இதுதாண்டா ப்ர்ஹ்ம்மம்!
August 9, 2015
என் மதிப்புக்குரிய தளங்களில் ஒன்றான ‘அரூபக் கருத்து நிலை வாத்து’ – AbstractGoose! ;-/ – முன்னெப்போதோ பதிப்பித்த சித்திரங்களில் ஒன்றை உங்கள் தலையில் கட்டுவதில் நான் பெருமைப் படுகிறேன்!
ஒரு சாதாரண மனிதன் கீழ்கண்ட காட்சியைப் பார்த்து – அதிக பட்சம் ஒரு மண்டைக்குடைச்சல் அனுபூதிநிலைக் கவிதையை எழுதலாம்.
அதையும் கமுக்கமாக நகுலன் கவிதை மோஸ்தரில் கொஞ்சம் தருமுசிவராமுவைத் தாளித்துப் பரிமாறி மினுக்கலாம்.
கேரட் முயல் நான்நான் முயல் கேரட்முயல் கேரட் நான்நான் நான் நான்பிடித்த முயல்கால் கால் கால்ஒருகால்?— கூக்ள் ஜித்தன்
ஒரு சாதாரண வாசகனாகிய நானும் இதனைப் படித்துவிட்டு புல்லரிப்புப் பெறலாம்.
-0-0-0-0-0-0-0-
இப்படித்தான்: :-)
எவ்வளவு அழகான கார்ட்டூன்! நான், ஒருமுறைக்கு இருமுறை, இந்த இரண்டாம் படம் சுட்டும் விஞ்ஞான தாத்பரியங்களைச் சரிபார்த்தேன். இதில் தவறொன்றுமில்லை. வெறும் மகாமகோ அழகுதான்!
பார்க்கப்போனால், இரண்டாவதில் கவித்துவம் அதிகமாக வெளிப்படுகிறதோ?
பிலாக்கணம்: எப்போதுதான் நம் தமிழில் இம்மாதிரி அழகான படைப்புகள் வரப்போகின்றன? தமிழ் வழிச் சிந்தனை இம்மாதிரி உச்சங்களை அடைய முடியுமா?
திராவிடப் பகுத்தறிவின் கொடுமையிலிருந்து, பாவப்பட்ட சாதா தமிழனின் சாதா அறிவு விடுதலை பெறப்போவது எப்போது?
- AbstruseGoose: World View
- அன்னமய்யாவின் ப்ர்ஹ்ம்மம் ஒக்கட்டே (= ப்ர்ஹ்ம்மம் ஒன்றே) பாடல்: உன்னிகிருஷ்ணன் அவர்களின் குரலில்
- தமிழ் இளைஞப் பொறியியலாளர்கள், அரூபக் கருத்துநிலை வாத்துக்கள் 22/06/2013
- அழகான xkcd சித்திரம், ஜெயமோகனின் எழுத்துருக் கருத்துகள்: இவை தமிழச் சோம்பேறிகளுக்கானவையல்ல! 05/11/2013
- ’சமூக’ வலைத்தளங்கள் பற்றி xkcd… 20/07/2013
- xkcd: ஒத்திசைவு 16/04/2013
August 9, 2015 at 14:10
Thanks for sharing
reminded me of the below quote, which also happens to be one of my favorites
“The scientist does not study nature because it is useful to do so. He studies it because he takes pleasure in it, and he takes pleasure in it because it is beautiful. If nature were not beautiful it would not be worth knowing, and life would not be worth living. I am not speaking, of course, of the beauty which strikes the senses, of the beauty of qualities and appearances. I am far from despising this, but it has nothing to do with science. What I mean is that more intimate beauty which comes from the harmonious order of its parts, and which a pure intelligence can grasp.”
― Henri Poincaré, Science and Method
August 9, 2015 at 21:23
Many thanks for introducing abstrusegoose to us.