!நிசப்த யானை வெடியும் மகாமகோ புகையும்… (இரண்டாம் பகுதி)

August 23, 2014

(அதாவது) போங்கடா, நீங்களும் ஒங்களோட இஸ்ரேல் எதிர்ப்பு பிலிம் காமிக்கற போங்காட்டமும்… (பாகம் 2)

— !நிசப்தம் பதிவுகளை எழுதிவரும் திடீரெக்ஸ் அறச்சீற்ற இளைஞர் வா. மணிகண்டன் அவர்களின் அண்மைய கட்டுரைகளில் ஒன்றான ( ‘அங்க என்னம்மா சத்தம்?‘)  படித்த மகாமகோ சோகத்தில் எழுதிய என் “ஒண்ணும் இல்லடா கண்ணா, கட்டுரையாசிரியர் ‘யானை வெடி’ வெடிக்கரார்டா; சத்தமும் பொகையும் தான் பெருஸ்ஸா வரும். பயப்படாத… எல்லாம் புஸ்ஸுதான்… காத மூடிக்கோ!” பிலாக்கணத்தின் தொடர்ச்சி. ஸ்ஸ்ஸ் அப்பாடா!

எடுத்ததை முடிக்கவேண்டும். ஆகவே தொடர்கிறேன். பாவம் நீங்கள். வேறு வேலையில்லையென்றால் மேலே படியுங்கள். வேறுவேலைகள் இருந்தாலும்தான்!  ;-)

 -0-0-0-0-0-

சரி. நிசப்தமான அந்தச் சத்தக்  கட்டுரைக்கு மறுபடியும் போகலாம்: Mommie!! Returns!!!

“இது [அண்மைய காஸா-இஸ்ரேல் சச்சரவுகள்] பற்றிய டாகுமெண்டரி ஒன்றை பெங்களூரில் திரையிட்டார்கள். சாப்ளின் டாக்கீஸ் என்ற அமைப்பினர். தமிழ் இளைஞர்கள்தான். நற்றமிழன் பழனிசாமியை மட்டும் அந்தக் குழுவில் தெரியும். சர்வதேச அரசியலை மிக எளிமையாக பேசக் கூடிய இளைஞர். “

ஆ!  “சர்வதேச அரசியலை மிக எளிமையாக  பேசக் கூடிய இளைஞர்.” அய்யோடீ சொக்கீ!  நம்பவே முடியாமல், இரண்டுமூன்று தடவை இந்த வரியைப் படித்தேன்.

அய்யய்யோ! ஆஹா! அய்யா – இந்த ‘நற்றமிழன் பழனிசாமி’ அவர்களை விட்டு எளிமையாக ஒரு சர்வதேச அரசியல் பற்றிய புத்தகங்களை எழுதச்  சொல்லி – நம் தமிழர்களை உய்விக்க முடியுமா?

 • முதல் புத்தகம்: ‘ஒரு வெட்டி டாகுமென்டரி பார்த்தே, சமகால வரலாற்றறிஞன் ஆவது எப்படி?’
 • இரண்டாம் புத்தகம்:  ‘மூன்றே வினாடிகளில் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையைப் புரிந்துகொள்ளுங்கள்!’ (இலவச இணைப்பு: அடுத்த அரைவினாடியில் அதனைத் தீர்த்தேவிடுங்கள்!)
 • மூன்றாம் புத்தகம்: ‘ஒரே வினாடியில் சர்வதேச அரசியல்!’ (எளிமை விலைப் பதிப்பு)

பத்ரி சேஷாத்ரி அவர்களின் உழக்கு பதிப்பகம் (என் புத்தகம் ஒன்றையும் இது பதிப்பித்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே!) உங்களுக்காகக் காத்திருக்கிறது. ஓடிப்போய்   தொடர்பு கொள்ளுங்கள்…

… சரி. எளிமை என்பதை வெகுளித்தனம் எனவும் புரிந்து கொள்ளலாம்; ஆனால் மகாமகோ சிடுக்கல் பிரச்சினைகளுக்கெல்லாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து  ‘வினவு காரர்கள்’  போல  குசு விட்டு எளிமையான கருத்துகளை உதிர்ப்பது என்பது ஒரு கலைதான்.

எளிமை  என்கிற அழகான வார்த்தையை வைத்துக் கொண்டு, ஒரு வெறுக்கக் கூடிய அரைகுறைத்தனத்தைப் பிரதிபலிக்கச் செய்வது என்பது  ஒரு நுண்கலைதான். :-(

மன்னிக்கவும்; எனக்கு மறந்தே போய்விட்டது. கூக்ல் போய், விக்கிபீடியா போய் ஒன்றிரண்டு வினாடிகள் முக்கினால், உடனடியாக, வெகு எளிமையாக சர்வதேச அரசியலைப் பற்றி ஏசலாம்.

குறிப்பு: மொத்தம் சுமார் 3200 பேர் மட்டுமே வசிக்கும், எங்கள் பள்ளி இருக்கும் கிராமத்தில் ஐந்து நாயக்கர் பெருங்குடும்பங்கள் (= ‘வகையறா‘ என்று குறிப்பிடுகிறார்கள்)  அல்லது குறுங்குழுக்கள் இருக்கின்றன. பக்கத்து கிராமத்தில் மூன்று இப்படிப்பட்ட குழுக்கள். இவை அனைத்துக்கும் இடையே, பலவித பிரியும்/சேரும் நட்புகளுக்கும் பகைமைகளுக்கும் நடுவில் படு பயங்கரமான குழு அரசியல் – கத்திச் சண்டைகள், கொலைகள் – ஒவ்வொரு வருடமும் இரண்டு கொலைகளாவது நடக்கின்றன (போன 2013வருடம் அத்தி பூத்தாற்போல ஒன்றுமட்டுமே! இந்த வருடம் இதுவரை இல்லை!). இந்த அரசியலைப் பற்றியே கூட என்னால் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தாலும், அதனைப் பற்றி எளிமையாகப்  பேசவேமுடியாது. ஒரே சிக்கல்கள். என்னுடைய போதாமையும் அரைகுறைத்தனமும்தான் இதற்குக் காரணமாக இருக்கவேண்டும். என்ன செய்வது சொல்லுங்கள்…

!நிசப்தம்காரரின் நண்பர் எனக்கு பயிற்சி தருவாரா? ‘சர்வதேச அரசியலை மிக எளிமையாக பேசக் கூடிய இளைஞர்‘ அவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமாகவே இருக்காதுதானே? சர்வதேச அளவில் எங்கள் கிராமம் தம்மாத்தூண்டுதானே?

மேலதிகக் குறிப்பு: !நிசப்தம்காரர் கருத்தை வைத்துக்கொண்டு இந்த ‘நற்றமிழன் பழனிசாமி’ அவர்களை மதிப்பிடக் கூடாதுதான். முன்னவரின் ஆஹாஊஹூ  கருத்துக்குப் பின்னவர் என்ன செய்வார் பாவம்! இருந்தாலும் அய்யாமார்களே, உங்களுக்காக இன்னமும் காத்துக்கொண்டிருக்கிறது உழக்கு பதிப்பகம்!

-0-0-0-0-0-0-

காஸா பற்றி சில குட்டிப் புத்தகங்கள் அல்லது அற்புதமான கட்டுரைகளை உட்கார்ந்த இடத்திலிருந்தே அலுங்காமல் நலுங்காமல் எழுத, சில தலைப்புகளுக்கான சிபாரிசுகள்: (முடிந்தவரை – எனக்குச் சரியென்று பட்ட, இக்கட்டுரைகளை எழுதக்கூடிய கட்டுரையாசிரியர்கள்/பத்திரிகைகள் பெயரையும் கொடுத்திருக்கிறேன்)

 • இஸ்ரேலே! காசா என்றால் லேசா? (விடுதலை)
 • காசாவில் காசு பார்க்கும் அமெரிக்க கார்ப்பரேட் நாய்கள்! (கண்டிப்பாக – இது ‘வினவு’ குளுவான்களுக்காக மட்டும்)
 • இஸ்ரேல்: காசாவின் காச நோய் (யுவகிருஷ்ணா)
 • காசா தான் கடவுளடா! (நாணயம் விகடன்)
 • காசா(ல) கைய வெச்சா… (சீமான்/விஜய்)
 • காசாவை கரியாக்காதே!  (நெய்வேலி – திமுக தொழிற்சங்க தட்டிவிளம்பரம்)
 • கசக்கும் காசா (கல்கி)
 • காசா கசமுசா எனும் பாலஸ்தீனிய திரைக்கவிதை (அகிரா கியரோஸ்டமி குரகாசாவின் உலகசினிமா ‘மார்டன்’ விமரிசனம்: எஸ். ராமகிருஷ்ணன்)
 • வொய் திஸ் கொலவெறி – காசா for dummies (அதிஷா)
 • காசா: நிகழ்ந்துகொண்டிருக்கும் இறந்தகாலமும், இறந்தகாலங்களின் நிகழ்காலமும் – ஒரு சாட்சியம் (ராஜன் குறை கிருஷ்ணன்)
 • இஸ்ரேலின் அணுவுலைகளினால் காசாவுக்கு அபாயம் (ஞாநி)
 • தென்னமெரிக்கத் திரைப்படங்களில் காசா – ஒரு பின் நவீனத்துவ விமர்சனம் (சாரு நிவேதிதா)
 • யூத வந்தேறிகளால் ஏற்பட்ட காசா இனப்படுகொலை (பழ நெடுமாறன்)
 • ஆதிக்கசாதி பார்ப்பனீயம்தான் இஸ்ரேலை உயர்த்திப் பிடிக்கும் (மார்க்ஸ்)
 • திமுக தோல்விக்குக் காரணம் இஸ்ரேல்! (முக ஸ்டாலின் – அய்யய்யோ மன்னிக்கவும் இசுடாலினார்)
 • அந்தக் காலத்தில் இஸ்ரேல் இல்லை – மிகமிகப் பழைய ஏற்பாடு சாட்சியம் (ஆஇரா வெங்கடாசலபதி; யெருஸலாயிம் நூலகத்திலும் அலெக்ஸா்ன்ட்ரியாவிலும், யாழ்ப்பாணத்திலும் கிடைத்த குறிப்புகளின்மீது வடிக்கப்பட்டது)
 • கடைசி மரத்தை வெட்டும் வரை நாங்கள் காசாவின் இடஒதுக்கீடுக்காகக் போராடுவோம் (டாக்டர் இராமதாசு)
 • If  Jeyamohan has written about Gaza, what right does he have to write about it & if Jeyamohan has not written about Gaza, why should he have written about it instead of being indifferent- a deep fraudian analysis with copious footnotes, ready references, appeal to ethics, parallels with American protest scenes and much else (A Contrarian World)

தலைப்பு தயார், உள்ளடக்கம் எங்கேயென்றால் – என்ன எழுதவேண்டும் என்பதை விக்கிபீடியாவிலிருந்து உருவி, கூக்ல் மொழிமாற்றியை வைத்துத் தமிழில் பெயர்த்துக்கொள்ளலாம். சரியா? (ஆனால் உழக்கு பதிப்பகம் இவற்றையெல்லாம் பிரசுரிக்காதாம், பத்ரியுடன் இப்போதுதான் பேசினேன். என்ன ஆணவம்! உழக்கு இல்லாவிட்டால் HairDye பதிப்பகம் செல்ல எங்களுக்குத் தெரியாதா? ஹ்ஹ.)

சரி, போதும் – நிசப்தம் பக்கம் செல்லலாம். ;-)

-0-0-0-0-0-

“திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்குக்கு வாடகை மட்டுமே ஆயிரத்து ஐந்நூறு ரூபாய். அது போக ப்ரொஜெக்டர், ஆடியோ சிஸ்டம்ஸ் எல்லாம் தனி.”

அய்யா அவர்களுக்கு எங்கு சென்றாலும் இதன் விலை என்ன, அதன் விலை என்ன, ஒரு ஐடி தட்டச்சு வேலை செய்யும் தன்னால் இதனை வாங்கமுடியுமா செய்யமுடியுமா, வெறும் மளிகைக் கடைக்காரர்கள் பெரிதாகச் சம்பாதிக்கிறார்கள், ஏன் நம்மால் முடியாதா, முடியவே முடியாது – ஏன் முடியணும், ஏன் இப்படி ரிஸ்க் எடுக்கவே முடியாத நிலை – என்ற வாழ்க்கையின் அடிப்படைக் கேள்விகள் தான். பேக்கரி சென்றாலும் சரி. பஸ்ஸில் போனாலும் சரி – இதேவகைப் பிரச்சினைகள் தான்; காஸாவில் ரியல் எஸ்டேட் எப்படி, ப்ளாட் விலை எவ்வளவு இருக்கும் வகை பற்றாக்குறை மனப்பான்மைச் சிந்தனைகள் – ஆக, பல சமயங்களில் திரையுலக ‘தருமி’ நாகேஷை நினைவு படுத்துகிறார், பாவம் – ஒரு மத்தியதரவர்க்கம் சார்ந்த படைப்பூக்கம் மிக்க கலைஞனுக்கு என்னவெல்லாம் முட்டுக் கட்டைகள் பாருங்கள்… :-( ஏமாந்தால் ஏறி மிதித்து விடுவார்கள். :-((

என்னையே எடுத்துக் கொல்லுங்கள். நான் தட்டச்சு செய்யும் இந்த தொடைமேற்கணினி 30000 ரூபாய். என் மூக்குக் கண்ணாடி 2000 ரூபாய். வெறும் சிலிக்கன் மணல் மெட்டீரியலுக்கு இவ்வளவு விலையா? கம்ப்யூட்டர் செய்யும் கார்ப்பரேட் முதலாளிகள், கண்ணாடித் தொழிலதிபர்கள் – தொழிலாளிகள் வயிற்றில் அடித்துக் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். மணல் கொள்ளையர்கள். கேட்பதற்கு ஆளில்லை. கேட்டால் அடிக்க வந்து விடுவார்கள். அடச்சே!

ஆனாலும் ஆனியன் ரோஸ்ட் அம்பது ரூபாயாமே? என் அடுத்த புத்தகத்தின் பெயர் இதுதான். உரக்கச் சொன்னால், வாயில் இடியாப்பத்தைத் திணித்து விடுவார்கள். சரவணபவன் ஓவர் விலை. இடியாப்பம் ஒரு ப்ளேட் விலை ரூ 80/-. அநியாயம்.   தமிழகத்தின் இடியாப்பத்தை நூடுல்ஸ் சாப்பிட்டுவிடுமோ? இதுதான் நூடுல்த்வா என்பதா? மேக்கி நூடில்ஸ் பேக்கட் விலை ரூ 30/-; கடைக்காரருக்கு ஒவ்வொரு பாக்கெட்டிலும் லாபம் 30% சுளையாக நிற்கும். ஏன் நம்மால் இதனைச் செய்யமுடியாதா? முடியாது. பள்ளி ஆசிரியர்கள் என் தன்னம்பிக்கையையே ஒழித்து விட்டார்கள். தன்னம்பிக்கை கிலோ என்ன விலை? (அய்யய்யோ! இளைஞர் ஷ்டைலில் நானுமா??)

 “இஸ்ரேல் ஒன்றும் சாதாரண நாடு இல்லை. ‘உலகத்தில் இதுவரை தனது எல்லையை அறிவிக்காத ஒரே நாடு இஸ்ரேல்தான்’ என்று ஒருவர் சொன்னார். முடிந்த வரைக்கும் சுரண்டிக் கொண்டே போவதுதான் அதன் பாலிஸி. “

சரி.  இஸ்ரேல் ஒரு மசாலா நாடு, சாதா நாடு அல்ல. போதுமா? கொத்து பரோட்டா (ரூ. 30/- மட்டுமே) சாப்பிடுவதற்குப் பதிலாக பதிவெழுத வந்தால் – சர்வதேச அரசியல் நிலவரங்களை, சாதா நாடு -ஆனியன் ரோஸ்ட் நாடு என்றுதான் பகுப்பு செய்யமுடியும்.  நாடு, நிலப்பரப்பும, பூகோளம் என்றாலே !நிசப்தம்காரருக்கு லட்டு (ரூ 25/-) தான் நினைவுக்கு வருமோ?

‘உலகத்தில் இதுவரை தனது எல்லையை அறிவிக்காத ஒரே நாடு இஸ்ரேல்தான்’

எந்த மெத்தப் படித்த மேதாவியய்யா இப்படி  ‘உலகத்தில் இதுவரை தனது எல்லையை அறிவிக்காத ஒரே நாடு இஸ்ரேல்தான்’  என்றெல்லாம் கருத்துதிர்த்தது? அவர் காலைக் கொஞ்சம் என் பக்கம் நீட்டினால், அதனைத் தொட்டு என் கண்ணை ஒற்றிக் கொள்ள நான் தயார். எப்படிப்பட்ட மேதாவி அவர்!

ஆனால் – அவரை விட அதிமேதாவி  யாரென்றால் !நிசப்தம்காரர்தான்! யாரோ சொன்னதை அப்படியே போட்டு ஒரு பதிவையும் தேற்றியிருக்கிறார் என்றால், அவர்தம் மேதாவித்தனம் தான் என்னே!

ஆனால், ஆனால்… இவர்கள் இருவரையும் விட மகாமகோ மேதாவி யாரென்றால் அது நாந்தேன்! வேலை வெட்டியற்று இவர்கள் சொல்லையும் செயலையும் விமர்சனம்(!) செய்து கொண்டிருக்கிறேன் பாருங்கள்! :-(

‘முடிந்த வரைக்கும் சுரண்டிக் கொண்டே போவதுதான் அதன் பாலிஸி.’

அய்யா !நிசப்தம், இஸ்ரேல் ஒன்றும் மலாய் காய்ச்சும் கடாய் அல்ல – சுரண்டோசுரண்டு எனச் சுரண்டுவதற்கு. கடையில் கிடைக்கும் கடாய் ரூ 800/-.ஆனால்  மலாய் ஒரு கப் 40ரூ. சாப்பிட்டால் கொழுப்பு ஏறிவிடும் என்கிறார்கள். வீட்டில் அடிக்கவருவார்கள்.

ஆரோக்கியம் முக்கியம். இல்லையென்றால் டாக்டருக்கு அழ வேண்டும். அவர் ஐந்து நிமிடத்திற்கு ரூ.500/ வாங்கிவிடுவார். எனக்கு ஒரு மணி நேரம் வேலை செய்தாலும் என் முதலாளியிடமிருந்து ரூ.500 வராது. வெளியே சொல்ல முடியாது. சொன்னால் வேலை போய் விடும்.   டீம் லீடருக்குத் தமிழன் என்றால் கேவலம். உலகத்திலேயே பொட்டி தட்டும் வேலைதான் கீழானது. அதனால் தான் நான் அதனைச் செய்து கொண்டிருக்கிறேன். :-(

எனக்கு ஈகோ அதிகம். ஆனால் எவருக்குத் தான் ஈகோ இல்லை. என் ஊரில் அய்யனாருக்குக் கூட ஈகோ இருக்கிறது என்கிறார்கள். அதனால்தான் அவர் ஒரு குறுந்தெய்வமாகவே இருக்கிறார். இதற்குமேல் எழுதினால் அடிக்க வந்துவிடுவார்கள். அவர்கள் பெயரைச் சொல்லமாட்டேன். அவர்கள் இந்துத்துவர்கள். எங்கள் ஊரில் இந்துத்துவம் கிலோ ரூ 50/- தான். ஆனால் பெங்களுரில் அதே விஷயம் ரூ 1000/-! அநியாயமாக இருக்கிறது அல்லவா?  எல்லாம் பெருமுதலாளிகள் கையில். சாதா மனிதர்களை எவன் கேர் செய்கிறான். அவர்கள் விவசாயம்தான் செய்யவேண்டும். வெறும் நஷ்டம்தான். ரொம்பப் பேசினால் உதைக்கவருவார்கள்.

ஐடி தொழிலில் எதுவுமே சாஸ்வதமில்லை. நாளைக்கே வேலையை விட்டு எடுத்துவிட்டால்  என்னால் வேறென்ன செய்யமுடியும். வீட்டில் திட்டுவார்கள்.

தினம் ஒரு பதிவு எழுதவில்லையென்றால் வாசகர்கள் பொட்டில் அடிப்பார்கள். தினம் எழுதினாலோ வெறியர்கள் ரவுண்டு கட்டிக்கொண்டு அறைவார்கள். தமிழ் எழுத்தாளன் என்றால் அவ்வளவுதான். என்னை நானே குத்திக்கொள்ள வேண்டியதுதான்.

… அடுத்த பதிவில் மங்கோலியாவின் தமிழ் இலக்கியம் பற்றி எழுதலாமா? அதற்கு யார் உதைக்க வருவார்கள் என்பதை நினைத்தால் உதறலாக இருக்கிறது…

-0-0-0-0-0-0-

… ஆனால் – ஒவ்வொரு நாளும் எத்தைத் தின்றால், எத்தைப் பதிவு செய்தால் பித்தம் தெளியும் என்று – அனுபவங்களைச் சுரண்டிச் சுரண்டி முடிந்தவரை உள்ளீடற்ற, துறையறிவற்ற பிலாக்கணப் பதிவிடுவது என்பது நிச்சயம் ஒரு அனுபவச் சுரண்டல்தான்.

இந்தப் போக்கினை ஒரு ‘பாலிஸி’ என்ற அளவிற்கு உயர்த்த வேண்டிய அவசியமும்  இல்லை.

… மேலும் தொடரும்… :-(   இன்னும் அரைவாசி ‘அங்க என்னம்மா சத்தம்’ பதிவு பாக்கியிருக்கிறது. பாவம் நீங்கள். ;-)

தொடர்புள்ள பதிவுகள் / தொகுப்புகள்…

 

19 Responses to “!நிசப்த யானை வெடியும் மகாமகோ புகையும்… (இரண்டாம் பகுதி)”

 1. Benhur Erode Says:

  whats wrong with you?

 2. Benhur Erode Says:

  Why you attack him. He is going on his own way. Is it bothering you any way?. Do you think that you are intellectual and authority for every thing? Do not envy others.

 3. Sam Says:

  Ramasamy, yo, you Rock.

 4. பக்கிரிசாமி. N Says:

  பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், டீக்கடை, சலூன் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் பேசும் பொருளுக்கு விளக்கங்கள் வித்தியாசப்படும். அது அவரவர்கள் நிலையைப் பொறுத்தது.

  அதற்காக ஒரு நிலையில் இருப்பவர்கள் அடுத்தவர்களைப் பேசக்கூடாது என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயம்? நீங்கள் சொல்வது உண்மை என்றாலும், சொல்வதால் எத்தனை பேர் அபிப்ராயத்தை மாற்றிக்கொள்வார்கள் என்று உண்மையாக நம்புகிறீர்கள்? அடுத்தவர்களை மட்டம் தட்டுவதால் என்ன சாதிக்கலாம் என்று நம்புகிறீர்கள்? உங்களுக்கு ஃஃபன் ஆகத் தோன்றுவது மற்றவர்களுக்கு மன உளைச்சலைத்தரக்கூடும். உண்மையில் நீங்கள் நல்லது செய்ய விரும்பியிருந்தால் மணிகண்டனிடம் நேரடியாகத் தொடர்புகொண்டிருக்கலாமே?

  • A.Seshagiri Says:

   “அடுத்தவர்களை மட்டம் தட்டுவதால் என்ன சாதிக்கலாம் என்று நம்புகிறீர்கள்? உங்களுக்கு ஃஃபன் ஆகத் தோன்றுவது மற்றவர்களுக்கு மன உளைச்சலைத்தரக்கூடும்.”
   ராமசாமி அவர்களைப்பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் பிதற்றி இருக்கிறீர்கள்.மணிகண்டன் போன்றவர்களின் அரைவேக்காட்டு கட்டுரைகள்தான் எங்களுக்கு தீராத மன உளைச்சலை தருகிறது

   • பக்கிரிசாமி. N Says:

    நான் மதிக்கக்கூடிய சேலம் பெரியவர், ஏன் இப்படியெல்லாம் அடுத்தவர்கள் காலை வாருகிறாய் என்று ராமசாமி எழுதியிருக்கிறார். பிதற்றுவது நானில்லை.


   • மதிப்புக்குரிய பக்கிரிசாமி, சேஷாத்ரி அவர்களே – தயவுசெய்து, என் பொருட்டு நீங்கள் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். It is not worth the trouble. நெடிய ‘தன்னிலை விளக்கம்’ ஒன்றை ஓரிரண்டு நாட்களில் பதிவு செய்கிறேன்.

    பெரியவர் போய்ச்சேர்ந்து இரண்டுமாதங்களாகி விட்டன. ஒரு அறிவுரை குறைவாகவே வருகிறது. 8-)

    நன்றி.

  • muthu Says:

   பக்கிரி,
   உண்மை…டீக்கடையில் பேசும் தரமும், ஊட்டியில் இலக்கியக் கூட்டத்தில் பேசும் தரமும் ஒன்று அல்ல..
   எல்லோருக்கும் எல்லாம் புரிய வேண்டியது இல்லை…

   ஆனால் எழுத்தாளர், கவிதை ஆசிரியர், தமிழ் கூறும் நல்லுலகு கண்ட வலைப்பூ ஆசிரியர் என்று எல்லாம் சொல்லிக்கொள்ளும் ஒருவரது எழுத்தின் தரம் தரைமட்டம்..அதை சுட்டிக்காட்டுவது ஒரு அறிஞன் செய்யவேண்டியது…ஏன் அதை சொல்லக்கூடாது? இந்த மீடியாகொர் எழுத்து தான் தற்காலத் தமிழின் தலைவிதி என்று ஆகி விடக்கூடாது அல்லவா ? …

   ராமசாமி அவர்கள் குறிப்பிடும் மணிகண்டனின் கட்டுரையில் ..”நீங்க சொல்லிதாண்ணே இது நல்லா புரியுது ” என்ற ரீதியில் கமெண்ட் போடுகிறார்கள்…அவருக்கே எதுவும் தெரியாத ஒரு விஷயத்தை இப்படி கோயிஞ்சாமிகள் மனதில் தவறாக விதைப்பது தவறு அல்லவா..???…

   இல்ல ஒனக்கு என்னையா போச்சு ? அப்டீன்னு மட்டும் கேளுங்க ? ராசா வண்டிய வுட்டுர்றேன் …:):)

  • Sam Says:

   He has to know the truth a bit; One just can not put of his mindless (may be mindful’l’) thoughts because there is Keyboard and Internet ;) When it happens, it should be pointed out and he has to accept and correct that. Makes sense?

 5. க்ருஷ்ணகுமார் Says:

  ஸ்ரீமான் பக்கிரிசாமி,

  \\ ‘உலகத்தில் இதுவரை தனது எல்லையை அறிவிக்காத ஒரே நாடு இஸ்ரேல்தான்’ என்று ஒருவர் சொன்னார். \\

  இப்படி எழுதுவதை எப்பிடி ஒப்புக்கொள்கிறீர்கள்.

  நோகாமல் நொங்கெடுப்பது தப்பில்லை ஆனால் பின்னிப்பெடலெடுப்பது தப்பு என்னுகிறீர்களா?

 6. narendran Says:

  yes mr. othisaivu ramasamy, ungalavida arivali ingha yaru…. apparam ungha comedy sense chance illa….. ippadiye maintain pannugha….


  • ரொம்ப நன்றீங்க நரேந்திரன். அறிவொர டமாஸாதான் கீது.

   வொங்கள மாறீ டமில் மொளில எள்தற குள்வான்கள பத்தித்தான் நான் பொள்தன்னிக்கும் எள்திக்கினே கீறேன்! இன்னா செய்றது சொல்ங்க – அறிவாளியாவும் நகச்சுவ வொணர்ச்சியோடவும் பெற்ந்து தொலச்சிட்டனே! அத்தொட்டுதான் முட்டாக்கூவானுக்கல்லாம் பதிலு சொல்லவேண்டிக்கீது!

   ஐஐடி-சென்னையில பட்ச்சிக்கினு இர்ந்தீங்ளே, எம்எஸ்ஸூ – அத்த முட்ச்சிப்டீங்களா? இல்ல, முட்ச்சோ முட்க்காமலியோ – தட்டச்சு செயல்வீரரா, அளகா, பொட்டீ தட்டிக்கினு – முள்நேரமும் அறிவாளிங்க்ளுக்கு அரைவாளி தர்ர கொறகொடமா கீறீங்களா?

   சின் பஸ்ங்க பட்ச்சு பெரீய ஆளாயிட்டு, அரகொற டமில் மொளில பொளக்கறது பாத்தா புல்லறிக்குதுபா!

   இந்தமாரீ ஆராதன செய்ற, லூஸ்ல வுட்ற வாசகனை வெச்சுக்கினு அந்த மணிகண்டன் எப்டீதான் குப்ப கொட்றாரோ – பாவமா கீதுபா!

   இப்பத்தான் பிர்யுது, அவ்ரு ஏன் இப்டீ எள்தறார்னிட்டு… அவ்ரோட வாள்க்கைல இவ்ளோ பிர்ச்சினைங்களா! இன்னா ஸோகம்பா…

   ​__​ரா.

 7. Raghavan Raman. Says:

  தொடர்புடைய ஒரு பதிவு. தான் ஏன் இஸ்ரேலை விமர்சிப்பதில்லை என்று சாம் ஹாரிஸ் கூறுகிறார் – http://puthu.thinnai.com/?p=26468

  இதற்க்கு மறுவினையாக ஷாலி அவர்கள் Andrew Sullivan அவர்களின் மறுப்பை முன்வைக்கிறார் – http://dish.andrewsullivan.com/2014/07/31/why-sam-harris-wont-criticize-israel/

  இரண்டு பதிவுகளுமே வாசிக்க ஏற்றவைகள்.


 8. கிழக்கு பதிப்பகத்தின் பத்ரியின் புத்தகம் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். உண்மையாக, நேர்மையாக கூறப்பட்டு உள்ளதா? வாங்கி அறிந்து கொள்ளலாமா? நான் கிழக்கு பதிப்பில் வாங்கிய சில இடது சாரி, மார்க்சீய, கருத்துக் களாக இருந்தது, I mean, left oriented and one sided views only. Hence the request regarding Badri Seshadri’s book. Please specify.


  • Sir, the book referred to in the post – https://othisaivu.wordpress.com/2013/11/27/post-292/ – is fictitious, and was meant as a satire piece. I was supposed to have writtten that book and not Badri. If you read it, you will understand.

   If you are referring to something else, please do let me know.

   Kizhakku publishes all kinds of books – and IIRC, has more than 1000 titles. So its publications span all parts of the writing spectrum. YMMV.

   I perhaps own/bought some 40 odd books from them and most of them have been satisfactory – for a given value of satisfaction, that is.

   best:

   __r.

   • nparamasivam1951 Says:

    Sir,
    I cannot understand IIRC, or YMMV. Request for full name of publishers. Please.


   • iirc – if i remember correctly
    ymmv – your mileage may vary

    They are not the names of publishers – but an entity is free to use them to call itself or its publishing outfits.

    These are fairly common acronyms; acronyms are kinda pronounceable abbreviations. kinda is ‘kind of’; abbreviations are shortened forms of originally longer set of words; and the word was and is GOD!

    Just kidding, Sri Paramasivam – please use Google – http://www.google.com for finding out the meanings & contexts.

    Warm regards and best!

    __r.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s