அனன்யா வாஜ்பேயி: நம்பவேமுடியாத அரைகுறைத்தனம்…
September 16, 2014
… ஒரு வழியாக இன்றுதான், அம்மணி அனன்யா அவர்களின் கந்தறகோளக் கட்டுரையான ‘என் ஸம்ஸ்க்ருதத்தின் கதை’ படித்தேன். ஆகஸ்ட் 16 அன்று வெளிவந்த – இந்தக் குப்பையையும் ‘த ஹிந்து’ தான் பதிப்பித்திருக்கிறது.
யோசித்தால் – இம்மாதிரி ‘ஒருமாதிரி’ கட்டுரைகளை வேறு எந்த தினசரிக்குத்தான் தொடர்ந்து – பொறுப்பேயில்லாமல், வக்கிரத்தோடு, பாரம்பரியங்களைப் பற்றிய தாழ்வுணர்ச்சியோடு பதிப்பிக்க முடியும்?
‘த ஹிந்து’ பற்றி, அதன் அப்பட்டமான சீன ஆதரவு பற்றி, அதன் அடிப்படை நேர்மையின்மை, பாரதத்தின் அடிப்படைகளை வெறுப்பது, ஸெக்யூலரிஸ பேதியினால் ஹிந்துமதஎதிர்ப்புவாதம், கருணாநிதி-தயாநிதி மாறன் (இந்தப் பின்னவர்,அந்த த-ஹிந்து-வின் வீட்டு மருமகனார் – அதாவது தயாநிதியின் மனைவி த-ஹிந்து-குடும்பத்தைச் சார்ந்தவர்) போன்றவர்கள் மீதான புரிந்துகொள்ளக்கூடிய ஆதரவு, என பலவற்றைப் பற்றியெல்லாம் என்னுடைய அப்பாவுடன் பல வாக்குவாதங்கள் செய்திருக்கிறேன்; பெரும்பாலும் அந்த விவாதங்கள் – ‘ஹிந்து-வ அதோட கருத்துகளுக்காகப் படிக்காத, அதோட ஆங்கிலத்துக்காகப் படி, எப்டீ எழுதறான் பாரு, தப்பேயில்லாம!‘ என்று முடிந்துவிடும்… ஆனால் அது அந்தக் காலம். அவரும் போய்ச்சேர்ந்து விட்டார்.
… இப்போது, அதன் ஆங்கிலமும் சுத்தமாகவே சரியில்லை. பக்கத்துக்கு பத்து அடிப்படைத் தவறுகள். அதன் தலைப்புகளோ கந்தறகோளமாக இருக்கின்றன. அதன் காமாலைக் கண்ணும் பளிச்சிடும் மஞ்சளாகிக்கொண்டே வருகிறது. எப்படியும், கடந்த சில நாட்களாக கஷ்மீர் வெள்ளப் பிரச்சினை பற்றிய அதன் அயோக்கியத்தனமான செய்தி திரித்தல்களைப் பார்த்துப் பார்த்து வெறுப்பாக இருக்கிறது.
ஆனாலும்…
என்னுடைய பொதுவான (இதுவரை) எண்ணம் என்னவென்றால் – ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக் கழகத்தில் படித்த ஒருவருக்கு – அடிப்படை நாணயமில்லாவிட்டாலும், ஆய்வு நன்றாக செய்ய வரும்.
அப்படிச் செய்ய முடியாவிட்டாலும், குறைந்த பட்சம், ஆங்கிலத்தில் நான்கு வரிகளாவது உணர்ச்சிக் குவியல்களில்லாமல், மிகைப்படுத்தல்கள் இல்லாமல் – கோர்வையாக எழுத வரும்…
ஆனால், அம்மணி அனன்யா அவர்களால் இந்த பிம்பம் சிதைந்தது. அம்மணி வாழ்க!
-0-0-0-0-0-0-
இதே அம்மணி – ஏப்ரல் பத்தாம் தேதி ‘What lies beneath, what lies ahead‘ என்று அந்த ‘த ஹிந்து’ தினசரியில், ஒரு கட்டுரையை – அதாவது ஒரு முகாந்திரமுமில்லாமல் மோதியைக் கரித்துக் கொட்டி எழுதியிருந்தார்.
இந்தத் தலைப்பை நான் புரிந்து கொள்வது: அம்மணியில் எழுத்தில் ‘எவ்வளவு பொய்கள் அடித்தளமாக இருக்கின்றன, எவ்வளவு பொய்கள் வரும் காலங்களில் மேலெழுப்பப் படப்போகின்றன’ என்பதாகத்தான்.

http://www.amazon.com/Lying-Cheating-Carrying-Developmental-Sociocultural/dp/0765706024 ஒரு நாள் இந்த குறிப்பிடத்தக்க பார்வைகளை உடைய புத்தகத்தைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதவேண்டும்…
நான் மிகமிக மதிக்கும் மகாமகோ பேராசிரியர்கள் ஜார்ஜ் கார்டோனா, கபில் கபூர் போன்றவர்களின் மாணவி ஒருவர், – இப்படியும் இருக்கக்கூடுமா என்பது மிகவும் சலிப்புதரும் எண்ணம். :-(
… ரஜ்னி கோத்தாரி போன்ற மகத்தானவர்களெல்லாம் அலங்கரித்த ஸிஎஸ்டிஎஸ் அமைப்பில், நான் மதிக்கும் மதுகிஷ்வர், ஹிலால் அஹெம்மத் போன்றவர்களெல்லாம் இருக்கும் அமைப்பில் – யோகேந்த்ர யாதவ்களும், அனன்யா வாஜ்பேயிகளும் இன்னபிற அற்ப சராசரிகளும் – இந்தியாவின் செலவில், இந்தியாவைக் கரித்துக் கொட்ட அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது இந்திய நடைமுறை ஜனநாயகத்துக்கு ஒரு பெருமைதான்! :-(
-0-0-0-0-0-0-
ஏனெனில், சில சமயங்களில் – சக்தியை வேறு விஷயங்களில் வீணடிக்கலாமோ எனத் தோன்றுவது ஒரு காரணம். இன்னொரு காரணம்: பொருட்படுத்தத் தகாதவைகளை ஏன் வலிந்து பொருட்படுத்தி இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதும் இன்னொரு காரணம்.
September 16, 2014 at 20:14
ஓரளவு நடந்து கொண்டிருந்த “தி ஹிந்து” பேப்பர், ராம் அவர்கள் தலைமையின் கீழ் விற்பனை கீழ் இறங்கியது. சிறிது காலம் வரதராஜன் வேறு. அச்சமயம், நான் ஹிந்து வாங்குவதை நிறுத்தினேன். முப்பது வருட பழக்கம் அறுந்தது. உங்கள் கட்டுரை படித்த பின், நமது முடிவு நல்லதே என்று இன்னும் உறுதி ஆகியது.