நுனிப்புல்மேயர், நெகிழ்வாலஜிஸ்ட் எஸ்ரா அவர்களிடம் பாவப்பட்ட ஜீவன்களான ஐன்ஷ்டீன் + தாஸ்தயெவ்ஸ்கி படும்பாடு :-(

March 25, 2017

#நம்ப​_எஸ்ராடா

…தமிழகத்து எழுத்தாளப் பெருமகனார்கள் பலப்பலருக்கு இயல்பாகவே இருக்கும் சாபக்கேடு – இந்த நுனிப்புல் மேய்ந்து மட்டுமே, முடிந்தால் – அதிலும் அந்த நுனிகளின் உலர்ந்தமொண்ணை விளிம்புகளை நக்கிக்கொண்டு மட்டுமே மினுக்கிக் கொண்டலைவது. இந்த நெடிய பாரம்பரியத்தின் காரணமாக – ஏதோ ரெண்டு சுட்டிகள் இணையத்தில் எந்த எழவைப் பற்றியோ இருக்கின்றன எனக் குத்துமதிப்பாகவே கூக்ள்மதிப்பாகவோ தெரிந்துகொண்டதும் உடனே அதனை ஈயடிச்சான் காப்பியடித்து அதனுடன் மானேதேனே எனக் கலந்துகட்டி இஷ்டத்துக்கு டர்புர்ரென்று ஜென் கன் டின் பன் என ஜாங்கிரி ரீல் சுற்றி ஒரு அரைவேக்காட்டுச் சோற்றை அடுப்பிலேற்றியிறக்கி, அதனைச் கஞ்சியுடன் சுடச்சுடத் தமிழர்களின் சொட்டைத்தலைகளில் கவிழ்த்தி விடுவார்கள். ஆ! எங்கிருந்தோ சுடச்சுடச் சுட்ட சூடான கஞ்சி. சாவுக் கெராக்கிகள். #வோத்தாடேய்!

தமிழக எழுத்தாளர்களின் தலைநகர் நுனுப்புல்லூர். அதன் தற்போதைய சர்வாதிகார மேயர் மேதகு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் என்பதில் எனக்கு ஐயமேயில்லை. நன்றி.

இந்த நுனிப்புல்லாலஜி கட்அண்ட்பேஸ்டாலஜி ஜோதியில் ஐக்கியமாக, எம்டிஎம் போன்ற படிப்பாளிகளும் சந்தோஷமாக ஒத்துழைப்பது, என்னுடைய மாளா ஆச்சரியங்களில் ஒன்று. ஒருவேளை இந்த எம்டிஎம் போன்றவர்கள், அலுத்துப்போய் – தமிழ்க் கூவான்களுக்கு இதுபோதும் என நினைத்துவிட்டார்கள் போலும் என்று சப்பைக்கட்டுமுதல்வாதமாக நினைப்பதற்குள்ளேயே, அவர் தன்னுடைய(!) ஆங்கில எழுத்துகளிலும் இப்படி ‘தடுத்தாட்கொண்டிருப்பது’ நினைவுக்கு வந்து தொலைக்கிறது. :-(

ஆக, இம்மாதிரி சகதிகளுக்குள் போகாமல் – பொதுவாக, படிப்பாளிகள் இப்படி உல்ட்டாபுல்ட்டா செய்தால், இனிமேல் அக்காரியங்களுக்குக் காரணமாக, வாசகர் தரத்தைத்தான் சுட்டிக்காட்டப் போகிறேன். ஏனெனில் படிப்பாளிகளும் அறிவாளிகளும் ப்ளாஸ்டிக்வாளிகளும் இயல்பாகவே போற்றத் தக்கவர்கள். நன்றி. ஏனெனில் அரைப்ளாஸ்டிக்வாளிகள் என்பவை குறைகுடங்களோ அரைகுடங்களோ அல்ல – முன்னவைகள் பாலிமர் சமாச்சாரங்கள், பின்னவை உலோகக் கலவைகள். +நன்றி. …மாறாக, ஒரு சராசரி வாசகன், அதுவும் தமிழச் சராசரி வாசகன் ஒரு முட்டாக்கூ. போங்கடா.

இந்த மேயருக்குக் கீ​ஈஈஈஈஈ​….ழே நூற்றெட்டாவது அடுக்கில் இருக்க யுவகிருஷ்ணா, அதிஷா போன்ற விகட வித்துவான்களும் ‘த ஹிந்து’ தினசொறியர்களும் போட்டிபோட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் நான் சொல்லிவிடவேண்டும். +நன்றி.

-0-0-0-0-0-0-


அய்யா ‘தோக்கியோ’ புகழ் எஸ்ரா அவர்களே, அந்தப் பாவப்பட்ட விஞ்ஞானி ஐன்ஷ்டீன் அவர்களை விட்டுவிடவும். அவர் ஐன்ஸ்டீன் அல்லர், ஐன்ஷ்டீன் என்பதை அறியவும்.அவர் உங்களுக்கு ஒரு கொடுமையையும் செய்யாதபோது, நீங்கள் மட்டும் அவருக்கு இப்படியெல்லாம் படுகோர தண்டனை தரலாமா? அவர் ஒரு தமிழராக இருந்திருந்தாலும் பரவாயில்லை – நீங்கள் எழுதுவதையெல்லாம் படிக்கும் தமிழ் முட்டாக்கூவான்களுக்கு, வழக்கமாகவே நீங்கள் தரும் தண்டனையாக — மேன்மேலும் நீங்கள் நெகிழ்வாலஜிக் கட்டுரைகளை எழுதி அவர்களைப் படிக்கவைப்பதைச் செய்யலாம்.

ஆனால் அவர் பாவம், எனக்குத் தெரிந்து பலவருடங்கள் முன்னமே செத்துப்போய்விட்டார். அதாவது உங்கள் புகழ்மாலைகளைப் பெற்றுக்கொண்டு வெட்கத்துடன் சிரிக்கும் பேறு பெறாமலேயே போய்ச் சேர்ந்துவிட்டார். மேலும் அவருக்குத் தமிழும் தெரிந்திருக்கவில்லை.

நிலைமை இப்படி இருக்கையிலே, நீங்கள் ஏன் அவரைப் புரட்டியடித்து கும்மாங்குத்து குத்துகிறீர்?

அண்மையில் ​நீங்கள் எழுதியிருக்கும் ‘ஐன்ஸ்டீன் கடிதங்கள்‘  கட்டுரையைப் படித்துவிட்டுப் புளகாங்கிதமடைந்துதான் இப்படிச் சொல்கிறேன். :-(

இப்பிடி என் ரத்த அழுத்தத்த ஏத்தறீங்களேப்பா! :-(

-0-0-0-0-0-0-

வணக்கத்துக்குரிய நுனிப்புல்லூர் மேயர் சார் அவர்களுக்கு,

உங்கள் கட்டுரை பற்றிய என் காட்டுரையை எங்கு ஆரம்பித்து எங்கு முடிப்பது என்று தெரியவில்லை, ஆகவே, முதலிலிருந்து கடைசி வரை ஒருமுறைக்கு இரண்டு முறை உங்களுடைய பிதற்றலைப் படித்துவிட்டு, தரவுகளுடன் மேலே எழுதுகிறேன்:

… தீவிர வாசிப்பில் ஈடுபாடு கொண்ட ஐன்ஸ்டீன் தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளை விரும்பிப் படித்தார். அவரது புகழ்பெற்ற மேற்கோள்

“Dostoevsky gives me more than any scientist“

முதலில் நீங்கள் ஒர்ரேயடியாக அட்ச்சுவிட்ட ‘தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளை விரும்பிப் படித்தார்’ எனப் பொதுப்படையான வெற்று விஷயத்தை, நேரில் பார்த்ததுபோல் எழுதியிருப்பதை விட்டுவிருகிறேன்; பாவப்பட்ட ஐன்ஷ்டீன் அவர்கள் ‘கரமஸொவ் சகோதரர்கள்’ புத்தகத்தைத் தவிர வேறெந்த தாஸ்தாயெவ்ஸ்கி புத்தகத்தையும் படித்ததாகக் குறிப்புகளில் இல்லை.

சரி. இப்போது அந்த அரைகுறைத்தனமான ஆங்கில மேற்கோளுக்கு வரலாம்; அய்யா, புரிந்துகொள்ளுங்கள் – எந்த விஷயத்தையும் – இடம் தேசம் காலம் வர்த்தமானம் போன்ற விஷயங்கள் மூலமே புரிந்துகொள்ளமுடியும். ஆனால் நீங்கள் #நம்ப_எஸ்ராடா! :-(

இந்த மேற்கோளின் பின்புலம் இது:

1910களின் இறுதியில் ஐன்ஷ்டீன் அவர்கள், பல்வேறு மனவுளைச்சல்களில் அல்லாடிக்கொண்டிருந்தார் – ஆக அவர் ஆசுவாசத்திற்காக  — கரமஸொவ் சகோதரர்கள், டான் க்விஹோட்டெ போன்ற சிலபல புத்தகங்களை ஆழ்ந்து மறுபடியும் மறுபடியும் படித்துக்கொண்டிருந்தார். அச்சமயம் சொன்னது தான் இது…

…1921 வாக்கில் அலெக்ஸாண்டர் மாஸ்கொவ்ஸ்கி எனும் போலந்து தேசத்து எழுத்தாளர்/அறிஞர், ஐன்ஷ்டீன் அவர்களின் சரிதை ஒன்றை எழுதியிருக்கிறார். ஐன்ஷ்டீன் அவர்களின் தத்துவப்பார்வை, அழகியல் நோக்கு, நவீனமயமாக்கல் உருவாக்கும் பிரச்சினைகள் குறித்த கருத்துகள் போன்றவற்றை (மட்டும்) உள்ளடக்கிய புத்தகமிது. (Einstein, the searcher : his work explained from dialogues with Einstein – ஆர்கைவ்.ஆர்க் தளத்தில் இப்புத்தகம் கிடைக்கிறது )

“…if you ask in whom I am most interested at present, I must answer Dostoevsky – Dostoevsky gives me more than any scientist, more than Gauss…”
தாஸ்தயெவ்ஸ்கி சொன்னதாக மாஸ்கொவ்ஸ்கி எழுதியுள்ள​ இதனை நான் குத்துமதிப்பாக மொழிமாற்றினால் – ‘…இப்போது நான், ​யாரிடம் ஈடுபாட்டுடன் இருக்கிறேன்  என்று கேட்பீர்களானால் – நான் தாஸ்தாயெவ்ஸ்கி எனத்தான் சொல்லவேண்டும் – எனக்கு எந்தவொரு அறிவியலறிஞரை விடவும் தாஸ்தாயெவ்ஸ்கி அதிகமாக வழங்குகிறார், கௌஸ்-ஐ விட அதிகமாக…

ஆனால், இந்த மேற்கோளை முழுவதும் சுட்டாமல் பொத்தாம் பொதுவாக ‘Dostoevsky gives me more than any scientist’ எனச் சொன்னால்? அது அயோக்கியத்தனம்தானே?

சரி. நான் எஸ்ரா அவர்களுடைய எழுத்துகளைப் பற்றி (நெஞ்சறிந்து) இப்படிச் சொல்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள்:

“மிகமிக சோகமான தளர்ந்த செயலூக்கமற்ற தருணங்களில், எனக்கு நானே உத்வேகம் கொடுத்துக்கொள்ள நான் படிப்பது எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் ஸீரியஸ்ஸான எழுத்துக்களையே! எஸ். ராமகிருஷ்ணன் என்னை ஏமாற்றியதே கிடையாது. ஏனெனில் சோர்ந்த சமயங்களில், இவரைப் படிக்க ஆரம்பித்தவுடன் பக்கத்துப் பக்கம், ஏன், வரிக்கு வரி எக்காளச் சிரிப்புதான். எள்ளி நகையாடல்தான். உலகமே சுற்றிச்சுற்றித் தட்டாமாலையடித்துச் சிரித்துக்கொண்டிருக்கும். அப்படிப்பட்ட நகைக்கத்தக்க எழுத்துகளைத் தொடர்ந்து டன் கணக்கில் எழுதுபவர் இவர்.
இந்த, மேற்கண்ட பத்தியில் இருந்து ஒரு பகுதியை வெட்டி ஒரு குளுவான் இப்படி எழுதுகிறது என வைத்துக்கொள்ளுங்கள்…
“…என் பேராசான் ‘ஒத்திசைவு’ வெ. ராமசாமி, அவருடைய பேராசானான எஸ்ரா அவர்களைச் சிலாகித்து இப்படி எழுதியிருக்கிறார்:
மிகமிக சோகமான தளர்ந்த செயலூக்கமற்ற தருணங்களில், எனக்கு நானே உத்வேகம் கொடுத்துக்கொள்ள நான் படிப்பது எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் ஸீரியஸ்ஸான எழுத்துக்களையே! எஸ். ராமகிருஷ்ணன் என்னை ஏமாற்றியதே கிடையாது.
#நம்ப​_எஸ்ராடா

பலப்பல அறிஞர்களின் கருத்துப்போல – ஐன்ஷ்டீன் மூன்றே மூன்று முறைதான் கரமம்ஸொவ் புத்தகம் பற்றிச் சொல்லியிருக்கிறார். சிலாகித்துப் பேசியிருக்கிறார். ஆனால் மேதையான கௌஸ் பற்றிப் பல்லாயிரக்கணக்கான முறை பேசியிருக்கிறார். (பார்க்க: Einstein and Soviet Ideology – இது மிக அழகான புத்தகம்; ஐன்ஷ்டீனும் தாஸ்தாயெவ்ஸ்கியும் என ஒரு அத்தியாயமே இருக்கிறது இதில்…)

அறிவியலையும் புனைவிலக்கியத்தையும் பற்றி அவர் ஒருபோதும் இது பெருசு அது சின்னது என்கிற விடலைத்தனமான ரீதியில் பேசவேயில்லை. மாறாக – அப்படி எளிமைப்படுத்துவதைத் தவறு என்கிறார். அததற்கு அதனதன் தளங்கள் உள்ளன என்கிறார், அவ்வளவுதான்.

ஆனால் எஸ்ரா அவர்களின் தருக்கவாதம் இப்படி விரியலாம்:
 1. நான் தாஸ்தாயெவ்ஸ்கி பற்றி மாங்குமாங்கென்று எழுதிப் பூரிக்கிறேன். அவரிடமிருந்து பல படிப்பினைகளைப் பெற்றுள்ளேன்.
 2. ஐன்ஷ்டீனும் அப்படியே.
 3. ஆகவே, நான் மற்ற விஞ்ஞானிகளை விட உயர்ந்தவன்.
 4. அதுமட்டுமல்ல. நான் தாஸ்தயெவ்ஸ்கி தரத்துக்கு எழுதுபவன். ஏனெனில் நான், அவரைப் பற்றிப் போற்றிப் புகழ்ந்து எழுதுபவன். பேசுபவன்.
 5. ஆகவே, என்னிடமிருந்து  ஐன்ஷ்டீன் கற்றுக்கொள்ளவேண்டியதும் நிறைய.
 6. ஆகவே, நான் எழுதுவதைப் படிக்கும் எந்த வாசகரும், அறிவியலாளர்களிடமிருந்து அறிவியலைக் கற்றுக்கொள்வதை விட, என்னிடமிருந்து நவீன அறிவியலைக் கற்றுக் கொள்ளலாம்.
ஆ! *&^#%!

எனக்கும் கரமஸொவ் சகோதரர்கள் பிடிக்கும். ஆனால் என் பேராசானுக்கும் அது பிடித்திருக்கிறது. இந்த பகீர் விஷயத்தை எப்படிப் புரிந்துகொள்வது எனத் தெரியவில்லை. ஹ்ம்ம்ம்… என் தலைவிதிதான் என்னை இப்படி ஆட்டுவிக்கிறது.

-0-0-0-0-0-0-0-
ஐன்ஸ்டீன் தஸ்தாயெவ்ஸ்கியைப் புரிந்து கொண்ட விதம் பற்றி ஆராய்கிறது B. G Kuznetsov எழுதிய Einstein and Dostoyevsky புத்தகம்
நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை. எஸ்ரா அவர்களும் அப்படியே என்றுதான் நினைக்கிறேன்; ஆகவேதான் சும்மா இப்புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு தம் மேதாவிலாசத்தைக் காட்டிவிட்டு போய்க்கொண்டேயிருக்கிறார்!

பள்ளி மாணவர்கள் ஐன்ஸ்டீனுக்கு எழுதிய கடிதங்களும் அவற்றிற்கு அவர் எழுதிய பதில்களும் தொகுக்கபட்டு Dear Professor Einstein என்ற தனிநூலாக வெளிவந்துள்ளது. அதை இன்று காலையில் வாசித்தேன்.

ஹ்ம்ம்… ஆனால், பிரச்சினையென்னவென்றால் நான் இப்புத்தகத்தைப் படித்திருக்கிறேன். :-(

ஆகவே, இதனை வைத்து எஸ்ரா அவர்கள் விடும் பீலாக்களைப் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. :-((
(​இப்போது ஒரு சந்தேகம்: இந்த தொகுக்கபட்டு என்பது நம்ப சின்னாளம்பட்டு ​புடவையின் மாமா பெண் முறையோ?)

கல்வியில் மாற்றம் உருவாக வேண்டும் என்பதில் ஜன்ஸ்டீனுக்கு மிகுந்த அக்கறையிருந்தது. பள்ளி ஆசிரியர்கள் கெடுபிடியான ராணுவ அதிகாரிகளைப் போலத் தண்டனை தருவதை அவர் கண்டித்துள்ளார். படிப்பு ஒரு போதும் சுமையாகிவிடக்கூடாது. மாணவர்கள் மண்டையில் அறிவை திணிப்பதில்லை கல்வி. சுதந்திரமாக அவர்கள் கல்வி பயில்வதுடன் ஆளுமைதிறனை வளர்த்துக் கொள்ளவே கல்வி நிலையங்கள் உதவி செய்ய வேண்டும் எனக் கருதினார்

இம்மாதிரி அந்தப் புத்தகத்தில் ஒரு எழவும் இல்லை. மேலும், இப்படி பொதுவாக ஐன்ஷ்டீனின் கருத்துகள் இருந்தன எனவும் சொல்ல முடியாது. சும்மனாச்சிக்கும் தன்னுடைய அரைவேக்காட்டுக் கருத்தை ஐன்ஷ்டீன் மீது குரோதத்துடன் திணிக்கவேண்டிய அவசியம்தானென்ன, நம்ம எஸ்ராவுக்கு?

​ஒரு எடுத்துக்காட்டாக, ஐன்ஷ்டீன் அவர்கள் தன் மகனுக்கு எழுதிய கடிதத்திலிருந்து ஒரு பகுதி: (இது Posterity: Letters of Great Americans to Their Children Paperback– புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது)

I am very pleased that you find joy with the piano. This and carpentry are in my opinion for your age the best pursuits, better even than school.

இதில் நாம் கவனிக்கவேண்டியது – பள்ளிக்கூடத்தைவிடக்கூட நன்றாக இருக்கும், நீ தச்சுவேலையையும் பியானொ வாசிப்பையும் கற்றுக்கொள்வது என்பது…​

​’பள்ளிக்கூடத்தைவிடக்கூட’​ – ஐன்ஷ்டீனா பள்ளிப்படிப்புக்கெதிராக எஸ்ரா அவர்களைப் போல உளறினார்? கல்வியில் மாற்றம் கீற்றம் என்றெல்லாம் பொத்தாம்பொதுவாக உளறவுமில்லை. இணையத்தில் ஐன்ஷ்டீன் அப்படிச் சொன்னார் இப்படிச் சொன்னார் என்று குப்பைகளாக இருக்கின்றன – அந்தக் குப்பைகளை மட்டும் படித்துவிட்டு மானேதேனேமுதல்வாதம் செய்திருக்கிறார், என்னெருமை எஸ்ரா.

கோபம்கோபமாக வருகிறது. இவர் என்ன உளறினாலும் அதனை வேதவாக்காக எடுத்துக்கொள்ள பல்லாயிரம் (tooth thousand) பேர் இருக்கிறார்கள் என்பது எனக்கு உடனடியாக ரத்தபேதியை உடனடியாக வரவழைக்கிறது…

ஜப்பானிய மாணவன் ஒருவனின் கடிதத்திற்கு ஐன்ஸ்டீன் நன்றி தெரிவித்து எழுதும் போது இன்று உலகெங்கும் சகோதரத்துவம் பரவி வருகிறது. ஜப்பானியர்கள் அமைதியை விரும்புகிறவர்கள்.  அழகிய ஜப்பானை நான் மிகவும் நேசிக்கிறேன் என்று பதில் எழுதியிருக்கிறார்

டோட்டல் பீலா! அவர் (ஜப்பானிய மாணவனுக்கு இல்லை), ஜப்பானிய குழந்தைகளுக்காகவென ஒரு அறிக்கை போலத்தான் எழுதியிருக்கிறார்:

[fall 1930]

In sending this greeting to you Japanese schoolchildren, I feel I have a special obligation to do so. For I myself have visited your beautiful country, its cities, houses, its mountains and forests, from which Japanese youngsters derive a love for their homeland. On my table lies a large book full of colorful pictures drawn by Japanese children.

If you are indeed receiving my greetings from so far away, remember that ours is the first era in which it has been possible for people of different nations to conduct their affairs in a friendly and understanding manner. In the old days, peoples spent their lives fearing and even hating one another because of ignorance on all sides. May the spirit of brotherly understanding among nations continue to grow. With this sentiment, I, an old man, send you Japanese schoolchildren my greetings from afar, with the hope that your generation will some day put mine to shame.

Albert Einstein

அடேய் எஸ்ரா பேராசான் – எங்காவது நீர் எழுதியுள்ளதுபோல ஐன்ஷ்டீன் எழுதியிருக்கிறாரா? ஏனய்யா இப்படிக் கூசாமல் புளுகுணி மாங்கொட்டைத்தனம் செய்கிறீர்! :-(

ஆனால் இந்த மட்டும் பரவாயில்லை – ராமானுஜன் பீமானுஜன் என நம்மூர் ஆட்களையும் பற்றி உளறிக்கொட்டவில்லையே என எனக்கு நானே ஆசுவாசப் படுத்திக்கொண்டு என் பதிவை முடிக்கும் தருணத்தில் இந்தப் பதிவு என்னை மௌனமாகக் காலத்தின் நீட்சியில் அமானுஷ்யமாகப் பார்த்துக்கொண்டு சொல்கிறது: எவ்வளவு முறை நீ இந்த எஸ்ரா பற்றி எழுதியிருப்பாய். நீ எழுதியதை நீயே படித்திருப்பாய்? அப்படி நீயே படித்துக்கொண்டு அழுவதை எவ்வளவு வார்த்தைகள் பார்த்துக்கொண்டிருக்கும். அப்படி அவை பார்த்துக்கொண்டிருப்பதை… …

ஓட்றா டேய்!

பின்குறிப்பு: TerrorismWatch என்றெல்லாம் தளங்கள் இருக்கின்றன. என் சக்திக்கு ErrorismWatch​ என ஒரு தளம் ஆரம்பிக்கலாமா, அல்லது தமிழ் எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் CharuWatch, MDMWatch போல ஒரு தளம் ஆரம்பிக்கலாமா என யோசித்துக்கொண்டிருக்கும்போது தோன்றுகிறது எஸ்ராவுக்கு மட்டும் EsRaaBIGBEN எனத்தான் இருக்கவேண்டும்! அப்படியாப்பட்ட பராக்கிரமம் உடையவராக இருக்கிறார் இவர்! என்ன அசிங்கம்.

பின்பின்குறிப்பு: இம்மாதிரி வெட்கங்கெட்ட கழிசடை எழுத்தாளர்களின் பின்னால் அலைவது சரியேயில்லை. எனக்கே போரடித்துவிட்டது. :-(
பயப்படாதீர்கள்! இதைச் சொடுக்கினால் நூற்றுக்கணக்கில் எஸ்ரா புகழ் பதிவுகள் வரும். ஒவ்வொன்றாகப் படித்து விழுந்து விழுந்து சிரிக்கலாம். ஏதோ என்னால் தமிழுலகுக்கு ஆன கைங்கரியம் – நன்றி!

6 Responses to “நுனிப்புல்மேயர், நெகிழ்வாலஜிஸ்ட் எஸ்ரா அவர்களிடம் பாவப்பட்ட ஜீவன்களான ஐன்ஷ்டீன் + தாஸ்தயெவ்ஸ்கி படும்பாடு :-(”

 1. Anonymous Says:

  /////பல்லாயிரம் (tooth thousand)

  u urself wrote this . rofl . big mistake . u hv no moral rt to complain es.ra writings

  u thnk u know better than es.ra? can u write noval like edakkai? POTHIKKINU PODA


 2. Sir, Anonymouse,

  Thanks for correcting me. But I thought, I was only ridiculing your favourite jalebi author… And you took it seriously!

  Good Author! Good Reader! Good Understood-da, Tamilagam! (you do an YesRaw ishtyle translation of these three phrases and then you will see light, you bloody dumbass!)

  • ஆனந்தம் Says:

   நீங்கள் எழுதியதற்கு அப்படியே literal meaning எடுத்துக்கொள்வதைப் பார்த்தால் இந்த அனாமதேயர் ஒரு வேளை எஸ்ராவாகவே இருக்க வாய்ப்புள்ளது. ஒரு அப்பாவிப் படைப்பாளியை ரத்தம் தோய்ந்த ஊமைக்கழுதை என்றெல்லாம் கடுமையாகத் திட்டியிருக்க வேண்டாம். :-)

 3. Bala Says:

  Sometime back S.Ra wrote about a documentary ‘Maya Lin’ (http://www.sramakrishnan.com/?p=2056). As this documentary was available in Netflix at that time I watched it. I don’t remeber the exact details now, but there were many places in his article which he was just ‘adichuvutu’-fying..I stopped reading articles in his website after that.

 4. ravi Says:

  இந்த எஸ்ராவை பிடித்து கொண்டு ஏன் அய்யா தொங்கி கொண்டு இருக்கிறீர்..

 5. ravi Says:

  அவரும் விடாமல் அடித்து தள்ளி கொண்டு இருக்கிறார். ரொம்ப கஷ்டமப்பா .


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s