ஒரு சராசரி ஐடி குளுவான் என்பவன், நவீன அடிமையா?
January 10, 2015
சர்வ நிச்சயமாக, அவன் அப்படி இல்லவேயில்லை! தன்னை இப்படிச் சொல்லிக்கொள்பவன், விவரித்துக் கொள்பவன் ஒரு அயோக்கியன் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. (கொஞ்சம் தேவையற்ற கருணையுடன் இதனைச் சொல்லவேண்டுமென்றால் – அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு, பிறரையும் ஏமாற்றுபவன். அவ்வளவுதான்!)
நவீனகுளுவானிய கட்டுரை [=0] ஒன்றின் மேலான எதிர்வினையான – என் மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுடைய கட்டுரையின் [1] மீதான ஒரு எதிர்வினையாக, சில மேலதிகமான கருத்துகளை கொஞ்சம் காட்டமாகவே கொடுக்கும் என்னுடைய காட்டுரைகள் – [2], [3], [4] இவற்றைப் படித்துவிட்டு முடிந்தால் தொடரவும்.(பின்புலம்: டிஸிஎஸ் நிறுவனம், தனக்குத் தேவையற்ற 25000 வேலையாட்களை – அவர்கள் தங்களைச் செழுமை செய்துகொள்ள உதவிகரமாக, சராசரித்தனத்திலிருந்து மேலெழும்ப ஏதுவாக – வெளியே அனுப்பப்போகும் சாதாரணச் செய்தி)
… ஐடி/தகவல் நுட்ப வேலையாட்கள் தொடர்பான பல சுவாரசியமான பரப்புரைகள் பதவிசாகப் பரப்பப் பட்டுக்கொண்டே வருகின்றன. சில அப்பாவிகள் இதனையும் நம்பியும் விடுகின்றனர் என்பது தான் சோகம்!
“ஐடி துறையில் வேலை கொடுத்துக்கொடுத்துப் பிழிந்து எடுத்துவிடுவார்கள்!”
“ஐடிகாரர்களுக்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது! முதலாளிகள் ரத்தத்தை உறிஞ்சி விடுவார்கள்!”“வேலை ஸ்திரம் இல்லை! எப்போது வேண்டுமானாலும் கழுத்தைப் பிடித்து வெளியே துரத்தி விடுவார்கள்!”“லாபம் பார்த்தவுடன், அந்த முதலாளிகள் மூட்டையைக் கட்டிக்கொண்டு போய் விடுவார்கள்”“திருட்டு முதலாளிகள் விரித்த வலை தெரியாமல், பாவம் இளைஞர்கள் சிக்கி விட்டார்கள்!”
“கடன் வாங்க ஊக்குவிக்கிறார்கள்!”
“நடுவரிசை அதிகாரிகள், மிட்டில் லெவெல் மேனேஜர்கள் நிர்வாகத்துக்குத் தாளம் போட்டு அடிமட்ட (அதிமட்ட?) ஊழியர்களை நசுக்குகிறார்கள்!”
ஐயாமார்களே, கொஞ்சம்கூடக் கூச்ச நாச்சமேயில்லாமல் குளுவான்களால் பரப்பப்படும் இந்தப் பொய்மைகளை நீங்கள் இன்னுமா நம்புகிறீர்கள்? இவை உண்மையா என்று பரிசோதிக்கவே மாட்டீர்களா? :-(
இந்தக் குளுவான்கள் இன்னொரு எட்டு வைத்து – “கடந்த பத்துநாட்களாக கண்டமேனிக்கும் மேய்ந்து கொத்துபுரோட்டா 100 சாப்பிட்டதால் எனக்கு மலச்சிக்கல், வாயுவும் வெளியேறாமல் உப்புசமாக இருக்கிறது – இதற்கும் அந்த ஐடி நிறுவனமுதலாளிகள்தாம் காரணம்!” என்று சொல்லவில்லை! இயற்கைக்கு நன்றி, வேறென்ன சொல்ல.
சரி. மேற்கண்ட பொய்மைகளில் பலவற்றைப் பற்றி ஏற்கனவே எழுதியாகிவிட்டது. இப்போது இந்த நவீன அடிமை என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
பொதுவாக, இந்த பாவப்பட்ட அடிமை என்பவன் – தன் இச்சையில்லாமல், தன் சுற்றுச்சூழல்களிலிருந்தும் சுற்றம்/மக்களிடமிருந்து பலவந்தமாகப் பிரிக்கப்பட்டு, ஆடுமாடுகள் போல விற்க/வாங்கப்பட்டு – அடிப்படை மனிதவுரிமைகள் என ஒரு சுக்குக் கூட இல்லாமல் – பிழியப்பிழிய வேலை வாங்கப் படுபவன். இவனால் ஒரு கேள்வியும் கேட்கமுடியாது, கேட்டால் சித்திரவதை, நம்பவே முடியாத காட்டுமிராண்டித்தனமான தண்டனைகள். தேவையான உணவோ, ஆரோக்கியமோ, சுற்றுச் சூழலோ எதுவுமே கிடையாது. எதுவுமே – அவன் குடும்பம் உட்பட, அவன் பாத்தியதையில் இருக்காது. கிடந்து உழன்று, ‘கஞ்சி குடிப்பதற்கிலார், அது ஏன் என்கிற காரணமும் அறிகிலார்,’ எனச் சாகவேண்டியதுதான்.

Orlando Patterson / Slavery & Social Death – A Comparative Study / 1990 / Harvard University Press / 067481083X
கொடுப்பினை இருந்தால்தான் இம்மாதிரி புத்தகங்களை அண்டும்பேறு கிடைக்கும் எனத்தான் தோன்றுகிறது – ஏனெனில், எனக்கென்று ஒரு சுக்குக் கல்யாணகுணங்களும் இல்லை.
…ஆனால் & ஆகவே, நவீன ஐடி குளுவானியத்துக்கும், அடிமை முறைகளுக்கும் ஒரு ஸ்னானப் பிராப்தி கூட இல்லை. அப்படி யாராவது கண்டுபிடித்துச் சொன்னால், அது ஒரு பெரிய நகைச்சுவையாகவே, அதிகபட்சம் நகைமுரணாகவே இருக்கும். :-(
சரி. இந்த த ‘நவீன அடிமைத்தனம்’ எனும் சொல்லாடல், நியோ-ஸ்லேவரி (neo slavery) என்பதல்ல என நினைக்கிறேன். ஆனால், இது — இக்காலங்களில் காலத்தின் கோலத்திற்கேற்ப, மாற்றமடைந்து புதுமுறைகளில் வெளிப்பாடு காணும் – இருந்தாலும் அடிப்படையில் ஒருமாதிரியான அடிமைமுறைதான் – எனும் வாதத்தைச் சுட்ட, வெகுஎளிமையாகப் பயன்படுத்தப் படுகிறது எனப் புரிந்து கொள்கிறேன்.
அய்யாமார்களே, அம்மணிகளே – இப்போது ஒவ்வொன்றாக, இந்த அடிமைமுறையின் கூறுகளையும், குளுவான்களில் சித்திரத்தையும் விரித்துப் பார்க்கலாமா? :-(
1. யாரும், எந்த ஐடி குளுவானையும் அவன்/ள் குடும்பத்திலிருந்து விலைக்கு வாங்கவில்லை! அல்லது பணமே கொடுக்காமல் திருடிக்கொண்டு போகவில்லை!
ஆனால், ஒரு தொடர்பில்லாத ஆனால் தொடர்புள்ள ஒரு விஷயம்: இம்மாதிரி விலைக்கு அடிமைகளை வாங்குவதை, தமிழ் நாட்டில் வெள்ளைக் காரர்களுக்குப் பிறகு செய்தது எல்டிடிஇ கும்பலே! ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து (குறிப்பாக காளையார்கோவில், தொண்டி பகுதிகள்) – ஏழைப் பெற்றோர்களுக்கு, அதிகபட்சம் வெறும் 18,000 ரூபாய் மட்டும் கொடுத்து 600 -800 போல 16-18 வயது இளைஞர்களை/சின்னப் பையன்களை வாங்கிக்கொண்டுபோனது இந்த கும்பல். இவை நடந்த வருடங்கள் 1980களின் ஆரம்பங்களில். இந்தச் சிறார்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு அடிமட்ட தறுதலைப்புலிகளாக இருந்து பலிகடாகன்றுகளாக ஆக்கப்பட்டுப் போய்ச் சேர்ந்தார்கள். ஒரு ’அக்கால’ ரா ஆசாமியும், பொதுவாக வாயைச் சாப்பிடக்கூடத் திறக்காதவருமான எனது நண்பர் சொல்படி – இதில் ஒரு தமிழிளைஞன் கூடத் திரும்பிவரவில்லை. வெறும் வெற்றுவேட்டு வீரமரணம்தான், பாவம். இவற்றைப் பற்றியெல்லாம் ஏன் நம் ஊடகங்களில் யாரும் பேசவே மாட்டேனென்கிறார்கள்? ஏன் ஒரு விதமான ஆராய்ச்சியும் இம்மாதிரி விஷயங்களில் செய்யவே முடிவதில்லை?
சரி. நம்முடைய அதிசெல்லங்களான குளுவான்கள் விஷயத்தில் – யாரும் அவர்களை பலவந்தப்படுத்திக் கடத்திக் கொண்டுபோகவில்லை.
அவர்கள் படித்த(!) படிப்புக்குக் கொஞ்சம் கூடத் தொடர்பேயில்லாத வேலைகளை, மேலும் அவர்களுக்கு அவ்வளவு ஆர்வமும் இல்லாத பணிகளை – அவர்கள், சம்பளம்+பஜனை எனும் இரண்டு குறிக்கோட்கள் மூலமாக மட்டுமே கண்டடைகிறார்கள். ஆம். பல நிறுவனங்களும் இவர்கள் இந்த அளவில் இருந்தால்போதும் என்றுதான் எண்ணுகின்றன. (இச்சமயம், என் ஆதர்சங்களில் ஒருவரான சுந்தர ராமசாமி அவர்களின் பள்ளம் சிறுகதை நினைவுக்கு வருகிறது. படித்திருக்கிறீர்களா அதனை? பள்ளம்தானே ரொம்புகிறது?)
இன்னொரு தமாஷான விஷயம் – சில கல்வித்தந்தைகள் நடத்தும் கல்லூரிகளில் – அவர்களுடைய கல்லூரிக்குளுவான்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளச் சொல்லி – சிலபல நிறுவனங்களுக்குக் காவடி கூட எடுக்கிறார்கள்! சில சமயங்களில், இம்மாதிரியான கல்லூரிகளின் ப்ளேஸ்மெண்ட் ஆசாமிகள் கெஞ்சுவதைப் பார்த்திருக்கிறேன். அற்ப கல்விமாமாக்கள் நடத்தும் ‘காற்றடிக்கும் திசைசார்’ வன்புணர்ச்சிக் கல்விசாலைகளில் இது நடக்கிறது – “சும்மா இப்போதைக்கு ஒரு ஆஃபர் கொடுத்திருங்க சார், பின்னால ரிக்ரெட் லெட்டர் அனுப்டுங்க சார்!”
2. அடிமைகள் போலல்லாமல், குளுவான்களுக்கு, பயிற்சி என்பது – தொடர்ந்து தரப்படும் ஒன்று!
ஒரு நிறுவனத்தில் சேர்ந்தவுடன், முதலில் சில மாதங்கள் போல அனைத்துக் குளுவான்களுக்கும் – (நிறுவனத்தைப் பொறுத்தவரை) அவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிக்கப் படுகிறது. ஆனால் இந்தப் பயிற்சிகளின்போதும் பலருக்கு அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்பது இல்லவேயில்லை, மேலதிக ஆர்வக்கோளாற்றையே விடுங்கள் –
மேலும், சில விதமான வேலைகள் அஸ்தமனம் ஆகி வேறுவிதமான வேலைகள் உதயமாகி வரும்போது – அவற்றுக்குத் தேவையான பயிற்சிகளும் நிறுவனங்களால் கொடுக்கப் படும்.
இவற்றைத் தவிர – குளுவான்கள் நினைத்தால் அவர்கள் பெரும்பாலான, தொழில் நுட்ப வேலைகளில் ஏக ‘டிமேண்டில்’ இருக்கும் விஷயங்களில் தானாகவே பயிற்சி பெற்றுக்கொள்ள முடியும். இவற்றுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் எல்லா நிறுவனங்களிலும் உண்டு. அவர்களால், தமக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை சீக்கிரம் முடித்துக்கொண்டு, மற்ற விஷயங்களுக்குச் செல்லமுடியும்.
ஆனால், வருந்தத்தக்க விதத்தில் குளுவானியம் – அவர்களை எல்லா விதங்களிலும் சோம்பேறிகளாகவும், அற்பர்களாகவும் ஆக்கி விடுகிறது.
ஆக, குளுவான்களைக் குற்றம் சொல்லிப் பயனில்லையல்லவா? :-)
3. குளுவான்களுக்கு அதிக பட்ச தண்டனை என்பது ஒரு தண்டனையேயல்ல.
ஆனால் சாதா அடிமைகளுக்கு இது?

குறைந்த பட்ச தண்டனை! படம் இங்கிருந்து!
குளுவான்களுக்கு மறுபடியும், நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ சமிக்ஞைகள் வந்துகொண்டேயிருக்கும் – அதாவது அவர்கள் செய்யும் வேலை சரியாக இருக்கிறதா என்றெல்லாம். ஆனால் பலர், குளுவானியத்தால் பீடிக்கப் பட்டு குஷாலாக வாழ்க்கையை நடத்துபவர்களாதலால் – மண்டையில் சம்மட்டியை வைத்து அடிக்காதவரை இவர்களுக்கு ஒரு எழவும் புரியாது. ஏதோ – தங்கள் பெற்றோர், மனைவியர் – தாங்கள் என்ன படுமோசமான தவறு/அட்டூழியம் செய்தாலும் தாங்கு தாங்கென்று தாங்குவதைப்போல – நிறுவனங்களும் செய்யவேண்டும் என ஒரு அறியாமையும் ஆணவமும் பாற்பட்ட ஒரு எதிர்பார்ப்பு!
வேறு வழியேயில்லாமல் இவர்கள் வெளித்தள்ளப்படும்போதும் – அவர்களுக்கு வேலைக்கான ஷரத்துகளின் படி சம்பளமும், மற்ற அனைத்தும் கொடுக்கப்படும்.
ஆனால் – ஒரு சாதா அடிமைக்கு, கேவலமான முறையில் உயிரிழப்புதான் உச்சதண்டனை.
குளுவான்கள், மெய்யாலுமே பாவப்பட்ட ஜீவன்கள்தாம்! :-(
4. குளுவான்களின் லீலைகள் எப்படி இருந்தாலும் – அவை அவர்கள் குடும்பத்தை நேரடியாக பாதிக்க மாட்டா.
ஏனெனில், நிறுவனங்களானவை, குளுவான்களைப் பெற்றதிற்காக அவர்தம் பெற்றோர்களைச் சவுக்கால் அடிப்பதில்லை.
அவர்களுடைய குழந்தைகளை, மனைவிகளை புளிய விளாறினால் வீங்க வைப்பதில்லை!
குளுவான்களுக்குக் கல்வி(!) புகட்டியதற்காக – கல்வித் தந்தைகளின், மன்னிக்கவும் – கல்விமாமாக்களின் மாறுகால், மாறுகை, மாறுகொட்டை வாங்கப் படுவதில்லை!
ஆனால் – சாதா அடிமை? அவர்களுக்கு ஒரு பிரச்சினைகூட இல்லவேயில்லை அல்லவா?
5. குளுவான்களுக்கு நாளெல்லாம் வேலை!
:-)))))))) இதைவிட மாரடைக்கவைக்கும் நகைச்சுவை வேறில்லை!
6. சாதா அடிமைமுறைகள் போலல்லாமல், வருந்தத் தக்கவகையில் – ஐடி நிறுவனவேலைவாய்ப்புகள் இருவழிச் சாலைகள்தான்! :-(
குளுவான்களை யாரும் வலுக்கட்டாயமாக ஐடி நிறுவனங்களில் வேலை செய்தேயாகவேண்டும் என யாரும் நிர்ப்பந்திக்கவில்லை.
அதேபோல அதே குளுவான்கள், வெளியே வேறு நிறுவனங்களுக்குச் செல்லும்போது – வலுக்கட்டாயமாக அவர்களை யாரும் உள்ளே உட்காரவைக்கவில்லை. இந்தக் குளுவான்கள், ‘அங்கே ஒரு ரூபாய் அதிக சம்பளம் கொடுக்கறான்’ என்று குதித்துகொண்டோடும்போது, எந்த நிறுவனமும் குறுக்கே நிற்பதில்லை.
குளுவான்களுக்கு – பொதுவாக, தாம் எதில் கையெழுத்து (கைநாட்டு?) போடுகிறோம் என்று கூடத் தெரியாது. ஏனெனில், எனக்குத் தெரிந்து முக்கால்வாசி நிறுவனங்களில் – இந்தக் குளுவான்கள் தங்களுக்கு வேலையளித்திருக்கும் நிறுவனங்களுடன் போடும் ‘வேலை ஒப்பந்தத்தில்’ – ‘your employment can be terminated without assigning any reason whatsoever’ எனும் ஷரத்து இருக்கும். அதாவது – ‘உங்களை வேலையை விட்டு எடுப்பதற்கு, நிறுவனத்தினால் ஒரு காரணமும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை!’ – கண்ணை மூடிக்கொண்டு நீட்டுமிடத்திலெல்லாம் ஒரு எழவும் படிக்காமல் கை நாட்டு வைத்து, பின் ஏன் குமுறவேண்டும்? டிஸிஎஸ் செய்வதில் ஒரு தவறுமோ, அறப்பிறழ்வோ இல்லவேயில்லை.
அதேபோல், நிறுவனத்தை விட்டு வெளியே போக நினைக்கும் குளுவானுக்கும் – ஒரு விதமான காரணத்தையும் கொடுக்கவேண்டிய அவசியமேயில்லை. விதம் விதமாக ராஜினாமா கடிதங்களை எழுதலாம். (என்னுடைய 2005 வாக்கில் நடந்த ராஜினாமா விஷயத்தில், நான், எனக்கு மிகவும் பிடித்த கவிஞரின் கவிதையைத்தான் என் ராஜினாமாவாக அனுப்பினேன். என்னைப் பற்றி என் நிறுவனக்காரர்களுக்குத் தெரியும்; படித்து மகிழ்ந்தார்கள். ஒரு பிரச்சினையுமில்லை. (அது வென்டெல் பெர்ரியின் ‘பைத்தியக்கார விவசாயி விடுதலை முன்னணி!’)
7. ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்குச் சென்றால் – குளுவான் தண்டிக்கப்பட மாட்டார். இது ஒரு ஆச்சரியமான விஷயம்!
ஏனெனில் – இன்னொரு வேலைக்குச் சேர்ந்தால், தண்டிக்கப் படுவதென்பது அவன் போய்ச்சேரும் நிறுவனமே!
ஆனால் பாருங்கள் – சாதா அடிமைகள், இடம் விட்டு இடம் பெயர்ந்தால், அவர்களின் உயிரே கொய்யப்படும்…
-0-0-0-0-0-0-0-
… … இன்னமும் இப்படி நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆனால் குளுவான்கள் பாவம், ஏற்கெனவே மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். ஆகவே…
பாவம். குளுவான்கள் – நவீன அடிமைகள்தாம்! :-((
-0-0-0-0-0-0-0-0-
அடுத்து நிறுவப் படப்போவது: —>> சராசரி ஐடி குளுவான் = (1+2+3+4)/4 (= நிதர்சன, பிரத்யட்ச உண்மை!)
ஹ்ம்ம் – இதனை நிறுவவும் வேண்டுமா என்ன? ;-)
-0-0-0-0-0-0-0-
- ராஜனி திராணகம: சில நினைவுகள், குறிப்புகள் 21/09/2014
- குழந்தைப் படுகொலைகள், எல்டிடிஇ பிரபாகரன், போராட்டங்கள்: சில சிந்தனைகள், குறிப்புகள் 25/03/2013
- பிரபாகரனும், கருணாநிதியும் (ஜூன் 29, 2011)
January 10, 2015 at 20:54
Computer Science – a wonderful man-made science, and Software Engineering – the beautiful art of designing and developing software systems, totally altered the life-style of men. Sixteen years back I decided that I should spend the rest of my life developing wonderful software systems. To me writing a computer program is like writing a poem, line by line and its execution fills every corner of my heart with the joy of creation, every day.
At the same time, Software Engineering will give a tough time for those who consider it a box-hitting job, and who stray without learning and updating their technical skills. Many enter just for the money it gives (not surplus anymore), and for the onsite opportunities.
I remember a HR senior manager giving instruction to the interview panels to select averages (so that they can get them at lower salaries), saying – “We need people just to make rasam, so dont search for Biriyani experts”. The industry is now filled with these rasam makers.
Also, most of the times, these box-hitters give a tough time to their non-box-hitting sub-ordinates when they move to senior levels in the organization.
January 11, 2015 at 18:16
வேலைஸ்ரீ கல்யாணஸ்ரீ கொழந்தகுட்டிஸ்ரீ மூனும் சேர்ந்தா வாழ்க்கைஸ்ரீ
January 12, 2015 at 09:57
இதில் முக்கியமானது எந்த புத்தகத்தையோ அல்லது வேறு வழியிலோ முன்னெடுத்து செல்ல முயற்சிப்பதில்லை. அலுவகத்திலிருந்து வெளியில் வந்தால் இருக்கிறது ஆயிரம் கேளிக்கைகள். அலுவகத்திலோ இதற்கு மேலும் கேளிக்கைகள். நான் வெளிநாட்டில் பல காலம் பணி ஆற்றிவிட்டு இங்கே சில வருடங்கள் இளைய தலைமுறையோடு பணி ஆற்ற அவர்களை தயார் பண்ணியபோது நான் கண்ட காட்சிகள் தாம் எவ்வளவு .
January 12, 2015 at 11:02
ராமசாமி ஐயா,
உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் ஒரு சராசரிதான் நான். இந்த ஐ.டி. தொடரை படித்தவுடன், 18 வருடங்கள் இந்த துறையில் குப்பை கொட்டுபவன் என்ற முறையில் இதை எழுத தோன்றியது.
முதலில் நான், நீங்கள் இன்றைய மக்களை பற்றி எழுதியுள்ளதை, முழுமையாக ஒத்து கொள்கிறேன். இன்றைய தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள், கண்டிப்பாக நீள்கள் சொல்லும் எல்லா கீழ்மையும் செய்பவர்களே. பெரும்பாலானவர் முன்னேறும் வாய்ப்புகளை பயன்படுத்தாமல், கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள்தான். தாமதமாக வருவது, நேரத்தை வீணடிப்பது, ஒப்பீட்டளவில் சமூகத்தில் மிக அதிக சம்பளத்தை பெற்றுக்கொண்டு கழிவிறக்கத்தோடு வெட்டி புலம்பல் என்று கும்மி அடிப்பவர்கள்தான்.
அதேபோல், நிறுவனங்கள் லாப நோக்கோடு செயல்படுபவை தான். தங்கள் ஊழியர்களை தகுந்த காரணத்தோடோ அல்லது காரணம் இல்லாமலோ வேலயை விட்டு அனுப்ப அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. அதையும் ஒப்பு கொள்கிறேன்.
ஆனால்:
1. இப்போது வந்திருக்கும் செய்தி, அந்த நிறுவனம், திறமையின்மை காரணமாக 25000 பேரை வேலை நீக்கம் செய்துள்ளது/செய்யும் என்பதே. ஆனால் வரும் அடுத்த செய்தி, அவர்கள் இந்த ஆண்டில் 55000 பேரை வேலைக்கு சேர்க்க போகிறார்கள் என்பது. இப்போது போகும் 25000த்தை விட வர போகும் 55000 திறமையோடு, குடிமை உணர்ச்சியோடு இருக்க போகிறார்கள் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? யதார்த்தத்தில் அவர்களும் இதே மொண்ணை சமூகத்திலிருந்து தானே வரப்போகிறார்கள்? அப்படியென்றால் திறமையின்மை என்று காரணம் கூறுவது சரியா? இவர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் இன்னும் பல பேரை வேலைக்கு அமர்த்தலாம். லாபத்தை அதிகரிக்கலாம் என்பதுதானே உண்மை. அதை சொல்ல வேண்டியது தானே? ஏன் ஒரு பொய்யான காரணத்தை சொல்ல வேண்டும்? மக்கள் பணத்தில் நடக்கும் ஒரு நிறுவனம் உண்மையான காரணத்தை சொல்ல வேண்டாமா? நீங்கள் சொல்லும் அறம் தொழிலாளர்களுக்கு மட்டும்தானா? முதலாளிகளுக்கு கிடையாதா? இங்கே அமெரிக்காவில் நடக்கும் ஆட்குறைப்பில் உண்மையான காரணத்தைததானே வெளியிடுகிறார்கள்?
2. ஒருவேளை அவர்களுக்கு திறமாய் இல்லை என்றே வாதத்திற்காக வைத்து கொள்வோம். அது இப்போதுதான் தெரிந்ததா? நீங்கள் செய்ததுபோல் training முடிவிலேயே கணக்கை முடித்து அனுப்பியிருக்கலாமே? இதை நான் வேளை போன குளுவான்களுக்காக சொல்லவில்லை. உண்மையில் நிறுவனங்களுக்கு சராசரிகள் தான் வேண்டும். நீங்கள் சொல்வது போல் பஞ்சமர்கள் வேண்டாம். ஒரு வேளை, பாதிக்க பட்டவர்கள் தங்கள் நேரத்தை உபயோகமாக செலவிட்டு ஒரு உருப்படியான நிரலாயோ, அல்லது ஒரு algorithm செய்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். இந்த நிறுவனங்கள் அதை விரும்புகிறதா? அப்படி செய்த நண்பர்களை எனக்கு தெரியும். ஒரு எளிமையான பாராட்டுக்கு பிறகு கஸ்டமர் deadline என்ன ஆச்சு? என்றுதான் கேட்பார்கள். billing இல் இருக்கும்வரை உங்களிடமிருந்து எந்த ஒரு innovation ம் அவர்களுக்கு தேவையில்லை. நீங்கள் பலமுறை சொல்வதுபோல், உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் அதிருஷ்டம்தான். எல்லாருக்கும் அது அமைவது இல்லை. தேவையும் இல்லை. :)
anbudan,
Murali.
January 12, 2015 at 12:11
அய்யா முரளி,
உண்மையில் – நம் ஐடி நிறுவனங்கள் எடுத்துக்கொண்டு செய்யும் பெரும்பாலான வேலைகளுக்கு, அதிவுயர் தரமெல்லாம் தேவையேயில்லை. சராசரி அளவுக்கும் குறைவானவர்களே போதும். அதிக சம்பளமும் தேவையில்லை. ஆனால் கொடுக்கிறார்கள்!
மேலும் – அவர்கள் பழைய பெருச்சாளிகளையே வைத்துக்கொண்டு வருடாவருடம் சம்பளவுயர்வையும் கொடுத்துக்கொண்டிருந்தால் – கூடியவிரைவில் வரவுக்கும்செலவுக்குமே சரியாகப் போய்விடும். ஆகவே பழைய பெருச்சாளிகளை முடிந்தவரை வெளியேயனுப்பி புதுச் சுண்டெலிகளை வரவழைப்பது வர்த்தக ரீதியில் சரியான முடிவே.
அறம் என்பதை – தொழிலாளிகளுக்கும், முதலாளிகளுக்கும் பொதுவில் வைப்போம்.
என்னைப் பொறுத்தவரை – ஒரு நபர், தாம் மிகவும் புதிதாக இன்னவேட் செய்கிறார் எனக் கருதினால் – அதுவும் அவரை யாரும் அதற்காக மதிக்கவில்லை என்று வருத்தப்பட்டால் – தாராளமாக அப்படி மதிக்கும் வேலையை மட்டும் செய்யலாமே? வேலை மாறலாமே! ஒரு புது நிறுவனத்தைத் தொடங்கலாமே! வேலையை மாற்ற முடியதென்றால் – மாற்று மென்பொருள் அமைப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வாழ்வாங்கு வாழலாமே!
மற்றபடி நான் அதிர்ஷ்டசாலிதான். என்ன பிரச்சினையென்றால், ஒரு அதிர்ஷ்டசாலியாக இருக்க ரொம்பவும் மெனக்கிட வேண்டியிருக்கிறது! 8-/
January 12, 2015 at 11:10
This is a continuation of previous comment. sorry my Tamil transliteration site went down, so I thought of finishing with English, before the great thoughts(!!) vanish in thin air.
3. It is very common to see layoffs in west. Infact, it is accepted as a reality than a chance to win a emotional pity. However, considering the background of companies, don’t we have to ask how ethical it is? None of the companies in west got the free/discounted price land like they have in SEZ. None in west got a tax holiday like the ones here. And lot other goodies..at the cost of tax payers money. so what is the motive of such soaps? I interpret it as a way to increase employment. If that is the case isn’t it illegal to cut off jobs just for profit? (Not loss just more profilt) Isn’t it unethical to do a termination saying wrong cause?
I am not writing here because you are wrong. I feel you wrote excellent write up but shedding light on one side of coin. If you could write other side too I will be happy. I guess this is ongoing. Lets wait to see what comes next?
Thanks,
Murali.
January 12, 2015 at 14:10
—->>>> Dear Murali, thanks for your considered comments. Taking the case of TCS – is there any evidence that TCS did not more than n times (n>>1) payback whatever little incentives it received from the central & state governments? (In the case of other companies, one has to look at the rent seeking system of the politcal and admin structures)
How many people know that for the past two years folks inside TCS have been agonizing over the falling hourly rates amidst competition and increasing wage bills? That, they have been more than just in dealing with their workforce? They could have sent out all the debris at least two years back, IMO.
Is it true that the dingbat programmers have not been receiving any indication at all about their general lack of performance year on year?
For the same level of work, and at the same level of billing, year after year, how can one expect 10-15% salary hikes?
If a salary hike is not given, is it not an indication that the performance has been negative?
Is there a practice in the IT industry to reduce salaries for the below-par performers? Just to make matters clear??
I also feel that if one has to talk about ethics – then the average IT type guy has NO moral or ethical right whatsoever. Right from stealing company time to stealing company supplies to taking personal printouts – the range of unethical behaviour of an average IT guy is preposterous, sorry.
Again – for the kind of jobs an average IT/ITES guy is doing – I would rather recruit 14+ (<18) year olds on a parttime basis so that they get some funds, some work-ex etc. So that they do NOT leech on their parents for their comforts – and as a side benefit, may also pick up some work ethics.
I do not hold a brief or a vest for the IT firms – but I feel that, merely rubbishing the capitalists is shady, to say the least! And, the moral/ethical argument against the firms is way overrated and bloated out of proportion.
Dear Murali – I did not intend to belittle you or your comments – there have been many sweet guys like you who have told me what you have. I am really sorry, if I have hurt you.
But having been on both sides of the spectrum – and NOW completely out of it, I think I have earned the right to atleast say what I feel about the whole goddam issue.
Thanks!
__r.