ட் எப்படி மாயமாகக் ‘காணாமல்’ போனது என்பதெல்லாம் யாருக்குத் தெரியும்? */
இதில் கருணாநிதி என்பது எம்ஜிஆர் என இருந்திருக்கவேண்டும். என் தவறு. ஆச்சரியம் என்னவென்றால், ஒருவரும் இதுவரை இதைச் சுட்டிக் காட்டவில்லை! ‘கருணாநிதி எதிர்ப்பென்றால், கண்ணை மூடிக்கொண்டு எந்த எழவை வேண்டுமானாலும் படிப்போம்!’ என்றிருப்பவர்கள் மட்டுமே ஒத்திசைவுக்கு வருகை தருகிறார்களா என்ன? ;-) ஆனால், அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. நம் தலைவரின் நம்பகத் தன்மை என்பது அப்படிப்பட்ட பராக்கிரமம் வாய்ந்தது, வேறென்ன சொல்ல!
பாவப்பட்ட தமிழகத்தின் அயோக்கிய திராவிடக் கொள்ளைக்காரர்கள் பற்றிய பழங்கதையாடல்களின் தேவை
July 1, 2015
- கேடி சகோதர தயாநிதி மாறன், அமெரிக்க தூதரக அதிகாரியிடம், கருணாநிதி + திமுகஆட்சி பற்றிச் சொன்னது என்ன? 30/06/2015*
- அமெரிக்காவின் ஆச்சரியம்தரும் துல்லியமான கணிப்புகள்: கருணாநிதி, திமுக, அழகிரி, இசுடாலிர், கனிமொழி… 29/06/2015*
- அமெரிக்காவுக்கு 1976லேயே தெரியும், கருணாநிதி அவர்கள், திமுக தலைவர் பொறுப்பிலிருந்து தானாக விலகவேமாட்டாரென்று… 20/06/2015*
- மாறன்கள், மாறவே மாட்டான்கள்! 24/01/2015
- உதிரிகளின் தொடர்கதை: மாறன்கள், மாற மாட்டான்கள்… 11/04/2011
அமெரிக்காவின் ஆச்சரியம்தரும் துல்லியமான கணிப்புகள்: கருணாநிதி, திமுக, அழகிரி, இசுடாலிர், கனிமொழி…
June 29, 2015
எனக்கு அமெரிக்காவில் வசிக்க ஒத்துவராது + பொதுவாக அமெரிக்க என்ஆர்ஐ ஜந்துக்கள் ஒத்துவரமாட்டார்கள் (எனக்கு மகாமகோ துக்கம் கொடுக்கக்கூடிய வகையில் என் உறவினர்களில் பலர் இந்த ஜாதிதான்; கல்லூரியில் என் வகுப்பில் கூடப் படித்தவர்கள் அனைவரும் (மொத்தம் 17ல் 16 பேர்) இப்போது அமெரிக்கக் குடிமக்கள் – இது ஒருவிதத்தில் நிம்மதிதரும் விஷயம்தான்; ஆனாலும், அதிசயிக்கக்கூடிய வகையில் எனக்கு இன்னமும் பல அமெரிக்க என்ஆர்ஐ நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், என்ன செய்வது சொல்லுங்கள்? இவர்களுக்கும் மனப்பிறழ்வோ??) என்றாலும்…
Read the rest of this entry »
(or) நாமிருக்கும் நாடு, நமதென்பதறிந்தோம்! (1600 words, sorry)
Preamble:
The School that I am currently working with, is in an area of Tamilnadu, which is known to be a very violent place for the past so many decades – so much so that, even the police personnel and revenue department staff would like to avoid this tension filled and bottomless despair invoking milieu.
So.
There was way too much of violent and disrespectful behavior by the children (primarily stemming from abominable & pathetic parentage and the vitiated socio-political atmosphere) of the School, with which I was involved rather closely from the fag end of 2010.
அய்யய்யோ! கொஞ்சம் பெரிய தலைப்பாகிவிட்டதே! (ஆனால், மன்னிக்கவேண்டாம்!)

கருணாநிதி: செம்மர கடத்தல் கேஸை, சிபிஐ-க்குக் கொடுத்தால்தான் உண்மை வெளிவரும்… (‘த ஹிந்து’ தினசரி, 18 ஜூன் 2016); இதன் தமிழ்ஹிந்து தினசரி வடிவம் இங்கே: செம்மரக் கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க கருணாநிதி வலியுறுத்தல்
தம் கடந்தகால குற்றங்களுக்கெல்லாம் பரிகாரம் தேடிக்கொள்ள அந்திமகாலத்தில் முயல ஆரம்பித்துவிட்டார் என எண்ணி எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் நெகிழ்வெழுத்துகளைப் படித்து நெகிழோநெகிழ் என என் லுங்கிகூட நெகிழ்ந்து போவதைப் போல உணர்ந்தேன்…
என்னுடைய கேளிக்கைப் பொழுதுபோக்குகளில் ஒன்று – என்னுடைய செல்ல சக-திராபை திராவிடர்கள் வீரத்துடன் சுழற்றும் இனமான எழுச்சிப்போராளி அட்டைக்கத்திகளைப் பார்த்து இறும்பூதடைவது.
என்னுடைய வாழ்க்கைக்கு ஒரு ஆழமான அர்த்தத்தை உருவாக்குபவர்கள் இவர்கள்தாம். ;-)
அமெரிக்காவுக்கு 1976லேயே தெரியும், கருணாநிதி அவர்கள், திமுக தலைவர் பொறுப்பிலிருந்து தானாக விலகவேமாட்டாரென்று…
June 20, 2015
ஆனால், குறைந்தபட்சம் இன்னமும் 8 வருடங்கள் போல இசுடாலிர் காத்திருக்கவேண்டும்தான். ஏனெனில், இன்றுதான் தெரிந்துகொண்டேன் – கருணாநிதி அவர்கள் 100 வருடம் வரை வாழ விரும்புகிறார் என்று. வாழ்க களவுடன்வளமுடன்…
சந்தன/செம்மர அகற்றல்கள் (அறுத்தல்களல்ல, கவனிக்கவும்), என்கவுன்டர்கள், மனித உரிமைகள்: சில குறிப்புகள்
June 18, 2015
ஏனெனில் நானே ஒரு ‘விடுதலை’ வீரமணிதான்! :-)
சரி. செம்மரத் திருடர்கள், மன்னிக்கவும் ‘செம்மரப் போராளி அகற்றாளர்கள்’ – அவர்கள் கூலித் தொழிலாளர்களேயானாலும், சுடப்பட்ட படங்கள் பரிதாபமாகக் காட்சியளித்தாலும் – அவர்கள் படுஉத்தமர்களோ அல்லது பால்மணம் மாறாத அப்பாவிகளோ அல்லர் – ஆகவே, அவர்கள் அநியாயமாகச் சுட்டுத் தள்ளப் பட்டுவிட்டனர் என நான் கருதவில்லை. மாறாக, அவர்கள் பலபிறவிதங்களில் மகாமகோ கயவர்கள்தான் என்பதை, சில குறிப்புகளுடன் கோடிட்டுக் காட்டுவதுதான் என் நோக்கம்.(+மேலும் – அரசு பக்க உண்மைகளும், பிற பின்புலச் செய்திகளும் வெளிவரவேண்டும் – ஆனால் இவை இதுவரை (நான் அறிந்தவரையில்) வெளிவரவில்லை என்ற காரணத்தாலும்)
(அல்லது) திராவிடக்கட்சிகள் -> பணம் சுருட்டல்கள் -> கொள்ளைப் பங்கிடல்கள் -> கொலைகள்: சில குறிப்புகள் (2/2)
இதன் முதல்பகுதி. இதனைப் படித்துவிட்டு வந்தால் இந்த இரண்டாம்பாகம் பிடிபடலாம்.
…இந்த திராவிடஊழல் பணம் பலவழிகளில், திராவிட அரசுகளால், அரசில் இல்லாத திராவிடர்களாலுமேகூட அமோகமாகப் பெறப் படுகிறது. இதனைக் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் பலகாரணங்களுக்காக இருக்கும் வகுப்பில் – தனி மனிதர்களும், தனியார் நிறுவனங்களும், ஏன், சில பன்னாட்டு நிறுவனங்களுமேகூட அடக்கம்.
சரி. இந்த ஊழல் பணம், யார் மூலம் எப்படி வருகிறது என்பதைக் கொஞ்சம் பார்க்கலாமா?
திராவிடக்கட்சிகள் -> பணம் சுருட்டல்கள் -> கொள்ளைப் பங்கிடல்கள் -> கொலைகள்: சில குறிப்புகள் (1/2)
May 23, 2015
முதலில், இலவசை இணைப்பு:
தமிழகத்தின் ஏகோபித்த பெரும்பண்பாட்டு வீழ்ச்சிக்கான, அடிப்படை மானுட விழுமியங்களுக்கு எதிரான, தமிழகத்தின் தத்துவாதாரக் காயடித்தல்களுக்கான திராவிட இயக்கங்களின் – தமிழர்களுக்கான பெரும்கொடை – இந்த உதிரித்தமிழ் திரைப்பட இயக்கம். இந்தக் கடும் விஷச்சூழலையும் மீறி அவ்வப்போது, படைப்பின் ஊற்றுக்கண்கள் அடைக்கப்படாமல், சில சமயங்களில் சொல்லிக்கொள்ளப்படும்படியான செயல்பாடுகளின் வெளிப்படல்களும் ஏற்படுகின்றன என்பது, எனக்கு மாளா ஆச்சரியம் தருவது…
ஆனால், பெரும்பான்மைத் திரைப்படச் சூழல்கள், அறவே ஒதுக்கப்படவேண்டியவை என்பதில் எனக்கு ஐயமேயில்லை.
ந்யூட்ரினோ: ஒரு பாவப்பட்ட அடிப்படைத் துகளின் கதறல் (+இலவச இணைப்பு: நடிப்புச் சுதேசிகள்)
May 11, 2015
எச்சரிக்கை: என் மதிப்புக்குரிய செல்லங்களில் ஒருவரும், பெரும்பாலும் சமன நிலையுடையவருமான சரவணன் அவர்கள், நேற்று ஒரு ந்யூட்ரினோ விவாதம்(!) பற்றிய சுட்டியை அனுப்பி, என் ரத்த+பித்த அழுத்தத்தை எகிற வைத்துவிட்டார். அதன் பின்விளைவுதான் இது. (இதில் சில ‘கெட்ட’வார்த்தைகள் இருக்கின்றன, முன்னமேயே சொல்லிவிடுகிறேன்!)
சரி. :-( Read the rest of this entry »
எச்சரிக்கை: இது சுமார் 1300 வார்த்தைகள் கொண்ட நீண்ண்ண்ண்ண்ட பதிவு.
போராளித்தன அரைகுறைகளிடமிருந்து நம் தமிழகத்துக்கு விடுதலையே கிடைக்காதா? அவர்கள் பாட்டுக்கு கடையை மாற்றிக் கடையை விரித்துக்கொண்டு — பொறுப்போ, சமூகவுணர்ச்சியோ துளிக்கூட இல்லாமல் தொடர்ந்து நம்மைக் காயடித்துக்கொண்டிருக்கிறார்களே!
இரு வீடியோக்கள்: பெண்களை மதிக்கும் கர்டிஸ்தானின், பெண் வீரர்கள் (சிறு இலவச இணைப்பு: ‘NRI’ மஹாத்மியம்)
May 5, 2015
பொதுவாக, எனக்கு – இந்த புலம்(!) பெயர்ந்த(!!) ‘NRI’ தட்டச்சு குமாஸ்தா இந்திய ஜந்துக்கள் ஒத்துவரவே மாட்டார்கள். அவர்களுடைய நடைஉடை பாவனைகளையும் – முக்கியமாக அவர்கள் மூளை(!) வேலை செய்யும் விதத்தையும் கிண்டல் செய்து கொண்டே இருப்பேன்; தூரதேசங்களில் ஈஸிசேரில் உட்கார்ந்து கொண்டு (அங்கு முனகிக் கொண்டே வரி செலுத்துவதற்கு அப்பாற்பட்டு) அத்தேசங்களுக்கும் கடுகளவுக்கும் உபயோகப் படாமல், எதற்கெடுத்தாலும் இந்தியாவுக்கு மேலான அறிவுரைகளை வழங்கும், எப்படி ‘நீங்கள்’ முன்னேறலாம் என அதிஅற்புதக் கருத்துகளையும் உதிர்த்துக் கொண்டிருப்பவர்களின் கோமாளித்தனத்தை சந்தோஷமாக அவதானிப்பதில் இருக்கும் இன்பம்ஸ் தனிதான்!
இவற்றைத் தவிர ஊக்கபோனஸாக – திருஅடுத்தவருடம்இந்தியாவுக்குப்போவார் புராணம், மலிவான விமானப் பயணம் – இந்தியாவுக்குப் போகும்போது அளிப்பதற்காக, அவர்கள் சூட்கேஸ்கள் நிறைய வாங்கும் கழிசடை கிஃப்ட் சாமான்கள் – காஸ்ட்கோ போன்ற கடைகளில் மெகாடன்னளவு வாங்கும் சீப் வஸ்துக்கள், சென்ற ஒரே மாதத்தில் இஸ்த்துஇஸ்த்துப் பேசும் அமெரிக்கனீஸ் இந்தியாவுக்கு வந்தாலும் தொடர்வது, ஏகத்துக்கும் வளர்ந்திருக்கும் தொந்தி, அவர்களுடைய தமிழ்/இந்தியச் சினிமா புல்லரிப்புகள், அவர்களுடைய கந்தறகோள ஆண்டுவிழாக்கள், இந்தியக் கலாச்சாரத்தை (அவர்கள் பாணியில், திரைப்படக்காரர்களை கௌரவித்து!) தூக்கிப் பிடிப்பது, ஜாதி/மொழிவாரியாக அணிதிரள்வது… … – என பலப்பல இன்பம்ஸ்களும் இருக்கின்றன. நகைச்சுவைக்கு நான் உத்திரவாதம்.
Read the rest of this entry »
இராக்கின் மொஸூல் பிராந்தியத்தில், ஸிஞ்ஜருக்கு அருகில் இருக்கும் கர்ட் யேஸீதிகளைக் குறிவைத்து நடந்திருக்கும் அவலம் இது. கர்ட் வீரர்கள் என்னதான் காப்பாற்ற முயன்றாலும், தங்கள் ரத்தத்தைச் சிந்தி உதவி செய்தாலும் – பலப்பல யேஸீதிகளைக் காப்பாற்றியிருந்தாலும், மீட்டிருந்தாலும் இதுதான் தற்போதைய நிலவரம்…
இந்த எண்ணிக்கை 500லிருந்து 3000 வரை விதம்விதமாகச் சொல்லப் பட்டாலும் – குறைந்த பட்சம் 2500 பாவப்பட்ட யேஸீதிகளை நேற்றையமுன்தினம் முதல் ‘காணவில்லை’ – அதுவும் இஸ்லாமிக் ஸ்டேட் கும்பல் அவர்களைக் கடத்திக்கொண்டு சென்றபிறகு இப்படிக் காணாமல் போனார்கள் என்பது மஹாகோரம்தான். சுடப்பட்டு, அறுக்கப்பட்டுப் போய்ச் சேர்ந்திருப்பார்கள்தான், அவர்கள். இதைத்தவிர பல பெண் குழந்தைகள், வளர்ந்த பெண்கள், தாய்கள் – ஜிஹாதி பொறுக்கிகளின் காமப்பசிக்கு இரையாக எடுத்துச் செல்லப் பட்டிருக்கின்றனர்.
இதுவா இஸ்லாம்? இவ்வளவுதானா ஜிஹாத்? படு கேவலமாக இருக்கிறது.
வஹ்ஹாபிய-ஸலாஃபிய இஸ்லாம் சார்புடைய வெறியர்கள் ஆட்சி செய்தால் – இந்த விஷயம்தான் நடக்கும்: ஆயுதம்தாங்கிகளற்ற அப்பாவிகளுக்கும், வேற்று மத/மதப்பிரிவினருக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் கழுத்தறுப்பு மரணங்கள் மட்டுமே காத்திருக்கும். பெண்களுக்கு வயது வித்தியாசம்பாராமல் – வன்புணர்ச்சிகளும், குழுப்புணர்ச்சிகளும் மட்டுமே ஊக்கபோனஸாகக் கிடைக்கும்.
இதுதாண்டா வஹ்ஹாபிய இஸ்லாம்! Read the rest of this entry »
So, I don’t have to play to the gallery. நீங்கள் நம்பக்கூடும் உங்களுடைய செல்லக் கடவுளுக்கு நன்றி. அப்பாடா!
தொல்.திருமாவளவன்: தமிழக அரசே! திமுக குற்றவாளி ‘பேராசிரியர்’ அன்பழகன் மீது கடும் நடவடிக்கை எடு!
April 29, 2015
நம் தமிழகத்தில், நேர்மையாகவும் தர்மாவேசத்துடனும் அரசியலை நடத்திக் கொண்டு செல்வதில் தொல். திருமாளவன் அவர்களுக்கு ஈடு இணையே கிடையாது, பாவம். :-(
அதனால்தான் இப்படியெல்லாம் அறிக்கை விடுகிறார், அவர். :-((
கில்யஸ் மறுசுழற்சி: சில குறிப்புகள்
April 24, 2015
(முந்தைய பதிவுகள்: முதலாவது. இரண்டாவது. மூன்றாவது: ஜிஹாத் பற்றியது. நான்காவது: கபானியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் கர்ட்களின் வீரம் ஜொலிக்கும் போராட்டத்தைப் பற்றியது. இவற்றைப் படித்தால் கொஞ்சமேனும் பின்புலம் கிடைக்கலாம்)
கடும் எச்சரிக்கை: வழக்கத்தையும் (~1000 வார்த்தைகள்) விட இது நீளம் அதிகம். சுமார் 1500 வார்த்தைகள். கில்யஸ் பற்றி எழுதிஎழுதி எனக்கு மாளவில்லை. :-(
கில்யஸ் நினைவுகளில் பலவாரங்களாக உழன்று கொண்டிருக்கிறேன். இதனை எழுதச் சுமார் 6 மணி நேரம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். என் நண்பரின் நினைவுக்காக, இதனைக் கூடவா என்னால் செய்திருக்க முடியாது?
அதேபோல – இதனை முழுவதுமாகப் படிக்கப்போவது உங்களில் 30 பேரேயாயினும், உங்களால் இதைக் கூடவா செய்ய முடியாது? ஆகவே, பொறுமையாகப் படிக்கவும்.
… முடியாவிட்டால் இருக்கவேயிருக்கின்றன, நம்முடைய செல்ல ஞானத் தமிழர்களின் சுடச்சுடத் தமிழ்ச் சினிமா விமர்சனங்கள் – அவற்றுக்கு வேறெங்காவது செல்லவும். நன்றி.
கில்யஸ் அம்மணி புராணம் தொடர்கிறது… … :-(
வரிக்கு வரி தவறாக, ஆனால் மாளா தன்னம்பிக்கையுடன், ஒரு வரலாற்றுத் துணுக்குக் கட்டுரையை எழுதி மினுக்குவது எப்படி?
April 22, 2015
(அல்லது) இதுதாண்டா டேட்ட்ட்ட்டா ஸைன்டிஸ்ட்ட்ட்ட்ட்ட்!
… எவ்வளவு தெகிர்யம் உங்களுக்கு! எப்படியென்றா கேட்கிறீர்கள்?
இப்படித்தான். (ஆனால் இது ஆங்கிலத்தில் இருக்கிறது! – Imagining a Buddhist India!!)

சகலடேடாவல்லவன் “அட அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ, தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ…” வருகிறார், ஒதுங்குங்கடா முண்டங்களா… (படம் இங்கிருந்து)
எனது செல்லமான பழம்பெரும் எழுத்தாளர், ஜெயகாந்தன் இறந்த செய்திகேட்ட அடுத்த கணம், அடுத்த கணமே, துள்ளிக்குதித்துக்கொண்டு வாயுவேகம் மனோவேகமாக ஜெயகாந்தனின் வீட்டையடைந்தது ஒரு சாகசச் செய்தி என்றால், அடுத்தவரியில் ‘கம்பீரமான குரலில் வரவேற்கும் ஜெயகாந்தன் அங்கு இல்லை,’ என்ற முக்கியமான செய்தி உண்மையிலேயே திடுக்கிடவைப்பதுதான்!
அதாவது, ஒருவர் இறந்ததற்குப் பின் அவர் உயிருடன் இருக்கமாட்டார் எனும் திடுக்கிடும் உண்மையை – ஒரு பக்கா தமிழ் அலக்கிய எழுத்தாளனைத் தவிர வேறுஎவன், மிகச் சிறப்பாக அவதானிக்க முடியும், சொல்லுங்கள்?
Read the rest of this entry »

