அரவிந்த் கண் மருத்துவமனை, அரவிந்தன் கண்ணையன், அய்யய்யோ: அகுறிப்புகள்
September 4, 2015
(அல்லது) ஸப்பாஷ், ஸர்யான போட்டீ!
…நேற்று எனக்கு, அர்விந்த் கண் மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தது. இதன்குறிப்பாகவும் ஒரு பிரமிப்பில் மூழ்கிய நான், என் அனுபவங்களைச் சார்ந்து அதைப் பற்றி ஜொலிப்போதிஜொலிப்பாக எழுதலாம் என்று பார்த்தால், ‘எதிர்மறை உலகம்‘ புகழ் அரவிந்தன் கண்ணையன் அவர்கள் நினைவு வந்து பேதி பிடுங்கிக் கொண்டு விட்டது! :-(
ஏனெனில், இதற்கும் ‘ஒத்திசைவு ராமசாமியும், ஒத்திசையாத அரவிந்தும்: எப்படி இதைப் பற்றி எழுதக்கூடாது என்பதற்கான ஒரு பாலபாடம்‘ என்று ஒரு முழநீள ஆங்கிலக் கட்டுரையைப் படிக்கவேண்டிய துர்பாக்கியம் ஏற்படுமோ என்கிற ஒரு பாதுகாப்பு உணர்ச்சிதான்!
ஆகவே, என் அரைகுறைக் குறிப்புகளையும் அரவிந்தனைத்த எதிர்வினைகளையும் சேர்த்து, அவருடைய பாதார விந்தங்களில் சமர்ப்பித்து என்னை நானே உய்வித்துக்கொள்ள முயல்கிறேன்… நன்றி.
அரவிந்தர் கண்ணையர் என்னை மன்னிப்பாரா? தடுத்தாட்கொள்வாரா?? அல்லது இன்னொரு மண்வெட்டிதாசக் கட்டுரையை அள்ளி விடுவாரா??? காலம்தான் சொல்லவேண்டும்…
-0-0-0-0-0-0-0-
இதுவும் ஒரு ஜொலிப்பின் கதைதான்.
இன்று முழுவதும் பாண்டிச்சேரியின் தவளைக்குப்பம் புகழ் அரவிந்த் கண் மருத்துவமனையில் கழிந்தது.
எங்களூரில் எங்கேபார்த்தாலும் ஒர்ரே டைனோஸார்க்குப்பம்தான்! பே ஏரியாவில் இருக்கும் லா ப்ரியா தார் குழிகளைப் பற்றித் தெரியுமா உங்களுக்கு?
அதிமனித வழிபாடு செய்யும் உங்களூரில்தான் ஒரு தனிமனிதனுக்காக ஒரு மருத்துவமனையையே கட்டிவிடுவார்கள்! ‘ரோஜா’ படத்தில் நடித்த அந்த அர்விந்த் பெயர் வைக்கப்பட்டதுதானே இது! எனக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? மேன்டலின் ஸ்ரீனிவாஸ் குடித்துச் செத்ததற்கான ஆவணபூர்வமான ஆதாரங்களை நான் அள்ளிவிட்டது போல, இதற்காகவும் எனக்கு அள்ளிவிடத் தெரியாதா என்ன? ஹ்ஹ!
ஒரு குழந்தையைக் கூட்டிச் செல்லவேண்டியிருந்தது.
இதெல்லாமா வேலை? எங்கள் ஊரில் ஒவ்வொருவரும் அவரவர் வேலையைத் திறம்படச் செய்தால் போதும். தொழிலாளிகளைப் போற்றி வளர்க்கும் சமூகமேன்மையை விழையும் முதலாளிகளின் சொர்க்கலோகம் இது!
அதன் கண்ணின் கார்னியாவின் அமைப்பு சரியில்லை.
இதெல்லாம் ஒரு பிரச்சினையா?
அவ்வளவு பெரிய மாநிலத்தையே. ஒருகோடி மக்கள்தொகை இருக்கும், பிரதேசத்தையே நாங்கள் படம் வரைந்து அதன் அமைப்பின் பாகங்களைக் குறிக்கும்போது, உங்களுடைய பிசாத்து கார்நியா எம்மாத்திரம், ஹ்ஹ,,,
ஆக, உருளை வகையறாக் கண்ணாடி ஒன்றை, மருத்துவரின் ஆலோசனைபேரில் அணிவிப்பதற்காகச் சென்றிருந்தேன்.
எழவெடுத்த இந்தியாவில் எதற்கெடுத்தாலும் பஞ்சம்தான். ஒரு உருளைக்குக் கூட மருத்துவமனை செல்லவேண்டியிருக்கிறது சோகம்தான்! எங்கள் ஊர் வால்மார்ட்டில் கூட உருளை சீரழிகிறது. பவுண்ட் விலை $0.99 மட்டுமேதான்! உங்களூரில் எல்லா உருளைகளையும் ஹாட்சிப்ஸ் ஆகவே உண்டுவிடுகிறீர்கள் போல… என்ன ஆரோக்கியம் கெட்ட ஜனங்கள்…
இன்னொன்று: இந்த உருளை விஷயத்திற்கெல்லாம் ராமதாஸ் பக்கம் ஆலோசனைக்குப் போகவேண்டும் என்பது எவ்வளவு அசிங்கம்! பாமகவின் விஷ நாளங்கள் இப்படியா எல்லா விஷயங்களிலும் பரவி இருக்கும்? எதில்தான் அரசியல் இருக்கவேண்டும் என்கிற வரைமுறையே இல்லையா?
எங்கள் ஊரில் ராமதாஸ் இப்படிச் செய்தால், அவர் விருப்பப் படியே, நடுத்தெருவில் வைத்து அவரைச் சவுக்கால் அடிப்போம்…
காலையில் 7.30க்குப் போனால் எங்கும் வரிசை, எதற்கும் வரிசை.
ஹ்ஹா! என் நாட்டில் இதெல்லாம் இல்லை. வரிசையிலெல்லாம் நடுவில் புக முனைந்திருப்பார்களே? உங்கள் நாட்டில் பண்பே இல்லை. ஒருவனுக்குக் கூட வரிசைகளில் மரியாதையே இல்லை.
ஆனால் அவை பெரும்பாலும் சரியாக நிர்வகிக்கப்பட்டன.
ம்ம்… சரியாக மாட்டிக்கொண்டீர்கள்! ‘அவை பெரும்பாலும் சரியாக நிர்வகிக்கப்பட்டன.’ – ஆக, கொஞ்சமாவது இதிலும் குழப்பம்தான்! இந்தியர்களுக்கு எந்த மசுத்தையும் நிர்வகிக்கவே தெரியாது.
இளம் செவிலிகள்/பெண்கள் விதம்விதமான புடவைச் சீருடைகளை அணிந்து வலம் வந்துகொண்டிருந்தனர்.
அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஒரு நோயாளியிடம் உடனடியாகச் செல்லவேண்டுமென்றால் புடவையைக் கட்டிக்கொண்டு ஓடவா முடியும்? அப்படி முயற்சி செய்தாலும், தடுக்கி விழுந்து எலும்பு உடைந்தால், நர்ஸ்களின் தலையாய வேலை, தங்களுக்கு அவசர சிகிச்சை செய்துகொள்வதுதான் என்றாகிவிடும் அல்லவா? (இதற்கு விக்கிபீடியாவில் சாட்சி இருக்கிறது!)
ஒரே புன்சிரிப்பும், அலுப்பில்லாத அணுகுமுறையும்தான்!
உங்களைப் போன்ற டர்ட்டி இந்தியர்கள், கடவுளை நம்புவதில் எனக்கு என்ன ஆச்சரியம்?
முதற்பதிவுக் கட்டணம் ரூ 50/- மட்டுமே – அதுவும் இரண்டு அடுத்த வருகைகளுக்கு ஒரு பணமும் தரவேண்டாம்!
ஹ்ஹ! வெறும் பிசாத்து ஐம்பது ரூபாய்களில் மூன்று முறை ‘அதி நவீன’ மருத்துவர் ஆலோசனை பெறமுடியுமென்றால் அந்த ஆலோசனை எழவின் தரம் எப்படியிருக்கும் – நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்…
அமெரிக்காவில் ஃபௌண்டிங் ஃபாதர்ஸ் மட்டுமே இருந்தார்கள்! ஃபௌண்டிங் மதர்ஸ் இல்லையெனும் அற்புத உண்மையைப் பற்றியாவது உங்களுக்குத் தெரியுமா? ஏழு ஆண்கள் மட்டுமே கூடிப் பிரசவித்த பின்நவீனத்துவக் குழந்தைதான் யூஎஸ்ஏ என்பதாவது தெரியுமா? (ஆதாரம்: “Historian Richard B. Morris in 1973 identified the following seven figures as the key Founding Fathers: John Adams, Benjamin Franklin, Alexander Hamilton, John Jay, Thomas Jefferson, James Madison, and George Washington.” விக்கிபீடியா)
இந்தியாவெல்லாம் ஒரு நாடு… இதற்கெல்லாம் ஒரு எழவு கலாச்சாரம்!
சரி. டேவிட் வால்ட்னர் டோஸ் அவர்களின் The Origin of Feces: What Excrement Tells Us About Evolution, Ecology, and a Sustainable Society (ECW Press, May 2013) படித்துக் கொண்டிருக்கிறேன். என்னைப் பற்றிய பல புரிதல்களை எனக்கு அது அளித்துக்கொண்டிருக்கிறது.
ஏனெனில் நான்தாண்டா புத்தம்புது நாடுமாறி அமெரிக்கன்! என்னுடைய விசுவாசத்தை வேறு எப்டீடா காட்டிப்பேன்!
சரி. இப்போது என் பாவத்தைத் தொலைக்க: :-(
அமெரிக்கத் தாய் வாழ்த்து
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்…
சீராரும் வதனமென திகழ் அமெரிக்க கண்டமிதில்…
யூஎஸ்ஏவும் அதில் சிறந்த ந்யூஜெர்ஸி நல் திரு நாடும்…
தக்கசிறு க்ரீன்கார்டும் தறிகெட்ட தமிழருமே…
அவ்வுலக லேன்ட்ஃபில் போல், அனைத்துலகும் துன்பமுற…
தக்கதொரு இன்டியாஸ்டோரும் பக்கத்து காஸ்ட்கோவும்
அற்ப சீப் ஏர்லைன் டீலும், டாலர் ஷாப் சீனா பொம்மையும்
ஸிப்லாக் கவரும், அலுமினியம் ஃபாய்லும்
…எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் அமெரிக்கணங்கே!!!
அமெரிக்கணங்கே!!!
உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!!!
வாழ்த்துதுமே!!!
வாழ்த்துதுமே!!!
அமெரிக்கா வாழ்க! அப்படி அது வாழ முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் இந்தியா ஒழிக!! போதுமா?
ஆனால், எனக்கு என் இந்திய சுதந்திரதேவியை, அனுதினம் மறக்காமல் தொழ லபித்திருந்தால், கொடுப்பினை இருந்தால் அதுவே போதுமானது.
ஆமென்.
முக்கியமான குறிப்பு: நான் அமெரிக்க வெறுப்பாளனல்லன். அதனைப் பலவிதங்களில் ஆராதிக்கவே செய்கிறேன்.
இன்னொரு குறிப்பு+எச்சரிக்கை: அரவிந்தன் கண்ணையன் அவர்களுடைய கருத்துகளின் மீதான, என் (பெரும்பாலும்) கிண்டலற்ற கட்டுரை இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரலாம்!
தொடர்புள்ள பதிவுகள்:
- அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )
- தொழில்முறை அமெரிக்க எதிர்ப்பாளர்களுக்கு, கர்ட்களின் பதில் 07/05/2015
- அரவிந்தன் நீலகண்டன் & அரவிந்தன் கண்ணையன்: ஒற்றுமையில் வேற்றுமை 31/08/2015
- ஜொலிக்கும் இஸ்ரோ, ஜிஸேட்6 செயற்கைக்கோள், பத்ரி சேஷாத்ரி பதிவு: சில குறிப்புகள் 27/08/2015
September 4, 2015 at 07:09
அந்த கிண்டலற்ற கட்டுரைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்
September 4, 2015 at 08:25
நானும் கூட.
September 4, 2015 at 08:59
நானுமே கூட. ;-)
…நான் மிகவும் மதிக்கும் நண்பர் ஒருவர் சொல்கிறார்: விட்டுவிடு.
-0-0-0-0-0-
***அகற்றப் பட்டது*** 10:18PM, by வெ. ராமசாமி
-0-0-0-0-0-
அவர் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது…
அய்யய்யோ! நான் இப்போது என்ன செய்யவேண்டும்?
என் கையறு நிலையைப் பாரீர்!
:-(( எங்கேடா என் பகவத்கீதை!
September 4, 2015 at 12:30
உங்கள் நண்பர் சொல்வது உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் அ.க. வை கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள். அதுவும் சரிதான்.
அல்லது, கட்டிக்கொண்டு மாரடிப்பது என்று முடிவெடுத்துவிட்டால் மொத்தமாக இறங்கி சிறப்பாக மாரடியுங்கள்.
எதை செய்கிறாயோ அதை சிறப்பாக செய்! (இந்த சிந்தனையும் கீதையில் அடக்கம்னு நெனைக்கிறேன். சரிதானா?)
ஆக, ஒண்ணு சும்மா விட்டுவிடுங்கள். அல்லது சிறப்பாக மாரடியுங்கள். டகல்பாஜி மாரடிப்பு செய்யேல் :-)
My two cents.
September 4, 2015 at 07:47
அய்யா அருமை … அமெரிக்க தாய் வாழ்த்து !!! சிரித்து மாளமுடியவில்லை ….. எப்படி சார்!!!!! எல்லாம் எஸ்.ராமகிருஷ்ண சுவாமிகள் உபயம் !!!
September 4, 2015 at 09:17
நீண்ட நாளாயிற்று உங்கள் சடையர் படித்து. அமெரிக்க தாய் வாழ்த்து ……………………. முடியல சாமி :-))
September 5, 2015 at 13:27
I heard, that Americans’ sweat and etc also will smell like costly perfume. Is it true? Normally I use to believe every thing, even if somebody tells, ” kelvarakil ney vadikiradhu”.
September 6, 2015 at 18:34
ம்………… உங்களுடைய செல்லங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.
யுவ க்ருஷ்ணுடு, ராம க்ருஷ்ணுடு இப்போது அரவிந்தன் கண்ணையன்
அஃதாகப்பட்டது தேவரீர் க்ருஷ்ண க்ருஹத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பது ஹஸ்தாமலகமாகத் துலங்குகிறது.
\\\ என் (பெரும்பாலும்) கிண்டலற்ற கட்டுரை இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரலாம்! \\\
கிண்டலே இல்லாத வ்யாசமா…………. அட சொக்கா…………அமராவதியைப் பாடாத அம்பிகாபதி கணக்காக இது என்னடா இது ஒத்திசைவுக்கு வந்த சோதனைன்னு நெனச்சேன்.
அப்பாடா………. நல்ல வேளையாக பெரும்பாலும் அப்படீனுட்டுன்னு ப்ரேக்கெட்லயாவது போட்டு விட்டீர்களே.