ஒவ்வொரு முறை எம் இனமானத்தலைவர், சுயபச்சாதாபப் பிலாக்கணம் வைக்கும்போதும் – ஏதாவது அப்பட்டமான உண்மையை வாய் தவறிச் சொல்லிவிடுகிறார். ‘என் அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல ஒருமாதிரித் தன்னிலை விளக்கத்தைக் கொடுத்துவிட்டு, கல் நெஞ்சினனான என்னையேகூட திடுக்கிடச் செய்துவிடுகிறார்.
அரவிந்த் கண் மருத்துவமனை, அரவிந்தன் கண்ணையன், அய்யய்யோ: அகுறிப்புகள்
September 4, 2015
(அல்லது) ஸப்பாஷ், ஸர்யான போட்டீ!
…நேற்று எனக்கு, அர்விந்த் கண் மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தது. இதன்குறிப்பாகவும் ஒரு பிரமிப்பில் மூழ்கிய நான், என் அனுபவங்களைச் சார்ந்து அதைப் பற்றி ஜொலிப்போதிஜொலிப்பாக எழுதலாம் என்று பார்த்தால், ‘எதிர்மறை உலகம்‘ புகழ் அரவிந்தன் கண்ணையன் அவர்கள் நினைவு வந்து பேதி பிடுங்கிக் கொண்டு விட்டது! :-(
ஏனெனில், இதற்கும் ‘ஒத்திசைவு ராமசாமியும், ஒத்திசையாத அரவிந்தும்: எப்படி இதைப் பற்றி எழுதக்கூடாது என்பதற்கான ஒரு பாலபாடம்‘ என்று ஒரு முழநீள ஆங்கிலக் கட்டுரையைப் படிக்கவேண்டிய துர்பாக்கியம் ஏற்படுமோ என்கிற ஒரு பாதுகாப்பு உணர்ச்சிதான்!
ஆகவே, என் அரைகுறைக் குறிப்புகளையும் அரவிந்தனைத்த எதிர்வினைகளையும் சேர்த்து, அவருடைய பாதார விந்தங்களில் சமர்ப்பித்து என்னை நானே உய்வித்துக்கொள்ள முயல்கிறேன்… நன்றி.
அதாவது: மொஹெம்மத் நபி அவர்களின் வழி நடத்தலில் ஒரு ‘சிங்கப்பூர்’ மொஹெம்மத் போன்ற மனிதரெல்லாம் உருவாக முடியும் என்றால் ராமசாமியாக நான், வெறும் ஒரு அப்துல்லாவாகப் பதவியிறக்கம் பெறமுடியாதா என்ன? :-)
இது சென்ற பதிவின் (=இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (6/n) 18/08/2015) தொடர்ச்சி. அதாவது – இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (7/n) Read the rest of this entry »
பாலநடராஜா ‘சின்ன பாலா’ ஐயர்: சில நினைவுகள், குறிப்புகள்
August 16, 2015
இன்று ஆகஸ்ட் 16 – சரியாகப் பதினொன்று வருடங்களுக்கு முன், மனித நேயம் மிக்கவரும், பண்பாளரும் ஆன ‘சின்ன பாலா‘ அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட தினம்.
மகாமகோ லக்ஷ்மண் கதிர்காமர்: சில நினைவுகள், குறிப்புகள்
August 12, 2015
ஸ்ரீலங்காவின் லக்ஷ்மண் கதிர்காமர் அவர்கள், ஸ்ரீலங்கா தமிழர்களின், ஏன் மானுடத்தின் எதிரிகளுமேயான தறுதலைப் புலி ‘எல்டிடிஇ’ கொலைகாரர்களின் முடிவை, அவர் ஸ்ரீலங்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது ஆரம்பித்து வைத்ததால், படுகொலை செய்யப்பட்டவர்.
இன்று (12 ஆகஸ்ட்) அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தினம். அவர் கதை 2005ல் முடிந்து பத்தாண்டுகள் உருண்டோடி விட்டன என்றாலும் அவர் தொடங்கிய முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று(=எல்டிடிஇ அயோக்கியர்களுக்குச் சாவுமணி), ஒரளவுக்கு நன்றாகவே நிறைவேறியிருக்கிறதுதான்!
சரி. பல இடங்களிலும் சேகரம் செய்யப்பட்ட என்னுடைய பழைய குறிப்புகளில் இருந்தும் சிதைந்துகொண்டிருக்கும் மங்கல் நினைவுகளிலிருந்தும், லக்ஷ்மண் கதிர்காமர் அவர்கள் தொடர்புள்ள சில விவரங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். ஆனால், இதற்கு நான் சந்தோஷப்படுவதா அல்லது சோகமுறுவதா என்று தெரியவில்லை; sad contemporary history is a tough mistress, indeed! :-( ஹ்ம்ம்… Read the rest of this entry »
இதுதாண்டா ப்ர்ஹ்ம்மம்!
August 9, 2015
என் மதிப்புக்குரிய தளங்களில் ஒன்றான ‘அரூபக் கருத்து நிலை வாத்து’ – AbstractGoose! ;-/ – முன்னெப்போதோ பதிப்பித்த சித்திரங்களில் ஒன்றை உங்கள் தலையில் கட்டுவதில் நான் பெருமைப் படுகிறேன்!
அட்ச்சு வுடு தல வீரமணி ஸ்பெஷல்: மொட்டத்தலைக்கும், மசுத்துக்கும் பகுத்தறிவு முடிச்சுபோடுவது எப்படி?
August 6, 2015
மேற்கண்ட கட்டுரையின் நீதி:
டப்பா ஒரு ஆண்: ஆக, டப்பாவிலிருந்து சாப்பிடுபவர்களுக்கு வழுக்கை விழுந்தேயாகவேண்டும். (கவனிக்கவும்: பொதுவாக ஆண்களுக்குத் தான் வழுக்கை விழும்!)
டப்பி ஒரு பெண்: ஆக டப்பியிலிருந்து சாப்பிட்டால் ஒரு எழவும் ஆகாது. ஆகவே – 90 வயதிளம் ஆண்களும்கூட அமோகமாகத் தலைவாரிப் பின்னிப் பூச்சூடிக்கொள்ளலாம். (கவனிக்கவும்: பொதுவாக ஆண்களுக்குத் தான் வழுக்கை விழும்!)
இவ்வரிசையின் முதற்பகுதி: குசுமுதல்வாதம்: ஒரு அ, ஆ அரிச்சுவடி (1/2) 01/08/2015
அப்பகுதியின் முடிவில் இப்படியொரு கேள்வியெழவைக் கேட்டு முடிந்திருந்தேன்: ஸ்பெஷல்மஸாலா குசு விடுவது எப்படி?
அதற்குப் பதில் … இப்படித்தான்: http://www.vinavu.com/2015/07/29/what-abdul-kalam-failed-to-speak-about-cartoon/
‘ஆ’ என்பவர்கள் வினவுக் கூவான்கள் போன்றவர்கள். இவர்களின் அற்பத்தனத்துக்கும் அழிச்சாட்டியத்துக்கும் அயோக்கியத்தனத்துக்கும் ஒரு எல்லையே இல்லை!
ஆக்கபூர்வமாக ஒரு மசுத்தையும் பிடுங்கமுடியாமல் போனாலும், சொகுசாக உட்கார்ந்துகொண்டு குமாஸ்தாத்தனமாக சொகுசுக்களை விட்டேற்றியாக விட்டுக்கொண்டே இருப்பார்கள், இந்தப் பதர்கள்…
அப்துல்கலாம் அவர்களின்மீதான தூற்றல்களிலேயே மிக மோசமானது – என்னுடைய செல்ல வுடன்பெறப்பாரும், சொகுசுத்தீவிரவாதியுமான யுவகிருஷ்ணாவுடையதுதான். ஏனெனில், அடிப்படையில் அற்பர்களால், தரமற்றவர்களால் காரியப்புகழ்ச்சி செய்யப்படும் சோதனைதான் உலகிலேயே தாங்கொணா ஒன்று.
குசுமுதல்வாதம்: ஒரு அ, ஆ அரிச்சுவடி (1/2)
August 1, 2015
அம்மணிகளே, அம்மணர்களே!
எச்சரிக்கை: இது ரொம்பவே ரசக்குறைவான கட்டுரை. ஆகவே மூக்கை மூடிக்கொண்டு இந்தப் பதிவைப் படிக்கவும். ஏனெனில், எனக்கு வந்திருக்கும் கோபத்துக்கு அளவேயில்லை! }:-|
இந்தப் பதிவில் வெறும் ‘கெட்ட’ வார்த்தைகள் மட்டுமே வந்திருக்கும். ஆனால் நல்லவேளை, இன்று காலையில் ஜெயமோகனின் கலாம்- கேள்விகள் எனும் பதிவைப் படித்து, என் மனம் கொஞ்சமேனும் ஆதூரம் அடைந்தது.
ஆகவே, முகத்தைச் சுளித்துக்கொண்டு மேலே, இது உங்களுக்கு மிகவும் அவசியம் என்றால் மட்டுமே மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கவும். You have been sufficiently warned, right?
அப்துல் கலாம் மறுசுழற்சி: சமன நிலைக் கருத்துகளும், குளுவான் ஜிஹாதி வகையறா அரைகுறைகளின் படுகேவலமான அற்பத்தனமும்
July 29, 2015
பயப்படாதீர்கள்.
(அல்லது) முஸ்லீம் சான்றோர்கள்-சிந்தனையாளர்கள், தொழில்முறை மனிதவுரிமைக் காரர்கள் அவரவர்களின் சொந்தக் காரணங்களிளால் காரியஅமைதி காக்கும்போது — அற்ப அரைகுறை ஜிஹாதிகளை ஆகர்ஷித்து அவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது எப்படி :-)
ஆ! ஐய்யோ! தமிழர்தலைவர் ‘விடுதலை’ வீரமணி அமெரிக்க ஸ்பெஷல் படையினரால் கைது செய்யப்பட்டார்!! :-( இதனைக் கேட்பாரில்லையா!
July 24, 2015
பகீர் செய்தி!
சென்னை, 23 ஜூலை, 2015: முன்னதாக, தன்மானத் தலைவர் நிகரிலா திராவிடர் திலகம், இனமானச் செம்மல், கி. வீரமணி அவர்கள், சிங்கப்பூர் சென்றிருந்தபோது சொகுசாக ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு தன்னுடைய செல்லமான கற்பனைக் கோவேறுகழுதை****யின்மீது ஆரோகணித்து ‘அமெரிக்க உளவியல் சங்கம்’ பற்றிய ஒரு ஆராய்ச்சிக் குறிப்பை அவரோகணித்தார்.
மேலும் ‘திராவிட உளறியல் சங்கம்’ எனும் தன் சொந்த சங்கத்தின் சங்கதிகளையும் கலந்து கமகமா என்று பரிமாறினார். அதாவது பரி நரியாகி, நரி சொறியாகி மாறி மாறி, படு அற்புதமாகக் காட்சிதந்து பரிமாறப்படும் திராவிளையாடல் புராணக்கதைதான் இது! Read the rest of this entry »
‘விடுதலை’ வீரமணி இப்படிப்பட்ட சிரிப்போதிசிரிப்பு முட்டாள் தனத்தையும் செய்வாரா? ஆச்சரியம்தான்!
July 21, 2015
திராவிடப் பகுத்தறிவு என்பதன் லட்சணமே, ஆதார சுருதியே, அடி நாதமே – மூட நம்பிக்கைக் குவியல்தான்; அதாவது ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் பிதற்றல்களைக் கொள்கைகளாகக் கொள்வது; அவரது விட்டேற்றி வெறுப்புப் பிரச்சாரங்களைத் தாரக மந்திரங்களாக உச்சாடனம் செய்வது; ஆரிய மாயை; திராவிடத் திராபை; லெமூரியா; இன்னபிற, இன்னபிற…
திராவிட அறிவியல் என்பதே ஒரு ஆக்ஸிமொரான் – அதாவது அறிவியலுக்கும் திராவிடத்துக்கும் ஒரு சுக்குச் சம்பந்தமும் இல்லை.
திராவிடனும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு
July 20, 2015
(அல்லது) ஏகபோக திராவிடக் காப்பிக்கடை நிறுவனரும், தழுவல் சக்ரவர்த்தியுமான மானமிகு யுவகிருஷ்ணனாரும், பிதுங்கிவழியும் பாற்சுரப்பிப் படங்களும்
…இவருக்கு வெட்கம் என்பது துளிக்கூட இல்லை. மானத்தையே விடுங்கள் – ஏனெனில், அவர் ஒரு திராவிடலை என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும்; கஜினியின் மொஹெம்மத் கொள்ளை அடித்தே காலத்தை ஓட்டியது போலத்தான், இவரும் வெட்டியொட்டியே ‘தொழிலை’ நடத்திக்கொண்டிருக்கிறார் என்பதும் தெரிகிறது; இருந்தாலும், பெண்களை இவ்வளவு கீழ்த்தரமாக இழிவுபடுத்தி, ஒரு போகப் பொருளாக மட்டுமே ஆண்குறி வீங்க சிந்திப்பவர்(!) எனப் பிரத்தியட்சமாகத் தெரியவரும்போது – சீ, இந்த இளைஞனா திருந்தப் போகிறான் என்று தோன்றுகிறது.
ஆம்பூர் அட்டூழியங்கள், தமிழகத்தில் இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகளுக்கு ஆதரவு, என் தம்பி – நடைமுறை தமிழக இஸ்லாம் (2/3)
July 15, 2015
இந்த வரிசையில் முதல் பதிவு: இந்திய முஸ்லீம் சமூகம், அதன் ஏகோபித்த சுயலாப-பழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில கருத்துகள் (1/3); இதனைப் படித்து விட்டுத் தொடரலாம் – உங்களுக்கு இதனைப் படித்தேயாக வேண்டுமென்றால்…
(தொடர்ச்சி) இப்பதிவு வரிசையை, நான் இப்போது எழுதுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள்:
-0-0-0-0-0-0-
(அல்லது) ரமதான் மாத மனஅழுத்தங்கள்
… என் மகன், அவன் வகுப்புக் குழந்தைகளுடன் பள்ளிக்கு அருகில் இருக்கும் ஒரு முஸ்லீம் பெரும்பான்மை கிராமத்துக்கு – சென்றவாரம் போயிருந்தான்; மதியத்திலிருந்து சாயங்காலவேளை வரை அவர்கள் அங்கு கழித்திருக்கிறார்கள். மாலை மயங்கும் நேரத்தில் அக்கிராமத்தினர் அன்புடன் அளித்த இஃப்தார் விருந்தில் (ரமதான் நோன்பு முடிக்கும் தருணம்) கலந்துகொண்டு, அங்குள்ள மதறாஸாவின் குழந்தைகளுடன் அளவளாவி கண்டமேனிக்கும் இனிப்புகளை சந்தோஷமாக, வயிறு உப்ப உண்டுவிட்டு – வீட்டுக்கு வந்து, இரவு உணவுவேண்டாம் என்று சொல்லித் தூங்கியே விட்டான். :-)
![என் மகனின் ஆங்கிலமூல நாட்குறிப்புகளில் இருந்து ஒரு பகுதி: ... [நாம் வீட்டில் பாடும்] அல்லாஹூ பாட்டுபோன்ற ராகத்தில் ஒரு பாட்டை அவர்கள் பாடினர் - அதன் பெயர் முஸ்தஃபா. அவர்கள் மிக அழகான வெண்மை நிற ஆடைகளை, தொப்பிகளை அணிந்திருந்தனர். அவர்கள் ஜிப்பாக்களுக்குக் காலர்கள் இருந்தன. மதறாஸாவின் ப்ரின்ஸிபல் பெயர் இப்ரஹீம். அவர் நான்கு ஆண்டுகளாக அங்கு ஆசிரியராக இருக்கிறார். [கிராமத்தில்] மஸ்ஜித் 42 ஆண்டுகளாக இருக்கிறது... ...](https://othisaivu.in/wp-content/uploads/2015/07/screenshot-from-2015-07-09-211242.png?w=300&h=232)
என் மகனின் ஆங்கிலமூல நாட்குறிப்புகளில் இருந்து ஒரு பகுதி: … [நாம் வீட்டில் பாடும்] ‘அல்லாஹூ’ பாட்டுபோன்ற ராகத்தில் ஒரு பாட்டை அவர்கள் பாடினர் – அதன் பெயர் ‘முஸ்தஃபா.’ அவர்கள் மிக அழகான வெண்மை நிற ஆடைகளை, தொப்பிகளை அணிந்திருந்தனர். அவர்கள் ஜிப்பாக்களுக்குக் காலர்கள் இருந்தன. மதறாஸாவின் ப்ரின்ஸிபல் பெயர் இப்ரஹீம். அவர் நான்கு ஆண்டுகளாக அங்கு ஆசிரியராக இருக்கிறார். [கிராமத்தில்] மஸ்ஜித் 42 ஆண்டுகளாக இருக்கிறது… …
ஆனால் இப்பேச்சு கொடுத்த உந்துதலால், மேலதிகமாகச் சிலபல காரணங்களால், நான் இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன். :-(
நலம். நலமறிய அவல், வெறும் வாய்க்கு! (அதுவும் சுமார் 1500 வார்த்தைகளில்!)
எஸ்ராமகிருஷ்ணம், ராமானுஜம், மனுஷ்யபுத்திரம், கணிதம், கவிதம், புல்லரிப்பம், புளகாங்கிதம்… … (2/2)
July 7, 2015
என்னுடைய மகாமகோ செல்லங்களில் ஒருவரான எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்துகளின்மீது எனக்கிருக்கும் மாளாக்காதலினாலும் பிரமிப்பினாலும் — இந்த இரண்டாம் பாகமும், கிட்டத்தட்ட 1300 வார்த்தைகளுக்கு மேல் நீண்டு விட்டதே! (எல்லாப் புகழும் எஸ்ராவலுக்கே, வேறென்ன சொல்ல!)
இதன் முதல் பகுதியை மண்டையில் அடித்துக்கொண்டு படித்துவிட்டுப் பின்னர் இதற்கு வந்தால், கொஞ்சம் குறைவாகக் குழம்பலாம். எச்சரிக்கை செய்து விட்டேன். பிறகு உங்கள் இஷ்டம்…
Read the rest of this entry »
சங்கல்பம்: தகத்தகாய பரதேசி – வெள்ளைப்பன்றி காலத்தே – விவஸ்தையில்லா நேரத்தே – அஷ்டாவக்கிரப் பார்வையிலே – கலியுகத்திலே – முக்கியமான முழுமுதலான பாடையிலே – வறட்டுக் கண்டே, ஜம்புவின் ஜெய்ஷங்கரே, பரட்டை ரஜினியே, வர்க்கிங்டே மன்டே, மேரூ டாக்ஸியே, தக்ஷிண் ஹோட்டலே, பார்ஸ்ன் காம்ப்ளெக்ஸே, அஜித்விஜய் ஆரியமாஸே – நெடுங்குருவிப் பட்சியே – சுக்குல இஞ்சியே, தேசாந்திரியே, துணையெழுத்தே, சஞ்சாரியே, நெடுந்துக்கமே… கொடுங்கனவே, மீளாத் துயிலே, கொரட்டையே … …
(நன்றி: எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின், ஸம்ஸ்க்ருதத்திலிருந்து நேரடி ஏகோபித்த மொழிபெயர்ப்பில் – சங்கல்ப மந்திரம். எப்படி இருக்கிறது?)
Read the rest of this entry »

