தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள், வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம், சிவபெருமான் ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன், கன்னி மரியாளின் மகனான, குறிஞ்சிக் கடவுள் “குழந்தை அல்லா”

February 5, 2017

இலவச இணைப்பு: அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!

வாலிப, வயோதிக அல்லது சுக்ரீவப ‘நின்று ஆடும்’இளவல் தமிழகத்துத் தமிழ் நண்பர்களே!

தமிழகத்தில் நகைச்சுவை உணர்ச்சி அதிகமாகிக்கொண்டு வருகிறது. ஆகவே, இன்றைய தினம் நீங்கள், துக்கத்தில் ஆழ்ந்து மனம்பேதலித்து சட்டையைப் பிய்த்துக்கொண்டு கோமணமில்லாமல் (cow no-smellingly ©எஸ்ராமகிருஷ்ணன்) அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உணர்கிறேன்.

அதே சமயம், தமிழர்களே தமிழர்களே!   உணர்ச்சிகர, கவைக்குதவாத கவர்ச்சிக்குசுக்களின் அருவருப்புப் பிறப்பிடங்களான அண்ணாதுரைகளும்,  அசிங்கமான ஊழல் குடும்பாட்சிகளின் பிறப்பிடங்களான கருணாநிதிகளும், அகந்தையின் அரசிகளான ஜெயலலிதாக்களும் — அமர்ந்து ஏற்கனவே அமோகமாக அசிங்கப்படுத்திய நாற்காலியில் — எந்தவிதமான அற்ப மானுடரும் அவர் மானுடரே என்கிற ஒரு காரணத்திற்காக மட்டுமே உட்கார முடியும் என்கிற அடிப்படை அறவிழுமியத்தை அறிவீராக. மேலும், இந்தத் திமுக திருடர்கள் ஏதாவது திரியாவரத்தைச் செய்து எப்படியாவது திரும்பி வந்தால் அவர்கள் தமிழகத்தை ரவுண்ட் கட்டிக்கொண்டுத் துப்புரவாகச் சூறையாடிவிடுவார்கள் என்பதை அறிக, நடுங்குக! தமிழகத்தை நாறடித்து விடுவார்கள் என்பதை உணர்க. பெரிது பெரிது திமுக தலைவக் குடும்பம் பெரிது! அதனினும் பெரிது அவர்களின் கபடப் பேராசை!

…மேலும் சின்னம்மாவுக்கு மேற்கண்ட அனைத்துத் தகுதிகளும் உண்டென அறிவீராக. ஆகவே, இசுடாலிர் இன்னபிற போன்ற தீராவிடலைத் தலைவர்களுடன் பொருத்திப் பார்த்தால்,  பார்க்கப்போனால், சின்னம்மாவுக்கு (சின்னப்புரட்சித்தலைவி அல்லது புரட்சிச்சின்னத்தலைவி அல்லது புரட்சிச்சின்னம்மா அல்லது புரட்சித்தாரகைப் பெருஞ்சின்னம்மா! – எனக்குப் பிடித்தது கடைசிதான் =  Revolutionary Stellar MegaSymbolamma!) ஒரு மேலதிகத் தகுதி – அவர் ஒரு பெண். இந்த உண்மை மிக முக்கியம் நண்பர்களே! பெண்ஈயம் என்பது இந்த நூற்றாண்டின் மகத்தான சக்தி! அது இளிக்க வெகுநாட்களாகும், சரியா? ஆகவே முகத்தைச் சுளிக்காமல், வழக்கம்போலக் கதாகாலட்சேபம் செய்யுங்கள். மற்றபடி,  ஃபேஸ்புக் ட்விட்டர் வாட்ஸ்அப் இருக்கவே இருக்கின்றன நம் வீரத்தைக் காண்பிப்பதற்கு.

வாழ்த்துகள். இப்போது உங்கள் கவலையை மறக்கடிக்க, ஒரு நகைச்சுவை (ஆ! ஆனால் – இது என்னுடையதல்ல, மன்னிக்கவும்). இடுக்கண் (keep eye  ©எஸ்ராமகிருஷ்ணன்) வந்தால் நகுக.

-0-0-0-0-0-0-0-

சரி. நம் தங்கத் தமிழகத்தில் வரலாறு+இலக்கியம்+பண்பாடு+சமூகவியல் போன்ற தெருப்புழுதிவியல் அகழ்வாராய்ச்சிகளுக்குப் பஞ்சமேயில்லை. இதை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்கிற அவசியமும் இல்லை. திராவிடம் ஒரு இனம் என்பதே ஒரு மகாமகோ மண்ணாங்கட்டியியல் ஆராய்ச்சிதான் என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா என்ன?

ஆனால் இன்று, உங்களுக்கு  நான் அறிமுகம் செய்ய இருப்பது… … டட்டடய்ங்க்… புத்தம் புதிய காப்பியில்… வெள்ளித் திரையில்…

ரப்பர்பேன்ட் (அல்லது) சூயிங்கம் ஆராய்ச்சியாளர்கள்!

முன்தற்குறிப்பு: இது, தொபயியல் துறையில் ஈடுபட்டிருப்பவர்களையும் குறிக்கும்.

பேராசிரியர் தொ. பரமசிவம் என்பார் இத்துறையின் முழுமுதல் வல்லுனர். ஆகவே இவர் ஒரு ரப்பர்பேன்டாலஜிஸ்டும் ஊக்கபோனஸாக சூயிங்கம்மாலஜிஸ்டும்… ஆக, தமிழகத்தில் சான்றோர்களே இல்லை என்பது ஆரியக் கட்டுக்கதை! ஹ்!

சரி… ஏதாவது எழவு கடுகளவு உண்மை எங்காவது புதைந்துகொண்டு அல்லது தாளிக்கும்போது புகைந்துகொண்டு –  அதன் பரப்பில் சுமார் 0.00001% அளவுக்கு வெளியில் அனாமத்தாகத் தெரிந்துகொண்டிருக்கும் என வைத்துக்கொள்ளுங்கள். அதனைப் படு ஸீரியஸாக, அதிதீவிரமாக அகோர லெமூரியக் கபாடபுரக் கபால அகழ்வாராய்ச்சிக்குட்படுத்தி 1000000000X அளவுக்கு விரிவு செய்து, சூயிங்க்கம் போலக் குதப்பிக் கடித்து இழுத்து மடக்கி நீட்டித்து, அல்லது ரப்பர் பேண்ட் போல இஸ்த்து ஒர்ர்ர்ரேயடியாக இஸ்த்துக்கினே,  கற்பனாவாதத்தில் மூழ்கி முக்குளித்து விலாவாரியாக முத்தெடுத்து அதனைப் பேரண்டம் அளவுக்கு விரித்தெடுப்பது என்பது ஒரு தன்னிகரற்ற தனிப்பெரும் நனி கலை.

screenshot-from-2017-01-18-161358[கடுத்துப் படம்: கற்றது கைக்கடுகளவு, ஆகவே விரிப்பது அண்டப்பேரண்டளவு. நன்றி சூயிங்கம்மார்களே!]

பொழிப்புரை: மேற்கண்ட படத்தில் உள்ளங்கைக் கடுகு. விரிக்கப்பட்டு பூவுலகு அளவுக்கு முதல் பத்தியிலேயே வளர்ந்து அடுத்த ஏழாவது படத்தில் எழவு மகாமகோ பேரண்டமாகிவிடுகிறதைப் போல, சூயிங்கம்மாலஜிஸ்டுகள் எல்லா உச்சங்களையும் மிச்சம்வைக்காமல் எட்டுவார்கள் என்றறிக!

கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி
நெடுக விரிப்பான் சூயிங்கம்மான்!

 

வாழ்க நீ எம்மான்! (live you what deer!  ©எஸ்ராமகிருஷ்ணன்)

-0-0-0-0-0-0-

சூயிங்கம்மாலஜி எழுத்தின் பிதாமகர்களில் ஒருவரும், தமிழகத்தைப் பற்றி இப்படி ஐரோப்பாவில் உட்கார்ந்து எழுதுவதற்கு ஏகபோக குத்தகை எடுத்திருப்பவருமான கலையரசன் ‘கலை மார்க்ஸ்‘ என்பவர் (இவர் கார்ல் மார்க்ஸ் அவர்களின் உறவு முறை என நினைக்கிறேன். கார்ல் மார்க்ஸ் என்பதே ஒரு காரணப்பெயர் தமிழ்ப் பெயர்தான். அவர் கார் காலத்தில் லல்லல்லா எனப் பாடிக்கொண்டே பிறந்து தம் தாயாரின் மாரிலிருந்து பால் குடிக்கும்போது  க்ஸ் எனச் சப்தம் வந்ததென்று ஒரு ஐதீகம். நன்றி) பராக்கிரமம் மிக்க பல காட்டுரைகளை எழுதியுள்ளார்.  உங்களுடைய மேலான (அல்லது ஃபீமேலான) பார்வைக்கு இவற்றை வைக்கிறேன்.

இவற்றில் பல கம்யூனிஸத்தனமாகவும், திராவிடமாகவும், முதலாளித்துத்துவத்துக்கு எதிராகவும், கடவுள்-மதம் பற்றியும், வரலாற்றுளறாறு, தோழர் , தமிழண்டா(!) எனவும் கலந்தடித்துக் கதம்பமாகவும் விதம் விதமாக, கனகம்பீரமாக இருக்கின்றன. படிக்கப் படிக்க இன்பம்ஸ் வருவதற்கு நான் உத்திரவாதம். ஜமாயுங்கள். :-)

1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்

5.கோயிலில் பாலியல் தொழில்
6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்
7.ஆடியில் உயிர்த்தெழுந்த, திராவிடர்களின் “கறுப்பு இயேசு!”
8.வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்
9.சிரியாவில் தமிழுக்கு “தம்முழ்” என்றும் பெயர் !
10.கோபுரங்கள் கட்டுவது, ஆண்டவருக்கு விரோதமானது!
11.சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?

மேலும் படிக்க: http://kalaiy.blogspot.in/

-0-0-0-0-0-0-0-

நானும் ஒரு சூய்ங்கம்மாலஜிஸ்டாக ஆக விரும்புகிறேன்! என் மானசீக குருவாக அதற்கு, ‘கலை’ அவர்களை வரித்துள்ளேன். அவர் காலில் தெண்டனிட்டு வீழ்ந்து வணங்கி, அவர் சன்னிதானத்தில் கீழ்கண்ட கருத்துரைகளைப் படையல் வைக்கிறேன். அவர்தாம் என்னைத் தடுத்தாட்கொல்லவேண்டும். நன்றீனன்றீ!

…எடுத்துக்காட்டாக – நான் வெ. ராமசாமி. வெறும் வெங்காய ராமசாமி. என் பெயரில் ரா இருக்கிறது. ஆகவே, பின்நவீனத்துவ ரப்பர்பேண்டாலஜி சூயிங்கம்மாலஜி முறைப்படி நாம் தருக்கரீதியாகவும், சமன நிலையுடனும், அறிவியல்பூர்வமாகவும் சிந்தித்தோமானால், ஆ —  நாம் சிலபல திடுக்கிடவைக்கும், நம் சிந்தனைகளைப் புரட்டிப்போடும் உண்மைகளை எதிர்கொள்ள நேரிடும்.

ஒரு விண்ணப்பம்: மேலே (=கீழே) படிப்பதற்கு முன்னால், தைரியத்துக்கு உங்கள் பெற்றோர் கைகளைப் பிடித்துக்கொள்ளவும். அல்லது கணவன் / துணைவன்  / மனைவி / துணைவி என உங்கள் திராவிடத் தகுதிக்கேற்றார்போலப் பிடித்துக்கொள்ளலாம். இப்படிச் செய்யாமல் பின் உங்களுக்கு மாரடைப்பு வந்து நீங்கள் இறந்துவிட்டதாக உங்கள்  கனவிலேயே தம்பதி சமேதராக வந்து பேரறிஞர் அண்ணாவும்  ‘பெரியார்’ ஈவெராவும் மங்கலகரமாகச் சொன்னால், பகுத்தறிவு பற்றி பேருரையாற்றினால் – அதற்கு நான் ஜவாப்தாரியாக முடியாது, சரியா?

ரா: சில ஏகோபித்த ரப்பர்பேண்டாலஜிய சூயிங்கம்மாலஜியக் குறிப்புகள்

…சரி. நான் ராமசாமி. ரா மசாமி. மனசா ஸ்மராமி. இதில் இருக்கும் ரா மிகவும் முக்கியம். மனசிலாயீ? ஆனால், ரா = ராமகிருஷ்ணன் அல்ல. ஆனால் எஸ்ரா = எஸ்ராமகிருஷ்ணன் என்பது சரி.

1) ஆகவே நான் இந்திய அரசின் ரா உளவு அமைப்பைச் (RAW) சேர்ந்தவன். பலூச்சிஸ்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக உளவு வேலை செய்பவன். ஒற்றன். அசோகமித்திரன் என் கதையை எழுதியிருக்கிறார். இதைக் காப்பியடித்து ஹாலிவுட்டில் எடுத்த படம்தான் ‘த ஸ்பை ஹூ லவ்ட் மீ!’ (= நிச்சயமான பொருள் ஒற்றன் யார் காதலித்தான் நான். ©எஸ்ராமகிருஷ்ணன்); அதைக் காப்பியடித்து தமிழில் எடுத்த படம் ‘ரகசிய போலீஸ் 115’ – 1968ல் வெளிவந்த இப்படத்தில் சுற்றப்பட்ட ரீல்களின் மொத்த நீளம் 4447 மீட்டர். இதன் ஹீரோ எம்ஜிஆர். கீழே இருப்பது என் புகைப்படம்.
screenshot-from-2017-01-18-173649

எப்படி, நான் எம்ஜிஆர் போலவே இல்லை? மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது எனக்கு.

ஹ்ம்ம்… உண்மையைச் சொல்லப்போனால் நான் தான் எம்ஜியார்! புர்ச்சிச்சின்னம்மா சசிகலாவுக்கு உடனடியாக மாலைபோட்டு அவரை அடுத்த முதலையமைச்சராகுமாறு வேண்டிக்கொள்ளவேண்டும் எனத் திராவிடத்தனமாகத் தோன்றுகிறதே என்ன செய்ய! *ப்ச்*

இன்னாடா இது! ரெட்டெ எலே அதிமுக சின்னமா? அல்லது சின்னம்மாதான் சின்னமா? சின்னாபின்னமா ஆக்கிப்புட்டாங்களேடா என்னோட கழகத்தெ… :-)  ரத்தத்தின்ரத்த தெராவிடனுங்கோ, உடன் செருப்பு கிற்க்கனுங்கோ – அல்லாரும் போக்கத்த முட்டாளுங்கோடா, முதுகெலும்பில்லாதவங்கொடா! இவ்னுங்களுக்கு குடும்ப ஆச்சிதாண்டா வொத்துவரும் – கர்ணாநிதி குழுமம் அல்லாகாட்டி சசிகலா குடும்பம்! ங்கோத்தா!

சரி. கவனிக்கவும்: எம்ஜியார் பெயரில் யார் = ஆர் = ராமச்சந்திரன். ஆ! இதிலும் ரா! எங்கும் ரா! எதிலும் ரா! வா ரா து போல வந்த மாமணி ரா. அரோஹ ரா!

…உடனடியாக, நான் சூயிங்கம்மாலஜி உணவுமுறைக்கு மாறப் போகிறேன். வெறும் சூயிங்கம்மை மட்டும் பொழுதன்னிக்கும் மென்று கொண்டிருந்தால் தாடை நன்றாக பலப்படுமாமே? உடல் எடை குறையுமாமே! ஆனால், ஆறுமாதங்களுக்கு ஒருமுறைதான் வேறேதாவது உணவு உண்ணமுடியுமாமே? எது எப்படியோ, உடல்மெலிய – உங்களுக்கும் நான் பரிந்துரைப்பது ஒன்றை மட்டுமே: அது … 1 – ம்ம் மன்னிக்கவும் — அது சூயிங்கம்மாலஜி டயட் . பேலியோ எல்லாம் காலியோ. சரியோ?

2) ஹ்ம்ம்… அதே சமயத்தில் ரா என என்னை அழைத்துக்கொள்ளும் நான் ரா எனப்படும் சமைக்கப்படாத உணவுகளை விரும்புவன். அதனால் ஒரு உதவாக்கரை பேலியோ மண்டையன். ரா அவல் எனக்கு மிகவும் மெல்லப் பிடிக்கும். அவசரத்துக்கும் உதவும். ராவு வேளைகளில் ராவுவது எனக்கு உவப்பானது. ஆகவே,  ராவல் பிண்டிக்காரனும் கூட. ஆகவே பாகிஸ்தானில் இருக்கிறேன். ஆனால், நான் தமிழன். ஆகவே பாகிஸ்தானில் அனைவரும் தமிழர்கள். அவர்கள்தாம் அந்தப் பிரதேசத்தின் ஆதிகுடிகள். ஆதிமொடாக்குடிகள். ஆதி பகவனின் துணைவி; மனைவியாகவும் இருந்திருக்கலாம். கருணாநிதியிடம் கேட்கவேண்டும்.

பகவனில் இருப்பது பக. பாகிஸ்தானில் இருப்பது பாகி. பக என்பது சூயிங்க்ம்மாலஜி படி பாகி என்று விரியும் எனக் குர்ரானில் இருக்கிறது. நபினால் நபுங்கள்.  சிவபுராணத்திலும் அப்படியேதான். சிவசிவா! அதனால்தான் சந்தேகத்துக்கிடமில்லாமல் நம் தமிழன்தான் ஒரிஜினல் அக்மார்க் நியான்டர் பள்ளத்தாக்கு மனிதன். உலகின் முதல் பேலியோடயட்காரன்.  நன்றி.

3) ரா (Ra) என்பது பண்டைய எகிப்திய தெய்வம். அதன் துதிபாடல்தான் ரா ரா ரஸ்புடின் என்று போனி-எம் என்றொரு கும்பல் பாடியது – நினைவிலிருக்கிறதா? இந்த ரஸ்புடீனின் மகன் வயிற்றுப் பேத்தியின் பேத்தாதவன்தான்  இந்தப் புடின் – தற்போதைய ரஷ்ய அதிபர்.

இந்தப் புடின், புள்ளை புடிப்பதில் வல்லவர். புடிச்சு புடிச்சு அவர் புடிக்கும் தொழிலில் விற்பன்னரானதால், அவர் நியாயமாகப் புடிர் எனத்தான் அழைக்கப்படவேண்டும். புடி என்பது பண்டமிழ்ச் சொல். ஆகவே புடிர் ஒரு திராவிடர். அல்லது புடின் ஒரு திராவிடன். புடிர் ஒரு அரசர். நமக்கெல்லாம் தெரியும் ‘அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி!’

ஆகவே ரஷ்யர்கள் எல்லோரும் தமிழர்கள். திராவிடர்கள். ஆச்சரியமாக இல்லை?

இப்போது பாருங்கள், திராவிடன் எனும் வார்த்தையில் ரா இருக்கிறது என்ற அதிசயத்தை! ஆஹா!

விடன் என்றால் விஷத்தை, மன்னிக்கவும், விடத்தை உண்பவன் என விரியும்.

ஆகவே தமிழன் என்பான் திராவிடன் – அவன் ரா உணவு வகைகளில் மட்டும் தேர்ச்சி பெற்றவனல்லன் – விடத்தையே உண்டு கபளீகரம் செய்யக்கூடியவன்.  விடமுண்டகுண்டன்.

அவனுக்கு ஈடுஇணை யார், சொல்லுங்கள்?

-0-0-0-0-0-0-

இப்படித்தானே, செய்நேர்த்திமிக்கதொரு சூயிங்கம்மாலகஜிஸ்ட் பலவிதமான மொட்டைத் தலைகளுக்கும் முழங்கால்களுக்கும் முடிச்சுப்போடுவான்? ஒரே போடாகப் போடுவான்?

சரி. முப்பெரும் ரா கதைகள் முடிந்தன. ஷோ முட்ஞ்சிட்ச்சி. அல்லாரும் வூட்டுக்கு போய் பல் வெளக்கிட்டு லைட்ட அண்ச்சுட்டு தூங்குங்கபா.

அத்துக்கு முன்னாடி சாமிய வேண்டிக்குங்கபா – அல்லாகாட்டி (இது வேறு அல்லா, மெட்றாஸ் பாஷை அல்லா, மன்னிக்கவும்!) அண்ணா பெர்யார் தாத்தா பெரீம்மா சின்னம்மா நெர்ந்த்ர இளைஞ்ஜர் அணித்தலீவர் சின்ன அய்யா பெரீய்ய அய்யோ விட்தலேசசிற்த்தே தற்தலேப் புளி சமையல் பதார்த்தம் அல்லாரும் ரவுண்ட் கட்டிக்கினு வொங்க கனவ்ல வந்து பவ்த்தறிவு பத்தீ லெக்சர் கொடுத்ருவாங்கடோய்!

-0-0-0-0-0-0-0-
சூயிங்கம்மாலஜி ரப்பர்பேண்டாலஜி ஆர்வலர்கள் தனிப்பட்ட முறையில் என்னை அணுகினால், அதில் வேண்டுமளவு பயிற்சி கொடுக்கத் தயார். ஆனால் குருதட்சிணையாக தலா ஒரு பேக்கெட் சூயிங்கம்+ரப்பர்பேண்ட் கொணரவேண்டும்.

மேலதிகமாக ஆர்வமுள்ளவர்கள், என் மகாமகோ பேராசான்  ‘கலை’ அவர்களையும் நேரடியாக அணுகலாம். நன்றி.

 

மடையர்கள்: நான், தொப-முதல்வாதிகள், தொ. பரமசிவம் + பாவப்பட்ட நெட்டைப் பனைமரம் – சில குறிப்புகள்

படபடக்கும் பகீர் தொபயியல் சான்றுகள் மூன்று: இளையராஜா ஒரு மடையர்!
நான் மடையன்தான்! நன்றி!! (ஒரு தொபயியல் பிரகடனம்)

பேராசிரியர் தொ. ‘தொ.ப’ பரமசிவம், மடையர் – சில குறிப்புகள்
நம்முடைய தமிழில் மானுடவியல், சமூகவியல், ஜாதி, சமூக அடுக்குவரிசைப் பகுப்பு, ஜாதி அரசியல் இன்னபிற பற்றிய மதிக்கக்கூடிய ஆய்வுகள்/புத்தகங்கள் ஏன் இல்லவேயில்லை?

7 Responses to “தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள், வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம், சிவபெருமான் ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன், கன்னி மரியாளின் மகனான, குறிஞ்சிக் கடவுள் “குழந்தை அல்லா””

  1. nparamasivam1951 Says:

    நெதர்லாந்தில் ஒருவர் உளறி கொட்டினால் …… விடுங்கள் சார்.

  2. Mohamed Says:

    உங்களுக்கு மட்டும் எப்படி தான் இந்த மாதிரி ஆட்கள் தெரிய வர்றாங்களோ. ..
    ஆனா சரியான சிரிப்பு தோரணம்தான்…வரிக்கு வரி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சார்..
    இன்னும் இன்னும் இதே மாதிரி ஆட்கள் உங்கள் கண்களுக்கு சிக்குவார்களாக…
    ஆமீன்

  3. karthi Says:

    http://idlyvadai.blogspot.in/2009/09/blog-post_2410.html ஜெயகாந்தன் பேசியதையே யாரும் கேட்கதபோது ……..

  4. ஆனந்தம் Says:

    ரா என்றால் ராப்பிச்சை அதனால் தமிழர்கள் எல்லாரும் பிச்சைக்காரர்கள். அம்மா, சின்னம்மா காப்பாத்துங்கம்மா என்று பிச்சை எடுக்கிறவர்கள் என்று மற்றொரு தமிழ் விளக்கமும் இருக்கிறது.
    மேலும் நமது ஆராய்ச்சியைப் பிற திராவிட மொழிகளுக்கும் நீட்டிக்கலாம் அல்லவா? ரா என்றால் தெலுங்கில் வா என்று பொருள். தெலுங்கு தமிழ் மொழியிலிருந்துதான் பிறந்தது. அதனால் உங்களை ஆந்திரர்கள் எல்லாரும் தங்கள் மாநிலத்துக்கு வா வா என்று கூப்பிடுவதாகவும் பொருள் கொள்ளலாம். இணையத்தில் மேலும் தேடியபோது இது தொடர்பான ஒரு திடுக்கிடும் ஆதாரம் யூட்யூபில் கிடைத்தது. ஒரு வேளை இந்த ‘ரா’வும் நீங்கள்தானா என்று கண்டு சொல்லவும்.

  5. Anonymous Says:

    Please try listening to Healer Baskar :)

  6. Sundar Kannan Says:

    oru levelukku mela “Kalay” -yin blog, ennala padikka mudiyala samiyov .

    Kalay kalaikkiraro ???


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s