அரவிந்தன் ‘அதீநியம்’ கண்ணையன்: ஒரு புதிர் (1/n)

September 10, 2015

(அல்லது) ஒரு சுக்குத் தேவையுமில்லாமல், ஒரு சலிக்கவைக்கும் என்ஆர்ஐ(NRI)தனமான அரைகுறைப் பார்வையுடன் இந்தியாவைத் தொடர்ந்து மட்டம் தட்டுவது எப்படி…

முகாந்திரம்:  அக (=அரவிந்தன் கண்ணையன்) அவர்கள், என்னுடைய  இஸ்ரோ தொடர்பான குறிப்புகளின் மீது விமர்சனம் வைத்து ஒரு ஆங்கிலக் கட்டுரையை, சிலபல உள்முரண்களுடனும் விலாவாரியாக எழுதியிருக்கிறார்கள். அவருடைய பொன்னான நேரத்தைச் செலவுசெய்து அறிவுரைகள் பலவற்றையும் ஊக்கபோனஸாக வழங்கியிருக்கிறார்கள். கண்ணீர் மல்க முதற்கண், நாத்தழுதழுக்க முதல்நாக்கு, அவருக்கு நன்றி பலவற்றைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

…ஆக, நான் என் பிறவிப் பயனை அடைந்தேன். நான் எழுதுவதையும் பொருட்படுத்தி, ஒரு  ஆனானப்பட்ட    அமெரிக்கத் தேசபக்தப் புத்துருக்குக் குடிமகன் எழுதினால்,  அதுவும் அதனை மகாமகோ இங்க்லீஷில் எழுதினால் – அது என்னதான் உள்ளீடற்றதாகவே இருந்தாலும்கூட – அற்ப மானுடப்பதரான எனக்கு அதனால் மகாமகோ கௌரவமில்லாமல் வேறென்னவாம்?

ஆனால்… இந்தப் பெருமையினால், வெற்றிப் பெருமிதத்தினால் ஏற்பட்ட பக்கவிளைவு என்னவென்றால் – அளவில்லா மகிழ்ச்சியில் எம்பிக் குதித்துக் குதித்துத் தலையெல்லாம் ரணகளம்!  பாவிகள், மேற்கூரையை 10 அடி உயரத்திலேயேவா கட்டிவிடுவார்கள்? :-(

சரி. முதலில் சில விஷயங்களைத் தெளிவு படுத்தி எடுத்துவிடுவது நலம்:

0. அரவிந்தன் கண்ணையன் அவர்களை, ஒரு தனிமனிதராகப் பாவித்து அவரை இழிவு செய்வதில் எனக்கு விருப்பமில்லை; ஆனால், அவரை ஒரு குறியீடாகவே பார்க்கிறேன்; அதாவது, இந்தியாவிலிருந்து வெளி நாடுகளுக்குச் சிலபல காரணங்களுக்காகப் போனவர்கள், அதிலுள்ள பெரும்பான்மைச் சராசரிகள், ஒரு முகாந்திரமும் இல்லாமல் இந்தியாவை/இந்தியர்களை வக்கணையாகக் கரித்துக் கொட்டுவதில் ஏதோ இனம்புரியாத பெருமையடைகிறார்கள் அல்லவா? இவர்களுடைய பிரதிநிதிகளில் ஒருவராகத் தான் இவரைப் பார்க்கிறேன்.

1.  முதலில் இவற்றைப் படிக்கவும்:

…இதற்குப் பிறகும் அரவிந்தன் கண்ணையன் ஒன்றிரண்டு நாட்கள்முன் ஒரு ஒத்திசைவு கூக்ல்+ பதிவை (https://plus.google.com/100173736531427553919/posts/eyHxaoGhoY2) எழுதியிருக்கிறார். ஆனால் அது இஸ்ரோ தொடர்பானது அல்லவென்பதால் அது தனியாகக் கவனிக்கப்படுகிறது.

அந்தப் பதிவில் அய்யா அக அவர்களின் ராமசாமியின்  ‘ஹிந்துத்துவர்களுக்குத் தடவிக்கொடுக்கும் போக்குகள்’ (= ‘ராமசாமி ஹிந்துத்துவ கண்காட்சியகத்துக்கு விளையாடுவது’ ©எஸ்.ராமகிருஷ்ணன்), என் ‘பீலா’ ஹாக்வாஷ் (= ‘பன்றிக் கழுவல்’ ©எஸ்.ராமகிருஷ்ணன்) பற்றிய கருத்துகள் குறித்து:

ஒரு விஷயத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளமுடியாதென்றால், அல்லது அதனுடன் ஒப்புதல் இல்லையென்றால், அதனை ஒரு பச்சக் என்று முத்திரை குத்திப் புறம் தள்லிவிடுவது ஒரு தொழில்முறை அறிவுஜீவிய கேளிக்கை.

அதாவது பொந்து என்றால் என்ன என்ற தகவல் புரியவில்லை என்றால், அதனை பொந்துத்துவா என்று அழைத்து அதனைக் கேலி செய்யலாம். ஆனால் பாவம் பொந்து, அது பாட்டுக்கு ஆழமாகவும் விரிவாகவும் பல கிளைகளையும் கிளப்பிக்கொண்டு, இறக்கை விரித்துக்கொண்டு பறந்து, தொடர்ந்து வளர்ந்துகொண்டேயிருக்கும்!

பொந்துத்துவா போலவே உச்சாடனம் செய்யப்படுவதுதான் ஹிந்துத்துவா! ஆனால் ஒரு தொழில்முறை அறிவுஜீவியும்கூட – க்றிஸ்துவத்துவா, திராவிடத்துவா, இஸ்லாம்த்துவா, அத்துவா, இத்துவா, குத்துவா, வெட்டுவா என்றெல்லாம் அலைபாய்வதேயில்லை. அவர்களுடைய வீங்கிய அஞ்ஞானம் என்பது அப்படி! ஒவ்வொருதடவை இந்த *த்துவாவைப் பார்க்கும்போதும், கேட்கும்போதும், என்னுடைய நமட்டுச் சிரிப்புக்கு அளவேயில்லை! :-)

ஆக, அக அவர்களின் தொழில்முறை பரிணாம வளர்ச்சி என்னைப் புல்லரிக்கவைக்கிறது! சுபம்.

இவற்றின் பின்புலத்தில் கீழ்கண்டவற்றைப் படிக்கவும், சரியா? :-)

2. நான் தமிழில் எழுதிய பதிவுக்கு எதிரான கருத்துகளை வைத்துள்ளதால், அக அவர்கள் அதனைத் தமிழில் எழுதியிருப்பார் என நினைத்திருந்தேன். ஆனால் ஆங்கிலத்தில்தான் இருந்தது அவர் கட்டுரை. :-( விமர்சனம் என்பது என்ன சொல்லவருகிறது என்பதுதான் முக்கியம், அது எப்படிச் சொல்லப் படுகிறது என்பதெல்லாம் கருத்தில் கொள்ளப் பட வேண்டியதேயில்லை என்றாலும், ஒரு மேட்டிமைத்தனம் இதில் தொனிப்பதாகப் படுகிறது. ஏனெனில் ஆங்கிலத்தில் மட்டுமே யோசிப்பவனால், அதில் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவு பயிற்சி உள்ளவனால், அந்த மொழியில் மட்டுமே சரளமாக எழுதுபவனால் –  அம்மொழிப் பண்பாடு சார்ந்த தரவுகோல்கள்/பிம்பங்கள்/படிமங்கள்/ மேட்டிமைகள் மூலம் மட்டுமே சிந்திக்க முடியும்; இது ஒரு பெரிய பிரச்சினையல்ல என்றாலும், கடந்துவிடப்படக் கூடியதென்றாலும், அவன் அடிப்படையில் சமன நிலையற்றவனாக இருந்தால், பிற வெளிப்பாடுகளை எள்ளமட்டுமே முடியும் என நினைக்கிறேன். இது, அக அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினைதான்!

அதாவது – பொதுவாக தாய்மொழி வழிக்கல்வி வாய்க்காத / அல்லது தாய்மொழியை ஆழமாகத் தெரிந்துகொள்ள முனைப்பில்லாமல் வேற்றுமொழி/கலாச்சார மோகத்தில் மட்டும் ஒருவர் ஈடுபட்டால் ஏற்படும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று என்பது என் கருத்து; எனக்குத் தெரிந்து, என் உறவினர்களிலேயேகூட இம்மாதிரி பிரக்ருதிகள் இருக்கிறார்கள்.   (சரி. ஆனால் – உண்மை இப்படியும் இருக்கலாம்: தட்டுத் தடுமாறி ஆங்கிலத்திலும் எழுதுபவன்(!) என்கிற முறையில், எனக்கு அக அவர்களின் சரளமான  ‘ஸ்காலர்லி‘ ஆங்கிலக் கட்டுரைகள் எழுதும் புலமை பற்றிய தாங்கொணா பொறாமையாலும் இப்படி எழுதுகிறேன் எனலாம்; ஒப்புக் கொள்கிறேன்!)

…ஆனால், அக அவர்கள் தமிழில் விலாவாரியாக எழுதினால், அவை பற்றி எனக்குத் தெரியவந்தால், அவற்றை நான் நிச்சயம் படிக்க முயற்சி செய்வேன். அவர் கருத்துகளும் என்னைப் பொறுத்தவரை முக்கியம். எனக்கு நகைச்சுவையுணர்ச்சியும் கொஞ்சம் அதிகம் என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன்.

3. அக அவர்களின் பலப்பல (>50)  கட்டுரைகளை கடந்த சில நாட்களில் படித்தேன்; ஏனெனில் நான் அவருடைய கட்டுரைக்கு எதிர்வினை கொடுப்பதற்கு முன்னால், எனக்கு ஒரளவாவது அவருடைய எழுத்துப் பின்புலமும் வீச்சும் பிடிபடவேண்டும் / கிடைக்கவேண்டும்  என்ற எண்ணத்தில் இருந்தேன்; ஆனால் நீளநீளமான என் கட்டுரைகளை நானே படிப்பது போலவும், ஆகவே ஒரேமாதிரி தேவையற்ற முத்திரை குத்தல்களும் சுயமுரண்களும் மிகுந்து இருப்பது போலவும் பட்டதால் – கொஞ்சம் அயர்வும் ஏற்பட்டது.   இருந்தாலும், அவரிடம் நான் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன:

  1. அவருடைய உழைப்பு + படிப்பு (புத்தகங்களைப் படித்து அவற்றிலிருந்து அவருக்குத் தேவையான/தோதுபட்ட கருத்துகளைக் கோர்த்து ஒரு விவாதத்தை வளர்க்கும் தன்மை)
  2. அவருடைய அழகான, சொடுக்கும், கிண்டல் செய்யும், பெரும்பாலும் சரியான, ஆங்கில உரைநடை
  3. இஸ்ரேல், அமெரிக்கா பற்றிய (என்னால் மிகவும் ஒப்புக்கொள்ளக்கூடிய) அரசியல்/சமூக ரீதியான கருத்தாக்கங்கள்
  4. யாரோ என்னவோ சொல்லிவிட்டார் என வெறுமனே கேட்டுக்கொண்டிராமல், மற்றவர்களுடைய பொதுப்புத்தியின்மையைத் தொடர்ந்து மறுபரிசீலனை செய்யும் அவருடைய தன்மை
  5. தமிழக/இந்திய சமூகஅரசியலின் ‘புனிதப் பசு’க்களாக அவர் கருதுபவைகளைக் கொன்று, சுவையான பர்கர் செய்து சாப்பிடும் + பிறருக்குப் பரிமாறும் அவருடைய பாங்கு
  6. எந்தக் கருத்தை யார்யார் வாய் கேட்டாலும், அதற்கு ஒரு பொய்ப்பொருளைக் கற்பித்து, பின்னர் அதற்கு உடனடியாக திடீரெக்ஸ் எதிர்க் கருத்தை உருவாக்கிக்கொண்டு அதனை உரக்க வெளியிடும், ஆகவே, சீக்கிரத்தில் சமனத்துக்கு வராத மனப்பான்மை
  7. நீளநீளமான கட்டுரைகளைத் தொய்வில்லாமல், முடிந்தபோது தரவுகளுடனும் முடியாதபோது மட்டையடிகளுடனும் எழுதும் வீரியம் (இந்த வீரியம்தான், தான் பிடித்த முயலுக்கு ஐந்தே கால் (வால் சேர்க்காமல்) என்றும், தனக்குப் பிடிக்காத முயலுக்கு இரண்டே கால் (வாலையும் சேர்த்து) எனத் தர்க்கரீதியாக வாதிடுவதில், பளிச்சென்று வெளிப்படுகிறது;  ஒருகால் அப்படியும் இருக்கலாமோ என்கிற சிந்தனைப் போக்குகளால் அலைக்கழிக்கப்படாத, கறாரோதிகறாரான சம்மட்டியடி நிர்வாண நிலை, வேறென்ன சொல்ல…)
  8. சக தமிழர்களை இரண்டுங்கெட்டான்கள் என மிகச் சரியாகவே கருதும் மேட்டிமைத் தன்மை (இதில், இவர் என் ஒன்றுவிட்ட சகோதரராக இருக்கலாமோ?)
  9. அவருடைய, தரவுகளையோ அல்லது நடைமுறை நிதர்சனங்களையோ பற்றிக்  கவலையே படாத அமெரிக்கமுதல்வாதம். (USAland über alles!)
  10. அரசியல் சரி கிரி என்றெல்லாம் பார்க்காமல் அட்ச்சுவுடும் தன்மை; எடுத்துக்காட்டாக, என்னையும் கல்யாணராமனையும் ஜேனிட்டர்களுடன் (துப்புரவுப் பணியில் இருப்பவர்கள்) பொருத்திப் பார்க்கும்படியான, தடாலடி வாதம். (எனக்கும் இந்த அரசியல் சரியின்மை – political incorrectness – மிகவும் பிடிக்கும்; மேலும் நான் ஜேனிட்டராகவும் சுடர்விட்டு ஜொலிப்பதை நான் அறிவேன்) :-)
4. என்னுடைய வாசிப்பில் அதே சமயம் – அவர் எழுத்துகளில், ஒரு விதமான இந்திய வெறுப்பும், இந்தியத்தைத் தேவையேயில்லாமல் தொடர்ந்து மட்டம் தட்டும் மனப்பான்மையும், மாய்ந்துமாய்ந்து புதியமதம்மாறித்தனமாக எப்படியெல்லாம் அமெரிக்காவை மட்டும் துதிபாடலாம் என்ற விடாமுயற்சியும் தூக்கலாக இருப்பதாக நான் நினைப்பதைப்போலவே நான் – என்ஆர்ஐ (NRI) ஜந்துக்களில் பலர் நகைப்புக்குரியவர்கள், உரத்து தங்கள் கருத்துகளை(!) வீராவேசத்துடன் வெளிப்படுத்துபவர்கள் எனவும் நினைக்கிறேன்.

ஏனெனில் அவர்களை, அந்த அரைகுறைகளை (ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர) நான் இருவகையினராகப் பிரிப்பேன்:

அ) இந்தியாவின் மீதான திடீரெக்ஸ் காதல் கொண்டவர்கள்; அதன் காரணமாக வாய்கிழியப் பேச மட்டும் செய்பவர்கள். (=தொலைதூரக் காதல் + சமீபத்து விஷயங்களின் ஒவ்வாமை)

அக) இந்தியாவைச் சிலபல காரணங்களுக்காக, சிறுபிள்ளைத்தனமாக வெறுப்பவர்கள்; அதன் ஒரு முகமாக, அமெரிக்கத்தை(அல்லது குடியேறிய நாட்டினை)க் கைகிழியத் தூக்கிப் பிடிப்பவர்கள். (= தொலைதூர ஒவ்வாமை + சமீபத்து விஷயங்களின்மீதான – மாளா/மீளாக் காதல் + தன் வரலாறு குறித்த சுயவெறுப்பு ஆற்றாமைபோதாமைகள்)

என்னைப் பொறுத்தவரை, பொதுவாக மேற்கண்ட இரு ஜாதியினரும் கருத்தியல்ரீதியாகத் தீண்டத் தகாதவர்கள்.  நகைச்சுவைரீதியாக அரவணைத்துக்கொள்ளத் தக்கவர்கள்.

ஆமென்.

5. ஆனால், நான் ஒரு காமாலைக் கண்ணன் என்பதையும் நினைவில் நிறுத்தி, மேலே படிக்கவும்.

 

… சில மேலதிகக் குறிப்புகளும் – என் தகுதி, அக தகுதி பற்றியும், ++இன்னமும் அடுத்த பகுதியில் தொடரும்… :-(

 

8 Responses to “அரவிந்தன் ‘அதீநியம்’ கண்ணையன்: ஒரு புதிர் (1/n)”

  1. Chandramouli R Says:

    go get ’em Ram!

  2. nparamasivam1951 Says:

    “அக” அவர்கள் பற்றி நான் அறிவது, இது இரண்டாவது தடவை. அமெரிக்காவில் கடந்த 20 வருடங்களாக அருமையாக நடந்து வந்த பாரதி தமிழ் சங்கம், இந்த அக வினால், எந்த அளவு பாதிப்பு அடைந்தது, சங்க உறுப்பினர்களும், சங்கத் தலைவரும் எத்தனை எதிர்ப்புக் கடிதங்களை ஜெ.மோ.க்கு அனுப்பி கண்டனம் தெரிவித்தனர் என்பது வலைப் பதிவுகள் படிப்பவர்கள் அறிந்தது.
    இப்போது நீங்கள்.
    ஆரம்பம் அருமை. இப்படிப் பட்ட மனிதர்களுக்கு, நன்கு புரியும் வகையில், இனி வரும் பதிவுகளில், பதிலடி கொடுப்பீர்கள் என எண்ணுகிறேன். இவற்றை தொகுத்து, பாரதி தமிழ் சங்கம் அனுப்ப விரும்புகிறேன்.


    • அய்யா, நீங்கள் சொன்ன விவகாரங்கள் பற்றி எனக்குத் தெரியாது; ஆனால் தனியொரு மனிதரின் விழைவுகளினால் முடங்கிப்போகும்/​
      ​​சுணங்கிப்போகும்​ அளவிலா அச்சங்கங்கள் இருக்கின்றன?

      மேலும், எனக்கு பதிலடி கொடுப்பது வகையறாக்கள் ஒத்துவராது என்று உங்களுக்கு கேள்விஷொட்டு கொடுக்கிறேன், ஆளை விடும்! :-)

  3. Rangarajan Says:

    Sir, He is like a cancer cell. More and more, he gets attention, he grows rapidly. Unfortunately, JMo is giving more importance to this goonda. He is negativity personified. I too lived in USA and saw these holes. The easiest way to plug them is come back and work with the masses, which I am doing in my own little way.
    I can guess his modus operandi – Guzzle a beer/whiskey, write something -ve about everything, earn people’s opprobrium, which in turns must be giving masochistic satisfaction to him.
    unfortunately, how much ever, he blows the bugle, he cannot get integrated into US society fully. Look at Bobby Jindal; At every step, he has to declare his affinity to Christianity to endear him to the public
    Please ignore him. Bharathi Tamil Sangam did that
    Regards,


    • Ramasamy Sir,
      I too feel the same way as Mr.Rengarajan. It is Jeya Mohan who gave undue publicity to him. The best way is to ignore this gentleman who gave negative image to Great Sastra University, Tanjore.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s