ஐடி தொழில், குளுவானியம், முதலாளியம், ஜெயமோகன், நமது ஜொலிக்கும் இஸ்ரோ ஆட்கள், வாய்ப்புகள், நம் பிரச்சினைகள், – சில குறிப்புகள்
January 8, 2015
முதலில் மூன்று வெவ்வேறூ எதிர்வினையாளர்களின் மின்னஞ்சல் கருத்துகளின் சாராம்சம்:
1. எனக்கு, கஷ்டத்திலிருப்பவர்களிடம், கடும் துன்பத்தில், திக்குத் தெரியாமல் வாடுபவர்களிடம் கரிசனம் இல்லை. மனிதாபிமானமேயில்லை.
2. நான் ஒரு மேட்டிமைவாதி (elitist!). உச்சாணிக் கொம்புகளில் இருக்கும் ஆட்களைப் பற்றி மட்டும்தான் எனக்குக் கவலை. என் பார்வையில், கீழே இருப்பவர்களெல்லாம் ஒதுக்கத் தக்கவர்கள், வெறுக்கப் படவேண்டியவர்கள்.
3. ஜெயமோகன் மேல் பொறாமையுடன் புழுதி வாரியிறைக்கும் கும்பலில் நான் ஐக்கியமாகி விட்டேன். நான் அவருடன் நேரடியாக கடிதப் போக்குவரத்து வைத்துக்கொள்வதை விடுத்து, எதிர்க்கருத்து சொல்லி, ஒத்திசைவில் பதிவிடுகிறேன். நேரடியாகப் பேசித் தீர்த்துக்கொள்ளக் கூடிய விஷயங்களை இப்படியா வெளியில் கொட்டுவது, கல்லெறிவது?
சரி. இவர்களுக்குத் தனித்தனியாக பதிலனுப்பாமல் இங்கே சுருக்கமான பதில்.
1. அம்மணி, எனக்கு மனிதாபிமானம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் குளுவானபிமானம் சர்வநிச்சயமாக இல்லை. மன்னிக்கவும். நம் சமூகத்தில் பிரச்சினையென்னவென்றால் – பளிச்சென்று தவறென்று தெரியும் அயோக்கியத்தனத்தைச் சுட்டாமல் (ஏனெனில், நம்மைப் பற்றி நமக்கே ஒரு கீழ்மையான மதிப்பீடு) புன்னகையுடன், அற்ப சராசரித்தனத்தைத் தட்டிக் கொடுக்கிறோம். சொறிந்து விடுகிறோம். ஆதூரமாக உளறிக் கொட்டுகிறோம். எனக்கு இது ஒத்துவராது.
2. எனக்கு இதில் குற்ற உணர்ச்சி இல்லை. அய்யா, நீங்கள் சொல்வது சரியே. நான் ஒரு எலீட்டிஸ்ட்தான். ஆனால், சகல வாய்ப்புகளும் திறப்புகளும் இருந்தும், சோம்பேறித்தனமாகக் கீழேதான், சாக்கடையில்தான் உழன்று கொண்டிருப்பேன் என்றும் ஆகவே கழிவிரக்கத்தில் வாடி, என்னையும் “அடடா!” “அய்யோ பாவமே!” என்று உச்சுக்கொட்ட எதிர்பார்ப்பதையும் நான் அரைகுறைத்தனமாகத் தான் கருதுகிறேன். அவ்வளவுதான். சராசரித்தனம் (என்னிடத்தில் இருப்பதும்கூட!) என்பது வெறுத்தொதுக்கப்படவேண்டியதே!
3. அய்யா, நான் அவர் பேரில் புழுதிவாரியிறைக்கவில்லை! ஏன் இப்படிப் புரிந்து கொண்டீர்கள்? என் கருத்துகளை மட்டுமே பதிவு செய்தேன். நான் அவருக்குக் கடிதம் எழுதியிருக்கலாம் – எனக்குத் தயக்கமெல்லாம் இல்லை. ஆனால், நான் எழுதுவதில் இயல்பாகவே(!) ஒரு காரம் இருக்கும்; சுற்றி வளைத்து சிலபலானபலருடன் சிலம்பம் ஆடாமல் என்னால் எழுதவேமுடியவில்லை. ஏனெனில், என்னால் இக்காலங்களில் – ஒரு குறிப்பிட்ட மனோவியாதியின் (=anal retentive person who isn’t satisfied with any result!) காரணமாக, சில முதலாளிகளைத் தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறேன் என்பதை நீங்கள் அறிந்ததே!
அவர்கள் இணையத்தில் பலவிதமான கடைகளை நடத்துகிறார்கள்: அட்டைக்காப்பிக் கடை, டவுன்லோட் கடை, லத்தீன்அமெரிக்கக் கடை, திராவிடவிடலைக் கடை, புரட்சிகரமைதுனக் கடை – அண்மையில் இந்த ஜோதியில் துள்ளிக்குதித்துக்கொண்டோடி ஐக்கியமாகியிருக்கும் குளுவானிய அமைதிக் கடை — போன்றவை அவை.
நான் இப்படியெல்லாம் அவருக்கு நேரடியாக (அவருடைய கட்டுரைகளை விட நீளநீளமாக!) கண்டமேனிக்கும் எழுதினால் – பொதுசபையில் வளையவரும் அவருக்கு சங்கடம் வரும்; ஏனெனில், என் பார்வையில் நகைக்கத்தக்கவர்களாக இருக்கும் இந்தப் பொட்டிக்கடை முதலாளிகள், அவருடைய நண்பர்களாக இருக்கலாம் – அல்லது நான் எழுதுவது முகம்சுளிக்கவைக்கும் வசையில் இருக்கலாம். நான் எழுதுவது பண்பாடில்லாமல், கொஞ்சம் ஓவராகவே இருப்பதாகப் படலாம். அவருக்குத் தேவையேயற்ற ஒரு மேலதிக இக்கட்டினைத் தர நான் விரும்பவில்லை. இன்னொன்று: இல்லாவிட்டால், அவர் என் கடிதத்தை பகீரதப் பிரயத்தனம் செய்து எடிட் பண்ணவேண்டி வரும் – ஆகவே, அவர் கடிதத்தைக் கண்டுகொள்ளாமலேயே விடலாம் – ஆகவே, நானே போட்டுக்கொள்கிறேன்! :-)
உங்களுக்கு ஒரு வம்பு: அண்மையில் அவருடன் நடந்த ஒரு சுர்க்மான உரையாடலில் – அவர் என்னை நேரடியாகவே, மிக நீள நீளமாக எழுதுவதாக, (எனக்கு) முன்பின் தெரியாத இரண்டு இளைஞர்களுக்கு முன் பரிகாசம் செய்தார். இந்தக் கிண்டலைப் பொறுக்காமல்தான், அதனால்தான் அவர்மேல் கல்லெறிகிறேன். போதுமா? :-)
சரி.
-0-0-0-0-0-0-0-0-
முதலில், ஒரு அடிப்படை உண்மையை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என விழைகிறேன். அது என்னவென்றால் – தற்காலச் சமூகப்பொருளாதாரச் சட்டகங்களின் ஊடுபாவுகளினூடே, நவீன காலத்தில் – ஏதாவது படிப்பறிவு பெற்று (அல்லது பெறாமலேயேகூட) தொழிற்புலங்களில் நுழையும் பேறுபெற்ற ஒவ்வொரு குடிமகளுக்கும் (ஆகவே குடிமகனுக்கும்) வாய்ப்புகள் என்பவை அபரிமிதமாக இருக்கின்றன. இணையம் இருந்தாலும், இல்லாமலிருந்தாலும் இந்த வாய்ப்புகள்/திறப்புகள் இப்படித்தான் இருக்கின்றன.
மேலும், மிகமிக முக்கியமாக — ஒவ்வொரு குடிமகனுக்கும், வெறும் வாய்ப்புகளுக்கான சம உரிமை (equality of opportunity) என்பது மட்டுமல்லாமல், அவற்றைத் தொடர்வதற்கான அடிப்படைப் பின்புலச் சமனும் (equality of status) இருக்கிறதுதான். இதனைப் புரிந்துகொண்டு (நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும் என்கிற அவசியம் இல்லை) மேலே செல்லலாம்.
ஆனால் – விடாமுயற்சி செய்யும் மனப்பாங்கில்லாததால் – மற்றபடி பலவிதங்களிலும் பயிற்சி இல்லாததால், ஒரு ஏட்டுச் சுரைக்காய் அளவில் கூட படிப்பறிவும் இல்லாமல், சுயமுனைவு, சுயஅர்ப்பணிப்பு, தொழில்தர்மம் என்ற ஊரிலேயே பிறக்காமல் – நம்முடைய பெரும்பாலான இளைஞர்கள் விசிலடிச்சான் குஞ்சப்பர்களாகவே இருக்கிறார்கள்.
புலம்பிக் கொண்டேயிருப்பதுதான், குண்டுசட்டியில் கழுதை ஓட்டுவதுதான் முக்கியம் என நினைத்து தமிழ்த் திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அமர்க்களமாக விமர்சனம் எழுதுகிறார்கள். ஏமாந்தால் கவிதை, கதை, கட்டுரை, கீச்சல், ஃபேஸ்புக் சுவற்றில் சதா ஒண்ணுக்கு அடித்தல் என அனைத்தையும் புளகாங்கிதத்துடன் ‘டைம் பாஸ்’ முறையில் செய்கிறார்கள். நுகர்கிறார்கள் – ஆனால், இவற்றையாவது சுத்தமாகச் செய்யக் கற்றுக் கொள்கிறார்களா?
பல சமயங்களில் இதற்குமேலே பரிணாம வளர்ச்சியுற்று – ஒரு எழவையும் புரிந்து கொள்ளாமல், அலுங்காமல் நலுங்காமல் முதலாளியம் சமூகநீதி என உளறிக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். மேலும்மேலும் அரசு பஜனைவேலைகள் தேவை, ஆகவே மேலும் இட ஒதுக்கீடு எனச் சுயமரியாதையே இல்லாமல் நாயாக அலைகிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது…
-0-0-0-0-0-0-0-
ஆனால், அதே பின்புலத்திலிருந்து அதே வாய்ப்புகளைப் பெற்று, அசுரவுழைப்பு உழைத்து, அவற்றை வெற்றிகரமாகத் தொடர்ந்து – அதிசயிக்கத்தக்க விதத்தில் மேலெழும்பி வரும் ‘மைனாரிட்டி’ நவீன ஜாதி ஒன்று இருக்கிறது. அதன் மக்கள் தாம் பஞ்சமர்கள். இவர்கள் தாம் விடிவெள்ளிகள். :-)
மேலும், இந்தப் பஞ்சமர்களில் ஜொலிக்கும் கணினிக்காரர்கள் – பெரும்பாலும் அற்பர்களுக்கு அநியாய சம்பளம் தரும் தனியார் நிறுவனங்களில் இல்லை.
என்னைப் பொறுத்தவரை, அவர்கள் இந்திய அரசு நிறுவனங்களில் (முக்கியமாக இஸ்ரோ – இந்திய விசும்பு ஆராய்ச்சி நிறுவனம், டிஆர்டிஓ – தேசப்பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி நிறுவனங்கள், ஸிடேக் போன்றவை, இந்திய ரெய்ல்வே, அணுசக்தி தொடர்பான ஆராய்ச்சி மையங்கள்) மூன்றாம் மனிதர்களுக்குத் தெரியாமல் பணி செய்து கிடந்துகொண்டிருக்கின்றனர். இவர்களில் சிலரை மிகவும் நன்றாகவே அறிவேன்!
மறுபடியும், மறுபடியும் ப்ர்ஹ்மத்துக்கு நன்றி. நான் கொடுத்து வைத்தவன் தான்!
-0-0-0-0-0-
சரி. முதலாளித் தொழில், தொழிற்சங்கத் தொழில், அரசுத் தொழில், அரசியல் தொழில், உடலால் உழைக்கும் தொழில், மூளையால் உழைக்கும் தொழில், தட்டச்சுப் போராளித் தொழில், வாய்வீங்கப் பேசும் தொழில் போன்ற அனைத்துத் தொழில்களிலும் நிச்சயம் பிரச்சினைகள் இருக்கின்றன. அவை அனைத்தும் களையப்பட்டு சம்பத்தப்பட்ட தொழில்கள் மேம்படுத்தப் படவேண்டியவைதான்.
என்னுடைய கருத்து என்னவென்றால் – எல்லா பிரச்சினைகளுக்கும் பலவிதமான பின்புலங்கள், பரிமாணங்கள் இருக்கின்றன. இவற்றில், சராசரி மானுடன் ஒரு சராசரியாக மட்டுமே இருக்க முயல்வதும் ஒரு பெரிய காரணி.
ஆனால், எந்த ஒரு இடரினை, தடையை, பிரச்சினையை எதிர்கொள்ளும்போதும் – எதிர் தரப்பில்தான் அனைத்து அயோக்கியத் தனங்களும் இருக்கின்றன என்று கற்பனை செய்து கொள்வதுதான் பெரும்பாலும் நடைமுறையில் இருக்கிறது. எதிர் தரப்பு ஆட்கள்தான் பிரச்சினைகளைக் கிளப்புகிறார்கள் – நான் அயோக்கியனாக, படு அரைகுறையாக, அற்பனாக இருப்பதுகூட எதிர்தரப்பின் சதியால்தான் நடக்கிறது என்றுதான் நினைக்க நம் மக்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்!
நாமில்லாத, நமக்கு வெளியே இருக்கும் — ஆரியன் தான், பார்ப்பனன் தான், சினிமாக் காரன் தான், மலையாளிதான், வட நாட்டான் தான், வெள்ளைக்காரன் தான், முதலாளிதான், பன்னாட்டு நிறுவனக்காரன் தான், அமெரிக்காதான், யூதன் தான், முஸ்லீம்தான், ஹிந்துத்துவாதான், தொலைக்காட்சிதான், ஜாதியமைப்புதான், …, …, <உங்களுக்குச் செல்லமான எதிரிச் சதிகார கும்பல்களை, அமைப்புகளை இதில் சேர்த்திக் கொள்ளவும்> —- போன்ற இருமையும் இருண்மையும் சார்ந்த பாகுபாடுகள் மூலமாகவே – நம் அரைகுறைத்தனங்களை நாம் தொடர்ந்து போஷித்து வருகிறோம்.
நம் சொந்தக் காரணிகளைப் பார்க்கவேபார்க்காமல் – மற்றவர் குண்டியில் கலம் மலம் இருக்கிறது என்று மட்டும் பார்க்கும் பார்வையில் கிடைக்கும் இன்பம்ஸ் என்பதே அலாதிதான்! இந்த மனப்பான்மைக்கு, (complete externalization of our own problems) திராவிட முயக்கங்கள் தொடர்ந்து தரும் பங்கு மகத்தானதே!
ஆகவே, என்னைப் பொறுத்த வரை, கீழ்கண்ட இரண்டு சிடுக்கல்களைத் தீர்க்க முடிந்தாலே ஒரு சராசரிக் குளுவான் சரியாகி வளர்ந்து ஆல் ஆகி, பின் குஞ்சுமாகி – பின் இறக்கைகளை விரித்துப் பறந்து விடுவான்:
- சராசரிக் குளுவானுக்கு – தன்னுடைய வாழ்வைச் செம்மைப் படுத்திச் செல்லக்கூடிய வழிகளைப் பற்றிய அறியாமை; ஆனால் இந்த அறியாமையினால் ஏற்பட்ட அகங்காரமும், ‘எனக்கு நீங்கள் சலுகை கொடுக்கத்தான் வேண்டும்’ மனப்பான்மையும். (arrogant sense of entitlement)
- கழிவிரக்கத்தையும் கோபத்தையும் ஒழித்துவிட்டு – பிரச்சினை தன்னிடம்தான் பெரும்பாலும் இருக்கிறது, தனக்கு வாய்ப்புகளும் திறப்புகளும்வேண்டிய அளவு இருக்கின்றன, தான் சோம்பலை, அதமத்தை, தாமச குணத்தை மட்டும் ஒழித்தால் போதும் எனும் அறிதல்.
-0-0-0-0-0-0-
சரி. அடுத்த பதிவில் நிறுவப் படப் போவது: அ) ->>> சராசரி ஐடி குளுவான் ≠ நவீன அடிமை (சர்வ நிச்சயமாக, ∀)
நேரமிருந்தால், படிக்கலாம்:
- ஜோ டி’க்ரூஸ், ஜெயமோகன், பாஜக, மோதி, தீரா விட அறிவுமயக்கம், கருத்துச் சுதந்திரம், அரிப்புஜீவிகள், ப்ரொடெஸ்ட்வாலாக்கள், போங்கடா! 22/04/201
- ஜெயமோகன்(மஹாமஹோபாரதம்) = வெண்முரசு 02/01/2014
- ராமசாமி – யாரில்லை? 12/11/2013
- சுழன்றும் கதைப் பின்னது அண்டம்…11/06/2012
- ஜெயமோகன்: ’காந்தியின் திமிர்’ பற்றிய குறிப்புகள் 05/05/2012
January 8, 2015 at 18:43
Sir,
I could always see your noble intention of your wish in encouraging youngsters to rise to their potential behind your jibes at them:)
I am software engineer with 9 years of experience. I also admit that I am guilty of wasting time.
I have also experience the managment does not give a damn about the code quality or architecture rather it wants to get the project completed asap.This inturn is dictated by the time the business or client wants rather than the time it needs to be accompilshed.
The interesting work is done in Amazon,Google etc but the entry is obvously too tough.
All the self learning/improvement has to be done outside the work hours which I am obviously trying to do.
ps: I would love if you write/point to article regarding software as you have written blogs reg lisp.
January 8, 2015 at 19:21
Dear Sivaram, I understand your angst. It does appear to be a catch22 situation.
Amazon, Google and all do some reasonable work – but IMHO, THE best hitech and avant garde work is done at ISRO and DRDO labs. But entry in to them is difficult too – and they will be available at only at the entry level.
However, what I feel is, if you can’t do goodwork thru’ your current employer – you can always take part in OpenSourceInitiatives and do very satisfactory work. And, believe me, if you do good work and become good in some niche area, your life is made for you. I know of many people who have done nice things like that.
One immediate example would be the case of Abhijit Menon-Sen(http://toroid.org/ams/). Check out guys like him, if possible team with them. ISTR that he didn’t go beyond 10th std! He didn’t have to!
You know what, actually the CS field is one of the greatest and finest things to have happened to India and to us – here, we do not have a whole lot to catch up with the west.
My best wishes!
__r.
January 8, 2015 at 19:36
Thanks a lot for your pinters.Appreciate it.
March 29, 2019 at 09:39
[…] ஐடி தொழில், குளுவானியம், முதலாளியம், ஜ…08/01/2015 […]