“இந்தியாவில் இப்படியொரு சமூகவியல் ஆராய்ச்சி நடக்கத்தான் கூடுமா?”
January 12, 2015
சரி. அதன் சாராம்சத்தைக் குறிப்பிடுவதற்கு முன்னால் – ஏன் இதனை அனுப்பினான் என்ற கேள்வி எனக்குள் எழும்பி என்னை அரித்ததைக் குறிப்பிடவேண்டும். “ஏண்டா, நான் இதைப் படிக்கவேண்டும்?” எனக் கேட்டதற்குப் பதில் “ஃபெர்கூஸன் நிகழ்ச்சி!” – ஒரு கருப்பன் அக்கிரமமாகத் தண்டிக்கப்பட்டமை + பின்விளைவுகள். அமெரிக்காவே பற்றியெறிகிறதே தெரியாதா, அறிவிலியே! அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிந்து, இனவாதம் நொறுங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை!”
<இங்கு, பெங்காலிபாபுவின் உணர்ச்சிகளைப் பொங்கவைக்கும், முக நரம்புகளைத் தெறிக்கவைக்கும், ரத்தத்தைச் சுண்டவைக்கும், உட்கார்ந்த இடத்திலிருந்தே முஷ்டிதூக்கிய லால்ஸலாம் (=புரட்சிகர செவ்வணக்கம்!) ஒன்றை இலவச இணைப்பாக கற்பனை செய்துகொள்ளுங்கள்!>
ஒரு வழியாகச் சென்றவாரம்தான் அதனைச் சுமார் இரண்டு மணி நேரம் செலவழித்துக் கவனமாகப் படித்தேன். இருந்தாலும், பெங்காலிபாபுவால் சுட்டப்பட்டதே? ஒவ்வொரு வரியையும் உன்னிப்பாகப் படிக்கவேண்டுமே! பின்னர் தானே, வரிக்கு வரியாகவும், சாராம்சமாகவும் விமர்சனம் செய்ய முடியும்? ஆகவே. (அந்த ஆவணம்: Are Emily & Greg more employable than Lakisha & Jamal? A field experiment on labor market – authored by Mariyann Bertrand & Senthil Mullainathan – மரியான் பெர்ட்ரன்ட் & செந்தில் முல்லைநாதன் (ஆ! தமிழர்!!) எழுதிய – “லகிஷா, ஜமால்களை விட எமிலி, க்ரெக்குகளுக்கு வேலை கிடைப்பது சுளுவா? வேலைவாய்ப்புச் சந்தையிலொரு களப் பரிசோதனை“)
இது ஒரு சராசரித்தர ஆராய்ச்சி ஆவணம்தான். என் நோக்கில் – இவ்வாவணம், ஒரு பரிசோதனை அளவில் இருக்கிறதே தவிர ஒரு சீரிய ஆய்வு என்கிற முறையில் இல்லை. பல சிடுக்கல்கள் – ஆனால் வெகுசுலபமான சிடுக்கவிழ்த்தல்கள்!
இந்தியாவிற்கு என அதன் நெடிய அறிவியல்/கணித பாரம்பரியம் இருந்தாலும், தத்துவ உச்சங்கள் இருந்திருந்தாலும் – பல காரணங்களால், தொடர்ந்து இருக்கவேண்டிய அளவுக்கு ஆராய்ச்சிகளும், மேன்மைக்கான நல்ல விஷயங்களும் நடப்பதில்லை எனும் குறை எனக்கும் உண்டு. இருந்தாலும், எதை எடுத்தாலும் விட்டேற்றியாகப் பேசி உங்கள் இந்தியாவில் ஒன்றுமே உருப்படியாக நடப்பதில்லை எனும் வாதத்தை என்னால் ஒப்புக்கொள்ளவே முடியாது. (நம்முடைய தமிழில் மானுடவியல், சமூகவியல், ஜாதி, சமூக அடுக்குவரிசைப் பகுப்பு, ஜாதி அரசியல் இன்னபிற பற்றிய மதிக்கக்கூடிய ஆய்வுகள்/புத்தகங்கள் ஏன் இல்லவேயில்லை?19/11/2014)
ஆனாலும் எனக்குப் பொதுவாக, தம் வாழ்நாளில் ஒரு விஷயத்திலும்கூட ஆழமும்வீச்சும் அடையாத குளுவான்கள் – ஒன்றையும் சாதிக்க ஆரம்பிக்கக்கூட முயலாத அறிவிலிகள், அடிப்படையில் அகங்காரம் பிடித்த முட்டாள்கள் – வெகு கரிசனத்துடன் இந்தியாவில் அது இல்லை இது இல்லை என்று பேசி, உளறிக் கொட்டுவதை சப்புக் கொட்டிக்கொண்டு ரசிப்பது ஒரு கெட்ட பழக்கம். சிலசமயம் அலுப்பும் சலிப்பும்தரும் மனித வாழ்வில் மகாமகோ நகைச்சுவைகள் தேவைதானே? ஆகவே.
மேலும் – எனக்குப் பல முறை – இந்தியாவில் பொறியாளர்களே இல்லை, ஆராய்ச்சியே சுத்தமாக நடப்பதில்லை, இஸ்ரோ ராக்கெட்டெல்லாம் சும்மா தீபாவளி ராக்கெட் (இப்படிப் பேசும் பலருக்கு சிவகாசி ராக்கெட் எப்படிப் போகும் என்பதும் மேலோட்ட அற்பமான ‘ந்யூட்டனின் மூன்றாம் விதி’ என்பதற்கு அப்பால் ஒரு எழவும் தெரியாது என்பதும் உண்மை!) என வழிந்துகொண்டு அலையும் அற்பர்களுடன் பொருத நேர்ந்திருக்கிறது. ஆகவேயும்.
சரி. இந்த ஃபெர்கூஸன் நிகழ்ச்சிகளைப் பற்றி நான் கேள்விப்படவில்லையாதலால், கொஞ்சம் அதனுடைய பின்புலத்தைப் படிக்க முயன்றேன். (என்னிடம் தொலைக்காட்சி இல்லை; தினசரிப் பத்திரிகைகளை வாரம் ஒரு முறை தூரத்திலிருந்து பார்ப்பேன், யாராவது (= நான் மதிப்பவர்கள், கண்ட கழுதைகளல்லர்) ஏதாவது தினசரிக் கட்டுரையை/சுட்டியை வெகுவாகப் பரிந்துரைத்தால் அது இணையத்தில் இருந்தால் படிக்க முயற்சிப்பேன், அவ்வளவுதான்; நான் சமூக(விரோத) வலைத் தளங்களிலும் இல்லை, ஏனெனில் வேறுவிஷயங்களில் என்னால் நேரத்தை வீணடிக்கமுடியும் – ஆகவே அன்றாட நிகழ்ச்சிகளால், பப்பரப்பாக்களால், திடீரெக்ஸ் அறச் சீற்றங்களால் உட்கார்ந்த இடத்திலேயே பாதிக்கப் படுவதில்லை. ப்ர்ஹ்மத்துக்கு நன்றி)
ஓரு மகிழ்ச்சிதரும் விஷயம். இப்போதெல்லாம், நம் செல்லப் பப்பரப்பா கேள்விஞானிகள், கருப்பர் பிரச்சினையைப் பற்றி கரிசனப்பட்டு அதனைச் சுத்தமாகத் தீர்த்துவிட்டதால், அடுத்ததாக ட்விட்டருலகத்தில் கவலைப்படாமல் எல்லோரும் டீ குடித்துக்கொண்டே டீவிரவாதத்தைப் பற்றிப் பேசி – அதனைட் ட்விட்டரிலேயே டீர்த்து விடுகிறார்கள் என்படை அறிண்டு புளகாங்கிடம் அடைந்தேன். :-(((
அற்ப சராசரி இணையக் குளுவான் பொங்கியெழுந்து வீரவசனம் பேச, இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது ஏதாவது உலகளாவிய பயங்கர எழவு நடக்கவேண்டியிருக்கிறது அல்லவா? :-)))
இவருடைய நெறிப்படுத்தலில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் பல மாணவர்களின் குவியமும் இதேதான். எனக்குத் தெரிந்து வாராணசி, ஜாதவ்பூர், ஜேஎன்யு, ஷாந்தி நிகேதன், காந்தி, காகதீய போன்ற பல பல்கலைக் கழகங்களில் (மேலும் இருக்கலாம், எனக்கு இவ்வளவுதான் தெரியும்) இம்மாதிரி ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தப் பேராசிரியர் – ஒரு பக்கம் முழுவதும் பெரும்பாலும் இளம் இந்திய ஆராய்ச்சியாளர்களால் எழுதப்பட்ட, இந்தப் பதிவின் கருப்பொருள் சார்ந்த, இருபதுக்கும் மேற்பட்ட சுவாரசியமான ஆராய்ச்சிகளைச் சுட்டியிருக்கிறார்: http://web.iitd.ac.in/~sbpaul/HUL736/readinglist.php
இவ்விஷயங்களை நான் இந்த பெங்காலிபாபுவிற்கு அனுப்பியிருந்தேன். ஆனால் அந்தப் பக்கத்திலிருந்து, பேரோசையுடன்கூடிய ஒரு அமைதி மட்டுமே!
Good luck for your future endeavours!
பின்குறிப்பு: ஒரு மசுத்தையும் தெரிந்துகொள்ள முயற்சிகூடச் செய்யாமல், பொத்தாம் பொதுவாக ஏண்டா இப்படி கருத்துகளை உருவாக்கிக்கிறீங்க கஸ்மாலங்களா? ஆராய்ச்சின்னா லிட்டர் எவ்வளவ கிலோன்னு கூட தெரியாதவனெல்லாம் ஏண்டா பெர்த்தியார் ஆராய்ச்சியப் பத்தியெல்லாம் மேலான கருத்து சொல்ல வர்ரீங்க? சும்பப் பசங்களா!
பின்பின்குறிப்பு: இந்தப் பதிவு எழுதும் வரை எனக்கு, அவனுடைய பதில் வரவில்லை; அவன் அடுத்த புல்லரிப்பு, உணர்ச்சிபிரவாக நிகழ்ச்சிக்காக உடனே கருத்துதிர்க்கக் காத்துக்கொண்டிருக்கிறானோ என்ன எழவோ! சலிப்பாக இருக்கிறது – கடவுள் நம்பிக்கை இருந்தாலாவது ஏதாவது கொழுகொம்பு என்று ஒன்றாவது இருந்திருக்குமே! :-(
கடைசிக் குறிப்பு: என் படுசெல்லங்களான தமிழ்ச் சிகாமணிகள் யாராவது, இந்த பெங்காலிபாபு சுட்டிய ஆராய்ச்சியைப் போல எதையாவது குறிப்பிட்டு, சூட்டோடுசூடாக ஏதாவது பிலாக்கணம் வைத்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை.
It is too good an opportunity for our fellow dumbass ITKWs (= Intellectual Tamil Keyboard Warriors) to pass up, yeah? If they had not done it, I would be rather surprised! But then, even typing on the keyboard, does require some effort, no? :-(
[1] பெங்காலி பாபு மஹாத்மியம்: கீழ்கண்ட சுட்டிகளில் எல்லாம் இந்த மகாமகோ சாக்கடை ஆய்வாளனாகிய பெங்காலிபாபுவின் வீரபராக்கிரமங்கள் இருக்கின்றன – படித்துத் துன்புறவும்: (இவனிடம் என்ன வசீகரம் இருக்கிறதென்று எனக்குப் புரியவேயில்லை – இவனையும் கட்டிக்கொண்டு மாரடித்துக்கொண்டிருக்கிறேன்! அவ்வப்போது என் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதற்கும் பதிவுகள் சில இடுவதற்கும் மட்டுமேதான் இவன் உதவிகரமாக இருக்கிறானோ? ஆனால், இவனும் இல்லாவிட்டால் ஒரு டொக்கில் இருக்கும் எனக்கு, நம்முடைய செல்ல அறிவுஜீவிகளின் (public intellectuals!) சிந்தனைகள்(!) பற்றி ஒரு எழவும் தெரியவராது என்பதும் உண்மைதான்!)
- போங்கடா, நீங்களும் ஒங்களோட ’ஜாதி ஒழிப்பு’ முழக்கமும்… 14/07/2013
- மங்களமண்டலத்தியல் கண்டு தெளிவோம்! 07/11/2013
- குஜராத் பற்றி பீலா விடுவது எப்படி? (=ஹர்ஷ் மந்தர், தீஸ்தா ஸெதல்வாத், அருந்ததிராய் போன்றவர்களிடம் கற்றுக்கொண்டு, மேற்கொண்டு நம் தமிழ்க் குளுவான்கள் மசாலா சேர்ப்பது எவ்வாறு?) 08/05/2014
- மோதிக்கு, இந்தியாவை நிர்வகிப்பது தொடர்பாக அறிவுரை வழங்குவது எப்படி? 16/05/2014
- ஷிவ் விஸ்வநாதன்: மோதி, என்னைப் போன்ற லிபரல்களை (=முற்போக்காளர்களை) எப்படித் தோற்கடித்தார்? 23/05/2014
January 12, 2015 at 13:59
can we find equivalent studies in india? no this is a purely merit based country. http://www2.econ.iastate.edu/classes/econ321/orazem/bertrand_emily.pdf … (via @m_sendhil )
twitter.com/arulselvan/status/537082389155946497
January 12, 2015 at 14:14
Sir, Anony-mouse – thanks for the pointer. Glad to note what the tweet said. :-(
Dunno who this arulselvan is – but may be he said it in jest or it was just a momentary lapse of reason on his part!
OTOH, if he had said it in derison just like my BegaliBabu did, with his attitude(!) – then it is merely QED for my post, yeah? :-)
Either way it is a wince-wince situation, I agree. :-)
January 12, 2015 at 18:36
ஒரு வேண்டுகோள்.புத்தக கண்காட்சி நடக்கும் இத்தருணத்தில் நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்துவைக்கும் ஒரு பதிவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.