இயற்கை வேளாண்மையாமே? இன்னாபா அது? இஸ்டத்துக்கு அட்ச்சுவுட்றீங்கோ?
July 18, 2017
+ இலவச இணைப்பு: ஜெயமோகன் அவர்களுடைய எதிர்வினை குறித்து என்னுடைய நடுக்கங்கள் :-(
இதன் முதல் பகுதி: இயற்கை விவசாயம் எனும் பம்மாத்து, ஜெயமோகன், அடியேன், ஆகவே உதையேன் இன்னபிறர் ;-)
-0-0-0-0-0-0-
இப்படியாகத்தானே நான் ‘இயற்கை’ (அல்லது இசைக்கால் அல்லது நாடகக்குறி – அனைத்தும் நீண்டு தொங்கும் கேஸ்கள் + முத்தமிழ் எழவு வேறு) வேளாண்மை செய்து கொண்டேயிருக்கிறேன் என — என் செல்ல பசுமை விரும்பி விவசாயிகளுக்கும், இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை குயூபிக்கிள்களிலிருந்து கொண்டே வெறியுடன் ஆதரிக்கும் சககுமாஸ்தாக்களுக்கும், தொழில்முறை வாசகர்கடிதக்காரர்களுக்கும் மிக்க மரியாதையுடன் சொல்லிக் கொள்கிறேன்.
‘இயற்கை வேளாண்மை’ என்பது ஒரு ஆக்ஸிமொரான் – oxymoron – முன் வார்த்தைக்கும் இரண்டாம் வார்த்தைக்கும் ஒரு மசுத்துக்கும் தொடர்பில்லாத விஷயம். அதாவது விஷயமேயற்ற விஷயம். குறிப்பிடப் படுவதற்கும் சொல்லாடல்களுக்கும் தொடர்பேயற்ற குப்பைச் கருத்தாக்கம். திராவிடப் பகுத்தறிவு, கவிஞர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் ராமகிருஷ்ணன், இடதுசாரி அறிவுஜீவி, இனமானப் போராளி, அறிஞர் அண்ணா, விடுதலைச் சிறுத்தை, கழுதைப் புலி… … போன்றது. அதாவது – மொரான்களுக்காக, மொரான்களால் உருவாக்கப்பட்ட மொரான்களுடைய விஷயம். அவ்ளோதாம்பா! (mor on this later please!)
-0-0-0-0-0-0-
சரி. நானும் ‘இயற்கை’ வேளாண்மை எழவைச் செய்திருக்கிறேன். என் வூட்டுக்கார்ரும் கோர்ட்டுக்குப் போய்ர்க்காரு, மன்னிக்கவும்.
ஆனால் பிடி காட்டன், மரபணு மாற்றம், வீரியமிகு விதைகள், பூச்சிக்கொல்லி, ‘செயற்கை உரம்,’ பசுமைப் புரட்சி, அறிவியல், முன்னேற்றம் என்பதெற்கெல்லாம் எதிராக, பொத்தாம்பொதுவான மௌடீக வெறி நிலையை, போராளித்தனமான பேடித்தனத்தை எடுக்கவே மாட்டேன். அதேபோல அணுக்கரு சக்தி பற்றி ஒரு மசுத்தையும் அறிந்து கொள்ளாமல் அதனைக் கரித்துக்கொட்டுவதை வெறுப்பவனும் கூட.
தொழில்நுட்பங்களின், அறிவியலின் சகல சாத்தியக் கூறுகளையும் 1000% உபயோகித்துக்கொண்டு, பன்னாட்டு நிறுவனங்களின் மூலமாக நமக்குக் கிடைத்த வசதிகளையெல்லாம் உபயோகித்து மேன்மேலும் தங்களை அபிவிருத்தி செய்துகொண்டு – அதே சமயம், கயமையுடன் உலகமயமாக்கல்-ஐயகோ, கார்ப்பரேட் சதித்திட்டம்-சீ, தரகு முதலாளியம்-ஆ, அவன் வாழ்கிறான்-நான் தேய்கிறேன், விவசாயி-தற்கொலைகள், வறட்சி-பாரீர், விளைநிலங்கள்கபளீகரம்-பகீர், ‘கெமிக்கல்’ என்றெல்லாம் வதந்திகள் பல பரப்பி… இயற்கை, பாரம்பரியம், கலாச்சாரம் என்கிற பெயரில் அவற்றையும் ஒரு மசுத்துக்கும் ஆழ்ந்து புரிந்துகொள்ளாமல் பம்மாத்து செய்யும் கும்பல்கள் இனம் காணப்பட்டு இடக்கையால் புறந்தள்ளப்படவேண்டும். முடிந்தால் காலணிகளால் கன்னங்களில் கொஞ்சம் வேகத்துடன் தடவிக்கொடுக்கப்பட்டு வெளியே விரட்டப் படவேண்டும்!
ஏனெனில் நான் அறிவியலையும் தொழில் நுட்பத்தையும் – வெறும் ஏட்டளவோடு இல்லாமல் பயன்படுத்தியும் இருக்கிறேன். மேலும் மேற்கண்ட பலவகை தொழில் நுட்பங்களில் பலவற்றைப் பற்றி நமக்கு ஒரு பிரமிக்க வைக்கும் அறியாமை மட்டுமல்லாமல் ஒரு திகைக்கவைக்கும் பயமும் இருக்கிறது என்பதையும் அறிவேன்.பலர், இம்மாதிரி விஷயங்களை ஒரு மசுத்தையும் புரிந்துகொள்ளாமல் (அந்த க்ரீன்பீஸ் அமைப்பு உட்பட) அமோகமாக உளறிக் கொட்டியிருப்பதை அறிவேன். வேலைவெட்டியில்லாமல் பலர் தொடர்ந்து வெட்டிப் புரளிகளைக் கிளப்பி விடுவதை அறிவேன். பணம் வாங்கிக்கொண்டு குரைக்கும், அனுகூலங்களைப் பெற்றுக்கொண்டு ஒத்தூதும் போராளிகளை நமட்டுச் சிரிப்புடன் அவதானித்திருக்கிறேன்.
ஏனெனில் எந்தவொரு விஷயத்திலும் சாதக பாதகங்களுக்கும் இருக்கும் – ஆக அவற்றை அணுகுவதில் நமக்குச் சமனம் வேண்டும் என நினைப்பவன் நான். (ஆனால் முட்டாள் பெருமக்களை அணுகும்போது அப்படியல்லன்)
ஆகவே ஆர்கனிக் கீர்கனிக் என்றெல்லாம், பச்சை முண்டாசைக் கட்டிக்கொண்டு பம்மாத்து செய்யவில்லை.
ஆர்கனிக் இனார்கனிக் எனவெல்லாம் பிதற்றிக்கொண்டு இரண்டுமடங்கு மூன்று மடங்கு அதிக, அநியாய விலைக்கு நான் விளைவித்த ‘ஆர்கனிக்’ பொருட்களை பேராசையுடன் விற்கவில்லை.
என் காய்கறிகளைப் பெருந்தட்டு மக்கள், கண்ணைமூடிக்கொண்டு ரூபாய் நோட்டை விசிறியடித்து, நவநாகரீக ஹை ஃபேஷன்போல வாங்கிக்கொள்வதை நான் விரும்பியதில்லை. என் பிள்ளைகளுக்குச் சத்தான காய்கறிகள் கிடைக்கவேண்டும் என மட்டுமே விரும்பினேன்.
என் ஓபி (OP ஒபன் போல்லினேடட் – திறந்தவகை மகரந்தச் சேர்க்கையால் உருவான) விதைகளை ஐந்துகிராம் ஐம்பது ரூபாய் என்றெல்லாம் அடாவடியாக விற்கவேயில்லை. ஓசியில் தான் கொடுத்திருக்கிறேன். கொடுப்பேனும் கூட. (என்ன, நீங்கள் நான் கொடுத்த விதைகளை உபயோகிக்கவில்லையானால் அடுத்தமுறை என் வீட்டுப் பக்கமே வர விடமாட்டேன், அவ்வளவுதான்!)
மொட்டை மாடியில் ரெண்டு மிளகாய்ச் செடிகளைத் தொட்டியில் வைத்து அனுதினமும் இரண்டு தேக்கரண்டி தண்ணீர் விட்டு, சுற்றிச் சுற்றி வந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு ‘அறுவடை’ செய்யவில்லை அதனுடன் ஸெல்ஃபி எடுத்துக்கொள்ளவில்லை. பின்னர் இம்மாதிரியான வீரதீர பராக்கிரமப் பசுமைப் போராளித்தனத்தைப் பற்றி இணையத்தில் பதிவு போடவில்லை. நம்மாழ்வார் பேயாழ்வார் என பயபக்தியுடன் உச்சாடனம் செய்யவில்லை.
-0-0-0-0-0-
எந்த இயற்கை விஷயமுமே கெமிக்கல்களினால், தனிமங்களால் மட்டுமே ஆக்கப்பட்டுள்ளது. அந்த கெமிக்கல்களெல்லாம் உருவானதற்கு அணுக்கரு சக்தி++ ப்ரஹ்ம்மமே காரணம். வாழ்க அணுக்கரு சக்தி.
வேளாண்மை என்றாலே செயற்கைதான். அந்த ஆனானப்பட்ட(!) ஃபுகொகாவே சொன்னாலும் கூட இப்படித்தான் (அவரைப் பற்றி ஏகப்பட்ட விமர்சனம் இருக்கிறது எனக்கு. ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ எனும் களஞ்சியத்தைப் படித்துவிட்டு கண்சொருக மசுர்க்கூச்செறிந்துகொள்ளவெல்லாம் எனக்கு முடியாது)
இயற்கையைச் சிதைத்து மட்டுமேதான் எந்த வேளாண்மையையும் செய்யமுடியும்.
எந்த இடத்திலய்யா ‘இயற்கையாக’ வரிசை வரிசையாகச் செடிகளும் கொடிகளும் மரங்களும் தமக்குத் தாமே நட்டுக்கொள்கின்றன?
எப்போது விதைகளைச் சேகரித்து குறிப்பிட்ட சில தன்மைகளுக்காகவென சில குறிப்பிட்ட விதைகளை மட்டும் மானுடன் (அல்லது மானுஷி) தெரிவு செய்து அவற்றை மேம்படுத்தினானோ/ளோ அப்போதே வந்துவிட்டன ஜெனெடிக் மாட்யுலேஷன், ஸெலெக்ஷன்,வீரிய விதைகள் வகையறாக்கள் எல்லாம்.
நாம் சாப்பிடும் பொருட்களில் பெரும்பான்மை வேறெங்கேயோ உருவானவை. மிளகாய் தக்காளி பூண்டு உருளைக்கிழங்கு வெங்காயம் வெண்டைக்காய் எனப் பலப்பல வெளிநாட்டு விஷயங்களை நம் மூதாதையர்கள் (அவர்களுடைய இப்போதைய வழித்தோன்றல்கள் போலல்லாமல்) அரவணைத்து போஷகம் செய்து வந்ததால்தான் நாம் சாப்பாட்டையே சாப்பிடமுடிகிறது. மேலும் இட்டிலி சாம்பார் போன்ற சமையல் வகைகளும் தமிழகத்தைச் சார்ந்தனவேயல்ல. இதையெல்லாம் நாம் ‘இறக்குமதி’தான் செய்திருக்கிறோம். அதாவது உலகமயமாக்கல் என்பது அனாதிகாலம்தொட்டு நடந்து வரும் விஷயம். இதை எதிர்ப்பவர்கள் முட்டாள் குசுவாளர்கள் என்பது என் தெளிபு.
பல நவீன தொழில் நுட்பங்கள் பற்றி – ஒருமசுத்தையும் அறியாமலேயே நாம் அவைகள் மேல் காழ்ப்பு கொண்டிருக்கிறோம். ஏர், அணைக்கட்டு, பாசனம், களைக்கொத்தி போன்றவை எல்லாம் தொழில் நுட்பங்களே. விவசாயத்தில் ஈடுபட ஆள் கிடைக்க ததிங்கிணத்தோம் போடப்படும் இக்காலங்களில் இயந்திரங்களுக்கெதிரான ‘இயற்கை’ நிலையை முன்னெடுப்பது விவசாயத்துக்குச் செய்யும் துரோகம்.
வெளியிலிருந்து சாணியைக் கொணர்ந்து வயலில் கொட்டுவதும், தேவைமெனெக்கெட்டு ஆடுகளை வயலுக்குக் கொண்டுவந்து ஆட்டுக்கிடை போடுவதும் ‘இயற்கை’ விவசாயமல்ல – செயற்கை விவசாயம்தான்.
அதாவது நான் எந்த மசுருக்கு விவசாயம் செய்தாலும் அது செயற்கைதான். இதை இயற்கை என்று சொல்வதுபோன்ற பம்மாத்து வேறொன்றில்லை. கலாச்சாரம் பண்பாடு என்றெல்லாம் நாம் புல்லரிக்கச் சொல்வதெல்லாம் செயற்கை விஷயங்களே!
செயற்கையில் கிடைக்கும் மகோன்னத அழகுகளை நேர்மையாக ரசிக்க முடியாத அளவுக்கு நமக்கு மூளைகள் காயடிக்கப்பட்டிருப்பது மகா விசனம் தரும்விஷயம் தான்! :-(
இப்போது சில விஷயங்கள்:
எனக்குத் தோட்டவேலை ஒரு தியானமுறைதான் என்றாலும் – நான் பெரிய அளவில் தோட்டம் போட்டிருக்கும்போதும் ‘சரி, உன் பள்ளிக்கு மாதாந்திரக் காய்கறிக்காக 25000 ரூ தருகிறேன்’ என யாராவது வந்திருந்தால் தாராளமாக தோட்டவேலைக்குப் பதில் வேறேதாவது செய்திருப்பேன்.
‘எங்கள் ஏரோட்டம் நின்றால், உங்கள் காரோட்டம் என்னவாகும்‘ என்பதெல்லாம் உளறல். உங்களுக்குப் பிடித்தமானால் அதுவும் வேண்டுமானால் விவசாயம் செய்யுங்கள். இல்லாவிட்டால் வேறேதாவது செய்யுங்கள். நீங்கள் உங்கள் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் நின்றுவிடாது. உழந்தும் உழவே தலையல்ல. பாவம், திருவள்ளுவர். அந்தக் கால கெரகம்.
சந்தையில் ஒரு பொருள் விற்குமானால், அதற்கான உற்பத்தியிலும் மானுடம் ஈடுபடும். ஒரு விவசாயி போனால் இன்னொரு விவசாயாதவன் வருவான். அல்லது நூறு விவசாயி போனால் ஒரு மகாமகோ இயந்திரம் வரும். இதுதான் உலக நியதி.
மேலும் உலகம், நகரமயமாக்கலை நோக்கி நகர ஆரம்பித்துப் பல காலமாகி விட்டது. வரும் காலங்களில் மக்கள் மேலும்மேலும் விவசாயத்தை விட்டு வேறு வேலைகளுக்குச் செல்வர். அதேசமயம் விவசாய உற்பத்தியும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கும். பண்டைய காலங்களிலிருந்து மானுடத்தைத் தொழில் நுட்பம் கைவிட்டதேயில்லை. இனியும் கை விடாது. கவலை வேண்டேல்.
மற்றெல்லா விஷயங்களைப் போலவும் தொழில் நுட்பங்களிலும் சிலபல பிரச்சினைகள் எழும்பும்; ஆனால் அவற்றையெல்லாம் மண்டையில் அவ்வப்போது தட்டி, சரி செய்துகொள்வோம். ஆமென்.
ஆனால் வெற்றுப்போராளிகளின் மண்டையில் தட்டி சரிசெய்யமுடியாது. ஏனெனில் 1) உள்ளீடு இல்லாத காரணத்தால் மண்டை நசுங்கிவிடலாம் 2) உள்ளீடு இல்லாத காரணத்தால் அது டமார ஓசைகளை எழுப்பி அது ஒரு வகை போராளிஸ்தானி இசையாக உருவெடுக்கக்கூடிய அபாயங்கள் இருக்கின்றன. எச்சரிக்கை.
ஆகவே போராளிகளைக் கண்டாலே தூர விலகுவதோ அல்லது அவர்கள் கிட்டே வந்துகொண்டேயிருந்தால் உதைத்துப் பிரியாவிடை கொடுப்பதோ நன்று.
நன்றி.
மீண்டும் நன்றி.
-0-0-0-0-0-0-
July 18, 2017 at 14:14
“‘இயற்கை வேளாண்மை’ என்பது ஒரு ஆக்ஸிமொரான்”. WOW. Great explanation. ‘That light bulb moment’ for me sir. Slowly your posts made me being ‘suspicious on truthfulness’ of whatever I read or see. I am questioning myself whether there could be another angle of view. Please continue to write for readers like me.
July 18, 2017 at 14:17
அய்யோ அம்மணீ! கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். வாசகர் கடிதம் மட்டும் எழுதிவிடாதீர்கள்! ;-)
நன்றி.
July 18, 2017 at 14:25
Hi Sir – This is not வாசகர் கடிதம். This is just an acknowledgement that I agree with your content and I am enjoying and getting benefitted by reading your post. :)
July 18, 2017 at 16:12
அம்மணி ரஞ்சனி, நான் சரியாக எழுதியிருக்கவேண்டும்.
நீங்கள் பின்னூட்டமிட்டதைப் பற்றிச் சொல்லவில்லை. தாராளமாக எனக்கு முழு நரையாடல் ஆகும் வரை உரையாடலாம்.
ஆனால் – ஏதாவது ஏடாகூடமாக ஜெயமோகன் அவர்களுக்கு நீங்கள் வாசகர் கடிதம் (இப்பதிவு அல்லது என் தொடர்பாக) எழுதப் போய் அவர் என் வழுக்கை மண்டையை மேலும் உருட்டிப் புளகாங்கிதம் அடைந்துவிடுவாரோ என எனக்குப் பயமாக இருக்கிறது. ஒரு முன்னெச்சரிக்கையாக அப்படி எழுதினேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.
ஆக, என் கோரிக்கை – நானே எனக்கு வாசகர் கடிதங்களை அவ்வப்போது எழுதிக்கொண்டு அவற்றுக்கு விலாவாரியாக பதிலும் எழுதலாமென்றிருக்கிறேன்.
என் வழுக்கை மண்டை ஜாக்கிரதை என்பதை மட்டும் கருத்தில் கொள்ளவும். நன்றி.
பயபீதியுடன்:
__ரா.
July 18, 2017 at 15:35
Ram, ur writing style has rapped my brain !
neenga ‘kenji keatu kolgiren’ ezhudhuna kooda , en moolai
‘ konji keatu kolgiren’ apdinu padikudhu..
Sorry to Ranjani.. not to harm anyone :)
July 18, 2017 at 16:19
யோவ் லெனின்,
என்னை என்ன, சாருநிவேதிதா அவர்கள் என நினைத்து விட்டீர்களா? ;-)
அம்மணி, நான் இந்த ‘சந்தேகாஸ்பதமான முறையில் பின்னூட்டமிட்டுக்கொண்டிருக்கும் நபர்’ சார்பாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
தயவு செய்து யாரும் ஜெயமோகன் அவர்களிடம் எது தொடர்பாகவும் புகார் அளிக்கவேண்டாம். பதற்றமாக இருக்கிறது.
நன்றி.
July 18, 2017 at 16:27
when i proof- read my previous comment again a while ago , ilayaraj’a PONNUMANI movie song( nenjukulla innarunnu sonna theriuma ) was playing like this ; ‘konji konji pesuradhu kannil theriuma’ ; exactly the same moment when i read the word ‘Konji’ :)
July 18, 2017 at 16:30
@Ram, i never thought you would post my comment ! Ranjani sabam vida poranga :( … … romba paithiyam muthi poi, wife kita kooda pesama, unga kita pesitu iruken ..
July 18, 2017 at 16:34
No worries. Everyone is an adult and mature here. And everyone has a sense of humour too. I don’t think the young ma’am will bother too much – reading between the lines and between the words and between the letters. Relax. (normally I don’t edit comments at all – but in the past have deleted wholesale very hateful comments, that’s all)
All of us need course corrections all the time – in one way or the other. No exceptions. So.
July 19, 2017 at 13:52
love you :)
July 18, 2017 at 16:37
இந்தக் காட்சியைப் பாருங்கள். பார்த்தபிறகும் அடங்காவிட்டால் இந்தப் படத்துக்கான டிக்கெட் உங்களுக்குக் கூரியரில் அனுப்பப்படும் என்று நாட்டு மாடுகள் மற்றும் போராலிக் காலைகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கிறேன்.
இவண் எலுச்சித் தமிலர் படை.
July 18, 2017 at 18:53
அப்பப்பா.. புல்லரிக்கிறது. சீமானின் உடன்பிறப்பு போல!
July 19, 2017 at 05:53
ஆ! இனிய காலை இப்படி கொடிய காளையாக ஆரம்பிக்கிறதே!
இந்த ஜல்லியடித்துக்காட்டு மனிதர் யார் என்று தெரியவில்லை. நெட்டுருப்போட்டு ஒப்பிக்கும் திறன், உச்சாடனம் செய்து எச்சில் தெறிக்கப் பேசுவதில் இல்லை; உடல்மொழி பாவம். ஆக, இது mass அல்ல வெறும் ass தான்.
ஆனால் அவர் பின்னால் சிரிக்காமல் நிற்பதாக நடித்துக் கொண்டிருக்கும் ஜந்துக்களுக்கு கலைமாமணி பட்டங்கள் தரப் பரிந்துரைக்கிறேன்.
ஆனந்தம், உங்களுக்கு இருக்கிறது தண்டனை. ம்ம்ம் தொண்டனை.
July 19, 2017 at 16:15
இவர்தான் சமுத்திரக்கனியார். இயக்குநர், நடிகர். மற்றும் ஃபேஸ்புக் போராளி. ஆனால் சீமார் டைப் வீரப் போராளி அல்ல, புலம்பல் போராளி. (இவரது
தமிழன் விவசாயம் விட்ட புலம்பல் பதிவுகள் அவ்வப்போது முகநூலில் கண்ணில் படும்.) ஆனாலும் போராளி போராளிதானே? எந்நேரமும் அவர் கட்சி ஆரம்பித்து ப்ரொடஸ்ட் ஜந்துவை அவிழ்த்துவிடக்கூடும் என்று நடுநடுங்கிக்கொண்டிருக்கிறேன்.
July 19, 2017 at 16:30
ஒரு நெடுநாளைய சந்தேகம்: எப்போதுமே மொத்த உலகமும் தமிழனுக்கு எதிராக சதி செய்வதாகவும் தமிழன் சதியை சுவாசித்தே வாழ்வதுபோலவும் பீதி கிளப்பிக்கொண்டிருப்பது வெறும் நோயா paranoia?
August 14, 2017 at 01:21
உலகத்திலேயே ஏன் இந்த வேர்ல்ர்லேயே சிறந்த அறிவாளிகள் தமிழர்கள். அதன் காரணமாக நம்மை தனிநாடு அடைய விடமாட்டேன் என்கிறார்கள். இலுமினாட்டி எனும் கம்மினாட்டிகள் என்று சீமாரு சொன்னார்.
July 18, 2017 at 17:03
http://www.vinavu.com/2017/07/18/free-market-kills-potato-farmers/
may please see above link by VINAVU, you may kindly bring out the tricky fallacy on agricultural earnings and the the free market influence and the effect of கோதுமைக்கு மைய அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஆதார விலை ரூ.1,625/-. சந்தையில் விவசாயிக்குக் கிடைத்த விலை ரூ.1,400/-. ஒரு மூட்டைக்கு விவசாயிகள் அடைந்த நட்டம் 225 ரூபாய்.
July 18, 2017 at 21:31
ஐயோ! ஆனந்தம் சார்,என்னால் இந்த ஆனந்தத்தை தாங்க முடியவில்லையே!!.ராம் சாரை மாட்டோ மாட்டன மாட்டி-,சாரி தமிழ் நாட்டு மாடுகளால் முட்டோ முட்டுன முட்டி- தூக்கி எரிந்து விட்டீர்கள்!. இனி தலைகாட்டுவாரா பாப்போம்!
July 19, 2017 at 16:20
நீங்க வேறு! இனமானத் தலைவரின் கிவிதை அனுப்பிப் பார்த்தேன்.ராம் சார் அதற்கே பயப்படவில்லை. (தமிழன் நிஜமாகவே எதையும் தாங்கும் இதயம் பெற்று விட்டான் என்று மகிழ்வதா அல்லது சோற்றாலடித்த பிண்டமாகிவிட்டானே என்று புலம்புவதா?)
July 19, 2017 at 15:41
இடது சாரி ‘அறிவுஜிவி’ஆக்சிமோரான் அருமை!அவைகள் மனித ஜிவிகளே அல்ல.எந்த தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகளில் கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் பேசினாலும் ரெண்டாவது நிமிசத்தில் கட்டாயம் ‘பன்னாட்டு ,கார்பொரேட்’கம்பெனிகள் என்பான் .அதே கம்பெனிகள் தயாரித்த மருந்துகளை தின்று தங்கள் கிழட்டு தலைவர்கள் தொண்ணூறு ,நூறாண்டு வாழ்ந்து தொலைப்பதை நன்றிகெட்ட தனமாய் மறந்து விடுவார்கள்.
‘
July 20, 2017 at 19:59
[…] […]
August 12, 2017 at 18:28
சான்றோன்
August 12, 2017 at 18:35
?
August 14, 2017 at 15:43
https://twitter.com/alok_bhatt/status/896962991182069760 sir can u go through this and can deduce anything which can also be practised here.
August 16, 2017 at 18:25
இந்த ” இயற்கை விவசாயம் ” என்னும் வஸ்துவால் தமிழகம் முழுக்க மூளைச்சலவை செய்யப்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன்… சில மாதங்களுக்கு முன்பு இந்த நம்மாழ்வார் கும்பல்களின் ஜல்லியடியைப்பற்றி எழுதப்போக ஒரு கூட்டமே கிளம்பி வந்து என் மீது பாய்ந்துவிட்டார்கள்… நானும் சளைக்கவில்லை…. நவீன விவசாய முறைகளின் பின்னுள்ள அறிவியலைப்பற்றி பல பதிவுகள் விளக்கமாக எழுதினேன்…[ அடிப்படையில் நானும் ஒரு விவசாயி… எனவே இந்த பிரச்சாரங்களின் பின்னால் உள்ள அபத்தங்களை அறிவேன்…] ஒரு சிலராவது உண்மையை உணர்ந்திருந்தால் மகிழ்ச்சி…
August 16, 2017 at 20:14
அய்யா, நன்றி! எங்கே ரொம்ப நாட்களாகக் காணோமே என நினைத்துக்கொண்டிருந்தேன்! :-)