சர்வநிச்சயமாக, ஈவெரா ‘பெரியார்’ முஸ்லீம்களை இழிவாக, மிக அசிங்கமாகப் பேசினார் – ஆதாரம், குறிப்புகள்

April 26, 2022

ஆம். இது உண்மைதான்.

1

அவர் சொன்னதன் சாராம்ச விஷயங்கள்: பிராம்மண வெறுப்பு, இந்திய வெறுப்புக்கு அப்பாற்பட்டு  சிறுபான்மையினர் (= மைனாரிட்டி முஸ்லீம்கள்) குறித்த தெளிவான வசைபாடல் – இவற்றில் முஸ்லீம்கள்/இஸ்லாம் பற்றிப் பேசியதை மட்டும் இனி, சாராம்சக் கருத்துகளாக – முடிந்தவரை அவர் வார்த்தைக் கோர்ப்புகளைக் கொண்டே கொடுக்கிறேன்; இவர் மைனாரிட்டி என முஸ்லீம்களை மட்டும் குறித்தாலும், அனைத்து மைனாரிட்டிகளுக்கும் இந்த ஈவெராவியப் பார்வை பொருந்தும், என்பதையும் கருத்தில் கொள்ளவும்.

1. சிறுபான்மையினருக்கு ஆதிக்கமோ செல்வாக்கோ கொடுக்கப் படக்கூடாது – இல்லாவிட்டால் அது பொது நலத்துக்கும் வளர்ச்சிக்கும் கேடாகவே முடியும்.

2. தமிழ்ப் பெண்கள் கடும் உழைப்பைக் கொடுக்கும்போதும் —  100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம்கள் ஒரு கூலி உடலுழைப்பு வேலையும் செய்யாமல் அவர்கள் பெண்கள் நம் மனிதர்கள் கண்ணுக்கே தென்படக் கூடாது என்கின்ற நிலையிலும் பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா முறையில் உழைப்பில்லாமல் வாழும் முறையை  [பொது நலத்துக்கு என்று ஒரு தொழிலும் செய்யாமல் நம்மை எட்டிப்போ! மேலே படாதே! என்று சொல்லிக் கொண்டு உயர் வாழ்வை] இந்த நாட்டில் அனுபவிக்கிறார்கள்.

3. இதெல்லாம் இழிவு மானக்கேடு என்பதை எந்தத் தமிழன் உணருகிறான்? இது முஸ்லீம்கள் மத தருமம்! மத ஆச்சாரம்! அவர்கள் செய்வது பெருங்கேடும் துரோகமும்.

4. பார்ப்பானுக்குப் பயந்தும், முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம்

5. பார்ப்பனர்கள் ‘சாணி’ என்றால், முஸ்லீம்கள் ‘மலம்.’

6. மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும் அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் தமிழ்நாட்டுக்கு தமிழ் பெருவாரி மக்கள் சமுதாயத்துக்குக் கேடு என்பதை விளக்கவே இந்த அறிக்கை.

இந்தக் கட்டுரையை ஈவெரா எழுதியதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு:

1. ஈவெராவின் குணாம்சங்கள்:  அடிப்படை இரட்டைவேடம் + முதிர்ச்சியின்மை + முன்னுக்குப் பின் முரணாகப் பேசுதல் + தனக்கு ஒத்துவந்தால் வானளாவப் புகழ்தல், அதாவது எதிராளியின் காலணியை நக்குவது + தனக்கு ஒத்துவராவிட்டால் கீழேபோட்டு நசுக்கிக் கீழ்மையுடன் கொக்கரிப்பது இன்னபிற

2. அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க இடங்களை, ஈவெராவின் அப்போதைய எதிரியான திமுக பெற்றது – அதற்கு ஒரு முக்கிய காரணமாக, தங்கள் வாக்குகளை ஒட்டுமொத்த்மாக திமுகவிற்கு அளித்த முஸ்லீம்கள் இருந்தனர் என, ஈவேரா நினைத்தார்.. (பிரச்சினை என்னவென்றால், ஈவெராவும் திமுகவினரும் 1948-9 விரிசலுக்குப் பின்னர் படுமோசமாக ஒருவரையொருவர் ஏசிக்கொண்டனர், ஒருவருக்கொருவர் சளைக்காமல் தொடர்ந்து குழி பறித்துக் கொண்டனர். இதற்கு ஒரேயொரு எடுத்துக்காட்டு; ஒரு சமயம், பெரியார் அண்ணாதுரையை ‘வேசி மகன்’ எனப் புகழ் பாடினார். அண்ணாதுரை படுபுத்திசாலி, ஆகவே பதில் சொன்னார், ‘அதனால்தான் நாம் அவரை ‘தந்தை’ பெரியார் என்கிறோம்…’  – என்ன சொல்ல வருகிறேன் என்றால் – இந்த முஸ்லீம்-வசைபாடலுக்கு, பெரியாரின் விடலைத்தனமான கோபமும்/பின்புலமும் ஒரு காரணம்…

2

மைனாரிட்டி அறிக்கை: ஈவெரா

மார்ச் 6, 1962  ‘விடுதலை தலையங்கம்; ‘பெரியார்’ ஈவெரா எழுதியது

(இது ‘மைனாரிட்டி அறிக்கை’ என்ற தலைப்பில் அறியவும் பட்டது; அப்படியே கொடுக்கப் படுகிறது – எப்போதோ மூல விடுதலை இதழிலிருந்து நகல் எடுத்த என் கைப்பிரதியில் இருந்து, தட்டச்சு செய்து ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துவிட்டுத்தான் பதிக்கிறேன்)

நாட்டு இலட்சணப்படி எந்த நாட்டிலும் மைனாரிட்டி [சிறுபான்மையினர்] சமுதாயம், மைனாரிட்டி மதம், மைனாரிட்டி கலாச்சாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ, செல்வாக்கோ- இருக்குமானால் அது அந்த நாட்டின் நலத்துக்கு பொது வளர்ச்சிக்கு கேடாகவே முடியும்.

இந்நாட்டு மைனாரிட்டி சமுதாயங்களான பார்ப்பனர், முஸ்லீம் ஆகியவர்களுக்கு அந்நிய ஆட்சியாலும் காங்கிரசாலும் மற்றும் அவர்களுக்கு நீதி அல்லது தனிச் சலுகைகள் இன்றுள்ள ஆட்சியும் காட்டி வந்த காரணத்தினாலும் மேலும் அவர்களது செல்வாக்கு காரணமாய் ‘புத்திசாலித்தனமான’ ‘திறமையான’ ‘தகுதி உள்ள’ சமுதாயம் என்று கருதி ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்ததனாலும், நாடு வளர்ச்சி அடையாமலும் மெஜாரிட்டி (நாட்டின் இயற்கையான பெருவாரி ) மக்கள் மனிதத் தன்மை பெறாமலுமே போய் விட்டார்கள்.

குறிப்பாகத் தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்.

தமிழ்நாடு இன்றும் சுதந்திரமற்ற அடிமை நாடு என்பது எனது பலமான கருத்து. இதை இந்நாட்டுப் பெருவாரி (மெஜாரிட்டி) சமூதாயம் ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். காரணம் தமிழனுக்கு சுதந்திரம் என்பது என்ன என்றே தெரியாது. ஏன் என்றால் தமிழன் பல பிரிவினனாக ஆக்கப்பட்டவன் ஆனதால் “எதையும் கொடுத்து, என்னமும் செய்து” பயனடைந்து வந்தவன், இந்தத் தன்மைக்கு ஏதாவது ஒரு மாறுதல் தோன்றிற்று என்று சொல்ல வேண்டுமானால் 1900- ஆண்டுகளுக்குப் பிறகு தான் இதுபற்றி சிந்திக்க வலியுறுத்தப் பட்டிருக்கிறது.

தமிழனுக்கு சுதந்திரம் ஒருநாளும் இருந்ததில்லை. அவன் சரித்திரமே அடிமைத்தனத்திலும் இழி தன்மையிலும் இருந்தே தான் துவக்கப் பட்டிருக்கிறது.

அது எப்படியோ போகட்டும்.

இனிமேலாகினும் தமிழன், தமிழ்நாடு – சுதந்திரத்துடன் சுயமரியாதையுடன் வாழ வேண்டாமா? என்பது தான் இனி சிந்திக்க வேண்டியதாகும்.

இன்றைய சுதந்திரம் சுதந்திரமே அல்ல. வெள்ளையன் ஆட்சிக்கால சுதந்திரத்தை விட மோசமான நிலை என்பது ‘சுதந்திர உதய நாள்’ முதல் எனது கருத்து.

இதற்கு உதாரணம் இந்த நாட்டில் இன்று மைனாரிட்டியாக உள்ள சமுதாயத்திற்கு இருந்த வரும் வசதியும், ஆதிக்கமும், நடப்பு வசதியுமே போதுமானதாகும்.

அதாவது 100-க்கு 90 விகிதம் உள்ள இந்நாட்டுப் பெருவாரி சமுதாயமாகிய தமிழனின் பெண்கள் நாற்று களை பிடுங்கி, ரோட்டில் கல் உடைத்து வீதியில் மக்கள் நடக்க மண் சுமந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் ஏராளமான பொதுத் தொண்டு செய்கிறார்கள். இப்படி இன்னும் பல இருக்கின்றன.

100-க்கு 3- விகிதமுள்ள பார்ப்பன மக்களும் அவர்கள் பெண்கள் பொதுநலத்துக்கு என்று ஒரு தொழிலும் செய்யாமல் நம்மை ‘எட்டிப்போ!’ ‘மேலே படாதே!’ என்று சொல்லிக் கொண்டு உயர் வாழ்வு வாழ்கிறார்கள்.

அதுபோலவே 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம்கள் ஒரு கூலி உடலுழைப்பு வேலையும் செய்யாமல் அவர்கள் பெண்கள் நம் மனிதர்கள் “கண்ணுக்கே தென்படக் கூடாது” என்கின்ற நிலையிலும் பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட ‘கோஷா’ முறையில் — உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில் அனுபவிக்கிறார்கள்.

அதே நேரத்தில், நம் ஆண்களும் பெண்களும் அவர்கள் வீட்டு வேலைக்காரர்கள் வேலைக்காரிகளாக இருக்கிறார்கள்.

முதலாவது இந்த இரண்டுதர மக்கள் நிலையும் இந்நாட்டுத் தமிழனுக்கு எவ்வளவு இழிவு மானக்கேடு என்பதை எந்தத் தமிழன் உணருகிறான்?

இது அவர்கள் மத தருமம்! மத ஆச்சாரம்!’ என்றால் — யார் நாட்டில், யார் மத்தியில், யாருடைய மத தர்மம், யாருடைய மத ஆச்சாரம்; யாரை இந்த நிலையில் இழிவுபடுத்துவது என்பதை சிந்தித்தால் தமிழனின் சுதந்திரம் சுயமரியாதை அளவு விளங்கும்.

ஜோசியத்தில் வல்லவரான ஒரு மேதாவியானவன் (அமாவாசையில் பிறந்தவன் திருடுவான் என்பது ஜோசியமானால்) தன் வீட்டில் திருடின அமாவாசையில் பிறந்தவரை மன்னித்து விடுவானா? இதுபோல் நமது நாட்டின் மைனாரிட்டி உரிமை அவர்களது சமய கலாச்சார பண்பு என்பதற்காக பல காரியங்களில் நாம் நம் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து வந்த காரணமே இன்று தமிழ்நாட்டுக்கு மைனாரிட்டிகளால் பெருங்கேடும், துரோகமும் அடைய வேண்டியவர்களாகி விட்டோம்.

மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும் உரிமையும், “துரோகம் – பச்சைத் துரோகம்” என்கின்ற குழந்தைகளைத் தான் ஈனும்; ஈன்றும் வருகிறது. இது இயற்கைப் பண்பு. (அல்லது விதி)

அதனாலேயே நம் தமிழ்நாட்டில் உள்ள யோக்கியப் பொறுப்பற்ற மக்கள் தங்கள் சுயநல சமுதாயக் கேடான காரியங்களுக்கு இப்படிப்பட்ட மைனாரிட்டிகளின் பின்பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதையும் செய்யத் துணிகிறார்கள்.

இந்தத் துரோகி மைனாரிட்டிகளும் அப்படிப்பட்ட பொறுப்பற்ற சமூகத் துரோகிகளுக்குப் பயன்பட்டு வாழக் காத்துக்கிடக்கிறார்கள்.

இந்தியக் கூட்டாட்சியில் தமிழ்நாடு ஒரு நாடாக இருக்கும் வரை தமிழ்நாடு இந்தக் கதிக்கு ஆளாகித் தான் தீரும்.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பதவி-பணவாதிகள் ஆனதனால் அவர்களுக்கு இந்த உண்மை ஒப்புக் கொள்ளத் தக்கது ஆகாது.

பார்ப்பானுக்குப் பயந்தும், முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம்.

இது சாணியை மிதிக்க அசிங்கப்பட்டு மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது.

ஏன் இப்படி சொல்லுகின்றேன் என்றால் பார்ப்பான் துரோகம் செய்ய அவனுக்குக் காரணம் உண்டு. என்னவென்றால் அவன் பொய் பித்தலாட்ட உயர் வாழ்வு சரிந்து விழுகிறது.

முஸ்லிம் துரோகம் செய்யக் காரணம் என்ன? முஸ்லிம்கள் அதை வெளியிட்டு மக்களைத் திருப்தி செய்ய வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் துரோகக் கூட்டத்தில் இருந்து விலக இச்சைப்பட்டவர்கள் ஆவார்கள்.

இவ்வளவு எழுதப்பட்டதன் காரணம், மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும் அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் தமிழ்நாட்டுக்கு தமிழ் பெருவாரி மக்கள் சமுதாயத்துக்குக் கேடு என்பதை விளக்கவேயாகும்.

நான் ஒரு மனித தருமவாதி என்பதும் எதையும் திரை மறைவு இல்லாமல் திகம்பரமாய் கருத்துக் கொள்ளுகிறவன் என்பதையும் யாவரும் அறிவார்கள்.

3

இதனை நான் பதிப்பித்ததற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருக்கின்றன:

1) இரண்டு நாட்களுக்கு முன், இது குறித்து ஒரு அன்பருடன் நடந்த வாக்குவாதம்; அவர் ‘ஈவெரா இஸ்லாமையும் முஸ்லீம்களையும் விமர்சிக்கவில்லை’ எனும் கருத்தை உடையவர்.

…என் கருத்து என்னவென்றால், ஈவெரா அவர்கள் தமக்கு ஏதாவது சுயஆதாயம் இருந்தால், தன் அன்னையையே சந்தேகம் கொண்டு, தன் பிறப்புக்காகக் குற்றம் சாட்டுவார் என்பதுதான். அதாவது – அவர் எந்த விதத்திலும், அவர் முதுமையிலும்கூட முதிர்ச்சியடையவே அடையாத விசித்திர மனிதராக இருந்தாலும் அவரைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள் (குறிப்பாகத் திராவிட ஈனர்களாகவர், தங்கள் சுய நலனுக்காகத் தான்!) நம் செல்லத் தமிழகத்தில் என்பதுதான்…இது நம் தொடரும் சோகம் என்பதால்.

2) எக்காரணம் கொண்டும் இந்த  ஆவணபூர்வமான முழு அறிக்கையைப் பகிரங்கமாக வெளியிட்டு ‘எங்க மண்ணூ பெரியார் மண்ணூடா…! எல்லாரையும் வெமர்சிப்போண்டா! பகுத்தறிவுடா! எங்க பெரியார்டா!… …” எனப் பீற்றிக்கொள்ளும் தெகிர்யம் நம் செல்லத் திராவிடர்களுக்கு வரவே வராது என்பதால்.

#பேடித்தமிழேண்டா!

3) தப்பித்தவறி சிலபல பாவப்பட்ட முஸ்லீம்களும் ஒத்திசைவை மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கிறார்கள் எனத் தெரியும்; அவர்களில் இருவர் திமுக/திக(!) அனுதாபிகள் எனவும் (கொஞ்சம் மின்னஞ்சல் போக்குவரத்து நடந்திருக்கிறது). ஆகவே, அவர்களுக்கு மூன்று ‘வழிகள் இருக்கின்றன எனச் சுட்டிக் காட்டவும்…

3.1  ‘அரசியல் வேறு, எங்கள் நம்பிக்கை/மதம் வேறு’ எனவொரு நிலைப்பாட்டை நீங்கள் எடுக்கலாம்; ஆனால், நீங்கள் அறியாததல்ல – பிரச்சினை என்னவென்றால், இஸ்லாம் எனும் மார்க்கமானது (மொஹெம்மத் நபியின் ஸிரா, கொர்-ஆன், ஹடித்கள் படி) – எக்காரணம் கொண்டும் வாழ்க்கையை இப்படிப் பிரிப்பதில்லை. இம்மதத்தைப் பொறுத்தவரை அப்படிப் பிரிவினை செய்வது ஹராம். கறார் இஸ்லாமைப் பொறுத்தவரை அது எந்தவொரு தேசத்தின் மாண்பினையோ இறையாண்மையையோ ஒப்புக் கொள்வதில்லை –  முஸ்லீம்களின் தேச எல்லைகட்குட்படாத அமைப்பைத் தான், அம்மாதிரி ஒருங்கிணைப்பை மட்டுமே போதிக்கிறது. கொஞ்சம் கஷ்டம்தான்.

3.2 இந்த திராவிடக் கட்சிகளுக்கு – குறிப்பாக திமுக திராவிடத்துக்கு அடிப்பொடிகளாக இருக்கிறவர்கள் – ‘எல்லாஞ்  செரி, ஈவேரா எங்களைப் படுமோசமாக வசை பாடியிருக்கிறார்; இருந்தாலும் நாங்கள் படிப்பறிவற்றவர்கள், திராவிட வரலாறை அறியாதவர்கள்… ஆகவே , இப்படியே திமுக திராவிடம் எங்கள் பக்கம் அவ்வப்போது வீசும் ஹலால் தீனிகளை எதிர்பார்த்து, ஹிந்துவத்தை எதிர்த்துக்கொண்டிருப்போம்.’  எனவொரு நிலைப்பாட்டை எடுக்கலாம்.

3.3 இம்மாதிரியான திராவிடப் போலிக்ளையும், ஈவெரா போஸ்டரடித்து அதன்கீழ் உருண்டுபுரண்டு – அதன்கீழ், கீழ்மையாக அணிதிரளும் கட்சிகளையும் (தொல்.திருமாவளவனின் உதிரிக் கட்சி உட்பட) வெறுத்தொதுக்கி – வெறுப்பைக் கக்காத – காத்திரமாக, முஸ்லீம்களையும் அரவணைத்துச் செல்லும் ‘ஸப்கா விகாஸ்’ – ‘எல்லோருக்குமான வளர்ச்சி/மேன்மை’ எனப் பேசுவது மட்டுமல்லாமல், செயல்படுத்தவும் செய்யும் தேசிய நீரோட்டக் கட்சிகளின் அனுதாபியாக மாறலாம்.

-0-0-0-0-0-0-

நான் அவநம்பிக்கைவாதியல்லன் – அதேசமயம் ஒரு ப்ரேக்மடிஸ்ட் – ஒருமாதிரி யதார்த்தவாதி; நடக்கும் விஷயங்களைக் கருத்தில் கொண்டு என்னைச் செழுமைப் படுத்திக் கொள்ள முடிந்தவரை முனைபவன் – ஊக்கபோனஸாக வெளியுலகில் ஏதாவது மாற்றம் கொணர முடியுமெனப் பட்டால், அதனை நோக்கியும் நகர்பவன்.

ஆகவே/+ நல்லது நடக்கும் –  நடக்கவேண்டும் எனவே விழைகிறேன்.

பார்க்கலாம், நம் வாழ்க்கை எப்படி விரிகிறது என்று…

நன்றி.

பின்குறிப்பு:

தெராவிடனையும் பாம்பையும் பாத்தா… …

மொதல்ல அந்தப்  பாவப்பட்ட பாம்ப, அந்த அயோக்கிய தெராவிடண்டேர்ந்து காப்பாத்து…

….இல்லாகாட்டி அத்தோட பல்லப்புடுங்கி மர்ந்து கம்பேனிங்க்ட கொள்ள லாபத்துக்கு வுத்துட்டு, தோல உர்ச்சி செர்ப்புகடேக்கு வுத்து, ‘மொதலையமைச்சர் யெலவச கால்செருப்பு திட்டம்’ணு ஒண்ணு ஆரம்பிச்சி அதே செர்ப்புக்கடேலெர்ந்து கொள்மொதல் செஞ்சி அத்துலயும்  மெகாகமிஷன் அட்ச்சிடுவான்…

ஸொல்ட்டேம்பா, அப்புறம் வொங்க யிஸ்டம்…

4 Responses to “சர்வநிச்சயமாக, ஈவெரா ‘பெரியார்’ முஸ்லீம்களை இழிவாக, மிக அசிங்கமாகப் பேசினார் – ஆதாரம், குறிப்புகள்”

  1. Sesha a.seshagiri Says:

    எந்த ஜோசியர் சொன்னாரோ அமாவாசையில் பிறந்தவன் திருடுவான் என்று!,ஆனால் ஒன்று நிச்சயம் இவன் எந்த நேரத்தில் பிறந்தானோ தெரியவில்லை!,இவனை காட்டிலும் அதிக சீர்திருத்தக்கருத்துக்களை கூறி அதை நேர்மையாக கடைப்பிடித்து வாழ்ந்த, வாழ்ந்து வரும் பெரியவர்களைக் சற்றும் கண்டுகொள்ளாமல்,செத்தும் இவ்வளவு நாட்களுக்கு பிறகும் இவனின் முதிர்ச்சியற்ற அயோக்யத்தனமான கூற்றுக்களை சிரமேல் கொண்டு போற்றி கொண்டாடும் வீணர்களும் என்று தான் பிறந்தார்களோ தெரியவில்லை !


    • ஐய்யோ!  அவரை ஏகவசனத்தில் அவன்இவன் எனச் சொல்லவேண்டா, குறிப்பிடவேண்டா.

      ஏனெனில்.

      ஈவெரா-வின் அருவருக்கத்தக்க, முன்னுக்குப் பின் முரணான செயற்பாடுகளின்மீது காத்திரமான விமர்சனம் வைப்பவர்களை, அவர் புகழ் உபயோகித்த வார்த்தை: வேசிமகன்.

      கபர்தார்!

      அப்படிப் புகழப் பட்டவர்கள், பதிலடி கொடுக்க உபயோகித்த சொற்றொடர்: “அதனால் தான் அவர் ‘தந்தை’ பெரியார். (நீங்கள் இதே சொற்றொடரை உபயோகிக்கலாம்.

      ஆனால்.

      …காலங்கார்த்தால இந்தக் கழிசடைத் திராவிடக் கும்ப்ல்களைப் பற்றிப் பேசவைத்துவிட்டீரே என்பதை நினைத்தால்…

  2. Raj Chandra Says:

    இனிய ஓரா,
    அவர் சொன்னது முஸ்லிம்களில் பார்ப்பனராக (?!#$%^&) இருப்பவர்களைப் பற்றி (இது  எப்படி இருக்கு?! :) ).  நீங்கள் புரிந்து கொல்ல வேண்டும்.  என் செல்ல திராவிட மக்கள்  (மடையர்கள்) அப்படித்தான் புரிந்துகொண்டார்கள்.
    பி.கு: கீழ் வெண்மணி பற்றி  ஈ வெ ரா எழுதியதை திக/திமுக நண்பர்களிடம்  சொல்லும்போது அவர்கள் மௌனம் ஆயிரம் பொற்காசுகளுக்கு சமம் :) 


    • //இனிய ஓரா

      ஐயய்யோ!😳 😭 இனிய??? நேரடியாகவே திட்டலாமே!

      மற்றபடி – உங்கள் ஆயிரம் பொற்காசுகள், கோடிகோடியாகப் பெருக வாழ்த்துகள்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s