தகவல்தொழில் நுட்ப வேலையாட்கள் ‘நவீன அடிமைகளா’ – அல்லது: (1) சரியான சமயத்தில் துறையில் நுழைந்த மந்தைகளா / (2) கவைக்குமட்டும் உதவும் சோம்பேறி குமாஸ்தாக்களா / (3) புலம்பல்முதல்வாதிகளா / (4) அற்ப எத்தர்களா – சில குறிப்புகள்
January 4, 2015
நானும் ஒரு ‘அக்கால’ தகவல்தொழில் நுட்ப வேலையாள் எனும் பின்புலத்தில் – மேற்கண்ட நான்கு பிரிவுகளிலும் இல்லாத ஐந்தாம் வர்ணத்தினரையும் அறிவேன். ப்ர்ஹ்மத்துக்கு, ப்ரபஞ்சத்துக்கு நன்றி.
இந்தப் பஞ்சமர்கள்தாம் ஐடி, இன்ஃபொர்மேஷன் டெக்னாலஜி கணினியியல் எனப் பலவாறு அழைக்கப்படும், ஆனால் தொடர்புள்ள துறைகளின் ஆதார சுருதிகள் – தொழில் நுட்ப நுண்மான் நுழைபுலம் காணல், தொடர்ந்து மகிழ்வுடன் மேம்படுத்திக்கொள்ளப்படும் அறிவுப்புலம், அயரா உழைப்பு, நேர்மை, மகத்தான குடிமை உணர்ச்சி, போற்றுதற்குரிய பொறுப்புணர்ச்சி, தொழில்தர்மம், விசாலமான பார்வை, விமர்சனங்கள் தாங்குதிறன், நேரமேலாண்மை, திட்டமிடுதல், தவறுகளைத் தொடர்ந்து திருத்திக் கொண்டுமேலெழும்புதல், தயாளகுணம், மற்ற துறைகளிலும் மேன்மையைப் பேணல், சுறுசுறுப்பு போன்றவை சார்ந்த பலகூறுகளில் ஜொலிப்பவர்கள்; என் கணிப்பில், மொத்த ஐடி வேலையாட்களில், இவர்கள் அதிக பட்சம், 5-8% இருந்தால் அதுவே மிகமிக அதிகம்.
இவற்றைச் சொல்வதில் எனக்குச் சந்தேகமோ தயக்கமோ இல்லவேயில்லை, மாறாக, பெருமை மட்டுமே! ஆம், இவர்களால்தான், இவர்களால் மட்டுமேதான் வண்டி ஓடுகிறது; காலாண்டுக்குக் காலாண்டு வளர்ச்சியில் வருமானம் தொடர்ந்து மேலெழும்பிக் கொண்டிருக்கிறது. இவர்கள் சராசரித்தனத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் குளுவான்கள் அல்லர்.
இவர்கள் பங்களிப்புகளின் மேல்தான் மேற்கண்ட சதுர்வர்ணத்தினர் மினுக்கிக் கொண்டு, எதோ தங்களால்தான் வளர்ச்சி ஏற்படுகிறது என மமதையுடன் பவனி வருகிறார்கள். எல்லா தொழில்களிலும் இந்தப் பிரிவினைகள் இருக்கத்தான் செய்கின்றன என்றாலும், இந்த ஐடி துறையில்தான் அளவுக்கு மீறிய மரியாதையும் சம்பளமும் வசதிகளும் வாய்ப்புகளும் மந்தைகளுக்குக் கொடுக்கப்படுகிறது. அதிகச் சம்பளம் பெறுவதாலேயே, இந்த மந்தைக்கும் தாங்கள் ஏதோ முக்கியமான காரியம் செய்வதுபோலவும், சமூக மேன்மைக்கு முக்கியமான பங்களிப்புகளை அளிப்பது போலவும் பிரமை ஏற்படுகிறது. இவர்களுக்கு ஊர் ஊராகச் சென்று அற்ப கீபோர்ட் பஜனை செய்து ‘பணி செய்து’ (CONsultancy!) நம் பாவப்பட்ட இந்தியாவைப் பற்றிய ‘கவைக்குதவாத சராசரி நாடு’ எனும் முத்திரைகுத்தலுக்கு முட்டுக்கொடுக்க முடிகிறது.
… … ஆனால் – இந்தப் பதிவில் நான் மிகவும் போற்றும் இந்தப் பஞ்சமர்களைப் பற்றி ஒன்றும் இல்லை. இவர்கள்மேல் எனக்குப் பொதுவாக விமர்சனம் என்பது இல்லை. ஏனெனில், இந்தப் பஞ்சமர்களின் சர்வாதிகாரத்தை நான் (உலக அளவிலேயேகூட) விரும்புபவன்.
நானும் ஒரு பஞ்சமன் அல்லன்; ஆனால் ஒரு பஞ்சமனாக ஆத்மார்த்தமாக விழைபவன், அவ்வளவுதான்.
இந்தப் பதிவின் நோக்கம், கீழ்கண்ட சமன்பாடுகளை/கருதுகோட்களை நிறுவுவதுதான்:
அ) ->>> சராசரி ஐடி குளுவான் ≠ நவீன அடிமை (சர்வ நிச்சயமாக, ∀)
ஆ) —>> சராசரி ஐடி குளுவான் = (1+2+3+4)/4 (= நிதர்சன, பிரத்யட்ச உண்மை!)
மறுபடியும் – ஒரு முக்கியமான குறிப்பு: நான் அனைத்து தகவல்தொழில் நுட்பக்காரர்களையும் முத்திரை குத்தி (stereotyping) அவர்கள் இவ்வளவுதான் என்று சொல்லவரவில்லை. நான், இந்தத் தொழிலிலுள்ள சராசரிகளைக் குறித்து ஒருமாதிரியான பொதுமைப்படுத்தலை (generalization) மட்டுமே செய்திருக்கிறேன். இந்தத் தொழிலிலும்கூட ஆச்சரியப் படத்தக்கவகையில் இன்னமும் விதிவிலக்குகள் இருக்கிறார்கள் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். ஆம், இங்கும் ஆழமும் வீச்சும் உள்ளவர்கள் இருக்கிறார்கள். மாதம் ஒரு டாலர் மாரியாவது பொழிவ்து இவர்களால்தான்.
-0-0-0-0-0-0-0-0-
சரி.
வா மணிகண்டன் அவர்கள், அவரது இக்காலத்திய வழக்கம்போலவே – தொழில்நுட்ப பஜனை மடங்களில், அவர் மொழியில் ‘கார்ப்பரேட்டுகளில்’ சகல சௌபாக்கியங்களையும் முழுமூச்சுடன் அனுபவித்துக்கொண்டிருந்தாலும், துளிக்கூட கூச்சமோ நாச்சமோ இல்லாமல் – பெரும்போராளிப் புகழ் தரக்கூடிய ஒரு ‘கார்ப்பரேட்’ எதிர் நிலையை எடுத்து, வெகுமேலோட்டமாக, உணர்ச்சிகரமான ஒரு முட்டியடி எதிர்வினையை மட்டையடியாக அடித்திருக்கிறார். பட்டாணிமூளையுடைத்த சோம்பேறிச் சராசரித் தமிழ வாசகர்களுக்குப் புல்லரிப்பு தருபவைதான் இவை போன்றவை. (முடிந்தால், டிஸிஎஸ் நிறுவனத்தின் (மிகமிகத் தேவையான) ஆட்குறைப்பு நடவடிக்கையின் எதிர்வினையான இவருடைய மணியான கட்டுரையைப் படிக்கவும்: ஒரே போடு…சத்!)
தொடர்ந்து, சலிக்கவைக்கும் வகையில், அரை வேக்காட்டுத்தனத்துடன் (ஆனால், மிக தைரியமாக!) இம்மாதிரியே டெம்ப்ளேட் கருத்துகளைப் பதிவு செய்தபடி இருக்கிறார். ஆனால், வினவு தளக்காரர்களின் அடிப்படை நகைச்சுவை உணர்ச்சியும் இல்லை.
ஆனாலும், எனக்கு இம்மாதிரியான, தினம், சிலசமயம் மணிக்குமணியுமேகூட ஒரு புத்தம்புதிய மணிகண்டனக் கட்டுரை என்பது ஒரு பெரிய பிரச்சினையாகப் படவில்லை. பொதுவாகக் கிண்டல் செய்துவிட்டுப் போய் விடுவேன். ஏனெனில் (1) எனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ – நமக்கு பலதரப்பட்ட கருத்துகள் வந்து சேரவேண்டும் – அவை அரைவேக்காடா அரைக்கால் வேக்காடா என்பது கருத்துசுதந்திர ஜோதியில் கலக்கும் வேறு விஷயம்; (2) மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு மட்டுமல்ல, கள்ளத்தனையது கருத்து நீட்டம் என்பதும் எனக்குத் தெரிந்ததுதான்.
ஆனால் – நான் பொதுவாக மதிக்கும் ஜெயமோகன் அவர்கள், இந்த விவாதத் திரியைப் பிடித்துக்கொண்டு, சில அனுபவங்களின் பின்புலத்தில் – இந்த தகவல்(!) தொழில்(!!) நுட்பக்(!!!) குளுவான்களெல்லாம் ஒரு விதமான நவீன அடிமைமுறையில் சிக்கித் தவிக்கிறார்கள் எனத் தொனிக்கும் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். சுரண்டப்படும் இந்தத் தட்டச்சுத் தொழிலாளிகள் அமைப்புபூர்வமாகத் திரண்டு தொழிற்சங்கம் அமைக்கவேண்டிய காலகட்டம், முதலாளியத்தின் அநியாய நெருக்கடிகளால் வந்துகொண்டிருக்கிறது என்பதுபோன்ற பார்வையையும் வைக்கிறார். இதனை முதலாளியம் அரசதிகார அமைப்புகளிலிருந்து பெறும் சலுகைகளுடன் பொருத்தி, அநியாயச் சித்திரத்தை விரிக்கிறார் – தொழிலாளர் நலச் சட்டகங்கள் நீர்க்கச் செய்யப் படுவது, பெருமுதலாளிகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கப்படுவது, பின்னவர்கள் தேசப்பொருளாதாரத்துடன் போடும் ஆட்டம் எனவெல்லாம்… (ஜெயமோகன் கட்டுரை: நவீன அடிமை முறை)
சரி. எனக்கு இம்மாதிரி நோக்கில் சிலபல பிரச்சினைகள்.
-0-0-0-0-0-0-0-
ஏன்?
ஜெயமோகன் அவர்கள், முனைப்புடன் பல தளங்களிலும் எழுதுவது பொருட்படுத்தத் தக்கது, கூர்மையாக கவனித்து என்ன சொல்லவருகிறார் என அவதானிக்கத் தக்கது, முடிந்தவரை அவர் எழுதுவதையெல்லாம் படிக்கும் ஒரு பெரிய வாசகத்திரள் (நான் உட்பட, 10000?) இருக்கிறது என்பதால்.
அவர் தொடர்ந்து விதம்விதமாகப் படித்து, படித்தவற்றைத் தன் அனுபவங்களுடன் பொருத்தி, கருத்துக்கோவைகளை அமைத்துகொண்டு, செழுமை செய்துகொண்டு தொடர்ந்து மேலெழும்பி வருவது மட்டுமல்லாமல் – தாம் பெற்றபேற்றினை இவ்வையகமும் பெற, தொடர்ந்து தன் கருத்தாக்கங்களை – அலுப்பும் சலிப்பும் இல்லவேயில்லாமல் – பதிவு செய்துகொண்டே வருகிறார் என்பதால்.
மேலும் அவர் எழுத்து, இளைஞத் தமிழப் பொதுப்புத்தியில் கருத்தாக்கங்களை உருவாக்கும் வகையில் இருக்கிறது என்பதால், என் பங்குக்கு, சில தன்னனுபவம் சார்ந்த குறிப்புகளை முன்வைக்கலாம் என நினைக்கிறேன். மேலும் – இந்த விவாதத்தில் சில தரப்புகள் கேட்கப் படாமலேயே, ஐடி கம்பெனிக்காரர்கள், பன்னாட்டு நிறுவனக்காரர்கள் அயோக்கிய முதலாளிகள் என, அடிப்படைத் தகுதிகளற்ற குளுவான்களால் மிகவசதியாக நிறுவப் படுவது எனக்குச் சரியாகப் படவில்லை.
தொடர்வதற்கு முன்னால், என்னைப் பற்றிய என்னுடைய சில முன் குறிப்புகள் – மிகுந்த யோசனைக்குப் பின்தான் இவற்றைப் பகிர்கிறேன்: கணினி தொடர்பாக, மின்னியல் தொடர்பாகவெல்லாம் நான் கல்லூரிகில்லூரியில் ஒரு சுக்குப் படிப்பும் படிக்கவில்லை, பயிற்சியும் எடுக்கவில்லை; ஒரு ஆர்வக்கோளாற்றின் காரணமாகத்தான் இவற்றை வந்தடைந்தேன், அவ்வளவுதான். இந்தச் சர்ச்சைக்குரிய தொழிலில் எனக்குக் கொஞ்சமாக (குறைந்த பட்சம், சுமார் 20த்திச் சொச்ச வருடங்கள்) நேரடி முன் அனுபவம் இருக்கிறது; அடிப்படைக் கணிநி நிரல்களை வடிவமைத்து எழுதுவதோடு – தொழில்முனைவோனாகவும், சிறியபெரியகுழுக்களை நடத்திச் சென்றவனாகவும், சில முக்கியமான ஆராய்ச்சிகளைச் செய்தவனாகவும், பயிற்சியாளனாகவும் இருந்திருக்கிறேன். இந்தியப் பெருவெளியில் பல கல்லூரிகளுக்குச் சென்று (1996 -2005) தரமான, மாணிக்கம்போன்ற ஆட்களைச் சேர்த்தியிருக்கிறேன் – இவற்றில் பெரிய பல்கலைக் கழகங்களும், 5 ஐஐடிகளும், 4 ஐஐஎம்-களும் அடங்கும். விற்பனைப் பிரிவிலும் வாடிக்கையாளர் கதவுகளைத் தட்டி, படிப்படியாக ஏறிஇறங்கிப் பணியாற்றியிருக்கிறேன். பல அற்புதமான மனிதர்களோடு பணிபுரியும் வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறேன். வணிகரீதியான வளர்ச்சியைக் (வெறும் பணரீதியான எண்ணிக்கை மட்டுமல்லாமல், தரத்திலும்) காட்டியிருக்கிறேன். நான் கொடுத்து வைத்தவன், இதில் சந்தேகமேயில்லை. எனக்குக் கிடைத்துள்ள அனுபவங்கள், திறப்புகளுக்கு நான் உண்மையில் பாத்தியதைப் பட்டவனா என்பது எனக்குச் சந்தேகம்தான்.
ஆகவே, ஒப்புக்கொள்ளவேண்டும்: தவறுகளையும் செய்திருக்கிறேன்; படுமோசமான தோல்விகளையும் சந்தித்திருக்கிறேன், பலமுறை கீழே விழுந்திருக்கிறேன் – ஆனால் மேலெழும்பியும் இருக்கிறேன் – அவ்வளவுதான்.
ஆனால், எடுத்துக்கொண்ட செய்ய விழைந்த, சிலபல விஷயங்கள் காரணமாக — கடந்த எட்டொன்பது வருடங்களாக இந்தக் கணினிசார் தொழில்களுடன் எனக்கு நேரடித் தொடர்பு இல்லையென்றாலும், எனக்குப் பல நண்பர்கள் – தொழில்முனைவோராகவும், கணினியாளர்களாகவும், கொந்தர்களாகவும் பலர் – இன்னமும் பல நாடுகளில் இருக்கிறார்கள். இவர்கள் வரி ஏய்ப்போ, வேலை ஏய்ப்போ செய்யாதவர்களாகவும், எத்தர்களாக இல்லாமலும் இருக்கிறார்கள். கடும் உழைப்பாளிகள். ஆகவே படுபுத்திசாலிகள். பலவிதத்திலும் பஞ்சமர்கள்.
இன்னுமொரு விஷயம்: ஒத்திசைவு பதிவுகளைத் தலையில் அடித்துக்கொண்டு தொடர்ந்து படிப்பவர்களில், கடந்த சுமார் 40 வருடங்களாக என்னைத் தெரிந்த & தமிழ் அறிந்த 9 பேராவது இருக்கிறார்கள்; இவர்கள் பார்வையில், மேற்கண்ட முன்குறிப்புகளில் உண்மைக்குப் புறம்பாகவோ, நிகழ்வுகளை வசதியாக வளைத்தவையாகவோ, அல்லது வெறும் பீலாக்களாகவோ ஏதாவது இருந்தால், அவற்றைத் தாராளமாகச் சுட்டலாம்; ஒரு பிரச்சினையுமில்லை. மேலும், என் பார்வையில் குறையிருந்தாலும் அப்படியே!
சரி. பீடிகை போதும்.
-0-0-0-0-0-0-0-
எனக்கு வா மணிகண்டன், ‘யுவகிருஷ்ணா’ போன்றவர்களின் மேலெல்லாம் தனிப்பட்ட முறையில் பிணக்குசுணக்கு என்று ஒன்றுமில்லை. பாவம், அவர்கள். தற்போதைக்கு இவர்களை, நம்மைப் பீடித்திருக்கும் சராசரிச் சுணக்கத்தின் குறியீடுகளாக மட்டுமே பார்க்கிறேன்.
மற்றபடி இவர்கள் நல்ல தகப்பன்களாகவோ, கணவன்களாகவோ, வீட்டுவேலையில் குறைந்த பட்சம் 50% ஆவது இழுத்துப் போட்டுக்கொண்டு செய்பவர்களாகவோ இருந்து, குடும்ப வாழ்க்கையின் அழுத்தங்களில் தம்முடைய பாகத்தையாவது ஒழுங்காக ஈடுசெய்பவர்களாகவும், குடிமையுணர்ச்சி மிக்கவர்களாகவும் இருந்து – உபரி நேரத்தில் மட்டும் இணையத்துக்கு ‘டைம் பாஸ்’ செய்ய வருபவர்களாகவோ & அடுத்த பப்பரப்பாவுக்கு அலைபவர்களாகவோ இருக்கலாம் – எனும் சாத்தியக்கறுகளும் இருக்கலாம் என நினைக்கிறேன். இருந்தால் நன்று. இல்லாவிட்டால் மகாமகோ எண்ணற்ற சராசரிச் சூழலுக்கு எண்ணிக்கைகள் அதிகமாகும், அவ்வளவுதான்.
-0-0-0-0-0-0-0-0-
என் அனுபவத்தில் – பல முறை எவ்வளவு சொல்லியும் திருந்தாத அரைகுறைகளை, நானே தயவுதாட்சணியம் பார்த்துக்கொண்டே மென்று விழுங்கிக் கொண்டிருக்காமல், வீட்டிற்கு அனுப்பியிருக்கிறேன்.
“… என் குழுவில் சுமார் 30 பேர். அதில் 6 பேர் போல நிஜமாகவே மென்பொருள் எஞ்சினீயர்களாக ஆகக்கூடிய சாத்தியக் கூறுகள். மற்றவர்கள், சாவி கொடுத்தால் மட்டுமே நடமாடும், சொன்னதை மட்டும் முக்கிமுக்கித் திக்கித்திணறி அரைகுறை கந்தரகோளமாக வேலை செய்பவர்கள், குறைகுடங்கள் – கற்றுக் கொள்வதில், உழைப்பதில் முனைப்பே இல்லை, மோசமான திறமையின்மை. டன்னிங்-க்ரூகர் விளைவின் மோசமான பிரதிநிதிகள். இவர்களுக்கெல்லாம் எப்படி ஒரு பட்டம் கொடுத்தார்கள் என எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
“அவர்களுக்கு மூன்று மாதம் (வேறு எந்த வேலையும் கொடுக்காமல்) ஒரு அடிப்படை பயிற்சி கொடுத்து – அதன் பின் அவர்கள் சரியாக வேலை செய்யவில்லையானால் வெளியில் அனுப்பிவிடுவேன் என்று சொன்னேன். என்னை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். மூன்று மாத முடிவில் ஒரே ஒரு பையன் தான் தேறினான்.
“… … அய்யா, இந்தப் பையன்களை இப்படி விரட்டினால் தான், அவர்கள் அடுத்த வேலைக்காவது கொஞ்சம் கற்றுக் கொள்ள முயற்சிப்பார்கள். இந்த விரட்டல், நம்முடைய எதிர்காலத்துக்கு மட்டுமல்ல, அவர்களுடைய எதிர்காலத்துக்கும் மிகவும் முக்கியம். நாம் இதனைச் செய்யாவிட்டால், அவர்களுக்கு நாம் உதவவில்லை, துரோகம்தான் செய்கிறோம். வேலை அறம், தர்மம் (Work Ethic) எனறால் என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? இது அவர்களுக்கே நல்லதில்லையா?
மேலதிக விவரங்களுக்கு, முழுப் புராணத்துக்கு: வெற்றிகரமாக ஒரு குழுவை, வர்த்தகத்தை வளர்த்தெடுப்பது எப்படி? (03/03/2013)
எதற்கு இவற்றையெல்லாம் சொல்லவருகிறேன் என்றால் – இம்மாதிரிப் பல நிகழ்வுகளில், ஆட்குறைப்புகளில் – ஒரு மசுத்துக்கும் முதலாளியத்துக்கோ, பன்னாட்டு நிறுவனங்களுக்கோ, நவீன அடிமைத்தனத் திணிப்பிற்கோ பங்கு சுத்தமாகக் கிடையாது என்று சுட்டத்தான்.
-0-0-0-0-0-0-0-0-
…. அடுத்த பகுதியில் தொடர்கிறேன். (இந்தத் தொடர் – மூன்று நான்கு பதிவுகளுக்கு நீளும் போலத்தான் படுகிறது. பாவம், நீங்கள்!)
January 5, 2015 at 08:59
உங்கள் பகடி எழுத்துக்கு நான் ரசிகன், என்றாலும் கல்வியியல், தொழில்நுட்பம், மேலாண்மை சார்ந்த கூரிய கட்டுரைகளை நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது என்போன்றவர்களின் தனிப்பட்ட விருப்பம்.
உங்கள் நேரத்திற்கும் உழைப்பிற்கும் நாங்கள் நன்றிகடன் பட்டிருக்கிறோம்.
January 5, 2015 at 10:36
Hi,
As much as I love your selfless work in giving education
to rural Children
You have elitist attitude.By your logic,since 5% contribute to the entire earnings,only CEO or top management is responsible for all the earnings.Or the 5% clones itself and works in all projects at all levels to keep the project running successfully.I hope you know that there is aggressive bidding(in terms of money and resources) to win the project.I also hope that you understand that the work done here need not meet the high standard expected by you.
January 5, 2015 at 12:30
See, Sir Anonymous – I am doing no selfless work or somesuch thingie. I merely enjoy what I am doing.
That said, you are correct in calling me an elitist.
Sir, I do not know where you work and what you work on/for – but there is so so so much mediocre flab sitting pretty in the hollowed halls of the IT industry that it is NOT a joke!
Small and topclass nifty teams can accomplish way more than a sea of software underwear engineers, IMHO.
I did/do not mean to rude – but I feel that we are capable of great work and some are indeed doing it, the horror, the horror!
__r.
January 6, 2015 at 14:00
Sir, Sort of curious to know: is mediocracy pervading all areas of work?; a general degradation of work ethics? and/or is mediocracy found more (out-of-proportion) in IT sector?
January 6, 2015 at 16:01
yes yes and yes!
January 5, 2015 at 11:22
அதெல்லாம் சரி. நானும் “பார்ப்பனீய, முதலாளித்துவ சுரண்டல்வியாதி” பார்வையில் எழுதியிருக்கிறேன். நேரம் கிடைத்தால் பாருங்கள்: https://medium.com/@rgokul/i-have-been-fired-before-4b9f5e6f7179
January 5, 2015 at 12:39
நன்றி. படித்தேன் & சிரித்தேன்.
நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் யார்? :-)
Unfortunately, it is fashionable and rather easypeasy for the lazy (m)asses to write ill of capitalists and anything that is connected to entrepreneurship – not knowing a fuckin’ thing about how the economy works and much else!
I am glad that there is at least one sane voice. Are there more such guys, who do not froth at the mouth and bestow their infinite prole wisdom on others!
Keep up the antidote to the generally all pervasive dravidian idiocy. Good luck.
January 6, 2015 at 10:23
I was glad to see Gokul’s medium post the other day and I am glad to see you taking this viewpoint. Looking forward to reading the next installment.
January 8, 2015 at 11:39
Hello. Am a lot active on twitter as @rgokul, excuse my profanity.
நானும் ஒரு பத்துப் பன்னெண்டு வருஷம் குப்பை கொட்டுன குளுவாந்தான், இப்போ முதலாளித்துவ, வலதுசாரி பார்ப்பானா இருக்கேன், http://nfnlabs.in ஓட்டினுருக்கேன்.
January 5, 2015 at 18:59
ராம்,
நீங்கள் குறிப்பிட்டு இருப்பது ரொம்ப சரி. நான் IT ஆள் அல்ல, மருந்தியல் துறையில் முனைவர். ஆனால் ஆர்வம் காரணமாக நிரல கற்றுக் கொண்டேன். IT துறையில் இப்போது உள்ள 98% ஆட்கள் நீங்கள் குறிப்பிட்ட நான்கு வர்ணத்தவர்களே. இந்த துறை கோரும் உழைப்பு மற்றும் சாதுர்யம் அற்றவர்கள். ஒற்றை திறன் கொண்ட மூடங்கள், ஆனால் இவர்களது அசாத்திய தன்னம்பிக்கை இருக்கிறதே அது அறியாமை மூலமே சாத்தியம். ஒரு ஒப்பாய்வுக்கு எடுத்து கொள்வோமே, இந்த ஒற்றைத்திறன்களை (one tooled wonders) வைத்துக் கொண்டு வேறு எந்த துறையிலும் பிழைக்க முடியாது.
January 5, 2015 at 19:30
பார்ப்பனர்களும் பார்ப்பனீய அடிமைகளும் தூக்கிப்பிடித்த முதலாளித்துவம் மண்ணைக்கவ்வி இருக்க இப்போது எதை தூக்கிப்பிடிப்பது?என்பதே இந்த அடிமைகளின் கவலை.பார்ப்பனர்களை பொறுத்தளவில் இரண்டாம் உலக்கப்போரில் ஜெர்மனி வெற்றி பெறப்போகிறது என்று தெரிந்த உடனேயே ஜெர்மன் படித்தவர்கள்.ஆகையால் அவர்கள் வேறு சுரண்டல் வழியை கண்டுபிடித்துவிடுவார்கள்.பார்ப்பனீய அடிமைகள் நிலைதான் கவலைக்கிடம்
January 6, 2015 at 07:32
யார்பா நீ ‘பெர்யார் தாடி?’?
றொம்ப டமாஸா எள்தறியே!
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் உளறிக்கொட்ட, நீங்கள் உங்கள் தளத்திற்குச் செல்லலாம். இக்காரியத்தை நான் மட்டும்தான் இங்கே செய்வேன்!
மேலும் உங்க்களுக்கு, பொதுச்சபையில் சாணி போட்டே தீரவேண்டுமென்றால், தாராளமாக நீங்கள், நம்முடைய பெரியார் திடலுக்குச் செல்லலாம்.
போய் ஒய்ங்கா உர்ப்டியா ஏதாச்சும் செய்ங்கடா, வேலயப் பார்ங்க்டா…
சரி. இதுதான் உங்களுடைய ‘பெரியார் தடி’ பெயரில் கடைசி பின்னூட்டம்.
January 6, 2015 at 10:34
hahahaha
January 6, 2015 at 13:03
பெரியார் பெயரைக்கண்டாலே பார்ப்பன குஞ்சுகளுக்கு வேர்த்து விடுகிறது.மற்றபடி நான் வைத்த வாதத்திற்கு பதில் சொல்ல வக்கில்லாமல் விதண்டாவாதம் செய்வது கூட பார்ப்பனீயம்தான்
January 6, 2015 at 16:11
பெருமிதிப்பிற்குரிய அய்யா பெரியார்தடியரே!
உங்களுடைய எல்லையற்ற நகைச்சுவையுணர்ச்சியைக் கருத்தில்கொண்டு தங்களுடைய பின்னூட்டம் அனுமதிக்கப் படுகிறது! ;-)
எல்லாமே பார்ப்பனீயம்தான், பாவம்! ஏன் பனியம் என்ன செய்தது? பார்ப்பன-பனியம்?? ஜாதிஜட்டியம்??
தாங்கள் படித்து இன்புற: ∑காந்தி(எதிர்)யம் = ∫{∑f(பார்ப்பன-பனியம், ஜாதிய-ஜட்டியம், அரைவேக்காட்டியம்)}dவெறுப்பியம் (11/05/2012)
அன்புடன், வியர்வையுடன், பார்ப்பனீயத்துடன்…
ஈ(து) வே(று) ராமசாமி.
January 6, 2015 at 22:11
>> பார்ப்பனர்களும் பார்ப்பனீய அடிமைகளும் தூக்கிப்பிடித்த …
பெரியார் எதை தூக்கிப்பிடித்தார் என்று அறிய ஆர்வமாக உள்ளேன்.
January 6, 2015 at 22:13
“தாங்க முடியல சாமி !” :-))
January 10, 2015 at 12:18
பெரியார்தடியரின் பின்னூட்டம், திராவிடத் தரத்திலிருப்பதால் அகற்றப் பட்டது.
ஒரு விஷயம்: இந்தத் தளத்தில் நான் மட்டும்தான் தரமில்லாமல் எழுத அனுமதி; மற்ற குளுவான்களுக்கு இந்த இடஒதுக்கீடு இல்லை. மன்னிக்கவும்!
__ரா.
January 6, 2015 at 22:30
Dearest Ram,
I laughed out aloud reading your outpourings and outrage. You have not changed at all – thank God for that.
I have given up on the Indian IT industry and the all pervasive mediocrity. No point in heroism or tilting at the windmills, Quixote! It is a losing battle with Tamil and IT types.
Come join me, let us build things as we did many moons back.
You know who I am. Have mailed you for good measure.
A Q though – how do you find the time to do all the mucking around at all? Flummoxes me!
January 10, 2015 at 12:20
தமிழ்ப்பதிவுக்கு ஆங்கிலம்.நீர்தான் உண்மைத்தமிழர்.அப்படியே ஆங்கிலம் பேசுவோரிடம் தமிழில் பதிலளித்தாலும் நன்றாகவே இருக்கும்!
January 7, 2015 at 23:17
நீங்கள் எழுதியிருப்பதெல்லாம் சரி. ஆனால் வெளியேற்றப்பட வேண்டியவர்கள்தான் வெளியேற்றப் பட்டிருக்கிறார்களா என்பதுதான் என் ஐயம். இப்போது நாடு இருக்கும் நிலையில் உண்மையாகவும் நேர்மையாகவும் உழைப்பது கெட்ட காரியம்போலப் பார்க்கப்படுகிறது.
குளுவான்கள் அப்படியே தொடர்ந்து குளுவான்தனம் செய்துகொண்டிருக்க அவர்களது Mediocrityக்கு உண்மையாக உழைப்பவர்கள் பலிகடாவாக்கப்படுகிறார்களோ என்கிற சந்தேகம் TCSல் நடந்ததுபோன்ற மொத்த வெளியேற்றங்கள் நடக்கும்போதெல்லாம் தோன்றுவதுண்டு. உங்கள் கருத்து என்ன?
January 8, 2015 at 05:55
அப்படியும் இருக்கலாம். ஒப்புக்கொள்ளமுடியாவிட்டாலும் புரிந்துகொள்ளமுடிவதான ஒன்றுதான். கறுப்பு-வெளுப்பு என்று இதனைப் பார்க்க முடியாது.
ஆனால், அந்தப் பிரச்சினை என்பது வேறு. ஆகவே, பின்னர் பார்க்கலாம்.