திராவிடத் திரித்தல்கள்

December 30, 2014

கடந்த பதினைந்து நாட்களில் கண்டமேனிக்கும்  வேலை தொடர்பான/தொடர்பில்லாத அலைச்சல்; சென்னைக்கு 6 முறை சூறாவளிச் சுற்றுப்பயணம் (எல்லாம் அரசுப் பேருந்துகளில்தான்!) செய்தேன். வழக்கம்போல, சென்னையின் மஹாநதி வண்டிப் பிரவாகங்களில் வழிதெரியாமல் தலைசுற்றிய படலங்களும் நடந்தேறின. :-(

ஆனால் சுவாரசியத்துக்கும் குறைவில்லை. ஏனெனில், பயணங்களின்போது – பேருந்து கிளம்பியவுடன், படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு – பக்கத்திலிருப்பவர்களுடன் (அவர்கள் தோதுப்பட்டு வந்தால்) கதைக்க ஆரம்பித்து விடுவேன்.

Dravidian Zeitgeist! Here I come… :-)

திராவிட மாயை அக்கப்போர்களில் கிடைக்கும் இன்பம்ஸ் கொஞ்சம் அலாதிதான்! சுவையோ சுவைதான்!!  ஒரேயொரு பிரச்சினை என்னவென்றால், சிலசமயங்களில் சிரித்துச் சிரித்து மாரடைப்பு வரும் நிலைக்குப் போய்விடுகிறது – என்ன செய்வது சொல்லுங்கள்… ;-)

சரி. இப்போது மூன்று சுவாரஸ்யங்கள்…

-0-0-0-0-0-0-0-

சுவாரஸ்யம் #1:  திராவிடர் கழக பழைய மனிதர் (=இப்போது நொந்துபோய் விலகியிருப்பவர்) பலரில் ஒருவரான விக்கிரவாண்டி செல்வராஜ் அவர்களுடன் சந்தோஷமாகச் சுமார் இரண்டு மணி நேரம்போலக் கதைத்துக்கொண்டிருக்கும் அனுபவம் வாய்த்தது. சி அயோத்திதாஸ், ரெ சீனிவாசன், ஈவெரா, சிஎன் அண்ணாத்துரை, மு கருணாநிதி, கி வீரமணி எனப் பலரைப் பற்றிய பல எண்ணங்கள்/நிகழ்ச்சிகளைப் பற்றி (பண்புடன்)  பேசிக் கொண்டிருந்தார்.

இவர்கள் தொடர்பான என்னுடைய சில ஐயங்களை, கருத்துகளை அவரிடம் கேட்டு/சொல்லி அவர் எதிர்வினைகளைக் கேட்டறிந்தேன். அவர், பொதுவாகவே – திராவிட இயக்கத்தின் கோட்பாட்டுத் திரித்தல்களையும் நடைமுறைச்  ‘சில்லறை’த் திரித்தல்களையும் பற்றிக் கொஞ்சம் வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தார்.

நல்ல நகைச்சுவை உணர்ச்சியும் மிக்கவரான அவருடைய அனுமானத்தில், நம் தமிழகத்தில் முறையாகப் பதிவு செய்யப்படாத  ‘நடிகர் விசிறி சங்கம்’ ஒன்று பெரிய அளவில் இயங்கிக் கொண்டிருக்கிறது – இதுதான் தமிழகத்தின் தலையாய பிரச்சினை. சம்பந்தப்பட்ட அந்த நடிகரின் பெயர் கருணாநிதி.  (இவருடன் இன்னொரு முறை விஸ்தாரமாகப் பேசவேண்டும்)

-0-0-0-0-0-0-0-0-

சுவாரஸ்யம் #2: சினிமா இயக்குநர் கே பாலச்சந்தர் அவர்கள், சில நாட்கள் முன் இறந்துவிட்டார் என்பதை நேற்று, என் சென்னை நோக்கிய மறுமறுமறுமறு… … …  பயணத்தில் அறிந்துகொண்டேன்.

சரி. நாம் எல்லோரும் ஒருவழியாகப் போய்ச்சேரத்தான் பிறந்திருக்கிறோம் – ஆக, இது ஒரு சுவாரஸ்யமான விஷயமே இல்லை. இந்த சாதாரண மறுசுழற்சியை சாக்காக வைத்துக்கொண்டு நீட்டிமுழக்கி அஞ்சலித்தனமாகப் பெரிதாகச் சிலாகிப்பதற்கோ அல்லது சாணியிறைத்துத் தூற்றுவதற்கோ ஒரு விதமான அவசியமும் இல்லை. அவரும் ஒரு தொழிலில், அதற்குத் தேவையான குணாதிசயங்களுடன் ஈடுபட்ட பலரில் ஒருவர்தான். காலாகாலத்தில் போய்ச் சேர்ந்து விட்டார். சரி. உலகம் தொடர்ந்து முயங்கிக்கொண்டுதான் இருக்கும். வேறு வழியில்லை.

… ஆனால் என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த சினிமா ரசிகனுக்கு இது ஒரு மாபெரும்  சோகம்! ஆச்சரியமாகத் தான் இருந்தது. (இவன் இளைஞன் தான் – இவர்களுக்கெல்லாம் மிஷ்கின் பம்ப்கின் நேப்கின் என்கிற ரீதியில் புது டைரடக்கர்கள் பெயர் தான் தெரியும் – பழைய ஆட்கள் அறிமுகமாகியிருக்கமாட்டார்கள் என நினைத்துக் கொண்டிருந்தேன்!)

பாலசந்தருக்கு, அவருடைய கலையுலகச் சேவைக்காக பாரத ரத்னா கொடுத்திருக்கவேண்டும் என்றான்! அப்படி என்னப்பா சேவை என்றால் – இயக்குநர் சிகரம்,  இயக்காதவர் பள்ளத்தாக்கு, ரஜினிகமல் எனப் பலப்பல விஷயங்கள் உதிர்ந்தன. அது அப்டியில்லப்பா, அடிப்படைத் தகுதிகள் வேண்டாமா,  என்றெல்லாம்  நான் சொல்ல முற்படுவதற்குள் – குறைந்த பட்சம்  அவருடைய சடலத்துக்கு அரசு மரியாதையாவது கொடுத்திருக்கலாம் என்றான்!

அரசு மரியாதையா, அப்படியென்றால் என்னவென்று கேட்டால் ஒரு பழைய புளித்த கதையைச் சொன்னான். அது அப்படியில்லை என்று தெளிவுபடுத்த முயன்றால், ட்விட்டரில்  ‘விஷயம் தெரிந்தவர்கள்’ அனைவரும் அப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள் என்றான்! என்ன இருந்தாலும் கலைஞரின் தைரியம்  யாருக்கு வரும் என்றான். ஹ்ம்ம்…

அவன் சொன்னதன் சாராம்சம்:

  • கருணாநிதி அவர்கள் தாம் இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக, இறந்த மாமனிதர்களுக்கான அரசு மரியாதையை, அரசமைப்புடன் தொடர்பில்லாதவர்களுக்குக் கொடுத்தார். பெரியாரின் சடலத்துக்கு அரசு இறுதி மரியாதையைக் கொடுத்தது கருணாநிதி அவர்கள்.
  • ஏன் இப்படிச் செய்தாய் என்று ஆணவம் கொண்ட மத்திய அரசு அவரை மிரட்டியபோது, அவர் தைரியமாகச் சொன்னார் “ நீங்கள் காந்தி விஷயத்தில் அன்று என்ன செய்தீர்களோ, அதைத்தான் நான் இன்று பெரியார் விஷயத்தில் செய்தேன்!”

… ஆனால் – நான் 1974ஆம் ஆண்டிலிருந்தே இதைப் பற்றிய பல வதந்திகளை, வடிவங்களை, நகைச்சுவைகளை அறிந்துள்ளவனாதலால் – வீட்டிற்கு வந்தவுடன் அப்படி என்னதான் இந்த ட்விட்டர் எழவில்  ‘விஷயம் தெரிந்தவர்கள்’ சொல்லியிருக்கிறார்கள் என வேலை மெனக்கெட்டுத் தேடிப் பார்த்தால், ஒரு  ‘புரட்சிப்புயல்’ இப்படி ஒரு கீச்சலைக் கீச்சியிருந்தது:state_honour1என்னடா இது ஆச்சி சாம்பார் பொடிக்குப் போட்டியாக கலைஞர் அவர்கள் தன் கொள்ளுப்பேத்தியின் பெயரில் ஒரு பொடிக்கடையையும் ஆரம்பித்துவிட்டாரோ என நொந்துகொண்டு, திரை துரை மரை கழன்று – பின்னர் கூர்ந்து கவனித்தால்…

ஆனால் இது இன்னொருவரின் மீள்கீச்சல்/மேற்கோள் வகையறா- பின்னர் மேலும் மண்வெட்டி ஆராய்ச்சி செய்து  – ட்விட்டர்மூலம் வதந்திமூலம் எனத் தேடுசொற்களை மாற்றிப் போட்டு,  ‘ஹோம்வர்க்’ செய்து  :-( – இவ்விஷயம் தொடர்பான முழுமுதற்கீச்சலுக்குச் சென்றால் அது இப்படி விரிந்தது! :-)state_honour2

ஆனால், இந்த இரண்டாம் தொடர்கீச்சலே முதற்கீச்சலை மறுதலிக்கிறது! அய்யகோ!

அதாவது, இவற்றுக்குப் பொழிப்புரை எழுதவேண்டுமென்றால்:

1.  “நாட்டிலேயே முதன்முறையாக, எந்த பதவியிலும் இருந்திராத தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை தரப்பட்டது. உத்தரவிட்டவர் கலைஞர்

இது, ‘எஸ்கேபிகருணா’ அவர்களே ஒப்புக்கொண்டுள்ளது போல, தன்னுடைய முந்தைய ட்வீட்டை மறுதலித்ததுபோல – தவறு. ஏனெனில் மோஹன் தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களுக்கு இது 1948ஆம் வருஷத்திலேயே அளிக்கப்பட்டுவிட்டது, ஜவஹர்லால் நேரு அவர்களால்! ‘நாட்டிலேயே முதன்முறையாக!!’

2.  “மத்திய அரசு அதற்காக கலைஞரிடம் விளக்கம் கேட்டபோது, மகாத்மாவிற்கு அளிக்கப் பட்டதற்கான காரணம் எதுவோ, அதுதான் என்றாராம்.

இது பீலா; முழுப்பொய். கட்டுக்கதை. கருணாநிதி அவர்களே, தம் 1973-5 மேடைப்பேச்சுகளில் பலமுறை, அரசியல் ஆதாயத்துக்காக, ஒட்டு சேகரத்துக்காக, கைதட்டல்_விசில்களுக்காக என, இப்படி ஒரு சுவாரசியமான போராளி வதந்தியைப் பரப்பினாலும் அப்போதே விமர்சனங்கள் எழுந்தன. என் நினைவுகள் சரியாக இருக்குமானால்,  ப. ராமமூர்த்தி (அப்பழுக்கற்ற கம்யூனிஸ்ட் இவர்! இக்கால திராவிட இயக்க இளைஞர்களுக்கு இவரையெல்லாம் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே! எனக்குத் தெரிந்து, தோழர் ராமமூர்த்தி அவர்கள் திரைப்படவுலகினுடன் தொடர்பிருந்தவர் அல்லர்) போன்றவர்களால் இடதுசாரி மேடைப்பேச்சுகளில் அக்காலங்களிலேயே அம்பலப்படுத்தப் பட்ட  நகைக்கத்தக்க விஷயம் இது. அந்தக் காலத்தில் – மேதகு முசிறிப்புத்தன் கூட இதனைக் கொஞ்சம் விரசமாகவே மேடைப்பேச்சுகளில் கிண்டல் செய்ததாக, மங்கல் நினைவு. (பழம் பஞ்சாங்கங்கள், இதைப் பற்றி ஏதாவது மேலதிகமாகச் சொல்லமுடியுமானால்/திருத்தமுடியுமானால் அதுவும் சரியே!)

எது எப்படியோ – இது  வதந்தியல்ல, உண்மை – என்பதற்கான சான்றாக ஒரு ஆவணத்தைக் கூட (எடுத்துக்காட்டாக – 1) மத்திய அரசின் விளக்கக் கேட்பு ஆணை/கடிதம் அல்லது 2) மாநில அரசின் விளக்கம் அல்லது  3) மாநில தலைமைச் செயலரின் கோப்பு விளக்கம் அல்லது 4) மாநிலமுதல்வர்-மத்திய உள் நாட்டமைச்சர் இருவருக்கிடையேயான இவ்விஷயம் தொடர்பான பேச்சுகளின் பதிவுகள் அல்லது 5) வாய்மொழி உரையாடல்களுக்கான மாநிலஅரசின் நாட்குறிப்புகள் அல்லது 6) மத்திய உள் நாட்டு அமைச்சகத்தின் அலுவலகப்பரிந்துரைகள் – இன்னபிற போன்றவை) கருணாநிதி அவர்களின் தரப்பினால் 1973ல் கொடுக்க முடியவில்லை. கடந்த 40 ஆண்டுகளாகவும் கொடுக்க முடியவில்லை.

இருந்தாலும்  துளிக்கூட ஆதாரங்களோ வேறு எந்த எழவுகளோ – ஒன்றுமே இல்லாத இந்த வதந்தி, மறு சுற்றுகளுக்கு வந்துகொண்டேயிருக்கிறது. ஆனால் லெமூரியா பற்றிய அற்பக் கட்டுக்கதைகளே உண்மைகளாக பவனி வரும்போது, இந்தச் சிறிய பீலா எம்மாத்திரம்! :-(

பாவம்,  இந்த  ‘எஸ்கேபிகருணா’ போன்ற இளைஞர்கள், இந்தக் கதையாடல்களை இன்னமும்  நம்பிக்கொண்டிருக்கிறார்கள். (ஒருகால், இவரிடம் இவ்விஷயம் தொடர்பான ஏதாவது நம்பகத்தன்மை மிகுந்த ஆவணம் இருக்குமோ என நினைக்கவும் முடியவில்லை. ஏனெனில் இவரும்  ‘அதுவாம் இதுவாம்’  எனும் ஆனந்தவிகட/விடுதலைரீதியான வதந்திபரப்புப் பாணியில் தான், தப்பித்துக்கொள்ளும் வழியில்தான் எழுதியிருக்கிறார். ஆக, உண்மையில் இவர் பாவம், EsCaPeeKarunaவோ? )

நம் தமிழகத்தில் இருக்கும் அப்பாவி இளைஞர்களுக்கு, ஏன் நம்மால், ஓரளவுக்குக்கூட, குறைந்த பட்சம் சமகால வரலாற்றறிவைக் கூடப் புகட்ட முடியவில்லை? எனக்கு வருத்தமாகவே இருக்கிறது.

ஒரு கேள்வி: இப்போது எனக்கு ஒரு சந்தேகம் – இந்த  ‘லக்கிக்ருஷ்ணா’ என்று தன்னை அழைத்துக்கொண்டு கீச்சலிடுபவர், எனக்கு (=உங்களுக்குமேகூட!)  முன்னமே ’யுவகிருஷ்ணா’ என்ற பெயரில் அறிமுகமாயுள்ள, ஈவிரக்கமற்ற காப்பிக்கடை அதிபரா, அல்லது வேறு யாராவது பாவப்பட்ட இளைஞரா? யாராவது ‘விஷயம் தெரிந்தவர்கள்’  சொல்லமுடியுமா?

 -0-0-0-0-0-0-0-0-

சுவாரஸ்யம் #3: ஒரு விழுப்புரம்கார இளம் திராவிடமுன்னேற்றக்கழகச் செயல்வீரனுடன் பேசிக்கொண்டிருந்தேன். சிலபல மாதங்கள் முன்புபோல, ஒரு கழகப் பயிற்சிப் பாசறையில் பங்கேற்று திராவிட இயக்கத்தைப் பற்றி பல அடிப்படைகளை, வரலாற்று உண்மைகளைக் கற்றுக் கொண்டிருக்கிறேன் எனச் சொன்னார், பாவம்.  திருடுவதற்கும், சோடாபுட்டிகளை வீசுவதற்கும், கல்லெறிவதற்கும், பஸ் எரிப்பதற்கும், தார் பூசுவதற்கும், சைக்கிள் செய்ன் சுற்றுவதற்கும், குடித்துவிட்டு ரோட்டோரத்தில் மூத்திரத்தைப் பீச்சியடித்து (+இலவச இணைப்பாக வாந்தி) சாலையில் ஆற்றுவெள்ளம் ஏற்படுத்துவதற்கும், டாய்மொலி தமிளிள் பேஸ்வதற்கும் உள்ள ஆறாறு வித்தியாசங்களை அடுக்குமொழி பொறுக்கிநடையில் கண்டுபிடித்துக் கொண்டிருந்திருப்பாரோ? ஆனால் பாவம், அவர் ஒரு வெள்ளந்தி இளைஞராகப் பட்டதால், இப்படியெல்லாம் இசகுபிசகாகக் கேட்டு அவரைத் துன்புறுத்தவில்லை.

என்ன கற்றுக் கொண்டீர்கள் எனக் கேட்டதற்கு – 1920களில் ஜஸ்டிஸ் பார்ட்டியை ஆரம்பித்தவர்களில் ஒருவர் கலைஞர் என்றார்! அப்போ தலைவருக்கு, இப்போ குறைந்த பட்சம் 130 வயசா எனக் கேட்டேன். ஆமா, ஒதெக்குதே என்றார், யோசித்தவாறே! பாவம்.

சர்க்காரியா கமிஷன் பற்றி ஏதாவது கற்றுக் கொண்டீர்களா என்று கேட்டேன். இல்லை.

ஏன் திருமா கட்சி, மாலெ கட்சி, சீமான் கட்சியெல்லாம் பிடிக்கவில்லையா, அவற்றில் நிறைய இளைஞர்கள் இருக்கிறார்களே என்று கேட்டால், சொன்னார் – ஆதிதிராவிடர்களை, சிறுபான்மையினர்களை ஆரம்பம் முதலே காக்கும் கட்சி திமுக ஒன்றுதான். பெரியார்தான் ஒரு நிஜமான ஆதிதிராவிடத் தலைவர். அவர் தான் இந்தியாவிலேயே முதன்முதலாக ஆதிதிராவிடர்களுக்காகக் குரல் எழுப்பினார்! (நான் விதிர்விதிர்த்துப் போய்விட்டேன்!)

சகோதரி+சகோதரச் சண்டைச் சச்சரவுகளுக்குப் பின் மிச்சமிருக்கும் நேரத்தில், இசுடாலினார் அவர்கள்கூட வந்து இயக்கம் பற்றி ஒரு வகுப்பு எடுத்தாராம், பாவம்! (=”எவ்ளோ செவப்பு சார், அவ்ரூ!” “தலமுடி இன்னும் கர்ப்பா இர்க்குசார்! ஒரு நரைமுடி இல்லே! அவ்ருக்கு அறுவது வய்சு ஆய்ட்ச்சாம்சார், நம்பவே முடில. எல்லாம் இயக்கத்துக்காக அவ்ரு கொடுக்ற வொளப்பாலதான் சார்! அவ்ருதான் சார் ட்ரூ லீடர்,” “2016ல அவ்ருதான் சார் சிஎம், ஊளல ஒளிச்சுர்வார் சார்!  “அந்த அம்மா இனிமே அவ்ளோதான்!” “கலைஞர் ஒளச்சு சம்பாரிச்ச அத்தன பணத்தையும் மக்களுக்கே கொட்த்துட்டார்!” )

அவருடைய கருத்தெல்லாம் அவருடைய சொந்த தயாரிப்புக் கற்பனையா அல்லது கழகப் பட்டறைப்பாசறையில் அவருக்குப் படிப்பிக்கப்பட்ட பாலபாடமா என்று அனுமானிக்க முடியவில்லை. முதலில் நானும் உரையாடினாலும் அரைமணி நேரத்திற்குப் பின் திமுக பற்றிய அந்தப் பையனுடைய கருத்துகளுக்கெதிராக நான் ஒன்றும் பெரிதாகப் பேச முற்படவில்லை. ஆனால், அவர் பேசிக்கொண்டேஇருந்தார். என்னைப்போன்றவர்தான் – பிறத்தியார் கேட்கிறார்களோ இல்லையோ,  ‘என் கடன் பேசிக்கொண்டு கிடப்பதே’காரர்தான்! ;-)

ஆக, கொஞ்சம் துவண்டுபோய்  – புதுப்பட்டினம் பேருந்து நிறுத்தத்தில், ‘இங்க ரொம்ப காத்து வருது, குளுர்து’ என்று இடம் மாறி உட்கார்ந்துகொண்டேன்.

அலுப்பாக இருந்தது – எவ்வளவு வெள்ளந்தி இளைஞர்கள் – விட்டில் பூச்சிகள் போல, இந்த  அறங்களைப் பொசுக்கிவிடும் திராவிடத் தீயில் இன்னமும் சேர்ந்து எரிக்கப் படுகிறார்கள்!

இத்தனைக்கும் அந்தப் பையர், பிஏ முடித்துவிட்டு பிஎல் படித்துக்கொண்டிருக்கின்றார் என்றும் சொன்னார்! நம்பவே முடியவில்லை.

-0-0-0-0-0-0-0-0-0-

ஹ்ம்ம்ம்… என்ன இருந்தாலும், ஆயிரம் நொள்ளை சொன்னாலும்கூட –  திராவிடத்தைச் சுற்றிச்சுற்றிப் பல வசீகரத் தொன்மங்கள் நம்முடைய சமகாலங்களில் பின்னப்படுவதைப் பார்த்தால் வெகு சுவாரசியமாகவே இருக்கிறதுதான்! 8-)

நாளை மற்றுமொரு நாளே!

மேலும் அக்கப்போர்களுக்கு, 2014 வருடமிறுதி வரை தொகுக்கப்பட்ட: திராவிட (எதிர்ப்) பக்கங்கள்!

5 Responses to “திராவிடத் திரித்தல்கள்”

  1. Anonymous Says:

    சார், உங்கள் கேள்விக்கு பதில். யுவக்கிருஷ்ணா லக்கிக்கிருஷ்ணா லக்கிப்பீடியா எல்லாம் ஒரே பதிவரே. இவருடைய உண்மையான பெயர் கிருஷ்ணக்குமார். ஒரு தெலுங்கர். பத்திரிக்கை நிருபர். தீவிர திமுக சப்ப்ஓர்டர். skpkaruna is a engineering college owner. Also dmk. jemo sir appreicated skpkaruna short story once. check jemo blog.


    • அய்யா அனாமதேயம்,

      அவர் தெலுங்கராகவோ, திமுககாரராகவோ அல்லது மங்கோலியராகவோ இருப்பதெல்லாம் ஒரு பிரச்சினையுமில்லை. இந்தத் தெலுங்குத்தனத்தை ஏன் எழுதினீர்கள் எனப் புரியவில்லை.

      நான் தமிழன் தான் – அதனால் எனக்கு என் தமிழைக் கொலை செய்ய உரிமை இல்லையா என்ன? ஆகவே அவரும் தாராளமாகக் கொலை செய்யலாம். கொல். கொல்லவிடு. ஆளைவிடு.

      எனக்கு இவர்கள் ;போன்றவர்களுடைய காப்பியடித்தல்தான் பிரச்சினையே தவிர – இவர்கள் ஒரு நல்ல தகப்பனாக இருக்கலாம், மற்றபடி நல்ல பிரஜைகளாக இருக்கலாம் என்ற சாத்தியக்கூறுகளையும் கருத்தில் கொள்கிறேன்.

      அவரவருக்கு அவரவர் போதாமைகள், வேறென்ன சொல்ல. :-(

  2. பெரியார் தடி Says:

    திராவிடம் இல்லையெனில் நீ இடுப்பில் துண்டைக்கட்டிக்கொண்டு கும்பிடுறேன் சாமின்னு எந்த குடுமிக்காவது சொம்படித்துக்கொண்டிருப்பாய்.ஆனால் சில பார்ப்பன அடிமைகளுக்கு குடுமிவாசம் சுகத்தை தருவதாகவே உள்ளது.இந்த துரோகிகளை ஒடுக்கப்பட்ட மக்கள் கண்டுணர வேண்டும்

  3. Anonymous Says:

    திராவிடம் பரவாத கர்நாடக ஆந்திர மாநிலங்களில் சக திராவிடர்கள் சொம்பு தூக்குவதாக தெரியவில்லையே.. பயம் ஒன்றே உங்கள் மூலதனம்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s