நம்முடைய செல்லங்களான அரைகுறைத் தமிழ் எழுத்தாளர்களின் – பொதுவாகவே மோசமான, சராசரித்தனமான நிலைக்குக் காரணம்…
November 12, 2016
… நம்மைப் என்னைப் போன்ற கூறுகெட்ட முட்டாக்கூ சோம்பேறி வாசகர்கள் – கதிமோட்சமேயில்லாமல் இந்தக் கோமகன்களின் வால்களைப் பிடித்து – ஆராதித்துக்கொண்டும், ஆமோதித்துக்கொண்டும், கொம்புசீவி விட்டுக்கொண்டும் அமோகமாக அலைவதுதான்; எனக்கு இதில் சந்தேகமேயில்லை! :-( தேவையா இது? :-(
…இந்தப் பொதுவிதிக்கு விலக்காக இருக்கும் சிலபல பேர்களும் பலசமயங்களில், சர்க்கரை ஆலையில்லா ஊரின் இலுப்பைப் பூக்களாக ஜொலிப்பதும், சமன நிலையில்லாமல் கருத்துகளை வாரிவாரி வழங்குவதும் – பித்தளைகளாக இளிப்பதும் மேலதிகச் சோகம், வேறென்ன சொல்ல! பின்னவர்களில் ஒர்ரே சறுக்கல்கள்! சிரத்தையின்மைகள்! ‘வோத்தாடேய், இதுமேல இத்தாண்டா என்னோட கர்த்து, புட்ச்சிக்கினு ஓட்றா‘ வகை அள்ளிவீசல்கள்.
இம்மாதிரியான முதிர்ச்சியற்ற நிலைமைக்கு, பிதாமகர்களின் வேலை அழுத்தங்கள்தாம் காரணமா? அல்லது என்னைப் போன்ற வாசகர்களின் அதிசராசரித்தனமும் எளிதில் திருப்தியடைந்துவிடும் போக்கும் காரணமா? திரும்பத் திரும்ப அதே சும்பக்கூ நெகிழ்வாலஜிகளையும் லத்தீ(னமெரிக்க) எழவுகளையும் அற விழுமியங்களையும் வாரிவாரி ஏகோபித்து வழங்கினால் நாமெல்லாம் கிறங்கிக் போய் மசுர்க்கூச்செறிந்து சரணாகதி அடைந்துவிடுகிறோமா…
நம் அரசியல்வாதிகள் தங்கள் மாறிக்கொண்டேயிருக்கும் வெட்கங்கெட்ட கூட்டணிகள் பற்றிச் சொல்வதுபோலவே (=அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை) நான் என்ன சொல்ல வருகிறேனென்றால் — தமிழ் அலக்கியச் சூழலில் நிரந்தர அலக்கியத் தரம் வாய்ந்தவர்களாக மிகப் பெரும்பான்மையோர் இருக்கிறார்கள். ஆனால், நிரந்தர (இலக்கிய?) தரம் வாய்ந்தவர்கள் இல்லை. ஏனிப்படியானது? சலிப்பாக இருக்கிறது.
தமிழகம் சார்ந்த எல்லா வகையான கந்தறகோளங்களுக்கும் திராவிடத்தைத் திட்டித் தீர்ப்பது என்பது தருக்கரீதியாகச் சரியாகவே இருந்தாலும் – இந்த அலக்கிய விஷயத்தில் இது அவ்வளவு ஒத்துவரவில்லையே, என்ன செய்ய! ;-)
ஆம். சும்மாவா சொன்னார் அந்த வள்ளுவர் டூட்? :-(
இந்த நடைமுறை வயிற்றுப் போக்குக்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கமுடியும்; ஆனால், என்னுடைய நிரந்தரப் படுசெல்லங்களில் ஒருவரின் வரிகளை மட்டும் கீழே கொடுக்கிறேன்.
“வரைபடத்தில் ஒரு சின்னக் கோடாக பிரம்மபுத்திராவைப் பார்த்தவன், பிரமாண்டமாக பரந்து விரிந்து செல்லும் நதியாக அதை நேரில் பார்த்தால், எப்படி இருக்கும்!“
#எல்லாமேநெகிழ்வப்பா!
பொழிப்புரை: புகைப்படத்தில் ஒரு சின்னாபின்னப் பிரகிருதியாக எஸ்ராவைப் பார்த்தவன், பிரம்மாண்டமாக, ஆனால் பறக்காமல் விரிக்காமல் செல்லாமல் பொதியாக, அவரை நேரில் பக்கவாட்டில் பார்த்தால், எப்படி இருக்கும்!’
(http://celebrityeventimages.blogspot.in/2012/02/super-star-rajinikanth-stills-at.html)
…நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணைப் போல முன்சரியும் வயிற்றை வைத்துக்கொண்டு, ஆகவே இந்தக் கூறுகெட்ட புவியீர்ப்பு விசைக்குப் பலியாகி ரஜினியார் காலடியில் டமாரென்று வீழ்ந்து சரணாகதியாகிவிடாமல் தொந்தியை இழுத்துப் பிடித்து மூச்சைக் கட்டி, நெஞ்சினை நிமிர்த்தப் பிரம்மாண்டப் பிரம்மப் பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கும் என்னருமைப் பேராசானைக் காணக்கண்கோடி வேண்டும்தானே! தானத் தந்தனத் தந்தானே!!
#எல்லாமேமகிழ்வப்பா!
ஆனால் – அவர் உடல் அவருடைய சொந்த விஷயம் That that man, his his body. That that body, its its potbelly. உண்மைதான். அவர் என்னதான் – உணவு கிணவு எப்படி ஆரோக்கியத்துடன் இருப்பது என்றெல்லாம் விலாவாரியாக ஆதண்ட விகடனில் எழுதியிருந்தாலுமே கூட நான் இப்படியெல்லாம் படுமோசமாக, முகத்தைச் சுளிக்கவைக்கும் வகையில் எழுதக் கூடாது… ஒப்புக் கொள்கிறேன். இருந்தாலும் ஒருவரின் சொல்லுக்கும் செயலுக்கும் பிரத்தியட்ச உண்மைகளுக்கும் இடையே உள்ள அநியாய இடைவெளிகள் எனக்கு மகாமகோ அழுத்தத்தைத் தருகின்றன; பிரச்சினையும் தவறும் என் பக்கம்தான், என்ன செய்ய…
…எது எப்படியோ, இந்த மகோன்னத மனிதர், அந்த பேலியோ எழவு அரைகுறைத்தன புதுமதவெறியர்களோடு சேர்ந்துகொண்டு இன்னொரு புத்தகத்தை (“திருட்டுடீவிடியில் உலகசினிமா பார்த்துக்கொண்டே, இடக்கையால் பேலியோ டயட் உண்டு, வாழ்வாங்கு வாழ்ந்து, தேசம்முழுவதும் மெய்யெழுத்துகளுக்காகத் தேடியலைவது எபடி: எனுடைய குறிபுக”) அட்ச்சுவுடாமல் இருந்தால் அது என் பாக்கியமாக இருக்கும்.
-0-0-0-0-0-0-
இந்த எழவெடுத்த அகடவிகட நேர்கோணலில் வரிக்கு வரி அரைகுறைத்தனங்கள் – கேள்விகள் உட்பட. தேவையற்ற நெகிழ்வுகள். சொறிந்துகொடுத்தல்கள்… ஆகமொத்தம் உளறல்கள். தேவையா?
நேர்கோணலின் தரத்தைப் பார்த்தால், எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. இப்படியா ஒரு ஹேகியோக்ரேஃபி போல ஒன்றைத் தேவையற்றமுறையில் எழுதுவார்கள்? நம் நேரத்தை வீணடிப்பார்கள்??
…ங்ஙொம்மாள, இதுதாண்டா நேர்கோணல்!
முக்கியமான குறிப்பு: இந்த ஆதண்டவிகட எஸ்ராவிய பேட்டியை எனக்கு அனுப்பி என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டு என் வாழ்க்கையின் மூன்று நான்கு மணி நேரங்களையாவது வீணடித்த அந்த நபருக்கு இருக்கிறது, பூஜையும் வேட்டும். இந்த மாதிரி மனிதர்களை இனிமேல் நான் என்கரேஜ் செய்வதாக இல்லை. பாவிகள். இவர்கள் உருப்படுவார்களா?
-0-0-0-0-0-
மேலும், எஸ்ரா அவர்கள் ஒரு நாணயமான (= CoinLike ©எஸ்ரா) குடும்பஸ்தர் என்றெல்லவா நினைத்தேன். ஆனால், அவர் இப்படி இரவு வாழ்க்கைக்கு அலைகிறாரே! ஐயகோ!!

Mailer Daemon, Mailer Daemon என்ற ஒருவகையான பைசாசங்கள்தாம் இந்த மின்னஞ்சல்களைப் பின்னாலிருந்து இயக்குபவை என்று கேள்விப் பட்டிருக்கிறேன்… ஆக, இப்படி ஆயிரக்கணக்கில் கீழ்பாகம் வெட்டப்பட்ட சிலைகளைப் பற்றி மின்னஞ்சல்களாக எழுதும் என்னருமை எஸ்ராவும் ஒரு பைசாசமோ? அல்லது ரூபாசமோவா?
#இன்னாடாஇது!
அவர்களுக்காகத்தான் என்னருமை எஸ்ரா இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்திருக்கிறார்; நன்றி, எஸ்ரா! :-))
சரிதான். எஸ்ரா அவர்களின் அடுத்த சிறுகதைத் தொகுப்பு: மின்சாரக் கதைகள். கதைகள் வரிசையாக – எலக்ட்ரான், பேட்டரி, வயர், ந்யூட்ரல், ஃப்யூஸ், எர்த், வோல்டேஜ், கரன்ட், ப்ளக், விரலை ஏடாகூடமாக விட்டு வீரமரணம்… …
முதலில் இதனைப் படிப்பதற்கு ஷாக்கிங்காக இருக்கலாம். ஆனால் எதைப் பற்றியும் பத்திபத்தியாகக் கதையடிக்கலாம்; கவலை வேண்டேல். எல்லாம் எஸ்ரா கருணை, வேறென்ன சொல்ல!
…ஆனால் இந்த எஸ்ராவிய அறிவுரையைப் படித்திவிட்டு எவ்வளவுபேர் புற்றீசல் போலக் கிளம்பப் போகிறார்களோ என்பதை நினைத்தால்…
உங்களுடைய அலக்கியத்துக்குக் காரணம் புதுமைப்பித்தன்களா! :-((

அய்யா எஸ்ரா, மிகுந்த ரெஸ்பான்ஸிபிலிட்டி எழவுடன்தான், சிரத்தைமிகு உழைப்புகளுக்குப் பின்னர் மட்டுமேதான் – கண்டமேனிக்கும் ‘ஜென்’ பற்றியும், அணுக்கருசக்தி பற்றியும், சார்லிசாப்ளின் பற்றியும் அட்ச்சுவுடுகிறார். நான் இதனை நெக்குருகி நம்பகிறேன். #ங்கொம்மாள


சரி… …இதெல்லாம் பரவாயில்லை, சக வாசகர்களே! நமக்குத் தாங்குதிறன் அதிகம், பொறுத்துக்கொள்ளலாம்; ஆனால் கீழ்கண்ட விஷயம்?
ஆ! தோ பார்ரா! எஸ்ரா தமிள் பிலிம் எட்கப்போறாராண்டா! அடிவயிற்றுக் கலக்கத்தில், படுபயங்கரபீதி உணர்ச்சியில், எனக்கு என்ன செய்வதென்பதே தெரியவில்லை. :-(
…உண்டுகொண்டிருக்கும் தமிள்த் திரையுலக வீட்டுக்கு இப்படி இரண்டகம் (=TwoInside ©எஸ்ரா) நினைக்கிறாரே என்பதை நினைத்தால், எனக்குத் துக்கம் தாளவில்லை. :-((
-0-0-0-0-0-0-
… சரி. இனி இந்த எழவெடுத்த அரைகுறை பேட்டியாளர்களைப் பற்றி…
ஊற்றுக்கண்களின் அடையாளம் கண்டுகொள்ளப்படல் முக்கியமில்லையா? சொல்லாமல்/தொடாமல் விடப்படுபவை பற்றிய கேள்விகள் வாசகன் மனதில் எழும்ப வேண்டாமா? சரி – எஸ்ராவாக இந்த பேட்டிகாணப்படுபவர் இருப்பதால் இப்படி ஒரு காத்திரமான நேர்காணல் முறைமை ஒத்துவராது என்றாலுமே கூட… வாய்பாடு போல ஒண்ணோன் ஒண்ணு ரெண்டோன் ரெண்டு என்று புல்லரிப்புக் கேள்விகளைக் கேட்டு நெகிழ்வாலஜி பதில் பெறுவதற்கு அப்பாற்பட்டு, இந்தச் சோம்பேறி பேட்டிஎடுப்பாளர்கள் ஒரு சுக்குக்கும் பிரயத்தனமே செய்யவில்லை…
…இம்மாதிரி அடிப்படைத் தகுதிகளற்ற அரைகுறை முட்டாக்கூ வாசகப்பேட்டியாளப் பெருந்தகைகளால்தான் முக்கால்வாசி தமிழ் எழுத்தாளர்கள் தங்களைப் பற்றிய சுயப்பிரதாப பிம்பங்களை அளவுக்குமீறி வீங்கவைத்துக்கொண்டு மினுக்கிக்கொண்டு பவனி வருகிறார்கள் – எனக்கு இதில் சந்தேகமேயில்லை. தன் அறிவைப் (=சீரகம்) பற்றிய புரிதல் (=கடுகு) என்பதே ஒரு மசுத்துக்கும் இல்லாமல், ஆனால் படுபயங்கர புத்திசாலியாகத் தன்னை வரித்துக்கொண்டு கேள்விகேட்பவனுக்கு — அதி அற்புத அனுபூதி நிலை ஞானோதய பதில் கொடுப்பது: தன் எழுத்தைப் பற்றி வீங்கிய மதிப்புகொண்ட எல்லாம் தெரிந்த ஏகாம்பர நெகிழ்வுஜாங்கிரி எழுத்தாளன்! சபாஷ், சரியான போட்டி!
யதா வாசகன், ததா தமிழ் எழுத்தாளன். சோகம். யதா பேட்டிஎடுப்பாளப் பேடி, ததா பேட்டிகொடுப்பாள அலப்பரை…
கயமை வாய்ந்த ஊடகப்பேடிகளால்தான் + திறனற்ற முட்டாக்கூ வாசகர்களால்தான், நம் செல்லத் தமிழ் எழுத்தாள அறிவுஜீவிகளால் ‘மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ்’ எனத் தங்களைத் தாங்களே கருதிக்கொண்டு உலா வரமுடிகிறது… freakin’ haloes around their fuckin’ hollows, what else!
பேட்டி எடுக்கப்படுபவரை படுபிரமிப்புடன் அண்ணாந்து பார்த்துக்கொண்டு அவருடைய புட்டத்தை இதமாகச் சொறிந்து கொடுப்பதற்கா, அவருடைய வாலிபவயோதிக இன்ப லாகிரியை அற்புதச் சுகமளிக்க எழுப்புவதற்கா இந்த எழவு நடத்திருக்கிறது?
…நான் – பேட்டி எடுக்கப்படுபவரிடம் மரியாதைக் குறைவாகக் கேள்விகள் கேட்கப்படவேண்டும் என்று சர்வ நிச்சயமாகச் சொல்லவரவில்லை, ஆனால் இந்த எழவெடுத்த கேள்விஞானிகள் – கொஞ்சமாவது தங்கள் மூளையை உபயோகித்து, இந்த நேர்கோணலின் வாசக தரத்தை மதித்து, அவர்கள் செலவிடும் நேரத்துக்கும் மரியாதை கொடுத்து — என்கிற ரீதியில் துக்குணியூண்டாவது உழைக்கலாமே!
அப்படியே கொஞ்சம் முயற்சி செய்தாலும் அவர்களுடைய குயுக்தியும் வக்கிரபுத்தியும்தான் வெளிப்படுகின்றன. அயோக்கியர்கள்!
தமிழில் எழுதுவதாக பாவலா செய்துகொண்டிருக்கும் இந்த பேட்டியாள அரைகுறைகளின் சித்தரிப்பு (இது சித்திரிப்பு என்றுதானே இருந்திருக்கவேண்டும் – சித்திரம்-பிக்சர்-பிக்சரைஸேஷன்) அபத்தங்களை விட்டுவிட்டாலும் – இப்படியா ஒரு அயோக்கிய சகிப்பின்மைக் கேள்வி கேட்பார்கள். நானாக இருந்திருந்தால் இவர்களைத் துரத்தியிருப்பேன் – ஆனால் பாவம் எஸ்ரா, இந்த அரைகுறைகளுக்குப் பொறுமையாக பதில் வேறு அளித்திருக்கிறார்.
(இப்படியே வரிக்கு வரி இந்த பேட்டி அபத்தத்தைக் கிண்டல் செய்யலாம்; ஆனால், இந்த மிச்ச வேலையை போக்கற்ற வாசகராகிய உங்களுக்கு ஹோம்வர்க் எனக் கொடுக்கிறேன். நன்றி!)
-0-0-0-0-0-0-
சரி. இவையெல்லாம் ஒருபுறமிருக்க — இந்த ஆனந்த அகடவிகட நேர்கோணலை நடத்தியவர்களில் ஒருவரான ‘அதிஷா’ என்பவர் தான் முன்னொரு சமயம் ‘திராவிடம் ஃபார் டம்மீஸ்’ வகையறா நகைச்சுவைப் புத்தகத்தை எழுதிய நபரோ?
திராவிட இயக்கம் IS for dummies!
இவர் புதியதலைவலிப் பத்திரிகை எழவில் வேலை(!)செய்கிறார் என்றல்லவா நினைத்திருந்தேன்? இவர் அவர்தானென்றால் – நான் நேர்கோணலின் தரத்தைப் பற்றிக் கேள்வியே எழுப்பியிருக்கவேமாட்டேனே. :-((
திராவிடத்தனமாக – தன் இயற்பெயரை (‘மகாமகோ சாவுகெராக்கி’) கொஞ்சம் மாற்றிக்கொண்டு (‘அதி சாவு’) பின்னர் அதனை செம்மொழி ஸம்ஸ்க்ருத மொழிப்படுத்தி (‘அதிஷா’) என்று மாற்றிக்கொண்டுவிட்டாரா இவர்? அல்லது ஏதாவது பௌத்தம் கௌத்தம் என்ற ஜாதகக்கதை ஜல்லியடித்தல் வழியாக இந்தப் புனைபெயருக்கு வந்தாரா? எல்லாம் அந்த பேதிசத்துவர்களுக்கே வெளிச்சம்!
ஆனால் – இவர் அவரல்ல என்றால் என்னைத் திருத்திக்கொள்கிறேன். ஏனெனில் பௌத்தத்தின்மீது அனாவசியமாகச் சேற்றினை வாரியிறைப்பது என் தற்போதைய தற்குறிக்கோட்களில் ஒன்றல்ல. நன்றி.
#எல்லாமேசராசரித்தனம்தாண்டா!
-0-0-0-0-0-0-
சாமீ! எங்களுக்கும் மூளன்னிட்டு ஒண்ணு இருக்குன்னு ஞாபகப்படுத்திக்கினே இரு சாமீ!!
சாமீ! இந்த தமிள் எள்த்தானுங்க கிட்டேர்ந்து எங்களக் காப்பாத்து சாமீ!!
அவ்னுங்களுக்கு நல்ல புத்தி கொடு சாமீ!
அது முடியாக்காட்டீ, எங்களுக்காவது வெமோசனம் குடு சாமீ! தாங்க மிடீல சாமியோவ்!!புட்டம் சரணம் கச்சாமி
பங்கம் மரணம் கிச்சாமிசும்பம் தருணம் பொச்சாமி
தமிழம் எழுத்தம் நச்சாமி
ஆமென்.
…டேய்! இந்தப் பதிவு முட்ஞ்சிடிச்சிடா! வோத்தா, போயி ஆவற வேலையப் பாருங்கடா! பெருஸ்ஸா அக்கப்போர் பட்க்க வந்த்ட்டானுவ…
வூட்ல ஆயிரம் வேல இருக்குண்டா, சும்மாசும்மா எலக்கியம் கெலக்கியம்னிட்டு அலைஞ்சுக்கினு யெணயத்தை மேஞ்சிக்கினு, கண்டகண்ட கூவான்களோட பதிவுகளெயெல்லாம் படிச்சிக்கினேசிர்ச்சிக்கினு, வூட்ல வொக்காந்துக்கினே சமூக கொலைத்தளத்துல பொங்கிக்கினு டயத்த வேஸ்ட் பண்ணாதீங்கடா, ஸோமாறீங்களா!
தகவல் தொளில்நுட்ப ஐடி பஜனை பண்ணாம வொழச்சி சம்பாரீங்கடா, போக்கத்த சகஅரெகொறெங்களா!
சுபம்.
November 12, 2016 at 11:09
check facts – that interview came in vikadan tadam not ananda vikatna
November 12, 2016 at 16:33
Sir Anony-mouse,
1. I did – and I agree that it appeared in vikatan thadam – the existence of which I came to know of only today. I thought this was the name of a regular column in ananda vikatan. Thanks for educating me, though it is NOT a significant learning or whatever. They are all ‘orey kuttaiyil ooriya mattaigal’ – that’s all.
2. The interview came to me in a pdf form from a source I trust, and I do my home work AND check for significant facts and slippages.
3. Looks like I miffed you by excoriating YesRaw, Atisha et al. And thanks again for giving me an opportunity to do so.
Please continue to educate me. I love that.
Best:
__r.
November 12, 2016 at 19:32
He tried ready,steady, pull in before clicking the shot, photoshop is a better option, IMHO.
BTW, who is the gentleman standing next to sRa ?
November 12, 2016 at 19:47
Beats me too! Mebbe rara rasputinjini??