நம் ‘பொறியியல்’ கல்லூரிகள், அவற்றின் லட்சணம், ‘இலக்கியம்’ – சில குறிப்புகள்

February 20, 2017

ராம், திருவண்ணாமலை எச்கேபி, கல்லூரி எச்கேபிகருணா என்பவரால் நடத்தப்படுகிறது. இவர் திமுக சார்பினராக இருந்தாலும் நேர்மையானவர். எனக்கு அறிமுகமானவர். இலக்கிய ஆர்வலர். உங்கள் மதிப்புக்குரிய ஜெயமோகன் இவருடைய சிறுகதையை ரசித்து பரிந்துரை செஉதிருக்கிறார்.

அந்தக் கல்லூரிக்கெஇத்ரான உங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்விர்கள் என நம்புகிறேன்.

அய்யா அனாமதேயம்,  எனக்கு இந்த எச்கேபி கருணா அவர்களைப் பற்றி ஒன்றும் பெரிதாகத் தெரியாது. தெரிந்துகொள்ளும் ஆவலும் இல்லை. நேரமும்.

…எண்ணி நான்கு வரிகள் எழுதுகிறீர்கள் – அதற்குள் நான்கைந்து தவறுகள், தேவையா? :-(

சரி. இவர் பெயரில் கேபி இருப்பதனாலும் அந்தப் பெயரில் அந்தத் திருவண்ணாமலைக் கல்லூரி இருப்பதினாலும், ‘திமுக பிரமுகர்’ கு பிச்சாண்டி அவர்களுக்கு ஏதாவது உறவினராக இவர் இருக்கக்கூடும் எனப் புலனாய்வு செய்துகொள்கிறேன். அவ்வளவுதான். ஊகம் தவறாக இருந்தால் சொல்லவும், தாராளமாகத் திருத்திக்கொள்கிறேன், சரியா?

…ஆனால் – என்னுடைய கேள்விகள் இந்தத் தனிமனிதரைப் பற்றியில்லை. மேலும் அவர் பாவம், யாராக இருந்தாலும் அவருக்கு சர்வ நிச்சயமாக என் சான்றிதழும் தேவையில்லை. அவருடைய கடைக்கண் பார்வையும் எனக்கு அவசியமில்லை. இருந்தாலும், கல்வி களவு கலவி போன்றவை, இந்த எழவெடுத்த விஷயத்துடன் தொடர்புள்ளவை + மேலும் என்னுடைய முன்னாள் மாணவர்கள் இக்கல்லூரியினால் நேரடியாகப் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். ஆகவே.

எனக்கு இந்த விஷயம் தொடர்பாக – இவற்றைக் குறித்த கேள்விகள் சில முக்கியமானவை; அவை 1) கல்லூரியை நிர்மாணித்த நிதிக்கான ஊற்றுக்கண் பணம் எங்கிருந்து வந்தது? நேர்மையாக வழியிலா அல்லது திராவிடப் பாதையிலா? 2) கருப்புப் பணப் பரிமாற்றம் இதனால் ஊக்குவிக்கப்பட்டிருக்கிறதா? 3) ஒரு பொறியியல் கல்லூரியை அறிவியல் பூர்வமாகவும் நேர்மையாகவும் திறமையுடனும் நடத்த அடிப்படைத் தகுதிகள் இதனை நடத்துவோருக்கு இருக்கின்றனவா? 4) கல்வி+மாணவர் மீதான உண்மையான கரிசனம் அவர்களுக்கு இருக்கிறதா?  5) எதிர்காலத்திய சமூகத்தை நிர்மாணிக்கப் போகும் இளைஞர் குழாமுக்கு சரியான திசைகளைச் சுட்டும் அளவுக்கு ஒரு அடிப்படைப் பொறுப்புணர்ச்சியும் அறவிழுமியங்கள் சார்ந்த தகுதியும் அவர்களுக்கு இருக்கிறதா? 6) தொடர்ந்த மேன்மைப்படுத்தப் படல் என்பது இதில் சாத்தியமா? 7) இதன் ஆசிரியர் குழாமின் தரம் என்ன? 8) என்னவிதமான ஆராய்ச்சிகள் அங்கு செய்யப்படுகின்றன? 9) ஏட்டறிவுக்கு அப்பாற்பட்டு என்னென்ன விஷயங்கள் அங்கு போதிக்கப்படமட்டும் செய்யாமல், உண்மையாகவே பொறுப்பாளர்களால் கடைப்பிடிக்கப் படுகின்றன? 10) இக்கல்லூரியின் கணக்குவழக்குகள் தொடர்பான விஷயங்கள் நேர்மையாகவும் அனைவருக்கும் தெரியும்படியான பொதுச்சபையிலும் வைக்கும் தைரியமும், ‘மடியில் கனம் இல்லாத தன்மையும்’ அதனை நடத்துபவர்களுக்கு இருக்கின்றனவா?

… …போன்றவை சம்பந்தப் பட்டவை.

இவற்றில் ஒன்று கோணலாக இருந்தாலும் கோரம். அதுவும் முதலாவது சரியில்லை என்றால், மகாகோரம். ஆனால் இக்கேள்விகளுக்கான பதிலை அவரிடமிருந்தோ உங்களிடமிருந்தோ எதிர்பார்க்கவில்லை, சரியா? அவரவருக்கு அவரவர் வழி. அவர்களுடைய மனச்சாட்சிக்கு அவரவர் பதில்கள், சப்பைக் கட்டல்கள்.

என்ன சொல்லவருகிறேன் என்றால் – இதே திருவண்ணாமலையில் ‘அக்கால பஸ் கண்டக்டராக இருந்து ஆச்சரியம் கொடுக்கும் வகையில் டகீலென்று இக்காலக் கல்வித்தந்தையான’ மேதகு எவ வேலு அவர்களில் கல்லூரி ஒன்றும் இருக்கிறது – அருணை கல்லூரி.

இந்தக் கல்லூரியில் ஒரு ‘குண்டோதிகுண்டு மாணவர் மன்றம்’ ஒன்று நடத்தப்பட்டு – போயும் போயும் இசுடாலிர் அவர்கள் இதற்கு அழைக்கவும் பட்டு ஒரு கோமாளித்தனமான அரைவேக்காட்டு மேடைப்பேச்சு ஒன்றும் அவரால் அளிக்கப்பட்டது. சோகம்.

மகாமகோ குண்டோதிகுண்டு மாணவர் மன்றம்: சில குறிப்புகள் 16/09/2015

இப்பதிவைப் படித்து –  – தமிழகக் கல்வியின் சீர்கேடுகளுக்கு ஆரம்பத்தையும் முடிவையும் அழுதுகொண்டே இறும்பூதடையுங்கள். இப்படி அமோகமாகக் கல்வியைப் பற்றி உளறிக் கொட்டியிருக்கும் இந்த இசுடாலிர் அவர்கள், எதிர்காலத்தில் ஒரு முதலையமைச்சராகலாம் என்ற சாத்தியக் கூறு, ஒரு தாங்கொணாக் கொடுமைதான்!

எது எப்படியோ, இம்மாதிரியான நகைக்கத்தக்க வழி நடத்தல்கள், இந்த எஸ்கேபி கல்லூரியில் இல்லாமல் இருந்தால் சரி.

-0-0-0-0-0-

…ஆனால், இலக்கியம் என்பது வேறு. கலை சார்ந்த எந்தவொரு விஷயத்துக்கும் அது வெளிப்பட்டவுடன் தனியாக உயிர் வந்துவிடுகிறது. அது அபூர்வமாகவும் அழகாகவும்  விசும்புவெளியில் மிதக்கிறது. அதனைப் புரிந்துகொண்டவனுக்கும் அதற்குமான உரையாடலாகிவிடுகிறது அது.

ஆகவே நிற்க, இலக்கியத்துக்கும் நேர்மைக்கும் சம்பந்தமில்லை; படு அயோக்கியர்கள் எழுதிய அற்புதமான கதைகளை நான் படித்திருக்கிறேன். பரம யோக்கியர்கள் எழுதிய திராபைக் கதைகளையும் கடித்துத் துப்பியிருக்கிறேன். ஆகவே கண்டதையும் முடிச்சுப்போடுதல் சரியல்ல.

எது எப்படியோ – இவர் கதையை நான் படித்ததாக நினைவில்லை. இக்காலங்களில் இளம் எழுத்தாளர்கள் எழுதும் கதைகள் அருகே செல்வதற்கே கொஞ்சம் பயமாக இருக்கிறது, ஒரே மோஸ்தரில் எழுதி பேக்கேஜ் செய்து பரிமாறிவிடுகிறார்கள்; ஆன்மாவை ஜேப்படி செய்கிறார்கள்; கற்பனைக்கும் அசைபோடல்களுக்கும் இடமே கொடுக்காமல் போதனை செய்துவிடுகிறார்கள்; இருந்தாலும் நீங்கள் சொல்கிறீர்கள் என்பதால், மேலும் ஜெயமோகன் அவர்களின் இலக்கிய மதிப்பீடுகள் குறித்தும் எனக்கு மிகுந்த மரியாதை இருப்பதால் – அதனைத் தேடிப்பிடித்து படிக்கமுயல்கிறேன். (அதற்கான சுட்டி கிடைத்தால் பார்க்கலாம்)

…உங்கள் கவனத்துக்கு: ஜெயமோகன் அவர்கள் தளத்தில், நீங்கள் சொன்னீர்களே எனத் தேடினேன் – ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை.
screenshot-from-2017-02-20-203353
அவர் ஏதேனும் புனைபெயரில் எழுதுகிறாரா? அல்லது நீங்கள்தான்  அவர் பெயரைச் சரியாக எழுதவில்லையா? ஏன் இப்படிச் சிரத்தையேயில்லாமல் செய்திகளைப் பரிமாறுகிறீர்கள்? என் நேரத்தையும் ஏன் வீணாக்குகிறீர்கள்? சலிப்பாக இருக்கிறது.

-0-0-0-0-0-

சரி. இந்தக் கல்லூரியில் படித்துவிட்டு ‘தகுந்த’ வேலையில்லாமல் இருந்த இரண்டு பாவப்பட்ட வாலிபர்களை நேரடியாக அறிந்திருக்கிறேன். அவர்கள் டொனேஷன் வகையறா (ரசீது இல்லாமல், ஆகவே கருப்புப்பணம்) கொடுத்ததாகத்தான் சொன்னார்கள். அதுவும் அப்பனின் வயக்காட்டை விற்றுவிட்டு, இப்படி! இதில் ஒருவன் பாண்டிச்சேரி மளிகைக்கடை ஒன்றில் இப்போது கணக்கு  எழுதிக்கொண்டிருக்கிறான் எனக் கேள்விப்படுகிறேன் – ஒருமுறை இவன் என்னிடம், தன் ஆசிரியர்களின் தரத்தைப் பற்றியும் கல்லூரியின் அழகு பற்றியும் அழுதிருக்கிறான், பாவம் (இரண்டுமூன்று வருடங்களுக்கு முன்னால்). ஆனால், எப்படியும் இவன் பெரிதாகக் கஞ்சினீயரிங் கற்றுக்கொண்டதாக எனக்குப் படவில்லை. ஓழுங்காக கூட்டத்தெரியுமோ இல்லை அந்தத் திறனையும் அந்தக் கல்லூரி மழுங்கடித்து ஒழித்துவிட்டதோ என்பதும் தெரியவில்லை, பாவம்.

ஆனால் – ஆயிரக்கணக்கான மாணவர்கள் அக்கல்லூரியிலிருந்து வெளிவரும்போது – இரண்டு உதாரணங்களை மட்டும் வைத்துக்கொண்டு கதையை விரிப்பதும் சரியில்லை.

இருந்தாலும், இந்தப் பணவிவகாரத்தைப் பற்றிக் கொஞ்சம் ஹோம்வர்க் செய்துவிட்டு அக்கல்லூரியின் ரிஷிமூலம் நிதிமூலம் பற்றி அறிந்துகொண்டு (திருவண்ணாமலை விடுதலைச்’சிறுத்தை’ ஒருவரை மிக நன்றாக அறிவேன், ஆனால்  அவருடன் பேசி நாளாகி விட்டது, ஆக, இதை முகாந்திரமாக வைத்துப் பேசலாமோ என்ன எழவோ!) உண்மைகளை ஊர்ஜிதம் செய்துவிட்டு, முடிந்தால், அதுவும் அவசியமானால் எழுதுகிறேன்.

ஆனால், இதையெல்லாம் நோண்ட அயர்வாகவே இருக்கிறது. நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. படிப்பதற்கும் குறிப்புகள் எழுதுவதற்கும் நிறையவே இருக்கின்றன….பார்க்கலாம், தனியார் பொறியியல் கல்லூரிகள் குறித்த என்னுடைய அடிப்படை அவநம்பிக்கை – இந்தக் கல்லூரியைப் பற்றிய மேலதிக, நல்ல, உருப்படியான விஷயங்கள் தெரியவரும்போது மறுபரிசீலனை செய்யப் படவேண்டிய காலம் வந்தால்,  எனக்கேகூட அது நல்லதுதானே?

-0-0-0-0-0-

எல்லாம் சரி அய்யா, உங்களை எனக்கு மிக நன்றாகவே தெரியும் என்றாலும், நீங்கள் ஏன் அனாமதேயமாகப் பின்னூட்டமிடுகிறீர்கள்? பயமா? அல்லது ‘திமுகவினராக இருந்தாலும்’ என எழுதவேண்டிய அவசியத்தால் ஏற்படும் ஒரு இயல்பான அசிங்கவுணர்ச்சியா?

நன்றி.

4 Responses to “நம் ‘பொறியியல்’ கல்லூரிகள், அவற்றின் லட்சணம், ‘இலக்கியம்’ – சில குறிப்புகள்”

 1. Anonymous Says:

  http://www.jeyamohan.in/19566#.WKsguEkqOeU

  எஸ்.கெ.பி கருணா என்று தேடினால் கிடைத்திருக்கும்…


  • அய்யா, நன்றி.

   முதற்குற்றம் புரிந்து எனக்கு இந்தப் பின்னூட்டத்தை அனுப்பிய நபர் – எச்கேபிகருணா – என இந்த மனிதர் பெயரைக் குறிப்பிட்டிருந்தார் – ஆகவே தடம்புரண்டுவிட்டேன். ஹெச் என எச் எனும் எஸ் எழவைப் புரிந்து கொண்டுவிட்டேன். நம் உச்சரிப்புத் தமிழின் கேடு, வேறெண்ண சொள்ள, மண்ணிக்கவும்.

   இன்னொரு நண்பரும் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்: “நிற்க. நீங்கள் ஜெயமோகனது தளத்துல் ”எச்கேபி கருணா” என்று தேடியிருக்கிறீர்கள். அவர் பெயர் எஸ்.கே.பி கருணா. ஒருவேளை திரு.கு.பிச்சாண்டியின் மகனாக இருக்கக்கூடும். அதை மறைக்கும்விதமாகக்கூட எஸ்.கே.பி என்ற இனிஷியல்கள் இருக்கலாம்.”

   “மற்ற கல்வித்தந்தைகளையும் போல பொறியியல்கல்லூரியுடன் கூட ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளியும் பன்னாட்டுப் பள்ளியும் உள்ளதாக தெரிகிறது. (ஆனால் ஜேப்பியாரை எல்லாம் எட்ட இவர் இன்னும் பல ஜென்மம் எடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன்)”

   உங்கள் இருவருக்கும் நன்றி.

   1. ஜெயமோகன் அவர்கள் பரிந்துரைத்த சுட்டிக்குச் சென்று படித்தேன். முதலில் நான் அது சிறுகதையாக இருந்துவிடுமோ எனக் கொஞ்சம் பயந்துவிட்டேன். அடிவயிற்றில் கலக்கமான இருந்தது. ஆனால் – அது நான் எழுதுவதைப்(!) போலத்தான் இருக்கிறது. Very pedestrian. விவரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் ஒரு கதையாடலாகக் கூட இருக்கலாம்.

   2. ஆனால், இம்மாதிரியான பின்புலத்தில் சுந்தர ராமசாமி அவர்கள் ஒரு க்ளிப்தமான சிறுகதையை எழுதியிருக்கிறார்; அதில், பேருந்தில் அடுத்தடுத்து அமர்ந்திருக்கும் இருவரில் ஒருவர், கைதாங்கி (அல்லது கைப்பிடிக்காக) விஷயம் பற்றி அல்லல்படுவதை, வாய்க்கால் சண்டையை, மிக அழகாக கொஞ்சம் சுயகிண்டல் தன்மையுடன் எழுதியிருக்கிறார் (அதன் தலைப்பு எனக்கு மறந்துவிட்டது)

   3. இதுதான் சராசரித்தனத்துக்கும் இலக்கியத்துக்கும் உள்ள வித்தியாசம்.

   4. அவர் கு. பிச்சாண்டி அவர்களின் உறவினராக இருந்தாலும் கூட, திராவிடப் பாரம்பரியத்தில்(!) மையம் கொண்டிருந்தாலுமேகூட – எனக்கு ‘மீட்சி’ என்ற விஷயத்தில் நம்பிக்கை இருக்கிறது. பிரம்மராஜனும் நினைவுக்கு வருகிறார்.

   5. ஏனெனில் என்னிடமும் எனக்கு அவ்வப்போது பிடிக்காத விஷயங்கள் இருக்கின்றன – இவற்றில் சில, கிண்டலும் கேலியும் செய்யும் தன்மை. அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கழற்றிவிட முயற்சி செய்து கொண்டிருக்கிறேன், மீண்டு கொண்டிருக்கிறேன். எனக்கும் மீட்சி உண்டு.

   5. ஆகவே, திராவிடர்களுக்குமே கூட redemption விவகாரம் சாத்தியம்தான். இந்த EsCaPee கருணா அவர்கள், திராவிட விடத்திலிருந்து ஏஸ்கேப் ஆகித் தப்பித்து ஏதாவது உருப்படியாகச் செய்வார் (செய்கிறார்?) என்பதும் ஒரு சாத்தியக் கூறுதான். The non-dravidian world is full of incredibly enlightening, soul-uplifiting & (non-corrupt) possibilities; but the only thing is that one should be able to rise above all the fuckin’ morass and escape the shit that the dravidianism stands for as a first principle of its existence. Amen.

   இப்போதைக்கு இவ்வளவுதான். சமையலை ஆரம்பிக்கவேண்டும். பின்னர் நாளெல்லாம் தோட்டவேலை இருக்கிறது. :-)

   நன்றி.


 2. […] ஒத்திசைவு ராமசாமி குறிப்பு 2 […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s