சொகுசுமுதல்வாதப் போராளிகளின் பின்நவீனத்துவ வாயுவெளியேற்றங்கள் (2/2)

August 2, 2015

இவ்வரிசையின் முதற்பகுதி: குசுமுதல்வாதம்: ஒரு அ, ஆ அரிச்சுவடி (1/2)

அப்பகுதியின் முடிவில் இப்படியொரு கேள்வியெழவைக் கேட்டு முடிந்திருந்தேன்: ஸ்பெஷல்மஸாலா குசு விடுவது எப்படி?

அதற்குப் பதில் … இப்படித்தான்: http://www.vinavu.com/2015/07/29/what-abdul-kalam-failed-to-speak-about-cartoon/

‘ஆ’ என்பவர்கள் வினவுக் கூவான்கள் போன்றவர்கள். இவர்களின் அற்பத்தனத்துக்கும் அழிச்சாட்டியத்துக்கும் அயோக்கியத்தனத்துக்கும் ஒரு எல்லையே இல்லை!

ஆக்கபூர்வமாக ஒரு மசுத்தையும் பிடுங்கமுடியாமல் போனாலும், சொகுசாக உட்கார்ந்துகொண்டு குமாஸ்தாத்தனமாக சொகுசுக்களை விட்டேற்றியாக விட்டுக்கொண்டே இருப்பார்கள், இந்தப் பதர்கள்…

-0-0-0-0-0-0-

அப்துல்கலாம் அவர்களின்மீதான தூற்றல்களிலேயே மிக மோசமானது – என்னுடைய செல்ல வுடன்பெறப்பாரும், சொகுசுத்தீவிரவாதியுமான யுவகிருஷ்ணாவுடையதுதான். ஏனெனில், அடிப்படையில் அற்பர்களால், தரமற்றவர்களால் காரியப்புகழ்ச்சி செய்யப்படும் சோதனைதான் உலகிலேயே தாங்கொணா ஒன்று.

கொடிது கொடிது, திராவிடத் தற்குறிகளால் போற்றப்படுவது… பூர்வ ஜன்ம, இந்த ஜன்ம வகையறாக்களில் பலப்பல கொடும்பாவங்கள் செய்திருந்தால்தான் இப்படிப்பட்ட தண்டனை கிடைக்கும்.   (பார்க்க: கனவை நனவாக்குதல்!)

இப்படிப்பட்ட புகழ்ச்சிப் புல்லரிப்பைப் பெற்றுள்ள கலாம் அவர்களுக்கு காலம் சரியில்லைதான்; அதனால்தான் (அல்லது நல்லவேளை!) போய்ச்சேர்ந்துவிட்டார். அவருக்குச் செய்யப்படும் அற்பத்தனமான பல இழிவுகளில் இதுவும் ஒன்று எனக் கருதி இதனையும் – சரி, விட்டுவிடலாம். ;-)

இன்னொன்று, சாருநிவேதிதா அவர்கள் தம் கலாமிய கருத்தை எழுதிருப்பதைக் குறித்த சொகுசுத்தீவிரவாத மணிகண்டனம். இது அற்பம். இது சரியல்ல, விட்டுவிடவேண்டாம்!   (பார்க்க: சாரு + கொம்ப மகாராஜாக்கள்)

சாரு நிவேதிதா அவர்களின் எழுத்துகளின் மீது (ஏன், எவருடைய எழுத்தின்மீதுமேகூட) எனக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். நான் பலதடவை அவரைக் கிண்டல் செய்து எழுதியுமிருக்கிறேன். ஆனால்…

அவரை தனிப்பட்ட முறையில், விஸ்தாரமாக நான் அறியேன் – அது அவசியமும் இல்லை. அவருடைய தனிப்பட்ட பிரச்சினைகள் மீது எனக்குக் குவியம் இல்லை, யாருக்குத்தான் இல்லை இவை!  அவருக்கும் மற்ற எழுத்தாளர்களுக்குமிடைய உள்ள உறவு/விரிசல் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால், சுமார் 25 ஆண்டுகட்கு முன்பு நானும், இப்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக இருக்கும் மகாதேவன் அரங்கநாதனும் பலமுறை, ஒரு தமிழ்க்கலை-பண்பாட்டு நிகழ்ச்சி தொடர்பாக, அவருடைய வீட்டுக்கு (அண்ணா நகர்?) சென்றிருக்கிறோம், சிலபல விஷயங்களைப் பற்றிப் பேசியிருக்கிறோம்(அதிகமாகவெல்லாம் இல்லை!). அவர் பண்புடன் தான் பழகினார்.

அவருக்கு அப்போது இருந்த ஞானத்துக்கும் எங்களுடையவற்றுக்கும் தூரம் அதிகம் என்றாலும், அவர் மேட்டிமைத்தனத்துடனோ, அகங்காரத்துடனோ பேசவில்லை. என்னைப் பொறுத்தவரை – அவர் எழுத்துகளின் (சிலசமய) காரத்தன்மை-பத்தித்தன்மை என்பது வேறு, அவர் வேறு.

என்னைப் பொறுத்தவரை அவருடைய உழைப்பும், தமிழின்மீதான அவருடைய கரிசனமும் அசாத்தியமானவை.  தொடர்ந்து ஒருவன் இந்த திராவிடட் டமிள்ச்சூழலில் ஆத்மார்த்தமாக, முழுமனதுடன் ஈடுபடுவதற்கு ஒரு ஆன்ம பலம் வேண்டும். (பொழுதுபோக்காக, தகவல்தொழில்(!)நுட்ப(!!) குமாஸ்தாவாக இருந்துகொண்டு – இலக்கிய, பொதுநல ஆர்வ பாவலா காட்டுவதல்ல இது!)

…சாரு நிவேதிதா அவர்களின் மற்ற ஆக்கங்களையே விட்டுவிடலாம் – அவருடைய அண்மைக்கால தினமணி கட்டுரைகளின் சிலவற்றைப் படித்திருப்பவன் என்கிற முறையில் சொல்வேன் – இவருடைய இந்த ஆழமான, அக்கால தமிழ்ப் பிதாமகர்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகளை விட இந்த மணிகண்டன்களால், யுவகிருஷ்ணாக்களால் அழகானவற்றை – மென்று முழுங்கி உளறிக்கொட்டிக்கொண்டிருக்காமல் (“அது அயோக்கியத்தனம், ஆனால் சரி, விட்டுவிடலாம்!” வகையறா), காப்பியடிக்காமல், அவசரம் அவசரமாக விக்கிபீடியா பார்க்காமல் ஒரு கட்டுரையையாவது எழுதமுடியுமா?

இக்கட்டுரைகளை எழுதுவதற்கு அவர் எவ்வளவு உழைத்திருக்கவேண்டும்; வெறுமனே நாலு இணையப் பக்கங்களைப் படித்துவிட்டு அற்பமாக டவுன்லோட் படங்களைப் பாத்துவிட்டு வாந்தியெடுத்த மானேதேனே நெகிழ்வுக் கட்டுரைகளை வீசியெறிந்தால் போதும் என்கிற ரீதியிலா –  அவர் கட்டுரைகள் இருக்கின்றன?

“முக்கி முக்கி நாம் எழுதும் விஷயத்தைவிட ஒன்றரை வரியில் நேற்று வந்த ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பொடியன்கள் மொத்த கவனத்தையும் திருப்பிவிடுகிறார்கள் என்று பதறுகிறார்கள்.  நம்மை இந்த சமூகம் மறந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். அதற்காக அண்டர்வேரோடு இறங்கி அட்டைக் கத்தியைச் சுழற்றுகிறார்கள். “

அய்யா மணிகண்டனரே – இந்தப் பொடியன்களின் எழுத்துகள், எழுதிய 24 மணி நேரங்களில் இறந்து (மன்னிக்கவும், மரணித்து!) விடும்.

மேலும் அய்யா, அவர்கள் அட்டைக் கத்திகளைச் சுற்றும்போது தேவரீர் தங்களுடைய தங்களுடைய கோவணத்தினுள் பொதிந்திருக்கக்கூடிய அட்டைக் குஞ்சாமணியைப் பாதுகாத்துக்கொள்ளவும். காலம் கெட்டுக் கிடக்கிறது.

…ஆனால் – என்னைப் பொறுத்தவரை, வினாடிக்கு வினாடி பப்பரப்பாவைத் தேடியலைய வேண்டிய அற்பத்தனமான வாழ்க்கையை ஜெயமோகன்கள், விமலாதித்த மாமல்லன்கள், சாருநிவேதிதாக்கள் வாழவில்லை. அவர்களுக்கு அரைவேக்காட்டு இளைஞர்கள்போல ‘Attention seeking’ பிலிம் காட்டவேண்டிய அவசியமில்லை. இவர்களே கூட ஒருவருக்கொருவர் காட்டமாக விமர்சனம் வைக்கலாம். சச்சரவுகள் இருக்கலாம். ஆனால் அவற்றைப் புறம் தள்ளிவிட்டு அவர்களுடைய எழுத்துகளை அவதானிப்பது, நம் அனுபவங்களுக்கு/படிப்பறிவுக்கு ஒத்துவந்தால் அவற்றை ஏற்றுக்கொள்வது, அல்லது ‘மறுபடியும் இதனை அசைபோடவேண்டும்’ என்று குறித்துக் கொள்வது, அல்லது அவற்றுக்கெதிராக தர்க்கரீதியாக நம் கருத்துகளை நிறுவிக்கொள்வது –  என்பவைதான் வாசகர்களுக்கு, துய்ப்பாளர்களுக்கு முக்கியம்.

…இம்மாதிரி ஆட்களை விமர்சனம் செய்வதற்கும் ஒரு அடிப்படைத் தகுதிவேண்டும். அதுவேறு ஒரு பிரச்சினை, பாவம்தான் நீங்கள்! எப்போதுதான் சாம்பல் நிறத்தின் உபாசகர்களாகப் போகிறீர்கள் நீங்கள்?

ஆனால் – மானாவாரியாக ஜிங்சக் அடிப்பதற்கு, “அண்ணா” என்று கதறிக்கொண்டு காலில் விழுந்து புரள்வதற்குத் தயாராக அற்பச் சராசரி வாசகர்கள், தங்கள் மேல்மாடிகளில் ‘வாடகைக்கு விடப்படும்‘ தட்டிகளைத் தொங்கவிட்டுக்கொண்டு அலையும்போது — குளுவான்களுக்குப் பெருமை தலைக்கேறிவிடும் போலும்.

… இணைய இணைப்பு, அலுவலகச் செலவில் பதிவு என்று இருப்பதினாலேயே தராதரமற்றவர்களால் காமாலைக் கருத்துகள் பரப்பப் படுவதுதான் அசிங்கமாக இருக்கிறது.

-0-0-0-0-0-0-0-

சாருநிவேதிதா அவர்களின் கலாம் மீதான கருத்துகளுக்கு எனக்கு மாற்றுக் கருத்துகள் உண்டு. ஒரு எடுத்துக்காட்டாக – ஒருசில துறைகளின் விற்பன்னராகவும் ஞானியாகவும் (கவனிக்கவும்: ஞாநி அல்ல!) இருப்பவர் – மற்ற துறைகளிலும் ஞானியாக இருக்கவேண்டும் என அவர்  எதிர்பார்ப்பது சரியில்லை!

இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக — நான் மிகவும் மதிக்கும் மேதைகளில் ஒருவரான ஸர்வபள்ளி ராதாக்ருஷ்ணன் அவர்கள், ஜோதிலட்சுமி ஜெயமாலினி போன்றவர்களின் ரசிகர் என்று தெரிந்துகொண்டபோதும் என் மதிப்பில் அவர் இம்மியளவும் குறையவில்லை. ஏனெனில், நான் சிறுபிள்ளைத்தனமான நல்லவனா-கெட்டவனா வகையறா அர்த்தமற்ற பகுப்புகளை வெறுக்கிறேன்; மேலும், யோசித்துப் பார்த்தால் – இந்த நடிகைகள் உழைத்துத் தான் சாப்பிட்டிருக்கின்றனர், நம்முடைய ‘ஆ’க்கள் போலல்லாமல்! ஆக இவர்களும் மதிப்புக்குரியவர்களே!

…ஆனால், சாரு நிவேதிதா தன் கருத்துகளை சும்மா அட்ச்சுவுடவில்லை. என்னைப் பொறுத்தவரை அவர், தான் அவதானித்த கருத்துகள் மீது தன் பார்வையைக் கட்டுமானம் செய்திருக்கிறார். மரியாதையான தொனியுடன் தான் அதையும் செய்திருக்கிறார். அவர் பார்வையில் குறையிருக்கலாம், அது வேறு விஷயம்.

ஆனால் – மணிகண்டனம்? பொறுப்பற்ற முறையிலான அறச்சீற்றத்துடன் விடலைத்தனமாகப் பொங்கியிருக்கிறார். அதே சமயம் பாருங்கள் – ஜெயமோகனின் கட்டுரையை. அதன் பாடுபொருளும் இதே கலாமிய கலாமிட்டிதான். ஆனால், அது எவ்வளவு அழகாக எழுதப் பட்டிருக்கிறது. நேரடியாக அற்பத் தூற்றல்களில் ஈடுபட்டிருக்கிறாரா அவர்?

…சாரு நிவேதிதா பிச்சை எடுக்கிறாராம். சரி. அவர் பதிலுக்கு ஒன்றுமே தருவதில்லையா? அவர் எழுதுவதையும் படித்துக்கொண்டு, அவர் எழுதுவதன் வீச்சில், சுவாரசியமான பத்தி எழுத்துகளில் 0.01%கூட எழுதமுடியாத அற்பர்கள் உளறிக்கொட்டுவது, தமிழில் எப்படி நடக்கிறது? அவர் எடுப்பது பிச்சையா?

கடைத்தேங்காய்களை சராசரித்தன எழுத்துகளால் வசம் செய்து, வழிப்பிள்ளையார்களுக்கு உடைப்பதுதானே பிச்சை? வசதியான மக்களின் குற்றவுணர்ச்சியைக் கறந்து அவற்றை பேன்ட்எய்ட் ப்ளாஸ்திரி வடிகால்களாக ரசவாதம் செய்வதுதானே பிச்சை?

பன்னாட்டு நிறுவனங்களில் (சம்பளத்தை ஏகத்துக்கும் வாங்கிக்கொண்டுதான்!) வேலைசெய்யும் நேரத்தில் அடுத்த பதிவை எப்படித் தேத்தலாம் என்று யோசிப்பவர்கள் – பதிவும் செய்பவர்கள், காப்பியடித்தே உயிர்வாழும் ஜந்துக்கள் எப்படி நாக்கு மேல் பல்லைப் போட்டுக்கொண்டு இளிக்க முடிகிறது?

சாரு நிவேதிதா குடிக்கிறாராம் (அல்லது குடித்தாராம்!) – அதனால் என்ன? அவர் மற்றவர்களையும் குடி என்றா சொன்னார். உங்களிடம் வந்து பணம்கேட்டா குடித்தார்? இதென்ன அற்பமான குற்றச் சாட்டு?

விமலாதித்த மாமல்லன் — சாருவை விமர்சிக்க அவருக்கு திராணி இருக்கிறது.  விமா சிலபல அற்புதமான சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அது போதும் அவருக்கு. ஆனால், விமா மற்றவர்களை விமர்சனம் செய்கிறார் என்று தாமும் விமர்சனம் (=தர்ம அடி) போடுவது என்ன அற்பத்தனம்?

ஒரு, ஒரேயொரு சொல்லிக்கொள்ளும்படியான சிறுகதையோ, கட்டுரையோ, கவிதையோ அல்லது வேறெந்த எழவையோ எழுதியிருக்கிறார்களா இந்த ‘ஆ’சாமிகள்?

வேறேதாவது துறையில் நேர்மையாக உழைத்திருக்கிறார்களா?

(நான் பரிசுத்தமானவன் அல்லன்; ஆகவே மற்றவர்களிடம் என்னிடமில்லாத பரிசுத்தத்தை எதிர்பார்க்கும் அற்பத்தனம் இல்லை! ஆனால் அதிகபட்சம் 10% அடிப்படை நேர்மையை எதிர்பார்க்கிறேன், அவ்வளவுதான்!)

நன்றி.

-0-0-0-0-0-0-

 இப்போது – என மனம்கவர் இரு ‘அ’ மனிதர்களைப் பற்றிய சிறுகுறிப்பு:

ஒருவர்… வேதாரண்யத்து அ. வேதரத்னம்  அவர்கள்.

… ‘ரவி அண்ணா’ என்று வாஞ்சையுடன் அழைக்கப் படும் மதிப்புக்குரிய அ. வேதரத்னம் அவர்கள்: இவர் ‘சர்தார்’ வேதரத்தினம் பிள்ளை என்று பாரத  சுதந்திரப் போராட்ட காலத்தில் அறியப்பட்ட  மாமனிதரின் பேரர். தாயுமானவரின் பத்தாம் தலைமுறையினர்; கடந்த சுமார் 67 வருடங்களாக,  இவர் தாத்தா ஆரம்பித்த குருகுலம், வேதாரண்யத்தில் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது – இந்த அற்புத மனிதர்தான் இப்போது இதனை முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார். (நேற்றுச் சொல்லிக் கொண்டிருந்தார் – எனக்கு 602 பெண் பிள்ளைகள் – ஆதரவற்ற அவர்கள் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் தங்கிப் படிக்கிறார்கள் – ஒரு நாளைக்கு 8 மூட்டை அரிசி தேவைப் படுகிறது- சுமார் 6000 என்  பெண் குழந்தைகள் பள்ளியில் படிக்கிறார்கள் ++  எனக்குக் கூட கண்ணில் நீர் மல்கி விட்டது. இவரல்லவோ உண்மையான களப்பணியாளர்! அவர் நன்கொடையெல்லாம் கேட்கவில்லை…) ஆராசாக்கள் ஆளும் இக்காலங்களில், இப்படிப்பட்ட மனிதர்களின் சமூக மேன்மைப் படுத்தல்களில் இல்லாத நேர்மையான அரசியலா?  நெகிழ வைக்கிறது – இம்மனிதர்களின் நம்பிக்கையும் அரசியலும். (https://othisaivu.wordpress.com/2013/04/01/post-184/)

இன்னொருவர் வேலூர் மாவட்ட கலவை கிராமத்தில் கமலக் கண்ணியம்மன் கோவிலில் தற்போது வசிக்கும் ஸ்ரீ ஸத்சிதானந்த ஸ்வாமிகள். ஒரு ஏழை முதலியார் குடும்பத்தில் பிறந்துவளர்ந்து, பின் இந்தியா முழுவதும் பலபத்தாண்டுகள் சுற்றி, பாரதீய தரிசனங்களில் தோய்ந்து அனுபவஞானம்பெற்று பலப்பல பணிகளுக்கு நடுவில், ஒரு தனிமனிதராக ஒரு பள்ளியை மிக அழகாகவும் (+ குடிகாரச் சமுதாயத்திற்கிடையில் மிகப் பொறுமையுடனும் + 800 குழந்தைகளுக்காக!) நடத்தி வரும் இவரைப் பற்றி இன்னொரு சமயம் எழுதவேண்டும். (விக்கிபீடியா எழவில் இவரைப் பற்றியுள்ள ஒரு சிறு குறிப்பு)

-0-0-0-0-

தொடர்புள்ள பதிவுகள்: (கீழ்கண்ட தொகுப்புகளை எப்போதுதான் மேம்படுத்தப்போகிறேனோ!)

 

 

 

5 Responses to “சொகுசுமுதல்வாதப் போராளிகளின் பின்நவீனத்துவ வாயுவெளியேற்றங்கள் (2/2)”

  1. k.muththuramakrishnan Says:

    இந்த வரிசையில் நீங்கள் சேவாலயாவையும் சேர்த்துக்கொள்ளலாம்.

    பார்க்க:
    http://sevalaya.org/

  2. ravi Says:

    amar seva sangam – we can add this too..


  3. —->>> ஒரு ‘மணி’யான நண்பனிடமிருந்து:

    வெகு நாட்களாக எழுதவேயில்லை. தொடர்ந்து ஒத்திசைவு படிக்கிறேன்.

    உனக்கு வினவு/யுவக்ருஷ்ணா போல, எனக்கு பொழுதுபோக சாருவின் வலைப்பக்கம்.

    மணிகண்டன் சாரு பற்றி எழுதியிருந்ததை ஒத்திசைவில் படித்தபிறகு, அதையும் படித்தேன். சாருவைப் பற்றின உன் அபிப்ராயம் தவறு என்பது என் அபிப்ராயம்.

    குறிப்பாக, தினமணியில் எழுதும் பழுப்பு நிறப் பக்கங்கள்.

    He has a template. Look how great this guy is, look how he had suffered, not being recognised, this is the fate of all Tamil writers. A few passages verbatim from one of those books. What he quotes from respective authors is mostly available in Wikipedia. (In case of Sampath, he could find details only from Aziyachudarkal and quoted from there). The best he can say is that this particular author is better than so and so, a few name droppings.

    சாருவே சொல்லியிருப்பதுபோல, இந்தப் பத்தியில் அவர் எழுதின எல்லாரைப் பற்றியும் இப்போதுதான் முதல்முறையாகப் படிக்கிறார். இதில், நான் எவ்வளவு உழைக்கிறேன் பார், தமிழ்ச் சமுதாயம் என்னை ஏறிட்டும் பார்க்கவில்லை என்ற பிலாக்கணம்.

    எதையாவது தினமணியில் எழுதிவிட்டு, தன் blog-ல் எனக்குப் பணம் கொடு என்ற அழுகை. நான் எல்லாருக்கும் ஞானத்தை அள்ளிக் கொடுக்கிறேன், எனக்கு யாரும் பணம் கொடுக்க மாட்டீர்களா என்ற புலம்பல்.

    மணிகண்டன் மற்ற விஷயங்களில் எப்படியோ, தெரியாது – நான் அவரை படிப்பதில்லை. ஆனால் சாரு பற்றிச் சொன்னதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை. இன்னும் காட்டமாக விமர்சித்திருக்க வேண்டும்.

    கொஞ்ச நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இதைச் சாக்கிட்டாவது எழுத முடிந்ததில் மகிழ்ச்சி.

    மறுபடி இன்னும் விவரமாக எழுதுகிறேன்.

    மணி

  4. Ranga Says:

    I am a big fan of ve ramasami but I disagree with him on Charu. Like Mani said Charu is just a whiner.
    (It is easy to type in English)


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s