!

November 28, 2016

screenshot-from-2016-11-28-205739

:-( என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்…

1. ஏனெனில், என்னருமைப் பேராசான் எஸ்ரா அவர்கள் ரேடியோ ஆக்டிவிட்டி, (தினமணி)கதிரியியக்கம், சுனாமி, ஜென் டர்புர்ரென்றெல்லாம் அட்ச்சுவுடும்போது, அவற்றையெல்லாம் நானும் புளகாங்கிதத்துடன் உள்வாங்கிக்கொண்டிருக்கும்போது – என்னுடைய செல்லமான சாரு நிவேதிதா அவர்கள், நியூக்ளியர் ஃபிஸிக்ஸ் பற்றி எழுதினால் எனக்கு ஏன் ஏகோபித்து எரிய வேண்டும், சொல்லுங்கள்?

2.  ஏனெனில் – தேசாந்திரி திரிந்து திரிந்து திரித்து எழுதுகிறார், நெகிழ்வாகவே இருக்கிறது. ரொம்ப ஓவராக நெகிழ்ந்து உடுக்கை இழப்பதற்கு முன்னால், இடுக்கிக்கொண்டு என் மர்மஸ்தானத்தை (Secret S Donation ©எஸ்ரா) மறைத்துக்கொள்கிறேன். அதேபோல என் செல்ல நாடோடி ஓடிஓடியும் லத்தீன் அமெரிக்கா செல்லமுடியாமல் நாட்குறிப்புகிறார். தற்குறியான எனக்கு, ஏன் இதைப் பார்த்துப் பொச்சரிப்பு, சொல்லுங்கள்!

வாழ்க நியூக்ளியர்! வெல்க அன்க்ளியர்!!
வெட்டிவேல்,  ப்ளூவேல்!

…அலைகடலென ஆர்பரித்து நன் பிதாமகர்களின் எழுத்துகளை மெச்சுவோம்…

பின்குறிப்பு: நாடோடி அவர்களின் முதல் நாட்குறிப்பு – படு டமாஸாக இருக்கிறது. விரைவீக்கத்துக்கும் பணவீக்கத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒர்ரேயடியாக அத்வைத சாகரத்தில் என்னை நீந்த வைத்துவிட்டார். ஏகோபித்த நன்றி.

இவரை ஏன் அடுத்த ஆர்பிஐ கவர்னராக்க சேஞ்ச்.ஆர்க் தளத்தில் ஒரு கோரிக்கை எழவை நாம் எழுப்பக்கூடாது, ஹ்ம்ம்?

Charu Nivedita for RBI Governor, yeah! ;-)

 

9 Responses to “!”

 1. SivaKumar Viswanathan Says:

  நீங்கள் எஸ்.ரா. மொழி பெயர்ப்பு செய்முறை அகராதியை கைக்கெட்டிய தூரத்தில் வைக்கவில்லை என்று தெரிகிறது. Nuclear Physics ஐ முதலில் நான்காக பிளக்க வேண்டும். (இடையே “அணுவை பிளந்து ஆட்கடலை புகட்டி குறுக தரித்த குறள் ” என்று சில பல மேட்டர்களை தூவவேண்டும்)

  இப்போது நம்மிடம் New Clear Busy X இருக்கின்றது. அதை தமிழில் ‘புத்தெளிவு மும்முர யாரோ (அல்லது எதுவோ)’ என்று சொல்லலாம். அதன் அர்த்தம் , தெரியாத ஒன்றில் மும்முரமாக இறங்கினால் புது தெளிவு கிடைக்கும் என்பதே.


  • யோவ் முருக பேரண்டநாயகா! கொமட்ல குத்தட்டா?

   அகில இந்திய அண்ணா ஒத்திசைவு முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கப் போகிறீர்களா?

   நீங்கள் ஒத்திசைவு நடத்தும் கணக்கைக் கேட்டு அதனை நான் கொடுக்காமல் கமுக்கமாக இருந்ததாக, எனக்கு நினைவே இல்லையே! இது உங்களுக்குத் தகுமா?

   போட்டித் தளம் ஆரம்பிக்கிறேன் பேர்வழியென்று mindmilk குடிக்கவேண்டாம்!

   புத்தெளிவு தேடும் மும்முரத்தில் இருக்கும் தங்கள் அடியேன்,

   __ரா.

   • SivaKumar Viswanathan Says:

    என் உபதள சொந்தக்கணக்கை உள்ளக்கிடங்குக்குள் (உள்ளக்கிடக்கை நிரம்பி வழிவதால்) பூட்டி வைத்து விடுகிறேன் ஐயா. Also gulping down my mindmilk … with a pinch of salt. அ.இ.அ.ஒ.மு.க… கயமை எண்ணத்தை முளையிலேயே கிள்ளி , நறுக்கி எறிந்துவிட்டேன் . இப்படிக்கு ஒத்திசைவு தொண்டன் …மு.பே.நா.

 2. kannan Says:

  Sssabash !!! Shariyana potti :(


 3. “சாரு” ‘செல்லாக்காசு’ என்று ‘மின்னம்பல ஊடகத்தில்’ ஒரு அரைவேக்காடு கட்டுரை எழுதி தானும் ஒரு ‘செல்லாக்காசு’ என்பதை நிரூபித்து விட்டார்.அப்புறம் தான் பார்த்தேன் அந்த மின்னம்பலத்தில் ‘நக்கீரன்’ புகழ் ‘அ’.காமராஜ்’ தான் ‘ஆ’சிரியர் மற்றும் நிர்வாக இயக்குனர்!.சாரு அண்ணனோடு போட்டி போட்டுக் கொண்டு இது ‘மாதிரியான’கட்டுரைகளை பல ‘நிபுணர்கள்’ அதில் எழுதி வருகிறார்கள் சாம்பிளுக்கு கீழே:
  https://minnambalam.com/k/1480098627
  https://minnambalam.com/k/1480271416
  https://minnambalam.com/k/1480357821

  “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”

 4. Venkatesan Says:

  இதனால அதை ஒழிக்க முடியாது. இதனால அது ஒழியும்னு வெச்சுக்கிட்டா கூட, இவ்வளோ மக்கள் கஷ்டப் படறாங்களே அப்படின்னு நெறைய பேர் பேசும் பொது, இவரு அதை எதுக்கு ஒழிக்கணும்னு ஒரே போடா போட்டுட்டாரு.

  “கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் இமாலய வித்தியாசத்தை வைத்துக்கொண்டு கறுப்புப் பணத்தை ஒழிப்பதால் என்ன பயன்?”

  அரசு இலசவக் கல்வி, மருத்துவம் அளிக்குது. ஆனா, அது ஏன் நல்லா இல்லை? சொல்லுங்கோ சாரு.

 5. krishnasamy Says:

  Dear oothisaivu
  please write an article on demonitisation and enlighten us. There are so many articles around and confusing us.

 6. Shiva Says:

  Unnuku onniyum therlaba. Periyavar solradhu kellu.
  http://www.luckylookonline.com/2016/11/blog-post_29.html?m=1
  Ivaru Amerikaa Karan sonnadhe ellam padichi evalo karetta sollarau.

  Modi paapanuga pecha ketukunu ippadi thapu thappa panran.
  Thalievar kalingnar gaandi aatchi’la irundhu irundha nadakaradhe Vera.

  (accessory navicular surgery made me bedridden for two weeks. Now at least these guys are keeping me entertained.)


 7. கிருஷ்ணசாமி சார் சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன்.உங்களின் மற்றொரு செல்லமான “இளம்கருப்பனும்” இது சம்பந்தமாக காட்டுரை எழுதி எங்களை காய்ச்சு காய்ச்சன காய்ச்சும் போது நீங்கள் இன்னும் வாளாயிருந்தால் எப்படி? பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள்!
  http://www.luckylookonline.com/2016/11/blog-post_29.html


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s