நுனிப்புல்மேயர், நெகிழ்வாலஜிஸ்ட் எஸ்ரா அவர்களிடம் பாவப்பட்ட ஜீவன்களான ஐன்ஷ்டீன் + தாஸ்தயெவ்ஸ்கி படும்பாடு :-(
March 25, 2017
#நம்ப_எஸ்ராடா
…தமிழகத்து எழுத்தாளப் பெருமகனார்கள் பலப்பலருக்கு இயல்பாகவே இருக்கும் சாபக்கேடு – இந்த நுனிப்புல் மேய்ந்து மட்டுமே, முடிந்தால் – அதிலும் அந்த நுனிகளின் உலர்ந்தமொண்ணை விளிம்புகளை நக்கிக்கொண்டு மட்டுமே மினுக்கிக் கொண்டலைவது. இந்த நெடிய பாரம்பரியத்தின் காரணமாக – ஏதோ ரெண்டு சுட்டிகள் இணையத்தில் எந்த எழவைப் பற்றியோ இருக்கின்றன எனக் குத்துமதிப்பாகவே கூக்ள்மதிப்பாகவோ தெரிந்துகொண்டதும் உடனே அதனை ஈயடிச்சான் காப்பியடித்து அதனுடன் மானேதேனே எனக் கலந்துகட்டி இஷ்டத்துக்கு டர்புர்ரென்று ஜென் கன் டின் பன் என ஜாங்கிரி ரீல் சுற்றி ஒரு அரைவேக்காட்டுச் சோற்றை அடுப்பிலேற்றியிறக்கி, அதனைச் கஞ்சியுடன் சுடச்சுடத் தமிழர்களின் சொட்டைத்தலைகளில் கவிழ்த்தி விடுவார்கள். ஆ! எங்கிருந்தோ சுடச்சுடச் சுட்ட சூடான கஞ்சி. சாவுக் கெராக்கிகள். #வோத்தாடேய்!
ஒருகாலத்தில் நான் அமெச்சூர் ரேடியோ கிறுக்கனாக(வும்) (HAM Radio Operator, so my ham handedness continues, hamen!) இருந்தேன். விடலைப் பருவத்தில் என் மனதைக் கொள்ளைகொண்ட பல விஷயங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. (இந்த அழகான பொழுதுபோக்கு பற்றிய இந்திய சுட்டி. அமெரிக்க விவகாரம்) Read the rest of this entry »
ராம், திருவண்ணாமலை எச்கேபி, கல்லூரி எச்கேபிகருணா என்பவரால் நடத்தப்படுகிறது. இவர் திமுக சார்பினராக இருந்தாலும் நேர்மையானவர். எனக்கு அறிமுகமானவர். இலக்கிய ஆர்வலர். உங்கள் மதிப்புக்குரிய ஜெயமோகன் இவருடைய சிறுகதையை ரசித்து பரிந்துரை செஉதிருக்கிறார்.
அந்தக் கல்லூரிக்கெஇத்ரான உங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்விர்கள் என நம்புகிறேன்.
இலவச இணைப்பு: அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!
வாலிப, வயோதிக அல்லது சுக்ரீவப ‘நின்று ஆடும்’இளவல் தமிழகத்துத் தமிழ் நண்பர்களே!
தமிழகத்தில் நகைச்சுவை உணர்ச்சி அதிகமாகிக்கொண்டு வருகிறது. ஆகவே, இன்றைய தினம் நீங்கள், துக்கத்தில் ஆழ்ந்து மனம்பேதலித்து சட்டையைப் பிய்த்துக்கொண்டு கோமணமில்லாமல் (cow no-smellingly ©எஸ்ராமகிருஷ்ணன்) அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உணர்கிறேன்.
Read the rest of this entry »
#தமிழண்டா!
January 31, 2017
இந்தத் தமிழேண்டா, திராவிடண்டா, வீரமறவன்டா, வீழமாட்டோம்டா, வீரிட்டெழுவோம்டா, வீரவேல்டா, வெற்றிவேல்டா, வாளாவிருக்கமாட்டோம்டா, வாளைச் சுழற்றுவோம்டா, திமிறி எழுவோம்டா, திர்ப்பி அடிப்போம்டா, நெருப்புடா, செருப்புடா++ வீரவசனக் கொந்தளிப்புக் கோமாளி வகையறா தினவாளர்களைக் கவனிக்க நேரும்போதெல்லாம் சங்கடமாகவும் கூச்சமாகவும் (கொஞ்சம் கோபமாகவும், மிகவும் வெறுப்பாகவும்) இருக்கிறது; ஜிகினா மினுமினுக்கும் அவர்களுடைய அட்டைக்கத்திகளைப் பிடுங்கி சகதிராவிடர்களுக்கு ஈந்து இனமானக் கழுதைகளின் பசியை ஆற்றலாம் எனப் படுகிறது. ஆகவே முத்தாய்ப்பாக மட்டுமே, முக்கியமான இந்தக் கருத்துப்படங்களைப் பகிர்ந்துகொள்கிறேன், இந்தப்பதிவை வெறும்வெட்டி நகைச்சுவை – என நினைக்காதீர்கள். படு ஸீரியஸ் கட்டுரைதான் இது. கவலை வேண்டேல். சரியா? (இதில் சுமார் 2350 வார்த்தைகள்; ஸாரி, கொஞ்சம் ஓவர்தான்!)
கருத்துப்படம் #1: தமிழண்டா! ^%&*$#@!
Read the rest of this entry »
டெரெக் பார்ஃபிட், பரக்கத் அலி – சில குறிப்புகள்
January 7, 2017
மகாமகோ பார்ஃபிட் (Derek Parfit) போன்றவர்களைப் பற்றி ஒரு நூறு வார்த்தைகளையாவது தமிழில் எழுதவேண்டும், அவர்கள் எழுதி நான் படித்துமுள்ள சிலபல புத்தகங்களைப் பற்றி, கட்டுரைகள் குறித்து என் மீதான அவற்றின் தாக்கத்தைக் குறித்து, என் விசனங்களையும் விகசிப்புகளையும் விவரித்து – குறைந்த பட்சம் ஒருகோடிட்டாவது காண்பிக்கவேண்டும் எனப் பலமுறை ஆரம்பித்து அப்பதிவுகளை நட்டாற்றில் விட்டிருக்கிறேன்; சுமார் 300க்கு மேம்பட்ட வரைவுப்பதிவுகள் இப்படிக் குறைப்பிரசவ ரீதியில் இருக்கின்றன! (தப்பித்தீர்கள்!) Read the rest of this entry »
புரட்சிகர பென்ஸில் ஃபேக்டரி: சில குறிப்புகள்
December 3, 2016
புரட்சிகர பென்ஸில் ஃபேக்டரி அவர்கள், போய்ச் சேர்ந்துவிட்டார். அவரது உடல், அவர் விருப்பப்படியே, செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரிக்கு தானம் செய்யப்படும் என்பதை ‘த மண்டு‘ தினசரி மூலம் இன்று அறிந்துகொண்டேன். ஒர்ரே அந்தக்கால நினைவுகள்…
உப்புமாவோயிஸம்
November 29, 2016
உப்புமா செய்யலாம்தான். ஆனால் உப்புமா மட்டுமேதான் செய்யவேண்டுமென்றில்லை. இணைய உப்புமா கிண்டப்படுவதையும் கிண்டல் செய்யவேண்டியதுதான்.
ஆ!
November 28, 2016
நம்முடைய செல்லங்களான அரைகுறைத் தமிழ் எழுத்தாளர்களின் – பொதுவாகவே மோசமான, சராசரித்தனமான நிலைக்குக் காரணம்…
November 12, 2016
… நம்மைப் என்னைப் போன்ற கூறுகெட்ட முட்டாக்கூ சோம்பேறி வாசகர்கள் – கதிமோட்சமேயில்லாமல் இந்தக் கோமகன்களின் வால்களைப் பிடித்து – ஆராதித்துக்கொண்டும், ஆமோதித்துக்கொண்டும், கொம்புசீவி விட்டுக்கொண்டும் அமோகமாக அலைவதுதான்; எனக்கு இதில் சந்தேகமேயில்லை! :-( தேவையா இது? :-(
எ ராமகிருண: சென்னை ஐஐடி பேருரைய யாராவது கேடு, உசுரோட திருபி வதீகளா? + SFML, OLML & MLML!
November 5, 2016
* நிக, கடத வியாழகிழமை, செனை ஐஐடியில, எனருமை எரா ஒரு ‘கக கசடற’ வொலக எலகிய பேருரை அளிதிருகவேடு. அதகு செறவக யாராவது இனமு உயிரோடு இருதா தயவுசெது வெ. ராமசாமிய உடனடியாக போகால ரீதியி தொடபு கொளவு.
‘ஒத்திசைவு’ வெ. ராமசாமி ஒழிந்தார்!
October 27, 2016
இதற்கும் இஸ்லாமியத் தீவிரவாதம்தான் காரணமாகச் சொல்லப்படுமா, அல்லது மிகச்சரியாகவே, உலகத்திலிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்குப் பின்னாலும் இருக்கும் ஹிந்துத்துவாதான், அதுவும் குறிப்பாக, நரேந்திரமோதிதான் காரணம் என அறியப்படுமா?
ஆனாலும், முழுவிவரங்ளையும் தெரிவிக்காமல் மனதாற உங்களைக் காயடிக்கக்கூடாது – ஆகவே…
12ஜூலை. எனக்குப் பிடித்தமான பல கவிஞர்(!)களில் நா. முத்துக்குமார் அவர்களும் ஒருவர் என ஒரு இளம் பிரக்ருதி நினைத்திருக்கிறார். ஆகவே, மேதகு நாமு அவர்களுக்கு 12ஜூலை அன்று பிறாண்டும் நாள் எனும் கோலாகலமான செய்தியை, நான் அறிந்துகொண்டேன். ங்கொம்மாள, ரொம்ப முக்கியம். (இந்த அரிய அற்பச் செய்தியையும், அந்த மகாமகோ மனிதருடைய சினிமாக் கவிதையுளறல் ஒன்றையும், வெகுவாக நெகிழ்ந்து, தேவையற்ற ஆவலுடன் எனக்கு அனுப்பியுள்ள இளம் அரைகுறையின் மின்னஞ்சல் முகவரி, இன்று முதல் ஸ்பேம் ஃபில்டர் செய்யப்படுகிறது. ஸர்ட்டிஃபைட் அரைகுறைகளுடன் எனக்கு ஒத்துவராது. நன்றி! என் நேரத்தை எப்படி வீணடிப்பது என்பது என் உரிமை. சர்வ நிச்சயமாக அரைகுறைகள் அதனை மீறமுடியாது. மிக்க நன்றி!)
எச்சரிக்கை: இந்தப் பதிவில் சுமார் 1850 வார்த்தைகள் இருக்கின்றன. பாவம், நீங்கள்!
…ஔரங்கசீப் புராணம்
July 10, 2016
முதலில் சிலபல விஷயங்களைத் தெளிவுபடுத்திவிடவேண்டும்: ஔரங்கசீப் எனப் பொதுவாக அறியப்படுபவர் மலினமான, சீப் உற்பத்தி சீனாக்கார சாமான்*.
ஆனால், அடியேன்: வெறுமனே உணவைத் தின்பவன், அம்புட்டுதேன்!
இடக்கை வலக்கை வழுக்கை பொக்கை. Read the rest of this entry »
அய்யோ! நான் இளையராஜாவைச் சில்லுண்டித்தனமாக வம்புக்கிழுக்கும் – அவருடைய அடிப்பொடிகளைச் சீண்டும், ஒருமாதிரி ஏஆர்ரஹ்மானுடைய ரசிகக் குஞ்சாமணியல்லன். கோபப்படாதீர்கள்! நானும் பலப்பல இளையராஜா பாடல்களை என்னையும் அறியாமல்(!) பாடிக்கொண்டு தாளம்போட்டுக்கினு தாடிவுட்டுக்கினு சென்றுகொண்டிருப்பவன்தான். Read the rest of this entry »
நான் மடையன்தான்! நன்றி!! (ஒரு தொபயியல் பிரகடனம்)
April 25, 2016
பேராசிரியர் தொ. பரமசிவம் அவர்களைப் பற்றிய நேற்றைய காட்டுரை தொடர்பாக – ஒரு அனாமதேயம், கோபத்துடனும் வருத்தத்துடனும் இப்படியொரு பின்னூட்டத்தை இட்டிருக்கிறார்;
he has evidence, how can u assume he has no evidence
yaar madayan? neeya? thope aa
… …இதற்குக் கொஞ்சம் விரிவாகவே பதில் எழுதவேண்டும் என… Read the rest of this entry »
பேராசிரியர் தொ. ‘தொ.ப’ பரமசிவம், மடையர் – சில குறிப்புகள்
April 24, 2016
இவருடைய பல கட்டுரைகளை கவனத்துடன் படித்திருக்கும் எனக்கு, முன்னெப்போதோ இவருடைய கட்டுரைக்களஞ்சியமான ‘அறியப்படாத தமிழகம்’ படித்துத் துணுக்குற்றவனுக்கு – இவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழியல்துறைத் தலைவராக இருந்தவர் என்ற தகவல் ஆச்சரியத்தைத் தருவது என்பதை ஒப்புக்கொள்கிறேன்… Read the rest of this entry »



