இந்தியாவில் சகிப்புத் தன்மையே இல்லை: தகவல்தொழில்நுட்ப(!) தட்டச்சு குமாஸ்தா எடிஷன்!

November 29, 2015

உங்களால் சகித்துக்கொள்ள முடிந்தால், இது இரண்டாவது சகிப்புத் தன்மையற்ற பதிவு.

முதலாவது, சகித்துக்கொள்ளவே முடியாத மேதகு நடிகர் ஆமீர் கானனைய பதிவு இங்கே: ஆ! இந்தியாவில் சகிப்புத் தன்மை மிகவும் குறைந்துவிட்டது!! வேறு வழியேயில்லை!!! ஆனவே நானும்… 28/11/2015

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும் இன்றி, வஞ்சனை செய்வாரடி, சகித்துக் கொள்ளடி சளியே… வாய்ச்சொல்லில் வீரரடி சகியே!

-0-0-0-0-0-0-0-0-

இப்பதிவில், நான் முன்னமே சொல்லியபடி – என்னுடைய புதிய மகாமகோ பேராசான் மேதகு ‘அமெரிக்க’ அரவிந்தன் கண்ணையன் அவர்களைப் பற்றி சகிப்புத் தன்மையற்று எழுதியிருப்பதாகப் பரப்பப்படும் வதந்திதகளை நம்பாதீர்கள். அவை வதந்திகள் அல்ல!

சரி. அரவிந்தன் அவர்களின் புத்திசாலித்தனத்தைப் பற்றியோ, படிப்பறிவைப் பற்றியோ எனக்குச் சந்தேகமேயில்லை – வண்டிவண்டியாக புத்தகங்களைப் படித்திருக்கக்கூடும் என்றுதான் சந்தேகமாக இருக்கிறது; அவருடைய ஆங்கிலமும், என் அரைகுறைத் தமிழ மூளைக்குப் புரிந்த அளவில், சுத்தமாகவே இருக்கிறது. அவர் நேரிடையாகப் பழகுவதற்கு இனிமையானவராகவே கூட (அதாவது, என்னைப் போல! ஹஹ்ஹா!!) இருக்கலாம். ஆனால் அவருடைய காமாலைக் கண்ணும், முன்முடிவுகளும், உடையாடலுக்குத் தேவையேயற்ற அமெரிக்க தேசபக்தியும் (அதன் இன்னொரு முகமாக மற்ற தேசங்களைத் துச்சமாக மதிப்பதும்), தன் பூர்வீகத்தைப் பற்றிய குற்றவுணர்ச்சியும், தர்க்கரீதியாகச் சிந்திக்கத் தெரியாத தன்மையும், தான் பிடித்த மசுறுக்கு நரைத்துவிட்டது எனும் பார்வையும்,  அர்த்தமற்ற அடாவடிதடாலடி வாதங்களும் அயரவே வைக்கின்றன.

இந்த சகிப்புத் தன்மை எழவை எடுத்துக்கொண்டால் – ஏனிவர் தேவையேயற்று உளறிக் கொட்டியிருக்கிறார் என்று கோபமாக வருகிறது. இதற்கு ஒரு முக்கியமான காரணம், இந்தியாவில் இவருக்குப் பரந்த/ஆழ்ந்த அறிவு கிடைக்க வாய்ப்பிருந்திருக்கவில்லை என்று தான் தோன்றுகிறது. செறிவான அனுபவங்கள் கிடைக்கவில்லை என்பதும் பளிச்சென்று தெரிகிறது. ஆனால் அமெரிக்காவிலும் அவருக்கு இவை வாய்க்கவில்லை (இதுவரை) என்பது மேலதிகச் சோகம். (இந்தச் சோகத்துக்கு ஒரு சோறுபதம்: ஒருநாள் விட்டேற்றி ஆமிஷ் சுற்றுலா சென்றுவிட்டு தடாலடியாக மூன்றே மணிநேரத்தில் அவர்களைப் பற்றிய ஒரு காமாலைக் கருத்தை, அய்ன் ரேன்ட் எனும் தத்துவ ஞானியின் அறிவார்ந்த கருத்துகளைப் பிழிந்துகொண்டு புரிதலை அடைந்தது! ஆதாரச் சேதாரம்: “We had booked a nice 3 hour Amish tour experience which took us to 3 Amish homes. As an Ayn Rand person the Amish life style and its inconsistencies, I’d even say hypocrisies, are contemptuous to me. What is the use of saying we will not use electricity but then we’ll use propane gas to power equipments? The curious aspect of their life style aside it did not impress Jeyamohan either. He summed it up as “they are a religious group adhering  to a set of rules that’s all”. In Gandhi’s negation of technology there’s philosophy and a certain ideological edge unlike the Amish whose motivations are driven more by religion.” சுட்டி)

எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. இம்மாதிரிப் பார்வை — படித்த, அசைபோட்ட, அறிவார்த்தமான, பரந்த அனுபவங்களை உள்வாங்கிக்கொண்டவரின் பார்வையாகவே தெரியவில்லை!  ‘பசுமை விகடன்’ இதழ் எழவு ஒன்றைப் படித்துவிட்டு அடுத்த நிமிஷம் பயிர்களைப் பற்றிய அனைத்தனுபவங்களையும் அடைந்துவிட்டதாக, உடனடியாக பம்பர் சாகுபடி செய்ய நினைப்பவரின் நிலையிலேயே அவர் இருக்கிறார். ஆனாலும் இவர் பார்வையை ‘அருவருக்கத் தக்கது’ என்று சொல்லி,  மிகை மதிப்பீடு செய்யமாட்டேன்.

ஆக, மிகமிகப் பாவமான அவர், பரிதாபகரமாக எங்கோ சாவகாசமாக உட்கார்ந்துகொண்டு இந்தியாவை உய்விக்கப் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார். நெசம்மாவே மகாமகோ அமெரிக்கராக மாறிவிட ஆனமட்டும் முயன்றுகொண்டிருக்கிறார். நிலைமை இப்படி இருக்கையிலே, அவரைக் கிண்டல் செய்வதால் எனக்கு என்ன பயன்? அவரை வைத்து சுண்டல் செய்தாலாவது, மண்டையில் அடித்துக் கொண்டு மொழுக்மொஷுக்னென்று பிதுக்கிச் சாப்பிடலாம்… இந்த வெட்டி அக்கப் போரினால் என்ன பயன்? ஹ்ம்ம்ம்??

மேலும் அரவிந்தன் ஒரு ஐயர்* அல்லவா? அப்படி இருந்தாலும் என்னுடைய பேராசான் அல்லவா அவர்? ஒரு நாள் இல்லாவிட்டால் இன்னொரு நாள் அவர் தயவு எனக்குத் தேவைப் படுமோ? என்னை யார்தான் லங்காஸ்டர் சுற்றுலா அழைத்துப்போய் ஆமிஷ்களின் போலித்தனத்தைக் காண்பிப்பார்கள்? ஏதாவது ஏடாகூட எழவு நடந்து, நான் நிபந்தனையற்று அமெரிக்காவில் சரணடையும் காலமும் வந்து விடுமோ? அப்போது இவருடைய பரிந்துரை எனக்குத் தேவைப்படுமோ? நினைத்தாலே கொஞ்சம் அடிவயிற்றுக் கலக்கமாக இருக்கிறது. எதற்கும் அய்ன் ரேன்ட் அம்மணியின் புத்தகங்களையும் அவருடைய ஆப்ஜெக்டிவிஸ்ம் பில்லாசப்பி குப்பையையும் இன்றிலிருந்தே நெட்டுரு போட ஆரம்பிக்கவேண்டியதுதான். எல்லாம் என் கெட்டூழ். :-(

* இதில்தான், அரவிந்தன் அவர்களின் பார்ப்பன ஆதரவு சூட்சுமம் மறைந்திருக்கிறது: கண்ணையன் = கண் + ஐயன்; கண் = eye; eye = I; ஐயன் = I + யன்; I = ஐ; ஆகவே கண்ணையன் = ஐயன்; இப்போது இதனைக் கொஞ்சம் மரியாதையுடன் ஸ்ரீலங்கா (அல்லது பாலக்காட்டு) தமிழ்ப்பெயர்ப் படுத்தினால், ஐயன் = ஐயர்; ஆகவே கண்ணையன் = ஐயர்!

(குறிப்பு: எனது இன்னொரு பேராசானான எஸ்.ராமகிருஷ்ணன், இலக்கியத்துக்கான நொபெல் பரிசு பெறும்போது, மேற்கண்ட கணிதச் சமன்பாட்டு அற்புதத்திற்காக எனக்கு கணிதத்திற்கான ஃபீல்ட்ஸ் மெடல் கொடுக்கப் போவதாக, இன்று கேள்விப் பட்டேன். உங்கள் வாழ்த்துகளுக்கு எனது உளம் பூரித்த, கூட கொஞ்சம் கிழங்குத்த நன்றியும்!)

…So Aravindan is an Iyer or Aravindan draws my ire? You be the judge. ;-)

-0-0-0-0-0-0-0-0-

இப்பதிவிற்கான பிரத்தியேகப் பின்புலம்: (முன் புலம் என்றெல்லாம் எழுதினால் கொஞ்சம் அசிங்கம்; மேலும், எனக்குத் தெரிந்தவரை பின்புல அபான வாயுக்கள்தாம்  கருத்துகளாகப் பெரும்பாலும்  இணையத்தில் மினுக்கிக் கொண்டு அலைகின்றன)

How to increase the net/average IQ levels in India and USA by simply migrating to USA & working there as a dingbat programmer/consultant/whatever… (++ and while at the same time, moon-shining secularly!)

அதாவது – இந்தியாவிலிருந்து வெளியேறி, தகவல்தொழில்நுட்ப(!)  தட்டச்சு குமாஸ்தாவாக அமெரிக்காவில் வேலை(!!) செய்துகொண்டு ‘ஸெட்டில்’ ஆகி மட்டுமே – அமெரிக்க சராசரி புத்திசாலித்தனத்தையும் இந்திய சராசரி புத்திசாலித்தனத்தையும் ஒருசேர உயர்த்துவது எப்படி? (+ அது மட்டுமல்லாமல் ஊக்கபோனஸாக பிலுக்கல்வாத மதச்சார்பின்மையுடன் மினுக்குவதும் எப்படி…)

என்னுடைய ஆமிர்கான் வேடத்தை விட்டுவிட்டு மேதகு அரவிந்தன் கண்ணையன் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ‘ஒரு மாதிரி அமெரிக்கக் குடிமகன்’ வேடத்திற்குச் செல்கிறேன் என நீங்கள் நினைத்துக்கொண்டால், அதற்கு தாராளமாக நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

ஸீன்#2 டேக்#2

…I know good English, and, you No – and I KNOW it, yeah. I can able to write well in that godforsaken Tamil too. I am master of all subjects you know, I am TamilVeenan, the second. Remember kalkandu?

I am amerikkan citizen, not only that, I also work in the IT industry and therefore a keyboard errorist – so I can able to comment on India and give enormous loads of free advice. I can also able to comment on tolerance. But, I can’t able to tolerate myself. So I wonder, how amerikka tolerates me. Contrarian, no?

I have read enormous amounds of books and if I start throwing them at you, you will become chutney! And even that chutney can’t able to come anywhere near my amerikkan ketchup. American fastfood is way better than your stupid indian slowshit.

I love my amerikka. In fact, I can able to call the statue of liberty as my amerikka – a short form of amerikka akka. But I can also able to make friends with Jeyamohan who talks about amerikka MNC christian conspiracies all the time. So, I don’t like him. Why because, I am contrarian no? I can able to happily contradict myself but I don’t like it either, which is because I am a contrarian. I hope you can able to at least uppersit me, even if you can’t able to understand me.

You may think and wonder how I can able to like and dislike a thing at the same time. In fact it is not correct. I can only able to dislike and like that thing and not the other way round! Why because, I am a contrarian, no?

NO?

^&%$@#!$ Akchooly, YES!

Ayn Rand is my goddess. Since I am amerikkan, I can able to see the statue of liberty (which is akchooly a womannequin  advertizing for a footwear company from that god forsaken bloody India) in the form of Ayn Rand. I am also an objectivist who can’t able to be subjectivist, given his predicatement, no? I don’t want to sentence you to death… so…

English grammar is way better than Tamil grammar. Tamil may have more letters, but America has way more BIG parcels. We love Fedex, yeah!

The average amerikkan body size is bigger than the average indian body size.  Remember – 1 US dollar is equal to 60 Indian rupees, and NOT the other way round. Amerikka is more than 3 times bigger than India in area. We have Bobby Jindal, yeah!

Bored? I also don’t want to go overbored. Sorry. Gotta wren, and a little bit of martin too. I have to give a lot of advice in grammatically perfect amerikkaneeese even if nobody asks. Piss Be Upon You.

ஓவரா ஸீன் போட்றேன்னிட்டு நெனெக்காதீங்கடா… அதெல்லாம் உண்மைதாண்டா.

நான் தாண்டா ஏகே47! இதுதாண்டா அரவிந்தன் கண்ணையன்!!

அமெரிக்கா மாரீ இர்க்காத அல்லாத்தையும் ஸுட்டுப் பொஸ்க்கிடுவேண்டா!!!

-0-0-0-0-0-

அய்யய்யோ! இன்னொரு பதிவுக்கு இந்த சகிப்பின்மை எழவு நீளும் போலிருக்கிறதே! :-(

5 Responses to “இந்தியாவில் சகிப்புத் தன்மையே இல்லை: தகவல்தொழில்நுட்ப(!) தட்டச்சு குமாஸ்தா எடிஷன்!”

  1. A.Seshagiri. Says:

    வாராது வந்த மாமழை! போல் அட்டகாசமான கட்டுரையுடன் வந்ததற்கு வாழ்த்துக்கள் (இன்னும் கட்டுரையை முழுவதும் படிக்கவில்லை,)இருந்தாலும் இந்த சகிப்பின்மை கூச்சலால் நொந்து நூடுல் ஆகி கொண்டு இருக்கும் எங்களுக்கு இது ஒரு ஊக்க போனஸ்!.மேலும் இன்றைய “ஜெயமோகன்” அவர்கள் வலைத்தளத்தில் ஒரு வாசக நண்பர் பகிந்து கொண்டு இருக்கும் கீழ் கண்ட சுட்டியில் உள்ள இக் கட்டுரை கான்களுக்கும்,கன்னையன்களுக்கும்,ஒரு அரை திறப்பாகவாவது இருக்கும்?! என நினைக்கிறேன்.

    http://satyavijayi.com/a-muslim-lady-shows-mirror-to-all-intolerance-rants-in-this-brilliant-article-do-read-it-full/

  2. A.Seshagiri. Says:

    அமெரிக்க அக்கா ! I am a contrarian !! ஹா ஹா ஹா!!!


  3. […] இந்தியாவில் சகிப்புத் தன்மையே இல்லை:…29/11/2015 […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s