குசுமுதல்வாதம்: ஒரு அ, ஆ அரிச்சுவடி (1/2)
August 1, 2015
அம்மணிகளே, அம்மணர்களே!
எச்சரிக்கை: இது ரொம்பவே ரசக்குறைவான கட்டுரை. ஆகவே மூக்கை மூடிக்கொண்டு இந்தப் பதிவைப் படிக்கவும். ஏனெனில், எனக்கு வந்திருக்கும் கோபத்துக்கு அளவேயில்லை! }:-|
இந்தப் பதிவில் வெறும் ‘கெட்ட’ வார்த்தைகள் மட்டுமே வந்திருக்கும். ஆனால் நல்லவேளை, இன்று காலையில் ஜெயமோகனின் கலாம்- கேள்விகள் எனும் பதிவைப் படித்து, என் மனம் கொஞ்சமேனும் ஆதூரம் அடைந்தது.
ஆகவே, முகத்தைச் சுளித்துக்கொண்டு மேலே, இது உங்களுக்கு மிகவும் அவசியம் என்றால் மட்டுமே மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கவும். You have been sufficiently warned, right?
சாதா குசுக்கள் விடப்படுவது மானுட நியதி மட்டுமல்லாமல், அவை, ஆரோக்கியமான உயிர் தரித்தலுக்கு இன்றியமையாதவையும் கூட. மேலும், உயிரியல் ரீதியாக, குடல் இருக்கக்கூடிய ஒவ்வொரு ஜந்துவும் குசுக்களை அனுதினமும் விட்டே தீரவேண்டும் என்பதை நாம் முதலில் முதற்கண்குசு புரிந்துகொள்ளவேண்டும்.
இதற்கு ஒரு மானுடன்கூட விதிவிலக்கில்லை – அவர்கள் யாராக இருந்தாலும், இருந்திருந்தாலும் சரி… மஹாத்மா காந்தி, ஏசு க்றிஸ்து, கோதம புத்தர், மொஹெம்மத் நபி, கார்ல் மார்க்ஸ், … … <உங்களுக்குப் பிடித்த நடிக நடிகைகள்>, … … ஹிட்லர், பிரபாகரன், ஸ்டாலின், இசுடாலிர், கருணாநிதி, … … நான், இதைப் படிக்கும் நீங்கள்… உங்கள் வீட்டு நாய் அல்லது செல்லக் கழுதை உட்பட; ஏன், யுவகிருஷ்ணா, மணிகண்டன் போன்றவைகளைக்கூட இதில் சேர்த்திக் கொள்ளலாம்; ஆனால் பின்னவைகள் இதனைப் பின்பக்கமாக மட்டும் விடுவதில்லை, ஏனெனில் இம்மாதிரி இளைஞர்களுடைய எழுத்துழைப்பின் தன்மையும் குறிக்கோட்களும் ஆழமும் வீச்சுமே அலாதிதான். வேறுதான்!
ஹ்ம்ம்… எப்படியும், இந்த எழவையெல்லாம் நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதும் இல்லை.
… இதனை அலசுவதில் ஒரு விதத்திலும்கூட – வெட்கமோ நாணமோ, ஒரு அசௌகரியத்தை உணரவேண்டிய அவசியமோ – இல்லவேயில்லை. மேற்கண்ட மனிதர்களெல்லாம் குசு விட்டார்கள்/விடுகிறார்கள் என்பதாலேயே அவர்களுடைய ஆகிருதி குறைந்து விடுகிறதா என்ன? ஆக, நம்முடைய இயல்பான வாழ்க்கையில் குசு விடுவதும் ஒரு அங்கம் என்பதைப் புரிந்துகொண்டு மேலே படிக்கவும், மேலும் முக்கியமாக – கீழே விடவும். சரியா?
சாதா குசு விடப்படுவதும், அவை பல சமயங்களில் ஸ்பெஷல் ஆடியோ எஃபெக்ட்களுடன் டர்புர் பொன்ங்ய் சுய்ங்ய் என்றெல்லாம் திராவிட வீரத்துடன் வெளிப்படுவதும், உணவுப் பழக்கத்துக்கு ஏற்றபடி நறுமணம் கொண்டிருப்பதும், நாம் அவற்றை (=நம்முடைய சொந்தக் குசுக்கள் அல்லாதவற்றை) முகம் சுளித்துக்கொண்டு முகர்வதும் – அவற்றின் வன்முறை காரணமாக, அவைகளை கமுக்கமாக (ஒரு நாளைக்கு சுமார் அரை-முக்கால் லிட்டர் வீதம்) விடுவதும் நம்முடைய கல்யாண குணங்கள்.
ஆக, அவை எவ்வளவு துர்நாற்றம் கொண்டவையாயினும், உரத்த சிந்தனையை வெளிப்படுத்துபவையாய் இருந்தாலும், பிறத்தியார் குசுக்கள் நமக்கு நகைச்சுவை/அருவருப்பு உணர்ச்சியைத் தூண்டினாலும் – அவை வெறும் அப்பாவிகள் என்ற அடிப்படையைப் புரிந்துகொண்டால் நம் வாழ்க்கையின் குசானுபவம் (இது இலக்கிய வாசிப்பனுபவத்துக்கு மாமன் மகள்முறை) இனிதாகலாம்.
…மேலும் அவற்றின் கம்பீரத்தையும், பராக்கிரமத்தையும், விடப்படும் சூழலையும் பொறுத்து அவற்றின் தாக்கத்து அரை நிமிடம் கூட இருக்காது என்பதைப் புரிந்துகொண்டால் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பலாம்.
மேலும் சிலபல கீழ்கண்ட வகையிலான குசு (=திராவிட) மேற்கோள்களை/முழக்கங்களை நெட்டுரு (அல்லது இணையவுரு) போட்டுக்கொண்டால், சிறிதளவாவது மேலதிகமாகச் சிரித்துக்கொண்டே உய்யலாம்: (கவனிக்கவும்: இவையெல்லாம் தமிழ்க்குசு செங்குசு மாநாட்டின் விளம்பரத் தட்டிகளில் காணப்பட்டவை! இவற்றை, என் வெறுப்பினால் அல்லது ஆரிய-பார்ப்பனக் குசும்பினால் எழுதுகிறேன் எனக் கருதவேவேண்டாம்!)
நாம் விடும் குசு நமதென்பறிந்தோம்!
யாதும் குசுவே, யாவரும் முகர்ந்தீர்!
தீதும் குசுவும் தான்விட நாறா!
மலச்சிக்கலால் ஆகாதெனினும் முக்கல்தன் மெய்வருத்தக் குசுவைத் தரும்
பிறப்பொக்கும் எல்லா குசுக்கும்…
டர்ரகரமும், புர்ரகரமும் வாய்முதல்வழி வாரா!
குசுவணங்கே! உன் சீரிளமைத் திறம் முகர்ந்து செயல் மயங்கி வாழ்த்துதுமே!
விடடா, அந்தக் கொலைக் குசுவை விடடா, அந்தப் புல்லியர் கூட்டத்தை பேதி செய்யடா!
குசுஸ்தான் ஜிந்தாபாத்!
ஒன்றே குசு, ஒருவனே விடுபவன்!
அடைந்தால் குசுநாடு, இல்லையேல் விட்டுவிட்டு ஓடு!
குசு நாமம் வாழ்க!
என் குசுவினும் குசுவான உடன்குசுக்களே! என் குசுவின்குசுக்களே!
குசுவே வெல்லும்!
புறநானூற்றுக் குசுமானம் காப்போம்!
உலகத்திலேயே முதற்குசு திராவிடக் குசு!
குசுவின்றி அமையாது உலகு…
<உங்களுக்குப் பிடித்த முழக்கத்தை (ம்ம்ம், வாய்வழியானதைச் சொல்கிறேன்) இங்கே விட்டுக்கொள்ளவும்!>
…
போறுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா? ;-)
சுபம். சுகம். சுகந்தம். ஏகாந்தம்.
(மன்னிப்பு உண்டா?)
-0-0-0-0-0-0-
ஆனால் கருத்துக் (=’ஸ்பெஷல் மஸாலா’) குசுக்கள் – மிக முக்கியமாக வினவு தரப் போராளிகளால், இணையக் குளுவானக்கூவான்களால் விடப்படுபவை – வெறும் அற்ப, கயமைக் குசுக்கள் மட்டுமே!
இருந்தாலும் அவற்றின் கருத்துக்குசுவியல் ரீதியான தாக்கத்துகள் – நம் திராவிட குளுவானிஸ்தானில் வீரியம் நிரம்பியவை. மத, ஜாதியென ஒரு மசுர் வித்தியாசமுமில்லாமல் எல்லா முட்டாக் கூவான்களையும் தடுத்தாட்கொண்டு, சமூகத்தையே அதல பாதாளத்தில் வீழ்த்தக் கூடியவை.
மற்றபடி ஒரு குசுவுக்கும் இவை பிரயோஜனமில்லை என்று சொன்னாலும் – இவற்றின் சூத்துக்கண்களை ஊற்றுக்கண்களைப் புரிந்துகொள்வது நமக்கு அவசியம்.
அதனால்தான் அ, ஆ எனும் அரிச்சுவடிப் பிரிவுகளைப் பற்றி நாம் சிந்திக்கவேண்டும் என நினைக்கிறேன்.
-0-0-0-0-0-0-0-
அ
அ என்பவர் மிகமிக நல்ல காரியங்களைச் செய்திருப்பார், செய்துகொண்டிருப்பார்; பெரும்பாலும் அவற்றைத் தம்பட்டம் அடிக்காமல், தற்புகழ்ச்சியோ பெருமித உணர்ச்சியோ இல்லாமல் தொடர்ந்து கர்மசிரத்தையாகச் செய்துகொண்டிருப்பார்.
ஆனால் அய்யன்மீர், நல்ல காரியம் என்றாலே அதற்கு எதிர்ப்பு மட்டும்தான் ஏகோபித்து வரும் இல்லையா? மேலும் நம் தங்கத் திராவிடத் தமிழ் நாட்டில் எவர் என்ன நல்லது செய்தாலும் அவருடைய மதம், ஜாதி என்ன என்று பார்த்து மட்டுமேதான் அவருக்கு மதிப்பு(அல்லது மிதிப்பு) அளிக்கப்படும் அல்லவா?
…மேலதிகமாக – அவருக்கு இடதுசாரிக்கொள்கை, மனிதவுரிமைச் சவடால், சமூகநீதி முக்கல்கள், விரக்தி முனகல்கள் பிடித்தமில்லையென்றால் – அவர் ஒரு பொருட்டேயல்லர்தானே? உரத்து எச்சில் தெறிக்கப் பேசி, ஆட்காட்டி விரலைத் தலைக்குமேலே தூக்கிச் சுற்றி வீரவசனச் சவடால் விடாவிட்டால் அவர் என்ன நல்லது செய்தாலும் அது கெட்டதாக, அற்பமானதாகத்தான் கருதப்படும் இல்லையா?
…ஆனாலும், அவர் கருமமே கண்ணாயினார் என அந்த எதிர்ப்புகளை மீறி, தளறாமல் முயற்சி செய்துகொண்டே இருப்பார்.
இம்மாதிரி ஆட்களுக்கு ஊடகப் பேடிகளுக்கேற்றவாறு நடனமாட வராது. அவர்கள் குவியம் பிரபலமாவதல்ல. டீவியில் கழிசடைக் கருத்து தெரிவித்தே தமிழகத்துக்கு, இந்தியாவுக்கு – ஏன் மானுடத்துக்கே இச்சகம் செய்வதல்ல.
கண்டமேனிக்கும் டௌன்லோட் செய்து அவற்றை வைத்துக்கொண்டு தினசொறிகளில் அபத்தத் தொடர்கட்டுரைகளை ஒப்பேற்றுவதில், தங்கள் அபிமானிகளுக்குச் சொறிந்துகொடுப்பதில் அவர்களுக்கு ஆசையில்லை.
தாங்கள் கொண்டுள்ள ஆக்கபூர்வமான நம்பிக்கைகளுக்கு, அர்த்தபூர்வமான வடிவுகளைத் தர முயன்று கொண்டிருப்பவர்கள் இவர்கள்…
-0-0-0-0-0-0-
ஆ!
ஸ்பெஷல்மஸாலா குசுமுதல்வாதியான ஆ என்பவர் ஒரு மசுத்தையும் எவனுக்கும் செய்திருக்கமாட்டார். இதற்குமேல் ஊக்க போனஸாக, முடிந்த வரை, பிறத்தியாருக்கு என்னவிதத்திலெல்லாம் தொந்தரவு தரமுடியுமோ, அவை அனைத்தையும் கிளுகிளுப்புடன் செய்து வருவார்.
ஒரு துறையிலும் கூட உச்சத்தை எட்ட முடியாமல், வெறும் உச்சுக்கொட்டிக்கொண்டே இருப்பார். ஒரு விஷயத்திலும் உருப்படியில்லை என்றாலும், எல்லா துறைகளிலும் தன் மூக்கை அல்லது பலான உறுப்பை நுழைத்து அதி நவீன கருத்தைச் சொல்லிக்கொண்டேயிருப்பார். சராசரித்தனத்தின் உபாசகராக இருப்பார்.
அவரால் முடிந்ததெல்லாம் பிறத்தியாரை நக்கலாகக் கேள்வி கேட்பதும், போராளிக் குசு விடுவதும், கருத்துக் கந்தல்களைப் பறக்கவிடுவதும் தான்.
இந்த பெரிய ஆ சன்னிதானக் குசுமுதல்வாதக் குஞ்சாமணிகளின் கீழே கைகட்டி வாய் அகட்டி அமர்ந்து அவர்கள் விடும் சொட்டுக்களைப் பருகிப் புளகாங்கிதம் அடைவதற்கென்றே ரசிகக் குஞ்சாமணிகள் இருக்கிறார்கள். (எடுத்துக்காட்டு: 1 எடுக்காமல்காட்டு: 2) இந்த ‘ஆ’க்களின் ரசிக உதிரிகள் ‘சார், அண்ணா, வொங்க கர்த்து நெத்தியடி சாட்டையடி சவுக்கடி பதிலடி செம்பட்டிஅடி கிழித்து விட்டீர்கள் விளாசல் ‘ எனச் சொல்லச்சொல்ல ‘ஆ’க்களின் சுயக்குசுபலூன் பிம்பம் பெரிதாகிக்கொண்டே போகும்வேறு.
‘ஆ’க்கள் உளறிக் கொட்டுவதில், அற்பத்தனத்தை வெளிப்படுத்திக் கொள்வதில் பலப்பல விதங்கள் இருக்கின்றன:
- அ செய்த விஷயம் ஒன்றும் பெரிதல்ல, அவர் ஒரு விஷயத்தையும் செய்து கிழிக்கவில்லை, அவர் ஒரு சாதாரண மனிதர் தான்.
- அ செய்த விஷயம் பெரிதாக இருந்தாலும் அவர் ஒரு சாதாரண மனிதர்தான்!
- அ ஒரு விஷயத்தையும் செய்யவில்லை. எல்லாம் புளுகு, மாயை. (இதற்கு மதப் புத்தகங்களிலிருந்து வக்காலத்து!)
- அ ஒரு சமுதாயத்துரோகி #1!
- அ ஒரு சமூகத்துக்கு – மற்றவைகளை விட அதிக உதவி செய்தார்!
- அ மாற்று மதக்காரர்களிடம் இணக்கமாக, மரியாதையுடன் இருந்தார் – ஆகவே அவர் சொந்தச் சமூகத் துரோகி.
- அ தறுதலைப்புலிகளுக்கு உதவியாக ஒன்றும் பேத்தவில்லை. ஆகவே அ ஒரு அற்பர்.
- அ அன்டார்டிகா பெங்க்வின்களைப் பற்றி ஒரு கருத்துமே தெரிவிக்கவில்லை, என்ன சோகம்!
-
நான் பிஏ (பொருளாதாரம்) படித்திருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன், அ ஆசாமிக்கு நேனோ டெக்னாலஜி தெரியவேதெரியாது.
-
ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரச் சிறையில் இருந்தபோது, நான் உழையோவுழை எனவுழைத்து, ஓடியோடிச் செய்திகளைச் சேகரித்து – சுடச்சுட வாசகர்களுக்குப் பரிமாறினேன். இந்த சாரு நிவேதிதா என்ன மசுத்துக்குச் செய்தார்? இம்மாதிரி ஏதாவது ஆக்கபூர்வமாகச் செய்தாரா?
- அ அணு ஆராய்ச்சியில் பெரிய பிஸ்தாவாக இருக்கலாம். ஆனால் அவருக்கு ‘ரேஷ்மா கதையை எழுதுகிறேன்’ என்கிற பெயரில் வக்கிரப் படங்களைப் போடும் தில் இருக்கிறதா?(திராவிடனும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு 20/07/2015)
- எனக்கு எழுத்துரு, வரிவடிவம் பற்றியெல்லாம் ஒரு எழவும் தெரியாது, சும்மா அட்ச்சுவுடுவேன். ஆனால் ஜெயமோகன் அவற்றைப் பற்றி நிறைய யோசித்து அனுபவித்து எழுதினாலும் அவர் தமிழ்த் துரோகி! (பேராசிரியர் வா.செ. குழந்தைசாமி: தமிழ் (தமிழில் அல்ல) எழுதுவதற்கு ஆங்கில துணை வரிவடிவம் – சிந்தனைகள் 09/11/2013)
- அ அணுசக்திக்குச் சாதகமாக இருக்கிறார். ஆனால் – என் உடலில் அணுக்களே இல்லாமல் இருப்பதால், ஆக என் உடலிலிருந்து கதிரியக்கமே வெளிவராமல் இருப்பதால் – மேலதிகமாக நான் அக்மார்க் குசுக்களால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதால், அ ஒரு துரோகி!
-
எனக்கு ந்யூட்ரினோ பற்றி ஒரு எழவும் தெரியாது. இருந்தாலும் விக்கிபீடியா பார்த்துவிட்டு அட்ச்சுவுடுவேன். ஆனால் அ அதைப் பற்றிப் பேசினால், அவர் துரோகி.
-
அ, ஏன் ரொஹிஞ்சா முஸ்லீம்களைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை? ஆகவே அவர் ஹிந்துத்துவாவின் அடிவருடி.
- அ என்ன செய்து என்ன பயன்? அவரால் என்னைப் போல வேகமாகக் கருத்துகளையும் கட்டுரைகளையும் அட்ச்சுவுட முடியாதே!
- சரி, அ இந்தக் காரியத்தைச் சரியாகச் செய்திருக்கலாம்… ஆனால் – இதோ இன்னொரு காரியம் இருக்கிறதே, இதனை அந்த அ செய்யவேயில்லையே!
- அ அதில் விற்பன்னராக இருக்கலாம், ஆனால் அவர் மற்ற விஷயங்களில் சப்பை.
–0-0-0-0-0-0–
கேள்விக்கு மறுபடியும் வருகிறேன்: குசு விடுவது எப்படி? (அடுத்த பகுதி)
August 1, 2015 at 20:02
என்னால முடியல சாமீ…….
August 3, 2015 at 00:02
ஏங்க இப்படீ … கடவுளே … :))
August 3, 2015 at 12:54
Ram,
not able to control my laugh…. my entire office was staring at me laughing mad. Tears rolling down, abdomen got squeezed, cheeks aching….. my God …
henceforth, i don’t read your blog in office…..