அய்யா எஸ்ரா! தயவு செய்து கிரேக்க நாடகங்களை விட்டுவிடவும்! அவை என்ன பாவம் செய்தன, சொல்லுங்கள்?
June 11, 2017
:-( எஸ்ராமகிருஷ்ணம் தொடர்கிறது…
காலம் எழுப்பும் கேள்வி எனவொரு பதிவை வெளியிட்டிருக்கிறார் அண்ணன் எஸ்ரா. தேவையா? :-(
ஏனிந்தக் கொலைவெறி அய்யா? வெறுமனே ஏதாவது கதை கிதை என்று எத்தையாவது நெகிழ்வுடன் ஓட்டிக்கொண்டிருந்தால், படிப்பவர்கள் நெக்குருகி விடமாட்டார்களா? உங்கள் வாசகர்தரம் பற்றி உங்களுக்குத் தெரியாத விஷயமா?
இருந்தாலும், கொஞ்சம்கூடத் தேவையேயில்லாமல் அறிமுகமே இல்லாத விஷயங்களில் தொப்பையை நுழைத்து விக்கிபீடித்து ஏன் உளறிக் கொட்டுகிறீர்?
-0-0-0-0-0-
ஹ்ம்ம்ம்… இந்த கிரேக்கம் (=விரிசல் வா =crack come) விஷயத்திலும் ஏகப்பட்ட குழப்படிகள்! கெக்கலி கொட்டிச் சிரிக்கவேண்டிய நகைச்சுவைகள்… தொடர் சிரிப்பு வெடிகுண்டுகள்!
துன்பியல் நாடகம், இன்பியல் நாடகம் மற்றும் அங்கத நாடகம். எனக் கிரேக்க நாடகம் மூன்று வகைப்பட்டது.
ஆ! அப்படியா என்ன?
Tragedy Comedy Satyr என, பொதுவாக மூவகையாகப் பிரிக்கப்படும் அக்கால கிரேக்க நாடகப் பகுப்புகளில் — Tragedy என்றால் துன்பியல், Comedy என்றால் இன்பியல் – சரி, இவையெல்லாவற்றையும் ஒப்புக்கொள்ளலாம்; ஆனால் அண்ணன் எஸ்ரா அவர்கள் Satyr என்பதை Satire எனச் சட்டெனப் புரிந்துகொண்டு அடிக்கிறாரே ‘அங்கதம்’ என்று ஒரு ஸிக்ஸர்!
கிரேக்கநாடகங்களை வாசித்துப் புரிந்து கொள்வது எளிதானதில்லை. ஆங்கிலத்தில் நல்ல மொழியாக்கங்கள் வந்துள்ளன. ஆயினும் நாடகங்களின் பின்புலமும் தொன்மமும் வரலாறு அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
-0-0-0-0-0-
…பிரச்சினை என்னவென்றால் – க்ரேக்க துன்பியல் நாடகங்களில், அவற்றின் காட்சிகளுக்கு இடையே சோகத்தின் கடுமையைக் குறைப்பதற்காக சில கோமாளித்தனங்கள் இருந்திருக்கின்றன. பாதிஆடும் பாதிமனிதனும் சேர்ந்த + சிலசமயம் மிகப்பெரிதாக்கப்பட்ட டம்மி குஞ்சாமணிகளை அணிந்துகொண்ட பிறவிகள் (கிரேக்க ஸேடிர் கேளிக்கையாளர்களிடமிருந்துதான் நம் திராவிடர்கள் உருவாகிவந்தார்களோ? அல்லது கிரேக்க நாகரீகமே திராவிட நாகரீகமோ??) கொஞ்சம் மிகைச் சோகக்கிண்டல்வகைகளில் (ட்ரேஜிகாமெடித்தனம்) ஈடுபடுவார்கள்; இவற்றில் ஒரு மசுத்துக்கும் அங்கதம் இருக்காது. அதிகபட்சம் கொஞ்சம் ஆசுவாசமளிக்கும் வெறும் கிண்டல் மட்டுமே. சோகப் பாத்திரங்களைக் குறிவைத்துக் கதையை முன் தள்ள எத்தனங்கள் இன்னபிற அவ்ளோதான்.
ஆனால் அய்யன்மீர், எஸ்ரா அவர்களுக்கு தன்னுடைய திறன்களின்மீதான நம்பிக்கை மிகஅதிகம். அவருடைய கூறுகெட்ட (என்போன்ற) வாசகர்களும் அவருடைய ஆட்டங்களுடன் ஒத்துழைத்துப் புளகாங்கிதமடைகின்ற ஜாதி. ஆக, கேளிக்கைகளுக்குக் கேட்கவா வேண்டும், சொல்லுங்கள்?
நன்றி, எஸ்ராமகிருஷ்ணன். உங்கள் புகழ் ஓங்குக!
…அம்மணிகளே, அம்மணர்களே! எது எப்படியோ, என் செல்லப் பேராசானார் மெய்யெழுத்துஒற்றெழுத்துப் பற்றா குறையுடன் இபடியும் ஒரு போடு போடிருகலாம் அலவா?
இந்த அங்கதம் என்பதே கிரேக நாடகங்களில்தான் முதலில் இருதது. அவர்களுடைய கண்டுபிடிபு (= reel holding) தேசம்தேசமாக திரிந்து திரிக்க பட்டு லெமூரியா வழியாக மதுரை பக்க மல்லாங்கிணறுகு வந்து அதிலிருந்து வால்மீகி (=சுவர் என்னுடைய சாவி) அதை எடுது கையாண்டு (=hand year) அங்கதன் எனும் பாத்திரத்தை (vessely tamil month of thai) உருவாகினார் என்பது நம்மில் எவ்வளவு பேருகு தெரியும்?
-0-0-0-0-0-
வரவர, நம் செல்லத் தமிழ் எழுத்தாளர்களின் அட்ச்சுவுடும் பாங்கானது விதிவிலக்கென்பதேயில்லாமல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தப் பிலுக்கலும் அசிரத்தையும் ஏகாம்பரத்தனத்தையும் வைத்துக்கொண்டு – இவர்களுக்கு ரொம்பத்தான் ஆசை – புக்கர் மக்கர் நொபெல் ஸாஹித்ய விருது அந்தப் பரிசில் இந்த விழா மரியாதை பொன்னாடை நல்கை மண்ணாங்கட்டி தெருப்புழுதி அப்படியிப்படிவென்றெல்லாம்…
சின்னச் சின்ன ஆசை, சின்னத்தன ஆசைசின்னத்தன ஆசை, சின்னாபின்னமாக ஆசை…
நம் தமிழகத்தில் மட்டும்தானா இப்படி? இவ்வளவு படுமோசமான நிலைமை? ஆழமும் இல்லை, பிலுக்கலும் அதிகம்! :-(
…அல்லது வளர்ந்துவரும் / ஜொலிக்கும் இளம் (அல்லது கிழம்) தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி, அவர்களுடைய எழுத்துகளின்மூலம் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் – எனக்குத் தான் வாய்க்கவில்லையா?
கேள்விகள், கேள்விகள்…
—
June 11, 2017 at 10:47
இல்லை சார், அனந்தமூர்த்தியும் நமது எஸ்ரா போலத்தான்!
June 11, 2017 at 10:52
நன்றி! ஆனால் அய்யா, நானும் கிரீஷ்கர்னாட்+அனந்தமூர்த்திகளும் அப்படித்தான் என்றுதானே எழுதியிருக்கிறேன்?
இவ்விருவருக்குள்ளேகூட ஒரு வேறுபாடு இருக்கிறது – கிரீஷ் போலல்லாமல், அனந்தமூர்த்தியிடம் தொழில் திறன் / க்ராஃப்ட் இருக்கிறது.
நம் எஸ்ரா? என்ன சொல்லி மண்டையில் அடித்துக்கொள்வது என்றே தெரியவில்லை. ஒன்றிரண்டு கதைகளுடன் நிறுத்திக் கொண்டிருக்கலாம், இந்த மனிதர்…
June 12, 2017 at 08:17
அண்ணா,
எஸ்ரா அவர்கள் அரைகுறைதான். ஆனால் தமிழனுக்கு உலக அளவிலான இலக்கியங்களை, திரைப்படங்களை, சிறந்த மனிதர்களை (அரைகுரையாகவேனும்) அறிமுகம் செய்பவர் அவர்தான்.
முதல் வகுப்பு பாடமாக எடுத்துக்கொண்டு ஆர்வமுள்ளவர்கள் மேலே தேடுதலை தொடர வேண்டியது தான்.
நிறைய படித்தவர்கள் எழுதமாட்டேன் என்கிறீர்கள். உங்களை செழுமை ஆக்கிக் கொள்வதிலேயே கவனம் செலுத்துகிறீர்கள். என்ன செய்வது?
நன்றி.
June 12, 2017 at 10:35
அய்யா சோமு அவர்களே!
நன்றி. நீங்கள் சொல்வதைப் புரிந்துகொண்டேன். நான் சுயநலவாதிதான். :-)
June 17, 2017 at 08:20
அண்ணா, என்னை மன்னியுங்கள். நான் சொல்ல வந்ததை சரியாக சொல்ல தெரியாமல் சொல்லி விட்டேன்.
June 18, 2017 at 17:20
அய்யா சோமு, ஒரு பிரச்சினையுமில்லை. மன்னிப்புக் கோரல் எல்லாம் தேவையேயில்லை, சரியா? உங்கள் கருத்தை நான் நிச்சயமாக ஒப்புக்கொள்கிறேன்.
ஆக, நிம்மதியாக இருங்கள்.
June 13, 2017 at 01:24
அய்யா, பிராம்மணர்களுக்கு புது இலக்கணம் கற்பித்து எமது அறிவாற்றலை விரிவாக்கிய உமது திறமையை வாழ்த்த வயதில்லை. வணங்க, சிரிப்பிலிருந்து மீளா என் உடல் ஒத்துழைக்கவில்லை. எனவே அந்த விரித்த சடையனார் அருள் உங்கள் மேல் பொழிய என் விலா ஒத்துழைக்கும் வேளையில் விழுந்து பிரார்த்திக்கிறேன் .