வாபீ-ஸாபீ, வொங்கப்பன் ஜோபீ, அய்யோ அடப்பாவீ: சில பின்னூட்ட ஆச்சரியங்கள்!

October 16, 2015

கோட்பாடுகளுக்கும், சித்தாந்தங்களுக்கெல்லாமும்கூட – பலவிதமான எழவுகள் (அதாவது ஜாதகம், ஏழரை நாட்டுச் சனி) மகிமைகள், வீரதீரங்கள், பராக்கிரமங்கள் என்றெல்லாம் உண்டு என்பது என்னுடைய இக்காலத்திய ஏகோபித்த நம்பிக்கை!

அதாவது, என்ன சொல்லவருகிறேன் என்றால் – ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு கோட்பாட்டுக்கு அதிர்ஷ்ட யோகம் அடிக்கும். அப்போது அக்கோட்பாடுகளின் பெயர்களை மட்டும் கேட்டுவிட்டு,  உள்ளூர் நிலவரங்களுக்கேற்ப ஆனந்தமாக, நாம் நமக்கேற்றவாறு பொருளை விரித்துக்கொள்வோம்.  உருகுவோம். உனர்ச்சிவசப் படுவோம்.  புல்லரித்துக்கொள்வோம். மாய்வோம். அலைபாய்வோம். இணையத்திலேயே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வோம். அடுத்த Y கோட்பாட்டு எழவுக்கு லாட்டரி அடிக்கும்வரை இதனை இந்த X கோட்பாட்டுக்குச் செய்வோம். அவ்வளவுதான்!

கடந்த சில வருடங்களில், இம்மாதிரி அதிர்ஷ்டம் அடித்த விஷயங்கள்:

 • ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்
 • தமிழ் வரிவடிவம்
 • ஸாஹித்ய அகடெமி விருதுகள் யாருக்குக் கொடுக்கப்படவேண்டும்
 • திரைப்படத் தடை போராட்டங்கள்
 • நரேந்த்ர மோதி
 • திராவிடத் தாலியறுத்தல்கள்
 • ஜாதிமீறிய திருமணங்கள்
 • ஜாதிச் சண்டைகள்
 • புத்தகத் தடைகள்
 • பசுக் குசுக்கள்

 • தற்போது – ஸாஹித்ய விருதுகள் திருப்பப்(!)படல், (இதற்கு முன்னர்: இசுடாலிர் கிராமம்கிராமமாகப் போய், மலச்சிக்கல் முகத்துடன், பாவம், விதம்விதமாக நாட்டியமாடும் ததிங்கிணத்தோம் காட்சிகள்… சிரித்துச் சிரித்து வயிறு இன்னமும் வலிக்கிறது!)
-0-0-0-0-0-0-0-0-

நிலைமை இப்படி இருக்கையிலே, இந்தக் கோட்பாடுகளுக்கு ஏழரை நாட்டுச் சனி பிடித்தால், பாவம்,  அவ்வளவுதான்! தமிழ் எழுத்தாளச் சிகாமணிகள் வாயிலும் தட்டச்சிலும் இவை, போராளித்தனமாகவும் நெகிழ்வுப் பாரம்பரியப்படியும் அலாதியாக விழுந்து புறப்படவேண்டியிருக்கும், பாவம்.

இல்லாவிட்டாலும் – நம் பிதாமகர்கள், திடீரென்று எத்தையாவது அரதப் பழசைப் புதுசாகக் கண்டுபிடித்து உருகி உருகி ஏகத்துக்கும் ஏற்றிவிட்டு எழுதிவிடுவார்கள். #தினம்ஒருஅபத்தம் பத்தி தேத்த வேண்டுமே, ஐயன்மீர்!

…அதுவும் ஜப்பான், ஸென் (= ஜென்!), க்வாலிடி ஸர்கிள்ஸ், கைஸன், ஸாமுராய், நிஞ்ஜா, டாடா ஹிடாச்சி, பைபை ஹிலாச்சி, சீரியோ ஸோனாச்சி, கராத்தே யமகுச்சி, நரசிம்மன் ஓமக்குச்சி என்றெல்லாம் வரைமுறையேயில்லாமல் விக்கீபீடியாவைப் பார்த்து,  கந்தறகோளமாகக் கலந்தடித்து விட்டால், #தினமொருபத்தி மேனேஜ்மென்ட் காரர்களுக்குக் கிடைக்கும் புளகாங்கிதமே அலாதிதான். கூட ஒட்டுகேஜாக நமக்கும்தேன்!

அதேசமயம் – இம்மாதிரி கலந்தடிப்புகள் மானாவாரியாகப் பரிமாறப் படும்போது, சில தன்முனைப்புள்ள கைப்பிள்ளைகள், தரையில் சிந்தும் கருத்துக் கள்ளிப்பால் சொட்டுகளை நக்கி, பின்னர் அவற்றைத் துப்பிப் பிழிந்து – அச்சாற்றை, தமிழ் இணையதள எழவுகளில் பதவிசாகப் பரிமாறுவது எனக்கு அளவுகடந்த  மேலதிக மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்பது என் பழவினைப் பயனால்தான்!

மொள்ள டுமீல் இணிச் சாவாது, போங்கடா! ங்கொம்மாள…

-0-0-0-0-0-0-0-

பிரச்சினை என்னவென்றால், சுமார் 12 வருடங்கள்முன் பெங்களூரில் நான் என் ‘சொந்த’ வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கும்போது ஒரு இளம் அரைகுறை சப்பாணியர் (மன்னிக்கவும், தூயதமிழில் இந்த ஜப்பான்காரரை இப்படி விளிக்கிறேன்!) என்னுடைய் ஆர்க்கிடெக்ட் அம்மணியின் உதவியாளராக இருந்தார் – இன்னொருவர் ஒரு ஜெர்மன் கற்றுக்குட்டி இளம்பெண், புத்திசாலிதான் – ஆனால் அவருடைய ஆங்கிலம்தான் என்னுடையதைப்போல, கொஞ்சம் பாவம்!

இந்த சப்பாணியர் தொல்லை எனக்கு மிகவும் பதற்றத்தை அளித்ததால் (=ஒரு எழவையும் புரிந்துகொள்ளாமல் ஒர்ரே அட்வைஸ்மயம்! ஜப்பான்முதல்வாதம்!!) அவரைத் துரத்திவிட்டேன்.  ஏனெனில் – ஒருவிதமான பின்புலமும் இல்லாமல், மாய்ந்து மாய்ந்து இந்த வாபீஸாபீ எழவைப் பற்றி ஏகத்துக்கும், ஆனால் அதையும் சரியாகப் புரிந்துகொள்ளாத பேச்சு.  ஊக்க போனஸாக ஜென் கின் என்று ஆன்மீக உளறல்வேறு! அவனுக்கு என்ன எஸ்ராமகிருஷ்ணன் என நினைப்பா?  வாழ்க்கையில் ஒரு சுக்கு அனுபவமும் இல்லாமல், அசைபோடலேயில்லாமல்  ஒஷோ கீஷோ என்று அட்ச்சுவுடல்வேறு!

ஆகவே – பிரிவுப்பரிசாக, துரத்துவதற்குமுன் – முதலில் ஒழுங்குமரியாதையாக ஜூனிசிரொ தனிஸாகியின் புத்தகத்தையாவது (=நிழல்களைப் போற்றுதும்… 16/06/2014) படித்துவிட்டுவா, எனக்கு எங்கள் ஊர் கல்லுக்கட்டு போதும் என்றேன். (பாவம், இதற்குப் பின்னர் அவர்  என்பக்கமே வரவில்லை!)

… இங்கு  பிரச்சினை என்னவென்றால், வீடு கட்டலாம் எனத் தோன்றியதிலிருந்து பல வீடுகளைப் பார்த்து, பலவிதமான முறைகளை, மேதைகளைப் பற்றிப் படித்து (இதில் மகாமகோ அமெரிக்க அரவிந்தன் கண்ணையனின் மாபெரும் ஆதர்சமான அய்ன்ரேன்ட் அம்மணியின்  பேராதர்சமான  நாரீகாந்தியும் அடக்கம்!) – கடைசியில் சூளையில் சுடப்படாத களிமண் செங்கல்வைத்து, தூண்களில்லாத, சுவர் பூசப்படாத அழகான சுதேசிக் கட்டிடம் தான் எங்களுக்கு ஒத்துவரும் என முடிவு செய்திருந்தேன்; இதற்கு ஒரு முக்கியமான காரணம் – லாரீ பேகர் அவர்களின் அழகான வடிவமைப்புகளின் மீதிருந்த ஈடுபாடு; இன்னொன்று: வார்தா ‘கிராம விஞ்ஞான மையத்தின்’ படைப்புகளின் மீதான காதல்!

-0-0-0-0-0-

சரி. இந்தப் பின்புலத்தில், இளைஞ்ஜர் வா. மணிகண்டன் அவர்கள் எழுதிய ஒரு வாபிசாபிக் கட்டுரையைப் படித்தேன். ஒர்ரே ஆச்சரியமாக இருந்தது.  இப்படியும் கூடவா ஒரு தமிழிளைஞன் இந்த வாபீஸாபீ எழவைப் புரிந்துகொள்ள முடியும்? (வாபி சாபி)

அதிர்ந்துபோன எனக்கு, அதில் பலப்பல பல திறப்புகள். ஒரே புளகாங்கிதம்!

முதல் திறப்பாக, அதிர்ந்து மனம்பேதலித்து ஓடிப்போய் ஸிப்பைத் திறப்பதற்குள் கோமணத்திலேயே மூத்திரம் அடித்துவிட்டேன்! :-(

முதல் திறப்பு, முற்றும் திறப்பு! :-((

இளம் நண்பர் அவர்கள் — அதிக பட்சம்  விக்கிபீடியா மட்டும் படித்து அலட்டிக்கொள்ளாமல் வெகு ஆழமாக அட்ச்சுவுட்டிருக்கிறார்! வாழ்க!!

-0-0-0-0-0-0-0-0-

வாபீ-ஸாபீ பற்றிய இரண்டு கீழ்கண்ட புத்தகங்கள் மிக முக்கியமானவை; அவைகளிலிருந்து இரண்டு மேற்கோள்களைச் சுட்டுச் சுட்டியிருக்கிறேன். நிசப்தம்காரரின் அசப்தத்துக்கும் இவற்றுக்கும் குறைந்தபட்சம் ஆறு வேறுபாடுகளைக் காண்பிப்பவர்களுக்கு… … ஒரு எழவும் தரமுடியாது, போங்கடா!

Screenshot from 2015-10-15 20:47:23“The tides of time should be able to imprint the passing of the years on an object. The physical decay or natural wear and tear of the materials used does not in the least detract from the visual appeal, rather it adds to it. It is the changes of texture and colour that provide the space for the imagination to enter and become more involved with the devolution of the piece. Whereas modern design often uses inorganic materials to defy the natural ageing effects of time, wabi sabi embraces them and seeks to use this transformation as an integral part of the whole. This is not limited to the process of decay, but can also be found at the moment of inception, when life is taking its first fragile steps toward becoming.”

Screenshot from 2015-10-15 20:46:53“Get rid of all that is unnecessary. Wabi-sabi means treading lightly on the planet and knowing how to appreciate whatever is encountered, no matter how trifling, whenever it is encountered. […] In other words, wabi-sabi tells us to stop our preoccupation with success–wealth, status, power, and luxury–and enjoy the unencumbered life. Obviously, leading the simple wabi-sabi life requires some effort and will and also some tough decisions. Wabi-sabi acknowledges that just as it is important to know when to make choices, it is also important to know when not to make choices: to let things be. Even at the most austere level of material existence, we still live in a world of things. Wabi-sabi is exactly about the delicate balance between the pleasure we get from things and the pleasure we get from freedom of things.”

ஏன் தான் இப்படியேதான் தொடர்ந்து அரைகுறைத்தனமாக எழுதியே தீருவேன் என அடம் பிடிக்கிறார்களோ, எனக்கு இந்த எழவு புரியவேமாட்டேனென்கிறது. நுணுக்கமான விஷயங்களைப் பற்றி ஜன ரஞ்சகமாக எழுதியே தீரவேண்டும் என யாராவது, இம்மாதிரி ஆசாமிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறார்களா என்ன?

எது எப்படியோ, #தினம்ஒருஅபத்தப்பத்தி வாழ்க! :-(

-0-0-0-0-0-0-

பின்குறிப்பு#1: தமிழில் ‘சப்பாணிய வாபீஸாபீ: ஒரு செம்மொழிதமிழ்மொழி அறிமுகம்’ என்கிற நூலை, 2017 சென்னை புத்தகச் சந்தையில் வெளியிடலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன். (இத்துடன் சேர்த்து மொத்தம் 8 புத்தககங்கள் வெளியிடப்படப் போகின்றன! எச்சரிக்கை!!)

ஹ்ம்ம்ம்… இதைக்கேட்டுவிட்டு ‘அறிமுகப் புத்தக ஸ்பெஷலிஸ்ட்’ மருதன் அவர்களே இதனை அவசரம் அவசரமாக எழுதி வெளியிட்டுவிடுவாரோ என்று கலக்கமாக இருக்கிறது. ஏனெனில் ரோஹிஞ்ஜா முஸ்லீம்களின் மாமாபெண் தானே வாபீஸாபீ ! :-(

பின்குறிப்பு#2: அந்த துரத்தப்பட்ட சப்பாணியர்தான் இப்போது வா.மணிகண்டனாக அவதாரம் எடுத்திருக்கிறாரோ? எந்தத் துப்பில் எந்த பூம்பாவோ, தேவுடா!

பின்குறிப்பு#3:  இதில் சில கோலாகலப் பின்னூட்டங்களை நானே உட்புகுத்தியிருக்கிறேன். எது உண்மை எது பீலா என்ற எழவுகளை நீங்களே கண்டுசிண்டுபிடித்துக்கொள்ளவும்.

-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-

பின்னூட்டத்தொழிற்சாலை.காம்

அண்ணா, நிறைய தகவல்களைத் தந்துள்ளீர்கள். நன்றி அண்ணா.
பட்டிக்காட்டு விக்கிரமாதித்தன்
-0-0-0-0-0-0-

ஆசானே! வாபி-சாபிக்கும் சிபிச் சக்கரவர்த்திக்கும் ஏதேனும் கனெக் ஷன்ஸ்??

வாமதாசன் (=வா மணிகண்ட தாசன்)
-0-0-0-0-0-0-

தகவலுக்கு நன்றி. ஆனால் வாபி-சாபியைத் தவறாக உபயோகித்தால் வாபி-சாபம் வந்துவிடுமென்கிறார்களே? உண்மையா?

இது ஜப்பானிய பாரம்பரிய வாஸ்துவா?
 
உமா பரமேஸ்வர வினாயகன்
-0-0-0-0-0-0-0-

வாபிசாபி பற்றிய ஜப்பானியப் படத்தின் திருட்டுடீவிடியைப் பார்த்துவிட்டு உடனே ஒரு விமர்சனம் எழுதமுடியுமா?

—- சுட்டபடப் பிரியன்.
-0-0-0-0-0-0-0-

ராமசாமி சார்!
அடுத்த விமானப் பயணத்தின்போது  கெஞ்ஜுத்சு வீரர் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு, வாளாவிருக்காமல் வாளை வீசுவது எப்படி என்பதை அறிந்துகொண்டு பதிவெழுத வாழ்த்துகள்

சாமு ஐஷ்வர்யா ராய்
-0-0-0-0-0-0-

வாபி-சாபி பற்றி இரண்டு விதமாகப் புரிந்துகொள்ளலாம். ஒன்று நம் அனுபவத்துடன் பொறுத்திப் பார்ப்பது – இதற்கு பொந்துத்துவ வெள்ளையானைமரபில் வாபம் என்று பெயர். இன்னொன்று சாபம்: அதாவது – மற்றவர்கள் அனுபவத்துடன் நம் அனுபவத்தைப் பொறுக்காமல் பார்த்தால் நாம் அவர்களுக்கு இடுவது.

கறாரான விமர்சனப் பார்வையில், உங்கள் புரிதல் சரியில்லை.

மோஜெ
-0-0-0-0-0-0-

YOU SHOULD RITE MORE IN TAMIL INSTEAD OF RITTING IN ENGLISH.

LOOOOOOOOOOOOOOOONG LIVE TAMIL!

UNMAI TAMILAN

 -0-0-0-0-0-

ஆகப் பெரிய எழுத்தாளர் அவர்களே!

ஆகப் பெரிய நன்றி!!

ஆகப் பெரிய வாசகனான நான் தங்களுடைய ஆகப்பெரிய பதிவுகளைத் தொடர்ந்து படிப்பவன்.

ஆகப் பெரிதாகத் தொடர்ந்து பதியவும்.

ஆகப் பெரியவன்.
-0-0-0-0-0-0-

tamilai  tamilil elutha varaadu. mannikkavum.

arputhamaana katturaikku valthugal

tamizhvirumbi

 -0-0-0-0-0-0-0-

அவிசுவாசியே!

வாபிசாபி பாபிகளை,யேஸ்ஸுவே மன்னியும்.

ராமசாமிஸ், உங்களைஸ் ஆசிர்வதிக்கஸ் எல்லாம்ஸ் வல்லஸ் ஜீஸஸ்ஸை வேண்டிக்கொள்கிறேன்ஸ்.

ஆமென்ஸ்.

யேஸ்ஸுபிச்சைஸ்

 -0-0-0-0-0-0-

அடேய் காஃபிர்!

வாபிசாபி பற்றி இஸ்லாத்தில் என்ன சொல்கிறது? அது ஷிர்க் வகையறா இல்லையா?

ஷிர்க்காக இருந்தால், அரூபமற்ற உருவவடிவ கட்டிடக்கலைகளைச் சார்ந்ததாக இருந்தால் நாங்கள் அதை ஒழித்து விடுவோம்! எங்கள் வீடுகளே உருவங்கள் கொண்டிருப்பதால் அவற்றையும் நாங்கள் ஒழிப்பதாகவும் ஒரு ஊக்கபோனஸ் திட்டம் இருக்கிறது!

இப்போதுதான் சுமேரிய மெசொபடோமியப் புராதனச் சின்னங்களை, காஃபிர்களின் கடவுள்களை – எங்கள் இஸ்லாமிக்ஸ்டேட் சகோதரர்களுடன் ஒத்துழைத்து ஒழித்துவிட்டோம்!  நினெவெக்கு பெப்பே!

ஷிர்க் ஒழிப்பு விழா வாழ்க! எங்கள் வீடுகளும் மஸூதிகளும் ஊக்கபோனஸாக இஸ்லாமும் ஒழியட்டும்!

ராமசாமிஹ்! எல்லாம்ஹ் வல்லஹ் அல்லாஹ் தான்ஹ் உங்களுக்குஹ் நல்லஹ் புத்தியைஹ் ஹருளஹ் ஹேண்டும்ஹ்!

ஜிஹாதியன்ஹ்

 -0-0-0-0-0-0-0-

மதச்சார்பின்மை பற்றி வாபிசாபி என்ன சொல்கிறது? பரத்துபட்ட மக்களை நோக்கி அது பயணிக்கப்போவதும், ரத்தம் சிந்தி புரட்சிப் பூபாளம் பாடுவதும் எப்போது?

 தமிழ் மார்க்ஸ்

 -0-0-0-0-0-0-

அஹோ கேளும் பிள்ளாய்!

இந்து கடவுள்களைத் தொடர்ந்து கிண்டல்செய்யும் நீ ரத்தம் கக்கிச் சாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை! உன்னுடைய வினாயகர் சிலை படுகோரம்!!

அன்புடன்,

ஜிஹாதியன் (இந்து எடிஷன்)
 -0-0-0-0-0-0-0-

வாபிசாபி என்பதே வாதாபியை, பண்டமிழர்கள் ஒழித்து அதைக் கொண்டாட பிசா சாப்பிடும்போது உருவான சடங்கே என்று விடுதலை வீரமணி பகன்றிட்டாரே, அதை கூடத் தெரியாத மூடனாக இருக்கிறாயே! அய்யோ, அய்யோ!!

இதை சப்பான்காரர்கள் நகலெடுத்தால் அது அவர்களுடையதாகிவிடுமா?

வாபிசாபி மீட்புப் போராட்டத்தை, திராவிடர்களே – கையில் எடுப்போம்!

ஜப்பான் சென்று அதன் பிரதமர் தலையில் புத்தர்களின் மனோவிகாரங்களை வைத்துக் கொண்டுவருவோம்!பின்னர் எங்கள் மனோ விகாரங்களை சமைத்தெடுப்போம்!

நானேதமிழந்தேன்!

 -0-0-0-0-0-0-0-

வாபிசாபி பற்றி கநாசுவுக்கு அறிமுகப் படுத்தியதே நான் தான்! தமிழ் மூடர்களுக்கு நான் தான் ஜப்பானையும் அறிமுகப் படுத்தினேன்.

என் கதைகளை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்க ஆட்கள் தேவை. மொழி பெயர்க்கப் பட்டால் என் புத்தககங்களுக்கு மட்டுமேதான் அனைத்து ஜப்பானிய இலக்கிய பரிசுகளும் கிடைக்கும்.

தமிழ் எக்கேடோ போகட்டும்!  இதைத் திருத்த முடியாது!
 
நிசா

-0-0-0-0-0-0-0-

வாபிசாபி பறி பல ஜெ கவிதைக இருகிறன. எலா தனகுதானே எழுதி கொளு.

ஒரே கடு ஒறெழுது பறாகுறையா தவிகிறே.  ஆ!

அடுது எனகு பிடிகாத கதை பறி எழுத போவதிலை. நெகிவு கைவச இலை, தீது போ விடது.

ஜபா போக வேடு. வேசைகளை  ஜெ துறவிக எபடி அணுகுகிறாக எபதை தெரிது கொடு பேருரை பல அருள வேடு!

வாக ஜெ! வளக தேசாதிரி!! ஓகுக துணையெழுது!!! ஒழிக ஒறெழுது!!!!
 
ராஎஸ்
-0-0-0-0-0-0-

 நன்றி. வணக்கம். நமஸ்தே. நமோஷ்கார். காஷ்மீர். ப்யூட்டிஃபுல் காஷ்மீர்.

அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )

4 Responses to “வாபீ-ஸாபீ, வொங்கப்பன் ஜோபீ, அய்யோ அடப்பாவீ: சில பின்னூட்ட ஆச்சரியங்கள்!”

 1. ravi Says:

  ஒன்னும் பிரியலே நைனா !!! எனக்கு தெரிந்தது எல்லாம் கர் வாபிசி தான்
  இந்த வாபி சாபிக்கும் கர் வாபிசி கும் ஏதாவது தேர்தல் கூட்டு உண்டா …


  • ​அய்யா ரவி,

   தங்களுக்கு வாபிசாபி பற்றி ஒரு நரிமுகத்தை அளித்ததில் மட்டற்ற மட்டமான மகிழ்ச்சியடைந்தேன்.

   ஆனால், நிசப்தம்காரரின் பதிவை ஒழுங்காகச் சிரமேற்கொண்டு சிரமப்பட்டுப் படித்தால் நீங்கள் என்னை இப்படியெல்லாம் குழப்ப மாட்டீர்கள்! ​

   முதலில் பசி முக்கியம். வீட்டிற்கு வந்து பசியாறுவதுதான் கர் வாபசி. இதையே கர்வத்துடன் செய்தால், அது கர்வா பசி. வாபிசாபி என்பது ‘வாருங்கள், வீட்டிற்கு வந்து காபி சாப்பிடுங்கள்’ என்பதன் சுருக்கம்.

   மேலதிக விவரங்களுக்கு தயவுசெய்து வா. மணிகண்டன் அவர்களை அணுகவும். அவர் நன்றாக சமைத்து, தெள்ளிய தமிழில் பரிமாறுவார்.

   அதாவது, குதிரையாக அடிக்கடி தோற்றம் மாறிக் காட்சியளிப்பார்.

   இதற்கு மேல் எனக்கு விளக்க முடியாது. அயர்வாக இருக்கிறது. வாப்பிகாப்பி அருந்த வேண்டும்.

   நன்றி.

 2. Anonymous Says:

  :):)

 3. க்ருஷ்ணகுமார் Says:

  ஆதௌ கீர்த்தனாரம்பத்துல மணிகண்டன் எழுதியதைப் பட்சதும் புரிந்து கொண்டேன். குற்றம் கண்டு பிடித்தே பேர்வாங்கும் புலவர்களைப் பற்றி.

  \\ ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு கணக்கு வாத்தியார் இருந்தார். ராமசாமி வாத்தியார். வாய்ப்பாடு சரியாகச் சொல்லவில்லையென்றால் அடித்து நொறுக்கிவிடுவார் \\

  ஆனானப்பட்ட சொக்கனே கொடுத்த கவிதையிலேயே குறை இருந்தாலும்…………..ஆயிரம் பொன்னில் கூட்டியோ குறச்சோ கேட்ட தமிழ் மரபை நீர் மறக்கலாமா?

  வா ம பாவம் ரா ம க்ருஹத்தால் பீடிக்கப்பட்டு இருக்கிறார் என்று தெரிகிறது. ஸ்கூலில் ஒரு ராமசாய் வாத்தியாரால் அலைக்கழிக்கப்பட்டார் என்றால்………. இணையத்தில் இன்னொரு ராமசாமி…………… விடாது ராமசாமி…………அட சொக்கா!!!!!!!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s