பலவந்தமாகப் பாலியல் பலாகாரம் செய்வது எப்படி?
June 23, 2014
ஆம். நீங்கள் சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள்; அதுவும், தினசரி குறிப்பிட்ட வேளைகளில், பலவந்தமாகப் பாலியல் பலாகாரம் செய்தால் கிடைக்கக்கூடிய பலான பலன்களைப் பற்றித்தான் எழுதப் போகிறேன்.
இது அக்கப்போர் அல்ல. இதனை இன்னொரு முறை அடிக்கோடிட்டுக் கொள்ளவும்.
ஆண் உடல் தாங்கிய பெண்கள், ஆண் உடல் தாங்கிய ஆண்கள், பெண் உடல் தாங்கிய ஆண்கள், பெண் உடல் தாங்கிய பெண்கள், ஆண்ணியப் பெண்கள், பெண்ணிய ஆண்கள், பெண்ணியப் பெண்கள், ஆண்ணிய ஆண்கள் என்றெல்லாம்போல ‘குறையொன்றுமில்லை கோவிந்தா’ புகழ் ராஜன் குறை கிருஷ்ணனார் அவர்கள் எழுதியதற்குப் பதிலாக எழுதப்பட்டதில்லை இது.( பார்க்க: மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமையை (தொடர்ந்து) கொளுத்துவோம்!)
அதேபோல, என் பெருமதிப்புக்குரிய அம்பை அவர்கள் விட்ட அம்பை எதிர்கொள்ளவென்றெல்லாம் இல்லை. (படிக்க: பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம்)
… ஏனெனில் – நான் பெண்ணிய வாதியோ, ஆண்ணிய வாதியோ அல்லது இன்னபிற படுபயங்கரவாதியோ அல்லன். எந்த ஒரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் வர்க்கமோ (= x2 ), வர்க்கமூலமோ (=√x ) அல்லது ஆணாதிக்கமோ, பெண்ணாதிக்கமோ அல்லது ஜாதியோ மதமோ – ஏன், மூளையோகூட இருந்தேயாகவேண்டிய அவசியம் துளிக்கூட இல்லை என நினைப்பவன். ஆக – கட்டுடைப்பு தெர்ரிதா காமாலைக்கண் என்றெல்லாம் மாய்ந்துமாய்ந்து அலைந்து அல்லாடுபவன் அல்லன்.
ஆனால் ஒவ்வொரு நாளுக்கும் முன்னாலும் பின்னாலும் இருக்கும் பாலியல் பற்றித்தான் இந்தக் குறிப்பு. சரியா?
-0-0-0-0-
மானுட இனம், காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை பால் அருந்துவது என்பது, அந்தப் பால் கறக்கப்படாவிட்டால் மடி கனத்து அல்லாடக்கூடும் பசுவிற்கும் மிக உவப்பான ஒன்று. மேலதிகமாக, பசுவின் கன்றைத் துளிக்கூட அதன் தாயின் பாலைக் குடிக்க விடக்கூடாது என்கிற சுத்தசன்மார்க்க ஆன்மிக ஜீவகாருண்ய பார்வைக்கும் இது ஒத்துவருவது.
பண்டைய பாலி மொழியில் இதற்கான அடிப்படைக் குறிப்புகள் இருக்கின்றன. தேடிப் படித்துக் கொள்ளவும். பெரும்பாலாற்றுப்படை கூட இதனைப் பற்றிக் குறிப்பிடுவதாக நினைவு.
ஆனால், அணுவுலைகளின் காரணமாகவும், ‘யாதுமாகி நின்றாய் காளீ’ பெண்ணியத் தமிழ்க் கவிஞர்களாலும், களவாணி இணைய ஆண் எழுத்தாளர்களாலும், சுற்றுச் சூழல் மாசுகேடுகளாலும், இன்னபிற கந்தறகோளங்களினாலும் – தமிழ்ப் பசுக்களின் பால் சுரக்கும் தன்மை குறைந்து கொண்டே வருவதை சகோதரர் ‘யேஸ்ஸூ அளைக்கிறார்’ பால் தினகரன் சுட்டியதை நினைவில் நிறுத்திக் கொண்டால், தமிழகத்தின் பால் வறட்சியை உணரலாம்.
… மேலும், பாற்சுரப்பிகள் இருப்பது பாலுக்காக அல்ல என்கிற பிரபஞ்ச தாத்பரியத்தை நன்குணர்ந்த தமிழ்த் திரைச்சதையுலகக் காரர்கள் – தமிழகத்து தமிழ் மகாமகோ திரைப்பட மாதர்களின் பால் சுரப்பிகளைக் காட்டிக் காட்டி, பார்த்துப் பார்த்து அலுத்துப் போய், இப்போதெல்லாம் பிற (=மலையாளம், பஞ்சாப், தெலுங்கு, மஹாராஷ்ட்ரா…) இளம் மாதரசிகளின் பால்சுரப்பிகளை வெறித்துக்கொண்டிருப்பதுதான் திராவிடத் தமிழ் ஆண்களுக்கு அழகு என்பதை உணர்ந்து அவற்றைப் பிதுக்கியும் தூக்கியும் காட்டி வருகின்றனர். இத்தகைய தமிழ்ப்பால்வறட்சிச் சூழலில், தமிழக ஆண்கள் ஆர்ப்பரித்துக்கொண்டு அடலேறென எழுச்சி பெற்று பால் சுரக்கவும் ஆரம்பிக்கவேண்டிய அவசியத்தை உணரலாம்.
இருந்தாலும், ஆண்பால் கிடைக்காத பட்சத்தில், பெண்பாலுடன் சிறிது பலவின் பால் கலந்து – ஒரு பனிரெண்டு நாட்கள் அவின் பால், ஆவின் பால் (இதை எந்தவொரு தமிழக டொக்கிலும் வாங்க முடியும்; தமிழக அரசே விற்கும் பால் இது!), இவின் பால், ஈவின் பால் (கவனிக்கவும்: ஈயின் பால் அல்ல; ஈக்களுக்கு பால்சுரப்பிகள் கிடையாது, பாவம்) என ஃபால் வரை – பன்னிரு வகை உயிர்ப் பால் வகைகளைக் குடிக்க வேண்டும்.
பின்னர் 18 நாட்கள் மெய்ப்பால் அருந்தலாம் – கப்பால், ஙப்பால் என ஆரம்பித்து… மானுடத்தின் குவிந்த உள் நோக்கிய மெய்ஞானம் குறித்த ஆன்மிக வளர்ச்சிக்கு இது இன்றியமையாதது. இவற்றை ஞானமரபுப் பால்வகைகள் எனவும் விளிக்கலாம்.
இப்படித் தொடர்ந்தால் – உயிர்ப் பால் + மெய்ப் பால் = ஞானப்பாலுக்கும் அப்பால் – என்று சமன்குலைரைக்கும் நாயாக அலைந்து கைவல்ய நிலையை அடையலாம்.
ஆனால், பயப்படாதீர்கள்!
இக்காலங்களில் பாலியல் (=Milkalogy) எனப் பரவலாக அறியப் படும் தத்துவம் தான் இது. அதாவது புதியபுட்டியில் பழைய பால்; இந்தக்கோட்பாட்டின் இலவச இணைப்பின்படி, பால் என்பதை ஆர்கனிக் பாலாகத்தான் (இனார்கனிக் வஸ்துவாக அல்ல) அருந்துவது என்பது பின் நவீனத்துவக் கட்டுடைப்பின், சர்வரோக சமரசங்களினூடேதான் செரித்துக்கொள்ளமுடியும் எனும் கோட்பாடு. இதனை நான் மேலதிகமாக விளக்கவேண்டியதில்லை.
இந்த காலைப் பாலுடன் வாயை மேல் நோக்கி ‘ஆ’வெனத் திறந்து, பழத் துணுக்குகளை அதற்குள் போட்டுக்கொண்டு நன்றாக அசைபோட்டுச் சாப்பிடுவது சாலச் சிறந்தது. இதுதான் பலாகாரம் எனப் படுவது.
இந்த பாலியல் பலாகாரத்தை அனுதினமும் அவசியமாக, விடவேவிடாமல் பலாத்காரமாக காலையில் சாப்பிட்டால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். உடல் உபாதைகளும் இன்னபிற வாயுத் தொல்லைகளும் நம்மை அண்டவேமாட்டா! அலுவலக நேரத்தில் பிறத்தியார் செலவில் இணையத்தில் படிப்போதி படிப்புப் படித்து உய்யவும் செய்யலாம்.
கையில் சேமிப்பு இருந்தால், தூங்குவதற்கு முன், இதேபோல பாலியல் பலாகாரத்தைச் சாப்பிட்டால் – நல்ல துர் சொப்பனங்கள், ஸ்கலிதங்கள் ஏற்படலாம்.
யாம் பெற்ற பேறு, பெருக இவ்வையகம்.
-0-0-0-0-0-0-0-0-0-0-
இப்போது என் அபிமானத்துக்குரிய ஆண்ணியக் கவிஞர் காளையம்மா , அவர் கணவரான பெண்ணியம் பேசும் எருதய்யன் (தலைவர்: புரட்சிகர கிழவர் முன்னணி) அவர்களின் உந்துதலில் எழுதி , அவருடைய ஆதர்சக் கவிஞரான பசுவய்யாவுக்கு (=சுந்தர ராமசாமி) சமர்ப்பணம் செய்த புதுக்கவிதை:
புரட்சிப் பசு!
பசுக்களுக்கு நான்கு முலைகள் கீழ் நோக்கி
மார்க்கச்சையில்லாமல் ஆட்டிக்கொண்டு நடக்கின்றன அவை
ஆனால் தனித்த ஒரே யோனிதான்
அது இருப்பதோ பின்புறம்இவை முறையே
மேல் நோக்கி, முன் நோக்கி மாறுவது எப்போது?காளைக்கு ஒரே முளை
கிள்ளி எறியவேண்டாமா அதை?புணர்வதற்கு முன்
உணர வேண்டாமா தோழி?புரட்சிகரமைதுனக்காரர்களின் உயர்த்திய முஷ்டி
திராவிடத் தமிழர்களின் பிளாஸ்டிக் முன்னிணைப்பு
போராளிக் குளுவான்களின் வெற்றுக் காற்றுக்குழாய்இவை அனைத்தையும் பார்த்துப் பார்த்து
அலுத்துப்போய் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கும் யோனிகள்இவை தவிர்த்து புணர்ச்சியின் சோகமுனகல்களூடே
புதுவிடியல்கள் வருவது எப்போது?புணர்ச்சிப் பூபாளங்கள் சூல் கொண்டு
ஆண்குறிகளை அறுத்தெறிவது எப்போது?— காளையம்மா
… … புரட்சிக்கவிதாயினி காளையம்மா அவர்கள் பார்வையில் யோனி, புணர்தல், முலை எல்லாம் ஒருமுறை வந்தாலேபோதும், அது ஒரு புரட்சிகர டுபுக் கவிதையாகிவிடும். ஆனால் இந்த கவிதையில் இவை குறைந்த பட்சம் இரண்டு முறையாவது அட்டென்டென்ஸ் (=உள்ளேன் அய்யா) கொடுக்கின்றன. ஆகவே இந்தக் கவிதைதான் இந்த 2014-15 வருடத்தின் சிறந்த கவிதை.
ஏன், பசுவய்யா ஒரு ஆண் இல்லையா? அவரை மட்டும் உயர்த்திப் பிடிக்கிறீர்களே என்று நான் கேட்டதற்கு, கவிதாயினியின் கோபமான பதில் கவிதை:
ஏனென்றா கேட்கிறாய் எத்தனே!
பால் சுரப்பில்லா பசுவய்யாவுக்கு இரண்டேமுலைகள்
ஆனால் படைப்புச் சுரப்பு அதிகம்
அதனால் தான் அவர் கவிதைகளும் எழுதினார்.ஆகவே…
-0-0-0-0-0-0-
இரவு தூங்குவதற்கு முன் மறுபடியும், மறக்காமல் பாலியல் பலாகாரம் செய்யவேண்டும்.
நன்றி. வணக்கம்.
June 24, 2014 at 02:50
அன்பு ராமசாமி ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்ல வருகிறீர்கள்? என்னுடைய கவனச்சிதறல் காரணமா அல்லது . . .
June 24, 2014 at 12:44
ஐயகோ! என்ன ஒரு கொடுமை ! வெங்கடாசலம் அவர்களே இதைப் போய் ஒன்றும் புரியவில்லை என்று கூறிவிட்டீர்களே.தற்போதைய ‘பெண்ணீய’ கவிஞர்களின் ஒரு கவிதையை கூட இதுவரை நீங்கள் படித்ததில்லையா மாதிரிக்கு ஓன்று.
லீனா மணிமேகலை எழுதியது
ஒரு புணர்தலின் உச்சியில் விலகி
அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்
கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்
உபரி என யோனி மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்
மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்
இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்
மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்
குறியை சப்ப குடுத்தாய்
பெர்லின் சுவர் இடிந்தது
சோவியத் உடைந்தது
எழுச்சி என்றாய்
அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்
கீழே இழுத்து
உப்பை சுவைக்க சொன்னேன்
கோகோ கோலா என்று முனகினாய்
மயக்கம் வர புணர்ந்தேன்
வார்த்தை வறண்ட
வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்
இது கட்டவிழ்ப்பு என்றேன்
June 24, 2014 at 09:25
பால் விலக்கு தான் இதற்கு ஒரே தீர்வு
http://majpoovannan.blogspot.in/2013/08/blog-post_7949.html
பால் விலக்கு போராட்டம் ஏன் யாருக்கும் தோன்றவில்லை.பால் கறப்பதை விட கொடிய பாலியல் வன்முறை எதுவும் இருக்க முடியாது .மிருகவதை எதிர்ப்பு போராளிகளும் பசு,எருமையின் மீதான இந்த பாலியல் வன்கொடுமையை இன்று வரை எதிர்த்ததாக தெரியவில்லை .
பாலூட்டிகள் எனப்படும் ஜீவராசிகள் தங்களின் குழந்தைகளு…க்கு பாலூட்டி வளர்க்கும்.அதனால் அவற்றிற்கு மடி உண்டு
குட்டி போடாமல் தன்னால் பால் சுரக்காது.பால் கறப்பதை யாராவது பார்த்திருக்கிறீர்களா .பால் சுரப்பதற்க்காக குட்டியை சில வினாடிகள் மடியை நக்க வைத்து விட்டு பின்பு வலுக்கட்டாயமாக பிரித்து எடுப்பார்கள்.கதறும் குட்டியை பார்த்து கட்டி போடப்பட்ட பசுவும் கதறும்.ஒரு சொட்டு விடாமல் பால் கறக்கப்படும்.
பசுவை சினையாக்குவதர்க்கு வெளிநாட்டில் இருந்து விந்து மட்டும்,அல்லது காளை இறக்குமதி செய்யப்பட்டு பசு கர்ப்பம் ஆக்கப்படும்
பல ஆண்டுகளுக்கு பசுவை கட்டி போட்டு ,வலுக்கட்டாயமாக அதற்குள் செயற்கையாக விந்துவை ஏற்றி சினையாக்கி,குட்டி போட்ட பின் குட்டியின் கதறலை கேட்டபடி பால் கரக்கபடுவதை விட/அதை வைத்து அபிஷேகம் செய்வதை எதிர்க்க வேண்டும் என்று எந்த காந்தியவாதிக்கும் தோன்றாதது ஆச்சரியம் தான்
மிருக பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகள்,பெரியவர்கள் பல லட்சம் பேர் உண்டு.மது ஒவ்வாமை எனபது மிகவும் அரிது
பால் குடிப்பதால் வரும் வியாதிகளும் ஒன்றும் குறைவு கிடையாது .ராமர் பாலத்தை விட மத ரீதியாக கொண்டாடப்படும் , இவ்வளவு பெருமை கொண்ட பசுவின் மீது பாலியல் வன்முறை புரிந்து கரக்கபடும் பாலை விலக்க யாரும் போராடதது ஏன் என்று விளங்கவில்லை
June 24, 2014 at 09:51
இதைத்தவிர, ஆப்பிரிக்காவில் மட்டுமே இருக்க கூடிய பெரிய காது யானையின் பாலை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். ஆப்பிரிக்காவிலிருக்கும் எனது வாசகர் மொகஞி பத்துவருடங்களாக அடியேனுக்கு அனுப்பி வருகின்றார். இத்தனைக்கும் அவருக்கு தமிழ் தெரியாது, தமிழில் மட்டுமே எழுதும் எனக்கு மட்டுமே இது போன்ற வாசகர்கள் இருக்கின்றார்கள். பதினைந்து வருடங்களால நான் அப்பாலை பருகி வருவதால்தான் இளமையாக இருக்கின்றேன். என் உடலை பணயம் வைத்து நான் கண்டறிந்து கூறுவதை கேட்காமல், பசுவின் பாலை குடிப்பது என்பது தமிழ்நாட்டில் மட்டுமே நடக்க கூடியது.
June 24, 2014 at 14:21
மில்காலஜி பற்றி இவ்வளவு அரிய, பெரிய விஷயங்களை நான் இதுவரை படித்ததில்லை; கேட்டதுமில்லை. பெரிய சப்ஜெக்டுதான் இது!
காளையம்மாவின் கவிதை கண்டேன்; சிலிர்த்தேன். ஆஹா! இந்த நூற்றாண்டின் இனிய கவிதைகளில் ஒன்று இது என்பேன்!
இன்னொன்றும் சொல்கிறேன்: இப்படியெல்லாம் நீங்கள் எழுதிக்கொண்டே போனால், உங்கள் வலைப்பக்கத்துக்கு அடிக்கடி வரவேண்டியிருக்கும் என அன்புடன் எச்சரிக்கிறேன்
குறிப்பு: Seshagiri பின்னூட்டத்தில் குறித்திருக்கும் கவிதை – அடடா! பின்நவீனத்துவத்தின் பின்புறம் எழுதப்பட்ட முதற்கவிதை அல்லவா இது! சொற்குற்றம், பொருட்குற்றம் ஏதுமில்லை. இதனை இதுவரைப் படிக்காததே பெருங்குற்றம்!
-ஏகாந்தன்
June 25, 2014 at 12:09
கமெண்ட் பகுதியில் காப்பி பேஸ்ட் செய்வதையும், ஹைபர் லிங்குக்களை அடித்து தள்ளுவதையும் தடை செய்யும் ஆப்ஷன் ஏதுமில்லையோ? ஜெயமோகன் கட்டுரைகளுக்கு உஷாராக நகைச்சுவை, அனுபவம், இலக்கியம், விமர்சனம் என்று தலைப்பின் கீழேயே தந்து விடுகின்றார். அதையே நீங்களும் அலக்கியம் போன்றவற்றை தலைப்பின் கீழேயே தந்துவிடுங்கள். இல்லையென்றால், பாதி படித்து முடிக்கும் முன்னரே, இணையத்தில் தேடி பேஸ்ட்ட ஆரம்பிக்கின்றார்கள்.
June 25, 2014 at 19:19
ஜெயமோகன் அவருடைய வழக்கமான தமிழ்நாட்டிலேயே ஒத்திசைவு ராமசாமியை தவிர மற்ற அனைத்து ஆசிரியர்களும் மிக மோசமானவர்கள்,அவருடைய கேரள டாக்டர் நண்பரை தவிர மற்ற அனைவரும் மோசமானவர்கள் என்று சொல்வதை போல நாஞ்சில் நாடன் குறிப்பிட்ட யாருக்கும் எழுத்தாளன் என்ற தகுதி கிடையாது என்று அடித்து விட்டிருந்தால் யாரும் பொருட்படுத்தி இருக்க போவது கிடையாது.
எழுத்தாளரை ஆண்,பெண் என்று பிரித்து அந்த பட்டியலில் வந்த பெண்களை குறிப்பிட்டு, பெண் என்பதால் ஒன்றும் தெரியாவிட்டாலும்,எழுதாவிட்டாலும் பிரபலம் என்று பேசுவதை போல வேறு யாராவது ஒருவர் குறிப்பிட்ட சாதி எழுத்தாளர்களில் மிக பெரும்பான்மையானவர்களுக்கு ஒன்றும் எழுத தெரியாது,அவர்களின் சாதி காரணமாக பல முக்கிய பொறுப்புகளில் அவர்களின் சாதியினர் இருந்ததால் ,பத்திரிக்கை துறையை அவர்கள் கையில் வைத்திருந்ததால் ஊதி பெருக்கப்பட்ட பலூன்கள் என்று விமர்சித்தால் சாதி வெறியன் என்று இன்று ஜெயமோஹனுக்கு எதிராக குரல் கொடுத்த பெண்களை கிண்டல் செய்யும் அதே கைகள் எழுதி தள்ளாதா
இதில் அவர் மிகவும் இழிவு படுத்தி இருப்பது நாஞ்சில் நாடனை.ஒன்றும் தெரியாதவர்களை பெண் என்பதால் பட்டியலில் சேர்த்து விட்டார் என்று கூறுவதை விட வேறு இழிவு அவருக்கு இருக்க முடியுமா
பாலியல் அடிப்படையில் குறிப்பிடப்பட்ட அனைவரும் தகுதி இல்லதவர்கள் என்று பேசுவது குறிப்பிட்ட பாலினத்தின் மீதான வெறுப்பு அன்றி வேறு ஏது.
June 25, 2014 at 19:27
பெண் மருத்துவர்கள்,ஆசிரியர்கள்,விஞ்ஞானிகள்,தொழில் முனைவோர் எந்த விருதுக்கும் தகுதி இல்லாதவர்கள்.சிறந்த மருத்துவர்கள்,ஆசிரியர்கள் என்று யார் போடும் பட்டியலிலும் எந்த தகுதியும் இல்லாமல் பெண் என்ற ஒரே காரணத்துக்காக ,அவர்களின் மேல் உள்ள பயத்தினால் பட்டியலில் இடம் பெற்றவர்கள் என்று சொல்லி இருந்தால் இதே ஆதரவு இருக்குமா.
பெண் விமானி என்றால் நான் பயணம் செய்யவில்லை என்று விமான பயணத்தை ரத்து செய்து திரும்பும் ஆட்களும் இவ்வுலகத்தில் உண்டு.அவர்களை கண்டு பரிதாப்பட வேண்டுமே தவிர அவர்களை எதிர்த்து அவர்கள் செய்கையை நினைத்து அவர்கள் புளகாங்கிதம் அடையும் வாய்ப்பை தருவது வீண் வேலை.
June 27, 2014 at 10:16
Facebook or Blog posts when our friend Poovannan writes the discussion ends there. You sure are a ‘show stopper’ Poovannan. :) (Please don’t copy-paste something else now)