இதுதாண்டா சராசரி தகவல்(!)தொழில்(!!)நுட்பக்(!!!) குளுவான்!!!!

January 7, 2015

(அல்லது ) ஐடி குளுவான்களின், பரவலாக வெளியே தெரியவராத பிரச்சினைகள்!!!!!

அய்யய்யோ! குளுவான்களென்றாலே எனக்கு ஆச்சரியம்தான்!! அதனால்தான் கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவே இந்த எழவெடுத்த ஆச்சரியக்குறிகளை உபயோகித்து விட்டேன்!!! மன்னிக்கவும்!!!!

சரி!!!!! இவ்வரிசைப் பதிவுகளின் முதல்பாகம்!!!!!! இது இரண்டாம் பாகம்!!!!!!!

-0-0-0-0-0-0-0-

ஆம்.

ஐடி குளுவான் மந்தையினர் அபாக்கியவான்கள். பரலோக நரகம் மட்டுமல்ல, இகலோக நரகமும் அவர்களுடையதே!  யேசுவுக்கு நன்றி.  [மேத்யு( 5: 3)]

விடலைப் பருவத்திலிருந்து – மேலெழும்பவே மாட்டோம், வளரவே மாட்டோம் என அடம் பிடித்து, ‘எனக்கு அந்த வேல பொம்மெ வேணும்’ என மூக்குச் சளி ஒழுக உருண்டுபுரண்டு ஒப்பாரி சகிதம் பிலாக்கணம் வைக்கும் குளுவான் கும்பலுக்கு,  ‘ஐயகோ, எங்கள் நிராதரவான கையறு நிலையைப் பாரீர்‘ என விசும்பிவிசும்பி அழும் அரைகுறைகளுக்கு – ஒரேயொரு அருமருந்துதான் இருக்கிறது என்று – என் பேராசானும் சித்தபைத்திய குருநாதருமான சிவபோதைவார்த்தையார் அவர்கள் தன்னுடைய தேரையதவளையர்  நிகண்டுவில் இப்படிச் சொல்கிறார்:

 

சிவம்

சூதறிந்த குளுவானாகிச்

சூம்பிப்போகும் அற்பனுக்கு

சூத்தாமட்டையில் பொளேர்மடேரென்று அடிக்கும்

சூத்திரமே அருமருந்தாம்!

இந்த மருந்துக்கு இலவசஇணைப்பாக இன்னொன்றையும் சொல்கின்றார் இந்த காமாலைக்கண்ணனார் எனும் இன்னொரு பண்டமிழ்ப் பித்த வைத்தியர்:

சூல்கொண்ட சோம்பேறிக் குளுவான் அவன்மேல்

சூறாவளி  போல் வீச்சரிவாள் தாங்கிப் பாய்ந்து அவனது

சூச்சூ பாகத்தைக் கத்தறித்தெறிந்தால்

சூக்குமம் தெரியுமே!

(நற்றுணையாவது நமச்சிவாயமே! திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!)

இதையே என் ஆங்கிலேய நண்பர் எப்படிச் சொல்வாரென்றால்:

“All that dingbat programmers need rather urgently, is merely a series of debilitating and rather swift kicks in their butts. But sadly, all they want are only their salaries – with the perks of unlimited irresponsibility!”

-0-0-0-0-0-0-0-0-

ஆனால்… …

குளுவான்களை நினைத்தாலும் – அவர்கள் பங்கு நியாயத்தைக் கருத்தில் கொண்டாலும் பரிதாபமாகவேயிருக்கிறது. அடி வயிற்றைப் பிசைகிறது, அவர்களுடைய கையறு நிலையைக் கண்டால். என்ன செய்ய… :-(

பலவிதமான எண்ணங்கள்…

ஒரு வேளை – இக்குளுவான்கள், வேறு வழியேயில்லாமல் இந்த பொட்டிதட்டும் வேலையில் சேர நிர்ப்பந்திக்கப் பட்டார்களோ?

பல கௌரவமான வேலைகள் கிடைக்கக்கூடிய சூழல் இருந்தாலும், மற்ற தொழில் நிறுவனங்கள் இக்குளுவான்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளத் தயாராக இருந்தாலும் – நம் ஐடி சூதாடிகள் இவ்வாய்ப்புகளைக் கலைத்துக் கெடுத்துவிட்டனரோ? குடும்பத்தை விட்டு, அவர்கள் சுற்றுச்சூழலை விட்டு இந்தப் பாவப்பட்ட குளுவான்களைப் பிய்த்தெடுத்து, புள்ளபுடிக்கிறவன் போல இந்த ஐடி நிறுவன வல்லூறுகள் அவர்களைக் கொத்திக்கொண்டு போய்விட்டனரோ? அது மட்டுமல்லாமல், அவர்களை மிகவும் கீழ்த்தரமான தொழிலான ஐடி தொடர்பான எழவுகளில் இரக்கமேயில்லாமல் இறக்கி விடுகிறார்களோ? இந்த அநீதியை நினைத்தால் எனக்குக் கோபம்கோபமாக வருகிறது! உங்களுக்கு??

அவர்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல, தேவையேயில்லாமல் சம்பளம் கொடுக்கப்பட்டு குளுகுளு அறைகளில் வலுக்கட்டாயமாக உட்காரவைத்து குறைந்தபட்ச வேலையை மட்டுமே செய்யவைத்து மிச்ச நேரத்தில் இணையத்தில் மேயவிட்டார்களா, அந்தப் பாவிகள்? அடப்பாவமே!

குளுவான்களுக்கு, திறந்த வெளி க்யூபிக்கிள்களில் உட்கார்ந்துகொண்டிருப்பதால், குசுக்களைக் கூட தைரியமாக விடமுடியாத சூழ்நிலை!  அப்படியே விட்டாலும் அந்தக் காற்றே மறுசுற்றுக்கு விடப்படுகிறதோ எனும் சந்தேகம்!  கேவலம்!

வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் தான் விடுமுறையா? என்ன கொடுமையைய்யா இது! மிச்ச நாட்களில் டெலி-கம்யூட்டிங் (வீட்டிலிருந்தே வேலை(!) செய்யும் மாயாஜாலம்), ஃப்லெக்ஸிடைம் (எப்போது வேண்டுமானாலும் வரலாம், போகலாம் – ஆனால் குறிப்பிட்ட 8 மணி நேரம் போல அலுவககத்தில் இருக்கவேண்டும்) என்ற பெயரில் பஜனை செய்யக் கொடுமைப் படுத்தியிருக்கிறார்களே! பாவம்!

வேளாவேளைக்கு ஓசி சாப்பாடும், வேண்டும்போதெல்லாம் காப்பியும்டீயும் – அவ்வப்போது டீஷர்ட்களும் ஓசி பரிசுகளும் விருந்துகளும் போனஸ்களும் கொடுத்து அவர்களைத் துப்புரவாகக் கெடுத்து விட்டார்களா? என்ன சோகம்!

மிகவும் கஷ்டப்பட்டு அதிகாலையில் 10 மணிக்கு எழுந்து ஊத்தைப்பல்லுடன் + நாறும் ஜாக்கெட்டுடன் அலுவலகத்தில் நுழைந்து கார்ட் (வருகைப் பதிவாம்!) தேய்த்துவிட்டு, அடுத்த நிமிடம் அலுவலகத்து அல்லது பக்கத்தில் இருக்கும் உணவகத்துக்குச் சென்று ஒரு பிடி பிடித்து, ** பின் ஏப்பம் விட்டுக்கொண்டு சிகரெட் பிடித்து விட்டு க்யூபிக்கிள் சென்று, மின்னஞ்சல் பார்த்து, ஃபேஸ்புக்-ட்விட்டர் ஸ்டேட்டஸ் போட்டு, மானாவாரியாக லைக் அடித்து, ரீட்வீட் செய்து, அவ்வப்போது ஸெல்ஃபோன் ஸ்மார்ட்ஃபோன் எஸ்எம்எஸ் வாட்ஸப் வகையறாக்களில் தஞ்சமடைந்து, நண்பர்களுடன் நேற்றுப் பார்த்த சினிமா பற்றிப் பேசி, எனிக்மா பல்வேறு தமிழ் இசையமைப்பாளர்களின் பெயரில் கமுக்கமாக இசையமைத்த தமிழ்ச் சினிமாப் பாட்டுக்களை  தலையை ஆட்டிக்கொண்டு தாளம்போட்டுக்கொண்டு கேட்டுவிட்டு எழும்பினால்…

… மறுபடியும் அலுப்புடன் டீ குடிக்க நேரமாகிவிடும். குடித்துவிட்டு, பின்னர் மறுபடியும் **த்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும். மறுபடியும் மதியவுணவு நேரம். அலுவலத்திலேயே சாப்பிடலாமா, பீட்ஸா சாப்பிடலாமா அல்லது ஆந்த்ரா அன்லிமிட்டெட் சாப்பாட்டை தொந்தி விரைக்க ரொப்பிக்கொள்ளலாமா என யோசித்து, உண்டு…

… மறுபடியும் **த்திலிருந்து ஆரம்பித்தால் மாலை டீக்கு நேரமாகிவிடும். இவ்வளவு படுபிஸியாக நாளெல்லாம் உழைத்து விட்டு ஒரு வழியாக அலுவலக வேலையை மாலை 4 மணிவாக்கில் ஆரம்பித்தால்… எவ்வளவு அயர்வாக இருக்கும் பாருங்கள்! மேற்படி, ஒரு மாலை டீக்குப் பின் – வெளிநாட்டு கான்ஃபரென்ஸ் தொலைபேச்சுவார்த்தைகளில் ஒரு மசுத்தையும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு ஆனால் காதை, மூக்கை நோண்டிக்கொண்டு (யாரும் பார்க்கவில்லையென்றால், ஊக்கபோனஸாக ஆசன துவாரத்தையும்)  உட்காரவேண்டும். அதற்குள் இரவு உணவு நேரமாகி விடும். மறுபடியும் **த்திலிருந்து வேலையோவேலை!

பின் பத்து மணிவரை அலுவலகத்தில் நாற்காலியைச் சூடு செய்துகொண்டிருந்துவிட்டு, பின்னர் நடுவழியில் கண்ட குப்பையுணவைச் சாப்பிட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தால் – குடும்பத்தினர் சொல்வார்கள்:  “எவ்ளோ ஒழைக்கறான் இவன்! ஆஃபீஸ்ல இப்படியா பிழிஞ்சி எடுப்பாங்க? சரியான நேரத்துக்கு சாப்பாடில்ல தூக்கமில்ல, ஓடாத் தேயறான் பாரு.”  :-(

பின் இரவெல்லாம் லேப்டாப்பில் படம் பார்த்துக்கொண்டு, பாட்டுகேட்டுக்கொண்டு, ஃபேஸ்புக் வகையறாக்களில் நேரம்போக்கி… வீட்டில் சொல்வார்கள்: “ஆஃபீஸ்ல மாரடிக்கறது போறாதுன்னிட்டு வீட்லயும் ராத்திரியெல்லாம் வேலை செய்யவெக்கறாங்க! என்ன அநியாயம்? என்ன சுரண்டல், என்ன எக்ஸ்ப்ளாய்ட்டேஷன்! ச்ச்சீ…” :-((

இரவு 2 மணிக்குத் தூங்கினால், அதுவும் அசுர உழைப்பு உழைத்துவிட்டுத் தூங்கினால் காலை பத்துமணிக்குத் தானே எழ முடியும் – அதுவும் உடல்வலியுடன், அலுப்புடன்… பின், அலுவலகத்துக்கு தாமதம், வேலையில் தாமதம், சந்திப்புகளுக்குத் தாமதம் என்று சும்மனாச்சிக்கும் குளுவான்களைக் குறை சொன்னால் அதற்கு யார் பொறுப்பு?

வேலைசெய்யுமிடங்கள்/சூழல்கள் செம்மைப் படுத்தப்படாமல், இப்படி ஆடுமாடு ஓட்டுவதைப் போல அதிகாரிகள் நடந்துகொண்டால் அது நியாயமா? குளுவான்கள் கைகளால் இல்லை, கருத்துகளால் இல்லை வேறு எப்படியோ வேலை செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளாமல், நிறுவனங்கள் தொழிலாளர்களைச் சுரண்டுகின்றன.

வேண்டாம் வேண்டாம் என்று கூவிக்கொண்டிருந்தாலும் – இவர்களுக்கு க்ரெடிட் கார்ட், கடன் என்று வலுக்கட்டாயமாகக் கொடுக்கிறது ஏகாதிபத்தியம். என்ன கீழ்மை இது.  என்ன சுரண்டல்!

ஏகாதிபத்திய முதலாளியத்தின் ஏஜென்டுகள்  – குளுவான்களுக்கு வரிசையாக வீட்டை விற்கிறோம், காரை விற்கிறோம், டீவி விற்கிறோம், வெளிநாட்டு விடுமுறையை விற்கிறோம் என்றெல்லாம் மாயவலையில் வீழ்த்துகின்றனர். என்ன அநியாயம்! நம் இளைஞக் குளுவான்களுக்கு மூளையே இல்லை என்று தெரிந்தும், அவர்களது மேல்மாடி பள்ளிக்காலங்களிலிருந்தே ‘இந்த இடம் வாடகைக்கு விடப்படும்‘ என இருந்தாலும் – ஒரு சமுதாயம், இப்படியா அவர்களை நடத்தும்?

நம் இளைஞர்களை இப்படிக் கேவலமாக நடத்துவது யார்? அயோக்கியர்கள்!!

அயோக்கிய ஐடி நிறுவனக்காரர்கள் – இந்த இளைஞக் குளுவான்கள் சேர்ந்த ஆறு மாதங்களுக்குள் அவர்களைப் பெருந்தொந்திக் காரர்களாக, ஆரோக்கியமற்றவர்களாக மாற்றி விடுகிறார்களே! இவர்கள் கொடுக்கும் பணத்தில்தானே நம் பாவப்பட்ட குளுவான் – பீரும் பீட்ஸாவும் பர்கரும் பெரும் உழைப்பைக் கொடுத்துச் சாப்பிடவேண்டியிருக்கிறது! இதனைக் கேட்பாரே  இல்லையா!

இப்படியே – ஒரு வெள்ளைக்காரக் கம்பெனி ஒரு கையால் கொடுப்பதை இன்னொரு வெள்ளைக்காரக் கம்பெனி இன்னொரு கையால் கமுக்கமாக எடுத்துக்கொண்டு விடுகிறதே! ஐயகோ! மாதாமாதம் அடுத்த பெரிய சைஸ் சட்டையும் பேன்ட்டும் ஜட்டியும் வாங்கவேண்டுமென்றால் இந்தச் சராசரிக் குளுவான் எங்கே போவான்? இப்படியே போனால் அவனால் எப்படி பேருந்து இருக்கைகளில் அமரமுடியும்?  அவர்களை டாக்ஸியில், விமானத்தில் போகவைக்க, பெட்ரோல் மேலும் செலவழிக்கவைக்கும், தங்கள் சந்தையைப் பெரிதாக்க அலையும் பன்னாட்டு நிறுவன, அமெரிக்க சதியோ இது?

நம் செல்லக் குளுவான்களை பலப்பல வெளி நாடெல்லாம் துரத்தி அனுப்பி டயஸ்போரா – யூதர்கள் சிதறடிக்கப்பட்டதைப் போல, அநியாயம் செய்திருக்கிறார்களே, அயோக்கியர்கள்! பாவம், கண்ணில்லாத கபோதிகள் கடல் பட்டாங்கு போல, நம் குளுவான்களை அனாதைகளாக தேசம் தேசமாகத் திரியும் தேசாந்திரிகளாக மாற்றி விட்டார்களே, கயவர்கள்!

பல நேரங்களில், இந்தக் குளுவான்களுக்கு வேலை கொடுக்கத் துப்பில்லாமல், அவர்களை ‘பெஞ்ச்’ மேல் உட்காரவைத்து, சகல சௌபாக்கியங்களுடன் வெறும் சம்பளம் மட்டும் மாதாமாதம் கொடுத்தால் போதுமா? வேலையில்லாமல் வாடித்தானே, இக்குளுவான்கள் இணையத்தில் சரணாகதி அடைந்து ஸில்க் ஸ்மிதாவையும் ஜெயமாலினியையும் (இக்கால நடிகையர் திலகங்களின் பெயர்களாக, இவைகளைத் தாராளமாக மாற்றிக் கொள்ளலாம்!) பொருத்திப் பார்த்து, ஆறுவித்தியாசங்களைக் கண்டுபிடிக்கின்றனர்?

அப்படியே வேலை கொடுத்தாலும் சராசரியாக ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம் பத்து வரிகளுக்குமேல் கணினி நிரல் / கட்டளைக்கட்டு எழுதவேண்டுமாமே! இப்படியா நம் படுபுத்திசாலி குளுவான் இளைஞர்களை மனிதாபிமானமற்ற முறையில் அநியாயமாக வேலை வாங்கி அணுஅணுவாகச் சாகடிப்பது? அடிமை வியாபாரிகளின் கேவல நடவடிக்கைகளுக்கு ஒரு எல்லையே இல்லையா?

ஐடி குளுவான்களுக்கு தொழில் நுட்ப ரீதியாக ஒரு புதியஎழவையும் கற்றுக்கொள்ள நேரத்தைக் கொடுக்காமல், இதயமேயில்லாமல் விரட்டிவிரட்டி வேலை வாங்குகிறார்களே? நீக்ரோ அடிமைகளை விட மோசமாக நடத்தப் படுகின்றார்களே நம் இளைஞர்கள்!

இயல்பாகவே மண்டையெல்லாம் மூளையும், செயலூக்கமும், நேரம் தவறாமல் காரியங்களைச் செய்யும் பண்பினையும் பெற்ற நம் இளம் திராவிட மறவர்களை,  மானாவாரிக் கல்வித் தந்தைகளாலும் மாமாக்களாலும் கல்வியானதைத் திகட்டத் திகட்டப் புகட்டப்பட்ட இளைஞச் செல்வங்களை – யார் கவைக்குதவாத சோம்பேறிகளாக்கினார்கள்? தொழில் தர்மம் சார்ந்து இயங்கும் நம் இளங்காளைகளை யார் இப்படி அதம நிலைக்குத் தள்ளியது? அவர்களை சோம்பேறித்தனக் கேளிக்கைகளில் ஃபேஸ்புக்/ட்விட்டர்/ஆர்க்குட் முட்டுச் சந்துகளுக்குள் யார் விரட்டியடித்தார்கள்? யார் அவர்களைத் தமிழ்ப் படங்களை ரிலீஸ் ஆகும் நாளே பார்க்கும்படி + உடனே விமர்சனம் எழுதும்படி நிர்ப்பந்தம் செய்கிறார்கள்?  நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்! இந்த முகமூடிக் கொள்கைக்காரர்கள் யார்?

… … ஹ்ஹ! எனக்குத் தெரியாதா? இந்த சகுனி வேலை செய்பவர்களெல்லாம் அந்தக் கேடுகெட்ட, கொள்ளை லாபத்துக்கு நாய் போல அலையும் முதலாளிகளாகத்தான் இருக்கும். இவர்களுக்கும் பன்னாட்டு நிறுவனப் பன்னாடைகளுக்கும் தொழிலாளிகளின் கொட்டையைக் கசக்கி லாபத்தைப் பிழிவதே வேலை! அயோக்கியப் பதர்கள்.

ஆ! ஓ!! அய்யோ!!! நம் குளுவான்கள் படும்,  முணுமுணுப்புக்கூட இல்லாமல் தொடர்ந்து பட்டுக்கொண்டேயிருக்கும் பிரச்சினைகள் ஏராளமய்யா, ஏராளம்!

தொடரத்தொடர வேதனை மிகும். கண்கள் பனிக்கும். இதயம் கசக்கும். :-(

ஏகபோக முதலாளித்துவ அமைப்பில், பார்ப்பன-பனிய சதியில், ஆரிய வந்தேறிகளின் ஆக்கிரமிப்பில், பன்னாட்டு நிறுவனங்களின் எக்காளத்தில் – நம் மானமிகு இளைஞர்களின் எதிர்காலங்கள் எரிக்கப் படுவதை இனியும் சகிக்க முடியாது!

முதலாளியம் ஒழிக!

முதலாளிகளை ஒழித்துவிட்டால் நாட்டில் சுபிட்சம்தான்!  நமக்குத் தேவை, இன்னொரு போல்பாட்! :-)

போல்பாட் மறுஜென்மம் எடுத்து வந்து முதலாளிகளின் தலைகளைக் கொய்து மேற்கண்டாற்போல அடுக்கினால்தான் அவன்கள் அடங்குவான்கள்! (உற்றுக் கவனியுங்கள், இந்த முதலாளிய மண்டையோடுகள் இன்னமும் எக்காளச் சிரிப்பு சிரித்துக்கொண்டுதான் இருக்கின்றன; முதலாளிகளின் மண்டையோடுகளைக் கூட நம்பக்கூடாது. சிரித்தமுகமாக இருக்கிறதே என்று கிட்டே போனால், விழுந்து குதறி விடும்கள்!)

முதலாளிகள், அதிகாரிகள் ஒழிக!  ட்விட்டர், ஃபேஸ்புக் புரட்சி ஓங்குக!!

“தட்டச்சு வீரத் தொழிலாளிக் குளுவான்களே! நீங்கள் இழக்கவேண்டியது உங்கள் தட்டச்சு விசைப்பலகைகளைத் தவிர வேறொன்றுமில்லை!!”

புதியதோர் தட்டச்சு உலகம் சமைப்போம்!

சமைத்த பின் அதையும் சாப்பிடுவோம்!!

-0-0-0-0-0-0-0-

சரி. என் செல்லங்களான, சராசரி மகாமகோ ஐடி குளுவான்களுக்கு பிற வாய்ப்புகளே இருந்திருக்கவில்லை, இல்லையா? பாவம், அவர்கள். :-((

ஆகவே, அடுத்த பதிவிலும் விடாது கருப்பு! பாவம்,  நீங்கள்! :-)

8 Responses to “இதுதாண்டா சராசரி தகவல்(!)தொழில்(!!)நுட்பக்(!!!) குளுவான்!!!!”

  1. Anonymous Says:

    adra sakka, thalaivan full form-la erukkar

  2. ஆனந்தம் Says:

    குளுவான் என்ற பதத்துக்கு அருஞ்சொல் விளக்கம் தேடினேன். (உங்கள் செல்ல விக்கியில் உங்கள் செல்லச் சொல்லுக்குப் பொருள் இல்லாதது அந்நியாயம்தான்.) இதுதான் கிடைத்தது:

    உங்கள் குளுவானும் இந்தக் ‘குளுவானு’ம் ஒன்றுதானா, வரலாற்று, பண்பாட்டு, அரசியல், தத்துவ, விஞ்ஞானரீதியான தொடர்புகள் ஏதேனும் உண்டா என்று விளக்கவும்.
    இவண்,
    ஆனந்தம்,
    கொள்கைப்பரப்புச்செயலாளர்,
    தத்துவ அறிஞ்சர் ஃபெயின்மன்னார்சாமி ரசிகர் மன்றம்.


    • Sir, Anandam – that is gluon!

      AyeAyeYo!!

      Mine is Tamil Kuluvan which is the stage at birth/breaking out of a bird from an egg. The next stage is Aal where the birds are clamorous – with the AalOlam derivative word in tamil meaning commotion!

      The next stage in the bird’s life in tamil is Kunju. But not the cantilever frontal portion of dravidian tamils, am sorry.

      Again – Kuluwaan in tamil is a kind of non-flying species of bird, closely related to sandpipers.

      Another famous slang KOttaan is also the name of an acutual bird – curlew.

      Glad to be of help!

      AnandamAnandamAnandamE! ;-)

      • ஆனந்தம் Says:

        தமிழில் குளுவான் என்று தட்டச்சு செய்தால் வந்த ரிஸல்ட் அதுதான். பிரபஞ்சப் பெருவெடிப்பு மாதிரியை CERNக்குமுன்பாகத் தமிளன் சங்ககாலத்திலேயே நிகள்த்திவிட்டான் என்பதற்குச் சான்றுதான் குளுவான் என்ற சொல் என்று பரபரத்துப் புல்லரித்துப் போயிருந்த என்னை அந்நியாயமாக உண்மையைச் சொல்லி ஹாஃபரிக்க வைத்துவிட்டீர்கள்.

  3. ஆனந்தம் Says:

    ஆரிய சதியின் காரணமாக லிங்க் முந்தைய பின்னூட்டத்தில் இடம்பெறவில்லை, மன்னிக்கவும் https://groups.google.com/forum/#!topic/anbudan/6QMdywe0Ap8

  4. சிவா கிருஷ்ணமூர்த்தி Says:

    குளுவான் என்ற வார்த்தையை முதலில் கேள்விப்பட்டது தி.ஜாவின் பிரபல சிறுகதையான “பாயாசம்”த்தில்…
    சிவா கிருஷ்ணமூர்த்தி

  5. spgr Says:

    If a person has the right to resign from a company at any time (of course when he gets a good hike and a better role), why shouldn’t the company have the same right to fire him at anytime???

    அதுக்கு எதுக்கு இந்த பசங்களுக்கு இந்த குய்யோ முய்யோ கதறல் எல்லாம்…


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s