அமெரிக்காவின் மகாமகோ சகிப்புத் தன்மைக்கு, ஒரு ‘புலம் பெயர்ந்த’ தகவல்(!)தொழில்(!!)நுட்ப(!!!) தட்டச்சு குமாஸ்தாவின் பிரதாப சரித்திர வழியாக ஒரு சாட்சியம்
December 16, 2015
உங்களால் சகித்துக்கொள்ளவே முடியாத, சகிப்புத் தன்மையற்ற மூன்றாவது பதிவு இது. வெர்ரி, அட்டர்லி பட்டர்லி அன்சகிக்கப்ள். ஸோர்ரி. மன்னிப்பீர்களா?
…எப்படியும், இந்தப் பதிவு எழவையெல்லாம் நீங்கள் சகித்துக்கொண்டேயாகவேண்டும் என்பதெல்லாம் அனாவசியம், சரியா? இதனை மேற்கொண்டு படிப்பதற்கு மாறாக, பலப்பலவழிகளில் உங்கள் சகிப்பின்மையை எதிர்கொள்ளலாம். ஒரு எடுத்துக்காட்டாக, மேதகு ஞானி இருமேனி முபாரக்கார் போல என்னை ஆர்எஸ்எஸ்காரன் எனப் புகழலாம். அல்லது, தாராளமாக, துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடிப் போகலாம்; எப்படியும் எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை. :-(
ஏனெனில் ஐயன்மீர், புண்பட்டு புண்பட்டு என் பாவப்பட்ட சகிப்புத் தன்மை, அநியாயத்துக்கு அதிகமாகிவிட்டது. ;-)
சரி. முதலாவது, சகித்துக்கொள்ளவே முடியாத மேதகு அரைகுறையார் ஆமீர் கானனைய பதிவு இங்கே: ஆ! இந்தியாவில் சகிப்புத் தன்மை மிகவும் குறைந்துவிட்டது!! வேறு வழியேயில்லை!!! ஆகவே நானும்… 28/11/2015; இரண்டாவது: இந்தியாவில் சகிப்புத் தன்மையே இல்லை: தகவல்தொழில்நுட்ப(!) தட்டச்சு குமாஸ்தா எடிஷன்! 29/11/2015; இதுதான் இவ்வரிசையில் கடைசிக்கு முந்தைய ஏகோபித்த பதிவு….
இந்தப் பதிவின் மூலமாகக் கடைசியில் நிரூபிக்கப் போவது: இந்தியாவை விட அமெரிக்காவுக்குச் சகிப்புத் தன்மை, படு பயங்கர பீதி அளிக்கும் அளவில், ங்கொம்மாள, தாஸ்தீ!
-0-0-0-0-0-0-
அதாவது, இந்தியாவின் சகிப்பிலாத் தன்மை ஒழிக! அமெரிக்காவின் சகிப்போதிசகிப்புத் தன்மை வாழ்க!!
+ ஊக்க போனஸாக, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு, மகத்தான ஐடி சேவை செய்கிறேன் பேர்வழி என்றுபோய், அங்கேயே ‘ஸெட்டில்’ ஆகிவிட்டு, அந்தக் காரணத்தினாலேயே துளிக்கூடச் சமனமில்லாமல் இந்தியாவைக் கண்டமேனிக்கும் கரித்துக்கொட்டும் (அல்லது, ஒருவிதமான பின்புலமுமில்லாமல் திடீரெக்ஸ் தேசபக்தி வந்து, மானாவாரியாகத் தேவையேயற்றுப் புகழும்) என்ஆர்ஐ (NRI: Non-Resident Indian) ஜந்துக் கோமாளிகள் நீடுழி வாழ்க!
குறிப்பு: நான் அமெரிக்காவை எதற்கெடுத்தாலும் வசைபாடும் – உலகத்தின், இஸ்லாமின் சொந்த வரலாற்றுப் பிரச்சினைகளுக்கெல்லாம் அதுதான் காரணம் (அல்லது, அமெரிக்க எதேச்சாதிகாரம், பன்னாட்டு நிறுவன அட்டூழியம், பெருமுதலாளியம், ஸிஐஏ சதிவலை… …) என்றெல்லாம் சௌகரியமாக உளறிக் கொட்டும் ஜாதியல்லன். மாறாக – உண்மையில், அமெரிக்காவின் முக்கியமான தொடரும் பங்களிப்புகளை உணர்ந்தவன்; அச்சமூகத்தின், அதன் மக்களின்மீது பலப்பல விஷயங்களுக்காக மரியாதை வைத்திருப்பவன். அதனிடம் எனக்குச் சில குறைகளும் உண்டு, அவ்வளவுதான்!
அதேபோல – உளறிக்கொட்டாத, அரைகுறைகள் அல்லாத, சமனம் மிக்க என்ஆர்ஐகளும் இருக்கிறார்கள் என்பதை நேரடியாகவும் அறிவேன். அவர்கள்மேல் எனக்கு நிச்சயமாக மரியாதை இருக்கிறது. இவர்களில் சிலரை மிக நன்றாக அறிந்துகொண்டுள்ள கொடுப்பினையையும் பெற்றுள்ளேன். இவர்களில் ‘ஒத்திசைவு’ மூலமாக அறிமுகமான ஒருசிலரும் உண்டு. இயற்கைக்கு நன்றி. எப்படியும் அனாவசியமாகப் புண்பட வேண்டாம். புலம்பவேண்டாம். ஆனால் அவசியமேற்பட்டால் நீங்கள் புண்பட்டாலும் எனக்குச் சம்மதமே!
-0-0-0-0-0-0-0-0-
அரவிந்தன் கண்ணையன் அவர்களை ஒரு ‘தகவல்தொழில்நுட்பத் தட்டச்சு குமாஸ்தா’ என்று நான் சொல்லவில்லை; ஆனால் – அவரேதான் தன்னை ஒரு ‘ தகவல்தொழில்நுட்பக் கூலி’ என்று சித்திரித்துக்கொண்டு ஒரே சமயத்தில் தன்னையும், உடலுழைத்துத் தேய்ந்து ஓடாகும் கூலிகளையும் அவமதித்திருக்கிறார். இருந்தாலும், அவர் ஒரு படிப்பாளி, சுயபரிசீலனை செய்பவர் – ஆகவே, ஒரு சுயகிண்டல் முயற்சியில் அப்படிச் சொல்லியிருக்கிறார் என எடுத்துக்கொள்கிறேன்.
மேலும், குமாஸ்தாவின் சாய்வு நாற்காலியை, குமாஸ்தா அறிவான். ஆகவே.
எது எப்படியோ, இந்த எழவெடுத்த பதிவை, அரவிந்தன் ‘அமெரிக்க’ கண்ணையன் அவர்களின் இந்தியச்சகிப்பின்மைக் கருத்தின்மீதான சகிப்பின்மைக் கருத்தாக எடுத்துக்கொள்ளலாம் – ஏனெனில். இது உங்கள் சகிப்பின்மை பாற்பட்ட விஷயமே.
சரி. இனிமேல் மொட்டைத்தலைக்கும் (=தகவல்தொழில்நுட்பத் தட்டச்சு குமாஸ்தா), முழங்காலுக்கும் (=அமெரிக்க சகிப்புத்தனம்) முடிச்சு போடுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
-0-0-0-0-0-0-0-0-0-0-
இதுதாண்டா அமெரிக்க வாழ் தகவல்தொழில்நுட்பத் தட்டச்சு சராசரி குமாஸ்தா ஒருவனின் வெகுசராசரியான உண்மைக் கதை…
(இதனை ஒருமாதிரி நனவோடை, மந்திர யதார்த்தபதார்த்தவாத எழவு சாயலில் – ஒரு கூறுகெட்ட அப்பன், அவனுடைய மூதி மகன் ஆகியவர்களின் குருட்டுப் பார்வை என விரிந்து இருக்கிறதே என்று உங்களுக்குப் பட்டால் நான் அதற்குப் பொறுப்பேற்க முடியும்!)
…இதுதாண்டா என் செல்ல மவன்! எப்டியோ கஸ்டப்பட்டு, சகிச்சிக்கினு அவன வளத்துட்டேண்டா! என்னால செய்யமுடியாத விஷயம்றதயெல்லாம் அவன் செய்யணும்னிட்டு நெனக்கெறேண்டா! அத்தொட்டு அவன் டீவி மட்டும் பாத்துக்கினு மானாட மசுராடன்னிட்டு நாளொரு பேமானியும் பொளுதொரு மொண்ணையுமா வளந்திருக்காண்டா!
ஹ்ம்ம்… சரி. ஏதோ ஒப்பேற்றி எப்படியோ படித்து விட்டேன். என்னை ஒரு எஞ்சினீர் கஞ்சினீர் என்றெல்லாம் சொல்லி பயமுறுத்துகிறார்கள். என் அப்பன் கஷ்டப்பட்டுச் சம்பாதித்துக் கொடுத்த பணத்தில், கூசாமல் பஜனை செய்து படித்துமுடித்துவிட்டேன். கம்பூட்டர் சைன்ஸ். ஆனால் எனக்கு அடையார் ஆனந்தபவன் சிப்ஸுக்குக்கும் கம்ப்யூட்டர் சிப்ஸுக்கும் ஆறு வித்தியாசங்கள் தெரியாது.
ஆனால், எனக்கு ஆதர்சமான நடிகர் விஜய்குஜய்; அவரைப் போலத்தான் என் வாழ்க்கையை நடத்திக்கொள்ளலாம் என்றெருக்கிறேன் – அவருடைய படங்களில் அவர் ஒன்றும் படிக்காமலேயே ஆசிரியர்களை ஏகத்துக்கும் இழிவு செய்துகொண்டு, அழகிய பெண்களையும் பேரையும் புகழையும் பணத்தையும் பெறும்போது, அவருடைய விசிலடிச்சான் குஞ்சான எனக்கும் ஒரு எழவையும் கற்றுக்கொள்ளவேண்டிய அவசியமேயில்லை. பணத்திற்கு இப்போதைக்கு என் தகப்பனாரை/தாயாரை வெட்கமேயில்லாமல் மொட்டையடித்துக் கொண்டிருக்கிறேன்; பின்னர், என்னை அமோகமாகக் காப்பாற்றப் போவது மூவர் அணி: 1) மாமனாரின் நல்கைகள் + 2) மனைவி சம்பாத்தியம் + 3) என்னை வேலையில் சேர்த்துக்கொள்ளப் போகும் கூறுகெட்ட தகவல் தொழில்நுட்ப அரைகுறை நிறுவனம். இதுதாண்டா ங்கொம்மாள, என் செயல் திட்டம். எனக்கென்னடா மனக் கவலை!
… … … என் பையனச் சுத்தி இருக்கற அல்லாருக்கும் எவ்ளோ சகிப்புத் தன்மைடா!
எப்படியோ, எவர் காலையோ கையையோ அல்லது வேறு எதையாவதையோ பிடித்துக்கொண்டு தொங்கி வேலையில் சேர்ந்தாகிவிட்டது. நிறுவனத்தின் பெயர்: குமாஸ்தான் ஸிஸ்டெம்ஸ் பைரேட் லிமிடெட்; அதன் இன்டக் ஷன் ப்ரொக்ராமில் ஜொள்ளொழுகத் தூங்கி வழிந்து, ஆனந்தமாக தட்டச்சு குமாஸ்தாவாகப் பரிணாம வளர்ச்சி பெற்று…. ஒர்ரே புல்லரிப்பு! ஆனால் ஏதாவது உண்மையாகவே வேலை செய்யவேண்டுமோ, கவலையாக இருக்கிறது.
… என் புள்ளக்கு மாசாமாசம் சொளைய்யா அம்பதாயிரம் சம்பளண்டா! அவ்னோட இஞ்சினீரிங் காலேஜ்லயே வந்து கொத்திக்கினு பூட்டாங்கடா!
ஆனால், வேலை செய்வதைப் பற்றிக் கவலைப்படத் தேவையிருந்தால்தானே? என் ஸீனியர்கள் செய்யும் பஜனையிலிருந்து, வேலையே செய்யாமல் மாய்மாலம் செய்து சம்பளம் பெறுவது எப்படி என்பதைக் கண்டுகொண்டேன், கற்றுக் கொண்டேன். என்னைப் போல முழு நேர பஜனை செய்தே வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் 90 சதவீதம் பேர் இருக்கும்போது. 10 % ஆட்கள் மட்டுமே முட்டாள்தனமாக மாங்குமாங்கென்று வேலை செய்து, எங்கள் 90%காரர்களுக்கும் மேலதிகமாகச் சம்பாதித்துக் கொடுப்பதைக் கண்டுகொண்டேன்… ஹிதம் பஜனையம், குமாஸ்தாவம்… ஆக, எனக்கென்னடா, நான் தாண்டா என் மனசுக்கு ராசா, வாங்குங்கடா, வெள்ளியில் கூசா… ராமேன் ஆண்டாலும் ராவ்ணன் ஆண்டாலும் குமாஸ்தாவுக்குக் கவலேயில்லே!
…. …. சர்டா, அத்த வுடுடா! வாட்ஸ் அப்ல இன்னாடா வந்துக்கீதூ? என்னோட பையன் அவன் வேலை ஸெய்ற எடத்து போட்டோ அமிச்சுக்கிறான்பா! ஜகஜ்ஜோதியாக்கீதுபா!!
காலையில் 10 மணிக்கு மேல் சாவகாசமாகக் கிளம்பி, கையேந்திபவனில் வயிறுமுட்ட பூரிஇட்லி சாப்பிட்டுவிட்டு, பின்னர் மாமனார் அல்லது தகப்பனார் அன்பளிப்பாகக் கொடுத்த பிச்சைப்பணத்தைப் போட்டு ‘தானாக உழைத்துச் சம்பாதித்த பணத்தில்’ வாங்கிய மோட்டார்பைக்கில், கோணாமாணாவென ஓட்டிக்கொண்டு பெங்களூர் ட்ராஃப்பிக்கை மானாவாரியாகச் சபித்துக்கொண்டு, ஒருவழியாக 11 மணிக்குக் குமாஸ்தான் சென்றடைந்தால் – உடனடியாக வெளியில் வந்து காப்பீ-டீ. சாப்பிட்டுவிட்டு ட்விட்டர், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் செக். வாட்ஸ் அப், மின்னஞ்சல் செக். திரும்பவும் காப்பி-டீ குடிக்கும் பணி. வம்பு. மறுபடியும் ஃபேஸ்புக் வகையறா! பின்னர் குமாஸ்தான் பஜனை நிறுவனமே வழங்கும் மதிய உணவு, ஏப்பம். டீ. வம்பு. வெட்டி பஜனை. மீட்டிங். ஈட்டிங். பிஸ்கெட். மறுபடியும் ஃபேஸ்புக் வகையறா. டீ. மாலை கான்ஃப்ரன்ஸ் கால். மறுபடியும் ஃபேஸ்புக் வகையறா…டீ. மாலை 6 மணிக்கு ஒருவழியாக வேலையை ஆரம்பித்து நடு நடுவே மறுபடியும் ஃபேஸ்புக் வகையறா செய்தால், அதிக பட்சம், அனுதினமும் சுமார் 1-2 மணி நேரம் வேலை. பின் இரவு உணவு, வம்பு. பத்து மணிக்கு ஒருவழியாகக் களைத்துப் போய் வீடு சேரல். :-(
… … என்னா சயிப்புத் தன்மைடா என் செல்லப் புள்ளைக்கு! இன்னாமாரீ ஒளக்கிறான்டா!! ஒர்ரே பெர்மையாக் கீதூடா!!! இவன பெத்த பயன அடஞ்சுட்டேண்டா! இன்னா மாரீ பேரும் புகளும் அடஞ்சுட்டாண்டா இவன்! இவன் தந்தை ஏன் ஓத்தான் எனும் ஸொல்டா!! காலேலேர்ந்து ராவுல 10 மணி வர, எம்புள்ள வுள்ந்து வுள்ந்து வேல செய்றாண்டா!
என்னுடைய மேற்கண்ட முக்கியமான அலுவலக தினவேலைகளுக்கு அப்பாற்பட்டு, சமூக அவலங்களை உட்கார்ந்த இடத்திலிருந்தே அடிக்கடிச் சாடவேண்டிய தலையாய பணி வேறு இருக்கிறது. #ஔட்ரேஜ் #ஔட்ரேஜ் #ஔட்ரேஜ்; இதன் காரணமாகவே எனக்கு சமூக வலைத் தளங்களில் ஒர்ரே லைக் போடுகிறார்கள். என்ன பிரச்சினையென்றால், ஒவ்வொரு லைக்கிங் கம்மனாட்டிக்கும், நானும் போய் அவன் பக்கத்தில் பதில் லைக் போகவேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பரம் இப்படி உதவி செய்துகொள்ளாவிட்டால், மானுடனாகப் பிறந்து என்னதான் புண்ணியம், சொல்லுங்கள்?
… எம்மாம் பொற்ப்புணர்ச்சிடா என் மவனுக்கு! மெய் நோக்காம பொய் பேசிக்கினே, கண் துஞ்சாம ஸ்மார்ட்ஃபோன ஆக்காட்டி வெரலால தேச்சுத்தேச்சே, வாட்ஸ்அப் வளியா சென்னை வெள்ளத்த வடியவுட்டுண்டா! வ்னோட வொதவி இல்லாக்காட்டீ சென்னையே கம்ப்ளீட்டா வெள்ளத்தல மூள்கி இருக்கும்டா!
வழக்கம்போல வெட்கமே படாமல், என் அமெரிக்க க்ளையண்ட்டைத் தொடர்பு கொண்டு, என்னைப் பற்றி நாலு வார்த்தை நல்லதாக என் மேனேஜரிடம் சொல்லச் சொல்லவேண்டும். வெள்ளைக்காரர்களுக்கு நல்ல மனது, அவர்கள் சகிப்புத்தன்மை ஜாஸ்தி – நான் எவ்வளவுதான் அரைகுறையாக இருந்தாலும், கணக்கிலடங்கா தவறுகளைச் செய்தாலும், நெடுஞ்சாண்கிடையாக அவர்கள் காலில் விழுந்து பல்லிபோலப் புரண்டால், மண்டையில் அடித்துக்கொண்டு ஆவன செய்வர். என்னுடைய வருடாந்திர வேலை ‘பர்ஃபார்மன்ஸ் ரிவ்யூ’ உற்சவம் வந்து கொண்டிருக்கிறதே!
… வெள்ளக்காரனெல்லாம் எம் மவனோட வேலையப் பாத்து மூக்கு மேல வெரல வெச்சிக்கினுக்கீறான்டா! அவ்ளோ பெருமையா இர்க்குடா! அவன் இல்லேன்னாக்க அமெரிக்காவே அம்பேல்டா! அசரி – மொதக் காரியம், இப்பவே இவ்னோட வரதட்சிணை ரேட் கார்ட் எண்ணை 1000% ஏத்தணும்டா!
சரி. இரண்டுமூன்று வருடம் பஜனை செய்தாகிவிட்டாகி விட்டது; போரடிக்கிறது. ஒரு வழியாக இந்த எழவெடுத்த இந்தியாவை விட்டு வெளியேறி புலம்பெயர்ந்தாகி விடவேண்டும். எந்த நாடானாலும் பரவாயில்லை. என்னை விட அதிகமான, மிகப் பெரிய அளவில் அறிவிலியும், சோம்பேறியுமான கிருஷ்ணசாமியே ‘ஆன் ஸைட்’ சென்றிருக்கும்போது, அங்கேயே கமுக்கமாக அமர்ந்து வெளி நாட்டுக்கும் தொழில் நுட்பசேவை செய்துகொண்டிருக்கும் போது, ராமசாமியாக நான் மட்டும் எப்படி இங்கேயே இந்திய குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கமுடியும்.
ஆகவே. இங்கிருந்து வெளியே! அவ்ளோதான். உடனடியாக அவன அமெரிக்கா அனுப்ப ஆவன செய்யணும்டா! புல்லரிக்குதுடா! இவ்னோட வரதட்சிணை ரேட் கார்ட் எண்ணை 10000% ஏத்தணும்டா!
ஆமென்.
-0-0-0-0-0-0-0-
அடுத்த (=ஒரு வழியாக, இவ்வரிசையின் கடைசிப் பகுதி) பதிவில், ஒரு சராசரி தகவல்தொழில் நுட்ப குமாஸ்தாவின் பொய்மைகள் பற்றிப் படிக்கலாம் + இச்சமன்பாட்டை நிரூபிக்கவும் செய்யலாம்: இந்தியாவை விட அமெரிக்காவுக்குச் சகிப்புத் தன்மை, படு பயங்கர பீதி அளிக்கும் அளவில், ங்கொம்மாள, தாஸ்தீ!
பாவம், நீங்கள்.
- ‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…
- அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )
- திராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை!)
- போங்கடா, இதுதாண்டா *&#@! பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)
December 16, 2015 at 21:32
arrogent pappan சீசீ இந்த பழம் புளிக்கும் நரி நீ. பொறாமை தெரியிது.
ஐடி வேலை கிடைக்மல் ச்கூல் டீச்சரா இருக்கும் உனகு ப்ரொகிராமர் மேல் பொறாமை.
December 20, 2015 at 02:14
தமிழும் தெரியாத, ஆங்கிலமும் அறியாத, தனது பெயரைக்கூட வெளிப்படையாக சொல்ல வக்கோ வாக்கோ அற்ற தற்குறிகளெல்லாம் எதற்கு பின்னூட்டமிட சப்புகொட்டிக்கொண்டு வரவேண்டும் ?
பரிதாபத்திற்குரிய குற்றுயிர்கள்.
December 24, 2015 at 13:33
ஏனெனில், நான் தகவலோ, தொழிலோ, நுட்பமோ இன்னதென்றறியாமலேயே தகவல்தொழில்நுட்ப வல்லுநனாக பார்போற்ற பரிணமித்து, சிங்காரச் சென்னையைச் சென்றடைந்த கணமே ஒரு நவீன முற்போக்கு அறிவுஜீவிய ஜந்துவாக உருவெடுத்து, புரட்சிகள் பல செய்து, புதுமைகள் பல சமைத்து, ஆங்கோர் தொழில்நுட்பப் பூங்காவில் பணிபுரிவதாய் மிக மினுக்கி, உள்ளூர் ஏழை வாத்தியார் பொறாமையால் பொங்குவைதப் புறமொதுக்கி, இணைய இணைப்பு இலவசமாய்க் கிடைத்ததாலேயே பிரபஞ்சப் பேறரிவனைத்தும் எய்தி, சர்வ வல்லமையோடு இணையில்லா அறச்சீற்றம் மிகக்கொண்டு, ஆபாசத்தளங்களை மேய்ந்தவாறே நொடிக்கோர் முறை பொங்கலோ பொங்கலெனப் பொங்கிப் பிதற்றிப் ப்ரவாகமெடுத்தோடி, விண்ணப்பப் படிவத்தை பபடித்தறிய முடியாவிடினும், நிறுவனத்தில் அனுதினமும் தளராமல் எடுத்த பிச்சையினால் தூரதேசமொன்றேகி, பாரதத்தை வீறுகொண்டெழவைத்து சமூகக் கடமையை ஆற்றோதி ஆற்றென ஆற்றும் தகவல்தொழில்நுட்ப தட்டச்சு குமாஸ்த நான், ஆகவே…
December 24, 2015 at 18:54
படிப்பறிவோ பட்டறிவோ அற்ற, போதாமை (ஆகவே பொறாமையும்) நிறைந்த, பாழுங்கிணற்றுத் தவைளயான என் கிராமத்து வாத்தியார் சரியில்லை என்பதால் எனது மேற்கண்ட பின்னூட்டத்தில் கீழ்கண்ட பிழைகள் நிகழ்ந்துள்ளன. அவையாவன,
*பேரறிவு
** தகவல் தொழில்நுட்பத் தட்டச்சு குமாஸ்தா
***இதுக்கு மேல ஏதாவது தப்பு இருந்தா அதுக்கும் வேற வேல கெடைக்காததால வாத்தியாரா ஆன அந்த வெளங்காத பாப்பான்தான் காரணம்
December 22, 2015 at 10:21
“இன்னா மாரீ பேரும் புகளும் அடஞ்சுட்டாண்டா இவன்! இவன் தந்தை ஏன் ஓத்தான் எனும் ஸொல்டா!! ”
ஐயோ! ஆசானே!! முடியலை!!!சிரிச்சு,சிரிச்சு வயிறு வலிக்குது.
March 7, 2019 at 13:04
[…] […]
April 9, 2020 at 17:54
[…] […]
February 11, 2021 at 10:08
[…] […]