நற்செய்தி: 2015 சென்னை புத்தகச் சந்தையில் நான் எழுதிய… (1/2)
December 31, 2014
… பல புத்தகங்கள் வெளியிடப்படவுள்ளன – இன்னும் எவ்வளவு என உறுதியாக முடிவாகவில்லை. இப்போதைக்கு ஏழு புத்தகங்கள் மட்டுமே நிச்சயம்.
அனைத்தையும் இதுவரை என் நண்பர் பத்ரி சேஷாத்ரி அவர்களின் உழக்கு பதிப்பகமே வெளியிடுகிறது – சென்ற வருடம் என் மொழிபெயர்ப்பு ஒன்றை இவர்கள் வெளியிட்டு அது சக்கைப்போடு போட்டு, தமிழ்ப் பதிப்பக உலகிலேயே முதல் முறையாக, முதல் ஆண்டிலேயே இரண்டு பிரதிகள் விற்றது நினைவில் இருக்கலாம்… அத்தனையும் சீமார் அவர்கலுடைய ஆவேஷப் படத்தைப் போட்டதற்காகவே விட்றது என்றாள் பார்த்துக்கொல்லுங்கல். எள்ளாப் புகலும் நாம் டமிளர் இயக்கத்துக்கே!
இந்தப் புத்தகத்தைப் பற்றிய மேலதிக விவரங்கள் இங்கே! ஒத்திசைவின் மூன்றாண்டுகால மகாமகோ வரலாற்றில் ஏகோபித்த ஆதரவு பெற்ற பதிவுகளில் இதுவும் ஒன்று. ;-) அப்பதிவில், பின்னட்டைக் குறிப்புகளும் படிக்கும்படியாக விரிக்கப் பட்டிருக்கின்றன. பாவம், நீங்கள். ஆகவே…
திராவிடத் திரித்தல்கள்
December 30, 2014
கடந்த பதினைந்து நாட்களில் கண்டமேனிக்கும் வேலை தொடர்பான/தொடர்பில்லாத அலைச்சல்; சென்னைக்கு 6 முறை சூறாவளிச் சுற்றுப்பயணம் (எல்லாம் அரசுப் பேருந்துகளில்தான்!) செய்தேன். வழக்கம்போல, சென்னையின் மஹாநதி வண்டிப் பிரவாகங்களில் வழிதெரியாமல் தலைசுற்றிய படலங்களும் நடந்தேறின. :-(
ஆனால் சுவாரசியத்துக்கும் குறைவில்லை. ஏனெனில், பயணங்களின்போது – பேருந்து கிளம்பியவுடன், படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு – பக்கத்திலிருப்பவர்களுடன் (அவர்கள் தோதுப்பட்டு வந்தால்) கதைக்க ஆரம்பித்து விடுவேன்.
Dravidian Zeitgeist! Here I come… :-)
திராவிட மாயை அக்கப்போர்களில் கிடைக்கும் இன்பம்ஸ் கொஞ்சம் அலாதிதான்! சுவையோ சுவைதான்!! ஒரேயொரு பிரச்சினை என்னவென்றால், சிலசமயங்களில் சிரித்துச் சிரித்து மாரடைப்பு வரும் நிலைக்குப் போய்விடுகிறது – என்ன செய்வது சொல்லுங்கள்… ;-)
சரி. இப்போது மூன்று சுவாரஸ்யங்கள்… Read the rest of this entry »
ஸலீல் சௌத்ரி: ஜாகோ மோஹன் ப்யாரே + இலவச இணைப்பு: சில அறிவுரைகள்
November 6, 2014
சமர்ப்பணம்: இந்தியாவின் ஒருபகுதியான தமிழகத்தில் பிறந்து வளர்ந்த பேறு பெற்றதால் – நம்முடைய மொழிகளில் ஒன்றான ஹிந்தி மொழியை மிகச் சுளுவாகக் கற்றுக் கொள்ள முடியும் என்றாலும், அந்த மொழியிலும் மகத்தான பொக்கிஷங்கள் எழுதப் பட்டுள்ளன என்றாலும், அம்மொழியைத் தெரிந்து கொண்டால் தொடர்புகள்-வாய்ப்புகள் பெருகும் சாத்தியக்கூறுகள் உண்டென்றாலும், அம்மொழி அறிவினால், இசையினால், அவற்றைச் சார்ந்த பிற பண்பாட்டுக் கூறுகளினால் நாம் செறிவுபடுவோம் என்றாலும்…
… வரட்டுவாதக் கயமை அரசியல் பிரச்சாரங்களுக்கு முட்டாள்தனமாக மயங்கி, எதிர்மறை பரப்புரைகளால் ஆட்கொள்ளப்பட்டு ஹிந்தி மொழியை இனம் புரியாமல் வெறுத்து, நம் சொந்தத் தமிழிலும் சொதப்பும், அதிலும் ஒரு சுக்கு எழவையும் சரியாகவே கற்றுக் கொள்ளாத – சுட்டுப்போட்டால்கூட ஒரு வாக்கியத்தைக் கூடக் கோர்வையாக எழுதவராத பாவப்பட்ட ஜீவன்களாக இருந்தாலும், அப்படியே ஒருவேளை எழுத முடிந்தாலும் – காப்பியடித்தும், உளறிக்கொட்டியும் கண்டமேனிக்கும் கபடி விளையாடி – இலவச இணைப்பாக அந்தப் பரிதாபத்துக்குரிய ஆங்கிலத்தையும் போட்டுக் கொல்லும் திராவிடப்பக்கவாதக் குளுவான்களுக்கும், தனித்தமிழ்வாத விசிலடிச்சான் குஞ்சப்பர்களுக்கும், தமிழ்த்தேசிய மொத்த (சில்லறை விற்பனையல்ல, துட்டு வாங்குவது உண்டு) வியாபாரிகளுக்கும், வாயோர நுரைதள்ளும் ‘அன்னிய’ கலாச்சார எதிர்ப்பாள அற்பர்களுக்கும் – பொதுவாக அனாதைமுதல்வாதப் போராளிக் கோமான்களுக்கும்…
-0-00-000-0000-000-00-0-
… இப்பாட்டினை பலவருடங்களாக வானொலியில் கேட்டிருக்கிறேன் என்றாலும், Read the rest of this entry »
தயவுசெய்து, இதைப் பற்றி மனுஷ்யபுத்திரனிடமோ அல்லது எஸ். ராமகிருஷ்ணனிடமோ ஒரு எழவையும் சொல்லி விடாதீர்கள்! ப்ளீஸ்!!
September 30, 2014
தயவு செய்து…
உங்களிடம் கண்ணீர் மல்க மன்றாடி, நெஞ்சு விம்ம, மூக்குச்சளி ஒழுக, நெடுஞ்சாண் கிடையாக உங்கள் காலடியில் விழுந்து, நிபந்தனையற்றுச் சரணாகதியடைந்து கேட்டுக் கொள்கிறேன் – நம் தமிழகத்துக்காக, பாவப்பட்ட சகதமிழ் வாசகர்களின் மன நிம்மதிக்காக, இதைக் கூடவா உங்களால் செய்ய முடியாது? :-(
… ஏனெனில், அவர்கள் இந்தச் செய்தியைப் படித்துவிட்டு, காணொலியைப் பார்த்துவிட்டு எம்மாதிரி கந்தறகோள தத்துப்பித்துவ மலச்சிக்கல் கவிதையையும், மகாகோர மனிதச்சிங்கநேயக் கட்டுரையையும் ஊசிப்போன உப்புமாப் பிண்டங்களாக, முறையே, முறையாக, ஒரு வரைமுறையே இல்லாமல் அநியாயத்துக்குக் கிண்டி – நம் மாசிலா நற்றமிழ்த் தாயின் உயிரை – முறையே மாறுகவிதை, மாறுகட்டுரை வாங்கி ஒருவழி செய்துவிடுவார்களோ என்பதை நினைத்துப் பார்த்தாலே கதி கலங்குகிறது… :-(((
அம்மணிகளே, அய்யாமார்களே! தயவுகூர்ந்து, புரிந்துகொள்ளுங்கள். Read the rest of this entry »
மனுஷ்யபுத்திரன்(புலி வேட்டை)=ராக்ஷசபுத்திரி(புளிக் கொட்டை)
September 28, 2014
டொன்மைமிகு டொல்காப்பியப் பூங்காவில்
மரத்தின் கீழ் விழுந்த புளியம்பழத்தை
மனுஷ்யபுத்திரன் ஒருவன்
பிய்த்துச் சாப்பிட்டுவிட்டான்.
பிராண்டிப் பிய்ப்பதற்கு முன்
நீ பிரெண்டா இல்லையா என
பத்து நிமிடம் கத்திக் கொண்டே
உற்றுப் பார்த்துக்கொண்டு அதனை
அன்ஃப்ரெண்ட் செய்தான்
கருத்துப் படம்: முன்நவீனத்துவ புளியம்பழமும், பின்நவீனத்துவ புளியங்கொட்டையும் (படத்தின் உரிமம்: ஹேர்டை பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திடம்; அவர்களுக்கு நன்றி பல!)
வழுக்கி விழுந்துகொண்டிருக்கும்
புளியம் பழத்தை பின் வழித்தெடுத்து அதன்
தத்துப் பித்துவார்த்த பிரச்சினையை
நீர்க்கச் செய்து புளியோதரை செய்யலாமா
என எண்ண வேண்டியிருந்தது அவனுக்கு Read the rest of this entry »
அனன்யா வாஜ்பேயி: நம்பவேமுடியாத அரைகுறைத்தனம்…
September 16, 2014
… ஒரு வழியாக இன்றுதான், அம்மணி அனன்யா அவர்களின் கந்தறகோளக் கட்டுரையான ‘என் ஸம்ஸ்க்ருதத்தின் கதை’ படித்தேன். ஆகஸ்ட் 16 அன்று வெளிவந்த – இந்தக் குப்பையையும் ‘த ஹிந்து’ தான் பதிப்பித்திருக்கிறது.
யோசித்தால் – இம்மாதிரி ‘ஒருமாதிரி’ கட்டுரைகளை வேறு எந்த தினசரிக்குத்தான் தொடர்ந்து – பொறுப்பேயில்லாமல், வக்கிரத்தோடு, பாரம்பரியங்களைப் பற்றிய தாழ்வுணர்ச்சியோடு பதிப்பிக்க முடியும்?
‘த ஹிந்து’ பற்றி, அதன் அப்பட்டமான சீன ஆதரவு பற்றி, அதன் அடிப்படை நேர்மையின்மை, பாரதத்தின் அடிப்படைகளை வெறுப்பது, ஸெக்யூலரிஸ பேதியினால் ஹிந்துமதஎதிர்ப்புவாதம், கருணாநிதி-தயாநிதி மாறன் (இந்தப் பின்னவர்,அந்த த-ஹிந்து-வின் வீட்டு மருமகனார் – அதாவது தயாநிதியின் மனைவி த-ஹிந்து-குடும்பத்தைச் சார்ந்தவர்) போன்றவர்கள் மீதான புரிந்துகொள்ளக்கூடிய ஆதரவு, என பலவற்றைப் பற்றியெல்லாம் என்னுடைய அப்பாவுடன் பல வாக்குவாதங்கள் செய்திருக்கிறேன்; பெரும்பாலும் அந்த விவாதங்கள் – ‘ஹிந்து-வ அதோட கருத்துகளுக்காகப் படிக்காத, அதோட ஆங்கிலத்துக்காகப் படி, எப்டீ எழுதறான் பாரு, தப்பேயில்லாம!‘ என்று முடிந்துவிடும்… ஆனால் அது அந்தக் காலம். அவரும் போய்ச்சேர்ந்து விட்டார்.
… இப்போது, அதன் ஆங்கிலமும் சுத்தமாகவே சரியில்லை. பக்கத்துக்கு பத்து அடிப்படைத் தவறுகள். அதன் தலைப்புகளோ கந்தறகோளமாக இருக்கின்றன. அதன் காமாலைக் கண்ணும் பளிச்சிடும் மஞ்சளாகிக்கொண்டே வருகிறது. எப்படியும், கடந்த சில நாட்களாக கஷ்மீர் வெள்ளப் பிரச்சினை பற்றிய அதன் அயோக்கியத்தனமான செய்தி திரித்தல்களைப் பார்த்துப் பார்த்து வெறுப்பாக இருக்கிறது.
ஆனாலும்…
[ஸிக்னல்/நாய்ஸ் (அல்லது) சமிக்ஞை/சத்தம்]அநிசப்தம் = 1/∞ : சில எதிர்வினைகள், குறிப்புகள்
August 26, 2014
ஸிக்னல்/நாய்ஸ் (அல்லது) சமிக்ஞை/சத்தம் – SNR: http://en.wikipedia.org/wiki/Signal-to-noise_ratio – எம் ராஜா அவர்கள் கவனிக்கவும்; விக்கிபீடியா சுட்டி கொடுத்திருக்கிறேன்! ;-)
‘இன்னிக்கி இத்தாண்டா என்னோட கர்த்து! பிட்ச்சிக்கினு ஓட்ரா…‘ ரீதியில் மணிகண்டன் அவர்கள் இக்காலங்களில் எழுதுவது குறித்து என் பிலாக்கணமும், சில நண்பர்களின் கருத்துகளும், என் எதிர்வினையும் – இதற்கு ஒரு தனி பதிவு தேவையா என்றாலும்…
1. ஒரு நண்பர் எழுதினார்: ‘அவர் பல நல்ல காரியங்களுக்கு உதவி செய்திருக்கிறார். பல பள்ளிகளுக்கு பணம் கொடுத்திருக்கிறார், தெரியாதா உனக்கு? ஆக அவர் எழுதுவதில் வேண்டுமென்பதை எடுத்துக்கொண்டு மற்றதை விலக்கலாமே? பொறாமை காரணமாக நீ எழுதியிருப்பாய் எனவும் புரிந்துகொள்ளமுடியவில்லை. அவர் நிறைய எழுதினால் தினம்தினம் எழுதினால் என்ன பிரச்சினை?‘
அய்யா – அவர் செய்திருக்கலாம், ‘அடிப்படையில்’ நல்ல மனிதராக இருக்கலாம். ஒரு நல்ல குடும்பஸ்தனாக குடும்ப வேலைகளில் சரிபாதியாவது செய்பவராக இருக்கலாம். வேலையிடத்தில் துப்புரவாக, அருமையாகப் பணிசெய்பவராக, ப்ரொஃபெஷனலாக இருக்கலாம். சுற்றுப் புறச் சூழலைப் பேணுபவராக, வாய்ப்பேச்சு மட்டும் இல்லாதவராக, ஒரு நல்ல குடிமகனாக இருக்கலாம். ஆனால் – எழுதுவதில் சிலசமயம் அரைகுறைத்தனத்தை தம்பட்டம் அடிப்பதாகவும் அரைவேக்காட்டுத் தனத்தையும் வெளிப்படுத்தலாம். பாதகமேயில்லை. ஆனால் – பொய்ச் செய்திகளையும், வதந்திகளையும் பரவவிடுவதை – அறிவுஜீவிய நேர்மையில்லாமல் (intellectual dishonestyயுடன்) எழுதுவதைத் தான் நான் வெறுக்கிறேன்.
!நிசப்த யானை வெடியும் மகாமகோ புகையும்… (இரண்டாம் பகுதி)
August 23, 2014
(அதாவது) போங்கடா, நீங்களும் ஒங்களோட இஸ்ரேல் எதிர்ப்பு பிலிம் காமிக்கற போங்காட்டமும்… (பாகம் 2)
— !நிசப்தம் பதிவுகளை எழுதிவரும் திடீரெக்ஸ் அறச்சீற்ற இளைஞர் வா. மணிகண்டன் அவர்களின் அண்மைய கட்டுரைகளில் ஒன்றான ( ‘அங்க என்னம்மா சத்தம்?‘) படித்த மகாமகோ சோகத்தில் எழுதிய என் “ஒண்ணும் இல்லடா கண்ணா, கட்டுரையாசிரியர் ‘யானை வெடி’ வெடிக்கரார்டா; சத்தமும் பொகையும் தான் பெருஸ்ஸா வரும். பயப்படாத… எல்லாம் புஸ்ஸுதான்… காத மூடிக்கோ!” பிலாக்கணத்தின் தொடர்ச்சி. ஸ்ஸ்ஸ் அப்பாடா!
எடுத்ததை முடிக்கவேண்டும். ஆகவே தொடர்கிறேன். பாவம் நீங்கள். வேறு வேலையில்லையென்றால் மேலே படியுங்கள். வேறுவேலைகள் இருந்தாலும்தான்! ;-)
-0-0-0-0-0-
சரி. நிசப்தமான அந்தச் சத்தக் கட்டுரைக்கு மறுபடியும் போகலாம்: Mommie!! Returns!!!
“இது [அண்மைய காஸா-இஸ்ரேல் சச்சரவுகள்] பற்றிய டாகுமெண்டரி ஒன்றை பெங்களூரில் திரையிட்டார்கள். சாப்ளின் டாக்கீஸ் என்ற அமைப்பினர். தமிழ் இளைஞர்கள்தான். நற்றமிழன் பழனிசாமியை மட்டும் அந்தக் குழுவில் தெரியும். சர்வதேச அரசியலை மிக எளிமையாக பேசக் கூடிய இளைஞர். “
ஆ! “சர்வதேச அரசியலை மிக எளிமையாக பேசக் கூடிய இளைஞர்.” அய்யோடீ சொக்கீ! நம்பவே முடியாமல், இரண்டுமூன்று தடவை இந்த வரியைப் படித்தேன்.
அய்யய்யோ! ஆஹா! அய்யா – இந்த ‘நற்றமிழன் பழனிசாமி’ அவர்களை விட்டு எளிமையாக ஒரு சர்வதேச அரசியல் பற்றிய புத்தகங்களை எழுதச் சொல்லி – நம் தமிழர்களை உய்விக்க முடியுமா?
- முதல் புத்தகம்: ‘ஒரு வெட்டி டாகுமென்டரி பார்த்தே, சமகால வரலாற்றறிஞன் ஆவது எப்படி?’
- இரண்டாம் புத்தகம்: ‘மூன்றே வினாடிகளில் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையைப் புரிந்துகொள்ளுங்கள்!’ (இலவச இணைப்பு: அடுத்த அரைவினாடியில் அதனைத் தீர்த்தேவிடுங்கள்!)
- மூன்றாம் புத்தகம்: ‘ஒரே வினாடியில் சர்வதேச அரசியல்!’ (எளிமை விலைப் பதிப்பு)
பத்ரி சேஷாத்ரி அவர்களின் உழக்கு பதிப்பகம் (என் புத்தகம் ஒன்றையும் இது பதிப்பித்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே!) உங்களுக்காகக் காத்திருக்கிறது. ஓடிப்போய் தொடர்பு கொள்ளுங்கள்…
… சரி. எளிமை என்பதை வெகுளித்தனம் எனவும் புரிந்து கொள்ளலாம்; ஆனால் மகாமகோ சிடுக்கல் பிரச்சினைகளுக்கெல்லாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து ‘வினவு காரர்கள்’ போல குசு விட்டு எளிமையான கருத்துகளை உதிர்ப்பது என்பது ஒரு கலைதான்.
எளிமை என்கிற அழகான வார்த்தையை வைத்துக் கொண்டு, ஒரு வெறுக்கக் கூடிய அரைகுறைத்தனத்தைப் பிரதிபலிக்கச் செய்வது என்பது ஒரு நுண்கலைதான். :-(
மன்னிக்கவும்; எனக்கு மறந்தே போய்விட்டது. கூக்ல் போய், விக்கிபீடியா போய் ஒன்றிரண்டு வினாடிகள் முக்கினால், உடனடியாக, வெகு எளிமையாக சர்வதேச அரசியலைப் பற்றி ஏசலாம்.
குறிப்பு: மொத்தம் சுமார் 3200 பேர் மட்டுமே வசிக்கும், எங்கள் பள்ளி இருக்கும் கிராமத்தில் ஐந்து நாயக்கர் பெருங்குடும்பங்கள் (= ‘வகையறா‘ என்று குறிப்பிடுகிறார்கள்) அல்லது குறுங்குழுக்கள் இருக்கின்றன. பக்கத்து கிராமத்தில் மூன்று இப்படிப்பட்ட குழுக்கள். இவை அனைத்துக்கும் இடையே, பலவித பிரியும்/சேரும் நட்புகளுக்கும் பகைமைகளுக்கும் நடுவில் படு பயங்கரமான குழு அரசியல் – கத்திச் சண்டைகள், கொலைகள் – ஒவ்வொரு வருடமும் இரண்டு கொலைகளாவது நடக்கின்றன (போன 2013வருடம் அத்தி பூத்தாற்போல ஒன்றுமட்டுமே! இந்த வருடம் இதுவரை இல்லை!). இந்த அரசியலைப் பற்றியே கூட என்னால் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தாலும், அதனைப் பற்றி எளிமையாகப் பேசவேமுடியாது. ஒரே சிக்கல்கள். என்னுடைய போதாமையும் அரைகுறைத்தனமும்தான் இதற்குக் காரணமாக இருக்கவேண்டும். என்ன செய்வது சொல்லுங்கள்…
!நிசப்தம்காரரின் நண்பர் எனக்கு பயிற்சி தருவாரா? ‘சர்வதேச அரசியலை மிக எளிமையாக பேசக் கூடிய இளைஞர்‘ அவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமாகவே இருக்காதுதானே? சர்வதேச அளவில் எங்கள் கிராமம் தம்மாத்தூண்டுதானே?
மேலதிகக் குறிப்பு: !நிசப்தம்காரர் கருத்தை வைத்துக்கொண்டு இந்த ‘நற்றமிழன் பழனிசாமி’ அவர்களை மதிப்பிடக் கூடாதுதான். முன்னவரின் ஆஹாஊஹூ கருத்துக்குப் பின்னவர் என்ன செய்வார் பாவம்! இருந்தாலும் அய்யாமார்களே, உங்களுக்காக இன்னமும் காத்துக்கொண்டிருக்கிறது உழக்கு பதிப்பகம்!
-0-0-0-0-0-0-
காஸா பற்றி சில குட்டிப் புத்தகங்கள் அல்லது அற்புதமான கட்டுரைகளை உட்கார்ந்த இடத்திலிருந்தே அலுங்காமல் நலுங்காமல் எழுத, சில தலைப்புகளுக்கான சிபாரிசுகள்: (முடிந்தவரை – எனக்குச் சரியென்று பட்ட, இக்கட்டுரைகளை எழுதக்கூடிய கட்டுரையாசிரியர்கள்/பத்திரிகைகள் பெயரையும் கொடுத்திருக்கிறேன்)
- இஸ்ரேலே! காசா என்றால் லேசா? (விடுதலை)
- காசாவில் காசு பார்க்கும் அமெரிக்க கார்ப்பரேட் நாய்கள்! (கண்டிப்பாக – இது ‘வினவு’ குளுவான்களுக்காக மட்டும்)
- இஸ்ரேல்: காசாவின் காச நோய் (யுவகிருஷ்ணா)
- காசா தான் கடவுளடா! (நாணயம் விகடன்)
- காசா(ல) கைய வெச்சா… (சீமான்/விஜய்)
- காசாவை கரியாக்காதே! (நெய்வேலி – திமுக தொழிற்சங்க தட்டிவிளம்பரம்)
- கசக்கும் காசா (கல்கி)
- காசா கசமுசா எனும் பாலஸ்தீனிய திரைக்கவிதை (அகிரா கியரோஸ்டமி குரகாசாவின் உலகசினிமா ‘மார்டன்’ விமரிசனம்: எஸ். ராமகிருஷ்ணன்)
- வொய் திஸ் கொலவெறி – காசா for dummies (அதிஷா)
- காசா: நிகழ்ந்துகொண்டிருக்கும் இறந்தகாலமும், இறந்தகாலங்களின் நிகழ்காலமும் – ஒரு சாட்சியம் (ராஜன் குறை கிருஷ்ணன்)
- இஸ்ரேலின் அணுவுலைகளினால் காசாவுக்கு அபாயம் (ஞாநி)
- தென்னமெரிக்கத் திரைப்படங்களில் காசா – ஒரு பின் நவீனத்துவ விமர்சனம் (சாரு நிவேதிதா)
- யூத வந்தேறிகளால் ஏற்பட்ட காசா இனப்படுகொலை (பழ நெடுமாறன்)
- ஆதிக்கசாதி பார்ப்பனீயம்தான் இஸ்ரேலை உயர்த்திப் பிடிக்கும் (அமார்க்ஸ்)
- திமுக தோல்விக்குக் காரணம் இஸ்ரேல்! (
முக ஸ்டாலின் – அய்யய்யோ மன்னிக்கவும்இசுடாலினார்) - அந்தக் காலத்தில் இஸ்ரேல் இல்லை – மிகமிகப் பழைய ஏற்பாடு சாட்சியம் (ஆஇரா வெங்கடாசலபதி; யெருஸலாயிம் நூலகத்திலும் அலெக்ஸா்ன்ட்ரியாவிலும், யாழ்ப்பாணத்திலும் கிடைத்த குறிப்புகளின்மீது வடிக்கப்பட்டது)
- கடைசி மரத்தை வெட்டும் வரை நாங்கள் காசாவின் இடஒதுக்கீடுக்காகக் போராடுவோம் (டாக்டர் இராமதாசு)
- If Jeyamohan has written about Gaza, what right does he have to write about it & if Jeyamohan has not written about Gaza, why should he have written about it instead of being indifferent- a deep fraudian analysis with copious footnotes, ready references, appeal to ethics, parallels with American protest scenes and much else (A Contrarian World)
தலைப்பு தயார், உள்ளடக்கம் எங்கேயென்றால் – என்ன எழுதவேண்டும் என்பதை விக்கிபீடியாவிலிருந்து உருவி, கூக்ல் மொழிமாற்றியை வைத்துத் தமிழில் பெயர்த்துக்கொள்ளலாம். சரியா? (ஆனால் உழக்கு பதிப்பகம் இவற்றையெல்லாம் பிரசுரிக்காதாம், பத்ரியுடன் இப்போதுதான் பேசினேன். என்ன ஆணவம்! உழக்கு இல்லாவிட்டால் HairDye பதிப்பகம் செல்ல எங்களுக்குத் தெரியாதா? ஹ்ஹ.)
சரி, போதும் – நிசப்தம் பக்கம் செல்லலாம். ;-)
-0-0-0-0-0-
“திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்குக்கு வாடகை மட்டுமே ஆயிரத்து ஐந்நூறு ரூபாய். அது போக ப்ரொஜெக்டர், ஆடியோ சிஸ்டம்ஸ் எல்லாம் தனி.”
அய்யா அவர்களுக்கு எங்கு சென்றாலும் இதன் விலை என்ன, அதன் விலை என்ன, ஒரு ஐடி தட்டச்சு வேலை செய்யும் தன்னால் இதனை வாங்கமுடியுமா செய்யமுடியுமா, வெறும் மளிகைக் கடைக்காரர்கள் பெரிதாகச் சம்பாதிக்கிறார்கள், ஏன் நம்மால் முடியாதா, முடியவே முடியாது – ஏன் முடியணும், ஏன் இப்படி ரிஸ்க் எடுக்கவே முடியாத நிலை – என்ற வாழ்க்கையின் அடிப்படைக் கேள்விகள் தான். பேக்கரி சென்றாலும் சரி. பஸ்ஸில் போனாலும் சரி – இதேவகைப் பிரச்சினைகள் தான்; காஸாவில் ரியல் எஸ்டேட் எப்படி, ப்ளாட் விலை எவ்வளவு இருக்கும் வகை பற்றாக்குறை மனப்பான்மைச் சிந்தனைகள் – ஆக, பல சமயங்களில் திரையுலக ‘தருமி’ நாகேஷை நினைவு படுத்துகிறார், பாவம் – ஒரு மத்தியதரவர்க்கம் சார்ந்த படைப்பூக்கம் மிக்க கலைஞனுக்கு என்னவெல்லாம் முட்டுக் கட்டைகள் பாருங்கள்… :-( ஏமாந்தால் ஏறி மிதித்து விடுவார்கள். :-((
என்னையே எடுத்துக் கொல்லுங்கள். நான் தட்டச்சு செய்யும் இந்த தொடைமேற்கணினி 30000 ரூபாய். என் மூக்குக் கண்ணாடி 2000 ரூபாய். வெறும் சிலிக்கன் மணல் மெட்டீரியலுக்கு இவ்வளவு விலையா? கம்ப்யூட்டர் செய்யும் கார்ப்பரேட் முதலாளிகள், கண்ணாடித் தொழிலதிபர்கள் – தொழிலாளிகள் வயிற்றில் அடித்துக் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். மணல் கொள்ளையர்கள். கேட்பதற்கு ஆளில்லை. கேட்டால் அடிக்க வந்து விடுவார்கள். அடச்சே!
ஆனாலும் ஆனியன் ரோஸ்ட் அம்பது ரூபாயாமே? என் அடுத்த புத்தகத்தின் பெயர் இதுதான். உரக்கச் சொன்னால், வாயில் இடியாப்பத்தைத் திணித்து விடுவார்கள். சரவணபவன் ஓவர் விலை. இடியாப்பம் ஒரு ப்ளேட் விலை ரூ 80/-. அநியாயம். தமிழகத்தின் இடியாப்பத்தை நூடுல்ஸ் சாப்பிட்டுவிடுமோ? இதுதான் நூடுல்த்வா என்பதா? மேக்கி நூடில்ஸ் பேக்கட் விலை ரூ 30/-; கடைக்காரருக்கு ஒவ்வொரு பாக்கெட்டிலும் லாபம் 30% சுளையாக நிற்கும். ஏன் நம்மால் இதனைச் செய்யமுடியாதா? முடியாது. பள்ளி ஆசிரியர்கள் என் தன்னம்பிக்கையையே ஒழித்து விட்டார்கள். தன்னம்பிக்கை கிலோ என்ன விலை? (அய்யய்யோ! இளைஞர் ஷ்டைலில் நானுமா??)
“இஸ்ரேல் ஒன்றும் சாதாரண நாடு இல்லை. ‘உலகத்தில் இதுவரை தனது எல்லையை அறிவிக்காத ஒரே நாடு இஸ்ரேல்தான்’ என்று ஒருவர் சொன்னார். முடிந்த வரைக்கும் சுரண்டிக் கொண்டே போவதுதான் அதன் பாலிஸி. “
சரி. இஸ்ரேல் ஒரு மசாலா நாடு, சாதா நாடு அல்ல. போதுமா? கொத்து பரோட்டா (ரூ. 30/- மட்டுமே) சாப்பிடுவதற்குப் பதிலாக பதிவெழுத வந்தால் – சர்வதேச அரசியல் நிலவரங்களை, சாதா நாடு -ஆனியன் ரோஸ்ட் நாடு என்றுதான் பகுப்பு செய்யமுடியும். நாடு, நிலப்பரப்பும, பூகோளம் என்றாலே !நிசப்தம்காரருக்கு லட்டு (ரூ 25/-) தான் நினைவுக்கு வருமோ?
‘உலகத்தில் இதுவரை தனது எல்லையை அறிவிக்காத ஒரே நாடு இஸ்ரேல்தான்’
எந்த மெத்தப் படித்த மேதாவியய்யா இப்படி ‘உலகத்தில் இதுவரை தனது எல்லையை அறிவிக்காத ஒரே நாடு இஸ்ரேல்தான்’ என்றெல்லாம் கருத்துதிர்த்தது? அவர் காலைக் கொஞ்சம் என் பக்கம் நீட்டினால், அதனைத் தொட்டு என் கண்ணை ஒற்றிக் கொள்ள நான் தயார். எப்படிப்பட்ட மேதாவி அவர்!
ஆனால் – அவரை விட அதிமேதாவி யாரென்றால் !நிசப்தம்காரர்தான்! யாரோ சொன்னதை அப்படியே போட்டு ஒரு பதிவையும் தேற்றியிருக்கிறார் என்றால், அவர்தம் மேதாவித்தனம் தான் என்னே!
ஆனால், ஆனால்… இவர்கள் இருவரையும் விட மகாமகோ மேதாவி யாரென்றால் அது நாந்தேன்! வேலை வெட்டியற்று இவர்கள் சொல்லையும் செயலையும் விமர்சனம்(!) செய்து கொண்டிருக்கிறேன் பாருங்கள்! :-(
‘முடிந்த வரைக்கும் சுரண்டிக் கொண்டே போவதுதான் அதன் பாலிஸி.’
அய்யா !நிசப்தம், இஸ்ரேல் ஒன்றும் மலாய் காய்ச்சும் கடாய் அல்ல – சுரண்டோசுரண்டு எனச் சுரண்டுவதற்கு. கடையில் கிடைக்கும் கடாய் ரூ 800/-.ஆனால் மலாய் ஒரு கப் 40ரூ. சாப்பிட்டால் கொழுப்பு ஏறிவிடும் என்கிறார்கள். வீட்டில் அடிக்கவருவார்கள்.
ஆரோக்கியம் முக்கியம். இல்லையென்றால் டாக்டருக்கு அழ வேண்டும். அவர் ஐந்து நிமிடத்திற்கு ரூ.500/ வாங்கிவிடுவார். எனக்கு ஒரு மணி நேரம் வேலை செய்தாலும் என் முதலாளியிடமிருந்து ரூ.500 வராது. வெளியே சொல்ல முடியாது. சொன்னால் வேலை போய் விடும். டீம் லீடருக்குத் தமிழன் என்றால் கேவலம். உலகத்திலேயே பொட்டி தட்டும் வேலைதான் கீழானது. அதனால் தான் நான் அதனைச் செய்து கொண்டிருக்கிறேன். :-(
எனக்கு ஈகோ அதிகம். ஆனால் எவருக்குத் தான் ஈகோ இல்லை. என் ஊரில் அய்யனாருக்குக் கூட ஈகோ இருக்கிறது என்கிறார்கள். அதனால்தான் அவர் ஒரு குறுந்தெய்வமாகவே இருக்கிறார். இதற்குமேல் எழுதினால் அடிக்க வந்துவிடுவார்கள். அவர்கள் பெயரைச் சொல்லமாட்டேன். அவர்கள் இந்துத்துவர்கள். எங்கள் ஊரில் இந்துத்துவம் கிலோ ரூ 50/- தான். ஆனால் பெங்களுரில் அதே விஷயம் ரூ 1000/-! அநியாயமாக இருக்கிறது அல்லவா? எல்லாம் பெருமுதலாளிகள் கையில். சாதா மனிதர்களை எவன் கேர் செய்கிறான். அவர்கள் விவசாயம்தான் செய்யவேண்டும். வெறும் நஷ்டம்தான். ரொம்பப் பேசினால் உதைக்கவருவார்கள்.
ஐடி தொழிலில் எதுவுமே சாஸ்வதமில்லை. நாளைக்கே வேலையை விட்டு எடுத்துவிட்டால் என்னால் வேறென்ன செய்யமுடியும். வீட்டில் திட்டுவார்கள்.
தினம் ஒரு பதிவு எழுதவில்லையென்றால் வாசகர்கள் பொட்டில் அடிப்பார்கள். தினம் எழுதினாலோ வெறியர்கள் ரவுண்டு கட்டிக்கொண்டு அறைவார்கள். தமிழ் எழுத்தாளன் என்றால் அவ்வளவுதான். என்னை நானே குத்திக்கொள்ள வேண்டியதுதான்.
… அடுத்த பதிவில் மங்கோலியாவின் தமிழ் இலக்கியம் பற்றி எழுதலாமா? அதற்கு யார் உதைக்க வருவார்கள் என்பதை நினைத்தால் உதறலாக இருக்கிறது…
-0-0-0-0-0-0-
… ஆனால் – ஒவ்வொரு நாளும் எத்தைத் தின்றால், எத்தைப் பதிவு செய்தால் பித்தம் தெளியும் என்று – அனுபவங்களைச் சுரண்டிச் சுரண்டி முடிந்தவரை உள்ளீடற்ற, துறையறிவற்ற பிலாக்கணப் பதிவிடுவது என்பது நிச்சயம் ஒரு அனுபவச் சுரண்டல்தான்.
இந்தப் போக்கினை ஒரு ‘பாலிஸி’ என்ற அளவிற்கு உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை.
… மேலும் தொடரும்… :-( இன்னும் அரைவாசி ‘அங்க என்னம்மா சத்தம்’ பதிவு பாக்கியிருக்கிறது. பாவம் நீங்கள். ;-)
தொடர்புள்ள பதிவுகள் / தொகுப்புகள்…
- அலக்கியம், காப்பிக்கடை, இன்னபிற இழவுகள்…
- போங்கடா, இதுதாண்டா *&#@! பதிவுகள்
- மங்கோலியா: சாகசங்கள், பேருரைகள், புத்தகவெளியீடுகள், புல்லரிப்புகள், ஆகவே சொறிதல்கள் 24/05/2014
- மங்கோலியாவில் ராமசாமி! 18/05/2014
- “ஒண்ணும் இல்லடா கண்ணா, கட்டுரையாசிரியர் ‘யானை வெடி’ வெடிக்கரார்டா; சத்தமும் பொகையும் தான் பெருஸ்ஸா வரும். பயப்படாத… எல்லாம் புஸ்ஸுதான்… காத மூடிக்கோ!”
we expect way too much from teachers…
August 19, 2014
… and also from schools, and very little from us. Of course there are a few exceptions, as I would mention always, but then…
I think, we as parents (mostly clueless, that is – it takes one to know one and all that…) have these romantic notions of an ideal school being populated by ideal teachers and ideal peers for our children – and keep looking for it. And, when we can’t locate one (obviously, what do we expect!) we keep complaining ad nauseam about the state of affairs…
We are not satisfied at all with the situation, and spread the happy news of our disaffection, discontent and cynicism all over the place – and for some unfathomable reason, the inherent spreadability of any negative news defies ALL physics that I know of – it spreads so fast, in spite of not having much of truth, and absolutely inertia-free!
We expect to find bleakness and negative situations, and voilà, we find them in mind boggling abundance! Read the rest of this entry »
கணிதமேதை ராமானுஜன், ரேம்போனுஜன் ஆன கதை!
August 8, 2014
ஆ இரா ‘சலபதி’ வெங்கடாசலபதி, ஸ்ரீ வெங்கடேஸம் மனஸா ஸ்மராமி…
இன்றுதான் ‘சலபதி’ அவர்கள் நாளைய ‘தமிழ் ஹிந்து’ தினசரியில் எழுதிய ராமானுஜன் பற்றிய கட்டுரையைப் படித்தேன். இன்புற்றேன்.
இதன் ஒரு பகுதியை உங்களுக்கு அவசரம்அவசரமாக, தப்பும்தவறுமாக ‘இந்திய இணைய வரலாற்றிலேயே முதல்முறையாக டட்டடா டட்டடாவாக அளிப்பதில்’ பெருமையடைகிறேன்: எனக்கு எப்போதுமே ‘யாம் பெற்ற அக்கப்போரு பெறுக இவ்வையகம்’தான். Read the rest of this entry »
பலவந்தமாகப் பாலியல் பலாகாரம் செய்வது எப்படி?
June 23, 2014
ஆம். நீங்கள் சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள்; அதுவும், தினசரி குறிப்பிட்ட வேளைகளில், பலவந்தமாகப் பாலியல் பலாகாரம் செய்தால் கிடைக்கக்கூடிய பலான பலன்களைப் பற்றித்தான் எழுதப் போகிறேன்.
இது அக்கப்போர் அல்ல. இதனை இன்னொரு முறை அடிக்கோடிட்டுக் கொள்ளவும். Read the rest of this entry »
பயிர் வட்டங்களும், மயிர் வட்டங்களும்…
May 30, 2014
பயிர் வட்டங்கள் என்று உடும்புத்தைலவாதிகளால் அழைக்கப்படும் ‘crop circles’ளின் உள்ளே பயிர் இருக்காது. இதைப் பயிரற்ற வட்டங்கள் என்றுதான் அழைக்க வேண்டும். ஆனால் வெள்ளைக்கார முட்டாள்கள் இவற்றை இப்படித்தான் அழைக்கிறார்கள். ஆகவே நாமும் அவர்களை வாழ்த்தி, வணங்கி மகிழ்ந்து அவர்கள் காலடியில் விழுந்து புரண்டு – இந்தியாவில் ஒரு எழவு ‘பயிர் வட்டமு’ம் இல்லாத போதிலும் பயிர் வட்டம் பற்றி கப்ஸாக்களை, படு ஸீரியஸாக விடுகிறோம். இம்மாதிரி விஷயங்களைப் பதிப்பிப்பதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்!
ஆனால் — அதேபோல மயிர் வட்டங்கள் என்பவையும் இருக்கின்றன என்பதை நாம் அறிந்துதெளிந்தோமில்லை! இவை பெரும்பாலும் வயதான ஆண்களின் உச்சந்தலைக்கும் பிடரிக்கும் நடுவில் திடுக்கிடும் வகையில், புரிந்துகொள்ளவே முடியாத வகையில், திகைக்கவைத்து விக்கித்துப் போக உதிக்கும் தலைமயிரில்லாத பகுதிகள் – அதாவது, இதனைப் படிக்கும் நீங்கள் ஆணாக இருந்து – உங்கள் வயது 45க்கு மேலான பட்சத்தில், உங்கள் பின்னந்தலையை யோசிப்பது போல் தடவிப் பார்த்தால் கொஞ்சம் வழுக்கும் பகுதிகள்தாம் இவை; ஆனால், ஒரு ஆணுக்கு ஒன்று என்று மட்டுமே, அம்மா இலவச வழுக்கைத் திட்டத்தின்படி அளிக்கப்படுவது இது. ஆகவே ஒன்று வாங்கினால் இன்னொன்றும் ஃப்ரீ எனக் கிடந்து ஞமலிபோல அலையவேண்டாம். மேலும், உங்கள் மண்டையில் ஒரு ஓளி வட்டத்திற்குத்தான் இடம். இன்னொன்று வந்தால், கொஞ்சம் – ரிஃப்லெக்டர் என்பதற்குப் பதிலாக இரு ஹெட் லைட்டுகள் போலக் கண்றாவியாகக் காட்சியளிக்கும் என்பதை மனதில் கொள்ளவும். உங்கள் பின்னால் அணிதிரண்டு ஆர்பரித்து வருபவர்கள் – கெக்கலி கொட்டிக் கண்கூசச் சிரிப்பார்கள் என்பதை உணரவும். Read the rest of this entry »
இந்த மங்கோலியச் சாகசப் பயணத்தின் முதல்பகுதியைப் படித்தால், இந்த இரண்டாம் பாகம் மேலதிகமாகப் புரியாமல் போகலாம்.
… சரி. நான் முன்னமே சொன்னது போல, என் துணைவியாருக்கு சந்தோஷத்தைத் தந்துகொண்டு என் மங்கோலியப் பயணத்தை ஆரம்பித்திருந்தேன்…
விமான நிலையத்தின் பாதுகாப்புச் சோதனைகளில் மறுபடியும் மறுபடியும் என் பெட்டியைத் திறக்கச் சொல்லிப் பார்த்தவண்ணம் இருந்தனர் – ஏனெனில், அந்த பரிசோதக முட்டாள்கள், என்னுடைய புத்தகக் கட்டுகளை ஒரு நூதன வெடிகுண்டு என நினைத்துவிட்டனர் போலும். அல்லது, ஒருகால், என் புத்தகங்களின் பின் அட்டைகளில் என் மகாமகோ தொப்பையுடனான குண்டுப் படத்தைப் பார்த்து, அவை குண்டு தயாரிப்புக் கையேடுகள் என நினைத்துவிட்டனரோ? Read the rest of this entry »
ஷிவ் விஸ்வநாதன்: மோதி, என்னைப் போன்ற லிபரல்களை (=முற்போக்காளர்களை) எப்படித் தோற்கடித்தார்?
May 23, 2014
ஷிவ் விஸ்வநாதன் அவர்களை நான் பலபத்தாண்டுகளாக, ஏறக்குறைய அவர் எழுதுவதையெல்லாம் படித்து வந்திருக்கிறேன் என்கிற முறையில் – நான் தயங்காமல் சொல்வேன் – அவர் ஒரு பிரகாசிப்பு மிகுந்த சமூகஅறிவியல்சார் சிந்தனையாளர் மட்டுமல்லாமல், அழகான பல திடமான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியிருப்பவர்.
மேலும் – அவருடைய சில மாணவர்களின் கருத்தை ஒட்டி எழுதினால் – அவர் ஒரு செய்நேர்த்திமிக்க மாயாஜால ஆசிரியர் – அதாவது கருத்து-பண்பாட்டுப் புலங்களில் குறுக்காகவும் நெடுக்காகவும் புகுந்து அழகான கதைகளையும், கருதுகோள்களையும் நெய்யும் திறன் படைத்தவர். அவர் மாணவர்களை, தன் அறிவாற்றலின் வசீகரத்தால், அவர் ஒரு பாம்பாட்டி போல ஆட்டுவித்தார் (ஆட்டுவிக்கிறார்?) என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கும் விஷயம்! Read the rest of this entry »
மங்கோலியாவில் ராமசாமி!
May 18, 2014
நெடுநாட்களாக, குறிப்பாக 2011லேயே இணையத்தில் பிரபலமாக இருந்த நான், ஒத்திசைவு இணையதளம் மூலமாக எழுதவந்து மேலும் உலகப் புகழ் பெறுவதற்கு முன்பிலிருந்தே – ஒரு வாசகர் குழு ஆரம்பித்து என் கொள்கைகளைப் பரப்ப வேண்டும் என்று என்னுடைய தேர்ந்த வாசகர்கள் கருதி எனக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர். எனக்கு இந்த விஷயம் எல்லாம் ஒத்துவராது என்று கருதினாலும், கடந்த மூன்று வருடங்களாக அவர்களே கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள், க்ரேக்க மொழி உட்பட நான் எழுதியுள்ள கட்டுரைகளை அலசுகிறார்கள். நான் எழுதியுள்ள பல புத்தகங்களை எனக்கு அறிமுகப் படுத்துகிறார்கள். படுத்துகிறார்கள். என்னுடைய செல்லமான களைஞர் அவர்களைக் களைந்து வேகவைக்கிறார்கள். ஐன்ஷ்டீன் சொன்னவற்றை நான் சொன்னதுபோல, இசையில் விற்பன்னன், ஞானாசிரியன் போலவெல்லாம் எழுதுகிறார்கள் – எனக்கு இதில் பிரச்சினையில்லை – ஏதோ தமிழர்களுக்கு ஞானம் வளர்ந்து, சார்பு நிலைத் தத்துவம், இசை பற்றியெல்லாம் புரிதல்கள் ஏற்பட்டால் சரி! தமிழனுக்கு ஏதோ என்னாலான உபகாரம்.
இதுதொடர்பான அப்போதைய பிரச்சினையென்னவென்றால், என் வாசகர்கள் குழுவிற்கு ஒரு லோகோ, ஒரு நல்ல பெயர் வைக்கவேண்டுமாக இருந்தது. வாசகர் வட்டம் என்றால் தட்டையாகவும், சகல பக்கங்களிலும் மொண்ணையாகவும் இருக்கும்; பிடிபடாமல் வழுக்கிக் கொண்டேயிருக்கும். வாசகர் சதுரம் என்றாலும் தட்டை; பட்டம் தறிகெட்டுப் பறப்பது போன்ற தோற்றம். இவை இரண்டும் முப்பரிமாணமற்றவை. குழுமம் என்று சொன்னால் – ஏதோ கேப்பங்கூழினை ‘மம்மம்’ என்று சொல்லி குழந்தைகளுக்குத் தாய்மார்கள் ஊட்டிவிடுவது போன்ற வழவழா கொழகொழா தோற்றம். ஒரே பிரச்சினை! எனக்கு, பெயருக்கு அப்பால் – நான் எழுதிஎழுதி, லோகத்துக்கு அருள் பாலிக்கும் திறனையும் அந்த பெயரும், லோகோவும் வெளிக்கொணர வேண்டும். பரந்துபட்ட எம் தமிழ் மக்களுக்கு, எளிதாகவும் பிடிபடவேண்டும். ஆக, யோசித்து, யோசித்து…
… இப்படி, என்னுடைய வாசகர்களே ஒன்றுசேர்ந்து ஒருங்கிணைத்துக் கொண்டு நடத்தும் குழுவை ‘ராமசாமி வாசகர் ஐகஸஹெட்ரன் நற்பணி இயக்கம்’ எனப் பெயர் சூட்டினார்கள், சூட்டிகையான சூடிக் கெடுத்த சுடற்கேடிகள்.

ராமசாமி வாசகர் ஐகஸஹெட்ரன்; லோகோ!
அய்யய்யோ! மோதி பிரதமராக உள்ள அரசின் பிரமாதமான முதல் சாதனையாக — — ஒரு பக்கம், ஓமர் அப்துல்லா + கிரீஷ் கர்னாட் + யுஆர் அனந்தமூர்த்தி + லாலு பிரசாத் யாதவ் + மல்லிகா சாராபாய் + தேவ கௌடா போன்றவர்களெல்லாம், அவர்கள் சத்தியம் செய்ததுபோல், இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டு — நாளைக்கே அமெரிக்காவிலேயோ அல்லது வேறேதாவது எழவிலேயோ போய் நிரந்தரமாகத் தங்கிவிட முயற்சி செய்யப் போகிறார்களே என்று நான் வருத்தத்துடன் ஆனந்தத்தில், கதனகுதூகலத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் தருணத்தில்…
… இன்னொரு பக்கம், பாவம், மோதியின் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி குறிப்பிடத் தகுந்த வெற்றி பெற்றதற்குப் பின் – பலரும் தொழில்முறை அறிவுரைக்காரர்களாக மாறி விட்டார்கள். இத்தனை நாள் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் – இப்போது பிரதம மந்திரி ஆகப் போகிறாய் அல்லவா? உடனே விலைவாசியை அடக்கு, தீவிரவாதத்தை அடக்கு, என அடக்குஅடக்கு என்று துடிக்கிறார்கள்… ஆக்கபூர்வமான அறிவுரைகளை அளித்தே தீருவேன் என்கிறார்கள். Read the rest of this entry »
ப்ரியங்கா ஸிங் எனத் தன்னை அழைத்துக் கொள்பவரின் கீச்சல்தான் மேற்கண்டது. :-)
இந்தக் கிண்டல்களில், நையாண்டிகளில் அமிழ்வதற்காகவே ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள், டிவிட்டரில் நிபந்தனையற்றுச் சரணடைந்துவிடப் போகிறேன்… ;-) Read the rest of this entry »


