‘ஒத்திசைவு’ வெ. ராமசாமி ஒழிந்தார்!
October 27, 2016
இதற்கும் இஸ்லாமியத் தீவிரவாதம்தான் காரணமாகச் சொல்லப்படுமா, அல்லது மிகச்சரியாகவே, உலகத்திலிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்குப் பின்னாலும் இருக்கும் ஹிந்துத்துவாதான், அதுவும் குறிப்பாக, நரேந்திரமோதிதான் காரணம் என அறியப்படுமா?
அக்டோபர் 23, 2016: பாஸ்டன் க்ளோப் ஸ்ட்ரீட் ஜர்னல் க்ரானிக்கிள் டுடே தந்தி ஒலி மணி மலர் தஹிண்டுகுண்டுமண்டு
… வரலாற்றைப் புரட்டிப்போட்டிருக்கும் இந்த சம்பவத்தைக் குறித்து பிரபலமானவர்களின் கருத்துகளை அறிய, பற்பல ஊடகங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட இவை, உங்கள் வசதிக்காக சுமார் ஆயிரமே வார்த்தைகளில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. பொறுமையாகப் படிக்கவும்.
இந்த நிகழ்வுக்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்: 1) செயற்கை 2) இயற்கை – என, மருத்துவர் அய்யாக்கள் தெரிவித்துள்ளனர்.
சின்னஅய்யா (= SymbolicSir ©எஸ்ரா) அவர்களும் உடனடியாக இதனை ஆமோதித்து, அமெரிக்காவில் வன்னியர் ஆட்சி ஏற்பட்டிருந்தால் இம்மாதிரியெல்லாம் நடந்திருக்காது எனக் குறிப்பிட்டார். ஆகவே, தற்போதைக்கு – பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக ஒரு நிழல் அமெரிக்க ஜனாதிபதியையும் (=காடுவெட்டி குரு), தைலாபுரம் பக்கத்தில் ஒரு நிழல் வெள்ளை மாளிகையையும் உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால், உலகப் புகழ் பெற்ற ஃபோரென்ஸிக் நிபுணரும் தமிழ் இடிதாங்கியுமான தொல்லை திருமாவளவளவளவளவன், இதில் ஏதோ சதி இருப்பதாகவும், உடனடியாக சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளே தங்கள் கையால் பிரேதப் பரிசோதனை செய்தால் தான் உண்மை வெளிவரும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். வன்னியப் பிரேதமற்ற எந்த அன்னியப் பிரேதமும் இந்த மாதிரி பரிசோதனை செய்யப்படவேண்டும் என்ற கருத்துடையவர் வளவளவளவளவனார் என்பது குறிப்பிடத் தக்கது.
முன்னதாக ‘ட்ராஃபிக்’ ராமசாமி அவர்கள் அமெரிக்க உயர் நீதி மன்றத்தில் இது தொடர்பாக ஒரு பொதுக் குதூகல வழக்கு ஒன்றைத் தொடுத்திருக்கிறார் என ராய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அதில் — அவர், இந்த வெட்டி ராமசாமி இறந்ததால் பெரும்பாலோருக்கு மகிழ்ச்சிதானே தவிர வேறொன்றுமில்லை, ஆகவே அமெரிக்காவில் அமெரிக்கப் பொதுமக்கள் ட்ரம்பைத் தேர்ந்தெடுக்கவே கூடாது என நீதிமன்றம் அறிவிக்கவேண்டும் என ஒரு பெட்டிஷன் போட்டுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன – எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
அதற்கும் முன்னதாக – டொனல்ட் ட்ரம்ப் ஹில்லரி க்ளின்டன் ஃப்லெக்ஸ் தட்டி விளம்பரங்களைத் தன் கையால் கிழித்தெறிவதற்காக ‘ட்ராஃபிக்’ ராமசாமி அவர்கள் அமெரிக்கா செல்ல விண்ணப்பித்த விசா, பொத்தாம்பொதுவாக அமெரிக்க தூதரகத்தால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மார்க்கண்டேய கட்ஜு அவர்கள் ட்விட்டர் ஸ்டேட்டஸ் போட்டு – அமெரிக்கா பாகிஸ்தானுடன் இணையவேண்டும் என்று கிண்டல் செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்ததை நாம் ஏற்கனவே அறிவோம்.
மு. கருணாநிதி அவர்களின் கருத்து பின்வருமாறு: “நான் சூத்திரன் என்பதால் தானே, இந்த விஷயத்தில் யாரும் என்னைக் கருத்து கேட்கமாட்டேனென்கிறார்கள். ஒரு பிணம், அதுவும் தமிழ்ப்பிணம், மேலும் முக்கியமாக, ஒரு செம்மொழிப்பிணம் பற்றிக்கூட நான் கருத்து சொல்லக் கூடாதா? அம்மையார் ஆட்சி காட்டாட்சி என்பதற்கு இதற்குமேல் எடுத்துக்காட்டு வேண்டுமா? ஆகவே, ஸ்டாலின் தான் நிச்சயம் அடுத்த திமுக தலைவர் என அன்பழகன் கருதுகிறார். ”
ஜெயலலிதா: அடுத்தவாரம் அம்மாஒத்திசைவு தளம் – வேர்ட்ப்ரெஸ், ப்ளாக்ஸ்பாட் போன்ற இடங்களில் தொடங்கப்படும். இவற்றுக்கு இலவச இணைப்பாக – @அம்மாஒத்திசைவு ட்விட்டர் அக்கவுண்ட் ஒன்றும் திறக்கப்படும்
இசுடாலிர்: ஜெயலலைதாவின் அராஜகப் போக்குக்கு எதிராக – சட்டசபைக்கு வெளியில் உட்கார்ந்துகொண்டு, மரத்தடிஒத்திசைவு தளத்தினை கழகம் ஆரம்பிக்கும்.
வளர்ந்துவரும் எழுத்தாளர் சமஸ் எழுதுகிறார்: தமிழகத்தில் உள்ள தமிழர்களின் மாரடைப்பைத் தடுக்கத் தமிழர்களுக்குத் துப்பில்லை. இந்த அழகில் வெளி நாடுகளில் தமிழர்கள் மாரடைப்பில் இறந்ததை வைத்து இங்கு அரசியல் செய்வது சரியா?
வளர்ந்துவிட்ட தமிழ் எழுத்தாளர் டி. தருமராஜ், வளர்ந்துவருபவரை உடனடியாகச் சாடுகிறார்: ரொம்பச் சூடா இருக்கீங்க, சமோசா!
ஸாகரிகாகோஷ்+மாலினிசேஷாத்ரி+ரொமிலாதாபர்: என்னுடன் முன்னொருமுறை இந்த ராமசாமி அளவளாவியிருந்தாலும், எனக்கு இந்த வலதுசாரித் தீவிரவாதியைத் தெரியாது. ஆனால், இவன் இறந்ததற்கும் காரணம் நரேந்திரமோதியும் ஆர்எஸ்எஸ் கும்பலும்தான் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஏனெனில் மோதிக்கு போட்டியாளராக யாருமே இருக்கக் கூடாது. #ModiDownDown #சீ-வெட்கம்-வெட்கம்
வினவு: அமெரிக்காவின் அசிங்கமான முடை நாற்றமெடுக்கும் ஏகாதிபத்திய பெருமுதலாளித்துவ கேடுகளுக்கு இதுவும் ஒரு சான்று. போஸ்டர் ஓட்டுவோம். ஆர்பாட்டம் செய்வோம்!
விகடன்: இரங்கல்கள். உங்கள் வருத்தத்தைத் தீர்ப்பதற்கு இதோ நடிகை நமீதாவின் பாற்சுரப்பி பிதுங்கும் படங்கள்.
புதியதலைவலி: ராம்குமாரை புழல் சிறையில் வைத்து மின்சார ஷாக் கொடுத்துக் கொலை செய்ததற்குப் பின் மனம் வருந்தி, நுங்கம்பாக்கம் ரயின் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட சுவாதியை உங்களுக்கு நினைவிருக்கலாம். அதேபோல, இந்த ராமசாமியும் தற்கொலைதான் செய்துகொண்டிருக்கவேண்டும். ஆனால் அதற்கு முன், இந்தக் கிரிமினல், எந்தக் கொலைகளைச் செய்தான் என்பதை ஆராயவேண்டும் என்பதுபற்றி ஒரு சுடச்சுட ரிப்போர்ட்! உங்கள் புதியதலைவலியில் இரவு மணி 8க்கு!!
யுவகிருஷ்ணா: பார்ப்பான் இறந்ததில் மகிழ்ச்சி. தமிழன் இறந்ததில் வருத்தம். கலைஞர்தான் அடுத்த முதல்வர். வருத்தத்தில் ஆழ்ந்துள்ள தமிழர்களை முன்னேற்ற தெலுங்கு மசாலாப் படவிமர்சனம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
வா. மணிகண்டன்: எனக்கெதுக்கு வம்பு.
சாரு நிவேதிதா: பாவம், என்னுடைய புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலக மக்களை ஏகோபித்து இன்புறச் செய்யும் வாய்ப்பை இவர் இழந்துவிட்டார் என்பதை அறிந்து வருத்தப் படுகிறேன். ஆனால் என்ன, அடோல்ஃபோ பியோய் கஸாரெஸ் எழுதிய இன்வென்ஷன் ஆஃப் மோரெல் நாவலைப் படித்திருக்கிறீர்களா? போர்ஹேஸ்ஸையே தூக்கிச் சாப்பிட்டுவிடுவார் இந்த ஆசாமி. நான் எப்போது அர்ஜெண்டினாவின் விளிம்பில் ஸெட்டில் ஆகப்போகிறேன் என்று தெரியவில்லை. என் ஸோர்ரோ நாய்க்குட்டிக்குப் பொறை வாங்கவேண்டும். வள்ளுவர் பொறையுடமை என எப்போதோ எழுதிவிட்டார். ஆச்சரியம்தான்! அவரிடமும் ஒரு செல்ல நாய் இருந்திருக்குமோ?
அமெரிக்க ஜனாதிபதியாகப் போட்டியிடும் வாய்ப்பை, மயிரிழையில் அநியாயமாகத் தவறவிட்ட அபாக்கியவானான, மகத்தான அமெரிக்க தேசபக்தர் அரவிந்தர் கண்ணையர் அவர்களின் இரங்கல் செய்தி: ரொமிலா தாபர் அவர்களுடைய ஆராய்ச்சியைக் குற்றம்கூறிய, வெட்கமேயில்லாமல் பேப்பர் ப்ளேன் பறக்கவிடும் இஸ்ரோ பற்றி எழுதிய இந்த ஹிந்துத்துவா கிரிமினல் நபர் இறந்ததற்கு நான் மனதாற வருத்தப் படுகிறேன். நான் அமெரிக்காவில் குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறேன்; ஆகவே, அரவிந்தன் நீலகண்டன் ஒரு ஃப்ராட். அதனால்தான் அமெரிக்கா ஓஸ்த்தி. ஆசானே சொல்லிட்டார். (அண்மையில் நான் படித்த புத்தகங்கள் இதற்குச் சாட்சியம்: 1) See America First: Tourism and National Identity, 1880-1940 – By Marguerite Shaffer 2) John Dillinger: The Life and Death of America’s First Celebrity Criminal – By Dary Matera 3) Namaste America: Indian Immigrants in an American Metropolis – By Padma Rangaswamy 4) வெண்முரசுகள் – ஜெயமோகன்
ஜெயமோகன் அவர்களின் இரங்கல்: jeyamohan.in/obituary-generator/?ஓத்திசைவுராமசாமி
404 not found; try the names of other prominent people, who are yet to die. good luck.
எஸ்ராவின் ‘ஜென்’ இரங்கல்: எனகு ஒதிசைவு ராமசாமியை தெரியு. அவரை நா பாததை அவ பாதிருகா. அத நா பாதே. ஆனா நாக ரெடு பேரு ஒருதருகொருத பாததை நீக பாதீகளா? உபுமா பாடவ துணையெழுது படிசீகளா? யாம?? இடகை??? உகளுகு கதி மோசமே இலை. ஐஐடி போகணு. லெச கொடுகணு. பேசு பேசணு. பேருரை ஆற்றணு. உலக உய வழி செயணு. நறி.
‘பாஸ்டன் பாலா‘ என்ற பூடகமான பெயரில் திகைக்கவைக்கும் வகையில், பாஸ்டன் நகரிலேயே சந்தேகாஸ்பதமாக உலாவரும் நபரும், பாஸ்டனுக்கு எம்மாதிரியான சோட்டா தமிழ் எழுத்தாளர்கள் வந்தாலும் அவர்களைத் தனக்குப் பிடித்த உணவகத்துக்கு அழைத்துக்கொண்டு போய், தனக்குப் பிடித்த உணவை அவர்களைச் சாப்பிடவைக்கும் விருந்தோம்பல் திறனும், மேற்படி சோட்டா எழுத்தாளர்களை பலப்பல சுற்றுலாக்கார இடங்களுக்குக் கூட்டிச் சென்று அவர்கள் மேன்மேலும் தங்கள் மகோன்னத அனுபவங்களைப் பற்றி ஏகோபித்து உளறிக்கொட்டி எழுதுவதை வெள்ளைமனதுடன் ஊக்குவித்துக்கொண்டிருக்கும் கல்யாணகுணங்கள் நிரம்பியவருமான பாலாஜி, ‘ராமசாமிக்கு இப்படியாகும் எனத் தெரிந்திருந்தால், அவரை நேற்று எனக்குப் பிடித்த சைனீஸ் ரெஸ்டாரெண்டுக்கு அழைத்துக்கொண்டு போயிருக்கவே மாட்டேன், பைசா வேஸ்ட், வம்பும் போச்சே!’ என்றார். மேலும், விக்கி விக்கி அழுதுகொண்டே “மின்னாடியே தெரிஞ்சிருந்தா, ‘போடா கர்வம் பிடிச்ச சுயமோகி முட்டாக்கூ தாயோளி! வோத்தா, ஒம் மூஞ்சிக்கு ஒரு ப்ளாக் தான் கேடு’ அப்டீன்னு மனசுல பட்டத சொல்லியிருப்பனே, கோபத்த அடக்கிக்கிட்டு பொறுமையா, சிரிச்ச மொகத்தோட இருந்திருக்க மாட்டனே!” என்று பிலாக்கணம் வைத்தார்.
இந்த நபருடன் இருந்த இன்னொரு சந்தேகாஸ்பதமான நபர் (பெயர் ரவிஷங்கர், வயது >> 100; இவரும் அந்த உணவகத்தில் கூடவே இருந்தாராம்!) ஆவேசமாகக் கேட்டார்: இந்த மரணத்துக்குக் காரணம் அந்த சைனீஸ் கடையில் உபயோகப்படுத்திய சிவப்பு மாவோ தானோ? அந்த சேப்பு ஸாஸ் கொழகொழாவ பாத்ததுமே நெனச்சேன்! ‘
அவர் மேலும் சொன்னார்: கம்யூனிஸ்ட்கள் ஒழிந்தால்தான் இந்தச் சைனீஸ் கடன்காரர்கள், நூடுல்ஸைச் சரியாகச் சமைப்பார்கள். அதனால் எல்லோரும் அன்டொனியோனி, ஆல்ட்மன், இனகாகி, ஈவன்ஸ்… என அகர வரிசையில் திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தால்தான் பா. ராகவன் தமிழ் டீவி ஸீரியல்களுக்குக் கதை எழுத முடியும். ஸ்டார்பக்ஸ்காரனின் எதியோப்பியக் காஃபியின் ருசியே தனி. ருவாண்டா காஃபி வேண்டா. யாருக்காவது அந்தக்காலப் பிரக்ஞையைப் பற்றிய பிரக்ஞை இருக்கிறதா? என் வீட்டு நாய்க்குட்டியோட கேர்ல் ஃப்ரெண்டோட ஓனர் வீட்டு அம்மணியின் ஒன்று விட்ட மாமா பையன் தான் அஃ பத்திரிகை நடத்திய பரந்தாமன். இவருடைய வீட்டுக்கு எதிர் வீட்டில் வசித்தவர் தான் சி.சு செல்லப்பாவின் அத்தை பையன். இவனுடைய பின்னாடி வீட்டில்தான் சுந்தர ராமசாமியின் சித்தப்பாவசித்தார். அவருக்குப் பக்கத்து வீட்டுக்காரர் தான் வைக்கம் மொஹெம்மத் பஷீர். ஆகவே ராமசாமியின் ஆத்மா சாந்தியடைவதாக. (ஆனால், சாந்திக்குப் பக்கத்துலதான் தேவி பேரடைஸ் தியேட்டர் இருக்கு இல்லியோ? ஓம் சாந்தி சாந்தி சாந்தி she.)
[அன்னாரது ஈமெய்ல் கிரியைகள், மாநகரமாம் பாஸ்டனில், சார்ல்ஸ் நதியோரத்திலுள்ள பூங்காவில் நடைபெறுகின்றன, அவசியம் வந்து செருப்பிக்கவும். நன்றி.]
-0-0-0-0-0-
உலகப் புகழ் பெற்ற ‘ஒத்திசைவு’ வெ. ராமசாமி அவர்களின் வீரதீரப் பராக்கிரமங்கள் அனைவரும் அறிந்ததே. சில வாரங்கள்முன் அவரை நேரில் சந்தித்து விரிவாக உரையாடும் சந்தர்ப்பம் வாய்த்தது. அச்சமயம், தமிழ்/தமிழகம் சார்ந்த பிரச்சினைகள் அத்தனைக்கும் அவர் ரெடிமேட் விடைகள் வைத்திருப்பதைப் பார்த்து அசந்துபோனேன். அவர் ஒரு புத்திசாலி அறிவுஜீவி. சிந்திக்கும் நபர். ஆனால், தமிழகத்தின் பிரச்சினை என்னவென்றால் புத்திசாலிகளை வெறுத்தொதுக்கும் போக்கு. அதனால்தான் அவர், அரவிந்தர் கண்ணையர் போல, அமெரிக்கா சென்றிருக்கவேண்டும்.
காலை 4.30 மணிக்கு உடற்பயிற்சிக்காக ஓடக் கிளம்பி – சுமார் 6.00 மணிக்குத் திரும்பி வந்திருக்கிறார்.
6.15: பத்ரிசேஷாத்ரி.இன் தளம் சென்றிருக்கிறார்.
6.30: மாரடைப்பு.
மாரடைப்பு ஏன்?
6.21க்கு அவர் சென்ற தளம்: http://www.sramakrishnan.com/?p=5812
பாவம் அவர். இப்படியொரு அதிர்ச்சியை அவர் இதுவரை அனுபவித்ததில்லை எனப் படுகிறது. இதனைப் படித்துவிட்டு தன் குறிப்பேட்டில் கீழ்கண்டவாறு கிறுக்கியிருக்கிறார்!
ஐயோ! எனக்கு வெட்கமாக இருக்கிறதே! நான் படித்த கல்லூரியிலா இந்த நிகழ்வு? ஐயகோ! மார் வலிக்குதேடா!
நவீண அலக்கியம் பற்றியாமே! இது இன்னாடா எளவு!!
அதுவும் எஸ்ரா பாணியில் ‘வியாழ கிழமை!’ ஓற்றெழுத்து எங்கேடா! இந்த அழகுல, சங்கமம் கூவான்களா, இப்டீ ‘கற்க கசடற’ அப்டீன்னு பெத்தபெயர் வெச்சுக்கினு, வொங்கம்மாள, இப்டியாடா தப்புத்தப்பா எள்துவீங்க??
ஏண்டா மணி அப்டீன்னு எள்தாம மணிக்கு அப்டீன்னிட்டு எள்தறீங்க, அடீங்! அப்டியே இர்ந்தாலும் கிழமையில், HSBல் அப்டீன்னிட்டாவது போட்ருக்கலாமேடா!
அடிப்பட தமிளே வொங்க்ளுக்கு எள்தவரல்ல, இந்த அழகுல வொங்களுக்கு ‘கற்க கசடற’தாண்டா கேடு! வோத்தா!
வொங்களோட தமிள்கொலைக்கு ஏத்தமாறீ வொங்களுக்கு ஒரு பேருரையாளர்டா, ஜமாய்ங்கடா!
டேய்…. [எதோ கெட்டவார்த்தை ஆனால் அவருடைய கையெழுத்து புரியவில்லை]
இதயெல்லாம் பாத்துக்கினு… அந்த வொம்மாச்சி [அரு… நரசி… என்பதுபோல எழுதியிருக்கிறார்; ஆனால் கையெழுத்து புரியவில்லை] ஆளெல்லாம் இன்னாடா பண்ணிக்கிட்டுருக்காங்க? தர்னா செய்யவோண்டாமாடா? ஆர்பாட்டம் பண்ணவோணாமா??
மத்த ஐஐடிகாரங்கள்ளாம் இன்னாடா பொத்திக்கினு… [புரியவில்லை]… ஆ! யெயற்கயே!! மார் வலிக்குதே!!!
&*^$#!
நன்றி.
October 27, 2016 at 17:21
😝😝😂😂😄😄
October 28, 2016 at 05:55
RIP :( finally he puts out of the misery.
October 28, 2016 at 14:29
மேற்கண்ட கட்டுரையில் இது ஒன்றுதான் ‘நம்பிக்கையூட்டும் செய்தி”
ஜெயலலிதா: அடுத்தவாரம் அம்மாஒத்திசைவு தளம் – வேர்ட்ப்ரெஸ், ப்ளாக்ஸ்பாட் போன்ற இடங்களில் தொடங்கப்படும். இவற்றுக்கு இலவச இணைப்பாக – @அம்மாஒத்திசைவு ட்விட்டர் அக்கவுண்ட் ஒன்றும் திறக்கப்படும்
October 28, 2016 at 19:02
Thank God ! I was shocked first . Excellent writing much to learn from you
Wish you long life
T P sampath
October 28, 2016 at 22:03
😂😂😂😂
October 29, 2016 at 18:59
This is just in!, your chellam is releasing his masterpiece “ஓற்றெழுத்து” in MIT next week.
Here is sneak peek of the book, all 18 chapters (is it correct ?).
Chapter 1:
க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்
Chapter 2:
ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்
and so on.
The sting is in the end, shockingly it has only on character, just three dots arranged in triangle form.
Think before considering charles river, it is really frigid!
October 29, 2016 at 19:38
Yo! You too suffering from too much time in your hands, yeah??
October 31, 2016 at 09:20
ஆனாலும் ஜெயமோகனுக்கு நீங்க செய்தது மஹா அந்நியாயம். வெளியாகி இருக்காதே தவிர கண்டிப்பா ட்ராஃப்ட் வெச்சிருப்பார். அவர் தளத்தை மானசீகமாகவாவது hack பண்ணி அதை வெளியிட்டிருக்கலாம். (அப்படியே இந்த ஐடியாவை மாமல்லனுக்கும் Forward பண்ணிட்டா அவரது குறையும் தீர்ந்துடும்) :-)
November 1, 2016 at 09:26
ஆ! அக்கப்போரில் கிடைக்கும் இன்பம்ஸ்!! :-)
வம்பே… இன்பம்!
எதிலே… இதிலே!
மாறாத, போரின்ப நீராடுவோம்!
…என்னைப் பொறுத்தவரை – இம்மாதிரி முஸ்தீபுகள் தவறேயல்ல. ஏனெனில் – பல பெரிய தினசரிகள் (எனக்குத் தெரிந்தே – டைம்ஸ் ஆஃப் இந்தியா, ந்யூயார்க் டைம்ஸ் உட்பட) இம்மாதிரி ரெடிமேட் நினைவுக் குறிப்புகள்/இரங்கல்கள் வகையறாக்களைத் தயாராகவே வைத்திருக்கின்றன. நானுமே என் செல்ல அரசியல்வாதிகளின் இறப்புக்குக் காத்துக்கொண்டிருக்கிறேன்! ஆனால் காலதேவன் தான் ஒத்துழைக்க மாட்டேனென்கிறான்! ;-)
ஆக, என் அனுமானம் என்னவென்றால் – அனைத்து செய்தி ஊடகங்களும் (தஹிந்துத்துவா உட்பட) இம்மாதிரி விஷயங்களைத் தயார் நிலையில் வைத்திருப்பவையே! ஹிலரி வந்தால் ஒன்று, டொனல்ட் வந்தால் ஒன்று என அமெரிக்க ஊடகங்களும் தயார் நிலையிலேயே இருக்கும் எனத்தான் நினைக்கிறேன் – அவர்களுடைய ‘எடிட்டோரியல்’ உட்பட…
என்னுடைய படு செல்லங்களில் ஒருவரான அரவிந்தர் கண்ணையனாரும் அப்படியேதான் படபடக்கக் காத்துக்கொண்டிருக்கிறார் என்றும் கூட மிகத் தைரியமாக அட்ச்சுவுடுவேன்.
நன்றி! ;-))
November 2, 2016 at 10:54
பிரமாதம் போங்கோ. கலக்கல் கற்பனை (சாத்திய உண்மை!!)
ஜெயமோகன் இதுக்கு மட்டுமா , generator வைத்திருக்கிறார் . சிரிப்பை நிறுத்த முடியவில்லை
November 5, 2016 at 18:15
கமல் ஹாசன்: அவரது மரணம் எனக்கு மிகுந்த வேதனை தருகிறது என்றாலும், “வேதனைப் படுவது மரணத்துக்குச் சமமானது” என ஜப்பானிய ஞானி சும்மாவோ அடிச்சுவுடுபா கூறியிருப்பதை நினைக்கும்போது, நான் வேதனைப்பட்டால் அதை மரணமாகக் கருதி வேறு யாராவது வேதனைப்படக்கூடும் எனத் தோன்றுவதனால் வேதனைப்பட வேண்டாம் என எண்ணினாலும், ஒருவரது மரணத்துக்குக் கூட வேதனைப்பட முடியவில்லையே என்று வேதனை வருகிறது என்பதால் அபிராமி, அபிராமி
:-)
November 5, 2016 at 20:09
யோவ் வேங்கடேசு! ஒண்டிக்கு ஒண்டி வர்ரியா? கொமட்ல குத்தட்டா??
ரொம்பத் துள்ளாத, வால வொட்ட நற்க்கிடுவேன்! :-)))
பிகு: ‘அபிராமி, அபிராமி’ விவகாரம் புரியவில்லையே நைய்னா! இன்னா கல்ச்சுரல் ரெஃபெரென்ஸ்பா அது?
பிபிகு: ஒரு பெரிய மனிதர் போய்ச் சேர்ந்ததற்கு அமைதியாக, துக்கம் சொட்ட, சளிவொழுக அஞ்சலி செலுத்தி நாலு நல்லவார்த்தை சொல்லாமல், கிண்டலாடா செய்கிறாய்! அதுவும் யெங்க ஜாங்கிரிக் கடை வொல்க நாய்கனைக் கூட சேத்திக்கினு! ட்டாஆஆஆய்ய்ய்ய்ய்ய்!!
November 5, 2016 at 20:45
அது ‘குணா’ படத்துல வர பேமஸ் சீன் சார்!
November 5, 2016 at 22:49
ஓ! சுவாமி!! பின் ராமசாமி பார்த்தான் வெளிச்சம்! :-)
October 31, 2017 at 15:21
[…] ஹ்ம்ம்ம்… இப்படியெல்லாம் என்னையும் அசிங்கப்படுத்திவிடுவார்கள் ;-) என்பதை நன்றாக அறிந்துதான், நான் எனக்கேஎனக்கான அஞ்சலிக் கட்டுரையை எழுதிக்கொண்டுவிட்டேன். யார் யார் எப்படி அஞ்சலி அகவுவார்கள் எனவும் அதில் விலாவாரியாக இயம்பியிருக்கிறேன். படித்து இன்புறவும்: ‘ஒத்திசைவு’ வெ. ராமசாமி ஒழிந்தார் … […]
February 11, 2018 at 06:43
[…] – எனக்கு நானே எழுதிக்கொண்ட அக்மார்க் அஞ்சலியைப் படிக்கவும். […]
July 31, 2018 at 16:30
[…] ‘ஒத்திசைவு’ வெ. ராமசாமி ஒழிந்தார்!27/10/2016 […]
October 19, 2019 at 09:38
[…] தரவேற்றியிருக்கிறேன். நன்றி. (‘ஒத்திசைவு’ வெ. ராமசாமி ஒழிந்தார்! […]
January 18, 2020 at 11:14
[…] நான் ஏற்கனவே இறந்துவிட்ட விஷயத்தை அவர்களுக்குத் தெரியப் […]
January 18, 2020 at 11:14
[…] நான் ஏற்கனவே இறந்துவிட்ட விஷயத்தை அவர்களுக்குத் தெரியப் […]
October 5, 2020 at 12:57
[…] கட்டுரைகளில், மிக முக்கியமான ஒன்று: ‘ஒத்திசைவு’ வெ. ராமசாமி ஒழிந்தார் […]
August 2, 2021 at 10:34
[…] ICYMI – my obit for myself: ‘ஒத்திசைவு’ வெ. ராமசாமி ஒழிந்தார்! […]