மனுஷ்யபுத்திரன்(புலி வேட்டை)=ராக்ஷசபுத்திரி(புளிக் கொட்டை)
September 28, 2014
டொன்மைமிகு டொல்காப்பியப் பூங்காவில்
மரத்தின் கீழ் விழுந்த புளியம்பழத்தை
மனுஷ்யபுத்திரன் ஒருவன்
பிய்த்துச் சாப்பிட்டுவிட்டான்.
பிராண்டிப் பிய்ப்பதற்கு முன்
நீ பிரெண்டா இல்லையா என
பத்து நிமிடம் கத்திக் கொண்டே
உற்றுப் பார்த்துக்கொண்டு அதனை
அன்ஃப்ரெண்ட் செய்தான்
கருத்துப் படம்: முன்நவீனத்துவ புளியம்பழமும், பின்நவீனத்துவ புளியங்கொட்டையும் (படத்தின் உரிமம்: ஹேர்டை பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திடம்; அவர்களுக்கு நன்றி பல!)
வழுக்கி விழுந்துகொண்டிருக்கும்
புளியம் பழத்தை பின் வழித்தெடுத்து அதன்
தத்துப் பித்துவார்த்த பிரச்சினையை
நீர்க்கச் செய்து புளியோதரை செய்யலாமா
என எண்ண வேண்டியிருந்தது அவனுக்குபுளியங்கொட்டை அது, டொன்மைமிகு
டமில் டொல்காப்பியப் பூங்காவில்
முந்திரிக் கொட்டைபோல முண்டியடித்துகொண்டு
பிறந்தது என்பதால் தன் மூத்த கொட்டைகளின்
சேட்டையாடும் பழக்கத்தை
தன் ஆழ்பருப்பிலிருந்து எழுப்ப வேண்டியிருந்ததுஅது மனுஷ்யபுத்திரனுக்கும் ஒரு
மகாமகோ அக்கிரமமான கவிதையிடும் வாய்ப்பை
வழங்க வேண்டும் என்பதால்
அவகாசம் எடுத்துக்கொண்டிருக்கலாம்அந்த மனுஷ்யபுத்திரன் ரசம் செய்வதற்கு
முழுமையான ஆயத்த நிலையில் இருக்கிறானா
என்பதை பரிசோதிக்க அது விரும்பியிருக்கக் கூடும்தனக்கு அப்போது
முழுமையாக படைப்புப் பசி எடுக்கிறதா
அல்லது படையலைப் படபடக்கப்
படைத்துச் சுடச்சுடப் பரிமாறிவிடலாமா என்பதை
உறுதிப்படுத்திகொள்ள அந்த
மனுஷ்யபுத்திரனுக்கும் கொஞ்சம் நேரம் தேவைப்பட்டிருக்கலாம்கொட்டை இலக்காக இருக்கும்
ஒரு புளியம்பழம் தன்னை தயவுசெய்து விட்டுவிடுங்கள்
என நாக்குழற, குரல் கம்ம, கண்ணீர் மல்க
தன்னைக் கையெடுத்து கும்பிடுவது
அந்த மனுஷ்யபுத்திரனுக்கு
ஒரு வினோதமான காட்சியாக இருந்திருக்கக் கூடும்
பழத்தினுடைய புராதன கொட்டை நினைவுகளில்
அத்தகையை காட்சிகள் எதுவும் இல்லைஅந்தப் ஞானப்பழம் மனிதர்களால் வளர்க்கப்பட்டதால்
அதற்கு
தன்னைச் சாப்பிடவிருக்கும்
மனிதனின் ரசத்தை
ரசிக்கும் பழக்கம்
எப்படியோ வந்துவிட்டிருக்கவும் கூடும்அல்லது
அது பூரணமான ஒரு கொழுக்கட்டை
போன்றது என்பதால்
அந்த மனுஷ்யபுத்திரனை
அது அவ்வளவு நேசத்துடன்
அரவணைக்க விரும்பியது
என்பதாகவும் இருக்கலாம்ஆனால்
அது மனுஷ்யபுத்திரனைக் கண்டு
கொஞ்சம் பயந்தது
அவன் உண்மையிலேயே
கவிதைக்காரன்தானா என்று
அது நிச்சயப்படுத்திக்கொள்ள விரும்பியதுஆனால், பத்து நிமிடம் ஊறிய பிறகு
விடுதலைப் புளியான அது
தனது செயற்கையின் விதிப்படி
அந்த மனுஷ்யபுத்திரனால் கவிதை கிண்டப்பட்டு
தின்றுவிடப் பட்டதுசுபம்.
-0-0-0-0-0-0-0-0-
- குறிப்பு1: மேற்கண்ட கவிதையானது, மகாமகோ மனுஷ்யபுத்திரன் அவர்களின் ‘வேட்டை’ கவிதையால் பாதிக்கப்பட்டு, மாளாத் துயரத்தாலும் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவார்த்தப் பிரச்சினைகளாலும் பீடிக்கப்பட்ட, நம் தலைமுறையின் தலைசிறந்த பெண்ணியக் கவிஞர் ராக்ஷசபுத்திரி அவர்களால் எழுதப்பட்டது.
- குறிப்பு2: பெண்ணியக் கவிதைகளில் அவசியமாக இருந்தேயாகவேண்டிய யோனி, முலை, கருப்பை, மாதவிடாய், பிரசவம், ஆண்குறி (ஆகவே வெட்டியெறி!), ஆணாதிக்க வெறி போன்ற கூறுகள் குறிப்பிடப்படாமல் எழுதப் பட்ட முதல் ராக்ஷசபுத்திரிக் கவிதையிது. ஆக தன்னளவில் இது முக்கியமானது.
- குறிப்பு3: இந்தக் கவிதையைக்(!) கிண்ட ராக்ஷசபுத்திரி எடுத்துக் கொண்ட நேரம் பத்தே நிமிடங்கள். ஏறத்தாழ இதே காலஅவகாசத்தில் – இடுபொருட்கள் எல்லாம் தயாராக இருந்தால், என்னால் சுவையான, விடுதலைப்புளியே இல்லாத தக்காளி ரசத்தையும் சமைக்கமுடியும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
- குறிப்பு4: என் அளவுகடந்த மதிப்புக்கும் எல்லையற்ற மரியாதைக்கும் உரிய பெண்ணியப்புயல், கவிதாயினி ராக்ஷசபுத்திரி அவர்களை தயவுசெய்து
மன்னிக்கவும்ஊக்குவிக்கவும்.
-0-0-0-0-0-0-0-
தொடர்பில்லாத, ஆனால் அலக்கியப் பதிவுகள்: அலக்கியம், காப்பிக்கடை, இன்னபிற இழவுகள்…
September 28, 2014 at 12:27
நீண்ட நாட்களுக்கு பின் மனம் விட்டு சிரித்தேன்
நன்றி
September 28, 2014 at 12:59
அன்புள்ள ஹேமா ரவி,
நீங்கள் அதிகம் வரலாம்.
அன்புடன்:
எஸ். ராமகிருஷ்ணன்.
September 28, 2014 at 13:45
புலிக்கு புளி நன்றாகவே ரசிக்க வைத்தது. ஆனால் புதுக்கவிதை தான் …..ஐயோ
September 28, 2014 at 15:52
ஐயா, உங்கள் செல்ல நோ ராவண கம்சனை ஏன் விட்டுவிட்டீர்கள்? ஒத்திசைவு தளம் இதுபோல் எத்தனை புலிகளைப் பார்த்திருக்கும்? அந்தப்புலி எவ்வளவு காலமாக ஒத்திசைவு படித்துக்கொண்டிருக்கும்! :))))))
September 28, 2014 at 16:54
bore..
September 28, 2014 at 22:19
ஐயா, இந்த ராக்ஷசபுத்ரியின் மற்ற படைப்புகள் எங்கு கிடைக்கும்? சுட்டி தந்து உதவ முடியுமா? :-)))))
September 29, 2014 at 06:44
அய்யன்மீர்,
பெண்ணியப்புயல் ராக்ஷசபுத்திரி (கவனிக்கவும் – ராக்ஷசபுத்ரி அல்லர்) அவர்கள் எழுத்துகளின் மூன்று திரட்டுகளை பத்ரி சேஷாத்ரி அவர்களின் உழக்கு பதிப்பகம் – 2015 சென்னை புத்தகச் சந்தையில் வெளியிடுவதாகத் தகவல். (தொகுப்புகளின் தலைப்புகள்: 1) காலந்தோறும் ஆண்குறி 2) ஒரு சதுர அறையின் நான்கு முலைகள் 3) முலையே இல்லாத வட்ட அறை – இதில் ஒன்று மட்டும் கவிதைத் தொகுப்பு அல்லவாம்; எனக்கு அது எது என்று தெரியவில்லை)
இன்னொரு தகவல்: ராக்ஷசபுத்திரி அவர்களும் நோ ராவணகம்சன் அவர்களும் மணமுடிக்க நிச்சயித்திருப்பதாகவும், அவர்களுடைய தாலியறுப்பு-ஆணாதிக்கவெறுப்பு மணவைபவத்தில் ராவணகம்சன் அவர்களுக்கு புத்திரி – ஒரு கைலி கட்டுவதாகவும் – அப்போதிலிருந்து அந்தக் கைலியைக் கட்டிக்கொண்டு மட்டுமே ராவணகம்சன், ஒரு கைலிவலிய நிலையில் அலையப்போவதாகவும் ஒரு திட்டம் இருக்கிறது.
நன்றி.
September 30, 2014 at 09:17
பெண்ணியக் கவிஞர் ராக்ஷசபுத்திரியின் புளகாங்கிதம் தரும் கவிதை கண்டேன். எங்கே வைத்திருந்தார் இதுவரை இத்தனைத் திறமையை. என என் மனம் இன்னும் படபடத்துக்கொண்டிருக்கிறது. அன்னாரின் அரிய, பெரிய படைப்புகள் மேலும் மேலும் புற்றீசல் போல் புறப்பட்டு கன்னித்தமிழைக் களிப்பேற்றுமாக! உங்கள் வலைப்பக்கத்துக்கும் வளம் சேர்க்குமாக!
-ஏகாந்தன் (இன்னுமொரு கத்துக்குட்டிக் கவிஞன்)
September 30, 2014 at 20:16
அன்பின் ராம்
ரொம்ப நாட்களுக்குப் பின் ஒரு பக்கா ஹாஸ்யப் பதிவு.
நல்லா சிரித்து மகிழ்ந்தேன். :-)
October 1, 2014 at 11:07
நல்ல வேளை அது கவிதை என்று குறிப்பிட்டிருந்தீர்கள்..!
October 31, 2014 at 13:42
அய்யா,
கைது, விடுதலை, தமிழர் போராட்டம், வேண்டுதல் பற்றி ஒரு பதிவு எதிர்பார்த்திருக்கிறேன்…
November 3, 2014 at 12:25
அய்யா புகழேந்தி, எனக்கு — இந்த கைது, சிறை, ஜாமீன் வகையறா தமிழப் புல்லரிப்புகள் விஷயம் பற்றியெல்லாம் சரியாகத் தெரிந்துகொள்வதற்கு அவ்வளவு பொறுமையோ அறிவோ – முக்கியமாக நேரமோ இல்லை.
மேலும், விஷயங்கள் நடக்கநடக்க, முட்டியடி எதிர்வினையாக எல்லாவற்றைப் பற்றியும் கருத்து சொல்வது எனக்கு ஒத்தும் வராது. ஏனெனில் என் அறியாமையின் அளவு மிகவும் அதிகம்.
என்னை மன்னித்து விடுங்கள்.
June 3, 2018 at 06:23
[…] மனுஷ்யபுத்திரன்(புலி வேட்டை)=ராக்ஷசப…28/09/2014 […]