நீல்ஸ் போர்: கால்பந்தாட்டக்காரர், கோமாளி, ஞானி, தலைமைப்பண்பு மிக்கவர், குரு, க்வான்டம் இயற்பியலாளர், இயற்கைவிரும்பி, ஆசிரியர், அமைதிவிரும்பி, வழிகாட்டி, நொபெல் பரிசுபெற்றவர்… … – சில குறிப்புகள்
October 7, 2015
நீல்ஸ் ஹென்ரிக் டேவிட் போர் (Niels Henrik David Bohr – 7 அக்டோபர் 1885 – 18 நவெம்பர் 1962) என்னுடைய ஆதர்சங்களில் ஒருவர்.
இன்று அவருடைய பிறந்தநாள். :-)
(சில நாட்கள் முன் இளைஞரொருவர் எனக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பியிருந்தார்; அதன் பாடுபொருள், நயனதாரா என்றவொரு திரைப்பட நடிகையைக் காண சேலத்தில் அலைமோதிக்கொண்டிருந்த பெரும்பாலும் இளைஞர்கள் இருந்த கூட்டம்! அதில் பலர் தங்கள் ஸெல்ஃபோனில் நடிகையைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தை பார்த்தவுடன் – சரி, ஏதோ ஃபோட்டோஷாப் செய்யப்பட்டதோ எனத் தவறாக நினைத்துவிட்டேன்! நம் இளைஞர்களுக்கு திராவிட இயக்கங்கள் என்ன மசுத்தைக் கற்றுக் கொடுக்கின்றன என்பதை நினைத்தால்… எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை!)
தமிழ்நாடு அரசின் பாட நூல் நிறுவனத்தின் 12ஆம் வகுப்பு இயற்பியல் புத்தகத்தில், நீல்ஸ் போர் பற்றியுள்ள சில கரடுமுரடான அறிவியல் செய்திகள்:
கலைச்சொற்கள் போன்ற எழவுகளை, ஆங்கில எழவுகளாகவே முழுவதும் வடிக்காத வரையில், தமிழுக்கு, தமிழ்வழிப் படிப்புக்கு/கற்றலுக்கு ஒரு மசுத்துக்கும் விமோசனமேயில்லை; தமிழ் வழிக் கல்வி படித்து, மேற்படிப்பில் தேவையற்றுக் கஷ்டப்பட்ட நான், மனம் வெதும்பிச் சொல்கிறேன்!
…ஒரு பக்கம் ஒரே கோண உந்தம் இன்னொரு பக்கம் ஒர்ரே குவாண்டமாக்கல் – ஆனால் அதே சமயம் வரையறுத்தல் என இந்த குவாண்டமாக்கலுக்கு ஒரு மொழிபெயர்ப்பு எழவு! அப்போது வரையறுத்தல் என்றால் limiting, demarcation, delimitation போன்றவைகளை எப்டீடா முழிபெயர்ப்பீங்க? அப்போ க்வாண்டம் தான் delimiterஆ? ஒரேயடியா ஒழிச்சுட்டீங்களேடா! வொங்களொட அரெவேக்காட்டுத் தமிழை வெச்சிக்கினு ஒருசேர தமிழையும், அறிவியலையும், எங்க கொழந்தைங்களோட எதிர்காலத்தையும்.. போங்கடா! வெறுப்பாகீதேடா, கூமுட்டைங்களா!
“இப்பாதையில் இயங்கும் எலக்ட்ரான்கள் ஆற்றலை கதிர்வீசுவதில்லை.” ஆமாங்கடா! எஸ்ரா பட்ச்சிட்டு கதிர வீசியட்ச்சிட்டு ஒற்றெழுத்த வுட்டுட்டீங்களாடா?
போர் அணு மாதிரிண்றத எங்க சின் பஸ்ங்கோ – அணுகுண்டு சண்டென்னிட்டு பிர்ஞ்சிக்காதவரிக்கும் சர்தான், ங்கொம்மாள…
புத்தகம் இங்கே.
இதன் ஆங்கில (ஆனால் இன்னமும் மோசமான) வடிவத்தை வைத்து சிலவருடங்கள் மாரடித்த பின்னர் தான் இப்படி வெறுத்துப்போய், விட்டேற்றியாகச் சொல்கிறேன். இம்மாதிரி புத்தகங்களைப் படித்துவிட்டபின்னரும் எந்தக் குழந்தைக்காவது அறிவியலையே விடுங்கள், படிப்பில்-கற்றுக்கொள்வதில் ஈடுபாடு இருந்தால், விஷயங்களைப் பற்றித் தெரிந்துதெளியும் ஆவல் சிறிதேனும் விட்டுவைக்கப்பட்டிருந்தால், அது தெய்வங்களின் கருணையேயன்றி வேறெதுவும் காரணமில்லை.
குழந்தைகளுக்கு கற்பதின்மீது வெறுப்பேற்படுத்துவதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டவை இந்தப் பாட புத்தகங்கள்.
இதன் ஆங்கில வடிவத்தின் மீதான 180 பக்க பரிந்துரைகளை (=தவறுகளைத் திருத்தல், கொஞ்சம் சுவாரசியப் படுத்தல்) மிகுந்த மரியாதையுடன் (எனக்கு இது எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை!) சுமார் மூன்று வருடங்கள் முன் தமிழ் நாட்டுப் பாட நூல் நிறுவனத்துக்கு அனுப்பியிருந்தேன்; கொஞ்சம் ஃபால்லோ-அப் கூடச் செய்தேன். இரண்டு முறை அந்த மகாமகோ சென்னைக்குக்கூடச் சென்றேன் என நினைவு. இந்தப் பதிவு எழுதும் இன்று வரை ஒரு எழவும் நடக்கவில்லை!
…அவருடைய பேரரான, வில்ஹெம் போர் அவர்களின் முழு நீளப் பேச்சு விடியோவின் சுட்டியைக் கொடுக்கிறேன்.
இப்பேச்சில் நீல்ஸ்போர் அவர்களுடைய விஞ்ஞானச் சாதனைகள் பற்றியெல்லாம் பெரிதாக இல்லை; ஆனால், அவருடைய பிற ஆளுமைகளைப் பற்றி நிறையவே அழகாக இருக்கின்றன. (இது 75 நிமிட விடியோ!)
அவசியம் பார்க்கவும்.
-0-0-0-0-0-0-
நம் தமிழுக்கு, அவர்களுடைய கேடுகெட்ட திராவிடத்திலிருந்து விமோசனம் உண்டா? :-(
சில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)
October 7, 2015 at 10:41
seems with all problems, the english medium books are far better than tamil medium books