…ஔரங்கசீப் புராணம்

July 10, 2016

முதலில் சிலபல விஷயங்களைத் தெளிவுபடுத்திவிடவேண்டும்:  ஔரங்கசீப் எனப் பொதுவாக அறியப்படுபவர் மலினமான, சீப் உற்பத்தி சீனாக்கார சாமான்*.

(*நீங்கள் நினைப்பது சரியே!)

…மாறாக, ஔரங்ககாஸ்ட்லி என்பார்  ஜெர்மன் தொழில் நுட்பமும் நுணுக்கமும் சார்ந்த ஒரு அதியுன்னத வகையறா. ஆகவே ரொம்ப தாஸ்தி காஸ்ட்லி. தரம் உயர்ந்தவர். இப்படி இருந்தாலும், இந்த ஔரங்ககாஸ்ட்லியார், நம் வரலாற்றில் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்படுவதன் காரணம் என்ன? இதற்கும் காரணம் ஹிந்துத்துவாவா? அல்லது ஹிந்துத்துவரமாட்டேன்போவா?

ஆக, ஒரு ஆற்றாமை காரணமாகத்தான் இந்தத் தொழில் நுட்பக் குறிப்பு.

…ஆகவே, ஔரங்கசீப்பை  வாழைக்காய் சீப்புடனோ அல்லது தலைவாரும் சீப்புடனோ ஒப்பிட்டால்மட்டுமே நம்மால் மொகலாய் பராட்டாவை ருசித்துச் சாப்பிடமுடியும். அதனையும் முள்கரண்டிகளை உபயோகிக்காமல், #இடக்கையால் உண்டால், உங்களுக்குச்  சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். நன்றி.

கருத்துப் படம்: மொகலாய் பராட்டா

கருத்துப் படம்: மொகலாய் பராட்டா

சரி, விஷயத்துக்கு வருகிறேன். நம் நெடிய நெடியைக் கிளப்பும் பொறம்போக்கு இலக்கியப் பாரம்பரியத்தில் இரண்டு விதமான மனிதர்கள்(!) முக்கியமாக இருக்கின்றனர்.

1) சோட்டா எழுத்தாளர்கள்

2) சோட்டா விமர்சகர்கள்

இவர்கள் எழுதிக்குவித்து, விமர்சித்து விமர்சித்து, தத்தம் முயற்சியில் மனம் தளராமல், பரிணாம வீழ்ச்சியடைந்து – ஆகவே, உயிர்மை பதிப்பகத்தால்  ஊக்குவிக்கப்பட்டும் கொக்கிவிக்கப்பட்டும் முறையே சீழ்கண்டவர்களாக ஆகிறார்கள் என்பது தமிழத் தலைவிதி.

1) சோப்ளாங்கி எழுத்தாளர்கள்

2) சோப்ளாங்கி விமர்சகர்கள்

மேற்கண்ட கட்சியினர்கள் கொள்கைக்கூட்டணி வைத்து பாவப்பட்ட, பைசா கொடுத்து பைசாசங்களை வாங்கும் முட்டாக்கூ வாசகர்களான நம்மைப் போன்றவர்களை, ரவுண்டுகட்டிக்கொண்டு அட்ச்சு, கடிச்சிக்குதறி, சின்னாபின்னமாக்கிவிடுகிறார்கள்.

இதனைக் கேட்பாரே இல்லையா? :-((((

இதனால்தான் ஔரங்கசீப்நாமா மகத்தான #எஸ்ரா அவர்களால் #இடக்கை சுட்டிப் பொருள் விளக்கி எழுதப்பட்டுள்ளது! நன்றி #எஸ்ரா!! வாழ்க நீ எஸ்ராமான்!!!

-0-0-0-0-0-0-0-

டிஸ்க்ளெய்மர்: இப்போது மேற்கண்ட இருவகையினரைப் பற்றி மேலதிகமாக எழுதப் போவதில்லை. இருந்தாலும்…

…தனிப்பட்ட முறையில் என் அன்புக்கும் மரியாதைக்குமுரிய #எஸ்ரா அவர்கள், தம்முடைய சொந்தத் தளத்தில் சூனியம் வைத்துக்கொண்டு,  ‘க.வை.பழனிச்சாமி’ என்பவர் எழுதியிருக்கும் ஒரு இடக்கு விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் உள்ள சிலபல பகுதிகளை என்னுடைய சிலபல குறிப்புகளுடன், என் மகத்தான வேலைப்பளு(!)க்களுக்கிடையில் உங்களுக்கு அளிப்பதில் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். (குறிப்பு: ‘தனிப்பட்ட முறையில் அவரை எனக்குப் பிடிக்கும்’ என்பது அரசியல்சரி ரீதியான  பொய்மைப் போங்காட்டம்; ஒரு அழகான ஃப்ராட். நானும் இப்படி ஃப்ராட் மயமானதில் எனக்கு மகிழ்ச்சியே!)

-0-0-0-0-0-0-0-

அப்பனே! ஆளிவாயா!! பழனியாண்டவா!!! அனாதரட்சகா!!!! ஆபத்பாந்தவா!!!!! கோமணேஸ்வரா!!!!!! பழநிச்சாமி!!!!!!! … அய்யா, கோவை ஞானி… :-((( உங்களில் யாராவது என்னை உடனே தடுத்தாட்கொண்டு காப்பாற்ற முடியுமா? ப்ளீஸ்??

எஸ்ராவும் பழனிச்சாமியும் என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறார்கள்? நான் ஏன் இப்படியாகிவிட்டேன்?

ங்கோத்தா, தாங்கமிடீலயேடா! …ஏண்டா இப்படியெல்லாம் எழுதறாங்க! அத்தையெல்லாம், தேவைமெனெக்கெட்டு ஏண்டா நான் படிக்கிறேன்?? :-((

இந்தப் பழனிச்சாமிக் கட்டுரையினால் எனக்கு அலைஅலையாக, அடுக்கடுக்காகப் பிரச்சினைகள்!

ஈஸ்வரா! இந்த வாசகவிமர்சகக் குளுவானாருக்கும் ஒற்றெழுத்து/மெய்யெழுத்து பற்றாககுறை போலு! தாக முடியலியே! என செவது! :-((

போதாத குறைக்கு, பத்திக்கு ஒருமுறை பணாலென்று அதிர்கிறார், இந்த பழனிச்சாமி – அதாவது, எஸ்ரா, பாத்திரங்கள், நாவல் என அனைத்தும் அதிர்கின்றன. பேரா பேராவாக அதிர்கின்றன. எனக்குமே மிக அதிர்ச்சியாக, அதிர்ச்சிமேல் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த அடுக்கடுக்கான அதிர்ச்சிகள்தாம் என்னை இப்படி எழுதவைத்துவிட்டன. மன்னிக்கவும்!

அதற்கு மேல், இந்த பழனிச்சாமிய-எஸ்ராவிய கட்டுரை முழுவதிலும் படுமோசமான, விட்டேறித்தனமான இலக்கணப் பிழைகள்.  எழுதிய அரைகுறை  அசிங்கங்களை ஒருதடவை சரிபார்த்தாலே தெரிந்துவிடுமே, இந்த அமெச்சூர்த்தனம் – ஆனால் எஸ்ரா தளத்தில்தானே தன் கட்டுரைஎழவு மறுபதிப்பாக வரப்போகிறது, பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டார் போலும்! :-(

தீரா நதி எழவு சஞ்சிகையை எப்பவாவது படிக்கும் பழக்கம் எனக்கு இருக்கிறது. ஆனால் இக்கட்டுரை அங்கு முதலில் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது என்பது எனக்கு மகாமகோ அதிர்ச்சியைத் தருகிறது. இனிமேல் தீராநதி பக்கமே போகப்போவதில்லை. அப்பாடா!

-0-0-0-0-0-0-0-

மேற்கொண்டு ஆவறவேலயப் பாக்கலாம், சரியா?

பழனிச்சாமி எழுதுகிறார்:

>> மறைக்கப்பட்ட பிரதேசத்தின் மீது வெளிச்சமாகப் படிகிறது ‘இடக்கை’

டேய் வாசகா, ங்மொம்மாள, #எடக்கையையா படிக்கறே? அய்யய்யோ!

மொதல்ல, ரெண்டுமூணு ஜட்டிய  டைட்டா போட்டுக்கினு வாடா!  அல்லாகாட்டி அசிங்கமாப் பூடப்போவுது… ஆசிரியரோட இடக்கை, ஏமாந்தா எங்கினாச்சும் போய் என்னவெல்லாமோ பண்ணும்போலக்கீதேடா! இனிமேக்காட்டீ காத்தாட, சொவம்மா இர்க்கவேமுட்யாதாடா, இந்த எலக்கியவாதிங்கோ இப்டீ இவ்ளோ வக்கிரம்புட்ச்சவ்ங்க்ளா கீறாங்களேடா! இப்போ நாம்போ இன்னாடா பண்ணப்போறோம்…   :-(

எலக்கியத்துக்கு அம்பேல்னிட்டு, ஓடிப் பூட்லாமா? :-((
>> பாத்திரங்கள் குமிழ்களாகத் தோன்றி அதிர்கின்றன.
சரவணா ஸ்டோர்ஸ்ல பாத்திரம் ஸைஸ்ல ஏமாத்தறமாரீக்கீதே! பெருஸ்ஸா காம்ச்சுட்டு, சன்னமான எவேர்சில்வேற் பாத்திர சாமானை குமிழ் சைஸ்ல விக்கறமாரீயாடா இது? அது ஏண்டா அதிரணும்? பிர்யல்லியேடா!
>> கதைகளால் நிரம்பி வழிகிறது நாவல்.

மேம்போக்காக #டெம்ப்லேட் வகை வழிவதெல்லாம் தான் #எஸ்ரா நாவல். ஒப்புக்கொள்கிறேன்.

அல்லது இதுஒருமாதிரி மவாபாரதம், ராம்போயணம் மாரீ கதை, வில்லம்பு கஸ்மாலம் அல்லாத்தையும் வெச்சிக்கினு சண்டே போட்ற மாதிரி நாவலோ? பிர்யலியே!

Screenshot from 2016-07-10 18:00:29

#இடக்கைக் கதைகள்
>> நாவலில் கதை ஒரு சாக்குதான்.

உண்மை. இன்னொரு உண்மையைச் சொல்லப்போனால், #எஸ்ரா அவர்களின் நாவல்களைப் பற்றிய இப்படிப்பட்ட ரத்தினச்சுருக்கமான விமர்சனத்தை நான் இதுவரை படித்ததேயில்லை.

கீழ்கண்ட கருத்துப்படம், இனிவரப்போகும் எண்ணற்ற #எஸ்ராவல் கதைகளைச் சித்திரிக்கிறது, நன்றி.

Screenshot from 2016-07-10 10:28:50
…மேற்கண்ட இந்த ஆவணக்கோமணப் படம் எஸ்ரா அவர்கள் வீட்டில் எடுத்தது. #பிறப்புமூப்புஅரைவேக்காடு

கீழ்கண்ட படம், உயிர்மை பதிப்பக #எஸ்ரா புத்தகங்களுக்கான கோடவுன்.

Screenshot from 2016-07-10 10:31:20
இவ்வரிய புகைப்படத்தில், மேலே, என்னைப்போலவே அதிக நெற்றிப்புர ரியல்எஸ்டேட்டுடன் இருப்பவர் எஸ்ரா, கீழே இருப்பவர் மனுஷ்யபுத்திரன். #உழைப்பில்லாமல்இலக்கியம்இல்லை #பொருத்தமானஜோடி

என்போன்ற  எண்ணிறந்த போக்கத்த வாசகர்களுக்கு ஒரு அறிவுரை: வுட்றா ஜூட்!

ஜூட் போலே #எஸ்ரா காதே…

>> தாஸ்தவெஸ்கி கரம்சேவ் சகோதரர்கள் நாவலில் கடவுளின் இடத்தை அறியத்துடித்தது போன்ற அதிர்வோடு விரிகிறது ‘இடக்கை’.
…கரம்சேவின் மச்சான் காராசேவ். புஜியாசேவ் அவன் மனைவி. சேவ் என்றால் சேமி. ஆனால் சேமியா என்றால் சேவியா அல்ல. மன்னிக்கவும். சேமியா, உப்புமாபாண்டவம் கிண்ட எஸ்ராவால் உபயோகப்படுத்தப்பட்ட சமாச்சாரம். இடக்கையாலும் கரம்சேவை எடுத்துக் கொறிக்கலாம். இதையும் நான் அதிர்வோடுதான் துடித்துக்கொண்டே விரிக்கிறேன்.
>> அணையாத இந்த நெருப்பு பற்றி எரிய வாசகனும் படைபாளியும் கதை நீரில் நனைந்துகொண்டேயிருக்கிறார்கள்.

ஆ! எப்டீயெல்லாம் எள்தறாங்கடா, ஓட்டல்ல ரூம்புபோட்டு ரோசிப்பாங்களோ? மகா வொளறலாக்கீதேடா?

கவித்துவம் அப்டீஇப்டீன்னிட்டு இப்டியாடா அட்ச்சுவுடுவாங்க?

வொங்க அணையாத நெருப்போட தலேல தண்ணி பக்கெட்டெ கவுத்துக்கொட்ட!

>> சமூக வாழ்வியல் பரப்பைத்தான் சமத்காரமாக தனக்கே உரிய மொழியில் பேசுகிறார் ராமகிருஷ்ணன். சொல்முறை அழகியல் இவரது தனித்த மொழி.

அபடியா என? நீக சொலுக நாக கேடுகறோ. ஆள வுடுக.  (#எஸ்ரா அவர்களின் சொல்முறைஎழவியலில்தான் இந்த வரி எழுதப்பட்டுள்ளது!)

எல்லாம் சரி… இந்த WordOrder Beautyism சொல்றாங்களே, அதுதானா சார் இந்த சொல்முறை அழகியல்ண்றது? பிர்யலையே நைனா… :-(

>> ‘இடக்கை’ நாவலில் எது வாயில்? நாவலின் திறப்பு எங்கே இருக்கிறது? தூமகேதுதான் நாவலின் வாயில்.
எந்தெந்த எழவை எந்தெந்த வாசகன் சாப்பிட்டுக்கொண்டு இந்த எழவைப் படிக்கிறானோ அதுதான் அவன் வாயில் இருக்கும், இதென்ன கேள்வி?

திறப்பு கீழேதான். ஜிப் ஒன்று கீழே உங்கள் கால்சராயில் இருக்குமே? குனிந்து பார்த்துக்கொள்ளவும். நன்றி.

ஆனால் பாவம் தூமகேது, அவன் நாவலின் வாயில் வசமாக மாட்டிக்கொண்டுவிட்டான் என பழனிச்சாமி அவர்கள் குறிப்பிடுகிறார்.

ஆக, ஏதோ என்னால் முடிந்தது – இந்த எழவெடுத்த இடக்கை நாவலிடம், தூமகேதுவைத் துப்பித் தொலைக்க ஒரு விண்ணப்பம் வைப்பதுதான். :-(
>> கடவுளின் செவியில் கொட்டிய பல்லாயிரம் மக்களின் வலிமிகுந்த வார்த்தைகள் முடிவில்லாதவெளியில் இன்றும் பயணித்துக்கொண்டேயிருக்கின்றன.
அப்போது, கடவுளின் காது ஓட்டை! இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட்டார், கடவுள்! ஆனாலும் இது ஓவர் கவித்துவம்தான்!

எஸ்ரா என்றாலே கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு, இந்த ப்ளடி கடவுளுக்கு என்ன துக்கிரித்தனம்!

>> நாவல் முழுவதும் மக்கள் பிஷாடனின் சொற்களால் மடிந்த வண்ணம் இருக்கிறார்கள்.
நாமும் தான். சொல்லப்போனால், தமிழகத்தின் மக்கட்தொகை ஏறாமல் இருக்கப் போவதற்கு  #எஸ்ரா அவர்களும் ஒரு காரணமாக இருக்கப்போகிறார்! நன்றி, எஸ்ரா! :-)
>> இறுதியில் எல்லாப் பாத்திரங்களும் வெற்றிடத்தில் ஓசையற்று மடிந்து போகின்றன.
அதனால்தான் சொன்னேன். கொஞ்சம் விலை அதிகமென்றாலும், கிண்ணென்று ஜெர்மன் பாத்திரங்களை வாங்கினால், இந்தப் பிரச்சினையெல்லாம் இருக்காது. வெற்றிடத்தில் வெட்டியாக மடிந்து போவதெல்லாம் நடக்காது.
>> கதைகளின் அடுக்குகளில் வாசகன் பல முறை ஏறி இறங்கி வாழ்வின் மறைவெளிகளைப் பார்த்து திகைக்கிறான்.
அக்ஷரத்துக்கு லக்ஷம் பொன் என்று சொல்வார்களே! அது இதற்குத்தானோ. எவ்வளவு அருமையாகச் சொல்லிவிட்டார் இந்த பழனிச்சாமியென நானும் திகைக்கிறேன்! ஆனால் பாத்திரம் என்றாலே அடுக்குகள் எனவும் விரியுமே எனவும் எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.
Screenshot from 2016-07-10 21:14:25
கருத்துப்படம்: பாத்திர அடுக்கு
>> ஒளரங்கசீப் என்ற மாமன்னன் தனிமையில் புலம்புகிற உரையாடலை ராமகிருஷ்ணன் போன்ற படைப்பாளியால்தான் எழுத முடிகிறது
ஏன், நான் மட்டும் புலம்பவில்லையா? நான் ஒரு படைப்பாளியாக இல்லாவிட்டாலுமே கூட, நான்  புலம்புவதைப் பற்றி நானே தொடர்ந்து எழுதுவதில்லையா? ஏன், இந்தப் பதிவே ஒரு புலம்பலில்லையா?  என்னய்யா சொல்லவருகிறீர், திருவாளர் பழனிச்சாமி?
>> ”குற்றத்தின் நிழலில் வாழும்போது சிரிப்பது ஒன்றுதான் ஆறுதலானது” என்கிறார் ராமகிருஷ்ணன்.

இடக்கை படிப்பது (=படித்தது) ஒரு குற்றம்தான். ஒப்புக் கொள்கிறேன்! அதனால் தான் சிரிக்கிறேன். எஸ்ரா, உங்களுடைய நுணுக்கமான நகைச்சுவை உணர்ச்சி எனக்குத் தொடர்ந்து பல அதிர்வுகளைத் தனக்குத்தானே, தந்தானே தானே தனத் தந்தானே…

நன்றி எஸ்ரா!

எலா புகழு எராவுகே பதிவுக:

8 Responses to “…ஔரங்கசீப் புராணம்”

  1. hema Says:

    துரத்தும் வேலைச்சுமையின் நடுவிலும், வாரத்தின் முதல் நாள் மனம் விட்டு சிரிக்க வைத்திருக்கும் உங்களுக்கு நன்றி. ​

    hema

  2. senthil Says:

    thanks a lot . actually very funny . lol

  3. Rajagopalan J Says:

    Dear Ram,
    I am not able to control tears rolling. My lunch time is spoiled because of you. My whole office is looking at me as if i am gone mad.
    Such meaningless jilebi critics are actually becoming the allergic agents for the new entrants of tamil literature.

    regards,
    Rajagopalan J,
    chennai

  4. Sivakumar Viswanathan Says:

    அந்த திறப்புக்கு வெளியே அப்படி என்னதான் இருந்திருக்கும்? எல்லோரும் அதிர்ந்துகொண்டே யிருக்கிறார்கள். “தூமகேது வழியாகத் திறக்கப்படுகிற ஜன்னலுக்கு வெளியேதான்ஒளரங்கசீப், அஜ்யா, பிஷாடன், நளா, மெஹருணிச்சா, சம்பு எனப் பலரும் அதிர்கிறார்கள்”. ஒருவேளை அந்த சாக்கு மூட்டை குடோனாக இருக்குமோ?


    • அது எப்படி?

      அய்யா, அதிர்ச்சியோடு அதிராதீர்கள். முதிர்ச்சியோடு முந்திரிக்கொட்டைபோல முந்துங்கள்.

      கீழ்கண்ட விஸ்தாரமான குறிப்பு, உங்களுக்காக மட்டுமே கொடுக்கப்படுகிறது:

      முதலில் தூமகேதுவின் உடலில் ஜன்னல் சைஸுக்கு ஒரு ஓட்டைபோட்டு பின்னர் அதில் ஒரு ஜன்னலைப் பதிக்கவேண்டும். அது மைக்ரோஸாஃப்ட் விண்டோஸ் ஆக இருத்தல் நலம். பின்னர் அதன் காமெட் செக் ஷனை, கவனிக்கவும் காமெண்ட் செக் ஷனையல்ல, ஒழித்துவிடவேண்டும். ஆக, தூமகேது ஒழிந்துவிடுவான். ஜனகணமன. அந்த ஜன்னல் இப்போது ரத்தக் களறியாக இருக்குமாதலால், தூமகேதுவின் பூதவுடலுடன் அதனையும் கடாசிவிடவும்.

      பின்னர் அந்தப் பக்கம் அதிராமல் போய்ப் பார்த்தால் அது அதிராம்பட்டினம். அங்கே அது வெறும் ஒரு வெறும் சாக்குமூட்டைக் குடோனாக இருந்தால், அனைவரும் தும்மிக் கொண்டிருப்பார்கள் அல்லவா. அதனால்தான் ஆங்கே ஒரு ட்ரேம்போலின். அனைவரும் அதன்மேல் குதித்துக்கொண்டிருக்கிறார்கள். கும்மியடிக்கிறார்கள். அதனால் தான் அப்படியொரு அதிர்வு. எஸ்ரா அவர்கள் எனக்குப் பிரத்தியேகமாகக் கொடுத்திருக்கும் ரகசியசெய்தியின் சாராம்சம்தான் மேற்கண்டது.

      அய்யா, உங்களுக்குக் கற்பனை வளம் தேவை. வேண்டுமானால் அதனை நயம்விலையில் ஒரு பார்ஸல் அனுப்புகிறேன்.

      ஆனால் ஒரு விண்ணப்பம்: தயவு செய்து இடக்கை படிக்கும் தவற்றினை மட்டும் இந்த ஜென்மத்தில் செய்திவிடாதீர்!

      நன்றி.

      • Anonymous Says:

        ஐயகோ, புனைவு அபுனைவு என்று அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்த நான் கேபு… (கேடுகெட்ட புனைவு) என்ற சொல்லாடலில் (word dancing) சிக்கி தவிக்கிறேன். ஐயன்மீர் உங்களின் ஆற்றலின் ஊற்றுக்கண் மீது என் ஒரு கண்ணை வைத்து உற்று நோக்கியத்தில் ஆற்றாமை மட்டும் மிஞ்சியது. ஆனால் அந்த ஆமை ridley ஆமையோ அல்லது இட்லி ஆமையோ அல்லது மாவையோ குறிப்பிடலாம். என் தலை இப்போது அதிர ஆரம்பித்து விட்டது. ட்ரம்ஸ் சிவமணி காருதான் உய்விக்கவேண்டும். அல்லது காசிமேடு ஆசிமோவ்தான்…. காப்பாற்றவேண்டும்… 5, 4, 3, 2, 1, ….ஐயகோ, புனைவு அபுனைவு என்று அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்த நான் கேபு… (கேடுகெட்ட புனைவு) என்ற சொல்லாடலில் (word dancing) சிக்கி தவிக்கிறேன். ஐயன்மீர் உங்களின் ஆற்றலின் ஊற்றுக்கண் மீது என் ஒரு கண்ணை வைத்து உற்று நோக்கியத்தில் ஆற்றாமை மட்டும் மிஞ்சியது. ஆனால் அந்த ஆமை ridley ஆமையோ அல்லது இட்லி ஆமையோ அல்லது மாவையோ குறிப்பிடலாம். என் தலை இப்போது அதிர ஆரம்பித்து விட்டது. ட்ரம்ஸ் சிவமணி காருதான் உய்விக்கவேண்டும். அல்லது காசிமேடு ஆசிமோவ்தான்…. காப்பாற்றவேண்டும்… 5, 4, 3, 2, 1, ….


      • >> ஆற்றாமை மட்டும் மிஞ்சியது.

        ஆற்று ஆமைகளா? இது என்னடாப்பா ஒரு புது riddle என அதிர்ந்துவிட்டேன். முதலில் காய்ந்திருக்கும் மண்டையில் மேலதிகக் கற்புடை ஓவாழ் எண்ணையைத் (extra virgin olive oil) தடவிக்கொள்ளவேண்டும். அதிர்ச்சி வைத்தியத்தைத் தவிர எனக்கு வேறு வழியேயில்லை.

        … ஆமைகளெல்லாம் ஆக்சூலி உள்ளங்கள். அதிலுள்ள உண்மைகளெல்லாம் ஊமைகள். முதலில் இதனைத் தெரிந்துதெளிந்து, பின்னர் ஒருமுறைக்கு இருமுறை அதே பின்னூட்டத்தை காப்பிபேஸ்ட் செய்வதைத் தவிர்க்கலாம். ஒருகால், நீவிரும் எஸ்ராவலால் கதிகலங்கிவிட்டீரோ?

        ஆலிவ் எண்ணை(number) வார்த்துச் சுடும் (shooting) தோசைகளளவு உங்களுக்கு இட்லிகள் பயனளிக்குமோ என்று தெரியவில்லை.

        எல்லாம் வல்ல இறைவன் தான் நம்மைக் காப்பாற்றவேண்டும். :-(

      • Sivakumar Viswanathan Says:

        இரு முறை ஒரே பதிவு தவறுதலாக…. மேலும் பெயரில்லாமல்… அடுத்த முறை கவனமற்ற ஈர்ப்புத் தீர்மானத்தை தள்ளி வைக்காமல் பார்த்துக்கொள்கிறேன் . நீங்கள் ஒரு பலே கில்லாடிதான். சிரித்து மாளவில்லை.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s